நாட்டுப் புறப் பாடல் வகைகள்

1,849 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 11, 2021, 9:17:54 PM3/11/21
to santhavasantham

நண்பர்களே,

 

மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.

அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்த்ற்கு ம்ன்பே நாட்டுப்புறப் பாடல்கள் உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.

அவற்றில் ஆழமான கவிச்சுவையும் உண்டு.

காதல் உண்டு. கவலையும் உண்டு

ஏக்கம் உண்டு, இனிமையும் உண்டு
சண்டை உண்டு சமரசம் உண்டு

அழகு உண்டு அழுகையும் உண்டு

சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.

இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணத்துப் பாடியிருக்கிறான். முதலிரவுக்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.

தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பாடியிருக்கிற நாட்டுப்புறப்பாடலைப் படித்தால் இப்பொழுதும் அக்காட்சிகளைக் கண்ணில் கண்டு க/ண்ணீர் வரும்.

நாட்டுப்புறப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது சிருங்காரம். அதில்தான் எத்தனை உத்திகள்.

தாலாட்டு , தொழிற்பாட்டு, கடலில் போகும் மீனவர்கள் பாட்டு, ஏலேலோப் பாட்டு,  தேசபக்திப் பாட்டு(வெள்ளைக்காரனைத் திட்டும் பாடல்களும் உண்டு)

இன்னும் சிலர் அவர்களைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை எத்தனையோ?  நாட்டுப்புறப் பாடல்கள் பல நாட்டுப்புறக் கலைகளுக்கு வித்திட்டிருக்கின்றன.  திரைப்படப் பாடல்கள் பல அங்கிருந்து வந்தவை தான். நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் கொஞ்சம் மட்டுத்தான் என்று சொன்னவர்களை நானறிவேன். எனக்கென்னவோ நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் மட்டும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது

கவியரங்கம் தொடங்க இன்னும் இருக்கும் ஒரு வாரத்தில் சில வகைகளப் பற்றிப் பார்ப்போம். அது கவியரங்க மாளிகைக்கு ஒரு தோரணமாக அமையும்.

தொடக்கமாகச் சிருங்காரக் கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம்

காதலியின் நினைவு கதலனை வதைக்கிறது. அவன் பாடுகிறான்

'குஞ்சி முகத்தழகி
கூர் விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி - இப்ப
சாகிறண்டி ஒன்னால'

அவளுக்கும் அதே நிலை

 

எண்ணெய்த் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னழகு”

அவனுடைய தலை மயிரில் தலைவச்சுப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்

படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க முண்டு.

அவளுடைய மயக்கத்திலே போட்ட வெற்றிலை கூட சிவக்கவில்லை

ஆத்தோரம் கொடிக்காலாம்,

அரும்பரும்பா வெத்திலையாம்,

போட்டா சிவக்குதில்லே,

பொன் மயிலே உன் மயக்கம்,

வெட்டி வேரு வாசம்

வெடலப்புள்ள நேசம்'

 

சிருங்காரம் நாளையும் தொடரும்

K.R. Kumar

unread,
Mar 11, 2021, 10:34:52 PM3/11/21
to santhav...@googlegroups.com
அட்டஹாசம்! இலந்தையாரே1!

குமார்(சிங்கை)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDhbtFwNcDAjcaH20aTNzantc1woquxxqgjR9gtRYd0mg%40mail.gmail.com.

Subbaier Ramasami

unread,
Mar 11, 2021, 11:00:27 PM3/11/21
to santhavasantham

நண்பர்களே,

 

மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.

அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே நாட்டுப்புறப் பாடல்கள்

 உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.

அவற்றில் ஆழமான கவிச்சுவையும் உண்டு.

காதல் உண்டு. கவலையும் உண்டு

ஏக்கம் உண்டு, இனிமையும் உண்டு


சண்டை உண்டு சமரசம் உண்டு


அழகு உண்டு அழுகையும் உண்டு


சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.


இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணைத்துப் 

 பாடியிருக்கிறான். முதலிரவுக்குப் பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.

Subbaier Ramasami

unread,
Mar 11, 2021, 11:01:50 PM3/11/21
to santhavasantham
நன்றி

On Thu, Mar 11, 2021 at 9:34 PM K.R. Kumar <krish...@gmail.com> wrote:
அட்டஹாசம்! இலந்தையாரே1!

குமார்(சிங்கை)

 

சிருங்காரம் நாளையும்

--

Subbaier Ramasami

unread,
Mar 12, 2021, 11:20:17 PM3/12/21
to santhavasantham

காதலன்  ஆற்றில் ஏங்கோ ஓர் இடத்தில் குளிக்கிறான். அது அவளுக்குத் தெரியும். இவள் குளிப்பதோ பெண்கள் படித்துறையில். அவனைத் தொடவேண்டும் என ஆசை. அதற்காக என்ன செய்கிறாள் தெரியுமா, சந்தனத்தை அரைச்சு அதைத் தண்னியிலே விடுகிறாள். அதுபோய் அவள் காதலன் நெத்தியில் ஒட்டிக்கொள்ளவேண்டும் என்ற ஆசை

 

ஓடுகிற தண்ணியிலே

ஒரசிவிட்டேன் சந்தனத்த

சேர்ந்துச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

 

ஆற்றுக்கு அக்கரையிலே அவளுடை அத்தை மகன் இருக்கிறான். அவ பாடுகிற சத்தம் கேட்கிறது. அவனுடைய வாசனையை அவள் உணர்கிறாள். அவன் பாடலும் அவனுடைய வாசனையும் அவளைக்  கற்பனை உலகுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. அவனோடு மானசீகமாக் கூடுகிறாள்.அவள் கர்ப்பமானதைப் போலக் கனவு

 

. “ஆத்துக்கு அக்கரையில் - எனக்கு

அத்தை மகன் ஒருவனுண்டு - அவன்

வாய்திறந்து பாடிவிட்டான் - அந்த

வாடை பட்டுச் சூலானேன்”

ஒரு பெண்  ஒரே சமயத்தில் இரண்டு செயல்களைச் செய்கிறாள்.  அவன் மேலே ஆசை வைத்து முதல் செய்கை.  அது திருமணத்தில் முடிய வேண்டும் என்பது ஆசை. அப்படி முடியாவிட்டால் என்ன செய்வது?

பாரதி சொன்னது போல

காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

அவளுடைய இரண்டாவது செயல் என்ன தெரியுமா. ஆசை வைத்த அதே சமயத்தில் அரளியையும் நட்டுவைக்கிறாள். காதல் நிறைவேறா விட்டால் அரளியை அரைத்துச் சாப்பிட்டு இறந்துவிடுவாள் என்பது குறிப்பு.

 

ஆசை வச்சேன் உம்மேல

அரளிவச்சேன் கொல்லையில”

என்று பாடுகிறாள்.

அவள் அவன் கூப்பிட்டால் வருவாளா என்று தெரியாது. ஆனால் சாடை மாடையாக க் குறிப்புக் கொடுக்கிறாள். இழுத்தடிக்கிறஆள். எனவே அவன் கேட்டே விடுகிறான்

கானக் கரிசலிலே

... களையெடுக்கும் பெண்மயிலே!

நீலக் கருங்குயிலே!

... நிற்கட்டுமா போகட்டுமா?

ஒரு பெண் காரைவீட்டுத் திண்ணையிலே கரிக்கு மஞ்சள் அரைத்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது அவள் காதலன் அவ்வழியாக அவளைப் பார்த்துக்கொண்டே செல்லுகிறான். அவளால் இழுத்து அரைக்க முடியவில்லை

 

காரைவீட்டுத் திண்ணையிலே

கறிக்குமஞ்சள் அரைக்கையிலே

என்ன பொடி போட்டானோ
இழுத்தரைக்க முடியலையே!

 

முறையற்ற உறவு கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பற்றிய பாடல். அவன் அவளோடு கூடிக்கலப்பதற்காக அவளைப் பார்க்க வருகிறான். அவள் வீட்டுக்கு விலக்கு என்று தெரிகிறது. அவன் முகம் தொய்ந்து போகிறது. அதற்கு அந்தப் பெண் கூறும் துணிச்சலான கூற்று

 

 

பெண்:
மச்சானே மன்னவரே
மனசிலயும் எண்ணாதிங்க
சூதமாகிப் போறாமிண்ணு
சூசகமாச் சொல்லாதிங்க

ஆண்:
ஆத்தோரம் நாணலடி
அதன் நடுவே செய்வரப்பு
செய்வரப்புப் பாதையிலே
தேனமிர்தம் உண்கலாமோ?

பெண்:
முத்துப்பல்லு ஆணழகா!
மெத்த மையல் கொண்டவரே!
ஆத்தில் தலைமுழுகி-உங்க
ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.

அடுத்து வருவது கொஞ்சம் விரசமாகத் தோன்றினாலும் அந்தப்பெண்கொடுக்கும் சாட்டையடியை இரசிக்கலாம்

அவன்:

மார்பளவு தண்ணியிலே
மன்னி மன்னிப் போற பெண்ணே-உன்

மார்புக்கு மேலாடும்
மாதுளங்காய் என்ன விலை?

அவன்

மாதுளங் காயுமில்லே

மருக்காலங் காயுமில்லே
பாலகன்தான் குடிக்கும்
பால்குடண்டா சண்டாளா?

காதல் வாழ்க்கையிலே அலர் தூற்றுதல் என்று உண்டு. ஊரார் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அலர் தூற்றுவார்கள். இது சங்க இலக்கியத்திலும் இருக்கிறது

இதோ ஒரு பாட்டு

ஆலமரம் உறங்க -
அடிமறத்துக் கிளியுறங்க
உன்மடிமேல் நான் உறங்க
உலகம் பொறுக்கலயே

தொடரும்

 

Siva Siva

unread,
Mar 13, 2021, 10:28:09 AM3/13/21
to santhavasantham

 http://www.tamilvu.org/ta/courses-degree-a061-a0612-html-a0612102-10425


புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை இலக்கியங்களாகும். பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், புராணங்கள் முதலானவை இவ் வகைமைக்குள் இடம் பெறும் கூறுகளாகும்.

.....

.....

நாட்டுப்புறப் பாடல்களை, ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், காட்டு மல்லிகை, மலையருவி, காற்றில் மிதந்த கவிதைகள் என்று தமிழ் நாட்டுப்புறவியலறிஞர்கள் பலவாறு அழைக்கின்றனர். இப்பாடல்கள் யாரால் பாடப்பட்டவை என்று கூற இயலாது.

=======


மேற்காணும் விஷயங்களைப் பார்க்கும்பொழுது எழும் சில ஐயங்கள்!


புலவர்கள் மாறுவேஷம் போட்டுக்கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் எழுத இயலுமா

அப்படியே இயன்றாலும் அது பொருந்துமா?

அப்படி ஒருவர் பாடல் எழுதினாலும், அப்படி எழுதும் பாடல்களை இன்னார் எழுதியது என்று போட்டுக்கொள்வது வழக்கமா?


வி. சுப்பிரமணியன்

adi

unread,
Mar 13, 2021, 11:01:26 AM3/13/21
to santhav...@googlegroups.com
<<<புலவர்கள் மாறுவேஷம் போட்டுக்கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் எழுத இயலுமா? >>>>

எதற்கு மாறுவேஷம் போட வேண்டும்? 


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 13, 2021, 1:31:09 PM3/13/21
to santhavasantham
மாறுவேஷம் என்பதை நீங்கள் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. சிவசிவாவின் கேள்வி மிக முக்கியமானது.

நாட்டுப் பாடல்கள் எழுதப்படாத பாடல்களாகத் தொடங்கப்பட்டவை பின்னர் எழுதி வைக்கப்பட்டவை ஆகிவிட்டன. அதன் பின்பு பலர்  இயற்கையோடு யைன்ந்த அப்பாடல்களுடன் தம் பாடல்காளையும் சேர்த்த்க்கொண்டார்கள்.  சிலர் நாட்டுப்புறப் பாடல்களின் பாணியிலேயே எழுதத்தொடங்கினார்கள். அமரர் கொத்தமங்கலம் சுப்பு நாட்டுப்புறப் பாடல் வகைகளே பாடினார். அவை பிரபலமாயின. பிறகு இப்பொழுது நாட்டுப்புறப்பாடல்கள் இலக்கியம் என்றே புதுவகை தோன்றிவிட்டது. பல பிரபலமான திரையிசைப் பாடல்கள் நாட்டுப்புறபப் பாடல்களை அடியொற்றியே பாடப்பட்டன. நானே பல பாடல்கள் நாட்டுப்புறப் பாடல் வகைகளிலே பாடியிருக்கிறேன். பாரதி பாடியிருக்கிறேன்.

