கோதை மொழிந்த தமிழ் - ஒரு சிந்துப் பாடல்

49 views
Skip to first unread message

Anand Ramanujam

unread,
Dec 26, 2023, 7:42:38 AM12/26/23
to santhavasantham
கோதை மொழிந்ததமிழ்
பாவகை : சிந்துப் பாடல்
(பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்' பாட்டின் மெட்டு)

(பல்லவி)
கோதை மொழிந்ததமிழ் - கண்ணன்திருக்
 கோலம் புகழ்ந்ததமிழ் - ஒரு
தீதில் திருமொழியாம் - தெள்ளார்நறுந்
 தேனைப் பொழிந்ததமிழ்

(சரணங்கள்)

நாரணன் தாளிணையே - பற்றாமென
 ஞானம் உரைத்ததமிழ் - அந்த
ஆரணத்(து) ஆழ்பொருளை - அன்பார்கவி
 ஆக்கி யளித்ததமிழ் (கோதை)

பரமன் அடிபரவி - சீரார்திருப்
 பாவை பகர்ந்ததமிழ் - அருள்
மருவி மனமுருக - மாயோன்நலம்
 வாழ்த்தி மகிழ்ந்ததமிழ் (கோதை)

உத்தமன் நாமமெனும் - ஓராயிரம்
 ஒண்மொழி சாற்றுதமிழ் - நித்தம்
நித்தமும் நின்றொலிக்கச் - சீராமனின்
 நீள்புகழ் போற்றுதமிழ் (கோதை)

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Dec 26, 2023, 11:32:40 AM12/26/23
to santhav...@googlegroups.com
NIce.

அடிபரவி - சீரார் /
ச் needed.

நித்தம் நித்தமும் நின்றொலிக்கச் /
Interesting usage.
நித்தம் - itself means always.

V. Subramanian

Anand Ramanujam

unread,
Dec 26, 2023, 11:47:56 AM12/26/23
to santhav...@googlegroups.com
Thank you for reading the poem and providing your suggestions 🙏 

Will correct the ஒற்று.

I meant to use நித்தம் நித்தம் as அடுக்குத் தொடர்.  
To make the அடுக்குத் தொடர் explicit, will change it to நித்தம் நித்தம் நினைந்துணரச்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNx%2BO5ZOKy6vXANshkudu2PwEL3Qn84sxLvyLT77Pu4DQ%40mail.gmail.com.

Siva Siva

unread,
Dec 26, 2023, 12:10:40 PM12/26/23
to santhav...@googlegroups.com
Thanks.

தினம் தினம், - is normal.

ஓயாமல் ஓயாமல் / எப்பொழுதும் எப்பொழுதும் - sound a bit unusual.

V. Subramanian

Anand Ramanujam

unread,
Dec 26, 2023, 5:00:19 PM12/26/23
to santhavasantham
Looks like the ‘நித்தம் நித்தம்’ usage is found in some of Pattinatthar’s poems..

புத்திதரும் வித்தைதரும் பொல்லாப்பில் லாமல்நெஞ்சே
சித்திமுத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் - நித்தநித்தம்
தானந்த மானதொரு சற்குருவோ டேபழகி
ஆனந்த முண்டிருந்தக் கால்.

- பட்டினத்தார்

Lalitha & Suryanarayanan

unread,
Dec 26, 2023, 10:43:41 PM12/26/23
to santhav...@googlegroups.com

பாரத சமுதாயம்

கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!

- பாரதியார்

On Tue, Dec 26, 2023 at 10:02 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
NIce.

அடிபரவி - சீரார் /
ச் needed.

நித்தம் நித்தமும் நின்றொலிக்கச் /
Interesting usage.
நித்தம் - itself means always.

V. Subramanian

Virus-free.www.avast.com

Anand Ramanujam

unread,
Dec 27, 2023, 9:46:59 PM12/27/23
to santhav...@googlegroups.com
நன்றி, சிவசூரியாரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Imayavaramban

unread,
Jan 4, 2025, 9:24:54 PM1/4/25
to சந்தவசந்தம்

“கோதை மொழிந்த தமிழ்” என்னும் இந்தச் சிந்துப் பாடலை இசை ஆசிரியர் திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ:

https://youtu.be/S4ICv2IJgqg?si=PDFaMPvjmkkqLvgl

அடியேன் எழுதிய பாடலை மிக இனிமையான இசையில் பாடித்தந்த திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! இப்பாடல் இசையாக வருவதற்குப் பேருதவி செய்த நண்பர் கச்சிநகர்ப் புலவர் திரு. தங்கவேல் அவர்களுக்கும் நனிநன்றி!

திரு. சங்கர் அவர்களைப் புகழ்ந்து அடியேன் எழுதிய வாழ்த்துப்பா:

இருட்பூமிக்(கு) ஒளிவார்க்கும் எழில்ஞாயி(று) எனவின்பம்
பெருக்கிப்பண் ணிசையோடு பிரியாத தமிழ்பாடி
உருக்கும்பொற் குரலாலே உளம்கொள்ளை கொளவல்லார்
திருக்கண்ண புரம்சங்கர் சிறந்தோங்கி வாழியரே!

🙏

- அன்புடன் இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Jan 4, 2025, 10:06:53 PM1/4/25
to சந்தவசந்தம்
எழில் சிந்தும் சிந்து!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 10:11:23 PM1/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

On Jan 4, 2025, at 10:06 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 4, 2025, 10:51:41 PM1/4/25
to santhav...@googlegroups.com
பாடலும் பாட்டும் அருமை.

அனந்த்

On Sat, Jan 4, 2025 at 9:24 PM Imayavaramban <anandbl...@gmail.com> wrote:

“கோதை மொழிந்த தமிழ்” என்னும் இந்தச் சிந்துப் பாடலை இசை ஆசிரியர் திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ:

https://youtu.be/S4ICv2IJgqg?si=PDFaMPvjmkkqLvgl

அடியேன் எழுதிய பாடலை மிக இனிமையான இசையில் பாடித்தந்த திரு. திருக்கண்ணபுரம் சங்கர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! இப்பாடல் இசையாக வருவதற்குப் பேருதவி செய்த நண்பர் கச்சிநகர்ப் புலவர் திரு. தங்கவேல் அவர்களுக்கும் நனிநன்றி!

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 11:05:59 PM1/4/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. அனந்த்!

On Jan 4, 2025, at 10:51 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

RNachi

unread,
Jan 5, 2025, 7:57:44 AM1/5/25
to சந்தவசந்தம்
கவிதையும் கானமும் அழகு ஐயா வாழ்த்துகள்

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 8:17:49 AM1/5/25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. நாச்சியப்பன்!

On Jan 5, 2025, at 7:57 AM, RNachi <rna...@gmail.com> wrote:

கவிதையும் கானமும் அழகு ஐயா வாழ்த்துகள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Jan 5, 2025, 1:08:39 PM1/5/25
to santhav...@googlegroups.com
ரொம்ப  நல்ல  பத்து.  வாழ்க கவிஞரே . 
 யோகியார் 

Imayavaramban

unread,
Feb 6, 2026, 5:00:36 AM (21 hours ago) Feb 6
to சந்தவசந்தம்
சில மாற்றங்களுடன்:

கோதை மொழிந்த தமிழ்

*****************

மெட்டு:

(தானன தானதனா - தன

தானன தானதனா)

*****************

(பல்லவி)

கோதை மொழிந்த தமிழ் - நலம்

… கோடி நிறைந்ததமிழ் - அந்த

ஆதி பரம்பொருள்மேல் - அர

… சாட்சி புரிந்ததமிழ்

(சரணங்கள்)

நாரணன் தாள்பரவிப் - பர

… ஞானம் நவின்றதமிழ் - அந்தக்

காரணன் மேலுருகி - உயிர்க்

… காதல் கனிந்ததமிழ். (கோதை)

பார்புகழ் மார்கழியில் - திருப்

… பாவை பகர்ந்ததமிழ் - அருள் 

வாரணம் ஆயிரமாம் - மண

… மாலை புனைந்ததமிழ்.  (கோதை)

மாயவன் வாய்ச்சுவையும் - தனி

… வாசமும் ஊறுதமிழ் - அந்த

ஆயனின் வான்பெயராம் - அணி

… ஆயிரம் கூறுதமிழ். (கோதை)

சோலையில் வாழ்குயிலைத் - திருத்

… தூது விடுத்ததமிழ் - சுடர்

வேலினைப் போல்விழியால் - உயர் 

… வேதம் விரித்ததமிழ்.   (கோதை)

*************

(சொற்பொருள்:

புனைந்த = அணிந்த அல்லது அருளிச்செய்த

வாசம் = வாசனை

அணி = அழகிய

விரித்த = விளக்கிய)

இமயவரம்பன் 

On Tuesday, December 26, 2023 at 7:42:38 AM UTC-5 Imayavaramban wrote:

கோதை மொழிந்ததமிழ்
பாவகை : சிந்துப் பாடல்
(பாரதியாரின் 'காணி நிலம் வேண்டும்' பாட்டின் மெட்டு)

(பல்லவி)
கோதை மொழிந்ததமிழ் - கண்ணன்திருக்
 கோலம் புகழ்ந்ததமிழ் - ஒரு
தீதில் திருமொழியாம் - தெள்ளார்நறுந்
 தேனைப் பொழிந்ததமிழ்

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Feb 6, 2026, 8:48:24 AM (17 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com
NIce.

சுடர்வேலினைப் போல்விழியால் - உயர் வேதம் விரித்ததமிழ் /

Interesting phrasing. Are her eyes expounding the Vedas?

V. Subramanian

On Fri, Feb 6, 2026 at 5:00 AM Imayavaramban <anandbl...@gmail.com> wrote:
சில மாற்றங்களுடன்:

கோதை மொழிந்த தமிழ்

*****************

மெட்டு:

(தானன தானதனா - தன

தானன தானதனா)

*****************

(பல்லவி)

கோதை மொழிந்த தமிழ் - நலம்

… கோடி நிறைந்ததமிழ் - அந்த

ஆதி பரம்பொருள்மேல் - அர

… சாட்சி புரிந்ததமிழ்

(சரணங்கள்)

...

இமயவரம்பன்

unread,
Feb 6, 2026, 8:55:34 AM (17 hours ago) Feb 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you!

Yes, Love and surrender to Him is said to be the essence of the Vedas. Since her eyes are expressing these two qualities, they are in a way expounding the Vedas.
Reply all
Reply to author
Forward
0 new messages