அவர் எந்த ரூபத்தில் இருந்தாலும்' என்று சொல்கிறபோது ஆனை ரூபத்திலில்லாமல் ரொம்பவும் அபூர்வமாக மநுஷ்ய ரூபத்தில் 'நரமுக கணபதி' என்றே அவர் இருப்பது நினைவு வருகிறது. சிதம்பரம் தெற்கு வீதியில், தம்முடைய பிரசித்தமான ஆனை முகத்தோடு இல்லாமல், மற்றவர்கள் சொல்லியோ எழுதி வைத்தோதான் ‘இவர் பிள்ளையார்' என்று தெரிந்து கொள்ளும்படி மநுஷ்ய மூஞ்சியோடு ‘நரமுக கணபதி'யாக இருக்கிறார்.
திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோவிலிலும் நரமுக கணபதி உண்டு. இதிலே ஒரு வேடிக்கை, யானை முகமில்லாத ஒரு பிள்ளையார் உள்ள கோவிலானாலும் அந்தக் கோவில் சுவாமியைப்(சிவபெருமானை) பற்றி சம்பந்தர் பதிகம் பாடும்போது, சுவாமியின் பல லக்ஷணங்களில் ஒவ்வொன்றையும் சொல்லி, ‘அந்த லக்ஷணத்தை உடையவனை' என்பதற்கு ‘யானை', ‘யானை' என்றே சொல்லி முடித்திருப்பதுதான்! ‘நன்றுடையானை, உமையொரு பாகம் உடையானை, திருவுடையானை, சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிரும்மே!'
விக்நேச்வரரின் அநேக ஆவிர்பாகங்களைக் குறித்த கதைகளில் ஒன்றின்படி அவருடைய ஒரிஜினல் ரூபம் நரரூபம்தான். அம்பாள் தன்னுடைய அந்தப்புரத்திற்கு ஒரு காவலாள் சிருஷ்டிக்க வேண்டுமென்று நினைத்தாள்.
தன்னுடைய திவ்ய சரீரத்தையே வழித்து அதிலிருக்கிற மஞ்சள் பொடி, குங்குமம், வாசனைப் பொடி முதலானவைகளைத் திரட்டிப் பிசைந்து ஒரு பாலகனாக ரூபம் பண்ணி அதற்கு உயிரும் கொடுத்துக் காவலாக வைத்து விட்டாள். மநுஷ்யர் மாதிரி (தேவர் மாதிரியுந்தான்) கண், காது, மூக்கு, நாக்கு முதலானவை உள்ள ரூபமே அது. அதாவது நரமுக ரூபந்தான்.
பிள்ளையார் என்றே பெயர் பெறப்போகிற அந்தப் பிள்ளையை, தன் உடம்பிலிருந்து தானே வழித்துப் பெற்ற அருமைப் பிள்ளையை அம்பாள் காவல் வைத்து விட்டு ஸ்நானத்துக்குப் போனாள்.
அம்பாள் சர்வ மங்களா, அவள் தன்னுடைய மங்கள சரீரத்திலிருந்து மங்கள வஸ்துவான மஞ்சள் பொடியை வழித்து மூலப் பிள்ளையாரை சிருஷ்டித்ததால்தான் இன்றைக்கும் எந்த சுபகாரியத்தின் ஆரம்பித்திலும் மஞ்சள் பொடியைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்துப் பூஜை செய்கிறோம். ‘மஞ்சள்' என்பதே ‘மங்கள' என்பதிலிருந்து வந்திருப்பதுதான்.
‘இங்கே, அங்கே' என்பதைச் சில பேர் ‘இஞ்சே, அஞ்சே' என்று சொல்கிறார்களல்லவா? இலக்கணத் தமிழிலேயே ‘தூங்கல்' என்பது 'துஞ்சல்' என்றும் வருகிறது. அப்படி, மங்கள என்பதே மஞ்சள் ஆகியிருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் மங்களம் என்பதற்கு மஞ்சள் என்று ஒரு அர்த்தம்.
பரமேச்வரன் அந்தப்புரத்திற்கு வந்தார். ‘இதுயார்டா பத்னியின் அந்தப்புரத்தில் புருஷப் பிரஜை?' என்று அவருக்கு ஒரே கோபம் வந்து, ஒன்றும் தெரியாதவர் மாதிரி, அந்தப் பிள்ளையை சிரச்சேதம் பண்ணிவிட்டார். வாஸ்தவத்தில் எல்லாம் தெரிந்துதான் லோகாபகாரம் பண்ண வேண்டும், அதையும் விருவிருப்புள்ள நாடகமாகப் பண்ண வேண்டும் என்றே இப்படிச் செய்தார்.
என்ன லோகோபகார மென்றால் கஜமுகாசுரன் என்ற யானைத்தலை அசுரன் தன்னை மாதிரி யானைத் தலை படைத்தவர்தான் வதம் செய்ய முடியுமென்றும், அதோடு அப்படி வதைக்கக்கூடிய சத்ரு ஸ்திரீ-புருஷ சம்பந்தத்தில் பிறக்காதவனாயிருக்க வேண்டுமென்றும் வரம் வாங்கி வைத்துக் கொண்டிருந்தான். அது ஒரு பக்கத்தில்.
இன்னொரு பக்கம், நாம் பார்த்த சம்பவம் நடந்த சமயம், கைலாசத்திற்குப் பக்கத்தில் லோகத்திற்கு அமங்களம் உண்டாகும்படியாக ஒரு யானை வடக்கே தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தது. இந்த இரண்டையும் ‘கம்பைன்' பண்ணித்தான் சுவாமி நாடகமாடினார்.
அம்பாள் சிருஷ்டித்த அருமைக் குழந்தையைத் தாம் சம்ஹாரம் பண்ணியதற்காக அவளிடம் நன்றாக ‘டோஸ்' வாங்கிக் கொண்டு சந்தோஷப்பட்டார். அப்புறம் வடக்கே தலை வைத்திருந்த யானையை சிரச்சேதம் பண்ணி, அந்த சிரசைக் கொண்டு வந்த இந்தப் பிள்ளையின் முண்டத்தில் பொருத்தி, பிள்ளையாராக உயிர் கொள்ளும்படிச் செய்து அம்பாளை திருப்திப்படுத்தினார். பிள்ளையார் மூலம் கஜமுகாசுரன் வதமாகி லோக க்ஷேமம் உண்டாகும்படியும் செய்தார்.
-----------------------
தமிழ்நாட்டில் இரண்டு கோவில்களில் நரமுக கணபதி இருப்பதாகச் சொல்வர்.பார்க்க:Vinayaka in unique form
![]()
The idol of Adi Vinayaka. — Pic. by Rajarathinam.THE NANDRUDAYAN Vinayaga temple in Devadhanam in East Boulevard road, Tiruchi, boasts of the unique Adi Vinayagar granite idol depicting Lord Ganesha with his original divine face without the usual elephantine head and the trunk.
The five-foot tall majestic presiding deity of the temple - Nandrudayan Vinayagar adorning a Naghabharanam around his waist, has a Naganandhi facing him at the Eastern entrance of the temple. It may be mentioned that Nandi Deva is generally associated with Siva Temples only. The Seventh Century Tamil savant Sambandar had in one of his pathikams praised the presiding deity of the temple thereby indicating that this is one of the oldest temples in Sirapalli (Tiruchi).
The four-foot tall Adi Vinayagar is installed in a separate shrine close to the sanctum sanctorum and the divine grace of the brilliantly sculptured granite idol is indeed captivating. In the one hand Lord Ganesha holds the axe, symbolising the destruction of all desires, a rope to indicate his willingness to rescue anyone from the mire of vasanas, the modaka representing the joyous reward of spiritual life, and lotus symbolising that all can achieve the supreme state of self-realisation. The large belly of Ganesha is to convey the idea that a Man of Perfection can consume and digest whatever experience he undergoes. The tiny rat which is seated in front of the Lord amidst a rich collection of food is to indicate that a perfect man - like the rat, will have total control over his desires.
Inside the small shrine one could also see the idols of Adi Sankara, Sage Veda Vyasa, Goddess Gayatri, Sadasiva Brahmendra and Saint Pattinathar. According to Sage Ramarathinam, Trustee of the temple, the Kanchi Paramacharya, used to offer worship at the Thayumanavar and Uchipillayar temples atop the Rockfort. When he visited the temple about 60 years ago he suggested the rendering of the Vedas in the temple everyday it is being followed, the reciting done by scholars. Just behind the sanctum sanctorum an Anjaneya shrine has been established and the temple has separate shrines for Lord Muruga, the Navagrahas, Goddess Durga and Lord Ayyappa in the other Mandapam. Special poojas are performed for Adi Vinayagar on Thursdays. In the annual music festival conducted for the past 83 years almost all leading musicians have participated. It may be recalled that Devadhanam of today is highly congested where daily wage earners, rag pickers, dealers in old second hand household articles, etc. live. A couple of centuries ago, prior to the establishment of the Town railway station Devadhanam was the entry point to the city from the East. Situated very close to the Cauvery, Devadhanam sported some very important and ancient temples, the Bhoologanathaswami temple, Veerasoora Mahakaliamman temple, Nandrudayan temple, etc. There were four huge tanks close to these temples all of which have now been converted into lorry stand, weekly market and parks. In recent years the residents of the area have taken a keen interest in preserving old and ancient temples.
V. GANAPATHY
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
தமிழ்நாட்டிலே மூன்று கோவில்களிலே நரமுக கணபதி வீற்றிருக்கிறார். யானைத்தலை அடைவதன் முன்னர் இருந்த வடிவம். சோழர் காலச் சிற்பங்கள். தில்லை, திருச்சி, திலதைப்பதி. காஞ்சிப் பெரியவர்கள் உரையிலே அடிக்கடி குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை இணைத்துள்ளேன்.
திலதையில் இருக்கும் மாந்தர்முக கணபதி
--
--
அருமை ஐயா.திருச்சியில் இருந்த போது அடிக்கடி இந்த விநாயகரைத் தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. இப்போதும் அங்கே செல்லும் போது நன்றுடையான் விநாயகரைத் தரிசித்து வருகிறேன்.சரண்யா.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
சந்தவசந்த ஆசிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள்.திருச்சி நரமுக கணபதி அருளால் அவர்மேல் ஒரு பாடல்.நன்றுடையான் கோயில் நரமுக கணபதி
சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அருதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழி
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
பவவினைக் குவை என்று வருவதால் சந்தம் அடிபடுகிறது என நினைக்கிறேன். அதனால் பவவினை மலை என்று மாற்றிக்கொள்கிறேன்.மலை - குவை = குவியல்; பொருள் மாறாது என்று நினைக்கிறேன்.
--
-
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அவ்வாறெனில், இதமுக என்பதற்குப் பதில்,மதுமுக (மது - தேன்) - தேடியதில் ஒரு ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் அவர்களின் பாடல் ஒன்று கிடைத்தது. கேட்டது இல்லை.வளரிள மதியே - மதுமுக நிதியே - எனதுடல் உயிரே - யதுகுலநிதியேஅல்லதுமதிமுக என்று வைத்துக்கொள்ளலாமா? (பாபநாசம் சிவனின் மயில்வாகனா வள்ளி மனமோஹனா என்ற பாடலில் பூர்ணசந்திரன் போலும் மறுமுக... என்று பாடியுள்ளார்.ஆனால் மதிமுக என்றால், தற்காலத்தில் வேறு விதமாகவும் பார்ப்பார்கள் (தமிழ்நாட்டில்). :)மதுமுக என்பது ஏற்புடையதா?இல்லையெனில், இபமுக என்றே வைத்துக்கொள்கிறேன். அக்கோயிலில், நரமுக விநாயகரைத் தவிர ஆனைமுக விநயாகரும் உள்ளார்.
சரண்யா.
2017-09-01 2:53 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
நல்ல விளக்கம். எனினும், இதம் என்பதை ஒட்டி இத என்று பெயரெச்சமாகப் பயன்படுத்திப் பார்த்ததாக நினைவில்லை.அனந்த்அனந்த்2017-08-31 10:53 GMT-04:00 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:நரமுக கணபதியைத் துதிப்பதால் யானை முகத்தைக் குறிக்காமல், பொதுவில் இதமுகம் - இதம் தரும் இனிய முகம் என்று வைத்தேன்.-
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--Regards,
Saranya
சந்தவசந்த ஆசிரியர்களுக்கு அன்பு வணக்கங்கள்.திருச்சி நரமுக கணபதி அருளால் அவர்மேல் ஒரு பாடல்.நன்றுடையான் கோயில் நரமுக கணபதி
சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதான
அருமலர் கொடுநிதம் அடிபணி பவரவர்
..அருதுயர் களையழி அதிதீரா!!
.அறுகுடன் அரிசியும் அவல்பொரி அளியிட
...அறிவெனும் ஒளிதரும் அருளாழி
நரைவிடை யினிலமர் நிருமல! எழிலொலி
..நதிபுனை சிவனுமை புதல்வோனே!
.நறைமலர் மழுதளை இவையணி கரமுடை
...நரமுக கணபதி அருள்வாயே!!
பரிபுரம் அணிபதம் அதைஎளி யனெனது
..பவவினை குவையற இடுவாயோ
.பணைமர நிழலினை மிகவிழை இதமுக!
...பணிதனை அரையினில் அணிவோனே
திரிசிர கிரியதன் அடியமர் குணபர
..திடமிக வுடைவடி வழகோனே
.செறிவுடை வயல்நிறை வளவனின் நகருறை
...திருமிக அருளிடும் இறையோனே
அறுகு - அறுகம் புல்
அளி - தேன்
இடு - இடுதல் / அர்ப்பணித்தல்
நரைவிடை... - இந்த நன்றுடையான் கோயில் விநாயகருக்கு நந்தி வாகனம்.
தளை - கயிறு.
இந்த ஆதி விநாயகர், கைகளில் தாமரை, கோடரி, பாசக்கயிறு ஆகியவற்றை வைத்துள்ளார்.
குவை - குவியல்
அற - முற்று பெறுதல் / முழுவதும் ஒழிதல்
பணைமரம் - அரசமரம். பொதுவாக பிள்ளையார், அரசமரத்தடியில் விரும்பி அமர்வார். இந்தக் கோயிலிலும் அரசமரம் இருக்கிறது.
பணி - பாம்பு. நாகாபரணத்தை இடையில் அணிந்துள்ளார்.
சிராப்பள்ளி மலைக்குக் கீழே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
வளவன் - சோழன்பணிவுடன்,சரண்யா.பி.கு.எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை சரிபார்த்து இட்டுள்ளேன். இங்கு இடுவதால் அறிஞர் பெருமக்களின் கருத்துகளை அறியலாம் என்ற ஆவலுடன்...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
இதமுக என்பதற்குப் பதிலாக, (பணைமர நிழலினை மிகவிழை) இளமுக என்றும் அமைக்கலாம். சிவசிவா சொன்னபடியும் மாற்றலாம்.
எவ்வாறாயினும்:
பொருத்தம் கருதிப் புதியதொர் சொல்லைப் பொறுக்குதற்கு
வருத்தம் வராமலொர் வாய்ப்புக் கிடைத்தது மன்றினிலே
நிருத்தம் புரிவோன் மகவை மறுபடி நெஞ்சினிலே
பொருத்த எனமனம் பூரித் தவனருள் போற்றுவமே!
பொதுவாக, இட்ட பாடலைத் திருத்தியமைக்க நாம் செய்யும் முயற்சி நம்மை யாப்பிலக்கணம், சொல்/பொருளாட்சி ஆகியவற்றில் மேலும் மூழ்கவைப்பதை ஒரு இனிய அனுபவமாகக் கருதி மகிழலாம்.
அனந்த் 1-9-2017
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Dear sir,Here is the recording of தந்தமின்றி... in சிந்துபைரவி ராகம்.
Nice.In future, you can consider uploading any such audio clips or other large files - on google drive and share it via a link. That way, the mail will not have any large attachment. Also, it will be easy for you to make any subsequent tweaks (by just uploading a new version of the file to google drive).
'சிந்துபைரவி’ ‘கானடா’ ..இரண்டும் அருமையாய் இருக்கின்றன!
--
மிக அருமையாகப் பாடியுள்ளீர்கள். இரண்டு பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். பிரதோஷ நாளில் கேட்டு ஆனந்தப் பட்டேன்.. மிக்க நன்றி.சிவசூரி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திலதையில் இருக்கும் மாந்தர்முக கணபதிமஞ்சள்இஞ்சி வாழைசாலி மலிந்திருக்கும் - எங்கும்கொஞ்சுமொழி வஞ்சியரின் குரலொலிக்கும்மஞ்சுவந்து மண்ணிறங்கித் தமிழ்பயிலும் - எங்கள்மயிலாடு துறையருகில் மணங்கமழும் - நல்லசெஞ்சொலொலி கேட்டிருக்கும் திலதபதி - ஒளிச்சித்திரத்தில் இட்டதுபோல் திகழ்ந்திருந்தும்பஞ்சமின்றிப் பாய்ந்திருக்கும் அரசலாற்றின் - எழில்பார்த்திருக்கும் நமையென்றும் ஈர்த்திருக்கும்.வாசமலர் வரவேற்கும் பூந்தோட்டம் - கண்டுவண்டமிழில் பாவடிக்கும் கூத்தனூரில்பேசுமொழி ஈவதற்கே கோவில்கொண்ட - அந்தப்பிரமனவன் தேவியவள் கொலுவழகைஆசையுடன் கண்டுவந்த கணபதியே - ஒருஆனைமுகம் ஏற்குமுனம் வந்தமர்ந்தேஈசனருள் சிந்துகின்ற திலதபதி - இன்றும்இன்னருளைப் பொழிந்துநமைக் காத்திருக்கும்.பண்முறையை அறிந்தவர்கள் நிறைந்திருக்கும் - நம்பைந்தமிழின் இசையெல்லாம் பொழிந்திருக்கும்நுண்ணறிவு பிறப்பினிலே சேர்ந்திருக்கும் - பெரும்நூலறிவும் கல்லாமல் ஓர்ந்திருக்கும்உண்மையுணர்ந் தோர்கள்பலர் வாழ்ந்திருக்கும் - ஓர்ஒப்பில்லாச் சிற்றூராம் திலதபதிமண்ணுலகில் ஏற்றமுடன் திகழ்வதுவும் - அந்தமாந்தர்முகப் பிள்ளையாரின் வரமென்பரே.சிவசூரி.
2017-08-29 19:21 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:தமிழ்நாட்டிலே மூன்று கோவில்களிலே நரமுக கணபதி வீற்றிருக்கிறார். யானைத்தலை அடைவதன் முன்னர் இருந்த வடிவம். சோழர் காலச் சிற்பங்கள். தில்லை, திருச்சி, திலதைப்பதி. காஞ்சிப் பெரியவர்கள் உரையிலே அடிக்கடி குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை இணைத்துள்ளேன்.![]()
This is Aadhi vinayagar in Poonthotam near Kumbakonam..This temple is also one where Lord Ganpathy does not have an elephant head..V.Subramanian Aum
2017-09-03 5:03 GMT+05:30 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:
உங்கள் பாராட்டுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி. முடிந்தால் நீங்கள் அமைத்துள்ள மெட்டில் பாடி அனுப்புங்களேன். நன்றி.சிவசூரி.2017-09-02 15:33 GMT+05:30 Saranya Gurumurthy <saranya.g...@gmail.com>:அருமை. அபாரம். அற்புதம்.படிக்கும் போதே சிந்துபைரவி ராகத்தில் மெட்டு அமைந்துவிட்டது.சரண்யா.On 2 Sep 2017 13:06, "Lalitha & Suryanarayanan" <lall...@gmail.com> wrote:மலைக்கோட்டை மாந்தர்முக கணபதி மேல் இன்னுமொன்று:தந்த மின்றி இந்து மின்றிமுந்தி நீளும் கையும் இன்றிவந்த மர்ந்த பிள்ளை யாரின் சிந்தைமீதே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

வாசமலர் வரவேற்கும் பூந்தோட்டம் - கண்டுவண்டமிழில் பாவடிக்கும் கூத்தனூரில்பேசுமொழி ஈவதற்கே கோவில்கொண்ட - அந்தப்பிரமனவன் தேவியவள் கொலுவழகைஆசையுடன் கண்டுவந்த கணபதியே - ஒருஆனைமுகம் ஏற்குமுனம் வந்தமர்ந்தேஈசனருள் சிந்துகின்ற திலதபதி - இன்றும்இன்னருளைப் பொழிந்துநமைக் காத்திருக்கும்.பண்முறையை அறிந்தவர்கள் நிறைந்திருக்கும் - நம்பைந்தமிழின் இசையெல்லாம் பொழிந்திருக்கும்நுண்ணறிவு பிறப்பினிலே சேர்ந்திருக்கும் - பெரும்நூலறிவும் கல்லாமல் ஓர்ந்திருக்கும்உண்மையுணர்ந் தோர்கள்பலர் வாழ்ந்திருக்கும் - ஓர்ஒப்பில்லாச் சிற்றூராம் திலதபதிமண்ணுலகில் ஏற்றமுடன் திகழ்வதுவும் - அந்த
மாந்தர்முகப் பிள்ளையாரின் வரமென்பரே.சிவசூரி.