வண்ணப் பாடல்

1,624 views
Skip to first unread message

Siva Siva

unread,
Dec 31, 2008, 12:23:52 PM12/31/08
to santhavasantham

2008-12-31
சொக்கனைப் பணிவாயே
----------------------------------
("
தத்தனத் தனத்தனத் தனதான")

கற்பதைப் புறக்கணித் தறியாமை
..
கனத்தெழக் களிப்பெனப் புவிமீது
கற்பனைச் சுகத்தினைத் தினநாடிக்
..
கட்டமுற் றிளைப்பதைத் தவிராயோ
கற்பகத் தினைப்புனற் சடையானைக்
..
கற்றவர்க் கினிக்குநற் கனியானைச்
சொற்பதத் தினுக்ககப் படலாகாச்
..
சொக்கனைப் பிணிப்பறப் பணிவாயே.

பதம் பிரித்து:
கற்பதைப் புறக்கணித்(து) அறியாமை
..
கனத்(து) எழக், களிப்(பு) எனப் புவிமீது
கற்பனைச் சுகத்தினைத் தின[ம்] நாடிக்,
..
கட்டமுற்(று) இளைப்பதைத் தவிராயோ?
கற்பகத்தினைப், புனல் சடையானைக்,
..
கற்றவர்க்)கு) இனிக்கு[ம்] நல் கனியானைச்,
சொற்பதத்தினுக்(கு) அகப்படல் ஆகாச்
..
சொக்கனைப் பிணிப்(பு) அறப் பணிவாயே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

kavimamani

unread,
Dec 31, 2008, 4:53:02 PM12/31/08
to சந்தவசந்தம்
கடைசிச் சீர்களில் சில தனதானா என ஆகிவிடுகின்றன.
இலந்தை

On Dec 31, 11:23 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-12-31
> சொக்கனைப் பணிவாயே
> ----------------------------------
> ("தத்தனத் தனத்தனத் தனதான")
>
> கற்பதைப் புறக்கணித் தறியாமை
> .. கனத்தெழக் களிப்பெனப் புவிமீது
> கற்பனைச் சுகத்தினைத் தினநாடிக்
> .. கட்டமுற் றிளைப்பதைத் தவிராயோ
> கற்பகத் தினைப்புனற் சடையானைக்
> .. கற்றவர்க் கினிக்குநற் கனியானைச்
> சொற்பதத் தினுக்ககப் படலாகாச்
> .. சொக்கனைப் பிணிப்பறப் பணிவாயே.
>
> பதம் பிரித்து:
> கற்பதைப் புறக்கணித்(து) அறியாமை
> .. கனத்(து) எழக், களிப்(பு) எனப் புவிமீது
> கற்பனைச் சுகத்தினைத் தின[ம்] நாடிக்,
> .. கட்டமுற்(று) இளைப்பதைத் தவிராயோ?
> கற்பகத்தினைப், புனல் சடையானைக்,
> .. கற்றவர்க்)கு) இனிக்கு[ம்] நல் கனியானைச்,
> சொற்பதத்தினுக்(கு) அகப்படல் ஆகாச்
> .. சொக்கனைப் பிணிப்(பு) அறப் பணிவாயே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Dec 31, 2008, 5:11:03 PM12/31/08
to santhav...@googlegroups.com

திருப்புகழில் தொங்கல் சீரில் ஈற்று எழுத்துக் குறிலாகவும் நெடிலாகவும் வரக் காண்கிறேன்.

-------
திருப்பாண்டிக் கொடுமுடி
(
தனதனத் தனனத் தனதான )

இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
..
இடர்கள்பட் டலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
..
திரமெனக் கதியைப் பெறுவேனோ
அரியயற் கறிதற் கரியோனே
..
அடியவர்க் கௌ¢யற் புதநேயா
குருவெனச் சிவனுக் கருள்போதா
..
கொடுமுடிக் குமரப் பெருமாளே.
-----

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/12/31 kavimamani <ELAN...@gmail.com>



--

Siva Siva

unread,
Jan 1, 2009, 2:03:03 PM1/1/09
to santhavasantham

2009-01-01
புகழ்கிறவாறு புரிவாயே
--------------------------------
(
தனதன தான தனதன தான
..
தனதன தான .. தனதான

(
அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)

கொடியன வான வினைகெடு மாறு
.....
குறைவில தான .. திருவாகக்
..
கொழுமலர் தூவி இணையில தான
.....
குரைகழ லோத .. நினையேனும்
பொடியணி மேனி யதிலொரு கூறு
.....
புரிகுழ லாளை .. உடையோனே
..
புகலென வான உனைமற வாது
.....
புகழ்கிற வாறு .. புரிவாயே
அடியிணை நாடி இசையொடு பாடி
.....
அருமல ரோடு .. பலநாளும்
..
அளியொடு பூசை புரிகிற பால
......
னவனுயிர் நாடி .. வருகாலன்
மடிகிற வாறு நொடியினி லோடி
.....
மலரடி வீசி .. மடியாது
..
வழிபடு மாணி முடிவில னாகி
.....
மகிழ்வுறு மாறு .. தருவோனே.

பதம் பிரித்து:

கொடியன ஆன வினை கெடுமாறு, குறை(வு) இல(து) ஆன திரு ஆகக்,
..
கொழு மலர் தூவி, இணை இல(து) ஆன குரை கழல் ஓத நினையேனும்,
பொடி அணி மேனி அதில் ஒரு கூறு புரி குழலாளை உடையோனே,
..
புகல் என ஆன உனை மறவாது புகழ்கிறவாறு புரிவாயே;
அடி இணை நாடி, இசையொடு பாடி, அரு மலரோடு பல நாளும்
..
அளியொடு பூசை புரிகிற பாலன், அவன் உயிர் நாடி வரு காலன்
மடிகிறவாறு நொடியினில் ஓடி மலர் அடி வீசி, மடியாது
..
வழிபடு மாணி முடி(வு) இலன் ஆகி மகிழ்வுறுமாறு தருவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2008/12/31 Siva Siva <naya...@gmail.com>

2008-12-31
சொக்கனைப் பணிவாயே
----------------------------------
("
தத்தனத் தனத்தனத் தனதான")

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 8, 2009, 11:04:09 PM1/8/09
to santhavasantham

திருவாதிரையை (10-Jan-2009) ஒட்டி.

2009-01-08
ஆதிரையன் அடியிணையைப் பணிவேனே
--------------------------------------------------------
தானதன தனதனனத் .. தனதான

பாதியுட லுமையவளுக் .. களியோடு
..
பாகமென அளியிறையைத் .. தமிழாலே
நீதியென அடியவரைப் .. பிரியாத
..
நேயனென அரிபிரமற் .. கரிதான
சோதியென அணிமதியைச் .. சடைமீது
..
சூடுகிற அழகனெனப் .. புகலான
ஆதியென அமலனெனத் .. துதிபாடி
..
ஆதிரைய னடியிணையைப் .. பணிவேனே.

பதம் பிரித்து:

பாதி உடல் உமையவளுக்(கு) அளியோடு
..
பாகம் என அளி இறையைத் தமிழாலே
நீதி என, அடியவரைப் பிரியாத
..
நேயன் என, அரி பிரமற்(கு) அரி(து) ஆன
சோதி என, அணி மதியைச் சடைமீது
..
சூடுகிற அழகன் எனப், புகல் ஆன
ஆதி என, அமலன் எனத் துதி பாடி,
..
ஆதிரையன் அடி இணையைப் பணிவேனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/1 Siva Siva <naya...@gmail.com>


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 11, 2009, 11:13:49 PM1/11/09
to santhavasantham

2009-01-09
அங்கணனைப் புகல் நாவே
-------------------------------------
தந்ததனத் தானதனத் .. தனதான
(
உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி - திருப்புகழ்)

தந்தையெனத் தாயுமெனத் .. திகழ்வோனைச்
..
சந்திரனைச் சூடியபொற் .. சடையானை
முந்தையனைத் தேடிருவர்க் .. கரியானை
..
முந்தைவினைப் பாசமதைக் .. களைவோனை
அந்திநிறத் தானைநினைத் .. திசைபாடும்
..
அன்பருயிர்க் காவலனைப் .. பகடேறும்
அந்தகனைத் தாளொடுதைத் .. தருள்வோனை
..
அங்கணனைப் பேணிமிகப் .. புகல்நாவே.

"முந்தையனைத் தேடிருவர்க் கரியானை" - 'முந்தையனைத், தேடு இருவர்க்கு அரியானை' என்றும், 'முந்து ஐயனைத் தேடு இருவர்க்கு அரியானை' என்றும் பிரிக்கலாம்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2009/1/8 Siva Siva <naya...@gmail.com>

திருவாதிரையை (10-Jan-2009) ஒட்டி.

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 12, 2009, 8:20:25 AM1/12/09
to santhavasantham
kaviyogiyaar's response came as a new thread. Hence, posting it here again to be part of the thread.
--------

2009/1/12 Kaviyogi Vedham wrote:

பலமுறை படித்து மகிழ்வடைந்தேன். மிக சுவாரசியம் போங்கள்.சந்தமும் நன்று.
எனின்,
அவ்வளவும் எளிமையாக எழுதிவிட்டு...
"
முந்தையனை.". சொல் கடினம் ஆக உள்ளது.
தேடும் அல்லது தேடிய இருவர்க்கு அரியானை(ப்ரம்மா+விட்டுணு)
என்பது..தேடிருவர்..என எப்படி வரும் என ஐயமாக உள்ளது. அன்பர் சொல்வாராக.

யோகியார்

-------------------

2009/1/11 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jan 12, 2009, 9:11:31 AM1/12/09
to santhavasantham

அன்புள்ள யோகியார்,

நன்றி.

1) '
முந்தையன்':
முந்தைவினை, முந்தையோர் போன்ற சொற்கள் பரவலாக அறியப்படுவன அல்லவோ?

பாடலை எழுதியபின், அகராதியிலும் தேவாரத் தளத்திலும் சென்று சற்றுத் தேடினேன். அப்பொழுதுதான் அதிலிருந்த இரண்டாவது பொருள் புலப்பட்டது.

முந்துதல் - மேலெழுதல் (to rise up); காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல் (to be prior in time, place, etc.);
முந்து - முற்காலம் (antiquity); முன்பு (priority); ஆதி (beginning);

2)
தேடு இருவர் - வினைத்தொகை.
உங்கள் மடலைக் கண்டபின் தேடியதில் கண்ட (நான் முன்னமே அறிந்த) ஒரு பாடல்:

நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி
திருமுறை - 11.33.9

தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்றாங்
கெழுதுந் தமிழ்ப்பழ ஆவணங் காட்டி எனக்குன்குடி
முழுதும் அடிமைவந் தாட்செ யெனப்பெற்ற வன்முரல்தேன்
ஒழுகும் மலரின்நற் றாரெம்பி ரான்நம்பி யாரூரனே.
----

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



(
சம்பந்தர் தேவாரம் - 4.35.2 - "முந்தையார் முந்தி யுள்ளார் ...." - 'முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருள்' ஆகி என்றும் இருப்பவர்);

(
அப்பர் தேவாரம் - 5.93.2 - "புந்திக்கு விளக்காய புராணனைச் ... அந்தி வண்ணனை .. மறப்பனே" - புத்திக்கு விளக்காக உள்ள மிகப்பழமையனும், ... அந்திச்செவ்வண்ணம் உடையவனும், ...ஆகிய பெருமானை மறப்பேனோ?)

(
திருப்புகழ் - "உனைத்தினந் தொழுதிலன் .... கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலித னுழையினர் ....");




2009/1/12 Siva Siva <naya...@gmail.com>
2009/1/11 Siva Siva <naya...@gmail.com>
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 13, 2009, 11:00:03 AM1/13/09
to santhavasantham

2009-01-13
இன்பப் பெருமானை வந்திப்போம் (பொங்கல் 2009)
----------------------------------------------
தந்தத் .. தனதான

பொங்கற் றிருநாளில்
..
புங்கத் தமிழாலே
திங்கட் சடையானைச்
..
செம்பொற் கழலானை
எங்கட் கிறையானை
..
இன்பப் பெருமானை
மங்கித் துயரோட
..
வந்தித் திடுவோமே .

பதம் பிரித்து:

பொங்கல் திருநாளில்,
..
புங்கத் தமிழாலே,
திங்கள் சடையானைச்,
..
செம்பொற் கழலானை,
எங்கட்(கு) இறையானை,
..
இன்பப் பெருமானை,
மங்கித் துயர் ஓட
..
வந்தித்திடுவோமே .


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/11 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

veNbA virumbi

unread,
Jan 13, 2009, 12:41:29 PM1/13/09
to சந்தவசந்தம்
(வெண்பா)

விந்தையடை சந்தநடை வெற்றிநட மாடிவர
முந்தையிழை புண்ணியத்தான் முத்தமிழில் - எந்தையுயர்
முந்தையனின் சீருணர்த்து மொய்க்கவிகள் செப்புமணி
சிந்தையகன் றேகான் சிவன்.


On Jan 11, 10:13 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2009-01-09
> அங்கணனைப் புகல் நாவே
> -------------------------------------
> தந்ததனத் தானதனத் .. தனதான
> (உம்பர்தருத் தேநுமணிக் கசிவாகி - திருப்புகழ்)
>
> தந்தையெனத் தாயுமெனத் .. திகழ்வோனைச்
> .. சந்திரனைச் சூடியபொற் .. சடையானை
> முந்தையனைத் தேடிருவர்க் .. கரியானை
> .. முந்தைவினைப் பாசமதைக் .. களைவோனை
> அந்திநிறத் தானைநினைத் .. திசைபாடும்
> .. அன்பருயிர்க் காவலனைப் .. பகடேறும்
> அந்தகனைத் தாளொடுதைத் .. தருள்வோனை
> .. அங்கணனைப் பேணிமிகப் .. புகல்நாவே.
>
> "முந்தையனைத் தேடிருவர்க் கரியானை" - 'முந்தையனைத், தேடு இருவர்க்கு அரியானை'
> என்றும், 'முந்து ஐயனைத் தேடு இருவர்க்கு அரியானை' என்றும் பிரிக்கலாம்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/1/8 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > திருவாதிரையை (10-Jan-2009) ஒட்டி.
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Kaviyogi Vedham

unread,
Jan 14, 2009, 3:48:54 AM1/14/09
to santhav...@googlegroups.com
Dear Siva,
 Thanks for clarification. accepted.
 As for, new thread, I request yu all to put the "subject' colm, only in English,
 not chaduram chadhuram. Dont type there in Tamil.pl
yogiyaar
----- Original Message -----
From: Siva Siva
Sent: Monday, January 12, 2009 7:41 PM
Subject: Re: வண்ணப் பாடல்

அன்புள்ள யோகியார்,

நன்றி.

1) '
முந்தையன்':
முந்தைவினை, முந்தையோர் போன்ற சொற்கள் பரவலாக அறியப்படுவன அல்லவோ?

பாடலை எழுதியபின், அகராதியிலும் தேவாரத் தளத்திலும் சென்று சற்றுத் தேடினேன். அப்பொழுதுதான் அதிலிருந்த இரண்டாவது பொருள் புலப்பட்டது.

