Marabil nagaiccuvai-34; மரபில் நகைச்சுவை - 34

5 views
Skip to first unread message

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 4, 2009, 9:57:08 PM10/4/09
to சந்தவசந்தம்

http://hubmagazine.mayyam.com/oct09/?t=13464

மரபில் நகைச்சுவை - 34

- அனந்த்


<> சென்னைச் சிறப்பு <>

திரிவிக் கிரமன் திரும்பக் குறளாய்த்
திரிந்ததுபோல் செம்மைத் தமிழ்தன் - உருமாறி
'இன்னாப்பா, இஸ்துகினு' என்பனபோல் ஆனவிதம்
சென்னைக்கே ஆன சிறப்பு. 1

காலையில் கேட்கும் ‘கசுமாலம், எந்திரி!'
சாலையில் ‘சாவுக் கிராக்கியிது' -மாலையில்
'துன்றான்பார் சோமாரி' இன்னபல சொல்லழகு
சென்னைக்கே ஆன சிறப்பு. 2

'நாஷ்டாவை முட்ச்சுகினு' நாமேறும் ஆட்டோக்கள்
கோஷ்டியாய்ச் சேர்ந்து குரலெழுப்ப - 'ராஷ்டா'வில்
மின்னல் எனவிரையும் விந்தைக்கண் காட்சியெங்கள்
சென்னைக்கே ஆன சிறப்பு. 3

(கோஷ்டி=கோட்டி, கூட்டம்; ஒருவரோடு ஒருவர் கூடியிருத்தல்; ராஷ்டா=ரஸ்தா: வீதிக்கான பெயரின் மரூஉ)

செல்லுகின்ற ஊர்தி சிறிதும்அலுங் காதிருந்தால்
நல்லதல்ல நம்முடலுக் கென்பதனால் - கொல்வதுபோல்
சென்றுகுழி யுள்புகுந்து சிந்திக்க வைத்தல்நம்
சென்னைக்கே ஆன சிறப்பு. 4

கையிலே காசுடன் காய்கறி வாங்கையில்நாம்
செய்கின்ற பேரம் பிடிக்காமல் - வைபவரின்
கன்னாபின் னாமொழியைக் காதுகுளி ரக்கேட்டல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 5

கற்றபின் நிற்கக் கடற்கரையில் கல்லாக
நிற்கின்ற வள்ளுவர்தம் நீதிகளைச் - சுற்றிஇரை
தின்னவரும் காக்கைக்குச் செப்புகின்ற சீர்மையிந்தச்
சென்னைக்கே ஆன சிறப்பு. 6

மல்லிகைப் பூமணத்தில் மாட்டின் இடுகையொடு
பொல்லாப்பே ருந்தின் புகைகலந்து - நில்லாமல்
என்றுமுள கூவமணம் ஏற்றுநமை ஊக்குவித்தல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 7

வெய்யிலின் சூட்டில் மெழுகாகும் சாலையிலே
ஐயய்யோ என்றலரும் ஆட்களெல்லாம் - தையலாள்
சென்றதிசை நோக்கித் திரும்பித் துயர்மறத்தல்
சென்னைக்கே ஆன சிறப்பு. 84

மழைத்திவலை கண்டவுடன் மாநகர்ச் சாலை
குழைசேற்றுக் குட்டையாய்த் தம்மை - விழவைத்தும்
என்றுமதைச் சீர்செய்ய எண்ணா மதியுடையோர்
சென்னைக்கே ஆன சிறப்பு. 9

சூரியனோ ஈரிலையோ இங்குநமைத் துன்புறுத்த
யாரிருந்தால் தானென்(று) அடுத்தடுத்துத் - தேர்தலிலே
என்ன முடிவெனினும் ஏற்கும் பெருந்தன்மை
சென்னைக்கே ஆன சிறப்பு. 10

<><><><><><><>

இலக்கணக் குறிப்பு: இந்தப் பாடல்கள் வெண்பா இனத்தைச் சேர்ந்தவை என்பது இந்தத் தொடரைப் படித்து வருவோர்க்கு நன்றாகத் தெரிந்த செய்தி. ஒரே ஈற்றடியை வைத்துப் பல வெண்பாக்களை அமைக்கும் போது, எல்லாப் பாடல்களின் கடைசி இரண்டு அடிகளும் எதுகை ஒத்துப் போக வேண்டிய தேவை ஏற்படும்.

இலக்கணமல்லாத குறிப்பு: எவ்வளவோ சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சென்னையைப் பற்றி இப்படிக் கேலி செய்து எழுதுவது நம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தவேயன்றி வேறெந்த எண்ணத்திலும் அன்று. சென்னையில் பிறந்தவனாகிய எனக்கு அந்த நகர் எப்படியிருந்தாலும் பொன் குஞ்சாகவே மகிழ்ச்சி தரும்!

