சந்தப்பா முயற்சிகள் (கோபால்)

633 views
Skip to first unread message

Vis Gop

unread,
Feb 3, 2020, 11:49:27 AM2/3/20
to santhav...@googlegroups.com
திரு ரமணி அவர்களின் பரிந்துரைப் படி நான் முயலும் சந்தப்பாக்களை இந்த இழையில் இடவிருக்கிறேன். உங்கள் துணையோடு சிறிது கற்றுக் கொள்வதே நோக்கம். இதுவரை வேறு இழைகளில் எழுதியவற்றை முதல் இடுகையாக இங்குத் தொகுத்திட்டுருக்கிறேன். மேலும் தொடர அவா. 
பணிவுடன் கோபால். 
——————————

வண்ணச் சந்தம் (1) (281/2020)

சுக்ல சதுர்த்தி (28/1/2020)
நங்கநல்லூர் (திருசூலபுரம்) ஆளும் ஶ்ரீ வரசித்தி விநாயகன் துதி.
[தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன     தனதான(/னா)]

வடித்த சிலையென

கனத்த உருவொடு களிற்று முகமொடு
   கரத்தி(ல்) ஒடிஎயி(று)             உடையோனே
   கறுத்த மணியணி கழுத்த(ன்) அருமக
   கவித்த(ம்) உணவிழை            எளியோனே 

மனத்தி(ல்) அலரடி மணக்க அழகுற
   வடித்த சிலையென                  அவணேகி
   மதத்தி(ன்) உறவற மலத்தி(ன்) நிழலற 
   மயக்க(ம்) இனியற                    அமராயோ

எனத்த எலிமுது(கு) இருக்கு(ம்) நினபெயர்
   இசைக்க அமுதலை                  பெருகாதோ
   எரிக்கு(ள்) எழுமக(ள்) இயற்று பிரணவ
   எழுத்தி(ன்) ஒலிவடி                   வினனே பைம்

புனத்தி னளைஅறு முகத்த னொடுநனி
   பொருத்தி யபெரும                    திருசூல
   புரத்தி(ல்) அருளொளி புரிக்க உலகிது
   புரக்க வெனவரு                         பெருமானே!

[கவித்தம் = விளாம்பழம்; மதம் = செருக்கு; புரிக்க = மலர]

நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.
—————————————

வண்ணச்சந்தம் (2) (31.01.2020)

சுக்ல ஷஷ்டி (31.01.2020)

வருக சரவண 
[தனன தனதன தனன தனதன தான தனதன தானனா]

அருண கிரியமு தருவி பெருகிட
   ஆடு(ம்) அறுமுக வேலனே!
   அழகு முழுவது(ம்) அரிய திரளென
   ஆக அதிலெழு பாலனே!

கருணை மிகுநின கழலி(ன்) நிழலது
   காவ(ல்) அருளில தாகிலே
   கலியி லெதுகதி? கரியி(ன்) இளையவ!
   கால(ம்) உனததி காரமே!

இருணி லவுமென(து) இதய மொளிபெற
    ஏறு மயி(ல்)மிசை ஏறியே
   இரும களிருன(து) இடவ லமமர
   ஏகி இருநிலை யாகவே!

வருண னிழிவுற வரத பதினிரு
   வாரி அருளிடு கையனே!
   வருக சரவண வருக குருவென
   வாவெ(ன்) உறவென ஐயனே!

[அருணகிரி = அருணகிரிநாதர், இருணிலவும் = இருள் நிலவும், இருநிலை யாகவே = நிலையாகவே இரு]

நல்வாழ்த்துகளுடன்
கோபால். 

———————————

வண்ணச்சந்தம் (3) 01/02/2020

திடமுடி வோடு!

[தனதன தான தனதன தான 

தனதன தான தனதான]


உடலில மாக உயிரதி லாக 

    உறவுக ளான               உணர்வோடே  

    உமையொரு பாதி உடையபி ரானின்

    ஒருமையில்  ஆகம்       உறையாமல்,


இடரிது நாளை எனவறியாமல்

    இகசுக மூறி                 உழலாதே!

    இருவினை பேசும் இயமனின் ஏடும் 

    இனியழு தாலும்            அழியாது!


மிடறடர் ஆல விடமுடை யானை 

    மிகுதுணை ஏதும்          இவணேது?

    விழவிழை யாது விதிநினை யாது 

    விடையனை ஏகி           விடிவேகு!


திடமுடி வோடு திலையனை நாடு!

    திருவடி பாடு!                 தெளிவோடு

    திமிரமி லாத சிவவொளி யோடு 

    திருநிறை வோடு            திகழ்வாயே!


நல்வாழ்த்துகளுடன்

கோபால்

[01.feb.2020]


————————————

Vis Gop

unread,
Feb 3, 2020, 11:54:22 AM2/3/20
to santhav...@googlegroups.com

வண்ணச்சந்தம் (4) 03/02/2020


நந்தவனம்

[தந்தனன தனனதன தனதான]


அம்புதியில் அரவணையி லயர்வோனே

    அம்புமல ருறைமகளை அணைவோனே


உம்பருடை முடிகள்தொடும் அடியோனே 

    உந்திதனி லலரயனை உடையோனே


கொம்புவிலு மசிகதையொ டுழலாழி

    கொண்டவுண ருனிலிணைய அருள்வோனே


நம்புமென துளமுனது விளையாடும்

     நந்தவனம் அதிலுகள வருவாயே!


நல்வாழ்த்துகளுடன்
கோபால். 

Vis Gop

unread,
Feb 3, 2020, 1:05:07 PM2/3/20
to santhav...@googlegroups.com
சந்தம்
 ‘தந்ததன தனனதன தனதான’ 
என்று இருந்திருக்க வேண்டுமோ?

கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
Feb 3, 2020, 9:45:22 PM2/3/20
to சந்தவசந்தம்
கடல்வண்ணன் மேலெழுந்த வண்ணம் அழகு! மூன்றாம் நான்காம் அடிகள் பதம்பிரித்துப் பொருளுரைத்தால் தெளிவேன். இதை வண்ணப் பாடல் என்பதினும் அறுசீர் வண்ண விருத்தம் என்று கொள்ளுதல் முறையன்றோ? அறிந்தோர் விளக்கலாம்.

ரமணி

Siva Siva

unread,
Feb 3, 2020, 10:15:33 PM2/3/20
to santhavasantham
/ இதை வண்ணப் பாடல் என்பதினும் அறுசீர் வண்ண விருத்தம் என்று கொள்ளுதல் முறையன்றோ? அறிந்தோர் விளக்கலாம். /
உங்கள் வினா எனக்குப் புரியவில்லை.

(திருப்புகழ் 329 அற்றைக்கு இரைதேடி)
தத்தத் ...... தனதான 

அற்றைக் .. கிரைதேடி 
..  அத்தத் ...... திலுமாசை
பற்றித் .. தவியாத 
..  பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் .. கதிர்வேலா 
..  வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் .. றுணர்போதா 
..  கச்சிப் ...... பெருமாளே.  

Vis Gop

unread,
Feb 3, 2020, 10:58:20 PM2/3/20
to santhav...@googlegroups.com
நன்றி. 

கொம்புவி(ல்)லும், அசி, கதையொடு, உழலாழி(யும்)

    கொண்டு, அவுணர் உன்னில் இணைய  அருள்வோனே


[சார்ங்கம், கத்தி, கதை, சுழலும் சக்ரம் இவற்றைக் கொண்டு அசுரர்களுக்கு முத்தி தருபவன்]


நம்புமென துளமுனது விளையாடும்

     நந்தவனம் அதிலுகள வருவாயே!


(உன்னை) நம்பும் எனது உள்ளம் உனக்கு “விளையாடும் நந்தவனம்”. அதில் நீ ஓடித் திரிந்து துள்ளிக் குதித்து மகிழ வருகவே. 

நல்வாழ்த்துகளுடன்
கோபால். 


Sent from my iPhone

Vis Gop

unread,
Feb 3, 2020, 11:03:23 PM2/3/20
to santhav...@googlegroups.com
உம்பர்தருத் தேனுமணிக் ....

என்ற திருப்புகழ் இந்தச் சந்தத்தை எனக்குக் காட்டியது - சிறிது மாற்றத்துடன்.
கோபால்.

Sent from my iPhone

M. Viswanathan

unread,
Feb 3, 2020, 11:08:14 PM2/3/20
to Santhavasantham
அருமை.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/36F84234-D0C7-433F-A87D-B950E9E69F53%40gmail.com.

ramaNi

unread,
Feb 4, 2020, 1:31:00 AM2/4/20
to சந்தவசந்தம்

பசுபதியார் தந்துள்ள வண்ணப் பாடல் அமைப்பை கீழ்க்காணும் ஃபார்முலாவில் கொள்ளலாம்.

கைத்தல நிறைகனிப் பாடல் வண்ணம்:
தத்தன தனதன தத்தன தனதன
 தத்தன தனதன ... தனதானா

1. துள்ளல் = தத்தன தனதன (அடிப்படை வாய்ப்பாடு)
2. குழிப்பு = 3 துள்ளல் ( = ஒன்று அல்லது மூன்று துள்ளல் பொதுவாக)
3. தொங்கல் = தனதானா (தனிச்சொல் போன்று)
4. குழிப்பு + தொங்கல் = கலை
5. கலைகள் x 2 (மோனையால் இணைந்தவை) = அடி
6. அடிகள் x 4 (எதுகையால் இணைந்தவை) = வண்ணப்பாடல்

சிவசிவா தந்துள்ள அற்றைக் கிரைதேடி பாடல் வண்ணம்:
தத்தத் தனதான 
. தத்தத் ... தனதான
தத்தத் தனதான 
. தத்தத் ... தனதானா

அற்றைக் கிரைதேடி 
. அத்தத் ...... திலுமாசை
பற்றித் தவியாத 
. பற்றைப் ...... பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா 
. வெற்பைத் ...... தொளைசீலா
கற்றுற் றுணர்போதா 
. கச்சிப் ...... பெருமாளே

இதில், தத்தத் என்பது துள்ளல்தேனே? அதுவே ஒரு துள்ளற்-குழிப்புதானே? புள்ளிகள் பின் தனியாக எழுதப்பட்ட தனதான, தனதானா ஆகியவை தொங்கல்கள்தாமே? அப்படியானால் தத்தத் தனதான/தனதானா என்பன (மோனையால் இணந்த) கலைகள்தாமே? ஆக, அற்றைக், பற்றித், வெற்றிக், கற்றுற் என்று எதுகையால் இணையும் நான்கு அடிகள்தாமே?