முந்துதல் - மேலெழுதல் (to rise up); காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல் (to be prior in time, place, etc.);
முந்து - முற்காலம் (antiquity); முன்பு (priority); ஆதி (beginning);

2)
தேடு இருவர் - வினைத்தொகை.
உங்கள் மடலைக் கண்டபின் தேடியதில் கண்ட (நான் முன்னமே அறிந்த) ஒரு பாடல்:

நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி



2009/1/13 veNbA virumbi <mvms...@gmail.com>

Siva Siva

unread,
Jan 14, 2009, 8:59:09 PM1/14/09
to santhavasantham

2009-01-01
களியொடு வாழ அருள்வாயே
---------------------------------------
(
தனதன தான தனதன தான


..
தனதன தான .. தனதான

(
அகரமு மாகி அதிபனு மாகி - திருப்புகழ் - பழமுதிர்சோலை)

முடிவில தான இடர்வர வாடி
.....
முதுமையு மாகி .. அதனாலே
..
மொழிதடு மாறி அறிவறி யாது
.....
முழுமுத லான .. உனைஓரேன்
கடிமலர் தூவி அளியொடு தூய
.....
கழலிணை மீது .. தமிழ்பாடிக்
..
கணமற வாது கவலையி லாது
.....
களியொடு வாழ .. அருள்வாயே
வடிவில னான ஒருபொரு ளாகி
.....
வடிவுக ளாகு .. மிறையோனே
..
மணிவண னோடு மலரவ னேடு
.....
வளரெரி யான .. பெருமானே
துடியிடை மாதை இணைபிரி யாது
.....
துணிமதி சூடி .. அரவோடு
..
துளிநிற மேறு மிடறொளிர் நீறு
.....
துதைகிற மேனி .. உடையோனே.

பதம் பிரித்து:

முடி(வு) இல(து) ஆன இடர் வர, வாடி முதுமையும் ஆகி, அதனாலே
..
மொழி தடுமாறி, அறி(வு) அறியாது, முழுமுதல் ஆன உனை ஓரேன்;
கடி மலர் தூவி அளியொடு தூய கழலிணை மீது, தமிழ்பாடிக்,
..
கண[ம்] மறவாது, கவலை இலாது களியொடு வாழ அருள்வாயே;
வடி(வு) இலன் ஆன ஒரு பொருள் ஆகி, வடிவுகள் ஆகும் இறையோனே!
..
மணிவணனோடு மலரவன் நேடு வளர் எரி ஆன பெருமானே!
துடி இடை மாதை இணை பிரியாது, துணிமதி சூடி அரவோடு,
..
துளி நிறம் ஏறு மிட(று) ஒளிர், நீறு துதைகிற மேனி உடையோனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/13 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

K.R. Kumar

unread,
Jan 14, 2009, 9:58:03 PM1/14/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவா சிவா,
 
நமஸ்காரங்கள்.
 
இன்றும் அருணகிரிநாதர் போல அற்புதமான சந்தங்களுடன் இ.திருப்புகழ்(இன்றைய திருப்புகழ்) நீங்கள் இயற்றும் பாடல்கள் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. வாழ்த்துகள்.
 
இன்றுதான் NHM Writer தரவிறக்கம் செய்தேன். பழகிக் கொண்டிருக்கிறேன்.
இந்த மடலை அதன் மூலமாகத்தான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.
 
நீங்கள் அனுப்பிய திருப்புகழ் மூன்று பகுதிகளில், முதல் பகுதி அச்செடுத்து விட்டேன். இரண்டாம் பகுதி அச்செடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஏதாவது Table of contents இருக்கிறதா ?(இந்தந்தப் பாடல் எண் இந்தந்த திருத்தலத்தில் பாடப்பட்டது ). இந்த தகவல் இணையத்தில் கிடைக்குமா ?அப்படி இல்லா விட்டால் நாம் தான் தயார் செய்ய வெண்டுமா? 
 
அன்புடன்,
குமார்(சிங்கை)
 
2009/1/15 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jan 14, 2009, 10:11:50 PM1/14/09
to santhav...@googlegroups.com
Dear Kumar,

I have attached a pdf file which is an alphabetical index of the thiruppugazh songs. The numbers correspond to the song numbers in the files you mentioned.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/1/14 K.R. Kumar <krish...@gmail.com>
Part-00 - Song Index - Unicode.pdf

K.R. Kumar

unread,
Jan 14, 2009, 10:19:32 PM1/14/09
to santhav...@googlegroups.com
Dear Siva Siva,
 
It is good. Is there any index relating song number-thiruththalam or Podhu
 
It will be good if we can collect songs basing on thiruththalam.
 
Regards,
K.R.Kumar


 
2009/1/15 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jan 15, 2009, 1:52:28 AM1/15/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அருமையான சேவை சிவா! ரொம்ப நாள் ஆரோக்கியமுடன் நீவிர் வாழ்க!முருகு அருள் உண்டு..
 யோகியார்

2009/1/15 Siva Siva <naya...@gmail.com>

K.R. Kumar

unread,
Jan 15, 2009, 2:23:03 AM1/15/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சிவா சிவா,
 
அடியேன் பாடல் எண், திருத்தலம் , பாடல் முதல் சொல், பக்க எண், பிரிவு எண் அடிப்படையில் ஒரு அட்டவனை தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
எக்ஸெலில் செய்வதால் தேவைப் படும்போது ஃபில்டர் செய்து கொள்ளலாம்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)


 
2009/1/15 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

thangamani

unread,
Jan 15, 2009, 6:06:37 AM1/15/09
to சந்தவசந்தம்
வண்ணப் பாடல்கள்!

சடையில் மேவும் நிலவுகங்கை
..சதங்கை நாதம் குலுங்கும் சந்தம்
..சதுர தாக நடனம் மன்றில் பயில்வோனே!

உழுவை ஆடை மழுவும் அங்கி
..உரகம் மானும் உடன ணிந்து
..உமையைப் பாதி இடது பங்கில் உடையோனே!

முழவி நோடு துடியின் ஓசை
..முழங்க வேதம் உணர்ந்தும் ஓத
..முதிந்த மோன நிலை யுகந்து அருள்வோனே!

இறையை நாடும் குரவர் தந்த
..இனிய தெய்வ அலங்கல் மேவி
..இதய மாழ்ந்து பணியும் சிந்தை புரிவாயே!

அன்புள்ள சிவசிவா!
முன்னர் எழுதி பிழை சரிசெய்யாமல் வைத்திருந்த பாடல் இது.
பிழை சரி செய்யவும்

அன்புடன்,
தங்கமணி.

> 2009/1/13 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jan 15, 2009, 8:25:34 PM1/15/09
to santhav...@googlegroups.com
உங்கள் பாடலின் சந்த அமைப்பைச் சொன்னால் கருத்துச் சொல்ல உதவும்.

வண்ணப் பாடல்களைப் பற்றி முன்னொரு சமயம் ச.வ.வில் பேசப்பட்டது. அதை இங்கே காணலாம்:
http://groups.yahoo.com/group/santhavasantham/message/17002

உங்கள் வசதிக்காக அதிலிருந்து ஒரு பகுதி இங்கே:
------

* 16- அடிப்படைச் சந்தங்களுக்குப் பின் '' , னா, னத் . . போல் சேர்த்து மற்ற தொடர்களை உருவாக்கலாம்.
சான்று
: தத்தன ( சுட்டது), தத்தனா (பெற்றதா), தத்தனத் (கற்றதைக் ) . .

*
ஒரு சந்தத்துடன் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தங்களையும் சேர்ப்பது உண்டு.

*
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
.
கப்பிய கரிமுகன் அடிபேணிக்

சந்தக் குழிப்பு
:
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன தனதான


என்ற சான்றைப் பார்க்கலாம்
.

* '
கைத்தல நிறைகனி ' என்ற பகுதி 'துள்ளல்' எனப்படும்.
'
தத்தன தனதன' என்ற சந்த அமைப்பில் வருகிறது.

**
சந்தம் பல சேர்ந்து 'துள்ளல்' ஆகும் **

*
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன

--
இதில் மூன்று துள்ளல்கள் சேர்ந்து ஒரு 'குழிப்பு' -ஆக வருகிறது. பொதுவாக, 'துள்ளல்' ஒன்றாகவோ, மூன்றாகவோ அடுக்கப் பட்டுக் 'குழிப்பாக' வரும்.

*
தனிச்சொல் மாதிரி வரும் 'தனதான' என்பது தொங்கல் எனப்படும்.

*
குழிப்பும் தொங்கலும் சேர்ந்து 'கலை' எனப்படும்.

*
இரண்டு கலைகள் மோனையால் இணைந்து அடியாகும்.

*
ஒரே எதுகை பயிலும் நான்கு அடிகள் = ஒரு வண்ணப் பாடல்.

பசுபதி
29-08-06


------

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/1/15 thangamani <tvthan...@gmail.com>

வண்ணப் பாடல்கள்!

சடையில் மேவும் நிலவுகங்கை
..சதங்கை நாதம் குலுங்கும்  சந்தம்
..சதுர  தாக  நடனம் மன்றில் பயில்வோனே!

உழுவை  ஆடை மழுவும்  அங்கி
..உரகம் மானும் உடன  ணிந்து
..உமையைப் பாதி இடது பங்கில் உடையோனே!

முழவி நோடு துடியின் ஓசை
..முழங்க  வேதம்  உணர்ந்தும் ஓத
..முதிந்த  மோன நிலை  யுகந்து அருள்வோனே!

இறையை நாடும்  குரவர் தந்த
..இனிய  தெய்வ  அலங்கல்  மேவி
..இதய மாழ்ந்து பணியும்  சிந்தை  புரிவாயே!

அன்புள்ள சிவசிவா!
முன்னர் எழுதி பிழை சரிசெய்யாமல் வைத்திருந்த பாடல் இது.
பிழை  சரி செய்யவும்

அன்புடன்,
தங்கமணி.


thangamani

unread,
Jan 16, 2009, 1:24:00 AM1/16/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
இப்பாடலின் சந்த அமைப்பு:
"தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த தனதான" என்று அமைகிறது.
நீங்கள் கொடுத்த ச.வ.சுட்டிக்கு மிகவும் நன்றி!
இவற்றையெல்லாம் ஒரு இடத்தில் வைத்திருக்கிறேன்.
இடம் மறந்துவிட்டது.தேடிக் காண்பேன்.

அன்புடன்,
தங்கமணி.

> 2009/1/15 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
>
>
> > வண்ணப் பாடல்கள்!
>
> > சடையில் மேவும் நிலவுகங்கை
> > ..சதங்கை நாதம் குலுங்கும்  சந்தம்
> > ..சதுர  தாக  நடனம் மன்றில் பயில்வோனே!
>
> > உழுவை  ஆடை மழுவும்  அங்கி
> > ..உரகம் மானும் உடன  ணிந்து
> > ..உமையைப் பாதி இடது பங்கில் உடையோனே!
>
> > முழவி நோடு துடியின் ஓசை
> > ..முழங்க  வேதம்  உணர்ந்தும் ஓத
> > ..முதிந்த  மோன நிலை  யுகந்து அருள்வோனே!
>
> > இறையை நாடும்  குரவர் தந்த
> > ..இனிய  தெய்வ  அலங்கல்  மேவி
> > ..இதய மாழ்ந்து பணியும்  சிந்தை  புரிவாயே!
>
> > அன்புள்ள சிவசிவா!
> > முன்னர் எழுதி பிழை சரிசெய்யாமல் வைத்திருந்த பாடல் இது.
> > பிழை  சரி செய்யவும்
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>

> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Jan 16, 2009, 10:32:25 PM1/16/09
to santhavasantham

2009-01-02

கழலிணை நினை வரம் அருள்வாய்
---------------------------------------------
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன தந்தத் தனதன
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன தனத்த தனதன .. தனதான

(
விந்துப் புளகித இன்புற் றுருகிட - திருப்புகழ் - திருவருணை)

இந்தப் புவிதனில் வந்திப் பிறவியில்
.....
முந்தைப் புரிவினை துன்பத் தொடர்தர
..
இளைத்து மிகுபிணி வருத்த இழிவினை
.....
இழைத்து நிதமிக அலுத்து வழிதனை .. அறியாமல்
நொந்தித் துயரற வந்திக் கிறஒரு
.....
சிந்தைத் திறனில னம்பொற் கழலிணை
..
நுவற்சி நினைகிற மனத்தை அடைகிற
.....
வரத்தை அருளிடி னுனக்கு வருகுறை .. உளதோசொல்
பந்தர்க் கிடையொரு பந்தத் திருவினை
.....
அன்றச் சுவடியை முன்பிட் டதுவொரு
..
படிச்சு வடியென நடித்து மணவினை
.....
தடுத்த டிமையென முடித்து மிகவருள் .. புரிவோனே
அந்திப் பிறையொடு கொன்றைச் சரமணி
.....
செம்பொற் சடைவிடை வென்றிக் கொடிமிசை
..
அலைக்கு நதிதலை மலைக்கு மகளுட
.....
லருத்த மெரிவிழி இருக்கு மழகிய .. பெருமானே.

பதம் பிரித்து:

இந்தப் புவிதனில் வந்(து), இப்பிறவியில்
.....
முந்தைப் புரி வினை துன்பத் தொடர் தர
..
இளைத்து, மிகு பிணி வருத்த, இழிவினை
.....
இழைத்து நித[ம்] மிக அலுத்து, வழிதனை .. அறியாமல்
நொந்(து), இத்துயர் அற வந்திக்கிற ஒரு
.....
சிந்தைத் திறன் இலன்; அம் பொற்கழல் இணை
..
நுவற்சி நினைகிற மனத்தை அடைகிற
.....
வரத்தை அருளிடின் உனக்கு வரு குறை .. உளதோ சொல்!
பந்தர்க்(கு) இடை ஒரு பந்தத் திரு வினை
.....
அன்(று) அச் சுவடியை முன்(பு) இட்(டு), அது ஒரு
..
படிச் சுவடி என நடித்து, மண வினை
.....
தடுத்(து), அடிமை என முடித்து, மிக அருள் .. புரிவோனே!
அந்திப் பிறையொடு கொன்றைச் சரம் அணி
.....
செம் பொற்சடை, விடை வென்றிக் கொடிமிசை,
..
அலைக்கு[ம்] நதி தலை, மலைக்கு மகள் உடல்
.....
அருத்தம், எரி விழி, இருக்கும் அழகிய .. பெருமானே.


(3-
ம் அடி சுந்தரர்க்கு அருள்புரிந்ததைச் சுட்டியது).


அன்புடன்
,
வி. சுப்பிரமணியன்



2009/1/14 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Jan 17, 2009, 3:28:16 AM1/17/09
to சந்தவசந்தம்
மிக அருமை!
அனந்த்

> 2009/1/14 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

thangamani

unread,
Jan 17, 2009, 4:07:15 AM1/17/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
நான் எழுதிய பாடல்,சந்தம் பொருள்
சரியாக அமைந்துள்ளதா?
இல்லையெனில் பிழைசுட்டவும். திருத்திக் கொள்கிறேன்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Jan 17, 2009, 9:20:10 AM1/17/09
to santhav...@googlegroups.com

அன்புள்ள தங்கமணி,

வணக்கம்.
உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.

முன்னர் இட்ட மடலில் சுட்டிய இழையில் குறிப்புட்டுள்ள தகவல்கள் வண்ணப்பாடல்கள் எழுத உதவும்.

எனக்குத் தெரிந்த அளவில்:

சில பொதுவான கருத்துகள்:

1.
வண்ணப் பாடல்களை (இன்னும் சொல்லப்போனால், எந்தப் பாடலையுமே) இயற்றும்பொழுது, புணர்ச்சியைப் பிரிக்காமல் எழுதுவது நல்லது.

2.
வண்ணப்பாடல்களில், வல்லொற்றும், மெல்லொற்று+வல்லின உயிர்மெய்யும் வரும் இடங்கள் சந்தத்தில் இல்லாத இடங்களில் அமையக்கூடாது.

தங்கள் பாடலை இப்படி எழுதினால் சந்தத்தைச் சரிபார்க்கத் தங்களுக்கும் மற்றோர்க்கும் உதவும்.

தனன தான தனன தந்த
தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த .. தனதான

சடையின் மேவு நிலவு கங்கை
..
சதங்கை நாதங் குலுங்குஞ் சந்தந்
..
சதுர தாக நடன மன்றிற் .. பயில்வோனே!

உழுவை ஆடை மழுவு மங்கி
..
உரக மானு முடன ணிந்
..
துமையைப் பாதி இடது பங்கி .. லுடையோனே!