 

Dr Subramanian

unread,
Oct 5, 2009, 12:57:23 AM10/5/09
to santhav...@googlegroups.com
அன்பு அனந்தரே

சென்னையெனும் மாநகரின் செம்மைப் பெருமையெலாம்
நன்றாய் எடுத்துரைத்த "நம்மாளே"- பொன்குஞ்சாம்
என்றுவமை சொன்னதன்பின் என்சொல்ல சொன்னதெலாம்
உன்னுணர்வைக் காட்டும் உவந்து.


சிறிய வெண்பாவில் சென்னைச் சிறப்பை
அறியக் கொடுத்த அழகே - குறிப்பாய்நீ
சென்னைத் தமிழழகைச் செம்புலப் பெயல்நீராய்
உன்பாவில் இணைத்தாய் உவந்து.

( நானும் சென்னையில் பிறந்தவன் என்பதால் 'நம்மாளே" )
வவேசு


2009/10/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 5, 2009, 5:22:22 AM10/5/09
to santhav...@googlegroups.com

என்னாவே சும்மா எடுத்து விடுதீக

கன்னாபின் னாத்தமிழேன் கத்தீக- சொன்னாக்க

வல்லிசாத் தேனு வழியும்,ஓய் சொல்வேளோ

நெல்லைத் தமிழுக்கு நேர்!

 

இலந்தை



2009/10/5 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 5, 2009, 10:22:10 AM10/5/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com, Kavitha Ramasami, SUBBAIER RAMASAMI
அப்படிப்   போடும்வே அட்டகா சத்தலைவா!
எப்படி நெல்லையைவிட் (டு)இன்னோர் ஊர்-தப்படித்
தப்படியாய் ஒப்பில்லை என்றனந்த் செப்பிடலாம்?
மப்போ?அநந்தலோ? மற்று!!
..
நெல்லையைப் பற்றிநாம் நீளவே சொல்லலாம்!
வெல்லம்தான் எம்நெல்லை வே!
..

எழுதி   வருவேன் இதோபத்து வெண்பா!
கழுதையாம் சென்னாய்!* கதறு!..
..

(சென்னைக்கு விளி..சென்னாய் தானே...ரிக்ஸா மாயாண்டிப்புலவரே!..உம்ம ரிக்ஸாவை
இஸ்துக்கினே இங்க ஒருதபா வந்துக்கினு சொல்லிப்போடு கபால்னு!)
யோகியார்
&&&&&&&&&&&&&&&&&&&&&
 

2009/10/5 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Kaviyogi Vedham

unread,
Oct 5, 2009, 10:53:25 AM10/5/09
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com, rakshi...@yahoo.com
என்னாவே வாவேசு! எப்போநீர் எட்டப்பன்
சின்னத்தில் சேர்ந்தீர்?இச் சென்னைக்காய்- ‘ஜால்ரா’
அடிக்கவா  நெல்லைவிட்  டாடிவந்தீர்? காலேஜ்
பொடிசைஉம்மேல்  ஏவிடவா போய்!
..
நெல்லை ‘வள்ளி  ஊர்’பிறந்து, தாமிரத்து *நீர்குடித்து,..(*தாம்ரபர்ணி)
கல்விகற்று, ஊர்ப்பெருமை காட்(டு)என்றால்- தொல்லைதரும்
நாற்றம்சேர்த் துக்கூவும்  சென்னையெனும்  ‘நங்கை’அணைத்(து)
ஏற்றமிலி  சொன்னீர் இளித்து!!
யோகியார்

2009/10/4 Dr Subramanian <vav...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 5, 2009, 1:41:05 PM10/5/09
to santhav...@googlegroups.com

வள்ளியூ  ரில் பிறந்த வ.வே சு சென்னையிலோர்

புள்ளி,  எனவே,  புகழ்ந்துவிட்டார்- என்செய்ய

எல்லாக் கலவையும் இங்கேதான், வேண்டாமே

நெல்லைக்குச் சென்னை நெடி!



2009/10/5 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Oct 5, 2009, 4:59:00 PM10/5/09
to santhav...@googlegroups.com
மன்னிக்கணும்.வவேசு!..சும்மா ஜாலிக்காய் எழுதப்போய்
  ‘ஷ்ட்ராங்காக’ வெண்பா வெளிவந்துவிட்டது..ராமரோட அம்பு மாதிரி
உள்ளேயும்(பயன் இல்லாமல்)தள்ளமுடியலை.சாரி.!.தலைவ்ர் சொன்னப்புறம்தான்  ‘இதுக்கு’ உறைத்தது..
எனினும் அவசர அச்சடிப்பால் கீழே ஒரு தவறும் நேர்ந்துவிட்டது..திருத்திப்படிக்கவும்.. ஜாலியாய்!
..
 “

    என்னாவே வாவேசு! எப்போநீர் எட்டப்பன்
    சின்னத்தில் சேர்ந்தீர்?சென் னை(க்கு)ஜால்ரா- பின்னர்

    அடிக்கவா  நெல்லைவிட்  டாடிவந்தீர்? காலேஜ்
    பொடிசைஉம்மேல்  ஏவிடவா போய்!



2009/10/5 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Oct 6, 2009, 1:10:22 PM10/6/09
to santhav...@googlegroups.com
அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இந்த நெல்லை வெண்பா கண்டேன்.  முன்பு மரத்தடியில் திரு ஹரன் பிரசன்னா எழுதிய நெல்லை வெண்பாக்கள் இதோ:
 
இப்போது மரத்தடி தளம் கூட சரியாக இயங்க வில்லை.(:(
 
நெல்லைக்கும் உண்டோ நிகர்? (திரு ஹரன் பிரசன்னா)
==============================
 
நெய்ச்சுவையும் பாற்சுவையும் நீர்ச்சுவையிற் தோற்றிடும்
மெய்யைக் குளிர்வித்து மென்காற்று மீண்டிடும்
நெல்வயல்கள் சேறோடு நேயம் உரைத்திடும்
நெல்லைக்கு முண்டோ நிகர்.
 
ஊரெங்கும் பாய்வதும் ஓய்வின்றி ஓடுவதும்
பாரில் சிறந்ததும் பாடத் தகுந்ததும்
சொல்லில் அடங்கிடா சொக்கும் பரணிசெய்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
விளையும் பயிர்களெலாம் வீரக்கதை பேசும்
சுளையின் சுவையொப்பச் சொல்லுந் தமிழிருக்கும்
நல்லோர் அனைவரும் நட்புடன் வாழ்ந்திடும்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
காந்திமதி தொட்டிழுக்க, கங்கைத் தலையனவன்
ஏந்திழையைச் சேர்த்தணைக்க, எண்ணமதில் காதல்சேர்
நெல்லையின் அப்பன்வாழ் நேர்த்திமிகு கோவிலுண்டாம்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
பசுமை செழித்துப் படுத்துறங்கக் கண்டு
பசப்பித் திரியும் பறவைகள் மெய்மறந்து
கல்லின் சிலைகளுடன் காதல் செயுமின்னூர்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
தேரிழுக்கும் வைபவத்தில் சேர்ந்தமக்கள், காய்கடல்
வாரியிட்ட சிப்பியென வையம் அதிசயிக்க
சில்லறை வீழ்ந்தாலோ தேடவொண்ணாக் கூட்டம்சேர்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
பன்னை உயர்ந்ததும் பாங்குடனே காய்த்ததும்
தென்னையை வம்பிழுக்கும் தேர்ந்திடச் சொல்லியே
வில்விடுத்த அம்பெனவான் மேவிடுந் தென்னைசூழ்
நெல்லைக்கு முண்டோ நிகர்.
 
குற்றாலப் பேரருவி கொட்டுகின்ற வெள்ளத்தில்
கொற்றவை கூந்தல் விரித்தே குளிக்கின்றாள்
நல்லதவம் செய்திட்டோர் நெஞ்சுறையக் காணுமந்
நெல்லைக்கு முண்டோ நிகர்
 
தொல்லையில் ஊரது தொன்மைவாய் ஊரது
நெல்லையின் மேவுபுகழ் நாவாலே சொல்லும்போல்
நில்லாமல் வார்த்தைகள் நெஞ்சினி லூறுது
நெல்லையூர்க் கில்லை நிகர்.
 
==============

Hari Krishnan

unread,
Oct 6, 2009, 11:24:12 PM10/6/09
to santhav...@googlegroups.com


2009/10/6 Raja.Tyagarajan <thia...@dataone.in>

அன்புடையீர்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
இந்த நெல்லை வெண்பா கண்டேன்.  முன்பு மரத்தடியில் திரு ஹரன் பிரசன்னா எழுதிய நெல்லை வெண்பாக்கள் இதோ:
 
இப்போது மரத்தடி தளம் கூட சரியாக இயங்க வில்லை.(:(
 
நெல்லைக்கும் உண்டோ நிகர்? (திரு ஹரன் பிரசன்னா)
==============================
 
நெய்ச்சுவையும் பாற்சுவையும் நீர்ச்சுவையிற் தோற்றிடும்
மெய்யைக் குளிர்வித்து மென்காற்று மீண்டிடும்
நெல்வயல்கள் சேறோடு நேயம் உரைத்திடும்
நெல்லைக்கு முண்டோ நிகர்.
 
ஊரெங்கும் பாய்வதும் ஓய்வின்றி ஓடுவதும்
பாரில் சிறந்ததும் பாடத் தகுந்ததும்
சொல்லில் அடங்கிடா சொக்கும் பரணிசெய்
நெல்லைக்கு முண்டோ நிகர்


ஹரன் பிரசன்னா கிழக்கு பதிப்பகத்தில்தான் பணியாற்றுகிறார்.  சந்தவசந்தத்திலும் உறுப்பினர்தான்.  ஆனால் படிக்கிறாரா என்பது தெரியவில்லை.

யாரையும் பாராட்டவே வாய் வராது, யாரையும் தட்டிக் கொடுக்கவே தெரியாது, குறைசொல்ல மட்டும் குதித்துக் கொண்டு வருவான் என்றெல்லாம் என்னைச் சொல்பவர் ஒருவர் இங்கே இருக்கிறார்.  (நான் வருத்தப்பட்டுக் கொண்டோ, கோபத்தோடோ இதைச் சொல்லவில்லை.  சிரித்துக்கொண்டுதான் சொல்கிறேன்.  முகத்தை வேணும்னா போட்டோ பிடிச்சு, கடிதம் எழுதும்போது இருந்த தோற்றம்தான் என்பதையும் புகைப்படத்திலேயே காட்டவும் வேணும்னா காட்டறேன்.)

ஹரன்பிரசன்னாவிடம் ‘உங்களுக்கு வெண்பா பயிற்சி கொடுத்தது யார்’ என்றுமட்டும் கேட்டுப் பாருங்கள்.  என்னை நிரூபித்துக் கொள்வதற்காக இதைச் சொல்லவில்லை.  என்னை நிரூபித்துக் கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை.  மரத்தடி குழுவில் ஒரு பட்டாளமே இருந்தது. ஹரியண்ணா என்று வாய்நிறைய கூப்பிடும் வழக்கம் அங்கிருந்துதான் தொடங்கியது.  

வேதம் வெளிப்படையாகச் சொல்கிறார்.  மற்ற சிலர் வேறு எங்கோ சொன்னாலும் என் செவிகளில் வந்து விழுந்துகொண்டுதான் இருக்கிறது.  கடந்த ஐந்தாறு வருடங்களில் இப்படிப்பட்ட செய்திகள் எனக்கு வந்து சேர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அடிக்கடி இப்படி ஒரு கருத்துச் சொல்லப்படுவதால் இதை இங்கே எழுதலாயிற்று.  யாரையும் பாராட்டக்கூடாது என்று சபரிமலைக்கு விரதம் இருப்பதைப்போலெல்லாம் இல்லை.  Appreciation should be spontaneous.  எப்போது மனத்தில் படுகிறதோ அப்போதே செய்யப்படவேண்டும்.  எல்லாக் கடிதங்களையும் படித்து, கண்ணில் ஒரு குறிப்பிட்ட படைப்பு பட்டு, அதை மனத்தைத் தொடவும் தொட்டால், பாராட்ட தடையே இல்லை.  அப்படி எல்லா நேரங்களிலும் செய்ய முடிவதில்லை.

எதற்குச் சொன்னேன் என்றால், ஹரி யாரையும் பாராட்டக்கூடாது என்று ‘ஒடுக்கிக் கொண்டு’ கிடக்கும் அற்பப் பதர் அல்லன்.  தெரிந்ததைச் சொல்லாமல் போனால் ஞானகலன் என்ற பாவத்துக்கு ஆளாவான் என்பதுணர்ந்து, கேட்டவர்க்குக் கேட்ட நேரத்தில் சொல்வதைத் தன் இயற்கையான கடனாகக் கொண்டவன்.  ஹரன்பிரசன்னா இதற்கு சாட்சி.  

தன்னிலை விளக்கம் எதற்கு என்று கேட்க நினைத்தால், சரியான முடிவை எடுப்பதற்கு முன்னால், தனக்குள் ஆழ்ந்து, தன்னைப் பார்த்துக் கொள்வது அவசியம் என்பதனால்.  இதையும் புன்னகையோடுதான் சொல்கிறேன்.  


--
அன்புடன்,
ஹரிகி.

Kaviyogi Vedham

unread,
Oct 7, 2009, 1:00:39 PM10/7/09
to santhav...@googlegroups.com
ஓ..ஓ! புரிந்துகொண்டேன் ஹரி..சாரி..சாரி சாரி..
 உன் நெஞ்சம் கருணையுடன் எப்போதும் சந்தோஷத்தோடு
யாவற்றையும்(உன் தம்பிகள்,அண்ணாக்கள் எழுதும்) அன்புப்பார்வையுடன் நோக்கி (கமெண்ட்ஸ்)எழுதவேண்டும் என்ற ஆதங்கத்தில் சொன்னேனே அன்றி வேறல்ல என் நோக்கம்.நன்றி
 யோகியார்

2009/10/6 Hari Krishnan <hari.har...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages