கெழு, கேழ் என்னும் உரிச்சொல் : தொல்காப்பியர், இளம்பூரணர் விளக்கும் இரு பொருள்கள்

450 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 17, 2018, 8:39:22 AM9/17/18
to Santhavasantham


கெழு, கேழ் என்ற தொடர்பான சொற்கள் பற்றிக் குறிப்பிட்டேன். அதைத் தொடர்ந்து,
பேரா. பரமசிவன் பாண்டியராஜா கேட்டார்:
<<<
கெழு பற்றிய ஆய்வு முடியும் முன்னர் இன்னொன்றும் தலைகாட்டுகிறது. கெழுவோடு சேர்த்து இப்போது கேழ்-உம் வருகிறது. இதனைப் பாருங்கள்.
 

துறை கெழு கொண்கன் பிரிந்து என - ஐங் 140/2

துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே - ஐங் 180/4

துறை கேழ் ஊரன் கொடுமை நாணி - ஐங் 11/2

துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் - ஐங் 12/2

 -------------------------------------------------------

நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா - அகம் 299/13

நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே - குறு 338/8

 

கேழ் என்பது கெழுவிலிருந்து பிறந்ததா? (கேழ் என்றால் நிறம் ஒளிர்வு என்று படித்திருக்கிறோம்.)

>>>


ஆமாம். இவற்றில் கேழ் என்னும் உரிச்சொல் கெழு என்ற சொல்லின் நீட்சியே. கெழு/கேழ் கெ-/செ- என்னும் தாதுவினின்றும் உற்பத்தி ஆவது.

இரண்டு முதன்மைப் பொருள்களை உடையது. ஒருபொருளைத் தொல்காப்பியர் நேரடியாகச் சூத்திரிக்கிறார். இன்னொரு முக்கியப் பொருளை

தொல்காப்பியருக்குப் பின்னர் நுட்பமாக இளம்பூரண அடிகள்  ( http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html  ) விளக்கினார். நீங்கள் குறிப்பிடும் 321 இடங்களில்

கெழு என்று வரும் போது “மிக்க” என்ற உரிச்சொல் பொருளில் வருவதை முதலில் குறிப்பிட்டவர் இளம்பூரணரே.


உங்கள் தொடரடைவில் 321 இடங்களில் கெழு என சங்கத் தமிழில் வருகிறது

தமிழ் கெழு கூடல், ஆ கெழு கொங்கர், ஆல் கெழு கடவுள் புதல்வ (திருமுருகு) etc. etc.,

இதில் எல்லாம் கெழு = மிக்க என்ற உரிச்சொல் ஆக இருக்கிறது.

(a) தற்காலத்தில் வினைத்தொகையாகவும் பார்க்கலாம் என்றாலும், ஆனால், ஆதியில் (PD times) கெழு கெ-/செ- என்னும் தாதுவில் பிறக்கும் உரிச்சொல் ஆகும்.

(b) ஓரிரு இடத்தில் சாரியை என்றும் பார்க்கலாம்:  An euphonic increment; ஒரு சாரியை. உம்முங் கெழுவு முளப்படப்பிறவும் (தொல். எழுத். 481). இடைச்சொல் எனவும் கூறலாம்.

(c) ஓரிரு இடங்களில், கெழு உவம உருபு ஆக இருக்கிறது, ஒத்த/அனைய என்ற பொருளில்.

.

மிகப்பெரும்பான்மையாக, “மிக்க” என்ற பொருளுடன் கெழு உரிச்சொல் ஆக உள்ளது.   அதனால், சால உறுதவ நனிகூர் கழி மிகல் என்பதுடன்

கெழு என்பதும் சேர்த்தலாம். கழி என்பது நன்னூலார் காலத்தில் கெழு என்ற சொல் பயன்பாடு மிக்குள்ளது. கழிக்கு முன்னோடி கெழு எனச் சங்க இலக்கியங்கள்

காட்டிநிற்கின்றன. கெழு>கழி : இஃது ஷ்வா ஃபினாமினன் எனக் கருதுகிறேன்.