முழவி நோடு துடியி னோசை
..
முழங்க வேத முணர்ந்து மோத
..
முதிந்த மோன நிலையு கந் .. தருள்வோனே!

இறையை நாடுங் குரவர் தந்த
..
இனிய தெய்வ அலங்கன் மேவி
..
இதய மாழ்ந்து பணியுஞ் சிந்தை .. புரிவாயே!

1.
எதுகை சில அடிகளில் இல்லை.

2. '
தந்த' என்று வரவேண்டிய இடங்களில் சில இடங்களில் அந்த ஓசை அமையவில்லை. (குறில்+மெல்லொற்று+வல்லின உயிர்மெய்க்குறில்)

3. "
தான தனன" என்ற இடத்தில் "சதங்கை நாதங்" பொருந்தாது.

4.
சில இடங்களில் புணர்ச்சியினால் ஒலி மாறுகிறது.

நீங்கள் உங்கள் பாடலை வாய்விட்டுச் சொல்லிப்பார்க்கின் இதே போல் வேறு சில இடங்களிலும் உள்ளதை உணர்வீர்கள்.

அன்புடன்,

வி. சுப்பிரமணியன்



2009/1/17 thangamani <tvthan...@gmail.com>
--~--~---------~--~----~------------~-------~--~----~
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
-~----------~----~----~----~--
----~----~------~--~---




--

Siva Siva

unread,
Jan 17, 2009, 10:13:02 AM1/17/09
to santhav...@googlegroups.com
// 3. "தான தனன" என்ற இடத்தில் "சதங்கை நாதங்" பொருந்தாது. //
த.பி. - "தனன தான"

2009/1/17 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jan 19, 2009, 7:34:08 PM1/19/09
to santhavasantham

2009-01-04
அடியிணை தொழ அருள்வாய் (திருவிடைமருதூர்)
------------------------------
தய்ய தனதன தனதன .. தனதான

மெய்யை வளர்வழி அதுநினை .. மனமாகி
..
வெய்ய வினையினை மலையென.. மிகுமாறு
செய்ய விழைகிற சிறுமதி .. உடையேனைச்
..
செவ்வி மிகுமடி இணைதொழ .. அருள்வாயே
பெய்யு மழையென அளியொடு .. வருவோனே
..
பிள்ளை மதியினை அணிகிற .. பெருமானே
நையு மனதுடை அடியவ .. ரிசைபாட
..
நல்ல கதிதரு மிடைமரு .. துறைவோனே.

பதம் பிரித்து:

மெய்யை வளர் வழி அது நினை மனமாகி,
..
வெய்ய வினையினை மலை என மிகுமாறு
செய்ய விழைகிற சிறு மதி உடையேனைச்,
..
செவ்வி மிகும் அடி இணை தொழ அருள்வாயே;
பெய்யு[ம்] மழை என அளியொடு வருவோனே;
..
பிள்ளை மதியினை அணிகிற பெருமானே;
நையு[ம்] மன(து) உடை அடியவர் இசை பாட,
..
நல்ல கதி தரும் இடைமரு(து) உறைவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/16 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 21, 2009, 10:04:24 PM1/21/09
to santhavasantham

2009-01-07
அடிபேணல் நெஞ்சும் உணராதோ
----------------------------------------------
தய்ய தந்த தய்ய தந்த
தய்ய தந்த .. தனதான

சொல்வ தொன்று செய்வ தொன்று
.....
தொல்லை பொங்கு .. வழிநாடித்
..
தொய்ய உந்து மைவர் உண்டு
.....
துய்ய உன்ற .. னடிபேணல்
வெல்ல வந்த எய்தி நின்ற
.....
வெய்ய முந்தை .. வினையாவும்
..
வெல்லு கின்ற செய்கை என்ற
.....
மெய்யை நெஞ்சு .. முணராதோ
கல்லெ றிந்து பொய்த விர்ந்து
....
கைவ ணங்க .. அதுகூடக்
..
கள்ளி ழிந்து மொய்சு ரும்பு
.....
கள்வி ரும்பு .. மலர்போல
நல்ல தென்று கொள்ளு மின்ப
.....
நள்ளி என்று .. மிசைபாடி
..
நையு மன்ப ருள்ளு றைந்து
.....
நல்கு கின்ற .. உமைகோனே.

பதம் பிரித்து:

சொல்வ(து) ஒன்று செய்வ(து) ஒன்று,
.....
தொல்லை பொங்கு வழி நாடித்
..
தொய்ய உந்தும் ஐவர் உண்டு;
.....
துய்ய உன்றன் அடி பேணல்,
வெல்ல வந்த எய்தி நின்ற
.....
வெய்ய முந்தை வினை யாவும்
..
வெல்லுகின்ற செய்கை என்ற
.....
மெய்யை நெஞ்சும் உணராதோ?
கல் எறிந்து பொய் தவிர்ந்து
....
கை வணங்க, அதுகூடக்
..
கள் இழிந்து மொய் சுரும்புகள்
.....
விரும்பு மலர் போல
நல்ல(து) என்று கொள்ளும் இன்ப;
.....
நள்ளி, என்றும் இசை பாடி,
..
நையும் அன்பர் உள் உறைந்து
.....
நல்குகின்ற உமைகோனே.

*
அடி-3 - சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டு உய்ந்ததைச் சுட்டியது.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/19 Siva Siva <naya...@gmail.com>

2009-01-04
அடியிணை தொழ அருள்வாய் (திருவிடைமருதூர்)
------------------------------
தய்ய தனதன தனதன .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Jan 21, 2009, 11:31:22 PM1/21/09
to santhav...@googlegroups.com
அடேங்கப்பா, சிவா.. திருப்புகழ்ச் சந்தமதில் துள்ளி விளையாடறாரே!.
 என்ன ஞானம் என்ன அறிவு?நிச்சயம் அவரிடம் முருகருள் ததும்புகிறது வாழ்க என் அன்பர்!,
 யோகியார்

2009/1/22 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jan 25, 2009, 9:13:01 AM1/25/09
to santhavasantham

2009-01-09
கவிபாடச் சிந்தை தந்து அருள்வாய்
-----------------------------------------------
தந்தனந் தந்தத் .. தனதான
(
சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)

என்புடன் கொன்றைச் .. சரநாகம்
..
எங்கணும் பந்தித் .. தெருதேறி
அன்புடன் துண்டப் .. பிறைசூடி
..
அஞ்சலென் றன்பர்க் .. கருள்வோனே
என்கரங் கும்பிட் .. டுனசீரை
..
இன்புபொங் குஞ்சொற் .. கவிபாடத்
தென்பரங் குன்றத் .. துறைவோனே
..
சிந்தையொன் றிங்குத் .. தருவாயே.

பதம் பிரித்து:

என்புடன் கொன்றைச் சரம், நாகம்
..
எங்கணும் பந்தித்(து), எரு(து) ஏறி,
அன்புடன் துண்டப் பிறை சூடி,
..
அஞ்சல் என்(று) அன்பர்க்(கு) அருள்வோனே;
என் கரம் கும்பிட்(டு), உன சீரை
..
இன்பு பொங்கும் சொற்கவி பாடத்,
தென் பரங்குன்றத்(து) உறைவோனே,
..
சிந்தை ஒன்(று) இங்குத் தருவாயே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/21 Siva Siva <naya...@gmail.com>

2009-01-07
அடிபேணல் நெஞ்சும் உணராதோ
----------------------------------------------
தய்ய தந்த தய்ய தந்த
தய்ய தந்த .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 28, 2009, 6:10:33 PM1/28/09
to santhavasantham

2009-01-09
கழல்நாடும் பண்பைத் தாராய்


-----------------------------------------------
தந்தனந் தந்தத் .. தனதான
(
சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)

பொங்கிடுஞ் சிந்தைத் .. தொடராலே
..
புண்படும் புந்திச் .. சிறியேனும்
மங்கைபங் கன்பொற் .. கழல்நாடி
..
வந்திடும் பண்பைத் .. தருவாயே
சங்கடங் குன்றத் .. துதிதேவர்
..
தங்களின் துன்பைத் .. தவிர்நீலம்
தங்கிடுங் கண்டத் .. தழகோனே
..
தண்பரங் குன்றத் .. துறைவோனே.

பதம் பிரித்து:

பொங்கிடும் சிந்தைத் தொடராலே
..
புண்படும் புந்திச் சிறியேனும்,
மங்கைபங்கன் பொற்கழல் நாடி
..
வந்திடும் பண்பைத் தருவாயே;
சங்கடம் குன்றத் துதி தேவர்
..
தங்களின் துன்பைத் தவிர், நீலம்
தங்கிடும் கண்டத்(து) அழகோனே;
..
தண் பரங்குன்றத்(து) உறைவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/25 Siva Siva <naya...@gmail.com>

2009-01-09
கவிபாடச் சிந்தை தந்து அருள்வாய்
-----------------------------------------------
தந்தனந் தந்தத் .. தனதான
(
சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 30, 2009, 9:17:11 PM1/30/09
to santhavasantham

2009-01-11
எம் கோவே எனற்கு மனம் ஈவாய் - (திருவேடகம்)
----------------------------------------------
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த .. தனதான

(
நாவேறு பாம ணத்த - திருப்புகழ் - திருவேரகம்)

மேலான நூலு ரைத்த சீரான பாதை விட்டு
....
மேனாளி லேயி ழைத்த .. வினையாலே
..
வீணாக நானி லத்தி லாறாத ஆசை யுற்று
....
வீடாத நோவு பெற்று .. மிகவாடிக்
கோலான தேபி டிக்கு மூதாகி ஆவி அற்ற
....
கூடாகி ஏகு தற்கு .. முனமேஎம்
..
கோவேஅ ராவ சைத்த தேவாதி தேவ சத்தி
....
கூறான வாஎ னற்கு .. மனமீவாய்
பாலான வாரி கக்கு மாலால மோரி னித்த
....
பாகாக வேகு டித்த .. மிடறோனே
..
பாவோடு மாலை கட்டி நாடோறு மோது பத்தர்
....
பாராளு மாற ளிக்கு .. மருளாளா
மாலாகி வாது புக்க மாறான பேர்ப தைக்க
....
மாகாழி யார்வி டுத்த .. திருவேடு
..
மாவேக ஆறெ திர்த்து மேலோடி நீரி னிற்கு
....
மாணேறு மேட கத்தி .. லுறைவோனே



பதம் பிரித்து:

மேல் ஆன நூல் உரைத்த சீரான பாதை விட்டு,
....
மேனாளிலே இழைத்த வினையாலே,
..
வீணாக நானிலத்தில் ஆறாத ஆசை உற்று,
....
வீடாத நோவு பெற்று மிக வாடிக்,
கோல் ஆனதே பிடிக்கு[ம்] மூ(து) ஆகி, ஆவி அற்ற
....
கூ(டு) ஆகி, ஏகுதற்கு முனமே, "எம்
..
கோவே; அரா அசைத்த தேவாதி தேவ; சத்தி
....
கூ(று) ஆனவா" எனற்கு மனம் ஈவாய்;
பால் ஆன வாரி கக்கும் ஆலாலம் ஓர் இனித்த
....
பா(கு) ஆகவே குடித்த மிடறோனே;
..
பாவோடு மாலை கட்டி நாள் தோறும் ஓது பத்தர்
....
பார் ஆளுமா(று) அளிக்கும் அருளாளா;
மால் ஆகி வாது புக்க மா(று) ஆன பேர் பதைக்க,
....
மா காழியார் விடுத்த திரு ஏடு
..
மா வேக ஆ(று) எதிர்த்து மேல் ஓடி நீரில் நிற்கு[ம்]
....
மாண் ஏறும் ஏடகத்தில் உறைவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/28 Siva Siva <naya...@gmail.com>

2009-01-09
கழல்நாடும் பண்பைத் தாராய்


-----------------------------------------------
தந்தனந் தந்தத் .. தனதான
(
சந்ததம் பந்தத் தொடராலே - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Jan 30, 2009, 11:26:04 PM1/30/09
to santhav...@googlegroups.com
திருப்புகழ் சந்தம் சிறப்பு. நல்ல தாளகதியில் நடக்கின்றன. சந்தக்குழிப்பிற்கேற்ப எழுதும் போது சிறு வேறுபாடும் காட்டிக்கொடுத்துவிடும். சந்தம் -கோட்டுக்குளடங்கிடும் பாட்டு. அழகாகவும் அமைவாகவும் செல்லுகின்றது.
 
இலந்தை

 

Siva Siva

unread,
Feb 4, 2009, 11:28:49 AM2/4/09
to santhavasantham

2009-01-12
வழி சேர அன்பு தருவாய்
--------------------------------
தனனா தனந்த .. தனதான
(
வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)

உணவே துமின்றி .. உடலாடி
..
ஒருபா னையுன்ற .. னுருவீழ
உணர்வே துமின்றி .. நிலம்வீழும்
..
உயர்வா னவன்பர் .. பசிதீரும்
வணநா ளுமன்று .. படியீவாய்
..
மறவா மலென்று .. மடியேனும்
மணமா லைகொண்டு துதிபாடி
..
வழிசே ரவன்பு தருவாயே.

பதம் பிரித்து:

உண(வு) ஏதும் இன்றி .. உடல் ஆடி,
..
ஒரு பானை உன்றன் .. உரு வீழ,
உணர்(வு) ஏதும் இன்றி .. நிலம் வீழும்
..
உயர்வான அன்பர் .. பசி தீரும்
வண[ம்], நாளும் அன்று .. படி ஈவாய்;
..
மறவாமல் என்றும் .. அடியேனும்
மண மாலை கொண்டு துதி பாடி
..
வழி சேர அன்பு தருவாயே.

*
புகழ்த்துணை நாயனார் வரலாற்றைச் சுட்டியது.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/30 Siva Siva <naya...@gmail.com>

2009-01-11
எம் கோவே எனற்கு மனம் ஈவாய் - (திருவேடகம்)
----------------------------------------------
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த .. தனதான

(
நாவேறு பாம ணத்த - திருப்புகழ் - திருவேரகம்)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
Message has been deleted

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 4, 2009, 9:49:48 PM2/4/09
to santhav...@googlegroups.com

அருமை! உங்களுடைய ஒவ்வொரு வண்ணப் பாடலும் அட்சர லட்சம் பெறும்.

அனந்த்
5-2-2009

2009/2/5 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Feb 6, 2009, 6:40:26 PM2/6/09
to santhavasantham

2009-01-12
இட்டமாய் யானுனைப் பணிவேனே (திருவேடகம்)
-----------------------------------------------
தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)

கைப்பதே நாடியிப் .. புவிமீது
..
கட்டமே நாளுமுற் .. றிழியாமல்
எய்ப்பிலா வாழ்வினைப் .. பெறுமாறே
..
இட்டமாய் யானுனைப் .. பணிவேனே
துப்பனே ஓர்பவர்க் .. கணியானே
..
சொக்கனே மாலயற் .. கரியானே
அப்பனே ஆரணப் .. பொருளானே
..
அக்கரா ஏடகப் .. பெருமானே.

பதம் பிரித்து:

கைப்பதே நாடி, இப் புவிமீது
..
கட்டமே நாளும் உற்(று) இழியாமல்,
எய்ப்(பு) இலா வாழ்வினைப் பெறுமாறே,
..
இட்டமாய் யான் உனைப் பணிவேனே;
துப்பனே; ஓர்பவர்க்(கு) அணியானே;
..
சொக்கனே; மால் அயற்(கு) அரியானே;
அப்பனே; ஆரணப் பொருளானே;
..
அக்கரா; ஏடகப் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/4 Siva Siva <naya...@gmail.com>

2009-01-12
வழி சேர அன்பு தருவாய்
--------------------------------
தனனா தனந்த .. தனதான
(
வரியார் கருங்கண் மடமாதர் - திருப்புகழ் - திருச்செந்தூர்)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 10, 2009, 7:20:15 PM2/10/09
to santhavasantham

2009-01-12
வாரத்தொடு பாடு
-----------------------
தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)

சேரற் .. கறியாது
..
தேய்வுற் .. றுழலாதே
ஓரற் .. குணர்வாயே
..
ஊரிற் .. பலிதேரும்
ஈரச் .. சடையானை
..
ஏமப் .. புணையானை
வாரத் .. தொடுபாடி
..
வானைப் .. பெறலாமே.

