வாராகி கேசாதி பாதம்
கருநெடுங் கூந்தல் கச்சித மாக
உருவ எழிலை உயர்த்திப் பிடிக்கக்
கரண்டக மென்னும் கவிழொளிக் கிரீடம்
திரண்ட எழிலைச் சேர்த்துக் கொடுக்க
அழகிய சிறுபிறை அணியாய் முடியில்
இழையொளி வீசி இதமா யிருக்கத்
திருமுடி ஓரம் திகழொளிப் பவளம்
அரிய ஒளியுடை அதிசய வயிரம்
பளபள மணிகள் பலப்பல கூடி
ஒளிவிடக் காணும் உயர்தனி மணிமுடி 10
பட்டை ஒளியாய்ப் படரெழில் நெற்றி
ஒட்டுத் திட்டாய்ப் பொருந்து கஸ்தூரி
பொலிவில் சிறந்த புருவ இரட்டை
வலிவுடன் திகழும் வயிரப் பற்கள்
வடிவிற் சிறந்த வராகத் திருமுகம்
உடைபெறு நாசி புனிதத் தந்தம்
திறந்தி ருக்கும் திருமலி செவிகள்
மறமும் அறமும் மலர்ந்திடு விழிகள்
வனப்புள நாசி கதுப்புக் கன்னம்
சினத்தில் புடைக்கும் திரண்ட கழுத்து
20
அணிமணி யாரம் அசையும்மார்பு
திணிவும் வலிவும் திகழ்ந்திடு தோள்கள்
கனகசக் கும்பக் கவின்மிகுதனங்கள்
கரங்கள் அனைத்திலும் தரங்கொள் படைகள்
உரன்சேர் சக்கரம் வில்லொடு அம்பு
கூரிய வாளொடு சாட்டை கேடயம்
சீரிய கதையொடு சூலம் தாமரை
சங்கொடு உலக்கை கலப்பை எனப்பல
அங்கெழில் கரங்களில் அமைவாய் விளங்கும்
சுழிதிகழ் நாபி வலிமிகு வயிறு 30
அழகில் கொழிக்கும் அணிதிகழ் சிற்றிடை
குறுகிய இடையில் குன்றின் வலிமை
மறமலி தொடைகள் வைரக் கால்கள்
உருவெழில் முழங்கால்ஒளிதரும் முட்டி
விரிந்து கடைந்த வியப்புக் கணுக்கால்
எழுந்தால் இசைக்கும் இனிய நூபுரங்கள்
இழைந்தே ஒளிரும் இனிய நகங்கள்
அடியரை ஈர்க்கும் அழகிய பாதம்
வடிவெழில் பாதம் வலிவுள பாதம்
அருளை நல்கும் அளிமிகு பாதம் 40
விரைவைக் கொண்ட வித்தகப் பாதம்
குதிரையி லேறக் குதித்திடு பாதம்
எதிரியை உதைக்க இயங்கிடு பாதம்
கடினப் பாதம் கருணைப் பாதம்
பற்றிட எழிலாய் உற்றநற்பாதம்
வெற்றி விளைக்கும் வீரிய பாதம்
அன்னை வாராகி அருந்திறல் பாதம்
என்றும் அடியார்க் கிதந்தரும் பாதம்
பாதம் பணிவாய் பற்றுவோம் வாரீர்
ஆதர வளித்திடும் அம்மை அருளே! 50
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBB0vWPG%2BhZzPSNzkR-Dx8Lv8og4yu1Y_hsgV55RWcccVA%40mail.gmail.com.
On Aug 11, 2025, at 23:20, hemalatha hemalatha <shemal...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPRUchagBAFg_K2uKj1bc3gAq1b%2BKMPwBH1B9w_iaKwFbMRB3Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPRUchagBAFg_K2uKj1bc3gAq1b%2BKMPwBH1B9w_iaKwFbMRB3Q%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAJs5XLjxxPUa5M6mjfPQTodewVOjO%2B6QdXnTaA70xcMw%40mail.gmail.com.