பரங்குன்று - பரன் + குன்று. பெயரிலே, பரன் என்ற வடசொல்லும், குன்று என்ற
தென்சொல்லும் கலந்து தலப் பெயர் அமைந்துள்ளது. பரன் என்பது யார் என அறிய,
சில ஆண்டுகளுக்கு முன்னே கிடைத்த அழகிய தமிழ் பிராமிக் கல்வெட்டு
உதவுகிறது. முற்காலப் பாண்டியரின் வழிபாடு கூறும் இக் கல்வெட்டு பற்றி
விரிவாகக் கட்டுரை எழுதவியலும். அக் கல்வெட்டும், அதன் விளக்கமும் காண,
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5/mode/2up
(Section 4.0. And, Figure 9)
திருமுருகில் முருகனைப் பாடியுள்ளது. அதன் பின்னர் சிவத் தலமாகப் பெருமை
பெறுகிறது. சுந்தரர் எப்பொழுதும் போல, சிவனுடன் கிண்டல் பேசுவதாகப்
பதிகத்தை அமைத்துள்ளார். அதில் இறுதிப் பாட்டில் ஒரே ஒருமுறை பரங்குன்றம்
என்கிறார். அழகான சுந்தரர் தேவாரம்:
https://aathirainayagan.blogspot.com/2015/07/02.html
திருப்பரங்குன்றத் தேவாரம், சம்பந்தர்.
https://shaivam.org/to-practise/thirugnanasambandhar-thevaram-thiruparankundram-nitalarcoti/
சேற்றூர் மு. ரா. அருணாசலக் கவிராயர் தொகுத்த திருப்பரங்கிரிப் பிரபந்தத்
திரட்டு முக்கியமான தொகுப்பு. அதில் தெரியவரும் முக்கியச் செய்திகள் சில
கூறலாம்.
குடைவரைக் கோயிலாக அமைந்த குகைக் கோயில்களில் பிரதானம் சிவபெருமானுக்கே.
இதனைத் தான் தேவாரமும் காட்டுகிறது.
https://aathirainayagan.blogspot.com/2015/07/01.html
கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது
மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம்
நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள
பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள்
மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம். பல படிக்கட்டுகளை ஏறி
கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில்
இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை,
முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு
நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய
வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில்
சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும்
அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று
தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை
மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு
அமைந்துள்ளது.
பிற பின்!
நா. கணேசன்