ஈற்றடி - நாளும் நடப்பது நன்று

11 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Jun 19, 2026, 5:57:07 AM (6 days ago) Jun 19
to சந்தவசந்தம்
கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா
ஈற்றடி: *நாளும் நடப்பது நன்று*.

அஞ்சுவதற் கஞ்சி அருபொருளை அன்றாடம்
நெஞ்சிட்டுச் சொல்லதில் நேயமுடன் - பஞ்சமின்றி
வேளு டனறமே வேறின்றி வைத்திட
நாளும் நடப்பது நன்று

( வேள் -விருப்பம்)

_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

19/06/2026

Rajagopalan Soundararajan

unread,
Jun 19, 2026, 6:42:43 AM (6 days ago) Jun 19
to சந்தவசந்தம்
பக்தி, வாக்குத் தூய்மை, நித்யம் செய்ய வேண்டிய  பஞ்ச மஹாயக்ஞம், இவற்றைப் பட்டியலிட்டுச் சொன்ன விதம் அழகு.
ஸௌந்தர் 

Parthasarathy S

unread,
Jun 19, 2026, 7:01:45 AM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
நன்றி! துல்யமாக எடுத்துக் காட்டியதற்கு நன்றி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4954443c-2084-48c6-aaa7-481dd11d07edn%40googlegroups.com.


--
S. Parthasarathy
 98441 24542/9980794542

Ram Ramakrishnan

unread,
Jun 19, 2026, 3:17:41 PM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com

நாளும் நடப்பது நன்று


இன்னிசை வெண்பா


நேர்மறைச் சிந்தனை நெஞ்சில் இறையுணர்வு

ஆர்வத்தில் செய்வினை ஆற்றும் கடமையுடன்

வாளெனக் கூர்மதியில் வற்றா அருள்மேவ

நாளும் நடப்பது நன்று.



அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 19, 2026, at 07:01, Parthasarathy S <par...@goodearth.org.in> wrote:



Siva Siva

unread,
Jun 19, 2026, 3:50:20 PM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
நேர்மறைச் சிந்தனை   /

நேர்மறை - is not the correct form - in my thinking. 
எதிர்மறை என்ற சொல் உடன்பாடு என்பதற்கு எதிரான சொல்.

எதிர்மறை eṭir-maṟai , n. < எதிர்²- +. (Gram.) Negative; எதிர்மறுப்பு

மறை - மறுத்தல் என்பதன் அடிப்படையில் வரும் சொல்.
நிறுத்தல் - நிறை
பொறுத்தல் - பொறை
அறுத்தல் - அறை
இத்யாதி.

நல்ல / சீரிய / சிறந்த / etc. may communicate the positive thinking.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 19, 2026, 3:55:26 PM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
நேர்வழிச் சிந்தனை என்றால் சரியாமோ?


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 19, 2026, at 15:50, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 19, 2026, 4:05:24 PM (6 days ago) Jun 19
to santhav...@googlegroups.com
It is a valid construct. If it communicates what you are trying to say, that is fine.

நேர்வழி nēr-vaḻi , n. < id. +. Colloq. 1. Straight road, direct course; நேர்பாதை. 2. Upright conduct; நல்லொழுக்கம்.

V. Subramanian
Reply all
Reply to author
Forward
0 new messages