பதம் பிரித்து:

சேரற்(கு) அறியாது
..
தேய்(வு) உற்(று) உழலாதே;
ஓரற்(கு) உணர்வாயே;
..
ஊரில் பலி தேரும்
ஈரச் சடையானை,
..
ஏமப் புணையானை,
வாரத்தொடு பாடி
..
வானைப் பெறலாமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/6 Siva Siva <naya...@gmail.com>

2009-01-12
இட்டமாய் யானுனைப் பணிவேனே (திருவேடகம்)
-----------------------------------------------
தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 12, 2009, 8:18:28 PM2/12/09
to santhavasantham

2009-01-12
பாடிப் பணிவேன்


-----------------------
தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)

பேசற் .. கரியானைப்
..
பேணித் .. தொழுவோரின்
பூசைக் .. கருள்வானைப்
..
பூதப் .. படையானை
வாசக் .. குழலாளை
..
வாமத் .. துடையானைப்
பாசத் .. தொடரோடப்
..
பாடிப் .. பணிவேனே.

பதம் பிரித்து:

பேசற்(கு) அரியானைப்,
..
பேணித் தொழுவோரின்
பூசைக்(கு) அருள்வானைப்,
..
பூதப் படையானை,
வாசக் குழலாளை
..
வாமத்(து) உடையானைப்,
பாசத் தொடர் ஓடப்
..
பாடிப் பணிவேனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/10 Siva Siva <naya...@gmail.com>

2009-01-12
வாரத்தொடு பாடு
-----------------------
தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Feb 13, 2009, 4:44:41 AM2/13/09
to சந்தவசந்தம்
தானத் .. தனதான
(நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)

தேசுற்..றழலானை
..சேமப்..புணையானை
ஏசற்..கருதாது
..ஈடற்..றருள்வோனை
பூசித்..துணர்வோரின்
..போதப்..பொருளானை
ஆசற்..றலர்தூவி
..ஆரத்..தொழுவோமே!

பதம் பிரித்து:

தேசுற்ற அழலானை சேமப் புணையானை
ஏசல் கருதாது ஈடு அற்று அருள்வோனை
பூசித்து உணர்வோரின் போதப் பொருளானை
ஆசு அற்ற அலர்தூவி ஆரத் தொழுவோமே!

பிழைச் சுட்டவும்.தேசுற்றழல்,
ஆசற்றலர்('அ'தொகுத்தல் விகாரமாவதால்
பிழையாகுமா?)

அன்புடன்,
தங்கமணி.

> 2009/2/10 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-12
> > வாரத்தொடு பாடு
> > -----------------------
> > தானத் .. தனதான
> > (நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

SUBBAIER RAMASAMI

unread,
Feb 13, 2009, 8:13:03 AM2/13/09
to santhav...@googlegroups.com
ஆசிடையிட்ட எதுகை, ஐகாரப் பிரிதல் போன்ற சிலக்கண விகர்பங்களை இதில்காண்கிறேன்.
 
துப்பனே என்றால் 'துப்பு' உடையவனே என்றுதானே பொருள்.
 
இலந்தை

Siva Siva

unread,
Feb 13, 2009, 12:26:00 PM2/13/09
to santhav...@googlegroups.com

அக்கரன் - அக்ஷரன் - அழிவற்றவன்;


'துப்பு' என்ற சொல்லுக்குப் பல பொருள்கள். அவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்டன இறைவனுக்குப் பொருந்தி வரும்.

துப்பு - பவளம்; சிவப்பு; தூய்மை; பற்றுக்கோடு - Support; துணை - Assistance, help;

தமிழ் அகராதி:
http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.6:182.tamillex


------------

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8129&padhi=29&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருவாசகம் -
துப்பனே தூயாய் தூயவெண் ணீறு
    துதைந்தெழு துளங்கொளி வயிரத்
தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின்
    உறுசுவை அளிக்கும்ஆ ரமுதே
......

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8105&padhi=05&startLimit=98&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

திருவாசகம் -
அப்ப னேயெனக் கமுத னேஆ
    னந்த னேஅகம் நெகஅள் ளூறுதேன்
ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
    உரிய னாய்உனைப் பருக நின்றதோர்
துப்ப னேசுடர் முடிய னேதுணை
    யாள னேதொழும் பாள ரெய்ப்பினில்
வைப்ப னேஎனை வைப்ப தோசொலாய்
    நைய வையகத் தெங்கள் மன்னனே.
---------


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/2/13 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

ananth

unread,
Feb 14, 2009, 1:59:56 AM2/14/09
to சந்தவசந்தம்
அன்புள்ள தங்கமணி,

ஈடற்..றருள்வோனை என்பது ஈடு அற்று அருள்வோனை என்றாவது போலத் தேசுற்றழலானை
என்பது தேசுற்று அழலானை என்று பிரியும், தேசற்ற அழலானை ஆகாது; பின்னது
தேசுற்றவழலானை என்று புணரும். இது போல, ஆசற்றலர் என்பது ஆசுஅற்று அலர்
ஆகும், ஆசு அற்ற அலர் ஆகாதென்பது என் கருத்து. ஆசற்..றலர்தூவி என்பதைப்
பூசிப்பவரின் ஆசு (குற்றம்) நீங்கி, அலர்களைத் தூவி என்று கொள்ளலாம்.

அனந்த்
பி.கு. முன்பே சுட்டியது போலப் பிழை திருத்தி என்ற வேற்றுமைத் தொகையின்
நடுவில் வல்லொற்று மிகாது.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

ananth

unread,
Feb 14, 2009, 2:04:07 AM2/14/09
to சந்தவசந்தம்
>தேசதே அழலானை ஆகாது;
’தேசுதே அழலானை ஆகாது’ என்று த்ருத்திப் படிக்கவும்.

ananth

unread,
Feb 14, 2009, 2:13:08 AM2/14/09
to சந்தவசந்தம்
Oops! Please ignore the earlier post resulting from my typing problem.
Of late, when I type in thamizh using ekalappai, the letters 'jump'
and fall in odd places! This happens particularly when I type 'r+any
letters' or 'e'+any letters, the latter letters appear in some other
part of my notepad or wrodpad. May be it happens only for me! (:-

ananth
14-2-2009

K.R. Kumar

unread,
Feb 14, 2009, 3:40:55 AM2/14/09
to santhav...@googlegroups.com
Dear Ananth,
 
Two suggestions.
 
1)Remove ekalappai completely and re-install
2)Switch over to NHM Writer.
 
Regards,
K.R.Kumar
 

2009/2/14 ananth <gan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 16, 2009, 6:19:05 PM2/16/09
to santhavasantham

2009-01-13
கேளைத் தொழுவாய்
--------------------------

தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)

வாழத் .. தெரியாது
..
வாடித் .. தவியாதே
வேழத் .. துரிமூடி
..
வேளைப் .. பொடியாக
வீழச் .. சுடுவானை
..
வீரக் .. கழலானைக்
கேழற் .. றொளிர்வானைக்
..
கேளைத் .. தொழுவாயே.

பதம் பிரித்து:

வாழத் தெரியாது
..
வாடித் தவியாதே;
வேழத்(து) உரி மூடி,
..
வேளைப் பொடியாக
வீழச் சுடுவானை,
..
வீரக் கழலானைக்,
கேழ் அற்(று) ஒளிர்வானைக்,
..
கேளைத் தொழுவாயே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/12 Siva Siva <naya...@gmail.com>

2009-01-12
பாடிப் பணிவேன்

-----------------------
தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Feb 17, 2009, 8:02:29 AM2/17/09
to சந்தவசந்தம்
திரு.அனந்த் அவர்களுக்கு,
தவறுகளை நீக்கி எழுதியுள்ளேன்.பாடலை
இடுகிறேன்.தங்கள் கருத்துக்கும்,
பிழை எடுத்துச் சொன்னதற்கும் மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

thangamani

unread,
Feb 18, 2009, 2:58:05 AM2/18/09
to சந்தவசந்தம்
நேசத்..துணையாம்வெண்
..ணீறைத்..துதைந்தாடிப்
பேசற்..கினியானைப்
..பேசித்..துதிபாடிp

பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!

பதம் பிரித்து:

நேசத்துணையாம் வெண்ணீறைத் துதைந்துஆடிப்
பேசற்கு இனியானைப் பேசித் துதிபாடி,
பூசித்து உணர்வாரின் போதப் பொருளானை,
ஓசைக்கழலானை,
ஓதிப் பணிவோமே!

அன்புள்ள சிவசிவா!,


மிக்க நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

> 2009/2/12 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-12
> > பாடிப் பணிவேன்
> > -----------------------
> > தானத் .. தனதான
> > (நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

thangamani

unread,
Feb 20, 2009, 4:17:22 AM2/20/09
to சந்தவசந்தம்
துதைந்தாடி'சந்தம் சரிசெய்து
'புனைவோராய்ப்'என சரிசெய்துள்ளேன்.

நேசத்..துணையாம்வெண்

..ணீறைப்..புனைவோராய்ப்


பேசற்..கினியானைப்

..பேசித்..துதிபாடிப்


பூசித்..துணர்வாரின்
..போதப்..பொருளானை
ஓசைக்..கழலானை
..ஓதிப்..பணிவோமே!

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -

Siva Siva

unread,
Feb 20, 2009, 9:33:59 PM2/20/09
to santhavasantham

2009-01-13
நாமம் ஓத அருள்புரிவாய்
--------------------------------

தானன தானன தானன தானன
..
தானன தானன .. தனதான

(
ஏவினை நேர்விழி மாதரை - திருப்புகழ் - திருச்செந்தூர்)

பாடுவ தோவறி யேனுன சீரிரு
.....
பாதமி ராவொடு .. பகலாக
..
பாடடி யாரொடு சேரகி லேனிழி
.....
பாதையி லேகுழி .. விழுமாறே
ஓடுகி றேனத னாலிட ரானவை
.....
ஓய்வில தாய்வர .. உழல்வேனும்
..
ஊனமெ லாமற நாவொடு நாமம
.....
தோதிடு மாறருள் .. புரிவாயே
நீடுயர் தீயென ஆகிய நாளினி
.....
னேடிய மாலய .. னறியாத
..
நீர்மைய னேநதி யோடுநி லாமதி
.....
நீள்சடை மேலுற .. வருவோனே
ஆடும ராவரை நாணென வாகிட
.....
ஆலமர் மாமிட .. றுடையோனே
..
ஆயிழை கூறென ஓர்விடை யேறிய
.....
ஆரழ காசிவ .. பெருமானே.

பதம் பிரித்து:

பாடுவதோ அறியேன் உன சீர்; இரு
.....
பாதம்; இராவொடு .. பகலாக
..
பா(டு) அடியாரொடு சேரகிலேன்; இழி
.....
பாதையிலே குழி விழுமாறே
ஓடுகிறேன்; அதனால் இடர் ஆனவை
.....
ஓய்(வு) இலதாய் வர .. உழல்வேனும்,
..
ஊனம் எலாம் அற, நாவொடு நாமம(து)
.....
ஓதிடுமா(று) அருள் புரிவாயே;
நீ(டு) உயர் தீ என ஆகிய நாளினில்
.....
நேடிய மால் அயன் அறியாத
..
நீர்மையனே; நதியோடு நிலாமதி
.....
நீள்சடை மேலுற .. வருவோனே;
ஆடும் அரா அரைநாண் என ஆகிட,
.....
ஆல் அமர் மா மிட(று) .. உடையோனே;
..
ஆயிழை கூ(று) என, ஓர் விடை ஏறிய
.....
ஆரழகா; சிவ பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/16 Siva Siva <naya...@gmail.com>

2009-01-13
கேளைத் தொழுவாய்
--------------------------

தானத் .. தனதான
(
நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Feb 20, 2009, 10:56:19 PM2/20/09
to சந்தவசந்தம்
அற்புதமான பாடல்!
உழல்வேனும் (உழல்பவனாகிய என்னையும்) என்பதை ’உழல்வேன் என்’ என்றும்
அமைக்கலாம் என நினைக்கிறேன். (உழல்வேன் என் = உழல்பவனாகிய

எனது; அல்லது நான் உழல்வது என்னை?)

அனந்த்

> 2009/2/16 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-13
> > கேளைத் தொழுவாய்
> > --------------------------
> > தானத் .. தனதான
> > (நீதத் துவமாகி - திருப்புகழ் - மதுரை)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Feb 22, 2009, 11:15:21 AM2/22/09
to santhav...@googlegroups.com
அதுவும் பொருந்துகிறது.

"உழல்வேன் என் ஊனம் எலாம் அற" - இது 'உழல்கிறவனான எனது ஊனங்கள் எல்லாம் அற" என்றும் பொருள்படும் என எண்ணுகிறேன்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/2/20 ananth <gan...@gmail.com>

Siva Siva

unread,
Feb 23, 2009, 8:39:20 PM2/23/09
to santhavasantham

2009-01-14
கழலை நினையும் அன்பைத் தருவாய் - (திருக்கடவூர்)

-----------------------------------------------
தனனதன தனன தந்தத் .. தனதான
(
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி - திருப்புகழ் - திருச்செந்தூர்)

கொடியவினை மிகம யங்கித் .. துளியேனும்
..
கொழுமலர்கொ டுனைவ ணங்கத் .. தெரியாது
மிடியிலுழ லெனது துன்பத் .. தொடரோட
..
விரைகழலை நினையு மன்பைத் .. தருவாயே
அடிதொழுத சிறுவ னஞ்சப் .. பகடேறி
..
அருகடையு மெமனை நெஞ்சத் .. துதையீசா
பொடியணியு மழக துங்கக் .. கடவூரா
..
புரிகுழலி தனையொர் பங்கத் .. துடையானே.

பதம் பிரித்து:
கொடிய வினை மிக, மயங்கித் துளியேனும்
..
கொழுமலர்கொ(டு) உனை வணங்கத் தெரியாது,
மிடியில் உழல் எனது துன்பத் தொடர் ஓட,
..
விரைகழலை நினையும் அன்பைத் தருவாயே;
அடி தொழுத சிறுவன் அஞ்சப் பக(டு) ஏறி
..
அரு(கு) அடையும் எமனை நெஞ்சத்(து) உதை ஈசா;
பொடி அணியும் அழக; துங்கக் கடவூரா;
..
புரிகுழலிதனை ஒர் பங்கத்(து) உடையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/20 Siva Siva <naya...@gmail.com>

2009-01-13
நாமம் ஓத அருள்புரிவாய்
--------------------------------

தானன தானன தானன தானன
..
தானன தானன .. தனதான

(
ஏவினை நேர்விழி மாதரை - திருப்புகழ் - திருச்செந்தூர்)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Feb 27, 2009, 10:14:43 PM2/27/09
to santhavasantham

2009-01-14
அலமரலை நீக்கி அருள்வோன் - (திருவையாறு)
----------------------------------------------------------
தனதனன தாத்த .. தனதான
(
வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - திருவாவினன்குடி)

சிலநொடியு மேத்த .. நினையாது
..
செடியவினை சேர்க்கு .. மறியாமை
விலகவழி காட்டு .. குருநீயே
..
விழியிலெரி காட்டு .. நுதலானே
சலமகளை ஏற்ற .. சடையானே
..
சரணடையு மார்க்கு .. மரணாகி
அலமரலை நீக்கி .. அருள்வோனே
..
அணிதிருவை யாற்றி .. லுறைவோனே.

பதம் பிரித்து:

சில நொடியும் ஏத்த .. நினையாது,
..
செடிய வினை சேர்க்கும் .. அறியாமை
விலக வழிகாட்டு .. குரு நீயே;
..
விழியில் எரி காட்டு[ம்] .. நுதலானே;
சலமகளை ஏற்ற .. சடையானே;
..
சரண் அடையும் ஆர்க்கும் .. அரண் ஆகி,
அலமரலை நீக்கி .. அருள்வோனே;
..
அணி திருவையாற்றில் .. உறைவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/23 Siva Siva <naya...@gmail.com>

2009-01-14
கழலை நினையும் அன்பைத் தருவாய் - (திருக்கடவூர்)

-----------------------------------------------
தனனதன தனன தந்தத் .. தனதான
(
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி - திருப்புகழ் - திருச்செந்தூர்)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 5, 2009, 10:42:25 AM3/5/09
to santhavasantham

2009-01-15
புகழ்பாடி வாழ அருள்வாய்
----------------------------------
தானத்தத் தனந்த தத்தந் .. தனதான

ஞாலத்திற் பிறந்து சித்தந் .. தெளியாமல்
..
நாணற்றுப் புரிந்த குற்றஞ் .. சிலவாமோ
மாலற்றுப் பணிந்து நித்தம் .. புகழ்பாடி
..
வாழற்குப் பரிந்து சற்றிங் .. கருள்வாயே
காலத்தைக் கடந்து நிற்குந் .. தனியானே
..
கானத்திற் கிரங்கி அச்சங் .. களைவோனே
ஆலத்தைத் தெரிந்தெ டுத்துண் .. டுமையோடே
..
ஆகத்தைப் பகிர்ந்து வக்கும் .. பெருமானே.

பதம் பிரித்து:

ஞாலத்தில் பிறந்து, சித்தம் தெளியாமல்
..
நாண் அற்றுப், புரிந்த குற்றம் சில ஆமோ?
மால் அற்றுப் பணிந்து, நித்தம் புகழ் பாடி
..
வாழற்குப், பரிந்து சற்(று) இங்(கு) அருள்வாயே;
காலத்தைக் கடந்து நிற்கும் தனியானே;
..
கானத்திற்(கு) இரங்கி அச்சம் களைவோனே;
ஆலத்தைத் தெரிந்தெடுத்(து) உண்(டு), உமையோடே
..
ஆகத்தைப் பகிர்ந்(து) உவக்கும் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/2/27 Siva Siva <naya...@gmail.com>

2009-01-14
அலமரலை நீக்கி அருள்வோன் - (திருவையாறு)
----------------------------------------------------------
தனதனன தாத்த .. தனதான
(
வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - திருவாவினன்குடி)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Mar 7, 2009, 8:38:31 AM3/7/09
to சந்தவசந்தம்
அன்புள்ள மணி,

வண்ணச் சந்தப் பாடல் எழுதுவது எளிய செய்ல அல்ல நீங்கள் விடாமல் தொடர்ந்து
தரும் ஒவ்வொரு சந்தப் பாடலும் அரிய கருத்துக்கள் கொண்டு அழகுடன்
திகழ்கின்றது. வாழ்த்துக்கள்!

அனந்த்
7-3-2009

On Mar 5, 11:42 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-01-15
> புகழ்பாடி வாழ அருள்வாய்
> ----------------------------------
> தானத்தத் தனந்த தத்தந் .. தனதான
>
> ஞாலத்திற் பிறந்து சித்தந் .. தெளியாமல்
> .. நாணற்றுப் புரிந்த குற்றஞ் .. சிலவாமோ
> மாலற்றுப் பணிந்து நித்தம் .. புகழ்பாடி
> .. வாழற்குப் பரிந்து சற்றிங் .. கருள்வாயே
> காலத்தைக் கடந்து நிற்குந் .. தனியானே
> .. கானத்திற் கிரங்கி அச்சங் .. களைவோனே
> ஆலத்தைத் தெரிந்தெ டுத்துண் .. டுமையோடே
> .. ஆகத்தைப் பகிர்ந்து வக்கும் .. பெருமானே.
>
> பதம் பிரித்து:
> ஞாலத்தில் பிறந்து, சித்தம் தெளியாமல்
> .. நாண் அற்றுப், புரிந்த குற்றம் சில ஆமோ?
> மால் அற்றுப் பணிந்து, நித்தம் புகழ் பாடி
> .. வாழற்குப், பரிந்து சற்(று) இங்(கு) அருள்வாயே;
> காலத்தைக் கடந்து நிற்கும் தனியானே;
> .. கானத்திற்(கு) இரங்கி அச்சம் களைவோனே;
> ஆலத்தைத் தெரிந்தெடுத்(து) உண்(டு), உமையோடே
> .. ஆகத்தைப் பகிர்ந்(து) உவக்கும் பெருமானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/2/27 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-14
> > அலமரலை நீக்கி அருள்வோன் - (திருவையாறு)
> > ----------------------------------------------------------
> > தனதனன தாத்த .. தனதான
> > (வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - திருவாவினன்குடி)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

thangamani

unread,
Mar 8, 2009, 7:49:59 AM3/8/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா,
உங்கள் வண்ணப்பா ஒவ்வொன்றும் அருமை!
நீங்கள் எழுத நினைக்கும்போதே
சொற்கள் தாமாக அந்தந்த சந்தங்களில்
வந்தமர்ந்து கொள்கிறதோ?என்று எண்ணுமளவிற்கு
உயர்வாய் அமைந்திருக்கிறது!நன்றி!வாழ்த்துகள்!!
(ஒரு பாடல்கூட நான் எழுதத் தெரியாமல் விழித்தது
எனக்குத்தான் தெரியும்!)

அன்புடன்,
தங்கமணி.

On 5 Mar, 20:42, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009-01-15
> புகழ்பாடி வாழ அருள்வாய்
> ----------------------------------
> தானத்தத் தனந்த தத்தந் .. தனதான
>
> ஞாலத்திற் பிறந்து சித்தந் .. தெளியாமல்
> .. நாணற்றுப் புரிந்த குற்றஞ் .. சிலவாமோ
> மாலற்றுப் பணிந்து நித்தம் .. புகழ்பாடி
> .. வாழற்குப் பரிந்து சற்றிங் .. கருள்வாயே
> காலத்தைக் கடந்து நிற்குந் .. தனியானே
> .. கானத்திற் கிரங்கி அச்சங் .. களைவோனே
> ஆலத்தைத் தெரிந்தெ டுத்துண் .. டுமையோடே
> .. ஆகத்தைப் பகிர்ந்து வக்கும் .. பெருமானே.
>
> பதம் பிரித்து:
> ஞாலத்தில் பிறந்து, சித்தம் தெளியாமல்
> .. நாண் அற்றுப், புரிந்த குற்றம் சில ஆமோ?
> மால் அற்றுப் பணிந்து, நித்தம் புகழ் பாடி
> .. வாழற்குப், பரிந்து சற்(று) இங்(கு) அருள்வாயே;
> காலத்தைக் கடந்து நிற்கும் தனியானே;
> .. கானத்திற்(கு) இரங்கி அச்சம் களைவோனே;
> ஆலத்தைத் தெரிந்தெடுத்(து) உண்(டு), உமையோடே
> .. ஆகத்தைப் பகிர்ந்(து) உவக்கும் பெருமானே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/2/27 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-14
> > அலமரலை நீக்கி அருள்வோன் - (திருவையாறு)
> > ----------------------------------------------------------
> > தனதனன தாத்த .. தனதான
> > (வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - திருவாவினன்குடி)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Mar 9, 2009, 7:46:06 PM3/9/09
to santhav...@googlegroups.com
இவ்விழையில் இடும் பாடல்களைப் படிக்கின்ற அன்பர்கட்கும், கருத்துச் சொல்லும் அன்பர்கட்கும் நன்றி.

Siva Siva

unread,
Mar 9, 2009, 7:47:30 PM3/9/09
to santhavasantham

2009-01-15
பாடிப் பாருற்றுப் பணிவேனே
-------------------------------------

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான

தேர்நிற்கச் சினந்து வெற்புந் .. திடுவோனின்
..
ஓர்பத்துச் சிரங்கு லைக்குங் .. கழல்பாடி
நீர்மிக்குப் பரந்த லைக்குஞ் .. சடைபாடி
..
நீலத்தைப் பெறுங்க ழுத்தின் .. புகழ்பாடிச்
சீர்மிக்குச் சிவந்தி ருக்குஞ் .. சிவனாரின்
..
தேகத்திற் றுதைந்தி ருக்கும் .. பொடிபாடிப்
பாருற்றுக் கிடந்து நித்தம் .. பணிவோரின்
..
பாவத்தைக் களைந்த ளிக்கும் .. பெருமானே.

பதம் பிரித்து:

தேர் நிற்கச், சினந்து, வெற்(பு) உந்திடுவோனின்
..
ஓர் பத்துச் சிரம் குலைக்கும் கழல் பாடி,
நீர் மிக்குப் பரந்(து) அலைக்கும் சடை பாடி,
..
நீலத்தைப் பெறும் கழுத்தின் புகழ் பாடிச்,
சீர் மிக்குச் சிவந்(து) இருக்கும் சிவனாரின்
..
தேகத்தில் துதைந்திருக்கும் பொடி பாடிப்,
பார் உற்றுக் கிடந்து நித்தம் பணிவோரின்
..
பாவத்தைக் களைந்(து) அளிக்கும் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/5 Siva Siva <naya...@gmail.com>

2009-01-15
புகழ்பாடி வாழ அருள்வாய்
----------------------------------
தானத்தத் தனந்த தத்தந் .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Mar 13, 2009, 11:23:14 AM3/13/09
to santhavasantham

2009-01-16
புகழ்கூறும் தமிழ் பாடு சிந்தை அளி - (திருவிடைமருதூர்)
--------------------------------------------
தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன .. தனதான
(
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு - திருப்புகழ் -திருவாவினன்குடி)

தணியாது நெஞ்சிலெழு பலவாசை உந்தவது
.....
தரியாம லென்றுமுல .. கிதிலாடித்
..
தருவாரை அண்டியவ ரளியாது நொந்துவினை
.....
தனையேபு ரிந்துழலு .. மடியேனும்
பிணிதீரு கின்றவழி சிவமான அன்புநெறி
.....
பிறழாம லெந்தையுன .. புகழ்கூறும்
..
பெருமாலை என்றுதமி ழிசைபாடு சிந்தையளி
.....
பிறவாம லென்றுமுள .. இறையோனே
பணியோடு திங்களொடு நதியோடு கின்றஒளிர்
.....
படரேர்மி குந்தசடை .. உடையோனே
..
பணிவோடு வந்தமரர் தொழமாவி டம்பருகு
.....
பரமாவி ருண்டுமிளிர் .. மிடறோனே
அணியாக வந்துதொழு மடியார்க ளின்பமுற
.....
அரணாகி முந்தைவினை .. களைவோனே
..
அழகேறு கின்றவிடை மருதூர மர்ந்தவிடை
.....
அதிலேறு கின்றசிவ .. பெருமானே.

பதம் பிரித்து:

தணியாது நெஞ்சில் எழு பல ஆசை உந்த, அது
.....
தரியாமல் என்றும் உல(கு) இதில் ஆடித்,
..
தருவாரை அண்டி, அவர் அளியாது நொந்து,
.....
வினைதனையே புரிந்(து) உழலும் .. அடியேனும்,
பிணி தீருகின்ற வழி சிவமான அன்பு நெறி
.....
பிறழாமல், எந்தை உன .. புகழ் கூறும்
..
பெரு[ம்] மாலை என்று தமிழ் இசை பாடு சிந்தை அளி,
.....
பிறவாமல் என்றும் உள .. இறையோனே;
பணியோடு திங்களொடு நதி ஓடுகின்ற ஒளிர்
.....
படர் ஏர் மிகுந்த சடை .. உடையோனே;
..
பணிவோடு வந்(து) அமரர் தொழ, மா விடம் பருகு
.....
பரமா; இருண்டு மிளிர் .. மிடறோனே;
அணியாக வந்து தொழும் அடியார்கள் இன்பமுற
.....
அரண் ஆகி முந்தைவினை .. களைவோனே;
..
அழ(கு) ஏறுகின்ற இடைமருதூர் அமர்ந்த, விடை
.....
அதில் ஏறுகின்ற சிவ பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/9 Siva Siva <naya...@gmail.com>

2009-01-15

பாடிப் பாருற்றுப் பணிவேனே
-------------------------------------

தானத்தத் தனந்த தத்தந் .. தனதான
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Mar 14, 2009, 1:22:01 AM3/14/09
to சந்தவசந்தம்
அழமு!
அனந்த்

> 2009/3/9 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-15
> > பாடிப் பாருற்றுப் பணிவேனே
> > -------------------------------------
> > தானத்தத் தனந்த தத்தந் .. தனதான
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Mar 17, 2009, 8:55:09 PM3/17/09
to santhavasantham

2009-01-16
குழுவோடு திருவடி வழிபட அருள்வாயே - (மயிலாப்பூர்)
-----------------------------------------------------------------------
தனன தனதன தனன தனதன
தனன தனதன .. தனதான
(
குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - திருவேரகம்)

கடலி லெழுகிற அலையி னிலையன
.....
கடையு மிலதென .. ஒருகோடி
..
கருவி லடைகிற கொடிய வினைபுரி
.....
கடைமை மிகுகிற .. அடியேனின்
மடமை அறவுனை மிகவு நினைகிற
.....
மதியை உடையவர் .. குழுவோடு
..
மறைக ளறைகிற உனது திருவடி
.....
மலரை வழிபட .. அருள்வாயே
அடைவ தமுதென அரவு கயிறென
.....
அசுரர் சுரரொடு .. கடைநாளில்
..
அவரை எரிவிட மெழவு மடிதொழ
.....
அதையு மமுதுசெய் .. பெருமானே
இடது புறமல ரனைய மலைமக
.....
ளிணையு மெழிலுரு .. உடையோனே
..
இரையு மலைமிகு கரையி னருகுள
.....
இனிய மயிலையி .. லுறைவோனே.

பதம் பிரித்து:

கடலில் எழுகிற அலையின் நிலை அன,
.....
கடையும் இல(து) என, .. ஒரு கோடி
..
கருவில் அடைகிற கொடிய வினை புரி
.....
கடைமை மிகுகிற .. அடியேனின்
மடமை அற , உனை மிகவு[ம்] நினைகிற
.....
மதியை உடையவர் .. குழுவோடு,
..
மறைகள் அறைகிற உனது திருவடி
.....
மலரை வழிபட .. அருள்வாயே;
அடைவ(து) அமு(து) என, அரவு கயி(று) என
.....
அசுரர் சுரரொடு .. கடை நாளில்,
..
அவரை எரி விடம் எழவும், அடி தொழ,
.....
அதையும், அமுதுசெய் .. பெருமானே;
இடது புற[ம்] மலர் அனைய மலைமகள்
.....
இணையும் எழில் உரு .. உடையோனே;
..
இரையும் அலை மிகு கரையின் அரு(கு) உள,
.....
இனிய மயிலையில் .. உறைவோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/13 Siva Siva <naya...@gmail.com>

2009-01-16
புகழ்கூறும் தமிழ் பாடு சிந்தை அளி - (திருவிடைமருதூர்)
--------------------------------------------
தனதான தந்ததன தனதான தந்ததன
தனதான தந்ததன .. தனதான
(
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு - திருப்புகழ் -திருவாவினன்குடி)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

ananth

unread,
Mar 21, 2009, 7:43:12 AM3/21/09
to சந்தவசந்தம்
அன்புள்ள மணி,

சரளமாக ஓடும் தரளங்களாகக் குறிலிணைச் சொற்கள் பயிலும் அழகிய வண்ணம்.
கருத்தழகு வரிகள்:

அடைவ தமுதென அரவு கயிறென
..... அசுரர் சுரரொடு .. கடைநாளில்
.. அவரை எரிவிட மெழவு மடிதொழ

..... **அதையு மமுதுசெய்** .. பெருமானே


அனந்த்
21-3-2009

> 2009/3/13 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-16
> > புகழ்கூறும் தமிழ் பாடு சிந்தை அளி - (திருவிடைமருதூர்)
> > --------------------------------------------
> > தனதான தந்ததன தனதான தந்ததன
> > தனதான தந்ததன .. தனதான
> > (சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு - திருப்புகழ் -திருவாவினன்குடி)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

ananth

unread,
Mar 23, 2009, 11:27:13 PM3/23/09
to சந்தவசந்தம்
பிரதோஷ நன்னாளாகிய இன்று சிவபெருமான் மீது ஒரு பாடல்:

’தோகைப் புரவி’ (இறக்கை முளைத்த குதிரை) என்று வியக்கும் வண்ணம்
அதிவிரைவில் பறந்து செல்லும் ஆற்றலுடைய பச்சை மாமயிலின் மீதேறி மண்ணும்
விண்ணும் சுற்றி வந்து சூரபன்மன் போன்ற தீயோரைப் பொருது வெற்றி வாகையுடன்
கைலாயம் திரும்புகிறான் ‘கோமள அண்டர் மண்டலர் வேலனெனும்’ பெயர் கொண்ட
இளங்குமரப் பெருமான். கயிலையில், ’புரத்ரயத்தவர் தூளாகவே முதற்சிரித்த
வித்தகர்’ என்னும்படி, வானில் மூன்று நகரங்களாக மாறித் தமக்கு இணை
எவருமிலர் என்று தருக்கோடு உலாவிய அவுணர்களைச் சிரித்தே எரிசெய்த
சிவபெருமான் தன் அருமை மைந்தன் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக்
காத்திருக்கிறான். தொலைவில், முருகன் திரும்பி வரும் காட்சி தெரிகிறது.
உடனே,
உள்ளத்தில் உவகை ஊற்றெனப் பொங்குகிறது. அந்த ஆனந்தம் விளைத்த
பதட்டத்தில், மனையாளான ‘சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி’ ஆகிய
உமையவள் தன் மேனியின் இடப்பாகத்தில்தான் இருக்கிறாள் என்பதையும் மறந்து,
”குழந்தையை வாரியணைத்து உச்சி முகர்ந்து பார்க்க ஓடிவா!” என்று அவளை
அழைக்கிறார். இந்தக் கற்பனையைப் பின்னணியாக வைத்து அமைத்த ஒரு வண்ணப்
பாடல்:

’நாசர்தம் கடையதனில்’ என்று தொடங்கும் திருப்புகழ் பாடலின் சந்தத்தை
ஒட்டியது ((முதல்சீர்களில் மட்டும் வேறு சந்தத்துடன்).
சந்தக் குழிப்பு:
தானனா தனதனன தனதனா தத்த தத்த தனதான
தானனந் தனதனன தனதனா தத்த தத்த தனதான

<> கச்சிப் பெருமான் <>

நீரிலே குமிழியென நிலைபெறா இச்ச கத்தி லுறுவாழ்வை
.. நேயமோ டிதுபெருமை எனுமதோர் சித்த முற்று மறுகாமல்

பாரிலே திகழுமுன தடியிலே ஒற்றி நிற்கு மவரேபோல்
.. பாடியே அருளடையும் வகையிலே பற்று வைக்க அருளாயோ

நேரிலா துலவுபுர மெரியவே செற்றெ ரித்த நகையோனே
.. நீலமா மயிலதனில் உலகெலாம் சுற்றி வெற்றி பெறுசேயை

வாரியே முடிநுகர விரையஆ கத்தி டத்தி லுறைவோளை
.. வாவென விளிபுகலும் தாதையே கச்சி நிற்கும் பெருமானே.

அனந்த்
24-3-2009
(ஆகம் - மேனி)

T.Raguveeradayal

unread,
Mar 24, 2009, 2:06:41 AM3/24/09
to santhav...@googlegroups.com
ஆஹா! ஆஹா!
Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://rajamragu.spaces.live.com


2009/3/24 ananth <gan...@gmail.com>

Siva Siva

unread,
Mar 24, 2009, 9:22:37 PM3/24/09
to santhav...@googlegroups.com
இனிய கற்பனை. நல்ல பாடல்.

1. // புர மெரியவே செற்றெ ரித்த நகையோனே //
எரியவே என்றபின், எரித்த என்று மீண்டும் சொல்வதைத் தவிர்க்கலாம் என எண்ணுகிறேன்.

2. 'நிற்கும் பெரூமானே' - இவ்விடத்தில் 'ம்பெ' என்று வருவது சந்தத்தைச் சற்று மாற்றுமோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/3/23 ananth <gan...@gmail.com>

ananth

unread,
Mar 24, 2009, 11:49:49 PM3/24/09
to சந்தவசந்தம்
கருத்துச் சொன்ன திரு. ரகுவீர் தயாளுக்கும் சிவசிவா மணிக்கும் நன்றி.
மணி சுட்டிய இடங்களில் சொற்களைச் சிறிது மாற்றி அமைத்து:

<> கச்சிப் பெருமான் <>


நீரிலே குமிழியென நிலைபெறா இச்ச கத்தி லுறுவாழ்வை
.. நேயமோ டிதுபெருமை எனுமதோர் சித்த முற்று மறுகாமல்


பாரிலே திகழுமுன தடியிலே ஒற்றி நிற்கு மவரேபோல்
.. பாடியே அருளடையும் வகையிலே பற்று வைக்க அருளாயோ


நேரிலா துலவுபுர மழியவே செற்றெ ரித்த நகையோனே


.. நீலமா மயிலதனில் உலகெலாம் சுற்றி வெற்றி பெறுசேயை


வாரியே முடிநுகர விரையஆ கத்தி டத்தி லுறைவோளை

.. வாவென விளிபுகலும் தாதையே கச்சி யுற்ற பெருமானே.

அனந்த்
25-3-2009

Siva Siva

unread,
Mar 25, 2009, 9:31:43 PM3/25/09
to santhavasantham

2009-01-17
தப்பாமற் கா - (மயிலாப்பூர்)
-----------------------
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் .. தனதான
(
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)

எப்பா வத்தா லிப்பா ரிற்போய்
.....
எய்ப்பா யெனவைத் .. தனையோநீ
..
எத்தே மிக்கே னற்றார் கட்கோர்
.....
எட்டா னிடுதற் .. கறியேனான்
இப்பாழ் மெய்ப்பே ணற்கே கெட்டே
.....
னிட்டார் பணியைத் .. தினமேவி
..
இப்பா டுற்றே னற்போ தத்தா
.....
லெப்போ தடியைத் .. தொழுவேனோ?
அப்பா லுக்கே அப்பா லிப்பால்
.....
அக்கோ டரவைப் .. புனைவோனே
..
அத்தே ரிற்றா ளிட்டே றப்போய்
.....
அச்சே முரியப் .. புரம்வேவ
வைப்பாய் நக்கே மட்டார் நற்றா
.....
மத்தாய் அணிபொற் .. சடையானே
..
வைப்பே மற்றார் உற்றார் தப்பா
.....
மற்கா மயிலைப் .. பெருமானே.

பதம் பிரித்து:

எப் பாவத்தால் இப் பாரில் போய்
.....
எய்ப்பாய் என வைத்தனையோ நீ;
..
எத்தே மிக்கேன்; அற்றார்கட்(கு) ஓர்
.....
எள் தான் இடுதற்(கு) அறியேன் நான்;
இப் பாழ் மெய்ப் பேணற்கே கெட்டேன்;
.....
இட்டார் பணியைத் தின[ம்] மேவி
..
இப் பா(டு) உற்றேன்; நல் போதத்தால்
.....
எப்போ(து) அடியைத் .. தொழுவேனோ?
அப்பாலுக்கே அப்பால், இப்பால்,
.....
அக்கோ(டு) அரவைப் புனைவோனே;
..
அத் தேரில் தாள் இட்(டு) ஏறப் போய்
.....
அச்சே முரியப், .. புரம் வேவ
வைப்பாய் நக்கே; மட்(டு) ஆர் நல்
.....
தாமத்தாய்; அணி பொற் சடையானே;
..
வைப்பே; மற்(று) ஆர் உற்றார்?
.....
தப்பாமல் கா, மயிலைப் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/17 Siva Siva <naya...@gmail.com>

2009-01-16
குழுவோடு திருவடி வழிபட அருள்வாயே - (மயிலாப்பூர்)
-----------------------------------------------------------------------
தனன தனதன தனன தனதன
தனன தனதன .. தனதான
(
குமர குருபர முருக சரவண - திருப்புகழ் - திருவேரகம்)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 1, 2009, 8:54:21 AM4/1/09
to santhavasantham

2009-01-19
வெம்மா வினைதீராய் - (திருவண்ணாமலை)
------------------------------------------

தன்னா .. தனதான

பண்ணார் .. தமிழ்பாடிப்
..
பன்னா .. டொழுவேனே
விண்ணோர் .. பெருமானே
..
வெம்மா .. வினைதீராய்
எண்ணா .. அயன்மாலார்
..
என்னே .. எனநேடி
அண்ணா .. நிலையானே
..
அண்ணா .. மலையானே.

பதம் பிரித்து:

பண் ஆர் தமிழ் பாடிப்
..
பன்னாள் தொழுவேனே;
விண்ணோர் பெருமானே;
..
வெம் மா வினை தீராய்;
எண்ணா அயன் மாலார்
.. "
என்னே" என நேடி,
அண்ணா நிலையானே;
..
அண்ணாமலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/3/25 Siva Siva <naya...@gmail.com>

2009-01-17
தப்பாமற் கா - (மயிலாப்பூர்)
-----------------------
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் .. தனதான
(
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால் - திருப்புகழ் - திருத்தணிகை)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 10, 2009, 8:44:38 AM4/10/09
to santhavasantham

2009-01-19
திண்ணார் வினைதீராய் - (திருவண்ணாமலை)
------------------------------------------

தன்னா .. தனதான

எண்ணா .. மதியாலே
..
இன்னா .. மிகுவேனின்
திண்ணார் .. வினைதீரச்
..
செம்மா .. னருளாயே
மண்ணார் .. பலர்கூடி
..
மன்னே .. மதிசூடீ
அண்ணா .. எனவோதும்


..
அண்ணா மலையானே.

பதம் பிரித்து:

எண்ணா மதியாலே
..
இன்னா மிகுவேனின்,
திண் ஆர் வினை தீரச்
..
செம்மான் அருளாயே;
மண்ணார் பலர்கூடி
.. "
மன்னே; மதிசூடீ;
அண்ணா" என ஓதும்


..
அண்ணாமலையானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/1 Siva Siva <naya...@gmail.com>

2009-01-19
வெம்மா வினைதீராய் - (திருவண்ணாமலை)
------------------------------------------
தன்னா .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 13, 2009, 11:27:29 AM4/13/09
to santhavasantham

2009-04-13
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
--------------------------------------
தந்தன தந்தன தத்தன தத்தன .. தனதான

பங்குனி சென்றது சித்திரை உற்றது .. பலர்வாழ்வில்
கங்குல கன்றொளி நித்தநி லைத்தவர் .. கவலாமல்
இங்கும கிழ்ந்திட வெற்றிவி டைக்கொடி .. இறையானைப்
பங்குமை கொண்டவ னைப்பர விச்சரண் .. அடைவோமே.

பதம் பிரித்து:

பங்குனி சென்றது; சித்திரை உற்றது; பலர் வாழ்வில்
கங்குல் அகன்(று) ஒளி நித்த[ம்] நிலைத்(து) அவர் கவலாமல்
இங்கு மகிழ்ந்திட, வெற்றி விடைக்கொடி இறையானைப்,
பங்(கு) உமை கொண்டவனைப் பரவிச் சரண் அடைவோமே.


2009/4/10 Siva Siva <naya...@gmail.com>

2009-01-19
திண்ணார் வினைதீராய் - (திருவண்ணாமலை)
------------------------------------------
தன்னா .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Apr 19, 2009, 9:17:14 AM4/19/09
to santhavasantham

2009-01-19
வினை களை பெருமான் - (திருவிடைமருதூர்)
------------------------------------------
தய்ய தனதன .. தனதான

எல்லை இலைஎன .. வருமாசை
..
எய்தி அலைகிற .. மனதாலே
செல்லு நெறிதனை .. அறியேனும்
..
செய்ய னுனதடி .. தொழுமாறே
ஒல்லை இனிதருள் .. புரிவாயே
..
உள்ள முருகிடு .. மடியாரின்
தொல்லை வினைகளை .. பெருமானே
..
துய்ய இடைமரு .. துறைவோனே



பதம் பிரித்து:

எல்லை இலை என வரும் ஆசை
..
எய்தி அலைகிற மனதாலே,
செல்லு[ம்] நெறிதனை அறியேனும்,
..
செய்யன் உன(து) அடி தொழுமாறே,
ஒல்லை இனி(து) அருள்புரிவாயே;
..
உள்ளம் உருகிடும் அடியாரின்
தொல்லை வினை களை பெருமானே;
..
துய்ய; இடைமரு(து) உறைவோனே;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/10 Siva Siva <naya...@gmail.com>

2009-01-19
திண்ணார் வினைதீராய் - (திருவண்ணாமலை)
------------------------------------------
தன்னா .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

unread,
Apr 19, 2009, 9:47:23 AM4/19/09
to santhav...@googlegroups.com
செழுமையான சந்தம்.
 சிதைவிலாத சொற்கள்
ஒழுகியோடும் வெள்ளம்
உருகியாடு முள்ளம்.
 
இலந்தை

Siva Siva

unread,
Apr 27, 2009, 1:15:39 PM4/27/09
to santhavasantham

2009-01-20
உனைக் கருதற்கு அருள்வாய் (திருவொற்றியூர்)
---------------------------------------
தனத்த தத்ததனத் .. தனதானா
(
நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)

உவப்பி னைப்பெறுதற் .. கெனநாளும்
..
உவர்ப்ப தைப்புரிதற் .. குளமாகி
அவத்தை யைப்பெறுமிச் .. சிறியேனும்
..
அகத்து னைக்கருதற் .. கருள்வாயே
அவத்த ருக்கறிதற் .. கரியானே
..
அருத்தி மிக்கவருத் .. தனுமாகி
உவப்பு வர்ப்புகளற் .. றொளிர்வோனே
..
ஒலிக்கு மொற்றிநகர்ப் பெருமானே.

பதம் பிரித்து:

உவப்பினைப் பெறுதற்(கு) என நாளும்
..
உவர்ப்பதைப் புரிதற்(கு) உளமாகி,
அவத்தையைப் பெறும் இச் சிறியேனும்
..
அகத்(து) உனைக் கருதற்(கு) அருள்வாயே;
அவத்தருக்(கு) அறிதற்(கு) அரியானே;
..
அருத்தி மிக்க அருத்தனும் ஆகி,
உவப்(பு) உவர்ப்புகள் அற்(று) ஒளிர்வோனே;
..
ஒலிக்கும் ஒற்றிநகர்ப் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/19 Siva Siva <naya...@gmail.com>

2009-01-19
வினை களை பெருமான் - (திருவிடைமருதூர்)
------------------------------------------
தய்ய தனதன .. தனதான

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
May 18, 2009, 9:41:17 PM5/18/09
to santhavasantham

2009-01-20
பொற்கழலைத் தொழ அருளாய் - (திருவொற்றியூர்)
---------------------------------------

தனத்த தத்ததனத் .. தனதானா
(
நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)

நரைத்து நச்சியவர்க் .. கிழிவாகி
..
நகைப்ப டற்குமுனர்ப் .. புணையான
விரைத்த பொற்கழலைத் .. தொழநீல[ம்]
..
மிடற்றில் வைத்தவசற் .. றருளாயே
உரைப்ப தற்குரையற் .. றமர்வோனே
..
உளத்து நற்றளியிற் .. றிகழ்வோனே
திரைக்க டற்கரையிற் .. பதியாமேர்
..
சிறக்கு மொற்றிதனிற் .. பெருமானே.

பதம் பிரித்து:

நரைத்து, நச்சியவர்க்(கு) இழிவாகி,
..
நகைப்படற்கு முனர்ப், புணை ஆன
விரைத்த பொற்கழலைத் தொழ, நீல[ம்]
..
மிடற்றில் வைத்தவ, சற்(று) அருளாயே;
உரைப்பதற்(கு) உரை அற்(று) அமர்வோனே;
..
உளத்து நல் தளியில் திகழ்வோனே;
திரைக்கடற் கரையில் .. பதி ஆம், ஏர்
..
சிறக்கும் ஒற்றிதனில் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/4/27 Siva Siva <naya...@gmail.com>

2009-01-20
உனைக் கருதற்கு அருள்வாய் (திருவொற்றியூர்)
---------------------------------------
தனத்த தத்ததனத் .. தனதானா
(
நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
May 19, 2009, 4:48:38 AM5/19/09
to சந்தவசந்தம்
'பொற்கழலைத் தொழ அருளாய்'
வண்ணப்பா வித்தகரின்(சிவசிவா) சிவத்திருப்புகழ்
அனைத்தும் தவப்பயனாய்
படித்து அறியக் கிடைத்ததென மகிழ்கிறேன்.
வாழ்த்துகள்!
அருமை!நன்றி!

அன்புடன்,
தங்கமணி.

> 2009/4/27 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2009-01-20
> > உனைக் கருதற்கு அருள்வாய் (திருவொற்றியூர்)
> > ---------------------------------------
> > தனத்த தத்ததனத் .. தனதானா
> > (நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jun 16, 2009, 10:28:58 PM6/16/09
to santhavasantham

2009-01-21
பொற்புடன் வாழ அருள்வாய் - (திருவாரூர்)
-----------------------------------------------
தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)

சுற்றுமா தீவினைப் .. பிணியாலே
..
துய்க்கிறே னோரிடர்க் .. கடல்மூழ்கி
குற்றமே வாதுபொற் .. புடன்வாழக்
..
கொற்றவா நீயெனக் .. கருள்வாயே
பெற்றமா காசினைக் .. குளமூழ்கிப்
..
பித்தனே தாவெனத் ., தருவோனே
வெற்றியே றேறுனைப் .. புகழ்வோர்கள்
..
மிக்கஆ ரூரினிற் .. பெருமானே.

பதம் பிரித்து:

சுற்று[ம்] மா தீவினைப் பிணியாலே,
..
துய்க்கிறேன் ஓர் இடர்க் கடல் மூழ்கி;
குற்ற[ம்] மேவாது பொற்புடன் வாழக்,
..
கொற்றவா, நீ எனக்(கு) அருள்வாயே;
பெற்ற மா காசினைக் குள[ம்] மூழ்கிப்,
.. "
பித்தனே தா" எனத் தருவோனே;
வெற்றி ஏ(று) (று) உனைப் புகழ்வோர்கள்
..
மிக்க ஆரூரினில் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/5/18 Siva Siva <naya...@gmail.com>

2009-01-20
பொற்கழலைத் தொழ அருளாய் - (திருவொற்றியூர்)
---------------------------------------

தனத்த தத்ததனத் .. தனதானா
(
நினைத்த தெத்தனையிற் - திருப்புகழ் - திருத்தணிகை)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jun 29, 2009, 10:00:30 PM6/29/09
to santhavasantham

2009-01-21 (Updated on 2009-06-29)
கழல்பாட அருள்வாய் - (திருவாரூர்)
-----------------------------------------------

தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)

எத்தையே நானிழைத் .. ததனாலே
..
எய்த்துவாழ் நாளினைக் .. கழியாமல்
பத்தியோ டேருடைக் .. கழல்பாடச்
..
சத்திகூ றாவெனக் .. கருள்வாயே
கத்துமா வாரியிற் .. றிரளாலம்
..
கப்பிவா னோர்தமக் .. கமுதீவாய்
நித்தனே காரணப் .. பொருளாகி
..
நிற்குமா ரூரினிற் .. பெருமானே.

பதம் பிரித்து:

எத்தையே நான் இழைத்(து), அதனாலே
..
எய்த்து வாழ்நாளினைக் கழியாமல்,
பத்தியோ(டு) ஏர்உடைக் கழல் பாடச்,
..
சத்திகூறா, எனக்(கு) அருள்வாயே;
கத்து மா வாரியில் திரள் ஆலம்
..
கப்பி, வானோர்தமக்(கு) அமு(து) ஈவாய்;
நித்தனே, காரணப் பொருள் ஆகி
..
நிற்கும், ஆரூரினில் பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/16 Siva Siva <naya...@gmail.com>

2009-01-21
பொற்புடன் வாழ அருள்வாய் - (திருவாரூர்)
-----------------------------------------------

தத்தனா தானனத் .. தனதான

(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 31, 2009, 9:55:21 PM7/31/09
to santhavasantham

2009-01-21
மத்தன் உனைத் தொழ அருள்வாய் - (திருவொற்றியூர்)
-------------------------------------------------
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன
.. தனதான
(
பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருச்செங்கோடு)

அற்றவ ரைப்புறம் வைத்திழி வைத்தரு
.....
மற்பரை உற்றவ .. ரெனநாடி
..
அக்கறை அற்றெழு மிச்சையு கைத்திட
.....
அப்படி இப்புவி .. தனிலாடி
மற்றவ ருக்கிழை குற்றமி குத்தழி
.....
வைப்பெறு சித்தம .. துடையேனும்
..
வற்றிவி னைத்தொட ரற்றிட நித்தலு
.....
மத்தனு னைத்தொழ .. அருள்வாயே
கற்றவ ருக்கும னத்தினி னிற்பவ
.....
கற்பக நற்கனி .. எனவாகி
..
கைத்தவி டத்தைமி டற்றில டைத்தவ
.....
கச்சென நச்சர .. வணிவோனே
எற்றுதி ரைக்கரை ஒற்றியி னச்சின
.....
ரிட்டம தைத்தரு .. மருளாளா
..
எப்பெயர் பத்தரு ரைக்கினு மப்பெய
.....
ரிற்றிகழ் நெற்றியில் .. விழியோனே.

பதம் பிரித்து:

அற்றவரைப் புறம் வைத்(து), இழிவைத் தரும்
.....
அற்பரை உற்றவர் என நாடி,
..
அக்கறை அற்(று), எழும் இச்சை உகைத்திட,
.....
அப்படி இப் புவிதனில் ஆடி,
மற்றவருக்(கு) இழை குற்ற[ம்] மிகுத்(து),
.....
அழிவைப் பெறு சித்தம(து) உடையேனும்,
..
வற்றி வினைத்தொடர் அற்றிட, நித்தலு[ம்]
.....
மத்தன் உனைத் தொழ அருள்வாயே;
கற்றவருக்கு மனத்தினில் நிற்பவ,
.....
கற்பக நற்கனி .. என ஆகி;
..
கைத்த விடத்தை மிடற்றில் அடைத்தவ;
.....
கச்(சு) என நச்(சு) அர(வு) அணிவோனே;
எற்று திரைக் கரை ஒற்றியில், நச்சினர்
.....
இட்டம் அதைத் தரும் அருளாளா;
..
எப்பெயர் பத்தர் உரைக்கினும் அப்பெயரில்
.....
திகழ், நெற்றியில் விழியோனே.

உகைத்தல் - செலுத்துதல்;
மத்தன் - ஊமத்த மலரைச் சூடியவன்;
கைத்தல் - கசத்தல்;
எற்றுதல் - மோதுதல்; அடித்தல்;
நச்சினர் - விரும்புபவர்;
(
திகழ் + நெற்றி - திகணெற்றி)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/6/29 Siva Siva <naya...@gmail.com>

2009-01-21 (Updated on 2009-06-29)
கழல்பாட அருள்வாய் - (திருவாரூர்)
-----------------------------------------------

தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Aug 1, 2009, 1:25:55 PM8/1/09
to santhav...@googlegroups.com
aஅடடா! அட்டகாசம்..டட்டட டடட என்று சந்தம் எங்கள் குற்றால ஆறுபோல் குதிக்கிறதே!பலே,பலே வாழ்க!
 யோகியார்

2009/7/31 Siva Siva <naya...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Aug 12, 2009, 1:09:21 PM8/12/09
to santhavasantham

2009-01-22
திருநாமம் சொல்ல அருள்வாய்
----------------------------------------
தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)

அல்ல தேபுரி .. வதனாலே
..
அல்ல லேமிகு .. மடியேனும்
வல்ல வாஉன .. திருநாமம்
..
சொல்லு மாறருள் .. புரிவாயே
கல்லி னோடலை .. கடனீரில்
..
கையர் வீசிட .. அதுகூட
நல்ல தோர்புணை .. எனவாக
..
நல்கு வாய்சிவ .. பெருமானே.

பதம் பிரித்து:

அல்லதே புரிவதனாலே
..
அல்லலே மிகும் அடியேனும்,
வல்லவா, உன திருநாமம்
..
சொல்லுமா(று) அருள்புரிவாயே;
கல்லினோ(டு) அலைகடல் நீரில்
..
கையர் வீசிட, அது கூட
நல்லதோர் புணை என ஆக
..
நல்குவாய் சிவபெருமானே.

* 3,4-
வது அடி - அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் எறிந்தபொழுது அவர் திருவைந்தெழுத்தைச் சொல்லி உய்ந்ததைச் சுட்டியது.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/31 Siva Siva <naya...@gmail.com>

2009-01-21
மத்தன் உனைத் தொழ அருள்வாய் - (திருவொற்றியூர்)
-------------------------------------------------
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன
.. தனதான
(
பத்தர்க ணப்ரிய - திருப்புகழ் - திருச்செங்கோடு)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/



--
http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Aug 13, 2009, 12:02:04 PM8/13/09
to santhavasantham

ஆடிக்கிருத்திகையை ஒட்டி
2009-08-13
புகழ்பாட அருள்வாய் வயலூரா
------------------------------------------
(
தனத்தன தனத்தன .. தனதான)

விருப்புகள் வெறுப்புகள் .. இவைநாளும்
..
விளைக்கிற இடர்க்கடல் .. அதில்வாடி
இருக்கிற எனக்குன .. புகழ்பாடி
..
இனிக்கிற மனத்தினை .. அருள்வாயே
நெருப்பினை நிகர்க்கிற .. வடிவோடு
..
நினைப்பவர் தமக்கருள் .. உமைபாலா
பொருப்பினை இடிக்கிற .. கதிர்வேலா
..
புனக்குற மகட்கிறை .. வயலூரா.

பதம் பிரித்து:

விருப்புகள் வெறுப்புகள் இவை நாளும்
..
விளைக்கிற இடர்க்கடல் அதில் வாடி
இருக்கிற எனக்(கு) உன புகழ் பாடி
..
இனிக்கிற மனத்தினை அருள்வாயே!
நெருப்பினை நிகர்க்கிற வடிவோடு,
..
நினைப்பவர் தமக்(கு) அருள் உமைபாலா!
பொருப்பினை இடிக்கிற கதிர்வேலா!
..
புனக் குறமகட்(கு) இறை வயலூரா!

உன - (உன் + ) - உனது;


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/12 Siva Siva <naya...@gmail.com>

2009-01-22
திருநாமம் சொல்ல அருள்வாய்
----------------------------------------
தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)

--
http://nayanmars.netne.net/

12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Aug 13, 2009, 6:47:19 PM8/13/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அருமை சிவா பாடியே பார்த்தேன் சத்தம் போட்டு..
 அழகு சந்தமும் அழகு சந்தமும் அழகு,
 யோகியார்


2009/6/29 Siva Siva <naya...@gmail.com>
2009-01-21 (Updated on 2009-06-29)
கழல்பாட அருள்வாய் - (திருவாரூர்)
-----------------------------------------------
தத்தனா தானனத் .. தனதான
(
பத்தியால் யானுனைப் பலகாலும் - திருப்புகழ் - இரத்தினகிரி)

எத்தையே நானிழைத் .. ததனாலே
..
எய்த்துவாழ் நாளினைக் .. கழியாமல்
பத்தியோ டேருடைக் .. கழல்பாடச்
..
சத்திகூ றாவெனக் .. கருள்வாயே
கத்துமா வாரியிற் .. றிரளாலம்
..
கப்பிவா னோர்தமக் .. கமுதீவாய்
நித்தனே காரணப் .. பொருளாகி

..
நிற்குமா ரூரினிற் .. பெருமானே.

பதம் பிரித்து:
எத்தையே நான் இழைத்(து), அதனாலே
..
எய்த்து வாழ்நாளினைக் கழியாமல்,
பத்தியோ(டு) ஏர்உடைக் கழல் பாடச்,
..
சத்திகூறா, எனக்(கு) அருள்வாயே;
கத்து மா வாரியில் திரள் ஆலம்
..
கப்பி, வானோர்தமக்(கு) அமு(து)

2009/8/13 Siva Siva <naya...@gmail.com>

ஆடிக்கிருத்திகையை ஒட்டி
2009-08-13
புகழ்பாட அருள்வாய் வயலூரா
------------------------------------------
(
தனத்தன தனத்தன .. தனதான)

விருப்புகள் வெறுப்புகள் .. இவைநாளும்
..
விளைக்கிற இடர்க்கடல் .. அதில்வாடி
இருக்கிற எனக்குன .. புகழ்பாடி
..
இனிக்கிற மனத்தினை .. அருள்வாயே
நெருப்பினை நிகர்க்கிற .. வடிவோடு
..
நினைப்பவர் தமக்கருள் .. உமைபாலா
பொருப்பினை இடிக்கிற .. கதிர்வேலா
..
புனக்குற மகட்கிறை .. வயலூரா.

பதம் பிரித்து:
விருப்புகள் வெறுப்புகள் இவை நாளும்
..
விளைக்கிற இடர்க்கடல் அதில் வாடி
இருக்கிற எனக்(கு) உன புகழ் பாடி
..
இனிக்கிற மனத்தினை அருள்வாயே!
நெருப்பினை நிகர்க்கிற வடிவோடு,
..
நினைப்பவர் தமக்(கு) அருள் உமைபாலா!
பொருப்பினை இடிக்கிற கதிர்வேலா
!
..
புனக் குறமகட்(கு) இறை வயலூரா!தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Aug 20, 2009, 10:02:51 PM8/20/09
to santhavasantham

2009-01-22
மறவாது துதிபாட அருள்வாய்


----------------------------------------
தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)

இல்லை நாடிய .. வறியோரை
..
இல்லை போவென .. உரையாமல்
வல்ல வாறளி .. மனமாகி
..
வைய மேபுகழ் .. பதியான
தில்லை மாநட .. மிடுவோய்நின்
..
செய்ய தாளிணை .. மறவாது
நல்ல பூவொடு .. துதிபாடி
..
நையு மாறருள் .. புரிவாயே.

பதம் பிரித்து:

இல்லை நாடிய வறியோரை
.. "
இல்லை போ" என உரையாமல்,
வல்லவா(று) அளி மனமாகி,
..
வையமே புகழ் பதி ஆன
தில்லை மாநடம் இடுவோய், நின்
..
செய்ய தாளிணை மறவாது,
நல்ல பூவொடு துதி பாடி
..
நையுமா(று) அருள்புரிவாயே.

அளி மனம் - வினைத்தொகை - அளிக்கிற மனம்;
பதி - தலம்; தலைவன்;
செய்ய தாள் இணை - சிவந்த இரு திருவடிகள்;
நைதல் - மனம் உருகுதல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/12 Siva Siva <naya...@gmail.com>

2009-01-22
திருநாமம் சொல்ல அருள்வாய்
----------------------------------------
தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)

--
http://nayanmars.netne.net/

12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Aug 21, 2009, 11:57:13 PM8/21/09
to santhavasantham

இப்பாடலைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தபொழுது நினைவிற்கு வந்த ஒரு தேவாரப் பாடல்:

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=40380&padhi=038&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

அப்பர் தேவாரம் - 4.38.10
இரப்பவர்க்(கு) ஈய வைத்தார் ஈபவர்க்(கு) அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்(கு) எல்லாம் கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்(கு) அருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே.

தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/20 Siva Siva <naya...@gmail.com>
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Aug 23, 2009, 3:50:38 PM8/23/09
to santhavasantham

முன் இட்ட பாடலைச் சற்று மாற்றி:

2009-08-23
வினைதீர அருள்வாய்
-----------------------------

Version-2:

தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)

இல்லை நாடிய .. வறியோரை
..
இல்லை போவென .. உரையாமல்

வல்ல வாறளி .. குணனாகி
..
மைய லோடரு .. வினைதீரத்
தில்லை மேவிய .. பெருமானே
..
செல்வ னேஎன .. மறவாமல்
சொல்லி நாடொறு .. மலர்தூவத்
..
துய்ய நீயருள் .. புரிவாயே.

பதம் பிரித்து:
இல்லை நாடிய வறியோரை
.. "
இல்லை போ" என உரையாமல்

வல்லவா(று) அளி குணனாகி,
..
மையலோ(டு) அருவினை தீரத்
"
தில்லை மேவிய பெருமானே;
..
செல்வனே" என மறவாமல்
சொல்லி நாள்தொறு[ம்] மலர் தூவத்,
..
துய்ய, நீ அருள்புரிவாயே.

அளி குணன் ஆகி - அளிக்கிற குணத்தை உடைவன் ஆகி;
மையல் - மயக்கம்; செருக்கு; (சம்பந்தர் தேவாரம் - 1.80.2 - "பறப்பைப்... பின்தாழ் சடையானை மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே.")
அருவினை - நீக்குதற்கரிய இருவினைகள்;
துய்யன் - பரிசுத்தன் (Holy, sacred person);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/20 Siva Siva <naya...@gmail.com>
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Aug 23, 2009, 4:57:32 PM8/23/09
to santhav...@googlegroups.com
ஆகா! இப்போ பாடலே மிருதுவாகி,அதன் குணபதார்த்தம் சிறந்து
உருகுமாறும் அமைந்துவிட்டது.வாழ்க நீவிர்!
யோகியார்

2009/8/23 Siva Siva <naya...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

srinivasan s

unread,
Aug 23, 2009, 9:48:31 PM8/23/09
to santhav...@googlegroups.com
பலனில் ஆசை விட்டொழித்து
    புரிகிறேன் நானென எண்ணாது
கலக்கும்  துன்பம் வந்தாலும்
    கடின  முயற்சியைக் கைவிடாமல்
சலமிலா உறுதித்  திண்மையுடன்
    சித்தி அசித்தி எதனாலும்
கலங்கா  மனதுடன் செயல்புரிவோன்
    சத்துவ னென்றான் சாரதியே!
 
இன்று பொதிகையில் கேட்ட பகவத்கீதையின் சாரமே இக்கவிதை.
 
அன்புடன் சமர்ப்பிப்பவன்
அன்பில் சீனிவாசன்
  

 

srinivasan s

unread,
Aug 23, 2009, 10:35:32 PM8/23/09
to santhav...@googlegroups.com
பகவத்கீதை செய்யுள்-- அத்தியாயம் - 18; செய்யுள் -26
இதைத் தெரிவிக்க மறந்ததற்கு மன்னிக்கவும்.
அன்பில் சீனிவாசன்

 

Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com



--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

srinivasan s

unread,
Aug 24, 2009, 11:47:34 PM8/24/09
to santhav...@googlegroups.com
பகவத்கீதை இன்றைய செய்யுள்கள் -- அத்தியாயம் 18, 27-ம் 28-ம் :

 புகழில்  விருப்பம்,  பணத்தின் செலவில்

 மிகவும்  வெறுப்பு,  பிறரை வருத்தல்,

 தகுந்ததாம்  தூய்மை  சற்றும் இன்மை,

 உகப்பும்  வருத்தமும்  உற்றலே இராசசம்!

 

 செயலில்  தகுதி  சிறிதுமிலான்  கல்லான்

 முயற்சியும்  இல்லான்   பிறர்களின்   துன்பம்

 நயப்பான்  வஞ்சிப்பான்   சோம்பன்  எடுத்த

 செயலில்   இவனே  தாமசன்  என்போன்.

தவறு இருப்பின் திருத்திப் பணிகொள்ளவும்.
 
அன்புடன்



--
S. Srinivasan
150, Samachar Appartment
Mayur Vihar phase - 1 Ext
Delhi - 110091
Phone No: 011-22710873
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

Siva Siva

unread,
Aug 25, 2009, 9:31:44 AM8/25/09
to santhav...@googlegroups.com
அன்பில் சீனிவாசன்,

உங்கள் பகவத் கீதைப் பாடல்கள் முயற்சி நன்று.
இவ்விழை 'வண்ணப் பாடல்" என்று உள்ளதால், நீங்கள் கீதைப் பாடல்களை வண்ணப் பாடல்களாக எழுதி இவ்விழையில் இட்டால் சிறக்கும்.

மற்ற வகைப் பாடல்கள் எனில், இன்னோர் இழையில் இடலாம்.
இவ்வாறு தொடர்ந்து பகவத் கீதைப் பாடல்கள் எழுதும் உத்தேசம் இருப்பின், ஒரு புது இழையே தொடங்கி அதில் தொடர்ந்து இடலாம். அது பின்னர்த் தேடுவதற்கும் தொகுப்பதற்கும் உங்களுக்கு உதவும்.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/8/24 srinivasan s <vasan...@gmail.com>

srinivasan s

unread,
Aug 25, 2009, 10:47:13 AM8/25/09
to santhav...@googlegroups.com
அன்புடையீர், அடியேன் அந்த அளவு திறமை உள்ளவன் அல்லன். ஏதோ உங்களுடைய கவிதைகள் அடியேனை மயக்கிவிட்டன. உள்ளத்தை கிளறி விட்டன. தாங்கள் சொல்வதுபோல் நீண்ட திட்டம் ஏதுமில்லை.
தங்கள் யோசனைக்கு நன்றி.
 
அன்புடன்
அன்பில் சீனிவாசன்

 

thangamani

unread,
Aug 25, 2009, 11:36:06 AM8/25/09
to சந்தவசந்தம்
'தய்ய தானன.. தனதான'

வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்லு மேஉன.. தருளாணை !
துய்ய நேசிவ.. பரனேநின்
...துப்ப தாகிய.. பத(ம்)ஆள்க!

அன்புள்ள சிவசிவா!இவ்வண்ணப்பாடல் சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.

On Aug 23, 12:50 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> முன் இட்ட பாடலைச் சற்று மாற்றி:
>
> 2009-08-23
> வினைதீர அருள்வாய்
> -----------------------------
>

> *Version-2:*

> 2009/8/20 Siva Siva <nayanm...@gmail.com>

> --http://nayanmars.netne.net/
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Aug 25, 2009, 11:56:54 AM8/25/09
to santhav...@googlegroups.com
நல்ல முயற்சி. பெரும்பாலும் அமைப்புச் சரியாக வந்துள்ளது.

1) 'துப்ப' - இது 'தத்த' என்று ஆகித் 'தய்ய' என்பதிலிருந்து பிறழ்கிறது.

2) பாடலின் 3 அடிகளே வந்துள்ளன. ஓர் அடி விடுபட்டுவிட்டதா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/8/25 thangamani <tvthan...@gmail.com>

'தய்ய தானன.. தனதான'

வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்லு மேஉன.. தருளாணை !
துய்ய நேசிவ.. பரனேநின்
...துப்ப தாகிய.. பத(ம்)ஆள்க!

அன்புள்ள சிவசிவா!இவ்வண்ணப்பாடல் சரிபார்க்கவும்.

அன்புடன்,
தங்கமணி.



thangamani

unread,
Aug 25, 2009, 12:11:04 PM8/25/09
to சந்தவசந்தம்
'தய்ய தானன.. தனதான'
>
> வைய வாழ்வினை.. மிகநாடி
> ...மைய லாகிட.. விழைவோரின்
> வெய்ய காரிருள்.. வினைமாய
> ...வெல்வ தேஉன.. தருளாகும்!
> துய்ய நேசிவ.. பரமேச!
> ...சுந்த ரேச!நின்.. பத(ம்)ஆள்க!
>
சிறு மாற்றம் செய்தேன்.

அன்புடன்,
தங்கமணி.

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

Siva Siva

unread,
Aug 27, 2009, 10:21:46 AM8/27/09
to santhavasantham

2009-01-22
தாளைத் தொழும் நினைவு தருவாய்
----------------------------------------------

தனதானத் .. தனதான
(
இறவாமற் பிறவாமல் எனையாள் - திருப்புகழ் - அவிநாசி)

அறியாமைக் .. கிடமாகி
..
அலைசூழிப் .. புவிமீது
வெறியேயுற் .. றலையாமல்,
..
விரைதாளைத் .. தொழுமாறே,
மறிசேர்கைப் .. பெருமானே,
..
மதிசேர்பொற் .. சடையானே,
நெறியாகித் .. திகழ்வோனே,
..
நினைவாகத் .. தருவாயே.

பதம் பிரித்து:

அறியாமைக்(கு) இடம் ஆகி,
..
அலை சூழ் இப் புவிமீது,
வெறியே உற்(று) அலையாமல்,
..
விரைதாளைத் தொழுமாறே,
மறி சேர் கைப் பெருமானே,
..
மதி சேர் பொற்சடையானே,
நெறி ஆகித் திகழ்வோனே,
..
நினை(வு) ஆகத் தருவாயே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/23 Siva Siva <naya...@gmail.com>

முன் இட்ட பாடலைச் சற்று மாற்றி:

2009-08-23
வினைதீர அருள்வாய்
-----------------------------

Version-2:

தய்ய தானன .. தனதான
(
அல்லில் நேருமி னதுதானும் - திருப்புகழ் - வள்ளியூர்)
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Aug 27, 2009, 2:02:39 PM8/27/09
to சந்தவசந்தம்
பிழைகள்,விடுபட்ட ஓரடி இவற்றை இடுகின்றேன்.
நன்றி!சிவசிவா!

வைய வாழ்வினை.. மிகநாடி
...மைய லாகிட.. விழைவோரின்
வெய்ய காரிருள்.. வினைமாய
...வெல்வ தேஉன.. தருளாகும்!

தைய லாளுமை.. இடமாகி
...சைவ மாதிரு.. மறையோதும்


துய்ய நேசிவ.. பரமேச!

...சொல்லு வேனுன.. தெழிலாடல்!

அன்புடன்,
தங்கமணி.

> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hidequoted text -

Siva Siva

unread,
Nov 2, 2009, 10:55:07 PM11/2/09
to santhavasantham

2009-01-23
தமிழ் பாடிப் பணிவேனே - (திருக்கடவூர்)
----------------------------------------------

தனதானத் .. தனதான
(
இறவாமற் பிறவாமல் எனையாள் - திருப்புகழ் - அவிநாசி)

தடுமாறித் .. தளராமல்
..
தமிழ்பாடிப் .. பணிவேனே
சுடுகானிற் .. பொடிபூசித்
..
துடிசேர்வட் .. டணையாட
எடுதாளைக் .. கடவூரில்
..
எமன்மாளற் .. கெனவீசி
நெடுவாழ்வைத் .. துதிபாடி
..
நினைநேயர்க் .. கருள்வோனே.

பதம் பிரித்து:

தடுமாறித் தளராமல்,
..
தமிழ் பாடிப் பணிவேனே;
சுடுகானில் பொடி பூசித்
..
துடி சேர் வட்டணை ஆட
எடு தாளைக், கடவூரில்
..
எமன் மாளற்(கு) என வீசி,
நெடு வாழ்வைத், துதி பாடி
..
நினை நேயர்க்(கு) அருள்வோனே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/8/27 Siva Siva <naya...@gmail.com>

2009-01-22
தாளைத் தொழும் நினைவு தருவாய்
----------------------------------------------

தனதானத் .. தனதான
(
இறவாமற் பிறவாமல் எனையாள் - திருப்புகழ் - அவிநாசி)

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Dec 5, 2009, 11:13:27 PM12/5/09
to santhavasantham

2009-12-05
அடியேனை மறவாதே (மயிலாப்பூர்)
-------------------------------------
தனதனன தான தனதனன தான
தனதனன தான .. தனதானா
(
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி - திருப்புகழ் - திருக்கழுக்குன்றம்)

உலகமிதில் நாளும் நிலையிலதி லாசை
.....
உடையனென வாகி .. அதனாலே
..
உறுபிணிக ளோடு மிகுதுயர னாகி
.....
உழலுமடி யேனை .. மறவாதே
இலயமிடு தூய மலரனைய தாளை
.....
இனியதமிழ் மாலை .. அவையோடே
..
இருபொழுது மோதி, இடர்களில னாகி
.....
இருநிலனில் வாழ .. அருள்வாயே;
தலைமலியு மாலை மணமலர்க ளாறு
.....
தலையிலழ காக .. அணிவோனே
..
தலைகலனு மாக இடுபலியை நாடு
.....
தலைவதிரு நீல .. மிடறோனே
மலைமகளொர் பாதி எனமகிழு மீச
.....
மழவிடையி லேறி .. வருவோனே
..
வலியவினை தீர எளியவழி யாகி
.....
மயிலைநகர் மேவு .. பெருமானே.

பதம் பிரித்து:

உலகம் இதில் நாளும் நிலை இலதில் ஆசை
.....
உடையன் என ஆகி அதனாலே,
..
உறு பிணிகளோடு மிகு துயரனாகி
.....
உழலும் அடியேனை மறவாதே;
இலயம் இடு தூய மலர் அனைய தாளை
.....
இனிய தமிழ் மாலை அவையோடே
..
இரு பொழுதும் ஓதி, இடர்கள் இலன் ஆகி
.....
இருநிலனில் வாழ அருள்வாயே;
தலை மலியு[ம்] மாலை, மண மலர்கள், ஆறு,
.....
தலையில் அழகாக அணிவோனே;
..
தலை கலனும் ஆக, இடு பலியை நாடு
.....
தலைவ; திரு நீல மிடறோனே;
மலைமகள் ஒர் பாதி என மகிழும் ஈச;
.....
மழ விடையில் ஏறி வருவோனே;
..
வலிய வினை தீர எளிய வழி ஆகி,
.....
மயிலை நகர் மேவு பெருமானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/11/2 Siva Siva <naya...@gmail.com>

2009-01-23
தமிழ் பாடிப் பணிவேனே - (திருக்கடவூர்)
----------------------------------------------

தனதானத் .. தனதான
(
இறவாமற் பிறவாமல் எனையாள் - திருப்புகழ் - அவிநாசி)
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Dec 7, 2009, 7:59:13 AM12/7/09
to santhavasantham


2009/12/5 Siva Siva <naya...@gmail.com>

நிலை இலதில் - நிலை இல்லாததில்;
உறு - மிகுந்த;
பிணி - பந்தம்/கட்டு; நோய்;
மறவாதே - மறந்துவிடாதே;
இலயம் - கூத்து (A dance);
இருநிலன் - இருநிலம் - பரந்த உலகம்;
மலிதல் - மிகுதல்;
தலை மலியும் மாலை - கரோடி - சிரமாலை (Garland of skulls);
கலன் - கலம் - உண்கலன்; பிச்சைப்பாத்திரம்;
நீல மிடறோன் - நீலகண்டன்;
ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்;
மழ விடை - இளம் காளை;

(
அப்பர் தேவாரம் - 4.9.1
"
தலையே நீவணங்காய் - தலைமாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.")

(
அப்பர் தேவாரம் - 5.57.1
"
முன்னமே நினையாதொழிந்தேன் உனை
இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர் வயல்சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே."
----
மறவல் = மறவாதே)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

It is loading more messages.
0 new messages