திருவாசகம் / அறுசீர் விருத்தம் - ஐயம்

419 views
Skip to first unread message

Siva Siva

unread,
May 8, 2009, 9:11:13 AM5/8/09
to santhavasantham
இன்று திருவாசகத்தில் குயிற்பத்து என்ற பகுதியில் சில பாடல்களைப் பார்த்தேன். இப்பகுதி 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால், இதன் அமைப்பு எனக்குப் புரியவில்லை. இதன் வாய்பாடு / விதிகள் என்ன?

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8118&padhi=25&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

--------------

'கவிதை இயற்றிக் கலக்கு'த் தொடரில் இந்த விளக்கத்தைக் கண்டேன்:

35.10

வெண்டளை அறுசீர்

இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வரும்படி பல வாய்பாடுகளில் கட்டளை அடிகள் கொண்ட அறுசீர் விருத்தங்களைப் படைக்கலாம். இவ்வகையைக் கட்டளைக் கலித்துறையின் ஒரு வகையான நீட்சி என்றும் சொல்லலாம். அல்லது, வெண்டளை பயிலும் கலிவிருத்தத்தின் நீட்சி என்றும் சொல்லலாம்.

* அரையடியில் வெண்டளை பயிலும். ( 3-ஆம் சீருக்கும் 4-ஆம் சீருக்கும் இடையே வெண்டளை இல்லை. )

........

உன்னை உகப்பன் குயிலே
. உன்துணைத் தோழியு மாவன்
பொன்னை அழித்தநன் மேனிப்
. புகழிற் றிகழு மழகன்
மன்னன் பரிமிசை வந்த
. வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரவன் சோழன்
. சீர்ப்புயங் கன்வரக் கூவாய்
( திருவாசகம் )

இதில் அடிதோறும் 16 எழுத்துகள் வரும். சீர்கள் எவ்வாறு மாறினாலும், ஒவ்வோரு அரையடியிலும் வெண்டளை பயிலுவதால், சீரளவுகள் சமனாகி, கட்டளை அடிகள் வருவதைக் கவனிக்கலாம்.

===========================

திருவாசகம்-குயிற்பத்து

1)
கீதம் இனிய குயிலே
    கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
    பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
    சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான்
    அந்தமி லான்வரக் கூவாய். 

இப்பாடலில் மூன்றாம் அடியின் பிற்பகுதியில் வெண்டளை இல்லையெனத் தோன்றுகிறது.

2)
ஏர்தரும் ஏழுல கேத்த
    எவ்வுரு வுந்தன் னுருவாம்
ஆர்கலி சூழ்தென் னிலங்கை
    அழகமர் வண்டோ தரிக்குப்
பேரரு ளின்ப மளித்த
    பெருந்துறை மேய பிரானைச்
சீரிய வாயாற் குயிலே
    தென்பாண்டி நாடனைக் கூவாய்.

இப்பாடலில் எல்லா அடிகளிலும் ஒரே எழுத்தெண்ணிக்கை வரவில்லையே.
(அடி-1: 16, அடி-2: 17, அடி-3: 17, அடி-4: 16)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
May 8, 2009, 12:05:23 PM5/8/09
to santhav...@googlegroups.com
பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், இது ஆய்வுக்குரியது.
 
என் கருத்து:
 
தேவார, திருவாசகப் பாக்களை நம் தற்கால விருத்த வகைகளில் புகுத்துவதைக் கவனமாகச்
செய்ய வேண்டும் என்பது என் கருத்து. அதனால், முடிந்தவரை, என் கட்டுரையில் காட்டுக் கொடுக்கும்போது கவனமாக இருக்கிறேன்; இருந்தும் தவறுவது உண்டு.
அறுசீரைப் பல வகைகளில் படைக்கலாம்.
 
சீர் வாய்பாடு தான் பெரும்பாலும். ஆனால், அது இன்றைய நம் புரிதல். பழம் இலக்கியங்களில் உள்ளவற்றை, அப்படித்தான் செய்திருப்பர், என்று அறுதி இட்டுச் சொல்ல முடியாது. இசைப் பாடலாய் இயற்றி இருக்கலாம்.
 