கெ-/செ- : என்னும் தாதுவிற்கு இரண்டு பொருள்கள் எப்பொழுதும் உண்டு.
(1) செம்பு நிறையக் கெம்பு. (மாதுளம்பழம். விடுகதை). இங்கே கெம்பு : சிவப்பான மாதுளைமுத்து.
பெங்களூரில், ’கெம்பெ கவுடரு ஏர்போர்ட்’. கெம்பெ : செம்மல், செம்மை ஆன ஆள் என்ற பெயர்ச்சொல்.
(2) கெம்புதல் : எழுதல், பெரிதாதல். கெம்புகிற அலைகள் - சுனாமி போல பேரலை.
செம்முதல்: வயிறு பொருமிப் பெரிதாதல்.  செம்மல் : பெருமை. பெருமை உடைய பெரியார்.
கண் செம்மி இருக்கிறது: கண் வீங்கிப் பெரிதாதல்.
திண்கதவஞ் செம்மி (திவ். இயற். 3, 12)  : செம்முதல் = பொருத்துதல். 
 செம்மா2-த்தல் cemmā-, 12 & 13 v. intr. 1. To be elated with pride, to be haughty, to assume superiority; இறுமாத்தல். மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ் (குறள், 1074). 2. To be over-joyed, intoxicated with joy; மிகக்களித்தல். மது வுண்டு செம்மருந் தண்சுரும்பு (பெரியபு. ஆனாய. 20). 3. To be majestic in manner or bearing; வீறு பெறுதல். அண்ணல் செம்மாந்திருந்தானே (சீவக. 2358).
இந்த இரண்டாம் பொருளிலே, கெ-/செ- என்னும் தாதுவேர் சிவ என்ற சொல்லை வடமொழி வேதத்தில் பிறப்பிக்கிறது.
‘siva = auspicious, propitious, benevelont. இப்பொருள்கள் கெ-/செ- என்னும் த்ராவிட வேர்ச்சொல் என்பது வெள்ளிடைமலை. சிவகதி என சமணர் யாத்த சிலம்பில்
தான் தமிழில் முதலில் வருகிறது. சிவகதி = செங்கதி. செம்மாந்த கதி. (செம்மாத்தல் குறளிலும் உண்டு. 1074).

ஆக, கெ-/செ- என்னும் தாது (1) சிவப்பு. அரதனம் (> ரத்ந) மணியின் நிறம் (2) பெருமை, வீறு, மிகுவது/பொலிவது. auspicious, mangala for 'siva come from this ke-ce- root of PD.
செம்பக்கால் என்றால் வளரும் வெற்றிலைக் கொடியின் இளஞ்செடிகள் எனப்பொருள்.  கெ-/செ- > கெழு (= கெம்மு/செம்மு = மிக்க)

-ழ் என்ற விகுதி ஏற்கும் சொற்கள் பல. கெ- தாது கெழு என்ற ழகரவீறு கொள்கிறது. மை(மய்) ழகரவீறு ஏற்று மழை. பீ “மஞ்சள் நிறம்” : கண்ணில் பீழை என்பது
ழகர ஈறு கொள்வதால் தான். பீ : பீக்கு/பீர்க்கு/பீரம் “மஞ்சள் பூக்கள் கொண்ட தாவரம்”. பீக்கு > பிங்கலன்  (பொன் நிறம்) என்ற பெயர். பிங்கலன் + தை = பிங்கலனைத்
தந்தையாகக் கொண்ட குலத்தான் செய்தது பிங்கலந்தை நிகண்டு. பிங்கலr செய்த சந்தசூத்திரங்கள் (வடமொழி) : https://en.wikipedia.org/wiki/Pingala
சீ- வடியும் திரவம். இது ஈஞ்ச மரத்திற்குப் பெயர் ஆனது. சீ ழ் விகுதி சேர்ந்து சீழம் > ஈழம் = கள், ஈஞ்ச மரங்கள் நிறைந்த தீவு.
சீ- சீந்து/ஈந்து/ஈங்கு/ஈஞ்சு. சீந்து ப்ராகிருதத்தில் சிந்து எனவரும் (பாகிஸ்தானின் சிந்து நதி, மாகாணம்). அதுபோலே, ழ் விகுதி ஏறி, கெ-/செ- > கெழு/கேழ்.