இதுபோல வண்ணக்கவி கோபால் பாடலையும் பிரித்துப்பார்த்தால் அது வண்ணப் பாடல் என்று தெரிகிறது. ஆயினும், இவ்விரு பாடல்களும் வண்ண மரபுப் பாக்களாகவும் அமைகின்றன அல்லனவா? எனவே அருணகிரியார் பாடலை வண்ணக் கலிவிருத்தம் என்றும் கோபாலர் பாடலை வண்ண அறுசீர் விருத்தம் என்றும் குறிக்கலாமா என்பதே என் ஐயம். இப்படித் திருப்புகழில் கணிசமாக வண்ண மரபுப் பாக்களைக் காணலாம். பார்க்கப் போனால் விருத்தத்தின் கூர்த்த பரிணாமே சந்தம், வண்ணப் பாக்கள் என்று சொல்லலாமோ?

அன்புடன்,
ரமணி

*****

Siva Siva

unread,
Feb 4, 2020, 8:09:09 AM2/4/20
to santhavasantham
என் எண்ணம்: வண்ணச்சந்த விருத்தம் -இது  பாடலின் தன்மையைக் குறிக்கின்றது, அடியின் அளவை அன்று. 
11-ஆம் திருமுறையிலும் வண்ணச்சந்த விருத்தங்களைக் காணலாம்.

உதாரணமாக -

11.40.7

("தனதனா .. தனதான" )

பதிகம்ஏ ழெழுநூறு பகருமா கவியோகி

..  பரசுநா வரசான பரமகா ரணவீசன்

அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூடர்

..  அவர்செய்வா தைகள்தீரு மனகன்வார் குழல்சூடின்

நிதியரா குவர்சீர்மை யுடையரா குவர்வாய்மை

..  நெறியரா குவர்பாவம் வெறியரா குவர்சால

மதியரா குவரீச னடியரா குவர்வானம்

..  உடையரா குவர்பாரில் மனிதரா னவர்தாமே.

 

Vis Gop

unread,
Feb 4, 2020, 11:54:02 AM2/4/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (5) 04/02/2020. 

துர்கா லக்ஷ்மி ஸரஸ்வதி துதி

அதிர மகிடனுடன் அமரில் அவுணர்குல
    அழிவை அறுதிசெய        உருவாகி
   அமைதி உலகிதனில் அமைய அருளும்உமை
    அனையின் அடிதொழுவ(து)   அமுதாமே!

பதியின் அடிமடியில் பதிய உவகையொடு 
     பரம னொடுகுலவு          மலராளைப்
    பணிய, அரியதிரு பலவும் நிறைவதொடு
     பசிவ றுமையகலும்        அடியோடே!

விதியின் அருமைமனை வெளிறு நறுகமல
     மிசைஅ மருமழகி             மணியாழ்மேல்
    விரல்கள் இழைய,மறை விதையில் அமரறிவை
     வினய முடனணுகில்         அருள்வாளே!

நிதிஅ றிவுதரும நெறியில் ஒழுகுதிறம்
      நிறைய, அனையரிவர்        பதம்நாடி
     நிதமும் மலருடனும் நிமல மனமுடனும்
      நியம நியதியொடு             தொழுவோமே!

Vis Gop

unread,
Feb 4, 2020, 11:57:39 AM2/4/20
to santhav...@googlegroups.com
நன்றி.
கோபால்.
Sent from my iPhone

> On 04-Feb-2020, at 9:36 AM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
> அருமை.

N. Ganesan

unread,
Feb 4, 2020, 6:49:26 PM2/4/20
to Santhavasantham
எனத்த - பொருள்?
நினபெயர் - பொருள்? நினபெயர் என வருமா?

நன்றி,
நா. கணேசன்

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 4, 2020, 7:08:06 PM2/4/20
to santhavasantham
எனத்த - என் அத்த = என் அத்தனே;
நினபெயர் = நின பெயர்கள் = உனது திருப்பெயர்களை;

சுந்தரர் தேவாரம் - 7.66.4
வீரத் தால்ஒரு வேடுவ னாகி
    விசைத்தொர் கேழலைத் துரந்துசென்  றணைந்து
போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப்
    புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன்
வாரத் தால்உன நாமங்கள் பரவி
    வழிபட் டுன்திற மேநினைந் துருகி
ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன்
    ஆவ டுதுறை ஆதிஎம் மானே 

N. Ganesan

unread,
Feb 4, 2020, 7:11:14 PM2/4/20
to Santhavasantham
On Tue, Feb 4, 2020 at 6:08 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
எனத்த - என் அத்த = என் அத்தனே;
நினபெயர் = நின பெயர்கள் = உனது திருப்பெயர்களை;

நன்றி.

நினதுபெயர், உனதுநாமம் என்பதன் கடைக்குறை எனக் கொள்ளவேண்டுமா?

நா. கணேசன்
 
--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Feb 4, 2020, 7:16:47 PM2/4/20
to santhavasantham
https://ta.wikipedia.org/s/95c

அது , ஆது என்பன ஆறாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும்.  

N. Ganesan

unread,
Feb 4, 2020, 7:38:57 PM2/4/20
to Santhavasantham


On Tue, Feb 4, 2020 at 6:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
>
> https://ta.wikipedia.org/s/95c
>
> அது , ஆது, அ என்பன ஆறாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும்.  


சம்பந்தர் தேவாரத்தில் “அ” வேற்றுமை உருபாய் பல இடங்களில் பயில்கிறது.
(பயில்-பயிர்- = மீண்டும் மீண்டும் வருவது. உ-ம்: மாடு பயிராகி இருக்கிறது. (கருவாகி உள்ளது எனப் பொருள்).).

தணிகைமணியவர்களின் ஒளிநெறி:
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-1.pdf/226
https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-1.pdf/227
> --
> குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
> குழுவிலிருந்து விலக:
> santhavasanth...@googlegroups.com.
> குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
> மேல் விவரங்களுக்கு:
> https://groups.google.com/d/optout
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 4, 2020, 8:19:11 PM2/4/20
to Santhavasantham
On Tue, Feb 4, 2020 at 6:16 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
https://ta.wikipedia.org/s/95c

அது , ஆது என்பன ஆறாம் வேற்றுமைக்குரிய உருபுகளாகும்.  


11 ஆண்டு முந்தைய இழை:

3.4.1

இடரினும் தளரினும் என(து) உறு நோய்
தொடரினும் உன கழல் தொழு(து) எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே


உன என்று வரும் இன்னொரு பாடல்:
7.60.3
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
    போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
    என்றி ருந்திட ருற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
    மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை யருளாய்
    இடைம ருதுறை யெந்தைபி ரானே.

நீங்கள் குறிப்பிடும் இப்பாடல்கள் போல,

மற்றவற்றைத் தேவார ஒளிநெறி நூல்களில் இருந்து தொகுக்கலாம்.

--------------

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D)  

https://www.jstor.org/stable/600654?seq=1 

மொழியியல்படி என்ன சொல்கிறார் எனப் பார்க்கவேண்டும்:

 Zvelebil, K. V. (Apr. - Jun., 1972). "Dravidian Case-Suffixes: Attempt at a Reconstruction"Journal of the American Oriental Society (American Oriental Society) 92 (2): 272–276. doi:10.2307/600654. பார்த்த நாள்: 2010-05-03. "The entire problem of the concept of 'case' in Dravidian will be ignored in this paper. In fact, we might posit a great number of 'cases' for perhaps any Dravidian language once we departed from the familiar types of paradigms forced upon us by traditional, indigenous and European grammars, especially of the literary languages. It is, for instance, sheer convention based on Tamil grammatical tradition (influenced no doubt by Sanskrit) that, as a rule, the number of cases in Tamil is given as eight.".

NG 

Siva Siva

unread,
Feb 4, 2020, 8:46:19 PM2/4/20
to santhavasantham
Thanks. 
But, if you think you want to do any further research into this sort of usage, then that should not be done in this thread - so as to not overshadow the main goal of this thread.


On Tue, Feb 4, 2020 at 8:19 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
.....

N. Ganesan

unread,
Feb 4, 2020, 9:12:10 PM2/4/20
to Santhavasantham
கம்ப ராமாயணம்:
 தானும் தன தம்  முனும் அல்லது - இலக்குமணனும், அவனுக்குத்
தமையனாகிய இராமனும்அல்லாமல்;  

வானும் நிலனும் முதல் ஈறு இல்
     வரம்பு இல் பூதம்
மேல்நின்று கீழ்காறும்
     விரிந்தன வீழ்வபோல,
தானும், தன தம்முனும் அல்லது,
     மும்மை ஞாலத்து
ஊனும் உயிரும் உடையார்கள்
     உளைந்து ஒதுங்க,
 

ramaNi

unread,
Feb 4, 2020, 9:24:36 PM2/4/20
to சந்தவசந்தம்
அருமை. வண்ணச்சந்த வாய்பாடும் குறித்தல் நலம்.
ரமணி

Vis Gop

unread,
Feb 4, 2020, 10:54:09 PM2/4/20
to santhav...@googlegroups.com
ஆம். வாய்பாடு இட மறந்து போனேன்.
[(தனன தனனதன)x3, தனதான/னா]
நன்றி.
கோபால்.
Sent from my iPhone

Vis Gop

unread,
Feb 6, 2020, 12:18:56 AM2/6/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (6) (06/02/2020)

பிரதோஷப் பாடல் (06/02/2020)

பெருவுடையான் 
[தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன தனதான]

வேழம் படைத்தழகு வேளும் படைத்தரிய
   வேதம் படைத்தசிவ நினகாலில்
   வீழும் சிரத்தவரை மேலும் சனிப்பகல
   வீடும் கொடுத்தருளும் உனையோர்ந்தே

ஆழம் குறித்தறிய ஆரிங் குதித்துவர
   லாகும் சொலித்தெவணு விரிவோனே
   ஆரம் பமற்றபர மானந் தமுற்றனையின்
   ஆலிங் கனத்திலிணை இறையோனே

சோழன் பெருத்தபுகழ் சூடும் தலத்திலொரு
   தூலம் தரித்தபெரு வுடையானே
   சோகம் தகர்க்கவல சூலம் பிடித்தவிரை
   சூழும் வயற்கழனி இடையோனே

ஊழங் குலுக்கமன ஊனஞ் சளைக்கவுடல்
   ஊடும் பிணிப்பிடியில் உழல்வோருன்
   ஊரிங் கிருக்கஅழும் ஓலம் விடுத்தணுக
   ஊகம் கொடுத்தருள்க பெருமானே!

நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.

Siva Siva

unread,
Feb 6, 2020, 8:29:23 AM2/6/20
to santhavasantham
/ உனையோர்ந்தே /

/ ஆரம் பமற்றபர மானந் தமுற்றனையின் /
Can sound better if modified.
or, may be the meter can be stated as "தானந்த தத்ததன ...... "?

/விரை    சூழும் வயற்கழனி/ = ?

Vis Gop

unread,
Feb 6, 2020, 10:54:08 AM2/6/20
to santhav...@googlegroups.com
/ உனையோர்ந்தே /
உன்னை அறிய விரும்பி ஆராய்ந்து ....


/ ஆரம் பமற்றபர மானந் தமுற்றனையின் /
Can sound better if modified.

Sure. I could not think beyond this since it came quickly and fitted into the meter. I will keep thinking for some more time. Still in the primary stage of learning வண்ணச் சந்தம். 

or, may be the meter can be stated as "தானந்த தத்ததன ...... "?
This will affect most of the other lines that sound alright. 

விரை    சூழும் வயற்கழனி/ = ?

வயல் = விளைநிலம்
கழனி = வயல், சேறு, நீர், ...
சூழும் மணம் இவை அனைத்திலிருந்தும் வருவது. 

நன்றியுடன் 
கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
Feb 6, 2020, 10:57:43 PM2/6/20
to santhav...@googlegroups.com
On Thu, Feb 6, 2020 at 10:54 AM Vis Gop <vis...@gmail.com> wrote:
/ உனையோர்ந்தே /
check pattern compliance. 
--

--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Vis Gop

unread,
Feb 7, 2020, 12:09:23 AM2/7/20
to santhav...@googlegroups.com
/ உனையோர்ந்தே /
check pattern compliance. 
This error was not inadvertent, but due to my ignorance. I will change it to உனைநேடி. 
Hope it would fit. 
Thanks. 
Gopal. 

On Fri, Feb 7, 2020 at 9:27 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Vis Gop

unread,
Feb 8, 2020, 12:27:17 AM2/8/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (7)  [08/02/2020]

தைப்பூசத்தழகு
[தானத் தனன தனதான/னா]

மாவுக் குரிய திருவாளன்
  மாலுக் கருமை மருகோனே
நாவுக் கமுது நினபேரென் 
   நாளுக் கழகு நினதாதல் 
பாவுக் கழகு நினையோதல் 
   பாலுக் கழகுன் அபிடேகம் 
பூவுக் கழகுன் உரமே,தைப்
  பூசத் தழகு முருகோனே!

[மா = திருமகள்]

நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.

N. Ganesan

unread,
Feb 9, 2020, 10:39:34 PM2/9/20
to சந்தவசந்தம்
அருமை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 9, 2020, 10:42:54 PM2/9/20
to சந்தவசந்தம்
<<<
சோழன் பெருத்தபுகழ் சூடும் தலத்திலொரு
   தூலம் தரித்தபெரு வுடையானே
   சோகம் தகர்க்கவல சூலம் பிடித்தவிரை
   சூழும் வயற்கழனி இடையோனே
>>>

வயற்கழனிகள் சூழ்வதால் “தண்செய்” என்னும் பெயர் தஞ்சை என்றாகிறது என்ப.

நா. கணேசன்

Vis Gop

unread,
Feb 10, 2020, 3:39:15 AM2/10/20
to santhav...@googlegroups.com
நன்றி திரு கணேசன். 
கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Feb 15, 2020, 2:53:23 AM2/15/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (8)   (15/2/2020)

கருவாழக்கரை உமை!
[தனதன தனந்த தத்தத் தனதன தனந்த தத்தத்
தனதன தனந்த தாத்தத் தனதான]

திருவடி நினைந்து பற்றித் திசையெணி வணங்க முட்டத்
திருவளம் நிறைந்து வாழ்க்கைச்                     செயமாமே!
சிலையென அமர்ந்து கொற்றத் திகிரியி லடங்கு பத்துத் 
திசைகளில் இயங்கும் ஆற்றற்                          குவைநீயே!

கருணையி லலர்ந்த வட்டக் கருவிழி இரங்க நச்சுக் 
கலியிட மிருந்து காக்கக்                                     கருவாழக் 
கரையினி  லிடம்பி டித்துக் கலைவடி(வு) அடைந்தெ மக்குக்  
கழலினை வணங்கு பேற்றைத்                         தருதேவி 

உருவினை மனந்த ரித்தற்(கு) உடலடி பணிந்தி ருத்தற்(கு)
உமையுனை மகிழ்ந்து போற்றற்                      கருள்நாவை! 
உருசியி லரும்பு; சித்தத் தொளியென எழும்பு; குற்றத்(து)
உறவுகள் இலென்ப தாக்கித்                              துணிவீக!

பருவரி சுமந்தி ருக்கப் படையொடு களஞ்சி வக்கப்
பகைமகி டன்அந்தம் ஈட்டப்                               பொருதாயே
பயிரொடு நிலங்கொ ழிக்கப் பலவகை விலங்கு மிக்குப்
பறவைகள் இனந்த ழைக்கத்                             தருவாயே! 

[முட்ட = மிகுந்திருக்க, பருவரி = பருமை உடைய அரி/சிங்கம்]

நல்வாழ்த்துகளுடன் 
கோபால்.

ramaNi

unread,
Feb 16, 2020, 12:11:40 AM2/16/20
to சந்தவசந்தம்
சபாஷ்! வாழ்க்கைச் செயமாமே! => ஒற்று மிகுவதி பற்றி ஐயம். வடமொழியாக ஜெயமாமே என்றால் மிகாது, தமிழ்ப்படுத்துவதால் மிகுமா?
ரமணி

Vis Gop

unread,
Feb 16, 2020, 7:48:46 AM2/16/20
to santhav...@googlegroups.com
நன்றி. 

திருப்புகழ்:

தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட்பட் டிலங்கப்பொற்
சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை
. . . . . 
. . . . .

செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
செயம்பற்றிக்
கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே.

கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
Feb 21, 2020, 6:47:59 AM2/21/20
to santhav...@googlegroups.com
வண்ணப்பாடல் (9) (20.02.2020)

பிரதோஷப் பாடல் (பிரதோஷப் பாடல்)

தில்லையே பெரிது
[தானா தனன தனனா தனன
தானா தனன தனதான]

மானார் ஒருகை, மழுவார் மறுகை,
மாடே(று) உவகை, மதிவேணி,
மாவார் உடலை மறைஆ னைஉரி,
மாதோர் அரையில் எனவாகி,

வானார் புனலை வளையா முடியில்
மார்மேல் அரவை உடையானே!
மாவே லைதனில் வரும்ஆ லவிட
மாலார் மிடறு மினஆடாய்!

தேனாம் உனது திருநா மம்அது
தேவா மிருதம், அதுவேதம்!
தேசால் அரிது, திலையே பெரிது,
தீரா நடனம் அனுபோகம்!

கோனான் எமது குடைநீ! சுழலு
கோளா(று) உனது விதிவாறே!
கோடா நினைவு கொடுநீ! கொடிது
கூடா(து) அருள்க பெருமானே!

( மாவு ஆர் உடல்=பொடி/ நீறு பூசிய உடல்; மாவேலை=பெரிய கடல்; தேசு=ப்ரகாசம்; கோளாறு= கோள்களின் போக்கு; மால்= கருமை; மாலார் மிடறு=கறுத்த கழுத்து)

Swaminathan Sankaran

unread,
Feb 21, 2020, 7:59:26 AM2/21/20
to santhav...@googlegroups.com
அருமையான துதி.

சங்கரன் 

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

Vis Gop

unread,
Feb 21, 2020, 10:59:51 AM2/21/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்


Sent from my iPhone

RAJAGOPALAN APPAN

unread,
Feb 22, 2020, 3:20:34 AM2/22/20
to santhav...@googlegroups.com
செயமாமே என்றாலும் ஒற்று மிகாது என்றே தோன்றுகிறது.
அ.ரா.

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Feb 27, 2020, 10:31:22 PM2/27/20
to Santhavasantham
கருவாழக்கரை உமை!
[தனதன தனந்த தத்தத் தனதன தனந்த தத்தத்
தனதன தனந்த தாத்தத் தனதான]

எனக்கும்  எடுத்துத்தந்து உதவினீர்கள் , நன்றி !

புவிதனில் உயர்ந்த சந்தக் 
கவிகளைப்   படைத்த  ளித்துச் 
செவிகளில்  விருந்த  ருத்துங் ...செயலாலே 

சவிமிகும்  வசந்த  சந்த
நவினநற்  குழுக்க ளிப்பில் 
அவிமனச்  சிறிய  னென்றற் …. கருளோடே 

பரிவுடன்  கவிப்பெ  ருஞ்சு
டரெனும்   பெருத்த  பட்டம் 
தரவிசை  வளித்த  அன்பை …..  மறவாமல் 

உரியநன்   முயற்சி  செய்து
அரிதெனும்  உயர்ப  தத்தை 
ஒருதின   மடைந்தும்     மாசி          …..  உறுவேனே!

அன்புடன்  திருச்சி  புலவர் இராமமூர்த்தி.
   
 


சனி, 22 பிப்., 2020, பிற்பகல் 1:50 அன்று, RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com> எழுதியது:

Vis Gop

unread,
Feb 29, 2020, 10:47:54 AM2/29/20
to santhav...@googlegroups.com
அழகு. ஆயினும் குழிப்புப் பிழைகள் தென்படுகின்றன. கவனிக்கலாம்.  
பணிவுடன் கோபால். 


Sent from my iPhone

On 28-Feb-2020, at 9:01 AM, Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:

கருவாழக்கரை உமை!
[தனதன தனந்த தத்தத் தனதன தனந்த தத்தத்
தனதன தனந்த தாத்தத் தனதான]

எனக்கும்  எடுத்துத்தந்து உதவினீர்கள் , நன்றி !

புவிதனில் உயர்ந்த சந்தக் 
கவிகளைப்   படைத்த  ளித்துச் 
செவிகளில்  விருந்த  ருத்துங் ...செயலாலே 
....

Vis Gop

unread,
May 6, 2020, 8:17:22 AM5/6/20
to santhav...@googlegroups.com
வண்ணப்பாடல் (10) (05.05.2020)

பிரதோஷப் பாடல் (5 மே 2020)

விசுவேச
[தந்த தனதான தனன தனதான 
தந்த தனதான தனதான ]

கங்கை  களியோடு கடலி னுருவோடு
   கங்கு களினூடு               செலுமூரில்
   கஞ்ச மலரான கருணை விழியோடு
   கண்டு படியாளு             பவளோடும்,
பொங்கு பரிவோடு புவன(ம்) நலியாது
   பொங்கி அனமீயு(ம்)     அனையோடும்,
புண்ட ரிகமாத வனரி வனமாலி
புங்க வனுநீல                  வணனோடும்,
தங்க மயமான தனுவை மறையாது
    தண்ட மொடுகாணு     பவனோடும்,
    தங்கு விசுவேச! தரையி லெழிலோடு
சந்த இசைமேவ             மகிழ்வோனே!
எங்க ணுமயான எரியி(ல்) அருளாகி
    எந்தை நினபாத            நிழலீய
    இந்த வடகாசி எளிய பதிவாழு(ம்)
    எங்க ளர!ஆசி                அருளாயோ!  

நல்வாழ்த்துகள் 
கோபால் 

Siva Siva

unread,
May 6, 2020, 9:01:23 AM5/6/20
to santhavasantham
Nice.

/எங்க ணுமயான எரியி(ல்) அருளாகி
    எந்தை நினபாத            நிழலீய/
Not fully following the construct.
எங்கும் இருள்சூழ எரியின் இடையாடும்
எந்தை ..... ?
 
/ வடகாசி எளிய பதிவாழு(ம்) /
What does the qualifier  "எளிய" mean in the context of the place "வடகாசி "?

Vis Gop

unread,
May 6, 2020, 12:08:21 PM5/6/20
to santhav...@googlegroups.com
 நன்றி.

/எங்க ணுமயான எரியி(ல்) அருளாகி
    எந்தை நினபாத            நிழலீய/
Not fully following the construct.
எங்கும் இருள்சூழ எரியின் இடையாடும்
எந்தை ..... ?
காசி மஹாஸ்மசானம் என்று அழைக்கப்படுகிறது. அதில், கண்ட இடத்தில் சவ எரிப்பு நடைபெறுகிறது; இரவு பகலாக! ஆகவே தெய்வ தரிசனத்தின் போதும், கங்கா ஸ்நானத்தின் போதும் எரிகின்ற காட்சிகள் கண்ணெதிரே நிகழ்கின்றன. ஆயினும் அந்தக் காட்சிகள் காணக் கூடாதவையாக எண்ணப் படுவதில்லை. அவை இறைவனின் அருள் பெற்ற நிகழ்வுகள். இது காசியின் தனிப்பெருமை!

/ வடகாசி எளிய பதிவாழு(ம்) /
What does the qualifier  "எளிய" mean in the context of the place "வடகாசி "?
எளிமையும் ஆடம்பரமும் ஒரு இடத்துக்கோ நாட்டுக்கோ கூடப் பொருந்தும். மிகப் பெருமை வாய்ந்த நகரங்கள் எளிமையான தோற்றமுடையனவாக இருக்கலாம். என் கண்ணில் பட்டவாறு, மிகப்பழமை வாய்ந்த, அரசாட்சியில் தலை நகரமாய் விளங்கிய, மிகப்பெரிய பல்கலைக் கழகத்தை உடைய காசி மா நகரம், அதன் கங்கைக்காகவும், விசுவநாதருக்காகவும், முக்திக்காகவும் தான் பிரசித்தி பெற்றிருக்கிறது; எங்கு நோக்கினும் எளிமையே தென்படுகிறது. மூதாதையர்களைக் கரையேற்ற வந்தவர்கள் அரசர்களாயினும் , செய்யும் கிரியைகளாலும்,  ஆடை ஆபரணங்களாலும்  எளிமையாகத்தான் இருக்கவியலும்! எளிமையே  உருவான எந்தை, தன்னை அடைய விரும்பும் ஆன்மாக்களுக்கென்று, ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தால் அது எளிமையாகத்தானே இருக்கும்!

கோபால்.

Subbaier Ramasami

unread,
May 6, 2020, 11:56:49 PM5/6/20
to santhavasantham
அருமை. நல்ல தேர்ச்சி

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
May 7, 2020, 2:51:43 AM5/7/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.
Sent from my iPhone

Vis Gop

unread,
May 7, 2020, 6:54:03 AM5/7/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (11) (07/05/2020)

களிறு வடிவோனே
[தனன தனன தனன தனன 
தனன தனன தனதானா]

அகர முகர மகர மிணைய
   அதனி லெழுமொ ருருவாவாய்!
   அசைவு நிலையொ டிழைய விளையு
   மழலு மொலியு மெனஆவாய்!
சகட விதியி லுலக முழல
   சலன மிலென நடுவாவாய்!
   சரண மரணெ னவல மறிக
   சடிதி யுதவ வருவாயே!
பகலு மிரவு மிறவி பிறவி
   பயண மனுப வமுநீயே!
   பகுதி விகுதி பழமை புதுமை 
   பலவு முதய முனில்தானே!
நிகரு மிலது நிழலு மிலது
   நினது நிசமு மறிவாரார்?
   நினைவி லுலவி நெகிழ மகிழு
   நிமல களிறு வடிவோனே!

பொருள் விளக்கம் 

அகரம், உகரம், மகரம் - இவை இணைய
   அதனில் எழும் ஒரு உருவான ஓங்காரம் நீ!
   அசைவதும்  நிலைத்திருப்பதும் (ஒன்றோடொன்று) இழைய  அதில் விளையும் 
   அழலும் (தீ) ஒலியும் நீயே ஆவாய்!
சகடத்தின் சுழற்சி விதிப்படி உலகம் உழன்று கொண்டிருக்க,
   சலனமில்லாத நடுத்தானமாய் (அச்சாய்) நீ இருப்பாய் !
   உன் சரணம் (பாதம்) எனக்கு அரண்! என் அவலத்தை நீ அறிந்துகொள்!
   சடிதி (விரைவில்) உதவி செய்ய வாராய் !
பகலும், இரவும், இறப்பும், பிறப்பும், 
   வாழ்க்கைப் பயணமும் அதில் அடையும் அனுபவமும் நீயே!
   பகுதி (ப்ரக்ருதி, இயற்கை), விகுதி (விக்ருதி, மாற்றம்), பழமை, புதுமை,
   ஆகிய பலவும் உதயதயமாவது உன்னிடம் தானே!
நிகரும் (ஒப்புமை) இல்லாதது, நிழலும் (பிம்பம்) இல்லாதது உன் நிலை!
   உன்னுடைய நிசமான தன்மையை அறிய வல்லவர் யார்?
   என் நினைவில் வந்து பழகி, என் நெஞ்சை நெகிழ வைத்து, அதிலே மகிழும் 
   நிருமலனே! களிறு (யானை) வடிவம் கொண்ட விநாயகப் பெருமானே!

நல்வாழ்த்துகள் 
கோபால்.


ramaNi

unread,
May 7, 2020, 9:26:47 AM5/7/20
to சந்தவசந்தம்
அற்புதம்! பாடலின் சீர்களை

அகரம் உகரம் மகரம் இணைய
   அதனில் எழுமொ ருருவாவாய்!

என்று பிரித்தெழுதினால் சந்தம் பிறழாது, புரிந்துகொள்ளலும் கூடும் என்பது என் கருத்து. ஆயின், இவ்வாறு பிரித்தெழுதினால் வண்ணத்தின் முடுகோசை கெடும்.

ரமணி

Siva Siva

unread,
May 7, 2020, 9:47:05 AM5/7/20
to santhavasantham
On Thu, May 7, 2020 at 6:54 AM Vis Gop <vis...@gmail.com> wrote:
வண்ணச்சந்தம் (11) (07/05/2020)

களிறு வடிவோனே
[தனன தனன தனன தனன 
தனன தனன தனதானா]

அகர முகர மகர மிணைய
   அதனி லெழுமொ ருருவாவாய்!
   அசைவு நிலையொ டிழைய விளையு
   மழலு மொலியு மெனஆவாய்!
சகட விதியி லுலக முழல
   சலன மிலென நடுவாவாய்!
--> உழலச் சலனம் -- பொதுவாக ச் மிக்கு வரும். 'உழல' என்பது வியங்கோள் எனில் ச் மிகாது.


   சரண மரணெ னவல மறிக
   சடிதி யுதவ வருவாயே!
பகலு மிரவு மிறவி பிறவி
   பயண மனுப வமுநீயே!
   பகுதி விகுதி பழமை புதுமை 
   பலவு முதய முனில்தானே!
நிகரு மிலது நிழலு மிலது
   நினது நிசமு மறிவாரார்?
   நினைவி லுலவி நெகிழ மகிழு
   நிமல களிறு வடிவோனே!

பொருள் விளக்கம் 

அகரம், உகரம், மகரம் - இவை இணைய
   அதனில் எழும் ஒரு உருவான ஓங்காரம் நீ!
   அசைவதும்  நிலைத்திருப்பதும் (ஒன்றோடொன்று) இழைய  அதில் விளையும் 
   அழலும் (தீ) ஒலியும் நீயே ஆவாய்!
சகடத்தின் சுழற்சி விதிப்படி உலகம் உழன்று கொண்டிருக்க,
   சலனமில்லாத நடுத்தானமாய் (அச்சாய்) நீ இருப்பாய் !
   உன் சரணம் (பாதம்) எனக்கு அரண்! என் அவலத்தை நீ அறிந்துகொள்!
   சடிதி (விரைவில்) உதவி செய்ய வாராய் !
பகலும், இரவும், இறப்பும், பிறப்பும், 
   வாழ்க்கைப் பயணமும் அதில் அடையும் அனுபவமும் நீயே!
   பகுதி (ப்ரக்ருதி, இயற்கை), விகுதி (விக்ருதி, மாற்றம்), பழமை, புதுமை,
   ஆகிய பலவும் உதயதயமாவது உன்னிடம் தானே!
நிகரும் (ஒப்புமை) இல்லாதது, நிழலும் (பிம்பம்) இல்லாதது உன் நிலை!

--> 'நிழல்' என்பது ஒளி / இடம் என்ற பொருளில்  தேவாரத்தில் பரவலாக வரும்.

Vis Gop

unread,
May 7, 2020, 11:19:15 AM5/7/20
to santhav...@googlegroups.com
தாங்கள் சொல்வது சரியே. சந்தக் கட்டுக்காக இவ்வாறு எழுதுவதால் எளிமையான சொற்கள் இருந்தும் பொருள் சொல்ல வேண்டி இருக்கிறது. நான் இன்னும் அரிச்சுவடி நிலையில் இருப்பதால் மிகவும் விரும்பத்தக்க எழுதுமுறை இன்னும் பிடிபடவில்லை.
நன்றியுடன்
கோபால்.


Sent from my iPhone

Vis Gop

unread,
May 7, 2020, 11:22:16 AM5/7/20
to santhav...@googlegroups.com
--> உழலச் சலனம் -- பொதுவாக ச் மிக்கு வரும். 'உழல' என்பது வியங்கோள் எனில் ச் மிகாது.

ஆம். பிழைதான். திருத்தி எழுதவேண்டும். 
நன்றியுடன்
கோபால். 
Sent from my iPhone

On 07-May-2020, at 7:16 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Rajja Rajagopalan

unread,
May 7, 2020, 4:16:14 PM5/7/20
to santhav...@googlegroups.com
Nice Gopalji

Sent from my iPhone

On 7 May 2020, at 14:47, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
May 7, 2020, 10:40:51 PM5/7/20
to santhav...@googlegroups.com
Thanks Thiru Rajja.
gopal.

Sent from my iPhone

> On 08-May-2020, at 1:46 AM, Rajja Rajagopalan <raj...@gmail.com> wrote:
>
> Nice Gopalji

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 7, 2020, 10:54:49 PM5/7/20
to சந்தவசந்தம்
மிக அருமை.
>   அசைவு நிலையொ டிழைய விளையு
>   மழலு மொலியு மெனஆவாய்!  
பிரபஞ்ச மூலத்தைக் குறிக்கும்  ஆழமான பொருளை உள்ளடக்கிய வரி.

... அனந்த்

 


Vis Gop

unread,
May 7, 2020, 11:51:15 PM5/7/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி.
கோபால்.


Sent from my iPhone

Vis Gop

unread,
May 8, 2020, 10:33:23 PM5/8/20
to santhav...@googlegroups.com

வண்ணச்சந்தம் (12) (9.5.2020)


சித்தசுத்தி

[தத்தந் தத்தந் தனதான]


சித்துஞ் சத்தும் பிணைசேர

உத்தம் பித்தம் தலையேற

நித்தம் புத்தம் புதிதாக

அத்தன் நித்தம் புரிவானே!

சத்தங் கத்தும் குரலாலே

முத்தம் பத்தம் கொடுபாடித்

தத்தம் மொத்தம் தருநேயர்

சித்தம் சுத்தம் பெறுவாரே!



பொருள் விளக்கம்:


[நித்தம் = நடனம்; நித்தம்=தினமும; முத்தம்=அன்பு; பத்தம்=நன்றி, பத்தி]


சித்து சத்தென்னும் இறைமையின் தத்துவ ஸ்வரூபங்கள் இறுகிப் பிணைய,

ஆனந்தமென்னும் பித்தின் நிலை உச்சம் பெற,

நித்தமும் புதுமை விளங்கும்

ஆட்டத்தை இறைவன் ஆடுவான்! (அப்போது)

உரத்த குரல் கொண்டு

அன்போடும் நன்றியோடும் துதிபாடித்

தங்களின் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அன்பர்கள்

சித்த சுத்தி பெறுவார்கள்!

Siva Siva

unread,
May 9, 2020, 12:20:50 AM5/9/20
to santhavasantham
Check pattern conformance in a couple of places.

Vis Gop

unread,
May 9, 2020, 12:29:28 AM5/9/20
to santhav...@googlegroups.com
Thank you. 
May I know what the pattern is in the two places as they are?  
Gopal. 


Sent from my iPhone

Vis Gop

unread,
May 9, 2020, 5:07:52 AM5/9/20
to santhav...@googlegroups.com

திரு சிவசிவா சுட்டிய பிழை திருத்தப்பட்ட பின்:



வண்ணச்சந்தம் (12) (9.5.2020)


சித்தசுத்தி

[தத்தந் தத்தந் தனதான]


சித்துஞ் சத்தும் பிணைசேர

உத்தம் பித்தம் தலையேற

நித்தம் புத்தம் புதிதாக

நித்தம் சித்தன் புரிவானே!

சத்தங் கத்தும் குரலாலே

முத்தம் பத்தம் கொடுபாடி

மொத்தம் தத்தம் தருநேயர்

சித்தம் சுத்தம் பெறுவாரே!



பொருள் விளக்கம்:


[நித்தம் = நடனம்; நித்தம்=தினமும்; சித்தன்=ஞானி,சிவன்; முத்தம்=அன்பு; பத்தம்=நன்றி, பத்தி; தத்தம்=அர்ப்பணித்தல்]


சித்து சத்தென்னும் இறைமையின் தத்துவ ஸ்வரூபங்கள் இறுகிப் பிணைய,

ஆனந்தமென்னும் பித்தின் நிலை உச்சம் பெற,

நித்தமும் புதுமை விளங்கும்

ஆட்டத்தை இறைவன் ஆடுவான்!

உரத்த குரல் கொண்டு

அன்போடும் நன்றியோடும் துதிபாடித்

தங்களின் அனைத்தையும் அர்ப்பணிக்கும் அன்பர்கள்

சித்த சுத்தி பெறுவார்கள்!


நல்வாழ்த்துகள்

கோபால். 


Siva Siva

unread,
May 9, 2020, 8:50:28 AM5/9/20
to santhavasantham
இப்பாடலில் வல்லின ஒற்றெல்லாம் தகரமாகவே அமையப் பாடிய முயற்சி மெச்சத்தக்கது.

Vis Gop

unread,
May 9, 2020, 9:11:15 AM5/9/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 

(பிழை கண்டபோது அந்த இரண்டு இடங்களிலும் அமைந்திருந்த (பிழையான) சந்தம் என்னவென்று அறிய விரும்புகிறேன். )

கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
May 9, 2020, 9:27:55 AM5/9/20
to santhavasantham
தெரியாமலே திருத்திவிட்டீரோ!

"தத்தந் த..." - 
"த்" என்ற இடத்தில் வல்லின ஒற்று
ந்த - என்ற இடத்தில் வல்லின ஒற்றும் அதனைத் தொடர்ந்து வல்லின உயிர்மெய் (அரிதாக இடையின உயிர்மெய்?) வரும்.

தந்தனந் தந்தத் ...... தனதான

.. தந்தனந் தந்தத் ...... தனதான


சந்ததம் பந்தத் ...... தொடராலே

.. சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே

கந்தனென் றென்றுற் ...... றுனைநாளும்

.. கண்டுகொண் டன்புற் ...... றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே

.. சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா

செந்திலங் கண்டிக் ...... கதிர்வேலா

.. தென்பரங் குன்றிற் ...... பெருமாளே.


 


--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
May 9, 2020, 10:16:23 AM5/9/20
to santhav...@googlegroups.com
தெரியாமலே திருத்திவிட்டீரோ!
ஆம். யூகிக்க முடிந்தது. 

ந்த - என்ற இடத்தில் வல்லின ஒற்றும் அதனைத் தொடர்ந்து வல்லின உயிர்மெய் (அரிதாக இடையின உயிர்மெய்?) வரும்.
மெல்லின ஒற்று என்று சொல்ல வந்தீர்களோ?

நான் அறிய விரும்பியது
தத்தம் மொத்தம்
என்பதை எந்த வாய்பாடாவது கொண்டு குறிப்பிட முடியுமா என்பது. 

நன்றி. 
கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
May 9, 2020, 10:26:39 AM5/9/20
to santhavasantham
Yes. Thanks.

ந்த - என்ற இடத்தில்  மெல்லின ஒற்றும் அதனைத் தொடர்ந்து வல்லின உயிர்மெய் (அரிதாக இடையின உயிர்மெய்?) வரும்.  

தத்தம்மொத்த - தத்த தத்த;  (தத்தன்னத்த என்றும் சொல்லக்கூடுமோ. பிறர் தெளிவிக்கக்கூடும்);

Vis Gop

unread,
May 9, 2020, 10:59:57 AM5/9/20
to santhav...@googlegroups.com
நன்றி.
கோபால்.
Sent from my iPhone

ramaNi

unread,
May 9, 2020, 11:11:15 AM5/9/20
to சந்தவசந்தம்
கோபால்ஜியின் பாடல் அருமை.
தத்தம் மொத்த என்று பிரித்தெழுதினால் தத்த தத்த, தத்தம்மொத்த என்று சேர்த்தால் தத்தன்னத்த என்று கொள்ளலாமல்லவா?
ரமணி

Vis Gop

unread,
May 9, 2020, 11:57:10 AM5/9/20
to santhav...@googlegroups.com
நன்றி, திரு ரமணி.
வாய்பாடு குறித்த விளக்கங்கள் அறிஞர்களே தரவியலும்.
கோபால்.

Vis Gop

unread,
May 10, 2020, 6:22:51 AM5/10/20
to santhav...@googlegroups.com

வண்ணச்சந்தம் (13) (10.05.2020)


உன்னருமை அறியேனே!


[தன்ன தனன தனதான]


அன்னை நினது மடிமீதிச்

சின்ன வுலக மதுபேணி

அன்ன வமுது வளிநீரும்

இன்னு மெணறு வளமாக

மின்னு மெழிலு மிசையாவும்

பின்னி முழுமை யுடனீயும்

தன்ன லமிறை கலவாத

உன்ன ருமையை அறியேனே!


பொருள் விளக்கம்


[இறை = சிறிது]


அன்னையே! உன்றன் மடிமீது இந்தச்

சிறிய உலகத்தைப் பேணிக் காத்து,

அமுதாகும் உணவையும் காற்றையும் நீரையும்

இன்னும் எண்ணற்ற வளங்களாக

மின்னுகிற இயற்கை எழிலையும் இசைமுதலான (இன்பம் தரும்) யாவற்றையும்,

ஒன்றோடொன்று இயையச் சேர்த்து முழுமையுடன் தந்திருக்கின்ற

தன்னலம் சிறிதும் கலவாத

உன் அருமையை நான் அறிந்திலேனே!

Siva Siva

unread,
May 10, 2020, 10:29:21 AM5/10/20
to santhavasantham
வண்ணமயமான காலம் போல்! :)

தாயைப் போற்றும் பாடல் நன்று! 
 

Vis Gop

unread,
May 10, 2020, 12:10:10 PM5/10/20
to santhav...@googlegroups.com
நன்றி.
இந்தத்தாய் ஜகஜ்ஜன்னீ!
கோபால்.


Sent from my iPhone

Vis Gop

unread,
May 10, 2020, 12:37:45 PM5/10/20
to santhav...@googlegroups.com
இந்தத்தாய் ஜகஜ்ஜனனீ!


Sent from my iPhone

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 10, 2020, 12:46:20 PM5/10/20
to சந்தவசந்தம்
Beautiful.

... அனந்த்

Vis Gop

unread,
May 10, 2020, 1:01:17 PM5/10/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 


Sent from my iPhone

On 10-May-2020, at 10:16 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Beautiful.