வெண்டளை (அரையடியிலோ, முழு அடியிலோ வரும்படி) பயில்வது ஒரு வகை; அது ஒரு தனி 'ஓசையை'க் கொடுத்து அடிகளைச் 'சமன்' படுத்தலாம். ஆனால், பொதுவில் விருத்தங்களில் தளை பார்ப்பதில்லை என்பது தானே நாம் அறிந்தது? அதனால், நம் இஷ்டப்படி அடிகளில் வெவ்வேறு அசைச் சீர்களைப் புகுத்தி, வெண்டளை வர மட்டும் கவனம் எடுத்துக் கொண்டால், அடிகள் 'ஒத்த' ஓசை கொடுக்காது அல்லவா? அதனால், வெண்டளை வந்தாலும் *முடிந்தவரை* சீர் வகைகளைக் கட்டுபடுத்தி ஒத்த ஓசை கொண்ட விருத்தங்களைப் படைக்க  முயலலாம். இது கட்டளை அடிகளைக் கொடுக்காமல் போகலாம்.
 
அதே மாதிரி, அடிகள் கட்டளை அடிகளாய் இருந்தால் அது ஒரு தனிக் கட்டுக் கோப்பைக் கொடுக்கும். வெண்டளை இல்லாமலே, வாய்பாடு இல்லாமலே இந்தக் கட்டளையைக் கொண்டு வர முடியும். அடிகளைச் 'சமன்' செய்ய முடியலாம்.
 
 
 இரண்டும் ..வெண்டளையும், கட்டளையும் ... சேர்ந்து இருந்தால்... ஓசை நிச்சயமாய்ச் சிறக்கத் 
தானே செய்யும்? அதனால் தான், நான் என் கட்டுரையில் அந்தக் காட்டை மட்டும் கொடுத்தேன்.
 
நீங்கள் கொடுத்த முதல் பாடல் 'கட்டளை'க்கு   அதிக முக்கியத்வம் கொடுத்துப் புனைந்தது என்று ... தற்காலச் சிந்தனைக்கு ஏற்ப. . நாம் வைத்துக் கொள்ளலாம். ( கூடிய வரை வெண்டளை)
 
 
இரண்டாவதில், வெண்டளைக்குப் பிரதானம் . (கூடியவரை கட்டளை)
 
என் உதாரணத்தில் இரண்டும் இணைந்து ஓசையைச் சிறக்க வைக்கிறது.
 
கட்டளையும், வெண்டளையும் வெவ்வேறு விழுக்காடுகளில் விளையாடும் இசைப் பாடல்கள் என்று
இவற்றைக் கொள்ளலாம். சீர் வாய்பாடு வழியாகப் புனையாமல் இப்படிச் சோதனைகளை அன்றே  புரிந்தனர் என்றும் தற்காலத்திற்கேற்பக் கொள்ளலாம்.
 
பொதுவில் சொன்னால், விருத்தங்களில் 'தளை' என்பது முழுதும் ஆய்வு செய்யப் பட்ட தளம்
அன்று. ஓர் அறிமுகமாக என் கட்டுரைத் தொடரில் அங்கங்கே சொல்லியிருக்கிறேன்.
 
பசுபதி
 
 
2009/5/8 Siva Siva <naya...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
May 8, 2009, 10:19:11 PM5/8/09
to santhav...@googlegroups.com
விருத்தத்தில் வெண்டளை பயின்று வருகிற விருத்தங்கள் உண்டு..
 
தேவார திருவாசக காலத்தில் விருத்தங்கள் இப்பொழுதுள்ள விருத்தங்களுக்கு முன்னோடிகள். அவற்றைப் பிற்காலப் புலவர்கள் இன்னும் கட்டுக்கொப்புக்குள் கொண்டு வந்து இலக்கணம் இயற்றினார்கள்.
தேவாரத்தை விடத் திருவாசகத்தில் விருத்தங்கள் செப்பமாக இருக்கும்.
சரி. உங்கள் உதாரண விருத்தங்களைப் பார்க்கலாம்.
நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகளும் வரும். அப்படித்தான் வருகிறது.. அடுத்து வெண்டளை பிறழ்வதாகச் சொல்லும் பாடலில் அது வெண்டளை பிறழ்தல் இல்லை. அதற்கு விட்டிசைத்தல் என்று பெயர். து என்ற எழுத்தை நேரசையாகக் கொள்ளவேண்டும்.. 8 எழுத்துகள் சரியாக இருக்கும் பாருங்கள்.
 