கெழு = கேழ். = சிவப்பு நிறம். கேழையாடு : https://minnambalam.com/k/2017/02/11/1486751420  
Barking deer (Muntjac)  https://en.wikipedia.org/wiki/Muntjac   - இதன் கறி விரும்பி உண்ணப்படுவது. இப்பொழுது அனேகமாக ஸஹ்யாத்ரியில் அழிந்தது என அறிகிறேன்.
குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே” - தொல்காப்பியம். குரு (cf. குருதி) = கேழ் = சிகப்பு. 

பெரும்புலவர் ச. பாலசுந்தரம் (கரந்தைப் புலவர் கல்லூரி) தொல்காப்பிய முழுமைக்கும் உரைகண்டவர். இளம்பூரணருக்கு அப்புறம்.
அவர் கேழ் என்ற பாடத்தைத் தொல்காப்பிய நூற்பாவில் கொண்டு உரைக்கிறார். கேழ் எனும் உரிச்சொல் (1) சிவப்பு (2) மிக்க என்ற இரண்டு பொருளிலும்
சங்க இலக்கியத்தில் வருகிறது. கெழு என்ற உரிச்சொல் நிறம் (சிவப்பு) என்று வருவதில்லை என்பது அவர் கருத்து. கேழ் = சிகப்பு/செவப்பு நிறம்.
கேழ் = ’மிக்க’ என்ற பொருள்கொள் உரிச்சொல்லாயும் சங்க நூல்களிலே வரும்.


சூ. 302 :

குருவும் கேழும் நிறனா கும்மே
(5)
 

குறிப்பு : "குருவும் கெழுவும்" என்பது உரையாளர் கொண்ட பாடம்,
 

உரை:குரு - கேழ்,  என்னும்  இவ்இரு பண்புரிச்சொற்களும்   நிறம்
என்னும் பொருட்காகி வரும்.
 

எ-டு : குருமணித்   தாலி   எனவும்   நறுஞ்சாந்  தணிந்த கேழ்கிளர்
அகலம் (அகம் - 26) எனவும் வரும்.
 

"கெழு" என்பது   கெழுதகை - கெழுமிய, கெழுமும், கல்கெழு நாடன்,
என்றாற்போல   வினை  முதனிலையாகவன்றி நிறம் என்னும் பொருட்டாய்
வராமையின் 'கெழு' என்னும் பாடம்


உரியியல்313

ஏடெழுதுவோரான் நேர்ந்த பிழையாதல்  தெளியலாம். உரையாசிரியன்மார்
கெழு  என்பது   'கேழ்'   என   நீண்டுவருமென   அமைதி   கூறினர்.
நிறப்பொருளில்   நீளாது   வருமிடம்   ஒன்றேனும்  இன்மையின்  அது
பொருந்தாமையறிக.   பொருந்துதல்    என்னும்     பொருட்டாய்  வரும்
கெழுவென்னும்   உரிச்சொல்லே   நீண்டுவரும்   என்க. 'கெழு' என்பது
வெளிப்படு சொல்லாகலின் அதனை   விடுத்துக்   'கேழ்'   என்பதனையே
ஆசிரியர் விதந்தோதினார்   என்க.   குர்-குரு   என்னும்   குறைச்சொல்
குரீஇ,   குரா,   என   வேறு   எழுத்துப் பெற்றன்றிப் பெயராக வாராது.
எனவே, குரு என்பது  பெயரடையாக வரும்   உரிச்சொல்லாயிற்று.  கேழ்
என்பது பெயர்ப் போலியாய் வந்து உரிச்சொல்லாயிற்று.


குருவும், கெழுவும் நிறன் ஆகும்மே என்று செந்நிறத்தை நேரடியாகவே தொல்காப்பியம் கூறிவிட்டது.
ஆனால், “மிக்க” என்ற பொருள் கொண்ட உரிச்சொல் என்றும் கூறவேண்டும் எனக் கருதிய இளம்பூரணர்
ஓர் அருமையான உதாரணத்தை எடுத்துக் கையாள்கிறார்:

உரிச்சொல்லின் பிறிது இலக்கணம் -

{Entry: C03__585}

உரிச்சொற்கள் தம் ஈறு திரிதலும், பிறிது அவண் நிலையலும் உடைய. கடி என்னும் உரிச்சொல் ‘கடும் புனல்’ (குறுந். 103) என ஈறு திரிந்து வந்தது. நம்பு என்னும் உரிச்சொல் ‘நன் மொழி நம்பி’ என ஈறு திரிந்து வந்தது. ‘உருகெழு தோற்றம்’ என்புழி, உரு கெழு என்னும் இரண்டு உரிச்சொற்கள் இணைந்து வந்தன. (தொ. சொ. 390 இள. உரை)

                                                                           - இலக்கணக்கடல் தி. வே. கோபாலையர்.


உரு = அச்சம். உரு உட்கு ஆகும் (தொல்காப்பியம்). 
அச்சம் மிக்க = உரு கெழு
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் - திருமுருகு. 244

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி - புறம் 58/17 
       இதைத் தான் தொல்காப்பியமும் ”உரு உட்கு ஆகும்” என்கிறது.
       வைதிக சமயத்தில் இருந்து சங்கத் தமிழர் சமயம் அணங்கு வழிபாட்டால்
       வேறுபடும். இதனை பேரா. ஜா. ஹார்ட் சங்க நூல்களின் முழுமையான
       நூல்களில் காண்க. அணங்கு என்பதன் பொருள் “உரு” என்ற சொல்லில்
       உண்டு (சினம், அச்சம், மெலிவு, வருத்துதல்...). உரு கெழு முருகு = அணங்கு கெழு முருகு.

உரு கெழு யானை உடை கோடு அன்ன - நற் 299/1
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் - பரி 12/4
உரு கெழு திறல் உயர் கோட்டத்து - பட் 36
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் - அகம் 166/7
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு - புறம் 25/3
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் - திரு 51
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் - திரு 273
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் - மது 542
குருதி வேட்கை உரு கெழு வய_மான் - நற் 192/1
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் - பதி 34/6
உரு கெழு மரபின் அயிரை பரைஇ - பதி 88/12
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ - அகம் 138/10
குருதி வேட்கை உரு கெழு முரசம் - புறம் 50/5
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/17
உரு கெழு பேய்_மகள் அயர - புறம் 371/26
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப - புறம் 373/1
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து - புறம் 392/6

உரு என்னும் சொல் அச்சம், அழகு என்னும் பொருளுடையது. உரு = அணங்கு. ”அணங்குகொல்? ஆய்மயில்கொல்? ... மாலும் என் நெஞ்சு” (குறள், காமத்துப்பால்).
அஃதாவது, உரு = அணங்கு.  
உரு கெழு தோற்றம் உரைக்கும்_கால் நாளும் - பரி 11/59

இந்த இரு பொருளிலும் உள்ள சங்க இலக்கியத் தொடரைக் காட்டாகத் தருகிறார் இளம்பூரணர்:
‘உருகெழு தோற்றம்’ என்புழி, உரு கெழு என்னும் இரண்டு உரிச்சொற்கள் இணைந்து வந்தன.” (தொ. சொ. 390 இள. உரை)
அரிய தேர்வு இது. உரு கெழு தோற்றம் (புறநானூறு, பரிபாடல்) = அச்சம், அழகு மிக்க தோற்றம்.
இந்த இடத்தில், தொல்காப்பியர் தரும் கெழு = செவ்வண்ணம் என்னும் உரிச்சொல் பொருள் தவிர,
மிக்க என்ற பொருளும் கெழு என்னும் உரிச்சொல்லுக்கு உண்டு என நுட்பமாக உணர்த்துகிறார்.
உரு கெழு தோற்றம் = உட்கு/அச்சம்/அணங்கு/சினம் மிக்க(=கெழு) தோற்றம்.

கெழு என்பது உரிச்சொல் என்கிறார் இளம்பூரணர்.  இது ஆதிநிலை (PD stage).   கெ-செ- : (செம்மை) மிக்க என்ற பொருளது ழ் சேர்ந்து 
கெழுத்தியாக இருக்கிறது = (நலம்) மிக்கு இருக்கிறது. கச்சேரி கெளை/களை கட்டியாச்சு என்கிறோம். இதிலும் கேழ்/கெழு உள்ளது (Cf. பவழம்/பவளம்) என நினைக்கிறேன்.
 ’ஆ கெழு கொங்கர்’ (பதிற்றுப்பத்து) = மாடுகள் மிக்க கொங்கர்கள்.

கெழு என்ற உரிச்சொல் கழி என்ற உரிச்சொல் ஆகவும் பயனாகிறது. ‘சால உறுதவ நனிகூர் கழிமிகல்’ (நன்னூல்).
(1) Schwa phenomenon between "kazi" and "kezu" from the PD dhATu/root, kəzh, 
both meaning "to be full, to fill/increase" https://en.wikipedia.org/wiki/Schwa
It is like PD (2) nəL- 'dark' becoming neNTu/naNTu, (3) kəL- 'to dig' becoming kellu-/kallu....
The schwa phenomenon in Tamil can be analyzed and studied by linguists in detail.
Last month, I published a paper in Int. Jl. of Drav. Linguistics (Trivandrum) about
many Sanskrit words from Dravidian k- > 's- word-initially. Many in that set seem to employ the schwa in the first syllable too.

(4) கெழு - மிகல். விரைவில் வளரும் various kinds of Catfish. இதனால்தான் மீன்பண்ணைகளில் வளர்த்தி குறைந்தவிலை/அதிகலாபம் என்னும் வணிகம்.
கெழு- என்ற உரிச்சொல் தருவது. கெழுத்தி மீன், கெழிறு > கழிறு. ழ்/ள் வேற்றுமை மறைந்துவிட்டதால்,
கெழு- > கெழிறு/கழிறு கெளிறு/களிறு என எழுதப்படுகிறது. கெழிறு : கழிறு - this pair has schwa (ə) phenomenon as well.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 18, 2018, 9:20:02 AM9/18/18
to Santhavasantham
நச்சினார்க்கினியர்:
மலைபடுகடாம் 114 உரையில்.கெழீஇய என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லும்போது, கெழுமுதல் ஈண்டு முற்றுதலையுணர்த்திற்று என்கிறார் நச்சர். 
கெழீஇய என்பதன் அடிச் சொல்லாகக் கெழு என்ற உரிச்சொல்அமைந்துள்ளது. கெழு : கழி என்று வருதலை நன்னூல் காட்டுகிறது. 
கெழு > கழி (due to Schwa phenomenon, with the meaning: to increase/grow, to fill up, to be full).
http://182.19.37.67/slet/l1100/l1100pag.jsp?book_id=20&pno=620

கலித்தொகையில் கெழு- > கழு- (variation due to schwa) என்றாகி இருத்தலையும் நச்சர் குறிக்கிறார். கலித்தொகை அடிக்குப் பொருள்கூறுகையில் திரட்சி என்கிறார்:
‘கழுமிய ஞாட்பினுள் மைந்திகழ்ந்தா ரிட்ட’   (களவழி. 11)
எனவரும். இது, 1 கழும் முடித்துக் கண்கூடு கூழை’ (கலி. 56.3)  எனத்
திரட்சியை யுணர்த்துதல்
 ‘கூறிய கிளவி’ என்பதனால் கொள்க. 

குருவும் கெழுவும் நிறனாகும்மே - தொல்.

கெழு என்னும் உரிச்சொல் நீண்டு கேழ் என்றாகும் என்கிறார் நச்சர்.
மேலும் = பொருத்தம் என்ற பொருள் தருகிறார்.

நச்.

இது, பண்பு.

இ-ள் :  குருவும்  கெழுவும்  நிறன்  ஆகும்மே  குரு  என்னும்
உரிச்சொல்லும்,   கெழு  என்னும்  உரிச்சொல்லும்  நிறன்  என்னும்
உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று.

உ-ம் :    ‘குருமணித்தாலி’, 4‘நறுஞ்சாந்து  புலர்ந்த  கேழ்கிளர்
அகலம்’ (மதுரைக். 493) என வரும்.

‘குரூஉத் துளி பொழிந்த’
குரூஉக்கண் இறடிப் பொம்மல்’         (மலைபடு. 169)

எனக் குரு நீடலும், கெழு கேழ் என நீடலும் ஈறு கெடுதலும்,

‘எழுத்துப்     பிரிந் திசைத்தல்   இவணியல்  பின்றே’ (உரி 97)
என்பதனாற்  கொள்க. கெழு என்று வரும் இடம் உளதாயின் கொள்க.
இக்  கெழு  பொருத்தத்தை  உணர்த்துதலும்,  கெழுமுதல் என்னும்
வழக்கிற்கு  முதல்  நிலையாய்  நிற்றலும்  ‘கூறிய  கிளவி’  (உரி. 92)
என்பதனால் கொள்க. 
மேல்வரும் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள்
கூறுக.

It is very interesting that NaccinArkkiniyar recognizes the similarity in meaning
between kezhu & kazhu(m) [in kalittokai]. Nowadays, we can explain this relationship as coming from
 schwa phenomenon. And ultimately "cAla uRu tava nan2i kUr kazi mikalE" (nan2n2Ul)
sUtra's "kazi" < "kezu" of Sangam texts.

கெழுமு-தல் keḻumu-, 5 v. cf. கெழுவு-. intr. 1. To be full, plenteous, abundant; நிறைதல். கெழுமியெங்கணுமாய்க் கிளரொளிச் சடையனை (வள்ள. சத்தியஞான. பதியியல், 9). 2. To become ripe; முதிர்தல். கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று (மலைபடு. 114, உரை). 3. To spring up, shoot forth; முளைத்தல். (அக. நி.) 4. To be affected with lust; காமவிகாரங்கொள்ளுதல். கிரிகையை நினைந்துடல்கெழுமி (பாரத. குருகு. 104).--tr. 1. To attain, join, unite; பொருந்துதல். தேரோடத்துகள் கெழுமி (பட்டினப். 47). 2. To approach; கிட்டு தல். ஒன்னதார் படைகெழுமி (பு. வெ. 3, 12, கொளு). 3. To learn, practise; கற்றல். (திவா.) 

கெழுமு- > கழுமு-:
கழுமு1-தல் kaḻumu-, 5 v. intr. 1. To join, unite; சேர்தல். பெண்டிர் . . . செந்தீக் கழுமினார் (பு. வெ. 7, 28). 2. To be fitting, suited; பொருந்தி யதாதல். கழுமிய காதல் (பு. வெ. 10, முல்லைப். 5, கொளு). 3. To come together; to crowd; திரளுதல். மென் புகை கழுமு சேக்கை (சீவக. 1350). 4. To mix together; கலத்தல். கழுமிய ஞாட்பு (தொல். சொல். 351, உரை). 5. To be full, complete; நிறைதல். கழுமிற்றுக் காதல் (சீவக. 1870). 6. To be abundant, copious, plentiful; to overflow; மிகுதல். (சூடா.) 7. To be fascinated, bewildered, confused; மயங்குதல். கழுமிக் கோதை கண்படுக்கும் (சீவக. 349).

Reply all
Reply to author
Forward
0 new messages