ஈற்றடி - வாயாடி தன்னைநீ வாழ்த்து

24 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 19, 2026, 4:52:08 PM (6 days ago) Jun 19
to santhavasantham
ஈற்றடி - 

வாயாடி தன்னைநீ வாழ்த்து

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 19, 2026, 9:25:59 PM (5 days ago) Jun 19
to santhav...@googlegroups.com

கற்றலில் நிற்பவனாய்க் காழ்ப்பகற்றி நாகாப்பன்

பெற்ற பெருஞ்செல்வம் பேணுவன் – முற்றிலும்

ஆயாதான் வம்புச்சொல் ஆகச் சிறப்பெனுங்கால்

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 19, 2026, at 16:52, Siva Siva <naya...@gmail.com> wrote:

ஈற்றடி - 

வாயாடி தன்னைநீ வாழ்த்து

V. Subramanian

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM7%2B83fbEH8LEUXep%3DJLJdubQyMcOun_y%2BTLc87hw5UVw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 20, 2026, 8:16:22 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
இங்கே, வாயாடி = பேசுபவன் என்ற பொருளா?

வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jun 20, 2026, 8:19:05 AM (5 days ago) Jun 20
to santhavasantham

2026-06-19

ஈற்றடிக்கு வெண்பா - வாயாடி தன்னைநீ வாழ்த்து

---------------

1)

நிதிகூட வல்வினை நீங்கமட நெஞ்சே

நதிசூடு செஞ்சடையில் நாகம் - மதிசூடி

தீயாடி சேவேறி சீரார் திருவால

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

நிதி கூட, வல்வினை நீங்க, மடநெஞ்சே -

நதி சூடு செஞ்சடையில் நாகம் மதிசூடி -

தீயாடி - தீயின்கண் ஆடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

சே-ஏறி - இடபவாகனன்;

சீர் ஆர் திரு-லவாய் ஆடி-தன்னை நீ வாழ்த்து -

வி. சுப்பிரமணியன்

Ram Ramakrishnan

unread,
Jun 20, 2026, 8:23:24 AM (5 days ago) Jun 20
to santhav...@googlegroups.com
ஆம், அதிகமாகப் பேசுபவன் என்ற பொருளிலே அமைத்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 20, 2026, at 08:16, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 20, 2026, 6:18:12 PM (4 days ago) Jun 20
to santhavasantham

2026-06-19

ஈற்றடிக்கு வெண்பா - வாயாடி தன்னைநீ வாழ்த்து

---------------

2)

உள்ளிய எவ்வரமும் உற்றிட நன்னெஞ்சே

வெள்ளச் சடைவள்ளல் வெள்விடையன் - நள்ளிருளில்

பேயாடு கின்ற பிணமெரி வெஞ்சுடலை

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

உள்ளிய எவ்வரமும் உற்றிட, நன்னெஞ்சே - (உள்ளுதல் - நினைதல்);

வெள்ளச்சடை வள்ளல் -

வெள்விடையன் -

நள்ளிருளில் பேய் ஆடுகின்ற, பிணம் எரி வெஞ்சுடலைவாய் ஆடி-தன்னை நீ வாழ்த்து - (ஆடுதல் - கூத்தாடுதல்; சஞ்சரித்தல்); (வாய் - ஏழாம்வேற்றுமை உருபு);

வி. சுப்பிரமணியன்

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 6:00:21 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhavasantham
திரு. ராம்கிராம், திரு. சிவசிவா இருவர் பாடலும் சிறப்பு.

எனது முயற்சி:

கண்ணாடியை வாழ்த்துவோம்

உள்ள துரைத்தே உருவக் குறைநலனைத்

தெள்ளத் தெளிவாய்த் தெரிவித்தே - ஒள்ளிமை

தேயாக் குருவாய்ச் சிறக்கின்றாய் என்றுயர் 

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

(ஆடி = உருவம் காட்டும் கண்ணாடி;  என்றுயர் வாயாடி = என்று உயர்வாய் ஆடி; உயர்வாய் = உயர்வாக; நீ = மனமாகிய நீ/காண்பவனான நீ) 

  • இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jun 21, 2026, 8:02:52 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
முகம் பார்க்கும் கண்ணாடியைப் போற்றிய பாடல் நன்று.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 8:20:41 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
Thank you!

Ram Ramakrishnan

unread,
Jun 21, 2026, 8:38:32 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
சிந்தனை உச்சத்தைத் தொட்ட கவிதை. வாழ்க.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 08:20, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Thank you!

On Jun 21, 2026, at 8:02 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

முகம் பார்க்கும் கண்ணாடியைப் போற்றிய பாடல் நன்று.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 10:20:41 AM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
அன்புக்கு மிக்க நன்றி, திரு. ராம்கிராம்

Siva Siva

unread,
Jun 21, 2026, 5:02:31 PM (4 days ago) Jun 21
to santhav...@googlegroups.com

3)

அஞ்சி நடுங்கும் அவலமற வேண்டுதியேல்

நெஞ்சமே நெற்றிக்கண் நீலகண்டன் - செஞ்சடையன்

வாயால் மறையோதி வன்பிறவி ஆழிநா

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

அஞ்சி நடுங்கும் அவலம் அற வேண்டுதியேல் நெஞ்சமே -

நெற்றிக்கண் நீலகண்டன் -

செஞ்சடையன் -

வாயால் மறை-ஓதி -

வன்-பிறவி-ஆழி நாவாய் -

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 6:33:03 PM (3 days ago) Jun 21
to santhavasantham, santhavasantham
2)

குடமாடி சாந்தக் குழம்பாடி பாம்பின்
படமாடி பேய்ப்பகை ஆடி - கடிபுனலோர்
தூயாள் யமுனைத் துறையாடி தாள்துதிப்பார்
வாயாடி தன்னைநீ வாழ்த்து. 

(குடம் ஆடி = குடக்கூத்து ஆடுபவன்; சாந்தக் குழம்பு ஆடி = சந்தனக் குழம்பு பூசிக் கொள்பவன்; பாம்பின் படம் ஆடி = காளிங்கனின் படத்தின் மேல் நின்று ஆடுபவன்; பேய்ப்பகை ஆடி = பூதனை என்னும் பேய்ச்சியாகிய பகையை வென்றவன்; கடி புனல் ஓர் தூயாள் = மணம் மிகுந்த நீரை உடைய தூயவளான; யமுனைத் துறை ஆடி = யமுனையின் துறையில் விளையாடுபவன்; வாய் ஆடி = அவர் நாவில் நர்த்தனம் ஆடி அருள்பவன் அல்லது அவர் வாய்மொழியை அனுபவிப்பவன்) 

- இமயவரம்பன் 

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 6:35:44 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இங்கே “நாவாய் ஆடி” என்பதில் “ஆடி”யின் பொருள் அறிய விழைகிறேன். 

Rajagopalan Soundararajan

unread,
Jun 21, 2026, 7:23:27 PM (3 days ago) Jun 21
to சந்தவசந்தம்

கன்றுகள் மேய்த்துக் கனியுதிர்த்து ஆயர்தம்

கன்னிய ரோடுதிரிந்துக் கட்டுண்டக்-கண்ணனெம்மான்

காயா மலர்வண்ணன் காளிங்கன் தீமுக

வாயாடி தன்னைநீ வாழ்த்து

Siva Siva

unread,
Jun 21, 2026, 7:26:44 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
Very nice.

V. Subramanian

Subbaier Ramasami

unread,
Jun 21, 2026, 7:28:54 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
பேசுவனோ இச்சிறு பிள்ளையெனச்செந்தில்வேள் 
தாசர் குருபரனைத் தான் தூக்கி- நேசமுடன்
வாயாட வேண்டியே வந்திக்கப் பேசியஅவ்

வாயாடி தன்னைநீ வாழ்த்து

இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 21, 2026, 7:30:11 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
கன்றுகள் மேய்த்துக் கனியுதிர்த் தாயர்தம்

கன்னிய ரோடுதிரிந்து கட்டுண்ட - கண்ணனெம்மான்

காயா மலர்வண்ணன் காளிங்கன் தீமுக

வாயாடி தன்னைநீ வாழ்த்து  /

Please check line-2 seer-2.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 21, 2026, 7:31:47 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 21, 2026, 7:33:23 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com

வன்-பிறவி-ஆழி நாவாய் - கொடிய பிறவிக்கடலில் கப்பல் போன்றவன் (= பிறவிக்கடலைக் கடப்பிப்பவன்);

ஆடி-தன்னை நீ வாழ்த்து - கூத்தன் அவனை நீ வாழ்த்துவாயாக

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 7:36:18 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for the clarification 

இமயவரம்பன்

unread,
Jun 21, 2026, 7:39:27 PM (3 days ago) Jun 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you ! 

Rajagopalan Soundararajan

unread,
Jun 21, 2026, 8:36:03 PM (3 days ago) Jun 21
to சந்தவசந்தம்
பிழை சுட்டியமைக்கு நன்றி.
திருத்திய வடிவம்.

கன்றுகள் மேய்த்துக் கனியுதிர்த்து ஆயர்தம்

கன்னிய ரோடாடிக் கட்டுண்டக்-கண்ணனெம்மான்

காயா மலர்வண்ணன் காளிங்கன் தீமுக

வாயாடி தன்னைநீ வாழ்த்து

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 8:19:35 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 20:36, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

பிழை சுட்டியமைக்கு நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 22, 2026, 8:20:47 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
உங்கள் சிந்தனை உலகளாவியது.
வெண்பாக்கள் அனைத்தும் அற்புதம்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 21, 2026, at 19:33, Siva Siva <naya...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 22, 2026, 8:23:50 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

Siva Siva

unread,
Jun 22, 2026, 8:39:49 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com

Last song I wrote for this last line:

4)

சிறவா வினையெல்லாம் தீரமட நெஞ்சே

சுறவார் கொடிவேளைச் சுட்டான் - பிறவாத

மாயாத சீரினன் மாமறை பாடுதூ

வாயாடி தன்னைநீ வாழ்த்து.

சிறவா வினையெல்லாம் தீர, மடநெஞ்சே - (சிறவா - சிறத்தல் இல்லாத);

சுறவு ஆர் கொடி வேளைச் சுட்டான் - (சுறவு - சுறாமீன்); (வேள் - மன்மதன்);

பிறவாத மாயாத சீரினன் -

மாமறை பாடு-தூ-வாய் ஆடி-தன்னை நீ வாழ்த்து -

V. Subramanian

=

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 9:37:43 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு ராம்கிராம்

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 9:39:14 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தூ வாய் - சிறப்பு. 

Siva Siva

unread,
Jun 22, 2026, 9:57:06 AM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com
Thanks.

Sundarar Thevaram has that phrase.
There is a temple in Thiruvarur where Swami is called தூவாயநாதர்.

திருவாரூர் - தூவாயநாதர் கோயில் (பரவையுண்மண்டளி) - 

தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/new.php?id=298

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 22, 2026, 4:48:05 PM (3 days ago) Jun 22
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thanks for the details.
Reply all
Reply to author
Forward
0 new messages