இலந்தை

Pas Pasupathy

unread,
May 8, 2009, 10:41:27 PM5/8/09
to santhav...@googlegroups.com
அருமையான விளக்கம்.
 
பசுபதி
8-5-09

2009/5/8 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Siva Siva

unread,
May 10, 2009, 9:16:22 AM5/10/09
to santhav...@googlegroups.com
நல்ல விளக்கம். நன்றி.

இத்தகைய விருத்தங்கள் இப்பொழுதும் எழுதப்பெறுகின்றனவா?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/5/8 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

விருத்தத்தில் வெண்டளை பயின்று வருகிற விருத்தங்கள் உண்டு..
 
தேவார திருவாசக காலத்தில் விருத்தங்கள் இப்பொழுதுள்ள விருத்தங்களுக்கு முன்னோடிகள். அவற்றைப் பிற்காலப் புலவர்கள் இன்னும் கட்டுக்கொப்புக்குள் கொண்டு வந்து இலக்கணம் இயற்றினார்கள்.
தேவாரத்தை விடத் திருவாசகத்தில் விருத்தங்கள் செப்பமாக இருக்கும்.
சரி. உங்கள் உதாரண விருத்தங்களைப் பார்க்கலாம்.
நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகளும் நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகளும் வரும். அப்படித்தான் வருகிறது.. அடுத்து வெண்டளை பிறழ்வதாகச் சொல்லும் பாடலில் அது வெண்டளை பிறழ்தல் இல்லை. அதற்கு விட்டிசைத்தல் என்று பெயர். து என்ற எழுத்தை நேரசையாகக் கொள்ளவேண்டும்.. 8 எழுத்துகள் சரியாக இருக்கும் பாருங்கள்.
 
இலந்தை
 


 
On 5/8/09, Siva Siva <naya...@gmail.com> wrote:
இன்று திருவாசகத்தில் குயிற்பத்து என்ற பகுதியில் சில பாடல்களைப் பார்த்தேன். இப்பகுதி 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால், இதன் அமைப்பு எனக்குப் புரியவில்லை. இதன் வாய்பாடு / விதிகள் என்ன?

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=8&Song_idField=8118&padhi=25&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95



Pas Pasupathy

unread,
May 10, 2009, 9:52:43 AM5/10/09
to santhav...@googlegroups.com


2009/5/10 Siva Siva <naya...@gmail.com>

நல்ல விளக்கம். நன்றி.

இத்தகைய விருத்தங்கள் இப்பொழுதும் எழுதப்பெறுகின்றனவா?
 
ஓர் காட்டு:
 
எப்போதோ அனந்த் வெண்டளை பயிலும் அறுசீர் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலாக நான் ஒரு மடல் எழுதினேன்.
 
 
 
அதைத் தொடர்ந்து யாகூ மடற்குழுவில் பல மடல்களும் எழுதப் பட்டன என்றும் நினைவு.
 
(அண்மையில்,  இலந்தை தலைமை வகித்த புதுவைக் கவியரங்கில் 'வெண்டளை' அறுசீர் பார்த்த நினைவு. )
 
 
பசுபதி
10-5-09

Siva Siva

unread,
May 10, 2009, 11:12:05 AM5/10/09
to santhav...@googlegroups.com
நன்றி.

இந்த இழையிலும், அந்த முந்தைய இழையிலும் கண்டனவற்றின் தொகுப்பாக:

Summary: வெண்டளை அறுசீர் விருத்தம்:
1.
அரையடியில் வெண்டளை பயிலும். ( 3-ஆம் சீருக்கும் 4-ஆம் சீருக்கும் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.)

2.
அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகளும் வரும்.

3.
அரையடியின் ஈற்றுச் சீர் 'மா'ச்சீராக இருக்கும்.

4.
மற்ற இரு சீர்கள் மா / விளம். விளத்திற்குப் பதிலாய் மாங்காய்ச்சீரும் வரலாம்.
---


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/5/10 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



2009/5/10 Siva Siva <naya...@gmail.com>

நல்ல விளக்கம். நன்றி.

இத்தகைய விருத்தங்கள் இப்பொழுதும் எழுதப்பெறுகின்றனவா?
 
ஓர் காட்டு:
 
எப்போதோ அனந்த் வெண்டளை பயிலும் அறுசீர் பற்றிக் கேட்ட கேள்விக்குப் பதிலாக நான் ஒரு மடல் எழுதினேன்.
 
 
 
அதைத் தொடர்ந்து யாகூ மடற்குழுவில் பல மடல்களும் எழுதப் பட்டன என்றும் நினைவு.
 
(அண்மையில்,  இலந்தை தலைமை வகித்த புதுவைக் கவியரங்கில் 'வெண்டளை' அறுசீர் பார்த்த நினைவு. )
 
 
பசுபதி
10-5-09
 

SUBBAIER RAMASAMI

unread,
May 10, 2009, 9:17:52 PM5/10/09
to santhav...@googlegroups.com

வெண்டளை காணும் விருத்தமெலாம்

வேண்டும் எனிலோ இலக்கியத்தில்

கண்டு மொழியப் பலவுளவே

காட்ட இயலா தொளிந்துளவால்

விண்டு கொடுக்க வகைபலவாய்

மேவிடு காய்ச்சீர் உளவதனால்

கொண்டு நிறைத்திடு காய்வகையால்

கூடும் குறையும் எழுத்துகளே!

 

வெண்டளை பயின்று வரும் அறுசீர் விருத்தங்கள் பலவுண்டு. காய்ச்சீர்கள் விளங்காய்க்கு விளங்காயாகவும் மாங்காய் வந்தால் எல்லாம் மாங்காயாகவும் வந்தால்க அமையும் போது எழுத்தெண்னிக்கை ஒத்துவரும் . இல்லையென்றால் மாறுபடும். எனவே எழுத்தெண்ணிக்கை அவ்வளவு முக்கியமில்லை. வெண்டளையில் நல்ல ஓசையுடன் அமைவதுதான் முக்கியம்

.கா மேலே கண்ட விருத்தத்தை முழுக்க முழுக்க வெண்டளை பயின்று வருகிறது. காய்ச்சீர்கள் விளங்காய்ச் சீர்கள்.. எந்தவகை விளங்காய் என்பதை அதர்கு முந்திய சீர் தீர்மானித்துக்கொள்ளும்.

 

ஒவ்வோரடிக்கும் 10 எழுத்துகள்.

 

இதையே சற்று மாற்றி

 

வெண்டளை காணும் விருத்தங்கள்

வேண்டும் எனிலோ இலக்கியத்தில்

கண்டு மொழியப் பலவுண்டு

காட்ட இயலா தொளிந்துளவால்

கொண்டு நிறைக்கும் வகைக்காயால்

கூடும் குறையும் எழுத்துகளே!

 

இதிலே காய்ச்சீரின் மாறுபாட்டால் எழுத்தெண்ணிக்கை ஒத்துவரவில்லை. வெண்டளை பிறழவில்லை என்பதறிக!

இலந்தை

Siva Siva

unread,
May 10, 2009, 10:40:56 PM5/10/09
to santhav...@googlegroups.com
பெரிய புராணத்தைப் புரட்டியபொழுது கண்ணில் பட்ட இவ்வகைப் பாடல்கள் சிலவற்றுள் ஒன்று: (இதற்கு முன்னும் பின்னும் இவ்வகைப் பாடல்கள் சில உள்ளன)

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1228&padhi=72&startLimit=272&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC&Submit=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

பெரிய புராணம் - திருஞான சம்பந்தர் புராணம் - பாடல் 272

பேரிசை நாவுக் கரசைப்
    பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
    பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
    அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்டரைக் கொண்டு
    திருமா ளிகையினில் சேர்ந்தார்.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


2009/5/10 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages