ஒரு அதிசயமான தகவுலுடன், விளக்கத்துடன் கிருஷ்ணா இதைத் தருகிறார்.
பாபநாசம்சிவன் மாதிரி மெட்டை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பொருளையும் தமிழில் மொழியாக்கம் செய்து
பாரதியின் தாசனான பாரதிதாசன் - கனகசுப்புரத்தினம் கொடுத்துள்ளார். கிருஷ்ணா சொல்வது போல
இது மிக மிகக் கடினம். சிறந்த கவிதாவிலாசமும் இசைஞானமும் கொண்ட பாரதிதாசன் போன்ற சிறந்த கவிஞரால் மட்டுமே இயலும்.
பாரதிதாசன் நல்ல இசையாற்றல் கொண்டவர். கிருஷ்ணா போல பலருக்கும் இது தெரியாது. புதுச்சேரியில் பாரதியின் முன்னிலையில்
அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தன்னுடைய சில கவிதைகளை பாடிக் காட்டியிருக்கிறார். அவர் சில கீர்த்தனைகளைத் தமிழில் இயற்றியிருக்கிறார்.
இது ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கிறது. சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் நான் அதை மாம்பலம் மஹாலக்ஷ்மி தெருவில் அப்போது இருந்த
கலைஞர் பதிப்பகத்தில் (கண்ணதாசனுடையது என்பதாக ஞாபகம்) வாங்கினேன் . தற்போது கைவசம் இல்லை.
சங்கரன்
-- Swaminathan Sankaran