ஜகத்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் - மீ. விசுவநாதன்

4 views
Skip to first unread message

M. Viswanathan

unread,
Mar 23, 2026, 5:09:45 PM (yesterday) Mar 23
to Santhavasantham, M. Viswanathan
ஜகத்குரு ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்"
                    (மீ. விசுவநாதன்)

(சந்த மூலம்:  "கருட கமன தவ" என்ற கீர்த்தனை - ஶ்ரீ பாரதீய தீர்த்த மகா ஸ்வாமிகள் இயற்றியது)

"தனன தனன தன தனன தனன தன 
தனன தனன தன தான - தன 
தனன தனன தன தான 
தன தானன தானன தான 
தன தானன தானன தான"

            (சரணம்)

தனது தனது என மனதில் அலைபு ரள 
எனது பொழுது தடம் மாறும் - குரு 
தமது கருணை தடுத் தாளும் 
குரு பாரதி தீர்த்தரின் பாதம் 
அருள்  கூட்டிடும் வாரிதி யாகும்.
                                   (தனது தனது என)

தினமும் ஒருமை யுடன் இறைவன் திருவ டியை 
நினைக்கப் பழகி டவே வேண்டும் - அது 
அகத்தி லமைதி யினைத் தூண்டும் 
எனக் கூறிய யோகியைக் கூறு
குரு பாரதி தீர்த்தரப் பேரு.
                                   (தனது தனது என)

உலக அமைதி பெற இரவு பகலு மென
உருகி உருகிச் செய்தி யானம் - எனும்
குருவின் மொழியே வர மாகும்
மலர் தாமரை போலவர் மேனி
அவர் பாரதி தீர்த்தமெய் ஞானி
                                     (தனது தனது என)

அரனும் அரியும் ஒரு உருவே அறிக வென 
பரம புருஷ விதம் கூறும் - குரு 
தரும புருஷ ரெனக் கூறும் 
புவி யாரவர் பேரெனக் கேட்கும் 
கவி பாரதி தீர்த்தரைப் போற்றும்.
                                (தனது தனது என)

 (இன்று (24.03.2026) சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஶ்ரீ விபூஷித ஶ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் 76வது பிறந்த தினம் - வர்த்தந்தி)

Ram Ramakrishnan

unread,
Mar 23, 2026, 11:02:42 PM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com
அற்புதம், திரு. மீ. வி.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 24, 2026, at 02:39, M. Viswanathan <meev...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-s%3DkBAnkss%2BfCX7H6-Lu5uaiMZpF%3DKg65_Znk5Sdt6s0Q%40mail.gmail.com.

Sai Ganesan H

unread,
Mar 23, 2026, 11:12:27 PM (yesterday) Mar 23
to santhav...@googlegroups.com
அருமை! ஐயா! 
- சத்ய வேழன் H சாயி கணேசன்

--

M. Viswanathan

unread,
1:09 AM (22 hours ago) 1:09 AM
to Santhavasantham
அன்புக் கவிஞர்கள் ராம் கிராம், சத்ய வேழன் சாய் கணேசன் ஆகியோரின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன், 
மீ. விசுவநாதன்
24.03.2026 10.38am

இமயவரம்பன்

unread,
6:43 AM (17 hours ago) 6:43 AM
to santhav...@googlegroups.com
மிக மிக அருமை, திரு. மீவி!

- இமயவரம்பன்

M. Viswanathan

unread,
7:44 AM (16 hours ago) 7:44 AM
to Santhavasantham
அன்புக் கவிஞர் இமயவரம்பன் அவர்களின் கருத்துக்கு மகிழ்ச்சி. நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
24.03.2026

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages