காட்டுத் தீ (wildfire)எழுத்தாளர் S. T. பாஸ்கரன் வினவினார்:
> Dear Dr.Ganesan, Can you please let me know if there is any reference in Sangam literature to Forest fire. Both man made and natural. Regards. Baskaran
>
சேர்மன் மாவோவின் புகழ்பெற்ற வாக்கியம் பழைய சீனப் பழமொழியை மேற்கோளாகக் காட்டியது: "சிறுபொறி காட்டுத் தீயை உருவாக்கும்."
Chairman Mao, A single spark can start a prairie fire. January 5, 1930
" The subjective forces of the revolution have indeed been greatly weakened since the defeat of the revolution in 1927. The remaining forces are very small and those comrades who judge by appearances alone naturally feel pessimistic. But if we judge by essentials, it is quite another story. Here we can apply the old Chinese saying, "A single spark can start a prairie fire." In other words, our forces, although small at present, will grow very rapidly. "
பாலை நிலம். கடுமையான வேசைக் காலம். இலைகள் உலர்ந்து சருகாக வீழ்ந்து செடிகொடிகள், மூங்கில், பல்வகை மரங்கள் காய்ந்து நிற்கின்றன. இடியாலோ, உரசலாலோ, மனிதனாலோ (stublle burning, mahua collection, shift cultivation, cigarettes)தீப்பொறி பெருந்தீ ஆகி வனத்தையே அழிக்கும். உலகம் முழுதும் அறிந்த இந்த இயற்கை நிகழ்சியை - காட்டுத் தீயை - அழகான உவமையாகச் சங்கச் சான்றோர் பயன்படுத்தி உள்ளனர்.
மகட்பாற்காஞ்சி
நெற்றி வியர்வையை வேலால் துடைத்துக்கொண்டு கடுஞ்சொல் கூறும் வேந்தனே! இவளது தந்தையும் நெடுமொழியால் (உன்னை விரட்டுவேன் என்று) வஞ்சினம் கூறுகிறானே அன்றி உன்னைப் பணிந்து ஒரு சொல்லும் கூறவில்லை.
உனக்கும் அவனுக்கும் இப்படி ஒரு பிடிவாதம் [படிவம்] இருக்குமாயின் இந்த ஊர் முழுதும் எரியவேண்டியதுதான். மரம் பட்டுப்போய் இருக்கையில் சிறிய தீப்பொறி அதில் பட்டது போல எரியவேண்டியதுதான்.
கண்ணில் தோன்றும் மதமதப்பில் காமஈர மழை பொழியும் கண்ணும், அழகிய மாமைநிற மேனியும் கொண்ட இவள் இந்த ஊரைக் கொல்லும் அணங்காக மாறிவிட்டாளே! அணங்கு - Afflicting Power/Spirit/Goddess அணங்காடல் - பேயாடல். தமிழர்களின் சமைய/சமூக அமைப்பில் அணங்குக் கோட்பாடு முக்கியமா
னது. நாட்டார் சமையத்தில் இந்தியா முழுமையும் பார்க்கலாம். சிந்துவெளி நாகரீகக் காலந்தொட்டு சிறுமாற்றங்களுடன் பல்லாயிரம் ஆண்டுகளாக இயங்குவது.
புறநானூற்றுப் பாடல்
நுதி வேல் கொண்டு நுதல் வியர் துடையா,
கடிய கூறும், வேந்தே; தந்தையும்,
நெடிய அல்லது, பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம்: ஆயின், வை எயிற்று,
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை, 5
மரம் படு சிறு தீப் போல,
அணங்கு ஆயினள், தான் பிறந்த ஊர்க்கே.திணை காஞ்சி;
துறை மகட்பாற் காஞ்சி.
மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0531_03.html349. மதுரை மருதனிளநாகனார்
சோழநாட்டு உட்பிரிவுகளுள் சிக்கல் நாடு என்பது ஒன்று. இஃது இந் நாளில் திருவாரூர்க்குக் கிழக்கிலுள்ள பகுதியாகும். இதன் தலை நகரம் சிக்கல் எனப்படும் இக்காலத்தில் அது சிக்கல் என்றே வழங்குகிறது. சிக்கல் நாட்டுத் தலைநகரமாகிய பெருமையுடைமையால் பெருஞ் சிக்கல் என்பது பண்டைநாளை வழக்கு. அதன்கண் மருதனிளநாகனார் காலத்தே வேளாண் தலைமகனொருவன் இருந்தான். அவனைப் பெருஞ் சிக்கல்கிழான் என்பர். அவனுடைய மகள் பெண்மை நலங் கனிந்து வேந்தர் விரும்பி வேட்கம் வீறுகொண்டு விளங்கினாள். அவளை மணக்க விரும்பினானொரு வேந்தன. பெருஞ்சிக்கல் கிழான் அவன்பால் தன் மகளை மணத்தற்கு வேண்டும் நலம் குறைந்திருப்பது கண்டு மகட்கொடை மறுத்தான். அதனால் இருவரிடையே பகைமை தோன்றிற்று. சினம் சிறந்த வேந்தன் தன் நுதல் வியர்வையைத் தன் கைவேலாற்றுடைத்துக் கடிய சொற்களையே கூறலுற்றான். பெருஞ்சிக்கல் கிழானும் வேந்தனது வலிமிகுதி யறிந்த பணிந்து மொழிந்தடங்காது நெடுமொழி நிகழ்ித்தினான். இருவர் நிலைகளைமயும் மருதனிளநாகனார் கண்டார். "இவர்தம் இயல்பு இதுவாயின், இதற்கெல்லாம் காரணம் இக்கிழான் பெற்ற மகளேயாவாள்; விறகிற் றோன்றும் தீ விறகையே யழிப்பதுபோல இவ்வூரிற் பிறந்த இவள் இவ்வூர் அழிதற்குக் காரணமாயினள்" என இப் பாட்டின்கண் வருந்திக் கூறியுள்ளார்.
நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக்
கடிய கூறும் வேந்தே தந்தையும்
நெடிய வல்லது பணிந்துமொழி யலனே
இஃதிவர் படிவ மாயின் வையெயிற்
றரிமதர் மழைக்க ணம்மா வரிவை 5
மரம்படு சிறுதீப் போல
அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே.
-----------
திணையுந் துறையு மவை. மதுரை மருதனிளநாகனார் பாடியது. இது
பெருஞ் சிக்கல் கிழான் மகண் மறுத்தது என்பர் இளம்பூரணர்.
உரை: வேல் நுதிகொண்டு நுதல்வியர் துடையா - தன் கைவேலின் கூரிய இலையால் தன் நெற்றி வியர்வையைத் துடைத்து; வேந்து கடிய கூறும் - வேந்தனும் கேட்டார் அஞ்சத் தக்க மொழிகளைக் கூறாநின்றான்; தந்தையும் நெடிய வல்லது பணிந்து மொழியலன் இவன் தந்தையும் நெடுமொழிகளைத் தவரிப் பணிவைப் புலப்படுத்தும் சொற்களைச் சொல்லுகின்றானில்லை; இஃது இவர் படிவம் - இஃது இவர்கள் கொள்கை யாகும்; ஆயின் - இதனை ஆரா யுங்கால்; வை எயிற்று அரிமதர் மழைக் கண் அம்மா அரிவை - கூரிய பற்களையும் அரிபரந்து மதர்த்துக் குளிந்த கண்களையும் அழகிய மாமை நிறத்தையுமுடைய அரிவையாவாள்; மரம்படு சிறு தீப்போல் - மரத்தைக் கடையு மிடத்துத் தோன்றும் சிறுதீ அம் மரத்தையழிப்பது போல, தான் பிறந்தவூர்க்கு அணங்காயினள் - இவள் தான் பிறந்தவூர்க்கு வருத்தம் விளைவிப்பவ ளாயினாள் என்பதல்லது வேறில்லை, எ - று.
மகட்கொடை மறுக்கவே, வேந்தன் உள்ளத்தில் மகள் பாற் கொண்ட காதல் முற்றம் பகைமையாய் முறுகிவிட்டமையின் மேற் செயற்பாலும் போரே எனத் துணிந்த செயலும் சினந்த சொல்லு முடையனானான் என்பது தோன்ற, "நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும்" என்றார். தந்தையும் அஞ்சாநெஞ்சினனாதல் விளங்க "தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன்" என்றார். படிவம், கொள்கை. மரக்கட்டையைக் கடைந்தவழிப் பிறக்கும் தீ, தான் தோன்றும் மரமே எரிந்து கெடுதற்குக் காரணமாவதுபோல், இவள் தான் பிறந்தவூர் கெட்டு வருந்துதற்குக் காரணமாயினன் என்பார், "மரம்படு சிறுதீப் போல, அணங்காயினன் தான் பிறந்த வூர்க்" கென்றார். வேந்து, துடையா கூறும்; தந்தையும் மொழியலன்; இவர் படிவம் இஃது; ஆயின், இவன் தீப்போல ஊர்க்கு அணங்காயினள் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: மகட்கொடை மறுக்கப்பட்டவழி, மறுக்கப்பட்டவனும் மறுத்தவனுமாகிய இருதிறத்தாரும் போர் செய்தற்குச் சமைந்தது கண்ட மருதன் இளநாகனார் இப் பாட்டைப் பாடுகின்றார்; மகட்கொடை விழைந்த வேந்தன் உள்ளத்தில் நிலவிய விழைவு முற்றும் வெகுளியாய்ப் போர்க்கண் அவனைச் செலுத்திற்று; கொடைபுரிதற்குரிய தந்தை கொள்ளிற்குரிய அமைதி விழைந்த வேந்தன்பால் இல்லாமை கண்டு மறுத்து, மறுக்கப்பட்ட வேந்தன் போர்க்கெழுதலை யறிந்து சினங்கொண்டு போர்க்குச் சமைவானாயினன். "தந்தையும் நெடியவல்லது பணிந்து மொழியலன்" என்றதனால், மகட்கொடை மறுப்பவன் வேந்தனல்லன் என்றும், வேந்தன் மகட்கொடை நல்கும் மாண்புடைய குடியினனாதலால், அதற்கேற்ப, "நெடிய மொழிதல்" அவற்கு இயல்பாயிற்று. "நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முது குடி, மகட் பாடஞ்சிய மகட்பாற் காஞ்சி" (தொல். புறத். 24) என்பதற்கு இதனைக் காட்டிய இளம்பூரணர், "இது பெருஞ்சிக்கல் கிழான் மகட் கொடை மறுத்தது" என்பர்.
-----------