யார்?

7 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 12, 2026, 10:07:50 PM (4 days ago) Jun 12
to santhavasantham
யார்?

கீழே இறங்கிடும் போதிலும் வண்ணத்தில்
கேளிக்கை செய்பவர் யார்- ஒரு
கேடயம் போலவே என்றன் மனத்தினுள்
கிட்ட வருபவர் யார்?

தாழா நெடுங்கொடை மன்னவ னாகினும்
தாழ்ந்து விரைபவர் யார்-இந்தத்
தாரணி மக்களுக் கோய்வு கொடுத்திடத்
தன்னை மறைப்பவர் யார்?

நீருக் குள்ளே நெருப்போவியம் தீட்டியே
நீரை அசைப்பவர் யார்- ஒளி
நீள்பசும் பொன்னினை நிச்சயித் தபடி
நேருறச் செய்பவர் யார்

பக்க மரத்திற்கு வெட்கம் வரும்படி
பாவனை செய்பவர் யார்- அந்தப்
பங்கயப் பெண்ணுடன் சங்கமம் செய்திடப்
பாரிப்புக் கொண்டவர் யார்

திக்கு விளக்கிடும் தேசு படைத்தவர்
தேரில் வருபவர் யார்- மிகத்
தீர முடையவர் செம்மை மிகுந்தவர்
தீய்த்திடும்  வீரியர் யார்- அவர் தான்
செங்கதிர்ச் சூரியனார்

Siva Siva

unread,
Jun 12, 2026, 11:43:07 PM (3 days ago) Jun 12
to santhav...@googlegroups.com
/ திக்கு விளக்கிடும் தேசு படைத்தவர்
தேரில் வருபவர் யார் /

நல்ல வினா!

ஒற்றைச் சக்கரத் தேரில் வரும் அவரே!

வி. சுப்பிரமணியன்

Sai Ganesan H

unread,
Jun 13, 2026, 8:20:25 AM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
அருமையான பாடல்! ஐயா! 

- சத்ய வேழன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCO%2BdxDc%2B1W8mPvAeEtYd4EZy%3D%3D%3DycuSji3Ji3%3Dr94tTw%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Jun 13, 2026, 8:39:04 AM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
செங்கதிர்ச் சூரியனைச் செம்மையில
 வர்ணித்தீர். மிக அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 12, 2026, at 22:07, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--

Govindaraju Arunachalam

unread,
Jun 13, 2026, 10:15:18 AM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
எப்படித்தான் பாடினாரோ என வியந்து நிற்கிறேன்.



--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Jun 13, 2026, 5:03:06 PM (3 days ago) Jun 13
to சந்தவசந்தம்
அருமை!

நீடுயர் 'மா'மரம் தேடி 
அழித்திட 
     நேர்ந்தவர் ஓர்ந்திடவே 
கோடை முழுவதும் கொடியதோர் வெம்மையைக்  
     கொடையாய்க் கொடுப்பவர் யார்?

       




--

இமயவரம்பன்

unread,
Jun 13, 2026, 9:25:12 PM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
மிக அருமை, தலைவரே!

பாரதியின் பாடல் வரிகளை நினைவுறுத்துகிறது:

"முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்? - எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்."
Reply all
Reply to author
Forward
0 new messages