ஜகத்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்"
(மீ. விசுவநாதன்)
(சந்த மூலம்: "கருட கமன தவ" என்ற கீர்த்தனை - ஶ்ரீ பாரதீய தீர்த்த மகா ஸ்வாமிகள் இயற்றியது)
"தனன தனன தன தனன தனன தன
தனன தனன தன தான - தன
தனன தனன தன தான
தன தானன தானன தான
தன தானன தானன தான"
(சரணம்)
தனது தனது என மனதில் அலைபு ரள
எனது பொழுது தடம் மாறும் - குரு
தமது கருணை தடுத் தாளும்
குரு பாரதி தீர்த்தரின் பாதம்
அருள் கூட்டிடும் வாரிதி யாகும்.
(தனது தனது என)
தினமும் ஒருமை யுடன் இறைவன் திருவ டியை
நினைக்கப் பழகி டவே வேண்டும் - அது
அகத்தி லமைதி யினைத் தூண்டும்
எனக் கூறிய யோகியைக் கூறு
குரு பாரதி தீர்த்தரப் பேரு.
(தனது தனது என)
உலக அமைதி பெற இரவு பகலு மென
உருகி உருகிச் செய்தி யானம் - எனும்
குருவின் மொழியே வர மாகும்
மலர் தாமரை போலவர் மேனி
அவர் பாரதி தீர்த்தமெய் ஞானி
(தனது தனது என)
அரனும் அரியும் ஒரு உருவே அறிக வென
பரம புருஷ விதம் கூறும் - குரு
தரும புருஷ ரெனக் கூறும்
புவி யாரவர் பேரெனக் கேட்கும்
கவி பாரதி தீர்த்தரைப் போற்றும்.
(தனது தனது என)
(இன்று (24.03.2026) சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஶ்ரீ விபூஷித ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் 76வது பிறந்த தினம் - வர்த்தந்தி)