... அனந்த்

Vis Gop

unread,
May 10, 2020, 9:21:03 PM5/10/20
to santhav...@googlegroups.com

வண்ணச்சந்தம் (14) (11.05.2020)


அருள்வானே!


[தனனந் தனனந் தனனத் தனத்த தனதான]


சிவனுஞ் சிவையுந் திமிலிற் பருத்த விடையேறிச்

...சிறுவன் குகனும் திகழக் களிற்று முகனோடு

கவருங் கலையுங் கமலக் கரத்தி னருளோடும்

...கமழுங் கவினென் கணிலெக் கணத்தி லுறுவேனோ

தவமும் பணியும் தணிவற் றியற்றி வருவோர்கள்

...தயவுஞ் சரணுஞ் சரணத் தலத்தி லடைவாரே

கவலும் கனலின் கணனைத் துதிக்க இலதாகும்

...கரமுஞ் சிரமுங் கழலிற் பதிக்க அருள்வானே!


பொருள்விளக்கம்:


சிவனும் அம்பிகையும் பருத்த திமிலுடைய இடபத்தில் ஏறி அமர்ந்திருக்க

சிறுவன் முருகனும் ஆனைமுகனோடு அங்கிருக்க,

தாமரை போன்ற அருட்கரங்களோடு வசீகரமான கலையுருவாய்க்

கமழ்கின்ற அழகை எப்போது நான் என் கண்ணால் காண்பேனோ?!

இடையறாது தவமும் தொண்டும் செய்து வருபவர்கள் 

இறைவனின் தயவும், அவன் சரணத்தில் அடைக்கலமும் அடைவார்கள் !

கவலைகள் யாவும் தீக்கண்ணனைத் துதிக்க மறைந்து விடும்!

அவன் திருவடியில் கைகளையும் சிரத்தையும் பதிக்க அவன் அருள் புரிவான். 


நல்வாழ்த்துகள் 

கோபால். 

Sent from my iPhone

ramaNi

unread,
May 10, 2020, 9:42:23 PM5/10/20
to சந்தவசந்தம்
அற்புதம், கோபால்ஜி. எங்கேயோ போய்விட்டீர்கள்! சிவனுஞ் என்பதைப் பொதுவாகத் தனதந் என்று குறித்தல் வழக்கென்றாலும், மூன்றாம் எழுத்தாக வல்லினம் தவிர்த்து அந்தச் சந்ததத்தைத் தனனஞ் என்று நுணுக்கமாகக் குறித்துள்ளீர்கள். அரையடிகள் தனத்த தனதான என்று முடிவன அழகு!
ரமணி

Vis Gop

unread,
May 10, 2020, 11:10:19 PM5/10/20
to santhav...@googlegroups.com
நன்றி திரு ரமணி.
தனதந், தனனந்: சந்தேகத்துடனேயே எழுதினேன். எந்த நுணுக்கமும் அறியாமல். ஓரிரு வரிகள் எழுதிய பின்னரே வாய்பாட்டைத் தீர்மானிக்கிறேன். திரு சிவசிவாவிடம் தெரிந்து கொண்டபடி சீரின் முதல் வல்லினமாகத் தேர்ந்தெடுத்தேன். மூன்றாம் எழுத்து என் தேர்வன்று.
இந்தப் பாடலில் தனதந் அல்லது தனனந் என்று இரண்டில் ஒன்று எழுதலாமா?
நல்வாழ்த்துகள்
கோபால்.
Sent from my iPhone

Vis Gop

unread,
May 13, 2020, 3:39:30 AM5/13/20
to santhav...@googlegroups.com
வண்ணச் சந்தம் (15) (12.05.2020)


மாமதுரை ஏகு பெருமானே!

[தானதன தானதன தான தனதான]


நாடுமுழு தாகவுனை நாடி வருவோர்கள்

தேடுவகை யாகவெரி தீயி லுடல்வேகும்

காடுதொறு மோடுவது, கால முணராமல்

ஆடுவது, சூடுமணல் ஆக மதுமூடச்

சூடுவது, போது(ம்)அதி சோக மொ(டு)அவாவும்

மாடு,நின தாசைமனை, மா(ல்)அய(ன்)இராசன்

பாடுமடி யார்,உனது பாலர் இவர்காணப்

பீடுகொடு மாமதுரை ஏகு பெருமானே!


பொருள் விளக்கம்:


மதுரை ஈசன் நாட்டை விட்டு அவன் விளையாடும் சுடுகாட்டில் சுற்றுவதைக் கண்டு அவனை நாட்டுக்கு அழைக்கும் பாடல். 


நாடுமுழுதாக உன்னை நாடி வருவோரும்

தேடும் வகையாக, எரியும் தீயில் உடல் வேகும்

சுடுகாடுதோறும் ஓடுவதும், காலம் போவதை உணராமல் அங்கே

ஆடுவதும், சூடுமணல் ஆகத்தை(=தேகத்தை) மூடுமளவு

சூடுவதும், போதும்! அதிசோகத்தோடு அவாவும் (=உன்னைக் காண ஆவல் கொண்ட) 

உன் காளைமாடு, நினது ஆசைமனைவி, திருமால், அயன்(=பிரமன்), இராசன்(=நாட்டு மன்னன்),

பாடும்  அடியார்கள், உனது பாலகர்கள், ஆகிய இவர்களைக் காணப்

பீடுகொண்டு(=பெருமையுடன்) மாமதுரைக்கு ஏகு(=வா), பெருமானே!

Vis Gop

unread,
May 13, 2020, 3:41:39 AM5/13/20
to santhav...@googlegroups.com
வண்ணச் சந்தம் (16) [13.05.2020]

மதுரையி(ல்) உறைதாயே!
[தந்தன தத்தன தத்தன தானன தனதன தனதான]

கஞ்சம(து) ஒத்தமு கத்தினி லேயொளிர் கயலன விழியாலே
. . . . கண்டுந டத்திடு(ம்) இத்தரை மேவிடு கவலற அருளாயோ!
செஞ்சடை அத்தனை மெத்தஅ வாவிடு திருநிறை மனையாளே!
. . . . சிந்தையி(ல்) நித்திய முற்(று)இரு, தேசொடு! சிவைஅது விலகாதே!
தஞ்ச(ம்)அ ளித்(து)இடர் எத்திடு சேவடி தலைமிசை நிலையாமோ!
. . . . தங்கமு(ம்) முத்து(ம்)ஒர் தத்தையு மாய்நின தரிசன(ம்) அரிதாமே!
மஞ்சள்ம ணக்க,வி ளக்கொளி யோ(டு)ஒளிர் மரகத வடிவான
. . . . மங்கல(ம்) ஒப்பற மட்டற வேதரு மதுரையி(ல்) உறைதாயே!

பொருள் விளக்கம்:
[கஞ்சம் = தாமரை; தரை = பூமி; அத்தன் = சிவன்; அவாவு = விரும்பு; தேசு = ஒளி;
எத்திடு = விலக்கிடு; தத்தை = கிளி]
மதுரையில் வாழும் (மீனாட்சி அம்மைத்) தாயே!
தாமரையை ஒத்த முகத்தினில் ஒளிர்கின்ற கயல் (மீன்) போன்ற உனது கண்களால்
காண்பதன் மூலம் இந்த உலகை நீ நடத்துகிறாய். அதில் மேவுகின்ற துன்பங்கள் நீங்க
அருள் புரிய வேண்டும்!
நீ மிகவும் நேசிக்கும் செஞ்சடை கொண்ட சிவபிரானின் செல்வமிக்க மனையாளே!
நீ என்னுடைய சிந்தையில் நிரந்தரமாகவே ஒளிமயமாக இருக்க வேண்டும். சிவையான
நீ அவ்விடத்தை விடுத்து விலகவே வேண்டாம்!
தஞ்சம் அளித்து இடர்களைக் களையும் பண்பு கொண்ட உன் திருவடி என் தலைமீது
நிலைத்திருக்க வேண்டும். தங்கம், முத்து போன்ற ஆபரணங்களோடு ஒரு கிளியையும்
உடன் கொண்டிருக்கும் உன் தரிசனம், மிக அரிதானது!
மஞ்சளின் மகிமை மணந்து கொண்டிருக்க, விளக்கொளியோடு சேர்ந்து ஒளிர்கின்ற
மரகதத்தினாலான வடிவு கொண்டவளான நீ, அன்பர்களுக்கு நிகரற்ற மங்கலத்தைக்
குறைவறத் தருபவளாவாய்!
[ஆகவே உன் உலகில் காணும் துன்பங்கள் நீங்க நீ அருள் புரிய  வேண்டும்!]

Siva Siva

unread,
May 14, 2020, 10:47:30 AM5/14/20
to santhavasantham
இது தேவாரத்தில் காணப்படும் சந்தங்களுள் ஒன்று.
இதனைத் "தானதன  தானதன  தானதன தானா" என்று நோக்குக.

உதாரணமாக:
2.34.5

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்

நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர்

வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்

பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே.



Vis Gop

unread,
May 14, 2020, 2:01:08 PM5/14/20
to santhav...@googlegroups.com
Wish to know if you are showing this structure as an optional alternative or as a suggestion to change. Is the kuzhippu ok?
gopal. 
Sent from my iPhone

On 14-May-2020, at 8:17 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

இது தேவாரத்தில் காணப்படும் சந்தங்களுள் ஒன்று.
இதனைத் "தானதன  தானதன  தானதன தானா" என்று நோக்குக.

உதாரணமாக:

Vis Gop

unread,
May 15, 2020, 11:07:33 AM5/15/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (17) (15.05.2020)

சீதங்கொண்டருளே!

[தானந்தந் தனனாதானத் தனனந்தந் தனனாதானத் தனதான]

காயின்கண் புளியாயாகிக் கனியின்கண் கனிவேயாகிச் சுவையாகிக்

. . . காதின்கண் தொனியாயூடிக் கணருந்தும் கவினாய்வேதக் கருவாகித்

தாயின்கண் தயையாயாகித் தருமந்தன் பயனாயாகித் தவமாவாய்

. . . தாடங்கம் குழைகாதாரச் சரணங்கிண் கிணியோடாடக் கலையாவாய்

தீயின்கண் திறவாதாறித் திசையெங்கும் திரிநோயோடப் பரிவோடு

. . . சீதங்கொண் டருளேமேவத் திருவெங்கும் குறையாதேறத் தருவாய்நீ

ஓயின்கண் டுதவாதோரத் தொளியின்பின் புவியேகேடுற் றழியாதோ?

. . . ஓமுன்றன் வடிவாகாயத் தொளிபொங்கும் திருநீயாடற் பெருமானே!

பொருள் விளக்கம்:

காயின்கண் புளியாய் ஆகி, கனியின்கண் கனிவே ஆகி, சுவையாகி,
காதின்கண் தொனியாய் ஊடி, கண் அருந்தும் கவினாய், வேதக் கருவாகி,
தாயின்கண் தயையாய் ஆகி, தருமந்தன் பயனாய் ஆகி, தவமாவாய்!
தாடங்கம், குழை காதார, சரணம் கிண்கிணியோடு ஆட, கலையாவாய்!
தீயின்கண் திறவாது, ஆறி, திசையெங்கும் திரி நோய் ஓட, பரிவோடு,
சீதம் கொண்டு அருளேமேவ, திரு எங்கும் குறையாது ஏறத் தருவாய்! நீ
ஓயின் கண்டு உதவாது, ஓரத்து ஒளியின், பின் புவியே கேடுற்று அழியாதோ?
ஓம் உன்றன் வடிவு, ஆகாயத்து ஒளிபொங்கும் திரு நீ! ஆடல் பெருமானே! 

ஒரு காதில் குழையும் மறு காதில் தாடங்கமும் அணிந்தவனாய், பாதங்களில் சலங்கையோடு ஆடுகின்ற நடராசனே!
ஒவ்வொன்றிலும் அதன் தன்மையாய் நீயே இருக்கிறாய். நீ சினந்தவனாய் ஆகாமல்  ஆறிக் குளிர்ந்தவனாய் இருந்து, உலகெங்கும் திரிகின்ற நோயைப் பரிவோடு ஓட்டுவாயாக! உலகில்  நலம் குறையாதிருக்க அருள் செய்க! நீ உலகைக் கண்டு உதவாமல் ஒய்வு  கொண்டாலோ, ஓரத்தில் ஒளிந்து கொண்டாலோ, இந்தப்  புவியே கேடுற்று அழிந்து போகும்! [ ஆதலால் உதவுக!] ஓம் என்ற வடிவுடன் ஆகாசமாகவும் பிரகாசிக்கின்ற ஆடலரசுப் பெருமானே!

நல்வாழ்ததுகள்
கோபால். 

Siva Siva

unread,
May 15, 2020, 11:38:20 AM5/15/20
to santhavasantham
/ தானந்தந் தனனாதானத் தனனந்தந் தனனாதானத் தனதான /

If the pattern is longish, then it will sound better if it has repeating sub-pattern.
For example,
தானந்தந் தனனா தானத்  
தானந்தந் தனனா தானத்    
தானந்தந் தனனா தானத்    தனதான

Or it can be shorter pattern without any repeating sub-pattern like
தானந்தந் தனனா தானத்    தனதான.

Vis Gop

unread,
May 15, 2020, 12:21:32 PM5/15/20
to santhav...@googlegroups.com
Thanks.
I too realise it. However, my DIL Kamakshi will take the exercise to fit it to a tune. I initially thought of a longer pattern but it came out like this. In reality, a few lines appeared and I wrote them without the thongu seer. I added them later. You might have noticed that the thongu seers in the first few lines looking not well integrated. I am learning. I keep your suggestions in mind with gratitude. Thanks for encouraging me.
Regards.
gopal.


Sent from my iPhone

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 15, 2020, 9:54:26 PM5/15/20
to சந்தவசந்தம்
தற்போது உலவிவரும் தொற்றுநோயை உள்ளடக்கி இறைமேல் யாத்த வண்ணம் அழகு. சிவசிவா சொன்னது போலச் சந்தக்குழிப்புச் சற்று நீளமாகப் பட்டது, எனினும் ’சவாலை’ ஏற்ற விதம் நன்று.   

... அனந்த்

 



--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
May 16, 2020, 9:15:41 AM5/16/20
to santhav...@googlegroups.com
நன்றி. 

தற்போது உலவிவரும் தொற்றுநோயை உள்ளடக்கி 

தற்போது உலவிவரும் தொற்றுநோயை முழுதும்   உலகிலிருந்து நீக்கக் கோரும் பிரார்த்தனையை உள்ளடக்கி 
என்று தாங்கள் சொல்லவந்ததே தங்கள் பின்னூட்டத்தில் தொனிக்கிறது. 

பணிவுடன்
கோபால். 

Sent from my iPhone

Vis Gop

unread,
May 16, 2020, 12:21:36 PM5/16/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (17) (15.05.2020) [  16.05.20 திருத்தப்பட்ட வடிவம் ]

திரு சிவசிவா, திரு அனந்த் ஆகியோரின் ஆலோசனையை ஏற்றுத் திருத்தப் பட்டது.

சீதங்கொண்டருளே!
[தானந்தந் தனனா தானத் 
தனனந்தந்  தனனா தானத் 
தானந்தந் தனனா தானத் தனதான]

காயின்கண் புளியாய் ஆகிக் கனியின்கண் கனிவே ஆகிக் 
....காடெங்கும் தளிரா(ய்) ஓடைப் புனலாகிக்
....காதின்கண் தொனியா(ய்) ஊடிக் க(ண்)அருந்தும் கவினாய் ஆகிக்
....காலந்தன் கதியாய் வேதக் கருவாகித்

தாயின்கண் தயையாய் ஆகித் தருமந்தன் பயனாய் ஆகித்
....தானென்றும் தனியே ஆகித் தவமாவாய்!
....தாடங்கம் குழைகா தாரச் சரணம்கிண் கிணியோ(டு)ஆரத்
....தாளம்பண் சதியோ(டு) ஆடிக் கலையாவாய்!

தீயின்கண் திறவா(து) ஆறித் திசையெங்கும் திரிநோய்) ஓடச்
....சேமம்தென் புட(ன்)ஊர் வாழப் பரிவோடு
....தீதெங்கும் தொடரா(து) ஆகித் திருவென்றும் குறையா(து) ஏறச் 
....சீதங்கொண்(டு) அருளே மேவத் தருவாய்!நீ

ஓயின்கண்(டு) உதவா(து) ஓரத்(து) ஒளியின்பின் புவியே கேடுற்(று) 
....ஓகந்தின் பரிசல் போ(ல்)அற்(று)  அழியாதோ?
....ஓமுன்றன் வடி(வு) ஆகாயத்(து) ஒளிபொங்கும் திருவே! சேவித்(து)
....ஓதுஞ்சிந் தையில்வா(ழ்) ஆடற் பெருமானே!


பொருள் விளக்கம் 
[ஓகம் = வெள்ளம்]
நீ காயில் புளிப்பவனாய், கனியில் கனிந்தவனாய், காடெங்கும் தளிர்களாய், ஓடையில் நீராய், காதில் ஒலியாய், கண்ணில் அழகுக் காட்சியாய், காலத்தின் கதியாய், வேதத்தின் உட்கருவாய், தாயிடம் அன்பாய், தருமத்தின் விளைவாய்,  இவ்வாறு ஒவ்வொன்றிலும் அதனதன் தன்மையாய் இருந்தும் என்றும் தனியாய்த் தவவடிவமாய் இருக்கிறாய்! ஒரு காதில் குழையும் மறு காதில் தாடங்கமும் அணிந்தவனாய், பாதங்களில் சலங்கையோடு தாளம், பாட்டு, ஜதி, இவைகளோடு ஆடுகின்ற கலை நீ!  நீ சினந்து தீக்கண்ணைத் திறவாமல், ஆறிக் குளிர்ந்தவனாய் இருந்து, உலகெங்கும் திரிகின்ற நோயைப் பரிவோடு ஓட்டுவாயாக! மக்கள் சேமத்துடனும் தெம்புடனும் வாழப் பரிவு காட்டு! எங்கும் தீது ஏற்படாமல் காத்து, உலகில் நலம் குறையாதிருக்க அருள் செய்! நீ உலகின் நிலைகண்டு உதவாமல் ஒய்வு  கொண்டாலோ, ஓரத்தில் ஒளிந்து கொண்டாலோ, இந்தப் புவியே கேடுற்று, வெள்ளத்தால் தின்னப்பட்ட பரிசல் போல் அழிந்து போகும்! [ ஆதலால் உதவுக!] ஓம் என்ற வடிவுடன் ஆகாசமாகவும் பிரகாசமாகவும், உன்னைச் சேவித்து ஓதுவோரின் சிந்தையில் வாழ்கின்றவனாகவும் இருக்கும் ஆடலரசுப் பெருமானே!

நல்வாழ்ததுகள்
கோபால். 

Vis Gop

unread,
Jun 19, 2020, 12:14:47 PM6/19/20
to santhav...@googlegroups.com
வண்ணச்சந்தம் (18) (19.06.2020)

பாப்புனை மொழி அருள்க!

[தாத்தன தனனத் தனதன தனதன தனதான x 2 ]

(முன்னரை, பின்னரை அடிகளில் தனித்தனியே எதுகை காண்க)


கூப்பியு னெதிரிற் குனிகிற பணியது தருவாயேல்

......கூற்றுவ னருகிற் குறுகினு மிருதய(ம்) மருளேனே!


யாப்பினி லறிவுற் றனுபவ மிகுபவர் மகிழ்வாக

......யாற்றிழை புனலொத் தசைவுட னமுதென அழகாகப்


பாப்புனை மொழியைப் பரிவுட னருளுக! உறுபாவம்

......பாற்றிட உருகிப் பகலிர விசைகொடு பணிவேனே!


காப்புன தழகுக் கழலடி நிழலென மறவேனே!

......காற்றினி லகவற் கருமயி லிலுலவி வருவோனே!



பொருள்விளக்கம்


[குறுகுதல் = நெருங்குதல்; மருளுதல் = கலங்குதல்; யாறு = ஆறு; பாற்றிட = நீங்கிட]


உன் திருமுன் கூப்பிய கரங்களோடு பணிகிற பணியை நீ அருளினால்

கூற்றுவன் என்னை அணுகி வருகையிலும் மனம் கலங்கமாட்டேன். 


யாப்பறிவு பெற்றவரும் மகிழ்வடையும் வண்ணம்

ஆற்றின் நீரோட்டத்தின் அசைவையும் அழகையும் கொண்ட அமுதமான


பாடல்கள் எழுதும் கவித்துவ மொழியைப் பரிவோடு அருள்க! (அதைக்கொண்டு)

உற்ற பாவங்கள் விலக வேண்டி, பகலிரவாக உருகி இசையால் உன்னை வழிபடுவேன். 


எனக்குக் காப்பு அழகான உன் கழலடி நிழலே என்பதை நான் மறக்க மாட்டேன். 

அகவுகின்ற கருமயிலில் ஏறிக் காற்றில் உலா வருகின்ற முருகப் பெருமானே!


நல்வாழ்த்துகள்

கோபால்

Sent from my iPhone

Subbaier Ramasami

unread,
Jun 19, 2020, 1:45:41 PM6/19/20
to santhavasantham
அருமை


--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vis Gop

unread,
Jun 19, 2020, 2:16:01 PM6/19/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. 
கோபால். 
Sent from my iPhone

Siva Siva

unread,
Jun 19, 2020, 6:01:46 PM6/19/20
to santhavasantham
"அழகுக் கழலடி" என்று வருமா என்று அறியேன்.
அணிபொற் கழலடி?


On Fri, Jun 19, 2020 at 12:14 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
வண்ணச்சந்தம் (18) (19.06.2020)

பாப்புனை மொழி அருள்க!

[தாத்தன தனனத் தனதன தனதன தனதான x 2 ]

(முன்னரை, பின்னரை அடிகளில் தனித்தனியே எதுகை காண்க)


கூப்பியு னெதிரிற் குனிகிற பணியது தருவாயேல்

......கூற்றுவ னருகிற் குறுகினு மிருதய(ம்) மருளேனே!


யாப்பினி லறிவுற் றனுபவ மிகுபவர் மகிழ்வாக

......யாற்றிழை புனலொத் தசைவுட னமுதென அழகாகப்


பாப்புனை மொழியைப் பரிவுட னருளுக! உறுபாவம்

......பாற்றிட உருகிப் பகலிர விசைகொடு பணிவேனே!


காப்புன தழகுக் கழலடி நிழலென மறவேனே!

......காற்றினி லகவற் கருமயி லிலுலவி வருவோனே!



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

ramaNi

unread,
Jun 19, 2020, 10:46:34 PM6/19/20
to சந்தவசந்தம்
பாப்புனை மொழியைக் காப்பாகக் கேட்டது அழகு!
ரமணி

Vis Gop

unread,
Jun 20, 2020, 12:40:01 AM6/20/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. அணிபொற் கழலடி என்று திருத்திக் கொள்கிறேன். 
கோபால். 
Sent from my iPhone

Vis Gop

unread,
Jun 20, 2020, 12:41:17 AM6/20/20
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி திரு ரமணி.
கோபால்.
Sent from my iPhone

Vis Gop

unread,
Jun 22, 2020, 7:10:16 AM6/22/20
to santhav...@googlegroups.com
வண்ணச் சந்தம் (19) [22.06.2020]

வாடாதிரு
[தானாதன தனனாதன தனதான x 2 ]

கூடாதிரு மதியாதவர் குழுவோடு
..கோணாதிரு குலமேலவர் நெறிமீதே
ஓடாதிரு உதவார்வசை குவிகாலும்
..ஓவாதருள் முருகாகுக எனவோது
வாடாதிரு வருநோய்வரு வழிபோகும்
..வாவாவெனில் வருவானெழில் மயிலேறித்
தேடாதொரு திருவாயொரு குறமாது
..தேவானையொ டுறவாடிடு திருமானே!


பொருள் விளக்கம்

உன்னை (/உன் நெறியை) மதிக்காதவர்களுடன் சேராதிரு!
உன் குலத்துப் பெரியவர்கள் வகுத்துத் தந்த நன்னெறி முறைகளில் இருந்து வழுவாதிரு!
உதவிசெய்யும் மனப்பாங்கில்லாதவர்களின் வசைகள் குவிந்தாலும் அஞ்சி ஓடாதிரு!
அருள் முருகா, குகா என்று இடையறாது ஓதிக் கொண்டிரு!
நோய் வந்தது குறித்து வாடாமல் இரு! வந்த நோய் வந்த வழி போய்விடும்!
வாவா என்றழைத்தால், தேடிப் பெறவொண்ணாத செல்வமாய், வள்ளியோடும் தெய்வானையோடும்
 உறவாடும் முருகத் திருமான் அழகான மயில் மீதேறி வருவான்!
[ஆகவே வாடாதிரு!]

Siva Siva

unread,
Jun 22, 2020, 8:13:58 AM6/22/20
to santhavasantham
பெருமானே / பெருமாளே என்னாமல் திருமானே என்றது மோனை கருதியோ?

Vis Gop

unread,
Jun 22, 2020, 9:22:39 AM6/22/20
to santhav...@googlegroups.com
ஆம். 
ஓவாதருள் எனத்தொடங்கும் வரியில் மோனை வரவில்லை. தொங்குசீரில் வரும் ஓது என்பதை ஒரு ஒப்புக்கு மோனையாகக் கருதலாம். 
நல்வாழ்த்துகள் 
கோபால். 


Sent from my iPhone

Siva Siva

unread,
Jun 22, 2020, 9:35:36 AM6/22/20
to santhav...@googlegroups.com
Monai within half line may be optional in short patterns which do not have repeating sub pattern. 


--

Vis Gop

unread,
Jun 22, 2020, 9:48:26 AM6/22/20
to santhav...@googlegroups.com
I agree. However, a monai, if provided, would make it sound better. It happened easily for some half-lines and so I wished it for all of them. Even in the line where I could not provide it, I found it to be present hiding in a corner, as I said in my previous message. 
Thanks for the guidance. 
gopal. 


Sent from my iPhone

Vis Gop

unread,
Jun 26, 2020, 10:20:11 PM6/26/20
to santhav...@googlegroups.com
வண்ணச் சந்தம் (20) [26/06/2020]

பெரும் பெரியவர்
[தத்ததன தத்ததன தத்ததனந் தனதனனந்
தத்ததன தத்ததன தனதான]

சொத்துசுகம் அத்தனையும் எத்தனையென்(று) அறியுமுனம்
......துச்சமென விட்டுதறி யவிவேகம்!
......சுக்கெனஇ ளைத்ததவ அக்கினியும் துறவவியும்
......சுத்தமென ஒத்திணைய விளைதேகம்!

வித்தியைமி னுக்குடனு(ம்) எக்கணமும் பரிவொடுதன்
......வித்தக(ம்)நி கர்த்திடுவி னயமோடும்,
......வெற்றிஅர(சு) ஒத்தநடை எத்திசையும் கடுகு(ம்);அவண்
......விப்பிரரு(ம்) மற்றவரும் அடிபேணப்

பத்தர்படை மத்தியினில் அத்துவிதம் சுயவடிவம்
......பற்றியொளி ரப்பரிதி இணையாகும்!
......பட்டுமிகு கச்சியிலு தித்தபெரும் பெரியவரின்
......பக்கமணு கப்பகைகள் இலவாகும்!

புத்தரன சித்தரவர் அச்சுதனும் பரசிவனும்
......புக்கமனி தப்பிறவி! அவர்நாடிப்
......பொற்பதம் அகத்தினிடை வைத்தவரின் வழிமுழுதும்
......புத்தொளிபெ றத்தருபெ ரியவாளே!

பொருள் விளக்கம்

சொத்து, சுகம், அத்தனையையும் எத்தனையென்று அறியும் முன்னமே
துச்சமென விட்டு உதறிய விவேகம்!
சுக்கென இளைத்த, தவ அக்கினியும் துறவென்னும் அவியும்
ஒத்து இணைந்து (பரி)சுத்த ஸ்வரூபமாக விளைந்த தேகம்!

வித்தியையின் மினுக்குடனும், எக்கணமும் பரிவுடனும், தன்
வித்தகத்துக்கு நிகரான வினயத்துடனும்,
வெற்றிபெற்ற  அரசனுக்குச் சமமான அவருடைய நடை எத்திசையும் செல்லும்; அங்கெல்லாம்
விப்பிரர்களும் மற்றவரும் அவருடைய அடிதொழுவார்கள்! அந்தப்

பத்தர்களின் கூட்டத்திற்கு இடையினில்,   அத்வைதம் தன்னுடைய சுயவடிவம்
பெற்று ஒளிர, அந்தப் பிரகாசத்துக்குக் கதிரவனே இணையாகும்!
பட்டு மிகுதியாக விளங்கும் காஞ்சியில் உதித்த “பெரும் பெரியவர்” அவர்! அவருடைய
பக்கம் அணுகியவருக்குப் பகைகள் இல்லாமல் போகும்!

புத்தருக்குச் சமமான சித்தர் அவர்! அச்சுதனும் பரமசிவனும்
உள்ளே புகுந்து நிலைத்த மனிதப் பிறவி! அவரை நாடி,
அவருடைய பொற்பாதங்களை மனத்தில் (/வீட்டில்) வைத்தவர்களின் வாழ்க்கை வழிமுழுவதும்
புத்தொளி பெறும்படி அருள்பவர் அந்த (மஹா) பெரியவாளே!

Siva Siva

unread,
Jun 27, 2020, 9:48:33 AM6/27/20
to santhavasantham
It will be even better if the long pattern has repeating sub-pattern.

/ புத்தருக்குச் சமமான சித்தர் அவர்! / = ?
வைதிகநெறியை மறுத்த பௌத்தத்தைக் கண்டனம் செய்த ஆதிசங்கரரின் பரம்பரையன்றோ அவர்.

On Fri, Jun 26, 2020 at 10:20 PM Vis Gop <vis...@gmail.com> wrote:
வண்ணச் சந்தம் (20) [26/06/2020]

பெரும் பெரியவர்
[தத்ததன தத்ததன தத்ததனந் தனதனனந்
தத்ததன தத்ததன தனதான]

....

புத்தரன சித்தரவர் அச்சுதனும் பரசிவனும்
......புக்கமனி தப்பிறவி! அவர்நாடிப்
......பொற்பதம் அகத்தினிடை வைத்தவரின் வழிமுழுதும்
......புத்தொளிபெ றத்தருபெ ரியவாளே!

பொருள் விளக்கம்

......

Vis Gop

unread,
Jun 27, 2020, 1:10:19 PM6/27/20
to santhav...@googlegroups.com
It will be even better if the long pattern has repeating sub-pattern.
I do not get an idea to improve the pattern of the song. Suggestions please!

/ புத்தருக்குச் சமமான சித்தர் அவர்! / = ?
வைதிகநெறியை மறுத்த பௌத்தத்தைக் கண்டனம் செய்த ஆதிசங்கரரின் பரம்பரையன்றோ அவர்.

Maybe, I have to make changes if it conveys something wrong. But as such, I do not see a problem.
Two stalwarts may have conflicting ideologies; but are stalwarts! Buddha is considered to be an incarnation of Vishnu, as believed by many. Parasurama had a conflict with SriRama. Sri Ramanuja's principles do not agree with those of Sri Sankara. In the eyes of ordinary people who follow a discipline by chance, all such great ones are gods, equal in knowledge and divine powers! Where do I err?
Regards.
gopal
It is loading more messages.
0 new messages