--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
தங்கமணி அம்மாஅன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.















இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ இந்தப் பிறந்த நாளுக்காக எனது வாழ்த்துக்களை இந்த
கவிதைமூலம் சமர்ப்பிக்கிறேன்
அன்புடன் கிரிகாசன்
(இன்று பிறந்த நாள் காணும் சந்தவசந்த குழுமத்தின் அனைவருக்கும்
பொதுவானது)
அலைபொங்கு மதுபோல வளம் பொங்கட்டும்
அன்பென்றும் மழைவந்து உளம்தூறட்டும்
கலை கொண்ட மனமின்ப கவிபாடட்டும்
காற்றோடி உலகெங்கும் புகழ்பாடட்டும்
நிலையான துயர்வென்றே நிலம்பேசட்டும்
நீங்காது மகிழ்வொன்றே வாழ்வாகட்டும்
குலையாக இன்பங்கள் கனிபோற் சுவை
கொள்ளட்டும், வாழ்வென்றும் இனிதாகட்டும்
பொதுவான வரவெல்லாம் நலமாகட்டும்
போகின்ற தெதுவோ நற்பொழுதாகட்டும்
எது இல்லை எனக்கேட்க இல்லாதது
ஒன்றேதான் இலையென்று மனம் கூறட்டும்
இவர்வீட்டில்திருமகளோ இருந்தாள் என்று
எவர்பேச்சும் வியந்தாக பொருள் சேரட்டும்
அவள் வீணை கரங்கொண்டு இசை மீட்டுவள்
இவர்கூடப் பிறந்தாள் என்றறிவோங்கட்டும்
பெருமறிவும் கலையுணர்வும் கவியாட்சியும்
பெருகிடவும் மகிழவுடனும் புவிமீதிலே
திருநடையும் வைத்த அடி புகழ்வானிலே
ஒரு நூறுபடி உயர மனம் வாழ்த்தினேன்.
*****************************
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
--
2012/5/9 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
> [...]
> தங்கமணியாரின் தமிழ்க் கவிதைப் பயிற்சிக்கு ஒரு காட்டாக, பசுபதி இணையத்தில்
> இட்டுவந்த கவிதை இயற்றிக் கலக்கு தொடரில் தந்த ஒரு பயிற்சிக்காக அவர் 2007-ல்
> எழுதிய கவிதையைக் கீழே தருகிறேன்:
>
நன்றி ஐயா. தாங்கள் இட்ட பாடல், மற்ற பாடல்களையும் தேடிப்பிடிக்க வழி செய்தது:
http://tvt-kavidhaigal-2.blogspot.com/
http://tvt-kavidhaigal.blogspot.com/
அர்விந்த்
> http://tvt-kavidhaigal-2.blogspot.com/http://tvt-kavidhaigal.blogspot.com/
>
> அர்விந்த்