இங்கே நாம் நாட்டுப்புறப்பாடல்வகைகாளிலே கவிதை இயற்றவேண்டுமென்று சொல்வது எழுதப்படாத  நாட்டுப்புறப்பாடல்வகைகளை மட்டுமல்ல. அவற்றைப் பின்பற்ரிப் பின்னர் இலக்கியமாக வளர்ந்தவைகளையும் தான்.

நாட்டுபுறப் பாடல்களிலே எதுகையை விட மோனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. 

பலவகையான சந்தங்களில் அவர்கள் பாடியிருக்கிறார்கள்.   அங்கே ஒருமைப்பன்மை மயக்கம் இருக்கும்

adi

unread,
Mar 13, 2021, 2:47:03 PM3/13/21
to santhav...@googlegroups.com
இணையத்தில் எழுதும்போது என் வரிகள் என் குரலில் உள்ள பணிவைக் காட்டுவதில்லை. அதனால் என் எழுத்துக்கள் வேறு தொனியில் தெரியலாம். இங்குள்ள நண்பர்கள்  என் எழுத்துக்களில் ஆணவம், 'நாட்டாமை தொனி' தெரிந்தால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது என், சரியாக எழுதத் தெரியாத,  கையாலாகாத்தனம்.

அடுத்து சிவசிவாவிடம் நான் கேட்ட கேள்விக்கான என் எண்ணத்தை எழுதுகிறேன்.
புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்காக தனியாகப் புனைப் பெயரில் எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படி எழுதினாலும் அதில் பெரிய அர்த்தம் ஏதுமில்லை.  இதைத்தான் ‘மாறுவேடம்’ என்ற பொருளில் புரிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்டது தவறென்றால், சிவசிவாதான் இதை விளக்க வேண்டும். (ஆனால் ஐயா பாதி நேரம் என் மடலைக் கண்டு கொள்ள மாட்டார்)😀😀😀
 
அடுத்து சிவசிவாவின் இன்னொரு முக்கிய கேள்வி:

<<< புலவர்கள் மாறுவேஷம் போட்டுக்கொண்டு நாட்டுப்புறப் பாடல்கள் எழுத இயலுமா?
அப்படியே இயன்றாலும் அது பொருந்துமா?
அப்படி ஒருவர் பாடல் எழுதினாலும், அப்படி எழுதும் பாடல்களை இன்னார் எழுதியது என்று போட்டுக்கொள்வது வழக்கமா?>>>
 
நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி முனைவர் பட்டம் பெற்றவர் ஆராய்ந்து எழுதினாலும் , அதைப் பற்றிய அடிப்படை உண்மை மிக எளிமையானது.
 
கிராம மக்கள் தங்கள் வட்டார மொழியில் தங்கள் மனத்தில் உள்ளதை பாட்டாகப் படிப்பது  மிகப் பழைய விஷயம்.
அதில் தற்செயலாக எதுகை மோனையுடன் அமைவதும், இலக்கணத்தில் அமைவதும் கூட இருக்கும்.
எதுகை மோனை இல்லாத நாட்டுப்புறப் பாடல்களும் உண்டு.
ஆனால் இவை எல்லாம் மக்களுக்குப் பிடித்தால் பரவ ஆரம்பிக்கும். வெகு காலத்துக்குப் புழக்கத்தில் இருக்கும்.
 
வாச நெல்லு சோறாக்கி
மீனு குழம்பு ஊத்திக்கிட்டு
நக்கி நக்கி தின்னலாம்
நாளைக்கு
நீச்சத் தண்ணி கொஞ்சமிருக்கு
எடுத்துக்க

கிட்டத்தட்ட மேலுள்ள வரிகளில் நான் பாட்டு கேட்டிருக்கிறேன். இதில் எதுகை மோனை பெரிதாக இல்லை. ஆனால் பாட்டு செம ஹிட்டு. சினிமாவில் அல்ல, கிராமத்தில்.
 
ஆக நாட்டுப்புறப் பாட்டு நம் மனத்திலுள்ள உணர்வு . ஏப்பம் போல வெளிவருவது. தடுக்க முடியாது. சில ஏப்பங்கள் கச்சேரி வரை போகும். சில காத்தோடு போய்விடும்.
அடுத்து , புலவர்கள் தாராளமாக நாட்டுப்புறப் பாடல் எழுதலாம். இன்னும் கேட்டால் நாட்டுப்புறப் பாட்டுதான் இயல்பாக எழுத முடியும்.
ஏனென்றால்….


(நான்  எழுதியது உபயோகமாயிருந்தால், இழைக்குத் தொந்தரவாக இல்லை என்றால், அடுத்த இழையில் என் கருத்தைச் சொல்கிறேன்)
 
 
 
 
 
 


--

You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vivek Bharathi

unread,
Mar 13, 2021, 3:31:14 PM3/13/21
to santhav...@googlegroups.com
ஆஹா... நாட்டுப்புற பாடல்கள் பற்றி இலந்தை ஐயா விளக்கிவரும் விதம் பரவசமாக இருக்கிறது. தினமலர் பொங்கல் மலருக்காக நான் கூட மக்களிசைப் பாடல்கள் பற்றி சிலரிடம் பேட்டி கண்டு குறிப்பெடுத்தேன். குரு உத்தரவு கிடைத்தால் அவற்றை இனி கட்டுரையாகவும் இங்கே இட ஆவலாக உள்ளேன். 

தொடர்ந்து கற்கலாம்

Siva Siva

unread,
Mar 13, 2021, 10:44:51 PM3/13/21
to santhavasantham
மாறுவேஷம் என்றது புனைபெயரை அன்று. ஒருவர் தம் இயற்கையை மாற்றிக்கொண்டு எழுதுவது குறித்தது.
ஒரு நடிகர் (சினிமா / நாட்டிய) பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாஷை பாவனைகளை மேற்கொள்வது போல் ஒரு புலவர் செயற்கையாக வேறு மொழிநடையில் எழுதுவது குறித்தது.

Subbaier Ramasami

unread,
Mar 13, 2021, 11:24:51 PM3/13/21
to santhavasantham
 சிவசிவாதான் இதை விளக்க வேண்டும் சிவசிவாதான் இதை விளக்க வேண்டும்

ஆக, நான் விளக்க முற்பட்டது தவறென்கிறீர்கள்.  சந்த வசந்தத்தில் பொதுவாக இடுகையில் வினாத் தொடுத்தால்  எவரும் பதிலிறுக்கலாம். குறிப்பாக ஒருவர் விடையிறுக்க விரும்பினால்  அவருக்குத் தனி அஞ்சல் அனுப்பிக் கேட்டுக்கொள்ளலாம். அல்லது பொது இடுகையில் இதற்கு இன்னார் பதிலிறுக்க வேண்டுகிறேன் என்று எழுத வேண்டும். தயவு செய்து சந்தவசந்தத்தின் நெறிமுறையைப் பின்பற்றுங்கள்.



On Sat, Mar 13, 2021 at 1:47 PM adi <adipure...@gmail.com> wrote:
இணையத்தில் எழுதும்போது என் வரிகள் என் குரலில் உள்ள பணிவைக் காட்டுவதில்லை. அதனால் என் எழுத்துக்கள் வேறு தொனியில் தெரியலாம். இங்குள்ள நண்பர்கள்  என் எழுத்துக்களில் ஆணவம், 'நாட்டாமை தொனி' தெரிந்தால் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது என், சரியாக எழுதத் தெரியாத,  கையாலாகாத்தனம்.

அடுத்து சிவசிவாவிடம் நான் கேட்ட கேள்விக்கான என் எண்ணத்தை எழுதுகிறேன்.
புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களுக்காக தனியாகப் புனைப் பெயரில் எழுத வேண்டிய அவசியமில்லை. அப்படி எழுதினாலும் அதில் பெரிய அர்த்தம் ஏதுமில்லை.  இதைத்தான் ‘மாறுவேடம்’ என்ற பொருளில் புரிந்து கொண்டேன். நான் புரிந்து கொண்டது தவறென்றால், சிவசிவாதான் இதை விளக்க வேண்டும். (ஆனால் ஐயா பாதி நேரம் என் மடலைக் கண்டு கொள்ள மாட்டார்)😀😀😀
 

Virus-free. www.avg.com

adi

unread,
Mar 14, 2021, 5:06:23 AM3/14/21
to santhav...@googlegroups.com
<<< சிவசிவாதான் இதை விளக்க வேண்டும் சிவசிவாதான் இதை விளக்க வேண்டும்

ஆக, நான் விளக்க முற்பட்டது தவறென்கிறீர்கள்.>>>

எப்படி சார் உங்களுக்கு இப்படி எல்லாம் புரிகிறது?
அந்த எண்ணம் கூட எனக்கில்லையே.
மேலும் நீங்கள் எழுதுவதும் எனக்குப் பிடிக்குமே. 

சிவசிவா  "மாறுவேடம்" என்று எதைச் சொல்ல வருகிறார் என்று கேட்டேன் .  அங்கே ' சிவசிவா'தான் சொல்ல வேண்டும் என்பதன் பொருள் , நான்புரிந்து கொண்டதை வைத்து மேற்கொண்டு பேசுவது சரியில்ல என்பதே. அவர் சொன்னப்பிறகு பேசுகிறேன் என்பதும் பொருள்.

<<<தற்கு இன்னார் பதிலிறுக்க வேண்டுகிறேன் என்று எழுத வேண்டும். தயவு செய்து சந்தவசந்தத்தின் நெறிமுறையைப் பின்பற்றுங்கள்.>>>

என்னைப் பார்த்தா இந்தச் சொல்லைச் சொன்னீர்கள். நன்று.

பேச ஒன்றுமில்லை. Already judged.

என் எழுத்துக்கள் தப்புத் தப்பாய் விளைவை ஏற்படுத்துகின்றன என்பது கண்கூடு..

நல்ல குழுமம். சான்றோர்கள். நல்ல பணி.  வயதின் காரணமாகவும், எல்லோருடனும் பேச விரும்பிய காரணத்தாலும்  ஏற்பட்ட ஆர்வகோளாறு எனக்கு. 



கடைசியாக,
முமலில் நீங்கள் பதில் மடல் இட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது என்பதே உண்மை.



முன்பு போலவே வாசகனாய் உங்கள் அனைவரின் எழுத்துக்களைக் படித்து மகிழ்வதே நல்லது.   

🙏🏻🙏🏻🙏🏻






--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

adi

unread,
Mar 14, 2021, 5:28:56 AM3/14/21
to santhav...@googlegroups.com
நீங்கள் எழுதிய  பொருளில்தான் எனக்கும் புரிந்தது. 


<<<ஒரு நடிகர் (சினிமா / நாட்டிய) பாத்திரத்திற்கு ஏற்ப நடை உடை பாஷை பாவனைகளை மேற்கொள்வது போல் ஒரு புலவர் செயற்கையாக வேறு மொழிநடையில் எழுதுவது குறித்தது.>>>

அது செயற்கையல்ல என்பதற்கான காரணத்தை எழுத இருந்தேன். அதற்குள் ஏதேதோ நிகழ்ந்து விட்டது.

நேரில் என்றாவது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால், பேசுவோம்.🙏🏻


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 14, 2021, 6:45:35 AM3/14/21
to Santhavasantham
அங்காளம்மன் கோயிலுக்கு பொங்கலிட நான்போனேன்!
பொங்கப் பொட்டி தூக்கச் சொன்னாளே!- ஏம் பொண்டாட்டி
பொங்கப் பொட்டி..  
ஆறுமாசக் கீரத்தண்டு
நிரு வத்திப் போகுதுன்னு
அதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே- எம்பொண்டாட்டி
இதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே!
- கேட்ட பாட்டு.- புலவர் இராமமூர்த்தி. 


ramaNi

unread,
Mar 14, 2021, 12:49:48 PM3/14/21
to சந்தவசந்தம்
புகழ்பெற்ற சிங்களப் பாடல் வரிகள்

சுராங்கனி ... சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலு கெனா வா

மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே..

https://vanampaadi.wordpress.com/2009/01/31/சின்ன-மாமியே-உன்-சின்ன-மக/

சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ படிக்க சென்றாளோ
அட வாட மருமகா… என் அழகு மன்மதா
பள்ளிக்கு தான் சென்றாள் படிக்க தான் சென்றாள்

*****


 

Subbaier Ramasami

unread,
Mar 14, 2021, 1:19:53 PM3/14/21
to santhavasantham
சிருங்காரம்- நிறைவு

இன்னொரு பாடல். இலக்கிய நயம் மிகுந்த பாடல்

'நாலு மூலை வயலுக்குள்ளே
நாத்து நடும் குள்ளப் பெண்ணே
நாத்து நடும் கையாலே – என்னை
சேத்து நடலாகாதோ'

சில திரைப்படப் பாடல்கள் எங்கிருந்து வந்துள்ளன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்தால் விளங்கும்

வெத்திலைத் தீனழகா
நித்தம் ஒரு பொட்டழகா
மைக் கூட்டுக் கண்ணழகா
மறக்க மனம் கூடுதில்லை

இஞ்சி இடுப்பழகா
எலுமிச்சங்காய் மாரழகா
மஞ்சச் சிவப்பழகா
மறக்க மனம் கூடுதில்லை

ஆலிலை போல் அடி வயிறு
அரசிலை போல் மேல் வகிடும்
வேப்பிலை புருவக்கட்டும்
விடவும் மனம் கூடுதில்லை

காத்தடிச்சுத் தாழை பூக்க
காத வழி பூ மணக்க
பூவார வாசத்துல
போக மனம் கூடுதில்லை

ஒருநாள் மாலையிலே வீட்டை விட்டுப்போன காதலன் அன்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவன் முதல்நாள் இரவில் அணைச்ச வாசம் இன்னும் கையில் இருக்கிறது

வந்தா வழி மணக்கும்
வாச லெல்லாம் பூ மணக்கும்
கட்டி அணைஞ்ச கையி
எட்டு நாளும் பூமணக்கும்

ஆனால் அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. அவன் வேறு எவளிடமாவது போயிருப்பானோ என்று சந்தேகம். அது பாடலாக வெளிப்படுகிறது. ஜெயதேவர் பாடியுள்ள கீத கோவிந்த்தில் இராதா கண்ணன் வேறு எந்தப் பெண்ணோடாவது கூடிக் குலாவுகிறானோ என்றுசந்தேகப்பட்டுப் பாடுவது நினைவுக்கு வருகிறது

போனா இருக்க மாட்டார்
பொழுதிருக்கத் தங்க மாட்டார்
என்ன மனசி லெண்ணி
இருந்தாரோ ராத்தங்கி

துரையே துரை மகனே
தோக்கலவார் வம்முசமே

இடை சிறுத்தச் செல்லச் சாமி
எவளெடுத்துக் கொஞ்சிறாளோ?

மொச்சிக் கொழுந்தே நீ
முழக்க முள்ள தாமரையே
அல்லி மலர்க் கொடியே
யாராலே தாமுசமோ

தெற்குத் தெருவிலேயோ
தேமலக்கா வீட்டிலேயோ
செங்கக் கட்டி திண்ணையிலோ
தங்கக் கட்டி நித்திரையே?

குலை வாழை நெல்லுக் குத்தி
குழையாமல் சோறு பொங்கி
இலை வாங்கப் போனசாமி
எவளோட தாமுசமோ?

நாலு மகிழம் பூவு
நாற் பத்தெட்டு ரோஜாப் பூவு
நானெடுத்துக் கொஞ்சும் பூவை-இப்ப
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?

இருட்டை இருட்டடிக்க
ஈச்ச முள்ளு மேலடிக்க
இருட்டுக் கஞ்சா கொடிப்புலியை
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?

எண்ணைத் தலைமுழுகி
எள்ளளவு பொட்டுமிட்டு
இலை வாங்கப் போனசாமி
எவ பிடிச்சு லாத்துறாளோ?

பொட்டு மேலே பொட்டு வச்சி
புறப்பட்டுப் போன சாமி
பொட்டு அழிஞ்ச தென்ன
போய் வந்த மர்ம மென்ன?


என்னுடைய பாடல் ஒன்றுடன் சிருக்கார வகையை நிறைவு செய்கிறேன்
ஒரு பெண்ணுக்கு ஆடிமாதக் கடைசியில் திருமணம் ஆகிறது. ஆடிமாதம் அவளைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.அவள் பார்க்கின்ற இயற்கைக்காட்சிகள் அவளுக்குத் தன் கணவனை நினைப்பூட்டுகின்றன.

இதோ அந்தப் பாடல்
கானக் குயிலு மரத்து மேலே கத்தித் தீக்குது – சோளக்
கதிரிரண்டு ஒண்ணை ஒண்ணு ஒரசிப் பாக்குது
ஆனி மாசம் எனக்கும் அவர்க்கும் முடிச்சுப் போட்டாங்க- இதோ
ஆடிமாசம் வீட்டுக்குள்ளே அடைச்சுப் போட்டாங்க
வெள்ளைப்பசு பாலைப் போல நெலவு காயுது- குப்பை
மேட்டினிலே சேவலோடு கோழி மேயுது
அள்ளி அவரு அணைச்சதெல்லாம் நெஞ்சில் சொக்குது- இந்த
ஆடிச் சனியன் போகாமலே இன்னும் நிக்குது
செவலைப் பசு கத்திக் கத்தித் தெருவில் வாடுது – ஏதோ
தெனவெடுத்து என்னைப்போல அதுவும் பாடுது
கவலைப் பட்டு என்ன செய்ய , ஒண்னும் நடக்கலே – என்னைக்
கண்டு போக் ககூட அவரு வந்து போகலே!

தொடரும்

Virus-free. www.avg.com

Virus-free. www.avg.com

Subbaier Ramasami

unread,
Mar 14, 2021, 1:22:09 PM3/14/21
to santhavasantham
நீ அங்கு எழுவதை இங்கு போட்டால்மட்டும் போதாது. இங்கிருக்கிற சிலவற்றையும் அங்கு போடவேண்டும்.

இலந்தை

On Sat, Mar 13, 2021 at 2:31 PM Vivek Bharathi <tamiludanvi...@gmail.com> wrote:
ஆஹா... நாட்டுப்புற பாடல்கள் பற்றி இலந்தை ஐயா விளக்கிவரும் விதம் பரவசமாக இருக்கிறது. தினமலர் பொங்கல் மலருக்காக நான் கூட மக்களிசைப் பாடல்கள் பற்றி சிலரிடம் பேட்டி கண்டு குறிப்பெடுத்தேன். குரு உத்தரவு கிடைத்தால் அவற்றை இனி கட்டுரையாகவும் இங்கே இட ஆவலாக உள்ளேன். 

தொடர்ந்து கற்கலாம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Virus-free. www.avg.com

Kaviyogi Vedham

unread,
Mar 14, 2021, 1:30:16 PM3/14/21
to santhavasantham
 நாட்டுப்புறம், நாட்டுக்கட்டைப்---- பாட்டு என்றாலே ஒரு பரவசம்தான்.
 எண்ணினாலே ஒரு கிக் வருதில்லே!
 யோகியர்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Mar 14, 2021, 1:59:34 PM3/14/21
to Santhavasantham
இலந்தையார்  சொந்தப்பாட்டு ,

குத்தால  மலை  மேலே  ஒரு
குறுணி  மேகங்   கொட்டுது!
கோண  மூங்கில்  இடுப்பை  வளைச்சு 
குலுங்கி  யாட்டம்  போடுது!
சித்தாத்தங்கரை  மேலே அந்தச்  
சிறுக்கி வந்து பிலுக்குறா  - அவ 
சின்னக்   கண்ணைத்  திறந்துபாத்து
என்னை  வாரி  முழுங்குறா !

நினைவில் இல்லை! கொஞ்சம் என்சரக்கும் சேர்த்தேன்  

நன்றி  புலவர் 
 

Ramamoorthy Ramachandran

unread,
Mar 14, 2021, 2:00:35 PM3/14/21
to Santhavasantham
அ.சீ.ரா பாட்டு  

M. Viswanathan

unread,
Mar 14, 2021, 10:04:42 PM3/14/21
to Santhavasantham
அன்புக் கவிவேழம் அவர்கள் பகிர்ந்து கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் அற்புதமாக இருக்கின்றன. 
எங்கள் ஊரில் கோலாட்டப் பல்லக்குக் கொண்டாட்டத்தில் பெண்கள் பாடும் கோலாட்டப் பாட்டு:

"கோலேனாக் கோலே

       பாலா லீலானாக் கோலே

       பாலவிலோச்சன லீலா விலோசன

       பால பிரபஞ்ச கோலே ....

 

       பசுவா பசுவையா

       உனக்குப் பணம்தர யாருமில்லை

       இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று

       ஏய்கிறாளே பசுவா..

 

       மழை ரொம்பப் பெய்யவேண்டும் – சுவாமி

       குளங்கள் பெருக வேண்டும்

       பூமியில் போட்டதெல்லாம்

       பொன்னாய் விளைய வேண்டும்

       பொதி ரொம்பக் காணவேண்டும்...

 

       எட்டடிக் குச்சுக் குள்ளே – சுவாமி

       எத்தனை நாளிருப்பீர்

       மச்சு வீடு கட்டித் தாரேன்

       குச்சு வீடு கட்டித் தாரேன் –சுவாமி

       மலையாளம் போய்வாரும்....   (கோலேனாக் கோலே)

  ஸ்ரீ ஜயந்தி அன்று சிறுவர்கள் தெருவில் ஒவ்வொரு வீடாகச் சென்று பாடும் பாட்டு:  

                  "ஸ்ரீ ஜயந்தி அம்பாலம்,

                  சிவராத்ரி அம்பாலம்

                   ஸ்ரீ கிருஷ்ண ராயருக்குத்

                   திருவிளக்கு எண்ணை..

                  

                   அவலிடிக்கற பொரிபரக்கற

                   அத்தைய கண்டா புஸ்....

                   அம்மையக்கண்டா டஸ்..

                   ஆனைக்காரன் பொண்டாட்டி

                   ஆட்டுக்குட்டி பெத்தாளாம்"  .....இப்படிப் போகும் அந்தப் பாட்டு.


"ஆடிச் செவ்வாய்" அன்று பெண் குழந்தைகள் ஆற்றங்கரைக்குச் சென்று குளித்துவிட்டு மிக அழகாக அலங்காரம் செய்து கொண்டு வரும் பொழுது பாடும் பாடல்:


               "ஆடிச் செவ்வாய்த் தேடிக் குளி,

                  அரைச்ச மஞ்சளப் பூசிக் குளி,

                  அரையாத மஞ்சள எனக்குத் தா...

                  தொடுத்த பூவ நீ வச்சுக்கோ

                  தொடுக்காத பூவ  எனக்குத் தா..

                  மாடப் புறா மஞ்சள் அரை

                  கோவில் குளத்தில் குளித்து வா

                  கோவிந்த ராயனை ஜபித்து வா "

 

       இப்படிப் பாடிக் கொண்டே கன்னடியன் கால்வாய் ஆண் பிள்ளைகள் குளித்துக் கொண்டிருக்கும்  படித்துறை பக்கம் வரும் பொழுது,

 

                  "ஆத்தங்கரைல குளிச்சவாளுக்கு

                        ஆயிரம் தோசை

                  வாய்க்கால்ல குளிச்சவாளுக்கு

                       வாரிக்கட்டைப் பூசை "

 

என்று உரத்த குரலில் பாடிச்செல்லும் அழகைக் காணக் கண்கள் கோடி இருந்தாலும் போதாது.


அன்பன்,

மீ.விசுவநாதன்

15.03.2021 07.34 am

 


 

Kaviyogi Vedham

unread,
Mar 15, 2021, 1:30:24 AM3/15/21
to santhavasantham
தின்னவேலிப் பாட்டிருக்க
தின்ன அல்வா எதுக்கய்யா?
ஆடிச்செவ்வாய் பாடிக்கொண்டே
 அம்மில கிலோமிளகாய்
அரெச்சுஅரெச்சுத் தள்ளலாமில்லோ?
 விசு வாழ்க
யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vivek Bharathi

unread,
Mar 15, 2021, 9:21:17 AM3/15/21
to santhav...@googlegroups.com
ஹாஹாஹா ஐயா... இங்கு எழுதுவதாகச் சொன்ன கட்டுரைக்கே அங்கு இடம் தராததால்தான் இங்கு எழுத அனுமதி கேட்டேன். வாய்ப்பிருக்கும்போது நிச்சயம் இங்கிருந்து ஏதேனும் ஒன்றை அங்கே எழுதுவேன். 

Subbaier Ramasami

unread,
Mar 15, 2021, 10:49:23 AM3/15/21
to santhavasantham
இது எனது குருதேவர் பேராசிரியர் அ.சீ. ரா பாட்டு. வெள்ளைப்பறவை நூலில் வெளியாகியிருக்கிறது. அதைப்படிக்கிற போது நெளிந்து வளைந்து அருவிவிஇழுகிற தன்மையை மனக்கண்ணில்காண முடியும் 
இந்தப் பாடல வலம்புரி ஜாண் அடிக்கடி மேடைகளில் சொல்வதுண்டு
இலந்தை

Virus-free. www.avg.com

Subbaier Ramasami

unread,
Mar 15, 2021, 10:56:48 AM3/15/21
to santhavasantham
கோலாட்டுப் பாட்டை  நான் விழாப்பாடல்களில் எழுதுவதாக இருன்ஹேன். முழுப்பாடல் கிடைக்கவில்லை. இப்பொழுது விசு போட்டது மகிழ்ச்சி. மாசி மகத்துக்கும் ஒரு பாடல் உண்டு.சிறு வயதில் கேட்டிருக்கிறேன்

மாசி மகத்திலே
மூடு பனியிலே
மாம்பூ பூத்துது
மாங்காய் காய்ச்சுது
மாநெல்லுப் போடுங்கோ
தோழிப் பொங்கா!          பொண்டுகளா என்பது பொங்கா எனச் சுருங்கும்

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Virus-free. www.avg.com

ramaNi

unread,
Mar 15, 2021, 1:25:20 PM3/15/21
to சந்தவசந்தம்
கோலாட்டப் பாடலகளைத் தொகுத்து என் பயணம் நாவலில் எழுதியிருக்கிறேன்.

தீபாவளி நாட்களில் தொடர்ந்து ஒரு வாரம் அக்ரஹாரத்தில் பெண்கள் கோலாட்டம் நடைபெறும். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது ஒர் அரிய கலை நிகழ்ச்சியாகப் பட்டது.

பள்ளிக் கூடப் பெண்கள் முதல் மடிசார் புடவை கட்டிய மாமிகள் வரை எல்லோரும் ஒன்றாகவும், தனித்தனிக் குழுக்களாகவும், அக்ரஹாரத் தெருக்களில் ஊர்வலம் வந்து, வயது வித்தியாசமின்றிக் கோலடிக்கும் ஓசை தெரு முழுவதும் கேட்கும்.

அந்த நாட்களில் அவனும் சந்துருவும் முரளியும் 'சயன்ஸ்' வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு சலிக்காமல் கோலாட்டம் பார்ப்பதுண்டு.

பட்டும் சின்னாள பட்டும்

தினுசு தினுசான உடைகளில்

ஜரிகை வரிகளில் இழைகளில்

கண்ணைப் பறிக்கும் நிறங்களில்

தெருவிளக்கில் மின்னிப் பளிச்சிட

கால்கள் அப்பழுக்கு இல்லாத

வட்டமான பாதையில் நடமிட

வண்ண வண்ண கோல்களைத்

தாங்கிய கைகள் யாவும்

ஆரங் களாகக் குவிந்தும்

தலைகளுக்கு மேலே உயர்ந்தும்

ஒன்றை ஒன்று எதிர்கொண்டும்

ஓயாத ரிதங்களில் சப்திக்க

அந்தத் தாளத்தை உள்ளடக்கி

இனிய குரலொன்று உரக்கக்

கண்ணனின் லீலைகளைப் பாட

எல்லோரும் திரும்பச் சொல்ல—


கோலேன கோலே ஏ

பாலா நீலா லா கோலே

பால பாவன லீல விலோசன

பால ப்ரபஞ்ச கோலே ஏ


சந்தன வனந்தனிலே ஏ — நாங்கள் பெண்கள்

ஷெண்பக ஒடையிலே

அந்தத் துகிலெடுத்துக் கரம்மேல்கரம் வைத்து

விளையாடும் வேளையிலே ஏ


பசுவா பசுவையா ஆ -— உமக்கு

பணம் கொடுப்பா ருமில்லை

இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று

ஏய்க்கிறாரே பசுவே ஏ!


பால் செம்பு கொண்டு ஊ -— நாங்கள் பெண்கள்

பாலென்று கூவையிலே

பாலைத் தாடி என்று க்ருஷ்ணன்

பற்களை உடைத் தாண்டி ஈ!


தயிர்ச் செம்பு கொண்டு ஊ -— நாங்கள் பெண்கள்

தயிரென்று கூவையிலே

தயிரைத் தாடி என்று க்ருஷ்ணன்

தாடையில் அடித் தாண்டி ஈ!


எட்டடிக் குச்சிக் குள்ளே ஏ — ஸ்வாமி

எத்தனை நாளிருப்பேன்?

மச்சுவீடு கட்டித் தாரும் -— ஸ்வாமி

மலையாளம் போய்வா ரேன்.

இவர்களுக்குச் சரியாக கோலாட்டத்தில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பாடி வலம் வரும் அனுவையும் வசந்தியையும் அவர்கள் திண்ணையில் உட்கார்ந்து கதை பேசியபடியே பார்த்து மகிழ்வார்கள். சமயத்தில் முரளியும் சந்துருவும் 'போர்' என்று நழுவிவிட, அவன் மட்டும் தனியாக உட்கார்ந்துகொண்டு வசந்தியை ஊக்குவிக்கும் பாவனையில் அனுவின் நடவடிக்கைகளைக் கண்கொட்டாமல் பார்த்து மகிழ்வான்.

ரமணி


Subbaier Ramasami

unread,
Mar 15, 2021, 4:39:08 PM3/15/21
to santhavasantham
எங்கள் ஊரில்

மச்ச்சுக் கட்டித்தாரும் - சுவாமி
மலையாள் வேலவரே!     என்று பாடுவார்கள்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 15, 2021, 10:34:59 PM3/15/21
to Santhavasantham
வரவர நாட்டுப் பாடல் எழுதப் பாடுபொருளே கிட்டாது போலிருக்கிறது! 😚- புலவர். 

Siva Siva

unread,
Mar 15, 2021, 10:42:49 PM3/15/21
to santhavasantham

/வரவர நாட்டுப் பாடல் எழுதப் பாடுபொருளே கிட்டாது போலிருக்கிறது! 😚- புலவர். /

அப்படியெனில் வெளிநாட்டுப் பாடல்கள் எழுதலாமே ! :)

Subbaier Ramasami

unread,
Mar 16, 2021, 11:26:33 PM3/16/21
to santhavasantham
#நாட்டுப்புறப்பாடல்கள்


நாட்டுப்புறப் பாடல் வகைகள்.- தொழிற்பாடல்கள்

எற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் எனும் பாரதியின் பாடல் பலருக்கும் தெரிந்திருக்கும்.
துலாவிலே பின்பக்கத்திலே கல்லைக் கட்டியோ அல்லது ஒரு ஆள் நின்று கொண்டோ முன்பக்கத்துல் துலாவில் நீர் இறைக்கும் போது எண்ணிக்கை தெரிவதற்காகவும் களைப்புத்தட்டாமல் இருப்பதற்காகவும் பாட்டுப் பாடுவார்கள். பாட்டுத்தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலும் போகும்.
கம்பன் கேட்ட ஏற்றப் பாட்டை நாமறிவோம்

மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே
இதோ இன்னொரு பாடல்
இறைக்கிற சாலின் எண்ணிகையைக் குறிக்கிற மாதிரி ஏற்றப் பாட்டு அமைவதுண்டு. தொடர்ந்து பாட்டுப் போகும்

முப்பதிகா ரெண்டு
முப்பதிகா மூணு
முப்பதிகா நாலு
மூக்கத்தியும் தோடும்
மேக்கத்தியா சாடை
முந்தி நட்ட சம்பா
முருகனுக்கே பொங்கல்
பிந்திநட்டா சம்பா
பெருமாளுக்கே பொங்கல்
முன்னே மலட்டாறு
என்னை மிரட்டாதோ
முப்பதிகா லாறு
முப்பதிகாலேழு
முப்பதிகா லெட்டு
முந்தின குதிரை
சென்றதாம் மதுரை
பாண்டியன் குதிரை
தாண்டுதாம் கடலை
முக்காட்டுக் காரி
வப்பாட்டி தானா
முக்காட்டை நீக்கி
முகம்பார்க்க வாரும்
நாவலரே கேளும்
கோவலனார் கதையை----- இப்படித் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்
இதைப் போலத்தான் கடலில் போகும் மீனவர்கள் ஏலேலங்கிடி ஏலோ என்று ஒவ்வொரு அடியிலும் வரும் மாதிரி பாடிக்கொண்டே துடுப்பு வலிப்பார்கள். மீனவர்களில் பலர் கிறித்துவர்களாக இருப்பதனால் ஏசு, மேரி பற்றிப் பாடுகிற பாடலாகவும் அமைவது உண்டு
மாட்டைக் கட்டி கிணற்றிலிருந்து நீரிறைப்பதற்குக் கமலை ஏற்றம் என்று பெயர். இதோ கமலை இறைப்பவரைபற்றி அவன் காதலி பாடுகிறாள். அவன் கமலையில் இறைக்கும் கிணற்றுத் தண்ணீர் இனிக்கிறதாம்
கமலை அடிப்பவன்
கமலை அலங்காரம்
கமலை மாடு சிங்காரம்
கமலையடிக்கும் மன்னாருக்குக்
கருத்த பொட்டலங்காரம்

சாலையோரம் கிணறுவெட்டி
சாஞ்ச கமலை போட்டு
இழுத்துவிடும் கருத்ததுரை
இனிக்குதய்யா கெணத்துத்தண்ணி

உப்பளத்திலே வேலை செய்கிறவன் பெண்களைக் கவர்வதற்காக வண்ண வண்ணச் சட்டை போட்டு வருகிறான். அவனைப் பாத்து ஒரு பெண் சொல்கிறாள்
சட்டை மேலே சட்டை போட்டு
சரிகைச் சட்டை மேலே போட்டு
எந்தச் சட்டை போட்டாலும்
எடுக்கணுமே உப்புப் பெட்டி
வண்டியோட்டுகிறவனுடைய மாடு சரியில்லை. வண்டியும் சரியில்லை. இரவு நேரத்தில் வண்டியோட்டினால் வண்டியிலுள்ள விளக்குக்குப் போட எண்ணெய் இல்லை. அவன் கஷ்டத்தை நினைக்கும் போது அவனுக்கு அவன் மனைவி ஞாபகம் வருகிறது தான் அங்கே அல்லாடும் போது பாவம் அவளும் ஈரப் புழுங்கலை வைத்துக்கொண்டு எப்படி அல்லாடுகிறாளோ என வருந்து கிறான்

வீட்டுடிலே சோத்துக்கில்ல
விளக்கெரிக்க எண்ணெய் இல்லை
மாட்டுக்கு வக்கில்ல
மானங்கெட்ட வண்டியடி
நடவாத மாட்டோடே
நான்படும் பாட்டோடே
ஈரப் புழுங்கலிலே
ஏன்னபாடு படுதாளோ?

முதலாளி சம்பளம் ஏத்தி கொடுக்கவேண்டு மென்பதற்காக அவரப் புகழ்ந்துபாடி சம்பளம் ஏற்றிக்கொடுக்கப் பாடுகிறார்கள்.

வீடு ரெண்டும் காரவீடு
வேட்டி ரெண்டும் வெள்ளை வேட்டி
இரக்கமுள்ள புண்ணியர்க்குப்
பிறக்கிறது ஆண்குழந்தை

சம்பளமும் கட்டுதில்லைே
சாதியுள்ள மாணிக்கமே
எங்க இரக்கம் பாத்து
ஏத்த கூலி போடுமையா

பொழுது அடைஞ்சிருச்சே
பூமரம் கருத்திருச்சே
இன்னம் இரங்கலையோ
எசமானே உங்கள் மனம்

தொடரும்

Ramamoorthy Ramachandran

unread,
Mar 17, 2021, 5:36:11 AM3/17/21
to Santhavasantham
எண்ணம் பூரா அவளே!- நான்
என்னசெய்வேன், இவளே!

வண்ணம் சிவப்பு என்றார்- அவள்
வானக் கருப்பு தானே!

திண்ணைக்குள்ளே ஜன்னல் -அவ சிரிப்பு வான மின்னல்!

பண்ணையாரு வீட்டில்- உள்
பக்கமாடம் இருப்பு!

பாட்டுப்பாடி  நின்னா - அவ
பார்வை தாழப் பாக்கும்!

நாட்டில் பல வீட்டில்- அந்த 
நாயகிபேர் கேக்கும்!

பூவைக் கண்டா சிரிப்பா- சூடப்
பொலிவில் மேலும் ஜொலிப்பா!

பொங்கல் வெச்சா பாப்பா - அத
பிள்ளைக் கெல்லாங் குடுப்பா!

மாரி காளி பொன்னி பாஞ்
சாலி நீலி எசக்கி  -என 

யாரு கூப்பிட்டாலும் -அவ 
பேரதுதா னென்பாள்! - 

எண்ணம் பூரா அவளே! - இங்க 
எதுவுமவள் அருளே!

Kaviyogi Vedham

unread,
Mar 17, 2021, 9:46:23 AM3/17/21
to santhavasantham

Subbaier Ramasami

unread,
Mar 17, 2021, 11:31:37 AM3/17/21
to santhavasantham
அருமை புலவரே!

நாட்டுப்பாட்டின்ன் தாடிப்பத்ரி சீலை  மெட்டில் இருக்கிறது

Virus-free. www.avg.com

Subbaier Ramasami

unread,
Mar 17, 2021, 1:42:49 PM3/17/21
to santhavasantham

கடலையையை வண்டியில்  ஏற்றிக் கொண்டு சந்தைக்கு விற்கச் செல்லும் கணவன் சொல்லுகிறான்:

 

கடலை பிடிச்சவண்டி
கடகடன்ணு போகும் வண்டி
கடலை விலையானால்
கடயம் தட்டிப் போடுறனே

நீண்ட நேரமாகியும் கணவன் திரும்பி வரவில்லை

திரும்பிவரும் வஒரு வண்டிக்காரிடம் மனைவி கேட்கிறாள்

தெற்கத்தி வண்டிக் காரா
திருநெல்வேலி வியாபாரி
என்சாமி வண்டிஎதும்
ஏதிரே வரப் பாத்தியளா?

 

வண்டிக்காரன்
அச்சு ஒடிஞ்ச வண்டி
ஆரக்கால் போன வண்டி
அட்டை கழன்ற வண்டி
பட்டுக்கிட்டான் உன் புருஷன்

 

கணவன் பாட்டுப்பாடிச் சம்பாதிப்பவன். அவனைப்பத்தி மனைவி பெருமையாகச் சொல்கிறாள்

மல்பீசு வேட்டிகட்டி
மத்தாளம் கையெடுத்து
விருத்தங்கள் சொல்லிவந்தா
வீதியிடம்  கொள்ளாதே

ஆசாரி மடத்துமேலே
அதிகச் சத்தம் சாமிச்சத்தம்
தொண்டயும் கம்மிராம
சுக்குத்தண்ணி போட்டுத்தாரேன்

 

ஏண்டா  நேரத்திலே  வண்டியைக் கொண்டு வரவில்லை என்று கேட்ட முதலாளியிடம் வண்டிக்காரன் சொல்வது. வண்டியும் மாடும் முதலாளிக்குச் சொந்தம்

மாடும் வயதாளி
மாட்டுக்காரன் குமராளி

நானுமொரு நோயாளி
நடகுதில்லே முதலாளி

ஈழத்தில் தேயிலைத் தோட்த்தில் வேலைசெய்யும் பெண்கள் பாடும் பாட்டு. இருட்டிய பிறகும் கங்காணி வேலையை நிறுத்துவதில்லை

 

தண்ணி கறுத்திரிச்சு
தவளைச் சத்தம் கேட்டுரிச்சி
புள்ளை அழுதிரிச்சி
புண்ணியரே வேலைவிடும்

 

கடலுக்குச் சென்ற கணவன் விசிலடித்துத் தன் வருகையைத் தெரிவிப்பானாம். நெடுந்தொலைவு கேட்குமாம் அச்சத்தம்

எல்லோரும் உசுலடிச்சா
காதுருட்டும் கண்ணுருட்டும்

என் சாமி விசிலடிச்சா

தூத்துக்குடி தூள் பறக்கும்.

 

கடலுக்கு மீன்பிடிக்கப் போனவன் திரும்பவில்லை. அவன் மனைவி கடர்கரையில் காத்து நின்று பார்த்து விட்டு வீடு திரும்புகிறாள். ஹன் கணவன் த்ண்னி போட்டுவிட்டு எங்கே வீட்டை மறந்து விடுவானோ என்று வீட்டு அடையாளத்தையும் சொல்லுகிறாளாம்

 

கப்பல் வருகுதின்னு
கடர்கரைக்குப் போயிருந்தேன்
கப்பல் வரவுமில்லை
கடர்கரையில் ஆசையில்லை

கெண்டை கொண்டு கால்நிறுத்தி
கெளுறுகொண்டு வலைபோட்டு
அயிரைகொண்டு மேய்ந்திருக்கும்
அதுதான்யா நம்ம வீடு


கொழும்புச்சீமைக்குப் போய்ப் பிழைக்கலாம் எனப் பேசுகிறார்கள்

மானத்திலே மழையுமில்லை
மழைபொழியக் காலமில்லை
கூடிமாடிப் பேசுங்கடி
கொழும்புச்சீமை போய்ப் பிழைப்போம்

 

திருடுவதும் ஒரு தொழில்தான். திருட்டுத்தொழிலையும் திருடர்களையும் பற்றிப் பல நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.

திருநெல்வேலிச் சீமையில் ஜம்புலிங்கம் என்று ஒரு திருடன் இருந்தான். செல்வரிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு அள்ளிக்கொடுத்தவன். சொல்லிவைத்துக் கொள்ளையடிப்பானாம். அதனாலே அவ்வளவு புகழ் பெற்றவன். அவனப் பற்றித் தெருக்கூத்துப் பாட்டுகளும் நாட்டுப்பாட்டுகளும் நிறைய உண்டு

 

ஜம்புலிங்கம்

மாந்தோப்புக் குள்ளேபோயி
மலையாளம் எல்லாம்பேசி
தென்னந்தோப்புக் குள்ளே போயி
செந்தமிழும் நல்லாப்பேசி
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்

 எஃப்பே பியே படித்து

எப்போதும் இங்க்லீஷ்பேசி
தப்பாமே தாய்பாஷையும்
சிப்பாய்போலே தான்படித்து
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்

ஆளிலே அழகானவன்
ஆசாரப் பேச்சானவன்
தோள்கள் பருத்த மன்னன்
தொடையுருண்டு திரண்ட மன்ன ன்

வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்

முறுக்கிவிட்ட மீசையோடே
முன்னம்பல் வரிசையோடே
மினுக்கிவைத்த கத்தியோடே
மின்னுங்கையில் வெடிகளோடே
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்

 தாய்பிள்ளை எல்லாம் விட்டுத்

தன்வீட்டையும் கூடவிட்டுத்
தர்மத்தை மனசில்வச்சுத்
தைர்யத்தைக் கையில்பிடித்து
வாரார் சொக்கத் தங்கம் – நம்ம
நாடார் ஜம்புலிங்கம்

 

திருடன் பாட்டு

தண்டை சிலம்பு சலசலங்க

தாராபுரம் நங்கை நடந்து வாடி மங்கை
மாமன் நான் கூட வாரேன்

மத்தியான வேளையிலே
மாமன் செய்த கூத்தையெல்லாம்
மரியாதையாய்க் கேட்கையிலே
தாடிப்பத்திரிசீலை- இழுத்துப்போத்தடி மேலே

 

எண்டப் புளி ரோட்டு வழி
இடைவாழைக் காட்டுக்குள்ளே
திண்டுமுண்டு செய்தகதை
செம்மையாநீ கேட்கையிலே
தாடிபத்திரிசீலை இழுத்துப் போத்தடி மேலே

 

அம்பது கள்ளர்களுக்கு
அதிகாரியா நானிருந்தேன்
அம்பதும் என்னைப் பார்த்துட்டா
அடிபணிந்து நிற்கவேணும்

தாடிப்பத்திரி சில்லை இழுத்துப் போத்தடி மேலே

 

இன்னொரு திருடன் தன் சாமர்த்தியத்தைப் பேசுகிறான்

 

பறங்கிமலை பல்லாவரம்
பன்றி மேய்ச்சவனே- லோட்டா

கூழ் குடிச்சவனே- துண்டு
பீடி அடிச்சவனே

சீப்பு விக்கும் சென்னையிலே
பறக்குதே கருடன் – உலகத்திலே
ஆறாம் நம்பர்த் திருடன் பாடவந்த
கண்தெரியாக் குருடன்

கன்னக்கோலைக் கையிலெடுத்தால்
கட்டிடம் நாசம்- டெலிபோன்
என்னோடே பேசும் -போலீசு
என்மேலே நேசம்

 

கத்திக்குத்து பாணாவந்தால்
கைதேர்ந்த கேடி- சென்னையிலே
பேர்போன ரவுடி -வந்தாலும்
ஜெயிப்பேன் கில்லேடி

 

தொடரும்


Virus-free. www.avg.com

Subbaier Ramasami

unread,
Mar 19, 2021, 3:11:02 PM3/19/21
to santhavasantham

 

ஒரேயொரு வயலை வைத்திருக்கிறாள். அதில் நாத்து நடும் பெண்கள் விலகி விலகி நடுகிறார்கள். அவர்களைப் பார்த்து வயலுக்குச் சொந்தக்காரி சொல்கிறாள். அவர்களைப் புகழ்ந்துகொண்டே செறுத்துப்போடுமாறு(நெருக்கி) கெஞ்சுகிறாள்

 

நாலு மூலை வயலுக்குள்ளே

நாத்து நடும் பொம்பிளே
நானும் கொஞ்சம் ஏழையட்
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
நண்டு சாறு காய்ச்சிவிட்டு
நடு வரப்பில் போறபெண்ணே
தண்டைக் காலு அழக் கண்டு
கொஞ்சுரானாம் அஞ்சுமாசம்
நானும் கொஞ்ச ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு
பெண்டுகளே பெண்டுகளே
தண்டு போட்ட பெண்டுகளே- உன்
கொண்டை அழகைக் கண்டு
கொஞ்சுரானாம் ஆரு மாசம்
நானும் கொஞ்சம் ஏழையடி
நடவு கொஞ்சம் செறுத்துப் போடு

 

காரை வீடு கட்டச் சுணாம்பு அரைப்பதுண்டு. சுண்ணாம்பு இடிப்பதுண்டு. சில சமயங்களில் பாதம் புண்ணாகிப் போகும்

சுண்ணம் இடிப்பவள் பாடும் பாட்டு

 

காலையிலே என்சாமி
வந்தோம் நாங்க வந்தோம்

காலுப்புண்ணு என்சாமி
நோவுதுங்க நோவுதுங்க

நானிடிக்கும் என்சாமி
நல்சுண்ணாம்பு நல் சுண்ணாம்பு
நல்லமெத்தெ என்சாமி
கட்டலாமே கட்டலாமே
புண்ணடிக்கும் என்சாமி
உதுச் சுண்ணாம்பு புதுச்சுண்ணாம்பு
புதுமெத்தெ என்சாமி
கட்டலாமே கட்டலாமே
தொட்டிலிலே என்சாமி
போட்டபிள்ளை போட்டபிள்ளை
தூக்கிப் பார்க்க நேரமில்ல

நேரமில்ல நேரமில்ல

என்னைப் பார்த்துப் போடவேண்டாம்
புண்ணைப் பார்த்துக் கூலிபோடு

 

குருவிக்கார் பாட்டு. அவர்களின் தொழில் பற்றிப் பாடுகிறார்கள்

 

த திம் மிதா குடதகதா- தக
தித்தாரித்த கிடதக – ததிமி

குருவிக்காரர் நாங்களய்யா – எந்தக்
கோணத்திலும் குடியிருப்போம்
வேங்கைப் புலி செந்நாய்
வேகச்சிறுத்தை ஓநாய்
நாங்க பிடிப்போம்- த திம் மிதா
கூவிவரும் குள்ளநரி
கோனாயி நொள்ள நரி
கல்லின்கீழ் மேஞ்சுவரும்
கல்ல மொசல் பில்ல மொசல்
கண்டு பிடிப்போம் – மார்… ரோ
காடை கௌதாரி மைனா
கானாங்க்கோழி குருவிகளாம்
கவணால் அடிச்சிடுவோம்-

கணக்காப் பிடிச்சிடுவோம்  த திம் மித
அண்டத்தில் வலையைக் கட்டி
ஆகாயம் பறந்துவரும்
ஆண்கழுகு பொண்கழுகு
ஐயா பிடிச்சிடுவோம் -  மார் … ரோ
அல்லடா தில்லாலே டப்பா
அலுக்கு குலுக்கு டப்பா
செம்மை குள்ளத்தாரா சிந்து
செளித்த தஞ்சாவூர் முந்து – ததிம்மிதா

 

ஓத்தில் துடுப்புத் தள்ளிக்கொண்டு போகிறவர்கள் பாடும் பாட்டு

 

முதலாள்-  அடி பூவே பரிமளமே – லே லங்கடி லேலே
2வது ஆள்:  லே லங்கடி லேலே
1-  நா போய்வரட்டா எங்கடமே- லே லங்கடி லேலே
2- ஆசப் பரிமளமே லே லங்கடி லேலோ
1- அய்ய லேலங்கடி லேலே
2 நேத்தரச்ச சந்தனமே லே லங்கடி லேலோ

1 சந்தன வாdaiயம்மா - லே லங்கடி லேலோ

2- அம்மா லே லங்கடி லேலோ

1 தனி வாடை வீசுதடி - லே லங்கடி லேலோ

2 குங்கும வாடையடா- லே லங்கடி லேலோ
1 அய்யா லே லங்கடி லேலோ
2 குளிர் வாட வீசுதடா - லே லங்கடி லேலோ
1 வீசுன வாடைரெண்டும் லே லங்கடி லேலோ
2  குளிச்ச மஞ்ச வாசனைடா லே லங்கடி லேலோ

இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்

M. Viswanathan

unread,
Mar 19, 2021, 8:56:18 PM3/19/21
to Santhavasantham
இதுபோன்ற பாடல்களை நேரில் காத்து கொடுத்துக் கேட்டவர்கள் பெரும் பாக்யவான்கள். பகிர்ந்து கொண்ட திரு. கவிவேழம் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்
20.03.2021 06.25 am 

M. Viswanathan

unread,
Mar 19, 2021, 11:16:28 PM3/19/21
to Santhavasantham
காது கெடுத்துக் கேட்பவர்கள்.

Subbaier Ramasami

unread,
Mar 20, 2021, 1:25:35 AM3/20/21
to santhavasantham
காத்துக் கொடுத்துக் கேட்பவர்கள்  என்பதைக்  காத்துக் கேட்பவர்கள் கொடுத்துக் கேட்பவர்கள் என்று பிரித்தால் காத்திருந்து பொருள் கொடுத்துக் கேட்பவர்கள் என்றும் அழகிய பொருள்வரும்.

இலந்தை

Kaviyogi Vedham

unread,
Mar 20, 2021, 2:30:14 AM3/20/21
to santhavasantham
அட்டகாசம் இலந்தெ சாமி
அழகழகா கோக்கரீக
அம்சமாய் எங்கு புடிச்சீங்க
அத்தனை பாட்டையும் நீங்க
சொத்துப்போல  சேத்து வக்கிறேன்
சுடலெசாமிக்கு நேர்த்திபோல
 நன்றி,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 20, 2021, 11:17:30 PM3/20/21
to santhavasantham
தாலாட்டுப் பாடல்
நாட்டுப்புறப் பாடலிலே தாலாட்டுப் பாடலுக்குத் தனியிடம் உண்டு. அதிலும் நகரத்தார் பாடும் தாலாட்டுப் பாடலுக்குத் தனிச்சிறப்புண்டு. நியூஜெர்சியிலிருந்து திரு நாகப்பன் அவர்கள் தாலாட்டுப்பாடல்கள் சிலவற்றை
அவற்றை ஒழுங்குபடுத்தி எழுதித் தரச் சொன்னார்.
அப்பாடல்கள் தெய்வ பக்தி, தங்கள் குடிப்பெருமை, செல்வச் செழிப்பு எனப் பல பெருமிதங்கள் மிளிர்ந்து வரக் கண்டேன்.
மற்ற பல தாலாட்டுப் பாடல்களுடன் அவற்றிலிருந்து சிலவற்றையும் இங்கே இடுகிறேன். தாலாட்டுப்பாடல்களிலே பெரும் பாலும் தாய் மாமன் பெருமை பேசப் படுவதைப் பார்க்கிறேன்.
முதலில் நான் எழுதிய தாலாட்டுப் பாடல் ஒன்றைத் தருகிறேன். களத்து மேட்டில் வேலை செய்யும் தாய் அதை ஒட்டியிருக்கும் வேப்ப மரக்கிளையில் தூளி கட்டிக் குழந்தையைப் போட்டிருக்கிறாள். அதை ஒட்டியிருக்கும் வீட்டில் ஒரு பணக்காருடைய குழந்தைக்குப் பல அணிமணிகள் போட்டிருக்கிறார்கள். தன் குழந்தைக்கு ஏது மில்லையே என்ற வருத்தம் அந்தத் தாய்க்கு வருகிறது. ஆனால் மகனிடம் அவற்றிற்கு மேலான நகைகள் உனக்குண்டு என்கிறாள். தாலாட்டைப் பார்க்கலாம்
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
வண்ண மருக்கொழுந்தே
மல்லிகையே கண்ணுறங்கு
வேப்ப மரக் காத்துப்பட்டா
வேறுவினை சேராது
காப்பா மகமாயி
கண்ணுறங்கு என்மகனே
பஞ்சு மெத்தை சூடாகும்
பாளம்பாளம் கொப்புளிக்கும்
எஞ்சாமி பஞ்சுமெத்தை
ஏதுக்கடா நம்மளுக்கு?
மஞ்சள்வெயில் தங்கமடா
மரகதமாம் பச்சையிலை
பிஞ்சுக் குழந்தே -உன்
பேர்கூட மாணிக்கம்
உன்பல்லு நல்முத்து
உன்னுதடு செம்பவளம்
என்னருமைப் பொன்மகனே
எனக்கேத்த வைரமணி
தெக்கேருந்து காத்துவரும்
சீராமன் சன்னதிக்கே
மொக்குமல்லி தான்வெடிக்கும்
மூக்கெல்லாம் தான்மணக்கும்
தூக்கம் கலைஞ்சுபுட்டா
சுத்துமுத்தும் நீபாரு
மூக்கு மரங்கொத்தி
முன்கிளையில் தான்கொத்தும்
காக்கா கதைசொல்லும்
கருங்குயிலி தான்பாடும்
நேக்கா அணிற்பிள்ளை
நின்னு பருப்பொடைக்கும்
பாலுனக்கு வேணுமின்னு
பாடுபடப் போறேண்டா
காலுதைச்சு நீயழுதா
கண்ணீர் வருகுதடா
நாலெழுத்து நீபடிச்சு
நஞ்சை புஞ்சை வாங்கோணம்
பால்குடுத்த ஆத்தாவுக்குப்
பட்டுச் சேலை எடுக்கோணம்
நீசிரிச்சா நான்சிரிப்பேன்
நீயழுதா நானழுவேன்
ஆசைவச்சேன் உன்மேலே
அழாவேணாம் கண்மணியே
ஆத்தாடி நேரமாச்சு
அழைக்குறாக பொம்பளைக
ஆத்தாநான் போய்வாரேன்
ஆம்பளைநீ கண்ணுறங்கு
(கண்ணுறங்கு..)கண்ணுறங்கு கண்ணுறங்கு

image.png

M. Viswanathan

unread,
Mar 21, 2021, 12:37:37 AM3/21/21
to Santhavasantham
அற்புதமான தாலாட்டுப் பாட்டு.. மீண்டும் மீண்டும் படித்து வியந்தேன். 
நன்றியுடன்,
அன்பன்,
மீ.விசுவநாதன்
21.03.2021 10.01  

Vis Gop

unread,
Mar 21, 2021, 2:56:01 AM3/21/21
to santhav...@googlegroups.com
அற்புதம்!
ஆண்மகனப் பெத்தத்துக்கே
  அந்தாப் பெருமையடி!
வீண்செலவு இல்லாமே
  வெற்றிஉந்தன் பக்கமடி!
கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Mar 21, 2021, 3:32:53 AM3/21/21
to santhav...@googlegroups.com
நேக்கா அணிற்பிள்ளை
நின்னு பருப்பொடைக்கும்

நேக்கா - இங்கிலீஸு கூட வருமோ!

கோபால். 

Sent from my iPhone

M. Viswanathan

unread,
Mar 21, 2021, 3:40:48 AM3/21/21
to Santhavasantham
நேக்கா - இங்கிலீஸு கூட வருமோ...

பேச்சு வழக்கு மொழிதானே நாட்டுப் பாடல். அதனால் அதுவே "நேக்கா" வரும்.
நன்றியுடன்,

Kaviyogi Vedham

unread,
Mar 21, 2021, 3:50:37 AM3/21/21
to santhavasantham
உள்ளதிலேயே இது  ரொம்ப அற்புதம் தலீவா!
 யோகியார்

Subbaier Ramasami

unread,
Mar 21, 2021, 9:39:00 AM3/21/21
to santhavasantham
ஆமாம். நாட்டுப்புறப்பாடலில் கிராமத்து மக்கள் பயன்பத்தும் சில வேற்றுமொழிச் சொற்களும் வரும்.  அதை அவர்கள் பயன்படுத்தும் விதத்தில் தமிழ் போலவே தோன்றும் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Mar 21, 2021, 9:55:37 AM3/21/21
to சந்தவசந்தம்
கம்பனுக்கு ஒரு கேள்வி
     - கவிஞர் வைரமுத்து

ராப்பகலாப் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல் பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளைத் தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கறையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்க்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால்கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரம் பூக்க
அந்தப் பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டிச்
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தைச்
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையே

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து
அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க.

Subbaier Ramasami

unread,
Mar 23, 2021, 12:22:44 PM3/23/21
to santhavasantham

தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய்  என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு.  அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்

ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
                 ------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)

 

பாடல் 2

ஆராரோ ஆரிரோ – கண்ணே

ஆரடித்து நீயழுதே

அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே

பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ

பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே

மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே

அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே

பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ

தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா

தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை

வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்

 

தொடரும்தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய்  என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு.  அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்

ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
                 ------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)

 

பாடல் 2

ஆராரோ ஆரிரோ – கண்ணே

ஆரடித்து நீயழுதே

அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே

பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ

பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே

மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே

அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே

பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ

தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா

தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை

வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்

 

தொடரும்தாலாட்டுப் பாடல்களிலே குழந்தை ஏன் அழுகிறாய்  என்று கேட்பதுபோல் பல பாடல்கள் உண்டு.  அதிலே சிலவற்றை இங்கே பார்க்கலாம்

ஆரடித்தார் ஏனழுதே
அடித்தாரைச் சொல்லியழு
கண்ணே என் கண்மணியே
,கடிந்தாரைச் சொல்லியழு
இளக்கிவிட்ட வெண்ணையைப்போல்
வெந்துருகி நிற்கையிலே
கலத்திலிட்ட சோறதுபோல்
கண்கலக்கந் தீர்ந்தாயோ?
கொம்புக் கனியே
கோதுபடா மாங்கனியே
வம்புக் கழுதாயோ
வாயெல்லாம் பால்வடிய
மாமன் அடித்தானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிமலர்ச் செண்டாலே
                 ------------------------------
ஏனழுதான் என்னரியான்
ஏலம்பூ வாய்நோக?
கரும்புக் கழுதானோ
கண்ணிலிட்ட மைகரைய?
சிலம்புக் கழுதானோ
செங்கமல வாய்சிவக்க
மண்ணிலொரு புன்னைமரம்
வருசமொரு பூப்பூக்கும்
வருசமொரு பூப்பூக்கும்
வருந்தி ஒரு காய்காய்க்கும்
என்னரியான் புன்னைமரம்
இலையுதிரப் பிஞ்சுவிடும்
புன்னைப்பூக் கோதவந்த
புலந்திரனை யாரடித்தார்?
மகிழம்பூக் கொய்யவந்த
மகனாரை யாரடித்தார்?
ஆரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாய் அழுகின்றான்
தம்பிதுணை வேணுமென்று
அவனா அழுகின்றான்
ஆத்தாள் மடிதேடி.-(நகரத்தார் தாலாட்டு)

 https://www.youtube.com/watch?v=AY5OIZYO3s0

பாடல் 2

ஆராரோ ஆரிரோ – கண்ணே

ஆரடித்து நீயழுதே

அடித்தாரைச் சொல்லியழு- கண்ணே
அழுத கண்ணீர் வடிகிறதே

பேரைநீ சொல்லியழு – கண்ணே
பெருவிலங்கு போட்டிடலாம்
அத்தை அடித்தாளோ கண்ணே
அழுத கண்ணீர் துடைத்தாளோ

பாட்டி அடித்தாளோ -உனக்குப்
பாலூட்டும் கையாலே

மாமி அடித்தாளோ – உனக்கு
மைவைக்கும் கையாலே
அக்காள் அடித்தாளோ- கண்ணே
அணைக்கின்ற கையாலே

அம்மானும் வைதானோ- கண்ணே
அள்ளிக் கொடுக்கைய்லே

பெரியம்மா அடித்தாளோ உன்னைப்
பெத்தவள் அடித்தாளோ

தொட்டிலுக்குள் துள்ளிதுள்ளி – கண்ணே
துரையே நீ தூங்கிடடா

தேம்பி அழுகாதே- கண்ணே
திட்டாதே அம்மாவை

வாடாத பூவே – கண்ணே
வானத்தில் தாராவே
தேடாத் திரவியமே – கண்ணே
தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்

 https://www.youtube.com/watch?v=AY5OIZYO3s0

தொடரும்

Subbaier Ramasami

unread,
Mar 23, 2021, 12:27:14 PM3/23/21
to santhavasantham

தெவிட்டாத் தெளிதேனே
கேட்டதெலாம் தருவேன்- கண்ணே
கிண்கிணியே கண்வளராய்

M. Viswanathan

unread,
Mar 23, 2021, 9:34:16 PM3/23/21
to Santhavasantham
தாலாட்டுப் பாடல்களை மனம்மகிழப் படித்தும், காதுகுளிரக் கேட்டும் களித்தேன். பகிர்ந்த அன்புக் கவிவேழம் அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்பன்,
மீ.விசுவநாதன்,
24.03.2021 07.03 am 

Vis Gop

unread,
Mar 29, 2021, 5:01:10 AM3/29/21
to santhav...@googlegroups.com
நானும் ஒன்று முயன்று பார்த்தேன். இதை சிருங்காரம் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வது போல் அமைந்தது.

கூட்டிட்டுப்போ!   

அங்காரு சீவாத சிக்குத் தலெயில
   அரளிப்பூ சொருவிட்டுப் போறவளாம்?
சிங்காரச் சீமாட்டி யின்னு நெனச்சுட்டு
   சித்தாடெ வீசிட்டு வாரவளாம்?  (1)

கண்ணு முழியாட்டங் கறுத்துக் கெடக்குற
   காட்டு மிராண்டியா வளந்துப்புட்டே!
பொண்ணு தலெயெ நீ பாக்காமெ மல்லிகெப்
   பூவப்போய் அரளின்னு பேத்திப்புட்டே!   (2)

செந்தூரம் மாதிரி செக்கச் செவந்தவ
   சேத்துக்க காக்காயும் ஒன் நெறந்தான்!
எந்தூரு முட்டாளு மேனகெ ஒங்கிட்டெ
   ஏமாந்து போறான்னு பாத்துடுவோம்!   (3)

மூஞ்சிக்கி மேனாட்டு மிஸ்ஸி வரப்போறா
   முச்சந்தி லேநின்னு காத்திட்டிரு!
காஞ்சேதான் நாம்போனேன் கேக்க வருவேன்னு
   காலம் பூராப் போச்சு பாத்திட்டிரு!   (4)

எம்மாடீ சும்மாநீ ஏண்டீ கலங்குற
   எப்போதும் போலவே துள்ளிட்டிரு!
அம்மாவும் அப்பாரும் நாளெ வருவாக
   அப்பறம் நான் வந்து அள்ளிக்குவேன்!   (5)

பூவானா காயாகிப் பழமாகிப் போவோணும்
   பொன்னானா நகையாத்தான் ஆவோணும்!
காவான்னா ஆறுன்னா கடலோடெ சேரோணும்
   கன்னின்னா மாமனக் கட்டோணும்!   (6)

மொட்டெல்லாங் காய்க்காது மூளெ கலங்குற
   முத்தா உதுக்கற முத்தமிழெ!
கட்டாயங் கட்டுவேன் காலந் தெகெயட்டும்
   காத்தவராயெனெ வேண்டிக்கிறேன்!   (7)

பூசுற பேசுற ஏசுற நீ யிந்தப்
   பொண்ணு மனசத்தாம் புண்ணாக்குற!
வீசுற வீச்செல்லாம் அப்பால வெச்சுக்க
   வேகமாக் கட்டிட்டுக் கூட்டிட்டுப்போ!   (8)

அப்பாலெ நீ சொன்னாக் கேட்டுத்தான் ஆகோணும்
   ஆடுன்னா ஆடோணும் அப்பன் போலே!
இப்போதெ ஆரம்பம் ஆவட்டும் எம்மாடி
   ஏங்காமெ கீங்காமெ வீட்டுக்குப்போ!   (9)

நல்வாழ்த்துகள்
கொபால்.
[29/3/2021]

Ramamoorthy Ramachandran

unread,
Mar 29, 2021, 6:32:38 AM3/29/21
to Santhavasantham
என்னசொகம்? - அட என்னசொகம்! எப்பிடி இப்படி எளுதறாரு?
தப்பில்லாப் பேச்சிலே தப்பை அடுக்கியே
தாராள கோவாலு சத்தாய்க்கிறார்!

கட்டிட்டுப் போ!யென்னு காட்டமாப் பேசற காதலி, காட்டு நெருப்பல்லவோ?-அவ
காதலில் தீப்பற்றி கஷ்டப் படுவாரோ?
கவிதை தான் அவருக்கு ஆறுதலோ?
-😜👍




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Mar 29, 2021, 9:11:56 AM3/29/21
to santhav...@googlegroups.com
நன்றி புலவரே. 
கட்டப் படுவார்!
கோபால். 

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Mar 29, 2021, 9:25:30 AM3/29/21
to santhavasantham
மிக அருமையான பாட்டு.

Vis Gop

unread,
Mar 29, 2021, 9:27:01 AM3/29/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 

Sent from my iPhone

Swaminathan Sankaran

unread,
Mar 29, 2021, 9:36:34 AM3/29/21
to santhav...@googlegroups.com
மிக சுகமான, அருமையான பாடல்.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Vis Gop

unread,
Mar 29, 2021, 10:22:51 AM3/29/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு சங்கரன்.
கோபால்.

V. Ramasamy

unread,
Apr 5, 2021, 6:25:00 AM4/5/21
to santhav...@googlegroups.com
                       தேர்தல்.

வந்துருச்சு தேர்தலு வகவகயா கச்சிங்க
போட்டிபோட்டு வாக்குறுதி பொளுதெல்லாங் குடுக்குறாங்க
ஆகுமானு கேட்டாக்க அற்பனப்போல் பாக்குறாங்க
கேள்விகேக்க விடாம கேணயாத்தான் வெக்கிறாங்க!

ஓட்டுபோட போகயில ஒருக்கவாச்சும் யோசிச்சமா
போனவாட்டி நடந்தவன் போறானிப்ப காரிலே
ஆளுக்கொரு வீடுன்னு அவந்தான சொன்னான்
ஊராரு வீடெல்லாம் உரிமயாச்சு அவனுக்கு!

கோவில்சொத்து எல்லாமே கொள்ளையிடுங் கும்பலுங்க!
மூணுமதம் மோதவிட்டு மோனமாதாஞ் சிரிக்குமுங்க!
சாதியில்லா சமத்துவத்தில் சண்டைமூட்டும் மகத்துவங்க!
இல்லாத வேத்துமய இருக்கவக்குங் கிருத்துருவங்க!

அண்ணந்தம்பி ஒறவுகளே அந்நியமா தெரியுதுங்க!
மாமுமச்சான்னு திரிஞ்சவங்க மல்லுகட்டி நிக்கிறாங்க!
பண்பாடு கலாசாரம் பாழாதாம் போச்சுதுங்க!
படிச்சவங்க கூடயிப்போ பம்மிதானே போறாங்க!

சொல்றதுதாஞ் சட்டம் திங்கத்தாங்க திட்டம்!
போராட்டம்னு பண்ணினாக்க போட்டுதள்ளும் கூட்டம்!
எண்ணமெல்லாந் திருட்டு எதுத்துநின்னா மெரட்டு!
உயிர்பயத்துல வாழறச்ச ஊழலஎங்க வெரட்ட?

கோடிகொட்டி நமக்கொளைக்க கோட்டியானு யோசிங்க
போட்டதெல்லாம் எடுத்தது போதுமுன்னு இருப்பானா?
அடுத்தடுத்த தேர்தலுக்கு அவன்மொதல போடணும்!
அவனோட தலமொறைங்க அல்லலின்றி வாழணும்!

காசுவாங்கி ஓட்டுபோட்டு கடுப்பாகி பலனில்லே
யோக்கியமா நாமிருந்தா யோசிக்கத்தான் மாட்டானா?
கூட்டத்தப் பாத்துநாம கூறுகெட்டு போறமே
ஆட்டத்தப் பாத்துங்கூட அவம்பின்னால போறமே!

இலவசமா குடுக்கறத இளிச்சுதான வாங்குறோம்!
கவர்மெண்டு கடனென்னமோ கணக்கில்லாம எகுறுது!
என்னிக்காச்சும் ஒருநாளு இந்தக்கடன் எல்லாமே
ஏறும்நம்ம தலயிலே எண்ணிபாருங்க மனசிலே!

கோமாளிகள ஆளவிட்டு கோவபட்டு பலனில்லே
செரங்குவந்த கொரங்குபோல செதஞ்சுபோகும் தேசமே!
நாட்டயாள நல்லவர நாமதான தேடணும்?
சிந்திச்சு பாருங்க செயல்லதான் காட்டுங்க!

தேசத்த நேசிக்கும் சேவகர்கள் பலருண்டு!
ஆசகள தூண்டிவிட்டு ஆட்டைபோடுங் கூட்டமுண்டு!
தெளியவேணும் நம்மனசு தேர்தலிலே காட்டணும்
தேர்வுசரி யென்றாலே சேதமேது நாட்டுக்கு!

அன்புடன்,
ராமு.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

ramaNi

unread,
Apr 5, 2021, 9:41:15 AM4/5/21
to சந்தவசந்தம்
குட்டக் குட்டக் குனியும் நம் நிலையைப் புட்டுப் புட்டு வெச்சீர்! 
ரமணி

Kaviyogi Vedham

unread,
Apr 5, 2021, 9:48:28 AM4/5/21
to santhavasantham
ராமுவின் வரிகள் ரம்மியமான கருத்தோட்ட வரிகள்
வாழ்க

On Mon, Apr 5, 2021 at 7:11 PM ramaNi <sai...@gmail.com> wrote:
குட்டக் குட்டக் குனியும் நம் நிலையைப் புட்டுப் புட்டு வெச்சீர்! 
ரமணி

V. Ramasamy

unread,
Apr 5, 2021, 11:31:25 AM4/5/21
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி (குருநாதன்) ரமணி!

அன்புடன்,
ராமு.

Ashok Subramaniam

unread,
Apr 5, 2021, 2:54:02 PM4/5/21
to santhavasantham

நாட்டுக்குச் சேதமேது

   நல்லவங்க வந்தாக்கா?

கூட்டத்தப் பாத்துமட்டும்

   கூறுகெட்டுப் போவாம

கோட்டடிச்ச கோமாளிக்

  கொரங்கெல்லாம் குந்தாம

ஓட்டளிக்கச் சொன்னராமு 

   ஒஸ்தியான பாட்டுமாமு!


*குந்தாம என்பதைத் தவிர மற்ற ‘உ” முடிவுகள் குற்றியலுகரம்!

Swaminathan Sankaran

unread,
Apr 5, 2021, 2:55:45 PM4/5/21
to santhav...@googlegroups.com
'ராமு'வின் வரிகள் நாட்டு நிலைமைய புட்டுப் புட்டு வைக்கின்றன.
சங்கரன் 



On Monday, April 5, 2021 at 3:55:00 PM UTC+5:30 vrama...@gmail.com wrote:
                       தேர்தல்.

வந்துருச்சு தேர்தலு வகவகயா கச்சிங்க
போட்டிபோட்டு வாக்குறுதி பொளுதெல்லாங் குடுக்குறாங்க
ஆகுமானு கேட்டாக்க அற்பனப்போல் பாக்குறாங்க
கேள்விகேக்க விடாம கேணயாத்தான் வெக்கிறாங்க!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/33e842b0-9dba-4895-ae18-ded5d8bbfa2cn%40googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Apr 5, 2021, 9:52:33 PM4/5/21
to santhav...@googlegroups.com

*குந்தாம என்பதைத் தவிர மற்ற ‘உ” முடிவுகள் குற்றியலுகரம்!

இந்தக் குறிப்பு ஏன் கொடுக்கப் பட்டது?
 உ முடிவுகள் மூன்றே.
 சேதமேது. தொடர்வது ந. 
ராமு. குற்றியல் உகரமானால் புணர்ச்சி ராமொஸ்தி என்று மாற்றும். 
மாமு. இது பாடல் முடிவு. 
[குந்தாம. உகர முடிவில்லை.] 
கோபால். 
[இசையே நா பு பாடலுக்கு இலக்கணம். மொழி இலக்கணம் பேச்சு வழக்கில் உள்ளபடியே. யாப்பும் அப்படியே.  நான் இவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறேன். தவறாக இருக்கலாம்.  ] 

Sent from my iPhone

V. Ramasamy

unread,
Apr 5, 2021, 11:17:20 PM4/5/21
to santhav...@googlegroups.com
திரு. சங்கரன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
ராமு.


V. Ramasamy

unread,
Apr 5, 2021, 11:19:04 PM4/5/21
to santhav...@googlegroups.com
திரு. அஷோக் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,
ராமு.

On Fri, 12 Mar 2021, 07:47 Subbaier Ramasami, <kavim...@gmail.com> wrote:

நண்பர்களே,

 

மார்ச்சு 21ந்தேதி கவிமாமணி மீவி தலைமையில் நாட்டுப்புறப் பாடல்கள் கவியரங்கம்.

அதற்குமுன் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிச் சில சிந்தனைகள் கவியரங்கத்துக்கு முன்னாள் வரை இந்தத் திரியில் வெளியாகும். யாப்பமைந்த பாடல்களுக்கு வெகு காலத்த்ற்கு ம்ன்பே நாட்டுப்புறப் பாடல்கள் உருவாகி விட்டன. எகனை மொகனை எல்லாம் இயல்பாகவே அமைந்து உணர்ச்சிகளின் வேகத்து ஈடு கொடுத்து எழுந்த பாடல்கள் அவை.

அவற்றில் ஆழமான கவிச்சுவையும் உண்டு.

காதல் உண்டு. கவலையும் உண்டு

ஏக்கம் உண்டு, இனிமையும் உண்டு
சண்டை உண்டு சமரசம் உண்டு

அழகு உண்டு அழுகையும் உண்டு

சமுதாயத்தைப் பாதித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டுப்புற மக்களைப் பாதித்திருக்கிறது.

இரயில் வண்டியை முதன்முதல் பார்த்தவர்கள் அதைப்பற்றி வியந்து பாடியிருக்கிறார்கள். முதன் முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்தவன் வழியிலுள்ள ஊர்களையெல்லாம் இணத்துப் பாடியிருக்கிறான். முதலிரவுக்கு பெண்ணையும் மாப்பிள்ளையும் அறைக்குள் அனுப்பிவிட்டு அவற்களுக்குக் குறிப்புக்கொடுத்தும் கிண்டலடித்தும் வெளியில் நின்றுகொண்டு பெண்கள் பாடும் பாடல்கள் உண்டு.

தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றிப் பாடியிருக்கிற நாட்டுப்புறப்பாடலைப் படித்தால் இப்பொழுதும் அக்காட்சிகளைக் கண்ணில் கண்டு க/ண்ணீர் வரும்.

நாட்டுப்புறப் பாடல்களில் முதல் இடம் பிடிப்பது சிருங்காரம். அதில்தான் எத்தனை உத்திகள்.

தாலாட்டு , தொழிற்பாட்டு, கடலில் போகும் மீனவர்கள் பாட்டு, ஏலேலோப் பாட்டு,  தேசபக்திப் பாட்டு(வெள்ளைக்காரனைத் திட்டும் பாடல்களும் உண்டு)

இன்னும் சிலர் அவர்களைப் புகழ்ந்தும் பாடியிருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை எத்தனையோ?  நாட்டுப்புறப் பாடல்கள் பல நாட்டுப்புறக் கலைகளுக்கு வித்திட்டிருக்கின்றன.  திரைப்படப் பாடல்கள் பல அங்கிருந்து வந்தவை தான். நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் கொஞ்சம் மட்டுத்தான் என்று சொன்னவர்களை நானறிவேன். எனக்கென்னவோ நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியம் மட்டும்தான் என்று சொல்லத் தோன்றுகிறது

கவியரங்கம் தொடங்க இன்னும் இருக்கும் ஒரு வாரத்தில் சில வகைகளப் பற்றிப் பார்ப்போம். அது கவியரங்க மாளிகைக்கு ஒரு தோரணமாக அமையும்.

தொடக்கமாகச் சிருங்காரக் கவிதைகள் சிலவற்றை பார்க்கலாம்

காதலியின் நினைவு கதலனை வதைக்கிறது. அவன் பாடுகிறான்

'குஞ்சி முகத்தழகி
கூர் விழுந்த மூக்கழகி
சாம்பல் குருத்தழகி - இப்ப
சாகிறண்டி ஒன்னால'

அவளுக்கும் அதே நிலை

 

எண்ணெய்த் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னழகு”

அவனுடைய தலை மயிரில் தலைவச்சுப் படுத்தால்தான் தூக்கம் வருமாம்

படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க முண்டு.

அவளுடைய மயக்கத்திலே போட்ட வெற்றிலை கூட சிவக்கவில்லை

ஆத்தோரம் கொடிக்காலாம்,

அரும்பரும்பா வெத்திலையாம்,

போட்டா சிவக்குதில்லே,

பொன் மயிலே உன் மயக்கம்,

வெட்டி வேரு வாசம்

வெடலப்புள்ள நேசம்'

 

சிருங்காரம் நாளையும் தொடரும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ashok Subramaniam

unread,
Apr 6, 2021, 2:59:22 PM4/6/21
to santhavasantham

திரு. கோபால் அவர்களே.. காரணத்தை இணைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில் விளக்கமுயன்றிருக்கிறேன்.. :)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
KUTRIYALUGARAM.m4a

Siva Siva

unread,
Apr 14, 2021, 6:09:55 PM4/14/21
to santhavasantham
Some of you may remember this Kannada folk song that was sung during Sivarathri 2020 at Isha fioundation.
Sojugada Sooju MalligeAnanya Bhat sings it: https://www.youtube.com/watch?v=yWmcMsI5dks

Someone seems to have written a Tamil song (a totally different song - not the Kannada song's translation) - but sung in the same tune: https://www.youtube.com/watch?v=JcdvVdM1a6s

Here is the rough translation of the original Kannada song:

Lyrics and Meaning:

ಮಾದೇವ… ಮಾದೇವ…
Maadeva… Maadeva…
Mahadeva… Mahadeva…

ಸೋಜುಗಾದ ಸೂಜುಮಲ್ಲಿಗೆ ಮಾದೇವ ನಿಮ್ಮ ಮಂಡೆ ಮ್ಯಾಲೆ ದುಂಡು ಮಲ್ಲಿಗೆ
Sojugaada Sooju Mallige Maadeva Nimma Mande Myaale Dundu Mallige
Mahadeva,
I offer various types of Jasmine flowers by placing them upon your head

ಅಂದಾವರೆ ಮುಂದಾವರೆ ಮತ್ತೆ ತಾವರೆ ಪುಷ್ಪ
Andaavare Mundaavare Matte Taavari Pushpa
And then various types of Lotus flowers

ಚಂದಕ್ಕಿ ಮಾಲೆ ಬಿಲ್ಪತ್ರೆ ಮಾದೇವ ನಿಮ್ಗೆ
Chandakki Maale Bilpatre Maadeva Nimge
And a beautiful garland of Vilva leaves, O Mahadeva

ಚಂದಕ್ಕಿ ಮಾಲೆ ಬಿಲ್ಪತ್ರೆ ತುಳಸಿ ದಳವ
Chandakki Maale Bilpatre Tulasi Dalava
A beautiful garland of Vilva and Tulsi leaves

ಮಾದಪ್ಪನ್ ಪೂಜೆಗೆ ಬಂದು ಮಾದೇವ ನಿಮ್ಮ
Maadappna Poojege Bandu Maadeva Nimma
O Mahadeva, I came to your worship

ತಪ್ಪಾಲೆ ಬೆಳಗಿವ್ನಿ ತುಪ್ಪಾವ ಕಾಯ್ಸಿವ್ನಿ
Tappaale Belagivnee Tuppaava Kaaisivni
I have washed and polished the vessel, and heated Ghee

ಕಿತ್ತಾಳೆ ಹಣ್ಣ ತಂದಿವ್ನಿ ಮಾದೇವ ನಿಮ್ಗೆ
ಕಿತ್ತಾಳೆ ಹಣ್ಣ ತಂದಿವ್ನಿ ಮಾದಪ್ಪ
Kittaale Hanna Tandivni Maadeva Nimge
Kittale Hanna Tandivni Maadappa
And have brought oranges for you, O Mahadeva

ಕಿತ್ತಾಡಿ ಬರುವ ಪರಸೆಗೆ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Kittaadi Baruva Parasege Maadeva Nimma
To your festival where people flock

ಬೆಟ್ ಹತ್ಕೊಂಡ್ ಹೋಗೋರ್ಗೆ ಹಟ್ಟಿ ಹಂಬಲವ್ಯಾಕ?
Bett Hatkondu Hogorge Hatti Hambalavyaaka?
Why should those who climb the mountains aspire to have a house?

ಬೆಟ್ಟದ್ ಮಾದೇವ ಗತಿಯೆಂದು ಮಾದೇವ ನೀವೇ…
ಬೆಟ್ಟದ್ ಮಾದೇವ ಗತಿಯೆಂದು ಅವರಿನ್ನು
Bettad Maadeva Gatiyendu Maadeva Neeve..
Bettad Maadeva Gatiyendu Avarinnu
Submitting to the Lord of the Mountain as their Ultimate Resort…

ಹಟ್ಟಿ ಹಂಬಲವ ಮರೆತಾರೋ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Hatti Hambalava Maretaaro Maadeva Nimma
Perhaps they will now forget their mundane aspirations

ಉಚ್ಚೆಳ್ಳು ಹೂವ್ನಂಗೆ ಹೆಚ್ಚೇವೋ ನಿನ್ನ ಪರುಸೆ
Uchchellu Hoovinhange Hechchevo Ninna Paruse
We have flocked for your festival like Nyger flowers

ಹೆಚ್ಚಾಳಗಾರ ಮಾದಯ್ಯ, ಮಾದಯ್ಯ ನೀನೇ
Hechchaalagaara Maadayya, Maadayya Neene
O Mahadeva, you are the greatest

ಹೆಚ್ಚಾಳಗಾರ ಮಾದಯ್ಯ ಏಳುಮಲೆಯ
Hechchaalagaara Maadayya Elumaleya
O Mahadeva of seven hills, you are the greatest

ಹೆಚ್ಚೇವು ಕೌದಳ್ಳಿ ಕಣಿವೇಲಿ ಮಾದೇವ ನಿಮ್ಮ
Hecchevu Koudalli Kaniveli Maadeva Nimma
O Mahadeva, we have flocked to the Koudalli valley for your festival



N. Ganesan

unread,
Apr 16, 2021, 6:07:34 PM4/16/21
to Santhavasantham
நாக்கு செவந்தவரே
நாலெழுத்து மந்திரியே
மூக்கு வெடச்சவரே
முன்வழுக்கை மன்னவரே

கூத்து முடிஞ்சிருச்சு
கொமரிப்புள்ள எதுக்குன்னு
பாத்தும் பாக்காமப்
பரபரன்னு போறீரோ !

ஒருவாய் வெத்தலைய
இருவாய் உண்டகதை
திருவாய் மறந்தாலும்
தின்னருசி மறந்திருமோ?

வைக்கப் போர்ப் படப்புக்கு
வடஇருட்டு மூலையில
அக்கப்போர் செஞ்சகதை
அய்யனுக்கு மறந்திருச்சோ ?

சவரக் கத்திக்குத்
தப்பிச்ச குறுமுடியில்
முகர ஒரசுனது
முழுசாத்தான் மறந்திருச்சோ ?

மொட்டு மொட்டு மல்லிகையை
முட்டிமுட்டித் தட்டிவிட்டு
முத்துமுத்து வேர்வைச் சொட்டு
மோந்தகதை மறந்திருச்சோ ?

வாழைத் தோப்புக்குள்ள
வளவி ஒடச்சகதை
வாழை மறந்திருக்கும்
வலதுகையி மறந்திருமோ ?

தேனேறிப் போயிருந்த
சிறுக்கிமக தலைமயிரு
பேனேறிப் போனதய்யா
பேச்சுவார்த்தை இல்லாம

புள்ளித் தேமலுக்கும்
புதுவேட்டி மடிப்புக்கும்
கருப்பட்டி ஒதட்டுக்கும்
கருத்தகிளி அலையுதய்யா

ஆறுசரம் சங்கிலியோ
அட்டிகையோ கேக்கலையே
மஞ்சக் கயித்துக்கு
மனசுக்குள்ள அரிக்குதய்யா

ஆம்பளைக சகவாசம்
அடுத்தொருத்தி வாரவரைக்கும்
பொம்பளைக சகவாசம்
புதைகாடு போறவரைக்கும்
              ~ வைரமுத்து, 18/4/2021
https://tamil.oneindia.com/news/chennai/vairamuthu-released-naatpadu-theral-first-song-lyrics-418017.html


Virus-free. www.avg.com

N. Ganesan

unread,
Apr 16, 2021, 6:23:53 PM4/16/21
to Santhavasantham


On Sun, Mar 14, 2021 at 5:45 AM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
அங்காளம்மன் கோயிலுக்கு பொங்கலிட நான்போனேன்!
பொங்கப் பொட்டி தூக்கச் சொன்னாளே!- ஏம் பொண்டாட்டி
பொங்கப் பொட்டி..  
ஆறுமாசக் கீரத்தண்டு
நிரு வத்திப் போகுதுன்னு
அதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே- எம்பொண்டாட்டி
இதுக்குத் தண்ணி எறைக்கச் சொன்னாளே!
- கேட்ட பாட்டு.- புலவர் இராமமூர்த்தி. 


https://www.youtube.com/watch?v=IHHpa2in-_g
முதன் முதலாய் அம்மாவுக்கு
----------------------------
            - வைரமுத்து

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய்சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாணப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களிக்கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமசன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

திக்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளயிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?
                    -     வைரமுத்து
 
https://www.youtube.com/watch?v=IHHpa2in-_g

Virus-free. www.avg.com
Reply all
Reply to author
Forward
0 new messages