--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
part 2
பி.பா: அண்ணே என்ன கதை பாடப்போறீக?
மு.பா: பாரதி கதை பாடப்போறேன்.
பி.பா: அது யாருண்ணே பாரதி. ?
மு.பா: நமக்கெல்லாம் பாரதின்னா மகாகவி பாரதி ஒருத்தர்தான்.
பி.பா: பாரதியார்னு மருவாதியாச் சொல்லுங்கண்ணாச்சி! பாரதின்னதும் நான் கொஞ்சம் கொழம்பிப் போயிட்டேன்.
மு.பா: அந்தக்காலத்திலே நான் சின்னப்பையனா இருந்தபோது பாரதியார் பாட்டைத் தெருவெல்லாம் பாடிக்கிட்டுப் போவோம். சிவப்புத் தொப்பிக்காரங்க தொரத்திக்கிட்டு வருவாங்க!
பி.பா: என்ன பாட்டண்ணே அது?
மு.பா: வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.
ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மமித் தேயத்தில் எய்தினராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அவர்
வேறு குலத்தின ராயினும் ஒன்றே!
ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்- இந்த
ஞானம்வந்தால் பின் நமக்கெது வேண்டும்? வந்தே
பி.பா: அண்ணே, அந்தக்காலத்திலே நான் பொறக்கலேயேன்னு வருத்தமா இருக்கு. பொறந்திருந்தா பாரதியார் பாட்டை நிச்சயம் பாடியிருப்பேன்.
மு.பா: பாரதியார் கதையை எல்லோரும் கேட்கணும் தம்பி. கேட்டா தேசபக்தி கொப்புளிக்கும்
பி.பா: கேக்கறதுக்காகத்தானே இவுகள்ளாம் வந்திருக்காக! பாடுங்க! கேக்கறோம்!
மு.பா: விருத்தம்
சொல்லிலே நெருப்பை ஏற்றி, சுதந்திரப் பாதை காட்டி,
கல்லிலே சிலையை ஊட்டிக் கண்ணையும் திறந்த மன்னன்
பல்லுயிர் அனைத்தும் சொந்தப் பான்மையில் கொண்டு வாழ்ந்த
வல்லவர் பார தியார் மாப்புகழ் பாடுவோமே!
பி.பா: மேலே படுங்கண்ணே!
மு.பா:
நாடு எங்கள் நாடு- என்று
நாளும் கவி தந்தவனைப் பாடு- ஜதி போடு
ஏடெடுத்த கவிஞர்களும் ஏந்திழையார் பெரியவரும்
இருந்து கேட்க வேண்டும் இந்தக் கதையை- கேட்டால்
எண்ணத்திடுவார் எழுச்சி என்னும் விதையை----- நாடு
பாட்டின் மூலம் சுதந்திரத்துப் பாதை போட்ட பெருங்கவிஞன்
பாட்டினிலே நமது மனம் ஆழும்- அந்தப்
பரவசத்தில் துன்பமெல்லாம் வீழும் -நாடு
தின்னவரும் புலிதன்னையும் தெய்வமெனப் போற்றியநம்
மன்னவனின் கவிதைதனைப் பாடு- பெறும்
மகிழ்ச்சியினுக் கேதிங்கே ஈடு -நாடு
பி.பா: அண்ணே, பாரதியாரு எந்த ஊரிலே பொறந்தாரு?
மு.பா: திக்கெட்டும் புகழும் திருநெல்வேலி மாவட்டத்திலே எட்டையபுரம் கிராமத்திலே பொறந்தாரு.
திர்நெல்வேலி மாவட்டத்திலே பல பெரியவங்க பிறந்திருக்காங்க! தமிழும் அங்கேதான் பிறந்தது. தென்றல் கூட அங்கேதான் பிறந்ததாம்
பி.பா: அப்படியாண்ணே!
மு.பா: ஆமாம் தம்பி
தென்பொதிகை மலைத் தோன்றி தவழ்ந்துவரும் தென்றல்
செந்தமிழ்த்தேன் நறவத்தைத் தேக்கி வரும் தென்றல்
என்றுமிளம் பொருநைநதி ஏறிவரும் தென்றல்
ஏந்திழையார் சேலையிலே இழையோடும் தென்றல்
மன்னுபுகழ் காந்திமதி நெல்லையப்பன் பாதம்
மாறாது பணிந்தருளை மாந்திவரும் தென்றல்
தென்னை மர உச்சியிலே சேர்ந்துவிசைகூடி
திருநெல்வேலி மாவட்டச் சிறப்பதனைப் பாடும்.
பி.பா: பாரதியாருக்குப் பூர்வீகமே எட்டையாபுரம்தானா?
மு.பா: இல்லே. சீவலப்பேரிதான் அவங்க பூர்வீக ஊரு. முக்கூடல் பள்ளு கேட்டிருக்கியா?
பி.பா: எங்க பாடப்பொஸ்தகதிலே ஒரு பாட்டுப் படிச்சிருக்கேன்.
" ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி- மலை
ஆழ மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே-சுனை
நீர்ப்படு சொரித்தவளை கூப்பிடுகுதே"
மு.பா நல்ல நெனைவு வெச்சிருக்கியே. சீவலப்பேரிக்கு முக்கூடல்னு ஒரு பேரு.
கயத்தாறு, சித்தாறு தாமிரபரணின்னு மூணு நதிங்க அங்கே கலக்கிறதாலே அதுக்கு முக்கூடல்னு பேரு.
பி.பா: அண்ணே, அங்கே வழக்குகள்ளே சத்தியம் பண்ணிக்குடுக்குற சுடலைமாடன் கோயில் ரொம்பப் பிரசித்தம் இல்லையா?
மு.பா: ஆமாம். அந்த ஊரிலே கடுவாய்ச் சுப்பையர் என்று ஒருவர் இருந்தார். சீவலப்பேரி சத்திரத்து நிர்வாகத்தைப் பார்த்ததாலே சத்திரம் சுப்பைய்யர்னு சொல்லுவாங்க! அவருக்குச் சின்னச்சாமி அய்யர் னு ஒரு பையன். சின்னச்சாமி அய்யர் சின்ன வயசிலேயே தமிழ் நல்லாப் படிச்சாரு. வில்லுப்பாட்டு, கணியான் கூத்து , ஒயிலாட்டாம்னு நாட்டுப்புறக் கலைகளிலே ரொம்ப ஈடுபாடு. கடுவாய் சுப்பையர் சின்னச்சாமி சின்னப் பையனாயிருக்கிறபோதே இறந்து போயிட்டாரு.
பி.பா: அப்புறம்
மு.பா அப்புறம் என்ன? சின்னாச்சாமியோடே அம்மா பாகீரதியம்மா அவரைக்கூட்டிக்கிட்டு எட்டையாபுரத்திலிருந்த தன் சகோதரன் வீட்டுக்கு வந்துட்டாங்க. அங்கே சின்னாச்சமி படிச்சாரு. அப்புறம் அவ்வூரு கிராம முன்சீப்பு இராமசாமி அய்யரு பொண்ணு இலக்ஷ்மியம்மாளை அவருக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க! அவங்களுக்கு ஒரு பையன் பொறந்தான். அந்தப் பையன்தான் நமது பாரதியார். குழந்தை பிறந்துதலே அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். சின்னச்சாமி அய்யருக்கு அரண்மனையிலே உத்தியோகம்.
பி.பா: பாரதியார் எந்த வருஷத்திலே பிறந்தாரு.
மு.பா: ஓ அதைச் சொல்ல மறந்துட்டேனா. அவர் 1882 ம் வருஷம் டிசம்பர் 11 ந்தேதி அதாவதி சித்திரபானு வருஷம் கார்த்திகமாதாம் மூலநக்ஷத்திரத்திலே பிறந்தாரு.
குழந்தைக்கு அவங்க அம்மா தாலாட்டுப் பாடினாங்க!
பி.பா: அண்ணே , எனக்கும் எங்க அம்மா தாலாட்டுப் பாடினாங்களாம். எப்படித்தெரியுமாண்ணே!
மு.பா: பாடு கேட்கலாம்
பி.பா. அண்ணே நான் எங்க குடும்பத்திலே எட்டாவது குழந்தே. எங்க அம்மாவுக்குத் தாலாட்டுப் பாடிப்பாடி அலுத்துப் போச்சு. அதனாலெ சலிச்சுக்கிட்டே பாடினாங்களாம்.
"ஆண்டாவா பொறுக்காமல்
அள்ளியிதைத் தந்தாயோ
தூங்கடா சண்டாளா
தொந்தரவு செய்யாதே!
மு.பா: தம்பி. பாரதியாரு முதல் குழந்தையாச்சே. இப்படியா பாடுவாங்க!
பா.ப: எப்படிப் பாடினாங்க!
மு.பா
""ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆராரோ
கண்ணே என் கண்மணியே கலிதீர்க்க வந்தவனே
வண்ண மலர்க்கொழுந்தே மன்னவனே தாலேலோ
வானத்து வெண்மதிதான் வட்டமிட வந்ததுவோ
வண்ணவொளித் தாரகைதான் மண்ணிறங்கி வந்ததுவோ
உன்னழகுப் புன்னகையில் உன்மத்தம் ஆகுதடா
என் வயிறு நீ உதிக்க என்னதவம் செய்துவிட்டேன்
உன்னமுதக் குரலிசையில் உயர்கவிதை கேட்குதடா
என்மகனே தாலேலோ இனியவனே தாலேலோ
வல்லவனாய் நல்லவனாய் வாக்கினிலே மன்னவனாய்
செல்வத் திருக்குமரா சிறப்படைய வேண்டுமடா!
பி.பா : குழந்தைக்கு
பாரதின்னு தானே பேர்வெச்சாங்க!!
மு.பாஇல்லேப்பா. அது அவருக்குப் பின்னாலே கிடைச்ச பட்டம். அவருக்கு வெச்ச பேரு வேறே.
"நான் சொல்றேன் நீ புரிச்சுக்கணும்"
"பி. பா: நீங்க பாட்டுப் படிங்கண்ணே நான் புரிஞ்சுக்கறேன்
மு.பா"
காளி இளஞ்சக்தி கன்றவன் - வேதம்
காட்டிடும் மூலமாய் நின்றவன் - உயர்
கானமாமயில் ஏறியேஉலகேழும் ஏழும் நலம்பெறவலம்
சென்றவன் நமை வென்றவன்
சூரனைக் வீழ்த்தித் தொலைத்தவன் - என்றும்
தூயவர் நெஞ்சில் நிலைத்தவன் - உயர்
நாரணன்திரு மால்மருகனாய் நாடுமன்பர்கள் கேடறச் செயும்
நலத்தவன் செந்தில் தலத்தவன்
சுப்பிர மணியன் தீரன் - தமிழ்
தோயும் இசையின் ரீங்காரன்- என்றும்
ஒப்பிலாவகை ஓங்குமாக்கவி செப்பிடும் திறம் தந்திடும் தமிழ்த்
தீரன் அவன் பேரன்
பி.பா சுப்பிரமணியன் தானே!
மு.பா: சரியாச் சொல்லிப்புட்டே! அவரைச் சுப்பையா என்று அழைத்தார்கள். சுப்பைய்யாவுக்கு ஒரு தங்கச்சிப்பாப்பா பொறந்தது. கொஞ்ச நாளிலேயே இறந்து போய்விட்டது. சுப்பைய்யாவுக்கு அஞ்சு வயசாயிருக்கும் போதே அவனுடைய அம்மா இறந்துட்டாங்க!
பி. பா: அடப்பாவமே!
மு.பா: அந்த அம்மா ரொம்ப நல்லவங்க! சுப்பையா தாயில்லாத பிள்ளையாயிட்டான்.
சின்னச் சாமி அய்யருக்கும் அப்போ இளமைப் பருவம்தானே! அவரு இரண்டாங்கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்த அம்மா பேரு வள்ளியம்மை.
"பி.பா: பொதுவாவே சித்தின்னா கொடுமைப் படுத்துவாங்கன்னு சொல்லுவாங்க!
மு.பா: ஆனா அந்த அம்மா அப்படியில்லே. சுப்பைய்யாவை நல்லாக் கவனிச்சுக்கிட்டாங்க!
சின்னப் பையனாயிருக்கும் போதே சுப்பய்யா கவிதை பாடத்தொடங்கிட்டான். சின்னச்சாமி அய்யர் தன் பையன் நல்லாப் படிச்சுக் கலெக்டராக வேண்டும்னு ஆசைப்பட்டாரு.. அவன் கணக்குப் படிக்கணும், இங்கிலீசுப் படிக்கணும்னு விரும்பினாரு.. ஒரு நாள் பையனைத் தூக்கி மடிமேலே வெச்சுக்கிட்டுத் தன் ஆசையைச் சொன்னாரு
கணக்குப் படிக்கவேண்டும்- சுப்பையா
கலெக்டர் ஆக வேண்டும்
மணமாய் உன்வாழ்வில் - சுப்பைய்யா
மகிழ்ச்சி துள்ள வேண்டும்
ஆங்கிலம் கற்கவேண்டும் - சுப்பய்யா
ஆபீஸராகவேண்டும்
பாங்குடன் நானதனைக்- குழந்தாய்
பார்த்து மகிழ வேண்டும்
கவிதை புனைந்துவிட்டேன் - குழந்தாய்
காரிகை கற்றுவிட்டேன்
புவியில் பலரையுமே போற்றிப்
பொழுதைக் கழித்துவிட்டேன்
எவரையும் சாராமல்- வாழ்வில்
இருக்க வேண்டுமெனில்
கவிதை புனையாதே- கற்பனைக்
கனவு காணாதே!
என்னைப்போல் ஆகாதே - குழந்தாய்
எவர்க்கும் அஞ்சாதே
சொன்னபடி கேட்டால் - குழந்தாய்
துன்பங்கள் இல்லையடா!
பி.பா: எவ்வளவு உருக்கமாச் சொல்லியிருக்காரண்ணே!
part 3
மு.பா: எவ்வளவுதான் முயன்றாலும் சுப்பைய்யாவின் மனத்தைக் கவிதையிலிருந்து திருப்ப முடியலே. சுப்பய்யா புத்திசாலிதான். கணக்கும் இங்கிலீசும் நல்லாவே வரும். ஆனாலும் கவிதையிலே இருந்த ஆர்வம் மத்தவற்றிலே இல்லே
பி.பா: அப்பாகிட்டே அடி வாங்கியிருப்பாரே!
மு.பா: ஆமாம் . சின்னச்சாமி ஐயர் முன்கோபக் காரர். அவருக்கும் தமிழிலே நிறையப் பாண்டித்தியம் இருந்ததாலே அந்தக்காலத்து இலக்கியங்கலை ஓலைச்சுவடிகளாச் சேர்த்துவைத்திருந்தாரு.
பி.பா: ஏன் அப்பல்லாம் புஸ்தகங்க இல்லையா?
மு.பா: அச்சுக்கலை அவ்வளவாக வளராத காலம். பல இலக்கியங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. அந்தப்புண்ணியத்தே பின்னாளில் உ.வே சுவாமிநாதய்யர் கட்டிக்கொண்டாரு. சுப்பய்யாவுக்கு சோமசுந்தரம்னு ஒரு நண்பன். அவனுக்கும் தமிழில் ஆர்வம் அதிகம். இரண்டு பேரும் சின்னச்சாமி அய்யருக்குத் தெரியாம ஓலைச் சுவடிகளை எடுத்துக்கிட்டுப்போயி கோவில் வாகனங்களுக்குக் கீழே போயிப் படிப்பாங்களாம். எப்படிப் படிச்சாங்க தெரியுமா?
மு.பா சிம்ம வாகனத்தடியில்
பி. பா: திருக்குறளைத் தான் படித்தார்
காமதேனு அடியினிலே கலிவெண்பா தான் படித்தார்
நாகவாகனத்தடியில் ராமாயணம் தான் படித்தார்
தோகைமயில் வாகனத்தில் தொல்காப்பியம் தான் படித்தார்
தெக்குப் பக்க மூலையிலே சிலப்பதிகாரம் படித்தார்
மண்டபத்தின் உச்சியிலே மணிமேகலை படித்தார்.
யானை வாகனத்தடியில் யாப்பிலக்கணம் படித்தார்
பி.பா2 : நிறையத்தான் படிச்சிருக்காரு.
மு.பா: அந்தக்காலத்துலே ஜமீந்தார்களைச் சந்தோஷப்படுத்த புலவர்களெல்லாம் சிருங்காரப் பாட்டெல்லாம் எழுதுனாங்க.
: இராஜாவை நினைச்சுப் பொம்பளைகளெல்லாம் ஏங்குற மாதிரியும் அவங்க விரக தாபத்தைப்பத்தியும், சரி சரி, இன்னும் எதைப்பத்தியெல்லாமோ எழுதினாங்க.. அதிலே ஒண்ணு கூளப்பன் நாயக்கன் காதல். அதையும் சுப்பய்யா படித்தான்.
பி.பா: இந்தக்காலத்திலே சினிமா கெடுக்கற மாதிரி அந்தக்காலத்திலே இப்படி புத்தகம் எழுதிக் கெடுத்திருக்காங்க!
மு.பா: அப்படிச் சொல்ல முடியாது. புலவர்களுக்கும் வயித்துப்பொழப்பு நடக்கணுமே!. அதைப் படிச்சுச் சொல்வதுதான் அந்தக்காலத்துலே பெரிய பொழுதுபோக்கு.
சுப்பய்யா ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிவிட்டான். பத்து வயதிலே சிருங்காரக்கவிதை கூட எழுதினான். ஒரு சமயம் சின்னச்சாமி அய்யருக்கு ஒரு ஓலைச் சுவடி தேவைப்பட்டது. வீட்டிலே அது இல்லை. சுப்பய்யாதான் எடுத்துக்கிட்டுப்போயிருக்கணும்னு நெனைச்சு கோயிலுக்குப் போனாரு
பி.பா: அப்புறம்
மு.பா: அப்பா வருவதைப்பார்த்த சுப்பய்யா ஓடினான். அவனைத் துரத்திக்கிட்டு சின்னச்சாமி அய்யரு ஓடினார்
"சுற்றிச் சுற்றி, சுற்றிச் சுற்றி ஓடி வருகிறான் கவிதை
சொந்தமாகப் புனைந்ததனைப் பாடி வருகிறான்
கற்றைக் குழல் கழுத்தில்விழப் பையனின் பின்னே - அப்ப
கடுமையான கோபத்தோடு ஓடி வருகிறார்.
ஒன்று, ரெண்டு, மூணு நாலு .. ஒன்பது சுற்று - அப்பா
ஓடிவந்து களைத்தமுகம் பார்த்தனன் உற்று
சின்ன உள்ளம் தேம்பியது, திகைத்து நின்றனன் - அப்பா
சின்னச்சாமி அய்யர் கையில் தானே ஒன்றினன்.
பி.பா: அன்னைக்கு அவரோட அப்பா அடிச்சிருப்பாகளே
மு.பா: அதுதான் இல்லை. பையன் பாட்டுக் கட்டறதிலே அவருக்கும் சந்தோஷம்தான்.
ஆனால் அவன் வாழ்க்கை சிறப்பாக இருக்கணும்னா ஆங்கிலமும் கணக்கும் படிக்கவேண்டும் என்று சொன்னாரு. அன்னைக்கும் பையனிடம் அதைத்தான் சொன்னாரு.
அதற்குப் பையன் என்ன சொன்னான் தெரியுமோ?
பி.பா: சொல்லுங்க
:மு.பா: இங்கிலீசுப் படிக்க மனம் ஒருப்படவில்லை -அப்பா
எண்ணும் கணக்கும் எனக்குச் சற்றும் சரிப்படவில்லை
தங்கத் தமிழ் இருக்கையிலே கணக்கு வேண்டுமா? - அப்பா
தாவி வரும் கற்பனையில் பிணக்கு வேண்டுமா?
பி.பா: அய்யர் ஒண்ணும் சொல்லலியா?
மு.பா: சுப்பய்யா, வாழ்க்கை பளபளப்பாய் இருக்கணும்னா இங்கிலீசுப் படிக்கணுனு சொன்னாரு.
பையன் சொல்றான்
"பளபளப்பாய் இருப்பதனால் கண்ணாடிக் கூடு- ஒளி
பட்டை தீட்டும் வைரத்தின்முன் நிற்குமோ ஈடு?
களிப்புடனே எனதுள்ளத்தில் பொங்கிடும் ஊற்று- அதன்
கதவடைத்தால் அதுவே என் வாழ்க்கையின் கூற்று"
அப்படின்னான்.
பி.பா: அப்புறம்
மு;பா: இவனுக்கு நாம புத்திமதி சொல்றதைவிட ஜமீந்தாரை விட்டுப் புத்திமதி சொல்லவைக்கலாம்னு நெனைச்சு ஜமீந்தாரிடம் கூட்டிக்கிட்டுப் போனாரு. ஜமீந்தார் ஏற்கனவே சுப்பய்யாவின் சிருங்காரக் கவிதையெல்லாம் கேட்டு ரசிச்சிருக்கறாதாலே சின்னச்சாமி அய்யர் சுப்பய்யாவைக் கூட்டிக் கொண்டு போனதும் அய்யருக்குப் புத்திமதி சொல்ல ஆரம்பிசுட்டாரு.
"பிறவிக் கவிஞனய்யா சுப்பய்யா - அவன்
பேசுவதில் ஏதுமில்லே தப்பய்யா
செறிந்து பளபளக்கும் முத்து - இங்கே
தேடாமல் நாம்பெற்ற சொத்து
அருவி தெறித்துவிழும் ஓசை- அவன்
ஆனந்தக் கவிதைமேல் ஆசை
வருங்காலம் அவன் புகழைப் பாடும் - அவன்
வகுத்ததெல்லாம் சத்தியமாய் ஆகும்.
அப்படின்னாரு
பி.பா: சரியாத்தான் சொல்லியிருக்காரு
மு.பா: தம்பி , உனக்கு வெண்பா தெரியுமா?
பி.பா: திருவனந்த புரத்துப்பக்கதிலே அப்படி ஒரு ஊரு இருப்பதாகச் சொல்லுவாக
மு.பா: அது தும்பா தம்பி, அங்கிருந்து ராக்கட்டுல்லாம் விடுவாக. நான் சொல்லுவது வெண்பா
பி.பா: இப்போ ஞாபகம் வந்திடுச்சண்ணே. பனிக்காலத்திலே காலையிலே மூடாக்கம் போட்டிருக்குமே. அதை எங்க ஊரிலே வெம்பா பேய்துன்னு சொல்லுவாக!
மு. பா: நான் கேக்கறது வெண்பா. தமிழ்லே ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பான்னும் நாலுவகைக் கவிதை உண்டு. அதிலே வெண்பா பாடுவது கஷ்டம். புலவர்க்கு வெண்பாப்புலின்னு சொல்லுவாக. சுப்பய்யா சின்ன வயசிலேயே வெண்பால்லாம் எழுதினான். விருதுநகர் சிவஞான யோகின்னு ஒருத்தர் புலவர்களுக்கு ஒரு போட்டி வச்சாரு. அதிலே கலந்துகிட்டு சுப்பய்யா அருமையா வெண்பா எழுதினான். அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு அவரு சுப்பய்யாவுக்கு
"பாரதி" ன்னு பட்டம் கொடுத்தார்.
பி.பா: பாரதின்னா என்னண்ணே அர்த்தம்.
மு.பா: பாரதின்னா சரஸ்வதின்னு அர்த்தம். சரஸ்வதி அவன் நாக்குலே வெளையாடினா. அதுனால் அந்தப்பட்டத்துக்குப் பெருமை வந்திடுச்சி. எத்தனையோ பேருக்குப் பாரதி பட்டம் கிடைச்சிருக்கு. ஆனால் பாரதின்னா எல்லோரும் நம்ம சுப்பிரமணிய பாரதியைத்தானே நெனைக்குறாங்க! பின்னாளில் அந்தப்பட்டம் அவருக்குப் பொருத்தம்னு சொல்ற மாதிரிப் பாட்டு எழுதினார்
"பாரதி நீ என்றுரைத்தார்- அந்தப்
பட்டம் நிலைத்திட நாளும் உழைத்தார்
வீரத்தைச் சொல்லில் குழைத்தார்- வெறும்
வீணர்தம் வாழ்வை வெறுத்துப் பழித்தார்
பாட்டில் புதுமைகள் செய்தார்- நம்
பண்பென்னும் காவில் பலமலர் கொய்தார்
நாட்டுத் துரோகிய வைதார் - நம்
நாடு விழிப்புற நற்கவி நெய்தார்
பி.பா: அண்ணே நீங்களும் பாட்டுலே பொளந்து கட்டுறீகளே!
மு.பா: தம்பி, நாம யாரைப்பத்திப் பாடுறோம். அவரை நினைச்சாலே கவிதை பொத்துக்கிட்டு வருதில்லே!
40 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தேன். சந்தவசந்த நண்பர்கள் சிலர் கேட்டிருக்கிறார்கள்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பகுதி 4
மு.பா: பாரதியின் தந்தை சின்னச்சாமி அய்யர் கவிஞர் மட்டுமில்லை. கணக்கிலே புலி. எந்திர சாஸ்த்ரம் தெரிந்தவர். அதனாலே தனது அறிவைப்பயன்படுத்தி ஒரு பஞ்சாலை நிறுவவேண்டும் என்று விரும்பினாரு. எட்டய்யபுரம் பக்கத்திலே பித்தாபுரம் என்ற ஊரிலே பஞ்சாலைக்குக் கட்டடம் கட்டினாரு. பலபேரு அதிலே பங்குதாரர்கள் ஆனாங்க!.
பி.பா: லாபகரமா ஓடிச்சா?
மு.பா: அதையேன் கேக்குறே. நல்ல பேரு வந்துது பணம் வல்லே. எட்டாயிரம் ரூபாய்வரை கடன் வாங்கினாரு. பம்பாயிலிருந்து எந்திரம் வருவதிலே தாமதமாச்சு. தமக்குப் போட்டியா வந்துவிடுவாரோன்னு பயந்து ஏற்கனவே தூத்துக்குடியிலே பஞ்சாலை நடத்திவந்த வெள்ளைக்காரங்க சூழ்ச்சி பண்ணி எந்திரத்துக்கு வேண்டிய உபகரணங்கள் கிடைக்க விடாமக் கஷ்டப் படுத்தினாங்க!
பி.பா: அடப்பாவமே!
முபா: சின்னச்சாமி அய்யருக்கு ரெண்டாவது சம்சாரம் மூலமா ஒரு பையனும் ஒரு பொண்ணும் பொறந்தாங்க. பாரதி எட்டய்ய புரத்துப் பள்ளிக்கூடப் படிப்பை முடிச்சாரு. அவரைத் திருநெல்வேலி இந்து உயர்நிலைப்பள்ளியிலே சேர்ப்பதற்கு அய்யர் ஏற்பாடு பண்ணினார்.பணத்துக்கு ரொம்பக் கஷ்டப்பட்டாரு. பாரதிக்கு பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலே. ஒருநாள் அப்பாவைப் பார்த்துச் சொல்றாரு
பணத்துக்குக் கஷ்டப்பட்டுப் படிக்கவும் வைக்கணுமா
படிச்சது போதும் அப்பா -தமிழைப்
படிக்கிறேன் அதுபோதுமே.
அரண்மனைப் பணிசெய்வேன் ஆதரவாய் நானிருப்பேன்
ஆங்கிலம் வேண்டாமப்பா- எனக்கு
அருந்தமிழ் போதுமப்பா
அப்படின்னாரு
பிபா: அப்பா ஒத்துக்கிட்டாரா?
"வந்தகஷ்டம் நீங்கிவிடும், வற்றாத லாபம் வரும்
மகனே படிக்க வைப்பேன் - கவலை
மனத்திலே வேண்டாமடா!
வெள்ளைக்காரன் தொந்தரவால் வேதனைகள் ஆனதடா
விரைவில் நான் வென்றிடுவேன் - புகழில்
மேன்மேலும் சென்றிடுவேன்
என்று பதில் சொன்னாரு. வெள்ளைக்காரன் தொந்தரவு கொடுக்குறான். வளர விடமாட்டேங்கறான் என்பதை அறிந்த பாரதிக்கு அவர்கள்மேல் கோபம் வந்தது. அடிமை வாழ்வை வெறுக்கத் தொடங்கினாரு.
பி.பா: பஞ்சாலை பின்னாலே சரியாச்சா?
மு.பா நஷ்டத்துமேலே நஷ்டமாச்சுது. பாரதி ஒருநாள் அவருடைய மாமா சாம்பசிவம் அய்யரோடே
பித்தாபுரத்திலே இருந்த பஞ்சாலைக்குப் போனாரு. அப்போ அவருக்குப் பன்னிரண்டு வயசிருக்கும். அவருடைய மாமா பரதியைவிட மூணு வயசு பெரியவரு. அவங்க ஆலைக்குப் போன சமயம் சின்னச்சாமி அய்யர் அங்கே இல்லை. அங்கே அய்யருடைய மேஜை ட்ராயரிலே ஒரு சின்னத் துப்பாக்கி இருந்தது. ஆலை நடத்தத் தடையாயிருந்த வெள்ளையன் மேலே பாரதிக்குக் கோபம் வந்தது. கையிலே துப்பாக்கியைப் பிடிச்சுக்கிட்டுப் பாடினாரு
"சுட்டுப் பொசுக்கிடுவேன் - வெள்ளையனைத்
தூள்தூளாய் ஆக்கிடுவேன்
கொட்டம் அடக்கிடுவேன் - வெள்ளையனைக்
கொன்று குவித்திடுவேன்
கட்டப்பொம்மு துரைபோல - வெள்ளையனைக்
கதிகலங்க வைப்பேன்
எட்டப்பான் தன் வசையை- மாற்றியே
ஏற்றம் பெருக்கிடுவேன்
இதைப் பார்த்தாரு சம்பசிவம். சுப்பையா, அந்தத் துப்பாக்கியை என் கையிலே கொடு என்று வாங்கிக்கொண்டாரு.
கட்டப்பொம்மு என்றாலே- ஜமீந்தார்
கடுமையாக் கோபிப்பார்
இஷ்டம் போல் பேசாதே- பெரிய
இக்கட்டில் மாட்டாதே"
என்றார் சாம்பசிவம்.
பி.பா: ஏண்ணே அப்படிச் சொன்னாரு.
மு.பா; கட்டப்பன் சாக எட்டப்பன் தானே காரணம். திருநெல்வேலி ஜில்லாவிலே எல்லா ஊரிலேயும் கட்டப்பொம்மு கதை தெருக்கூத்து நடக்கும். ஆனால் எட்டய புர ஜமீந்தார் ஆட்சியிலுள்ள இடங்களில் நடக்காது.
பி.பா: அப்படியா
மு.பா: ஆமாம். சாம்பசிவம் என்ன செய்யுறோம்னு தெரியாமா துப்பாக்கியிலே குதிரையைத் தட்டிவிட்டாரு.
பி.பா"அண்ணே அண்ணே கொஞ்சம் நிறுத்துங்கண்ணே. துப்பாக்கியோ சின்னது. அதுக்குள்ளே குதிரையை எப்படிண்ணே புடிச்சு வச்சாங்க
"மு.பா: (சிரித்துக்கொண்டே) குதிரைன்னா நிஜக் குதிரையில்லே. துப்பாக்கியிலே குண்டைத் தட்டிவிடுகிற விசைக்குப் பேரு குதிரை. அதைத்தான் விளையாட்டாத் தட்டிவிட்டாரு.
பி.பா"அய்யய்யோ, என்ன ஆச்சுண்ணே?
மு.பா: குண்டு ஜிவ்வுன்னு பறந்து போயி பாரதியாரோடே காதுப்பக்கம் கொஞ்சந்தள்ளிப்போய் விழுந்தது. கொஞ்சம் அசஞ்சிருந்தாரோ ஆபத்துதான். நாம இன்னைக்குப் பாரதி கதை பாட முடியாது. தமிழ் நாடே ஒரு மகாகவியை இழந்திருக்கும்
பி.பா: நல்லவேளை. கடவுள்தான் காப்பாத்தினாரு.
ஆமாம் தம்பி. நல்லவேளையா பாரதியார் உயிர் பிழைச்சாரு. அந்த நிகழ்ச்சியை நினைச்சுப் பார்க்kaக்கூடப் பயமாயிருக்கு,
பி.பா: அப்புறம் என்ன நடந்திச்சு?
மு.பா: சின்னச்சாமி அய்யர் பாரதியை திருநெல்வேலியிருந்த இந்து கல்லூரியிலே படிக்க அனுப்பினாரு. அங்கே கைலாச புரத்திலே தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு மண்டபம். அந்த மண்டபத்திலே போய் பாரதி உக்காருவாரு. அங்கேதான் அவருக்கு கவிதை ஆவேசம் வந்தது. அவரு ஏற்கனவே கவிதையெல்லாம் எழுதினாக்கூட அங்கேதான் சர்சுவதி அவருக்குக் கன்னிக்கவிதை கொண்டு தந்தாள்னு பாரதி”பிள்ளைப் பிராயத்திலே”ன்னு ஒரு கவிதையிலே எழுதியிருக்காரு.
பி.பா: அது என்ன கவிதையண்ணே
மு.பா” பிள்ளைப்பிராயத்திலே
பி.பா: ரொம்ப அழகா பாடியிருக்காரு அண்ணே.
மு.பா: திருநெல்வேலியிலே சோணாசலம் பிள்ளையின்னு ஒருத்தர் இருந்தாரு. அவரு வீட்டிலே அடிக்கடி கூட்டங்கள் நடக்கும். “பாரதி” பட்டம் பெற்றிருக்கறதனாலே அவரையும் கூட்டத்திலே சேத்துப்பாங்க. அங்கே சிலசமயங்களிலே போட்டிகள் நடக்கும்.
பி.பா: எந்த மாதிரிப் போட்டிங்கண்ணே!
மு.பா கடைசி அடி கொடுத்துட்டு வெண்பா எழுதச் சொல்லுவாங்க
பி.பா: பாரதியாரும் போட்டியிலே கலந்துக்கிட்டாரா?
“மு.பா” ஆமாம். சோணாச்சலம் பிள்ளையுடைய பையன் காந்திமதிநாத பிள்ளையும் அந்தக் கூட்டத்திலே கலந்துப்பாரு. பாரதியை விட மூணு வயசு பெரியவரு. அவருக்குப் பாரதியைக் கண்டாப் பிடிக்காது>
பி.பா பொறாமைதானே
மு.பா: ஆமாம் ஆமாம். அதைத்தான் புலமைக்காய்ச்சல்னு சொல்லுவாங்க. அவரு பாரதியைப் பார்த்து ஒரு ஈற்றடி கொடுத்துப் பாடச் சொன்னாரு.
பி.பா: அதென்னண்ணே ஈற்றடி?
மு.பா: ஈற்றடின்னா கடைசி அடின்னு பேரு. என்ன ஈற்றடி தெரியுமா?
”:பாரதி சின்னப் பயல் ” னு கொடுத்தாரு
பி.பா” அடப்பாவி. அதெப்படி பாரதி தன்னையே சின்னப்பயல்னு பாடுவாரு?
மு.பா: பாரதி சளைச்சவரா என்ன? அவர்தான் தன்னைக் காளமேகம்னு சொல்லுபவராச்சே!
பி.பா: அதென்னண்ணே காளமேகம்?
“மு.பா: காளமேகப் புலவர்னு ஒருத்தர் இருந்தார். அவருக்கு என்ன சவால்விட்டாலும் கவிதை பாடிடுவாரு. ஒரு சமயம் அவருக்கும் இதுபோல ஒருவர் கடைசி அடி கொடுத்துப் பாடச் சொன்னாரு. அந்தக் கதை தெரியுமோ உனக்கு?
பி.பா: சொல்லுங்கண்ணே கேக்கறேன்
முபா: வேம்பத்தூருன்னு ஒரு ஊரிலே பரம்பரை பரம்பரையா புலவருங்க வாழ்ந்திங்கிட்டு இருந்தாங்க. அந்த ஊருக்குக் கவி காளமேகம் வந்தாரு. அவருக்குப் பூரண கும்ப மரியாதை கொடுத்துக் காட்டுவழியா அழைச்சிக்கிட்டு வந்தாங்க . அப்போ அங்கே கண்டங்கத்தரிச் செடி கொத்துக்கொத்தாக் காய்ச்சுக் கிடந்தது. அதைப் பார்த்த ஒரு புலவர் காளமேகத்தைப் பார்த்து
“புலவரே ‘கண்டங்கத்தரிக் கொத்துக் காய்” னு வர்றமாதிரி ஒரு பின்முடுகு வெண்பாப் பாடுங்களேன்” என்றார்.
பி. பா: அதென்னண்ணே பின் முடுகு வெண்பா?
“ வெண்பாவுக்கு மொத்தம் 4 அடி. மூணாவது அடியிலேயும் நாலாவது அடியிலேயும் கண்டங்கத்திரிக்கொத்துக்காய் என்பது வரணும். அதுவும் வெவ்வேறே அர்த்தத்துலே வரணும்
பி.பா: காளமேகம் கலங்கியிருப்பாரே!
மு. பா: அதுதான் இல்லே. காளமேகம் பாடிட்டாரு. ஆனால் மத்தப்புலவர்கள்தான் அர்த்தந்தெரியாமக் கலங்கினாங்க!
பி: அது என்ன பாட்டுண்ணே?
மு: விரவு சிறுகுயிலே வெண்மதியே மாரன்
வரவு தனித்திருக்க மாட்டாள் – இரவதனில்
கண்டங்கத்தரிக்கொத்துக் காயங்கம் தரிக்கப்பின்
கண்டங்கத்தரிக்கொத்துக் காய்” னு பாடினாரு
பி: அடேங்கப்பா, காளமேகம் கில்லாடிண்ணே! அமாம் அதுக்கு அர்த்தம் என்னண்ணே?
மு: இப்போ அதச் சொல்றதுக்கு நேரமில்லை.
பி: உங்களுக்குத்தெரியாதுன்னு சொல்லுங்க
மு: டே யாரைப் பார்த்து அப்படிச் சொல்லிட்டே! உனக்குத் தனியா அப்புறம் சொல்றேன்
பி: சரிண்ணே மேற்கொண்டு கதையைச் சொல்லுங்க! பாரதி பாடினாரு.
மு: பாரதியாரு பாடினாரு. என்ன ஈற்றடி சொல்லு
பி. :எனக்குச் சொல்றதுக்கே நாக்குக் கூசுதண்ணே
மு: சரி நானே சொல்றேன்.
“ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய்- மாண்பற்ற
காரிருள்போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்” அப்படின்னு பாடினார்.
பி: என்னண்ணே பாரதி சின்னப்பயல்னு தன்னைத் தாழ்த்திக்கிட்டுப் பாடிட்டாரே
மு: காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப்பயல்னு பிரிக்கணும் அதாவது காந்திமதி நாதனைப் பார். ரொம்பச் சின்னப்பயல்னு அர்த்தம்
“பி: அடேயப்பா, பாரதியா கொக்கா!
மு; சபையிலே இருந்தவங்களெல்லாம் பாரதியைப் பாராட்டினாங்க!
காந்தமதிநாதன் மனசு வருத்தப்படக்கூடாதுன்னு அவரைப் புகழுற மாதிரி அதையே கொஞ்சம் மாத்திச் சொன்னாரு
பி எப்படி?
“ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டிங்கே என்னை நீ ஏந்தினையால்- மாண்புற்ற
காரதுபோல் உள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்”
மு.பா: அப்புறம் என்ன இரண்டு பேரும் நண்பர்களாகிட்டாங்க! பின்னாலே பாரதியார் இளசை ஒருபா ஒரு பஃது ந்னு ஒரு பாட்டு எழுதினாறு. அதுக்கு காந்திமதிநாதன் மிகச் சிறப்பா சாத்துகவி எழுதிக் கொடுத்தாரு.
பி: அதென்னண்ணே ஒரு பா ஒரு பஃது?
மு: தம்பி, ஒரு பான்னா ஒரு வகைப் பாட்டு. பஃதுன்னா பத்து. ஒரே பாவகையில் பத்துப்பாட்டுன்னு அர்த்தம். வெண்பாவில் பத்துப்பாட்டுப் பாடினாரு
பி
பி: அப்படியா? இப்படிச் சொன்னாத்தானே தெரியுது..
அதுக்குக் காந்திமதிநாதன் என்ன எழுதிக்கொடுத்தாரு
மு: “பாலா கற்கண்டா பழம்பொருந்தும் இன்னமு
தாலாகும் பாகா தமிழுருவா? - ஏலாதி
இட்ட சருக்கரையா ஏரிளசைப் பாரதியார்
தொட்ட ஒருபா ஒரு பஃது”
பி: ஏ அப்பா பிரமாதமாத்தான் எழுதிக்கொடுத்திருக்காரு
>>வில்லொன்றே அசைந்ததனால் வீழ்ந்ததுதென் இலங்கையெனில்
2012/7/30 Subbaier Ramasami <elan...@gmail.com>
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
பலகலைக் கொருகூடம் பாரதியன்றோ
மு.பா: அவரு பள்ளிக்கூடத்திலே படிச்சிக்கிட்டு இருக்கிறபோது இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது.
பி: அது என்னண்ணே
மு: பாரதியாருக்குக் கவிதை எழுதறது பிடிக்குமில்லையா? அதுனாலே எப்போது மனசுலே எதுகைகளா சொல்லிப்பார்த்துப்பாரு. எகனை மொகனைன்னு சொல்லுறோமே அதுதான். வாத்தியாரு கணக்குன்னு சொன்னா பாரதியாரு மனசுக்குள்ளேயே கணக்கு, பிணக்கு, மணக்கு, இணக்கு சுணக்கு ன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. ஒருநாள் தமிழ் வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டிருந்தாரு. அவரு சுழின்னு ஒரு வார்த்தை சொன்னாரு. உடனே பாரதி மனசுக்குள்ளே சுழி, பழி, மழி, வழி குழின்னு சொல்லிக்கிட்டிருந்தாரு. பாடத்திலே கவனமில்லாமல் இருக்காருன்னு நெனச்சு
கார்மேகம் போலக் காவி பாடுகிறேன் எனச்சொல்லும்
கவிமணியே இங்கே கொஞ்சம் பாரும் பாரும் – அந்தக்
காளமேகம் போலக் கவி தாரும் தாரும்
அப்படின்னாரு
பி: பாரதி உடனே பாடியிருப்பாரே!
மு: உடனே வாத்தியாரைப் பார்த்து “கேட்டவுடன் பெய்குவதா காரின் மேகம் – என்னே
கேள்விதன்னை யோசிக்காமக் கேட்கும் வேகம்?” என்று சொன்னாரு. வாத்தியாருக்கு ஏண்டா கேட்டோமுன்னு ஆய்ப்போச்சு. பாரதி மேற்கொண்டு சொன்னாரு
”ஆட்டம்போடும் அலைகடலின் நீரைப் பருகி- அந்த
ஆதவனின் நற்கருணைத் தீயில் உருகி
பாட்டிசைக்கும் தென்றல் இளம் காற்ரில் குளிர்ந்து-தன்னுள்
பளிச்சென்று ஒளிவெட்டிக் குரலெடுத்து
பாட்டம் பாட்டமாக மழை பெய்யும் பெய்யும் –அந்தப்
பரவசத்தில் பாரில் உயிர் உய்யும் உய்யும்
இந்த உண்மை ஏனுமக்குப் புரியவில்லை- ஐயா
ஏனிந்தக் கேள்வி கேட்டீர் தெரியவில்லை
அப்படின்னு படினாரு
“பி. வாத்தியாருக்குக் கடுமையான கோபம் வந்திருக்குமே!
மு: இல்லை. அவரு அந்தக்காலத்து வாத்தியாரு. சந்தோஷப்பட்டாரு. சுப்பையா, என் கேள்விக்கு நீ பாடிட்டயா இல்லையா. நீ உண்மையிலேயே காளமேகம்தான்னு பாராட்டினாரு. அப்புறம் பாரதிக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க!
பி: என்னண்ணே இது. ப:ள்ளிக்கூடத்திலே படிச்சிக்கிட்டு இருக்கறபோதா கல்யாணம்?
“மு. அந்தக்காலத்துலே அப்படித்தான். பாரதிக்குக் கல்யாணத்துலே இஷ்டமில்லை. ஆனா அப்பா சொல்றதைத் தட்ட முடியலே. பாரதிக்குப் பதினாலு வயசு.
பி: பொண்னுக்கு எத்தனை வயசு?
மு: பொண்னுக்கு எழு வயசு. செல்லம்மான்னு பேரு. கடயத்திலே செல்லப்பய்யர்னு ஒருத்தரு இருந்தாரு. அவருபொண்னுதான் செல்லம்மா.அதே நாளிலே சின்னச்சாமி அய்யரோடே அக்கா பையன்விஸ்வநாதனுக்குச்செல்லாம்மாவின் தமக்கை பார்வதியையும்
அவங்களோட இரண்டாவது பையன் கேதாரத்துக்குப் பாரதியின் தங்கை லக்ஷ்மியையும் கல்யாணம் பண்ணிவச்சாங்க. நாலுநாள் கல்யாணம். முதல்லே கல்யாணத்திலே இஷ்டமில்லாம இருந்த பாரதிக்கு அங்கே நடந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்த்தவுடனே குஷி வந்திருச்சு. ஒரே பாட்டுங்கூத்துந்தான். அவர் தெருவிலே நடந்துபோனா பொம்பளைங்கல்லாம்
அவரைப் பார்த்து
“இட்டுக்கட்டிப் பாட்டுப்பாடும் மாப்பிள்ளை – நாம
எதைச் சொன்னாலும் பாடுகிற மாப்பிள்ளை
பட்டுக்குட்டி செல்லம்மாவின் மாப்பிள்ளை –இவர்
பாரதின்னு பட்டம் பெத்த மாப்பிள்ளை” அப்படின்னு பாடுவாங்க!
பி: கல்யாணம் அமர்க்களம்தான்னு சொல்லுங்க!
மு.: பின்னே சும்மாவா. ? செல்லம்மாவுடைய அண்ணன் அப்பாதுரை ஊத்துமலை ஜமீன்லே வேலைபாத்துக்கிட்டு இருந்தாரு. கபாரதியின் அத்தை புருஷன் கிருஷ்ணசிவனுக்கு எல்லா ஜமீந்தார்களும் சிற்றரர்சர்களும் பழக்கம் அதனாலே புதுக்கோட்டை மன்னர் ஏற்பாட்டிலே நடனம் நாயனம் மேளம்னு ஒரே அமர்க்களந்தான். தஞ்சாவூர் தங்கநாயணம் ரத்னசாமி நாதஸ்வரம்னா பார்த்துக்கியேன்.
நலுங்கு சமயத்திலே பாரதி செல்லம்மா கையைப் பிடிச்சுக்கிட்டுப் பாட்டுப் பாடினாரம்.
பி.பா என்ன பாட்டுண்ணே
““தேடக் கிடையாத அன்னமே- உயிர்ச்
சித்திரமே மட அன்னமே-எனைக்
கட்டியணைத்தொரு முத்தமே - தந்தால்
கைதொழுவேன் உனை நித்தமே”
….
அப்படின்னு பாடினாராம். எல்லோருக்கும் ஒரே சந்தோஷம்
கல்யாணம் முடிஞ்சதும் பாரதி திரும்பவும் படிக்கப்போயிட்டாரு.
“பி.பா: அந்தப் பொண்ணு?
மு: அந்தப்பொண்ணு அவ அப்பா வீட்டிலேயே இருந்துச்சு.
40 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தேன். சந்தவசந்த நண்பர்கள் சிலர் கேட்டிருக்கிறார்கள்.
பாரதி நல்லாப் படிச்சிக்கிட்டு இருந்தார். ஆனா..
பி: “என்னண்னே ஆனான்னு இழுக்கிறீங்க
மு: பருத்தி மில்லிலே அதிகம் நஷ்டம் வந்துட்டதினாலேயும் பங்கு போட்டவங்கள்ளாம் பணத்தை உடனே கொடன்னு நெருக்குதனுலாயும் சின்னச்சாமி அய்யர் சீக்கிலே விழுந்து செத்துப்போயிட்டாரு
“பி.பா: அடப்பாவமே!
“மு: பாரதி படிப்பைப் பாதியிலேயே விட்டுட்டு எட்டயபுரம் வந்தாரு, காரியம் செய்யக் கூடக் கையிலே காசில்லை. பாரதியுடைய பாட்டி பாகீரதி அம்மாள் தனக்க்குச் சொந்தமாயிருந்த வீட்டை 200 ரூபாய்க்கு அடமானம் வச்சுக் காரியத்தை நடத்தினாங்க!
பி: அதுக்கப்புற்அம் பாரதி என்ன பண்ணினாரு.
மு. பாரதியோட அத்தை குப்பம்மா காசியிலிருந்து வந்திருந்தாங்க. அவங்க
அழுதாங்க
“சாகும்வய சானதோடா சின்னச்சாமி- உன்னை
சாகடிச்சுப்புட்டாங்கடா சின்னைச் சாமி
தேகமெல்லாம் மூளையடா சின்னச் சாமி- காலன்
சீக்கிரமே வந்துட்டானே சின்னச்சாமி
வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் சின்னச்சாமி-உன்னை
வேணுமின்னே சாகடிச்சான் சின்னச்சாமி
பிள்ளை தனி ஆகிட்டானே சின்னச்சாமி- அவனைப்
பிழைக்கவச்சுக் காட்டுறேண்டா சின்னச்சாமி”
என்று அழுதாங்க. சுப்பய்யாவுக்கும் அழுகை தாங்க முடியலே. அவனைப் படிக்கவைக்க அவரு எப்படியெல்லாம் பாடுபட்டார்னு நெனச்சுப்பார்த்தாரு,
அவரோடே அத்தை சுப்பய்யாவை காசிக்கு அழைச்சுக்கிட்டுப் போனாங்க.
பி: காசியிலே ஹிந்திதானே பேசுவாங்க
மு: ஆமாம். பாரதி அங்கே போய் ஹிந்துஸ்தானி கத்துக்கிட்டாரு. சமஸ்கிருதம் கத்துக்கிட்டாரு. வெளைக்காரன்மாதிரியே இங்கிலிஷ் பேசக் கத்துக்கிட்டாரு.
பி: பரவாயில்லையே. பாரதிக்குப் பல பாஷைகள் தெரியும் போலிருக்கே
மு. அவரு பின்னாளே ஒரு பாட்டுலே சொல்லுதாரே
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்”னு. அது ரொம்ப உண்மை.
காசியிலே அவரை ஜெயநாராயணன் இண்டர்மீடியட் காலேஜ்னு ஒரு பள்ளிக்கூடத்திலே சேர்த்தாங்க. பாரதி நல்லா படிச்சுக்கிட்டு வந்தாரு.
அங்கெல்லாம் ஆம்பிளைங்க எந்த ஜாதியாயிருந்தாலும் சரி மீசை வச்சிருப்பாங்க. பாரதிக்கோ குடுமி உண்டு ஆனா மீசையில்லே
அதைப்பார்த்து அந்தப்பசங்க அவரைக் கேலி செய்வாங்களாம்
“எப்படிண்ணே?
“வாரா வாரம் உங்க வீட்டிலே யாரேனும் சாகிறாங்களோடா சுப்பையா- மீசை
மழிச்சிட்டு வாரே யே இப்படி வர்ரது இந்தப்பக்கத்திலே தப்பையா
பி.பா: அதனாலேதான் பாரதி மீசை வச்சிக்கிட்டாரோ?
மு: அதினாலெல்லாம் இல்லை. அந்தக்காலத்திலே வெள்ளைக்காரன் நம்ம நாட்டை ஆண்டுக்கிட்டிருந்தான். தென்னாட்டைவிட வடநாட்டிலே அதனுடைய பாதிப்பு அதிகமா இருந்தது. காசியிலே பெரிய தலைவருங்களெல்லாம் வந்து கூட்டம் போடுவாங்க. நாடகம் போடுவாங்க. அங்கெல்லாம் போய் பாரதி பேச்சைக் கேப்பாரு. வெள்ளைக்காரன் அவரோடே அப்பாவை ஏமாத்திட்டன்னு கோபம் உள்ளுக்குள்ளே இருந்திச்சா.
பி.பா: ஆமாண்ணே. அங்கே தேசபக்தர்களோடே பேச்சைக் கேட்டதௌக்கப்பறம் நாட்டுப்பற்று அதிக மாயிடுச்சு. அந்தத்தலைவருங்களெல்லாம் பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு மீசை வச்சிக்கிட்டு இருப்பாங்க.
பி: ஓ அதுனாலே தான் பாரதி மீசை வச்சுக்கிட்டாரா?ஆமாம். பஞ்சகச்சம்னா என்னண்ணே
மு: நாமெல்லாம் வேட்டியைத் தேர்ப்பாச்சிக் கட்டிக்கறோமில்லே அதப்போலத்தான். கொயிலிலே ஐயரு கட்டிருப்பதைப் பார்த்திருப்பியே
“பி. பாத்திருக்கண்ணே
முபா:
பஞ்சகச்சம் கட்டிக் கொண்டாரு- மீசை
பக்குவமா வச்சுக் கொண்டாரு
விஞ்சைத் தலைப்பாகை மேலே கட்டி –ஒரு
வீரனைப்போல நடந்தாரு.
நெஞ்சை நிமிர்த்தி நடந்தாரு- என்றும்
நேர்வழி தன்னில் நடந்தாரு
அஞ்சும் நினைவைக் கடந்தாரு- சக்தி
அன்னைபதம் கீழ்ப்படிந்தாரு
நாட்டுக்குழைத்திடும் நல்லவர்கள் – தாயின்
நாமம் சுமந்திடும் வல்லவர்கள்
வேட்டுப்பிரசங்கம் கேட்டாரு – அன்றே
வீரச் சபதமும் போட்டார்
நாட்டுக்குழைப்பது சத்தியமே – தாயின்
நாமம் என் நாவினில் நித்தியமே
பாட்டில் சுதந்திரத் தத்துவமே- வெள்ளைப்
பரங்கியை ஓட்டுவோம் நித்தியமே!
அப்படின்னு சபதம் போட்டாரு.
பி.பா: அவங்க அத்தை வீட்டிலே சும்மா இருந்தாகளா?
மு.பா: அதெப்படி இருப்பாக. அவரு அத்தை வீட்டுக்காரரு பழுத்த வீர சைவம். சிவனுக்கு பூசைபண்ணினதைத் தான் சாப்பிடுவாரு. தண்ணி கூட சமிக்குக் காட்டிட்டுத்தான் சாப்பிடுவாரு.
பி: பாரதி பாடு திண்டாட்டந்தான்னு சொல்லுங்க!
மு. பாரதி குடுமியைச் சிரைச்சிக்கிட்டு மீசைவச்சுக்கிட்டு வந்ததைப் பார்த்த அவரு அத்தை வீட்டுக்காரரு “என் மூஞ்சிலே முழிக்காதேன்னு சொல்லிட்டாரு
சின்னப்பையா சுப்பைய்யா –நீ
செஞ்சது ரொம்பத் தப்பய்யா
படிக்க இங்கே வந்தாயா- இல்லை
பாழாய்ப் போக வந்தாயா?
வேண்டாம் இந்த வேஷண்டா-அடே
மீசை வச்சா தோஷண்டா
குடுமி வச்ச பிற்பாடு- உன்
கூட எனக்குச் சாப்பாடு
கடமை தன்னைப் பழிக்காதே –என்
கண்ணில் இனிமேல் விழிக்காதே
“பி.பா: பயங்கரமாச் சாடியிருக்காரே
மு.பா: ஆமாம். ஆனா பாரதியோட அத்தைக்கு அவர்மேல் பிரியம் அதிகம்
அதனாலே அவரை மேல்மாடியிலேயே இருக்கும் படி சொன்னாரு. கிருஷ்ண சிவன் கண்ணிலே படாம பாரதி வெளியிலே போய்வந்தாரு. மாடியிலேதான் அவருக்குச் சாப்பாடு. பாரதியாரோட உறுதி இன்னும் அதிக மாச்சுது. பூணூலையும் அறுத்தெறிஞ்சாரு.
பி.பா அப்புறம்
“மு: பா
அவர் தங்கியிருந்த சிவ மடத்துலே ஒரு சிவன் கோயில் உண்டு. அதிலே மார்கழி மாசம் திருவாதிரையை மிக விமரிசையாக் கொண்டாடுவாங்க! காலையிலே 4 மணிக்கே பூசை ஆரம்பிச்சுடும்
“பிபா: பாரதி :கலந்துப்பாரா?
“அதெப்படிக் கலந்துக்க முடியும். ஆனால் மேல்மாடியிலிருந்து பாத்துக்கிட்டே இருப்பாரு. திருவாதிரை பூசை முடியறதுக்கு முன்னாடி அந்த ஊரிலே இருந்த ஓதுவா மூர்த்தி திருவெம்பாவை பாடுவாரு. அன்னைக்கு அவருக்கு உடம்பு சரியில்லே. வரலே. திருவெம்பாவை பாட ஆளில்லை. அது பாடாம பூசை நிறைவேறாது. கிருஷ்ண சிவன் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சாரு.
“அப்புறம் யார் பாடினாங்க!
“மு.பா : திடீர்னு திருவெம்பாவை பாடற சத்தங்கேட்டுது. அதுவரைக்கும் அவ்வளவு பக்தியோட யாரும் பாடிக்கேட்டதில்லை. யாரு பாடுறன்னு கிருஷ்ண சிவன் பார்த்தாரு. பட்டை பட்டையா துருநூறு பூசிக்கிட்டு பாரதியாருதான் பாடினாரு. எல்லோருக்கும் கண்ணிலே தண்ணி வந்திருச்சு.
பி: பாரதியை வெளியே போகச் சொல்லியிருப்பாங்களே
மு. பா: அதுதான் இல்லை. அவரும் உருகிப் போயிட்டாரு. அங்கே இருந்தவங்கள்ளாம் பாரதியை மேலே மேலே பாடசொ சொன்னாங்க. பூசை நல்ல படியா முடிஞ்சது.
கிருஷ்ண சிவன் ஓடிவந்து பாரதியைக் கட்டிப்பிடுச்சிக்கிட்டாரு
“வேஷத்திலே ஒண்ணுமில்லை போடா- வெளி
வேஷமில்லா நீயும் உள்ளே வாடா
நீதாண்டா உள்ளபடி ஞானி- உள்ளே
நெறஞ்சிருக்கும் பக்தி அபிமானி
பாதாதி கேசம் மயிர்க்கூச்சு- உன்
பாட்டில் என் அஞ்ஞானம் போச்சு
அப்படீன்னாரு
“மு.பா : திடீர்னு திருவெம்பாவை பாடற சத்தங்கேட்டுது. அதுவரைக்கும் அவ்வளவு பக்தியோட யாரும் பாடிக்கேட்டதில்லை. யாரு பாடுறன்னு கிருஷ்ண சிவன் பார்த்தாரு. பட்டை பட்டையா துருநூறு பூசிக்கிட்டு பாரதியாருதான் பாடினாரு. எல்லோருக்கும் கண்ணிலே தண்ணி வந்திருச்சு.
பி: பாரதியை வெளியே போகச் சொல்லியிருப்பாங்களே
மு. பா: அதுதான் இல்லை. அவரும் உருகிப் போயிட்டாரு. அங்கே இருந்தவங்கள்ளாம் பாரதியை மேலே மேலே பாடசொ சொன்னாங்க. பூசை நல்ல படியா முடிஞ்சது.
கிருஷ்ண சிவன் ஓடிவந்து பாரதியைக் கட்டிப்பிடுச்சிக்கிட்டாரு
“வேஷத்திலே ஒண்ணுமில்லை போடா- வெளி
வேஷமில்லா நீயும் உள்ளே வாடா
நீதாண்டா உள்ளபடி ஞானி- உள்ளே
நெறஞ்சிருக்கும் பக்தி அபிமானி
பாதாதி கேசம் மயிர்க்கூச்சு- உன்
பாட்டில் என் அஞ்ஞானம் போச்சு
அப்படீன்னாரு
2012/7/31 Subbaier Ramasami <elan...@gmail.com>
பி: அதுக்கப்பறம் அவருக்கு ஒண்ணும் இடைஞ்சல் இருந்திருக்காது
மு: அப்படிச் சொல்ல முடியாது. பாரதி வெளைக்காரங்களுக்கு எதிரான கூட்டங்களுக்குப் போறதாலே நம்மளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்தாங்க!
அதனாலே செல்லம்மாவுடைய தமக்கை புருஷன் கடயம் போயிருந்த போது
போட்டுக்கொடுத்தாரு. செல்லம்மாவுடைய அண்ணாச்சி செல்லம்மா எழுதற மாதிரி பாரதிக்குக் கடுதாசி எழுதச் சொன்னங்க.
முதன் முதல் கணவனுக்கு மனைவி எழுதிகிற கடிதத்தில் ஆசையாக எதாவது எழுதியிருப்பாள் என்று பார்த்தால் அப்படி எதையும் காணோம்.
”தேசத்ரோக வேலை –நீங்
செய்யரதாச் சொல்றா
ஜெயிலுக் குள்ளே தள்ளி- ரொம்பச்
சித்ர வதைகள் செய்வா
என்று சொல்றான் அண்ணா –இங்கே
எனக்குப் பயமா யிருக்கு
இங்கொருத்தி இருக்கேன் என
எண்ணிப் பார்க்க வேணும்”
என எழுதியிருந்தா
பி.பா: அதுக்குப் பாரதி என்ன சொன்னாரு?
மு.பா:
பாரதி அவளுக்குப் பதில் எழுதினாரு.
பி: சொல்லுங்கண்ணே
மு: ப
என்னருமைக் காதலியே செல்லம்மா- நீயும்
எப்படி இருக்கிறேன்னு சொல்லம்மா
என்னப்பத்திச் சொன்னதெல்லாம் நம்பாதே –எவர்
எதைச் சொன்னாலும்கேட்டுப்புட்டு எம்பாதே
தப்புத்தண்டா செய்யமாட்டேன் கண்மணி- நீ
தமிழைப் படி அதுபோதும் பெண்மணி
அப்புறமா நான் வருவேன் செல்லம்மா- அப்போ
அழகாத் தமிழ் படிச்சுக்காட்டிச் சொல்லம்மா
அப்படின்னு எழுதினாரு
பி: ஏன் அவரு மனைவிக்குத் தமிழ்ப்படிக்கத் தெரியாதா
மு: அதுக்குத்தான் 7 வயசிலேயே கல்யாணம் ஆயிப்போச்சே! அப்புறம் எங்கே படிக்க!
பி:ஓஹோ
மு.பா :பாரதி அலாஹாபாத் யுனிவெர்சிடிலே சேரப் பரீட்சை எழுதினாரு. அதிலே நல்லபடி தேர்ச்சி பெற்றாரு.
பி: அங்கே போய்ப் படிச்சாரா?
மு: அதுக்குமுன்னாலே வேறு சில சமாச்சாரங்கள் நடந்துபோச்சு.
1903ம் வருடம் ஜனவரி மாதம் ஏழாம் எட்வர்ட் இந்தியாவின் சக்ரவர்த்தியாகப் பிரகடனம் செய்யப்பட்டாரு, அதைக் கொண்டாடறதுக்காக இந்திய வைஸ்ராய் லார்ட் கர்ஸான் ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தாரு டெல்லிக்கு எல்லா குறுநில மன்னர்களும் ஜமீந்தார்களும் போனாங்க. எட்டயபுரம் ஜமீந்தாரும் போனாரு. அந்த மாதிரி ஒரு முடிசூட்டுவிழா நடக்கலை என்கிற மாதிரி தடபுடலான ஏற்பாடு. ஏகப்பட்ட செலவு. பத்திரிகைகளில் அச்செய்திகளைப்படிக்கும் போது பாரதிக்குக் கோபம் கோபமா வரும். விழாவிலிருந்து திரும்பி வரும்போது எட்டயபுரம் ஜமீந்தார் காசிக்கு வந்தாரு.
தன்னோட எட்டயபுரம் வந்து அரண்மனை உத்தியோகத்தில் சேரும் படி பாரதியைக் கூப்பிட்டாரு. இதுக்கிடையிலே செல்லம்மா பெரியமனுஷியாயிட்டான்னு செய்தி வந்திருந்தது. எனவே பாரதியை எட்டயாபுரம் போகச்சொல்லி அத்தையும் சொன்னாங்க.
பாரதி எட்டயாபுரம் போகிறதுக்கு முன்னாலே கடயம் போனாரு. அங்கிருந்து செல்லம்மாவையும் கூப்பிட்டுக்கிட்டு எட்டயாபுரம் போனாரு.
பி.பா: அரண்மனையிலே பெரிய உத்தியோகமா அண்ணே!
மு.பா: நீ ஒண்ணு. பத்திரிகைகளை வாசிச்சுச்சுச் செய்திகளை ஜமீந்தாருக்குச் சொல்லணும். புலவர் சபையிலே கலந்துக்கணும். அவ்வளவுதான்
பி.பா: பாரதிக்கு அந்த உத்தியோகம் பிடிச்சிருந்ததா?
மு.பா: வேறே வழி.? ஜமீந்தாருட்டப் பேசும் போது எல்லோரும் கைகட்டி வாய்பொத்தித் தான் பேசணும். ஆனால் பாரதிக்கு அதிலே விதிவிலக்கு,
பி:பா பரவாயில்லை.
மு.பா ஜமீந்தாரின் அரசவையில் ஒருநாள் ஒரு விவாதம் நடந்தது.
26 வயதுக்குள்ளேயே சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார் மிக அற்புதமாகக் காவடிச் சிந்து பாடியிருக்கிறாரு. . அவரைப் போல இன்னொருவரால் காவடிச் சிந்து பாட முடியாது ன்னுஅவைக்களப் புலவர் ஒருவர் சொன்னாரு
இன்னொருத்தரு ஒரு காவடிச் சிந்துப் பாடலைப் பாடி “இதைப்போல எவராலும் பாட முடியுமா?” ன்னு கேட்டாரு.
அவையில் இருந்த புலவர்கள் எவரும் பதில் சொல்லவில்லை.
“ஏன், 11 வயதில் ‘பாரதி” பட்டம் பெற்ற நமது சுப்பிரமணிய பாரதி பாடலாமே” என்று கிண்டலாகச் சொன்னாரு ஒருத்தரு.. பாரதியின் கவித்திறமையில் அபார நம்பிக்கை உடைய ஒருத்தரு சொன்னாரு
“பாரதியைச் சாதாரணமாக நினைத்துவிடாதீங்க.. பாரதி நிச்சயமாகப் பாடுவார்” என்றாரு.
பூவில் மணம்பெறும் பூவே- பலர்
போற்றிடும் காவடிச் சிந்தெனும் பாவே
காவடிச் சிந்தினைப் போலே –ஓர்
கவிதை புனைந்திட ஆகாதுன்னாலே
சிந்தையில் கர்வம் கொள்ளாவே- கவி
செய்வதில் வல்லவன் என்று துள்ளாதே
சிந்தில் கவியொன்று பாடு – அதைச்
செய்யவிலையெனில் வாயினை மூடு
ஜமீந்தார் பாரதியைப் பார்த்து” சுப்பையா, உன்னால் பாடமுடியுமா?” ன்னு கேட்டாரு
“மஹாராஜா,பெரியவர்கள் பேசி முடிக்கட்டும் என்றிருந்தேன். என்னால் முடியும்”என்றார் பாரதி
“ஒரு வாரம் கால அவகாசம் தருகிறேன். அதற்குள் பாடு பார்க்கலாம்” என்றார் ஜமீந்தார்.
“ ஒரு நாள் போதும்” என்றார் பாரதி
“இளங்கன்று பயமறியாது” என்றார் ஒரு வயதான புலவர்
பி : காவடிச் சிந்துன்னா என்னண்ணே?
மு: அட, அது தெரியாதா உனக்கு. முருகனுக்குக் காவடி எடுத்துக்கிட்டுப் போகையிலே உடுக்கை அடிச்சிக்கிட்டுப் பாட்டுப்பாடுவாங்களே கேட்டதில்லையா?
பி.பா::அதுக்குப்போயா அவ்வளவு சண்டை போட்டாங்க!
“ மு: அதைச் சாதாரணமா நினைக்காதே
ஒரு பாட்டுச் சொல்றேன் கேளு
“பாடுகிறோம் வில்லுப் பாட்டு – இதைப்
பாமர மக்களும் கேட்டு – உயர்
பண்ணோடிடும் சொல்லாடிடும் நல்லோசையில் கைத்தாளமே
போட்டு துயர் ஓட்டு
உள்ளன இன்பங்கள் விண்ணில் – எனில்
உண்டுபார் யாவும் இம்மண்ணில்
ஒலிநாதமும் பெருமோகமும் உளபோதமும் நாம் காணலாம்
பண்ணில் எழில் பெண்ணில்
பி: இது யார் பாடினது அண்ணே
மு: தம்பி , நம்ம சொந்தப் பெருமையையெல்லாம் சொல்லிக்கக்கூடாது.
அன்னைக்குச் சாயங்காலமே பாரதி காவடிச்சிந்து எழுதிக்கிட்டு வந்தாரு
ஜமீந்தாருக்குப் பாடிக்காட்டுனாரு. அதைப் பார்த்த ஜமீந்தார் ஆளை அனுப்பி எல்லாப் புலவர்களையும் வரவழைச்சாரு
பாரதியின் வளர்ச்சியை விரும்பாதவங்க கூட எந்தக் குறையும் காண முடியலே. பாரதி தான் எழுதிய பாடலைக் கம்பீரமாகப் பாடினாரு எல்லோரும் பாரதியின் திறமையை வியந்து பாராட்டினாங்க
பி.பா: அந்தப்பாட்டுக் கிடைச்சிருக்காண்ணே?
மு.பா: கொஞ்சம் கிடைச்சிருக்கு.
என்னடி நான் பெற்ற மங்கை” என்ற மெட்டில் எழுதின பாட்டு. அதிலே கிடைச்ச சின்னப்பகுதியைப் பாடறேன் கேளு
பி: பாடுங்கண்ணே::
மு.பா
“பச்சைத் திருமயில் வீரன்
அலங்காரன், கௌமாரன் - அடி
பன்னிரு திண்புயப்பாரன் - அடி
பணிசுப்பிர மணியர்க்கருள்
அணிமிக்குயர் தமிழைத்தரு
பக்தர்க்கெளிய சிங்காரன் - எழில்
பண்ணு மருணாசலத் தூரன்”
அவர் பாடின உடனே மற்றப்புலவர்களெல்லாம் தலையைத் தொங்கப் போட்டுட்டாங்க
“பின்னே இருக்காதா?
மு.பா ஒருசமயம் ஜமீந்தார் சென்னைப்பட்டணத்திற்கு
விஜயம் செய்தாரு ர். ஜமீந்தார் விஜயம் என்றால் சும்மாவா? தனியாகச் சென்றால் ஏது மதிப்பு.?
எனவே தன்னுடன் தன் அவைக்களப் புலவர்கள் சிலரையும் கூட்டிக்கொண்டு போனாரு.. அங்கே அவர்கள் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செஞ்சாரு.
. பாரதியையும் ஜமீந்தார் கூட்டிக்கிட்டுப் போயிருந்தாரு. . அங்கிருந்து ஊருக்குத் திரும்புவதற்கு முன்னாலே ஒவ்வொருவருக்கும் ஜமீந்தார் 500 ரூபாய் கொடுத்தாரு.
பி.பா: 500 ரூபாய்தானா?
முபா- அந்தக்காலத்திலே 500 ரூபாய்னா இந்தக்காலத்திலே 50000 ரூபாய்க்குச் சமம்
பி; ஓ அப்படியா?
மு.பா: ஆமா. பாரதி திரும்புவதற்கு ரெண்டு நாட்களுக்கு முன்பே அவங்கள்ள ஒருத்தர் திரும்பி வந்தாரு. ஜமீந்தார் கொடுத்த ரூபாயிலே மனைவிக்கு நகைகளும் காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் இன்னும் சில அதிசயமான பொருட்களும் வாங்கி வந்திருந்தாரு. அந்த வித்துவானின் மனைவி பாரதியினுடைய சித்தி சின்னம்மாட்டப் போயி தன் வீட்டுக்காரர் வாங்கிங்கிக்கிட்டு வந்ததைப் பற்றியெல்லாம் சொல்லிப் சொல்லிப் பெருமைப்பட்டாங்க!
சின்னம்மாச் சித்தி செல்லம்மாவிடம் சொன்னாள். தன் வீட்டுக்காரரும் தனக்கு நகைகளும் புடவைகளும் வாங்கிவருவார் என்று கற்பனை செய்யத் தொடங்கினாங செல்லம்மாள்.
பட்டணம் போயி வருவாரு- நல்ல
பண்டங்கள் வாங்கித் தருவாரு
பட்டுத் துணிகள் பலப்பலவாம்- காஞ்சிப்
பட்டுப் புடவை மிகவலிவாம்
வண்ண வண்ணப் பொருள் ஆயிரமாம் – சுவை
மல்கும் புதுமைகள் ஆயிரமாம்
கண்ணைப் பறிக்கும் அணிகளுண்டாம் –ஒளி
காட்டி மயக்கும் மணிகளுண்டாம்
மின்னலைப் போல ஒளிவிளக்காம் – பல
விந்தை ரகத்தில் புதுத் தளுக்காம்
பொன்னில் பொதி முத்து மாலைகளாம்- பல
புத்தம் புதிய காதோலைகளாம்
தித்திக்கும் தீஞ்சுவைப் பண்டங்களாம்- சுவை
சேர்த்திடும் சீனக்கற்கண்டுகளாம்
அத்தனையும் வாங்கி வந்திடுவார்- எனக்கு
ஆசையுடன் அள்ளித் தந்திடுவார்
. தன்கணவர் சற்றுக் கோபக்காரரே தவிர தன்னிடம் மிகவும் ஆசையாகத் தான் இருக்கிறார். எனவே நிச்சயம் நகைகள் வாங்கிவருவார் என நெனச்சாங்க!
இரண்டு நாட்கள் கழிச்சுப் பாரதி திரும்பிவந்தாரு. இரண்டு குதிரை வண்டிகள் வீட்டில் முன் வந்து நின்றன. ஒன்றிலிருந்து பாரதி இறங்கினார். .
கையிலே முட்டையைத் தூக்கிக்கொண்டு - அதன்
கட்டு விடாமல் பிடித்துக்கொண்டு
பையப் பையப் பைய நடந்துவந்தார் -மிகப்
பத்திரமாகச் சுமந்துவந்தார்
என்ன இருக்கும் இதிலென்றெண்ணி -அம்மா
ஏதேதோ கற்பனை செய்யலானாள்
மின்னிடும் பொன்னில் அணிமணியோ -இல்லை
மேவிடும் காஞ்சித் துணிமணியோ
பட்டணத்துள்ள புதுப்பொருளோ – வெள்ளிப்
பாத்திரமோ நல் விசித்ர்ஹிரமோ
கட்டிவைத்த முத்து மாலைகளோ – அன்றிக்
கண்ணைக் கவர்ந்திடும் சேலைகளோ
மேலாக ஒரு சுங்குடிப்புடவை. எடுத்துச் செல்லம்மாவிடம் கொடுத்தாரு. இன்னொரு புடவை. சின்னம்மாச் சித்திக்கு வாங்கி வந்திருந்தாரு. பிறகு மூட்டையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துவைக்கத் தொடங்கினார். எல்லாம் புத்தகங்கள். சில புதுசு. பலதும் பழசு.. சில செல்லரித்துப்போனப் பழைய புத்தகங்கள்:.
புத்தகத்தின் சுவையறிந்து சின்ன உயிர்ச் செல்லுகளும்
போயங்கே அரித்திருக்கும் புத்தகம் –அறிஞர்
போற்றுகின்ற ஜீவனுள்ள புத்தகம்
நித்தியத்தை வாழ்வுதன்னின் சத்தியஹ்ட்தைப் போற்றுகின்ற
நிறைமிகுந்த பயனுள்ள புத்தகம்- பண்புச்
செறிவுள்ள நயமுள்ளபுத்தகம்
செல்லம்மா முகம் சுண்டியது. பாரதி கவனித்தார்
கவலைசேர் முகத்தினாய் போ போ போ
களிகுலுங்கும் முகஹ்ட்துடன் வா வா வா
பொன்னை மிக விரும்புவாய் போ போ போ
புத்தகம் விரும்புவாய் வா வா வா
காஞ்சிப் புடவை ஆசையா போ போ போ
கம்பன் மேலே ஆசையா வா வா வா
உணவின் மேலே ஆசையா போ போ போ
உயர்ந்த அறிவில் ஆசையா வா வா வா
பாரமுள்ள உள்ளாத்தாய் போ போ போ
பாரதிக்கு மனைவியே வா வா வா
அப்படின்னு பாடினாரு.
செல்லம்மாளுக்கு அழுகையாக வந்தது. அடக்கிக் கொண்டாங்க.
“ஏண்டா சுப்பையா, செல்லம்மாளும் சின்னப் பொண்ணுதானே! ஏதாவது நகை வாங்கி வந்திருக்கக்கூடாதோ? “என்றாங்க சின்னம்மாச் சித்தி.
“ நகைகள் எப்பொழுதுவேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்தப்புத்தகங்கள் கிடைக்குமா? இதுக்காகச்சென்னைப்பட்டினம் திரும்பப் போகமுடியுமா?” ” என்று சிரித்தாரு பாரதி.
“ஐநூறு ரூபாயில் எவ்வளவு மிச்சம்?” என்று கேட்டாங்க சின்னம்மாச் சித்தி..
பையிலிருந்து பணத்தை எடுத்துச் செல்லம்மா ரு அதில் பதினைந்து ரூபாய் மிச்சமிருந்தது
செல்லம்மாளைப் பார்த்து கண்சிமிட்டிக்கொண்டே
“ காஞ்சிப்புடவை ஆசையா போ போ போ
கம்பன் மேலே ஆசையா வா, வா, வா” என்று பாடிக் குதிக்கத் தொடங்கிவிட்டாரு
“ நல்ல பிள்ளையடா நீ” என்று சொல்லிக்கொண்டே சின்னம்மாச் சித்தி உள்ளே போனாங்க!
பாரதி எட்டயாபுரம் ஜமீந்தாரோட இங்கிலீஷிலே பேசுவாரு. அதுனாலே அவர்ட்டே நெருக்கமாக இருந்தாரு. இது பல புலவர்களுக்குப் பிடிக்கலே!
பாரதியைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் ஜமீந்தாரிட்டச் சொன்னாங்க!
பி: ஜமீந்தாரு நம்பியிருக்க மாட்டாரே!
மு: முதல்லே நம்பலே. ஆனால் பின்னாலே நடந்த ஒரு நிகழ்ச்சி அவரை நம்ப வச்சிடுச்சி
“பி: அதெஉ என்னண்ணே?
மு. ஜாமிந்தாரு வருஷத்திலே ஒண்ணிரண்டு தடவை குதிரை மேலே பவனி வருவாரு. அப்படி வர்ரபோது ஜமீந்தாரு வரார்னு முன்னாலே வாங்கான்னு ஒரு வாத்தியம் வாசிச்சுட்டு வருவாங்க1 கொம்பு தாரை தப்பட்டையெல்லாம் முழங்கும். அதைக்கேட்டுட்டு ஊர்க்காரங்களெல்லாம் வீட்டை விட்டு வெளியே வந்து ஜமீந்தாருக்கு வணக்கம் சொல்லணும். அப்படி ஒருதடவை பவனி வந்த போது பாரதி அவர்வீட்டு மாடியிலே நண்பர்களோடே ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியோடை கவிதையைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தாரு. யாரோ வந்து ஜமீந்தாரு வாரார்னு அவர்கிட்டே சொன்னாங்க. உடனே பார்தி முட்டாள்த்தனத்தின் பிரகடனம்னு அந்தக் கவிதையிலே வர்ர எதையோ பத்திச் சொன்னாரு. ஜமீந்தாரைத்தான் அவரு சொல்ராருன்னு நெனச்சுக்கிட்டுச் ஜமீந்தாரிடம் போய்ச் சொல்லிட்டாரு.
ஜமீந்தாருக்குக் கோபம் வந்திடுச்சு.
பி: பாரதியைத் திட்டினாரா?
மு: இல்லை. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம்னு நெனச்சாரு. சிலசமயங்கள்ள நண்பர்களே நமக்கு வினையா வந்துடுவாங்க. அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அதாவது பாரதியாருடைய நண்பர் ஒருத்தரு பாரதியைப் பார்த்துப்”பாரதி நீ வெண்பா ஈற்றடி எதைக்கொடுத்தாலும் சாமர்த்தியமாப் பாடுவையாமே. நான் ஒண்னு கொடுக்கட்டுமான்னு கேட்டாரு
“விகாரம் இல்லாமக் கொடுத்தா பாடரேன்னு சொன்னாரு. உடனே நண்பரு சொன்னாரு
“சுடுகாட்டுச் சாம்பலுக்கு மன்னன் சமம்”
“இந்த விவகாரத்துக்கு நான் வரலை என்றார் பாரதியார். நமக்குள்ளே தானே நாங்கபோய்ச் சொல்லவா போறோம். உன் சாமர்த்தியத்தைப் பார்க்க வேண்டாமா? என்றார் நண்பர். சவால் விட்டா அதை ஏத்துக்கறது பாரதிக்குப் பழக்கம்.
உடனே ஒரு வெண்பா சொன்னாரு
“என்னண்ணே சொன்னாரு?”
அது முழுசும் கிடைக்கலே .
அண்ணே நீங்களாவது அது போலே ஒரு பாட்டு இட்டுக்கட்டிச் சொல்லுங்கண்ணே
மு.பா: பாரதி பாடின மாதிரி நம்மாலே முடியுமா? சித்திர பாரதிங்கற நூலிலே பெரியவர் ரா.அ பத்மநாபன் யாரவது அப்படியொரு பாடல் எழுதமாட்டீங்களான்னு கேட்டுருக்காரு. அதுக்காகவாவது ஒண்ணு சொல்லுதேன் கேளு.
காக்கப் புரியும் கருமத்தால், நீத்தாரின்
யாக்கை எரியம்புக் காக்குவதால்- நோக்கமெலாம்
ஓம்பும் இறைமேல் உளதால்
சுடுகாட்டுச்
சாம்பலுக்கு மன்னன் சமம்
பி;பா புரியலையே அண்ணே
மன்னன் காக்கும் தொழிலைச் செய்யறவன். மரித்தவரின் ஆன்மக் காவலுக்காகக் கருமம் புரிய உதவுறது சாம்பல். சரிதானா?
பி,பா: சரிதாண்ணே
தன்னை நீத்தவர்களின் உடம்பைப் போரில் அம்புக்கிரையாக்குவான் மன்னன். இறந்து போனவரின் யாக்கையை தீயிட்டுச் சாம்அலாக்குவர்கள்
“பி.பா: ஆகா அருமையண்ணே. சொல்லுங்க
மன்னனுடைய கவனமெல்லாம் வரி வசூலிக்கிறதிலே இருக்கும். சுடுகாட்டுச் சாம்பலோ சிவனாரின் திருமேனியை அழகு செய்கிறது
பி:பா: அண்ணே ரொம்பக் கரெக்டா இருக்கண்ணே. அண்னே நீங்க கூட அப்பாப்பொ நல்லா கவிதை சொல்லூதீகண்ணே
மு: எல்லாம் அந்தப் பாரதியின் ஆசிதான்னு வச்சுக்கோயேன்.
பி: அப்புறம் என்னாச்சண்ணே!
முபா: அதை மறுநாளே ஜமீந்தாரிட்டே யாரோ சொல்லிட்டாரு. சித்தப்பா ஜமீந்தாரு பாரதியைக் கூப்பிட்டுத் திட்டினாரு. பாரதி அதுக்கு அர்த்தம் சொல்லி மன்னனை உயர்வாகத்தானே சொல்லியிருக்கேன்னாரு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பு வளர்ந்துக்கிட்டிருந்தது. அவங்க வேலையை விட்டுத் தூக்குறதுக்கு முன்னாலே நாமே வேலையை விட்டு நின்னுக்கணும்னு நெனச்சாரு.
பி: அப்புறம் என்ன பண்ணுனாரு
முபா: ஜமீந்தாரிடமிருந்து வரவேண்டிய சம்பளம் வல்லே. ஒருநாள் ஜமீன் மளிகையிலே ஒரு பகுதியிலே தீப்பிடுச்சிக்கிட்டூது. அந்தச் செய்தியை ஒரு நண்பர் பாரதியிடம் சொன்னாரு
“பாரதி, உனக்குத்தெரியுமா? ஜாமின்மாளிகையிலே தீப்பிடுச்சுட்டுது. அன்னைக்கு அந்தக்கவிக்கு வாலிலே தீ வச்சாங்க இலங்கை எரிஞ்சுது. இன்னைக்கு இந்தக் கவிக்கு தீங்கு செஞ்சாங்க அரண்மனை எரிஞ்சுது அப்படின்னாரு
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. இதுவரைக்கும் எனக்குச் சோறு போட்டவர் ஜமீந்தார். அவரைத் தப்பாப் பேசக்கூடாதுன்னாரு பாரதி
பி;“என்ன நல்ல மனசுண்ணே அவருக்கு!
மு. பா: பின்னே இல்லையா. ? இதுக்கிடையிலே செல்லம்மா முழுகாம இருந்தாங்க. அவங்களை கடயத்துக்குக் கூட்டிட்டுப் போவதற்கு அவருடைய அண்ணாச்சி வந்திருந்தாரு. அப்பத்தான் பாரதியோடே கவிதை“தனிமை இரக்கம்னு பேரு. அது பத்திரிகையேலெ வெளிவந்திச்சு. பாரதி செல்லம்மாளை கடயத்துக்கு அனுப்பிச்சுட்டு மதுரைக்குப் போனாரு.
பி.பா: மதுரையிலே வேலை கிடைச்சுதா?
மு;பா: அங்கே சேதுபதி ஹைஸ்கூலிலே தமிழாசிரியாராயிருந்த அரசண்சண்முகனார் என்னும் பெரும் புலவர் 3 மாசம் விடுமுறையிலே போனாரு. அந்த வேலை பாரதிக்குக் கிடைச்சது.
பி.பா பாரதி வித்வானுக்குப் படிச்சிருந்தாரா?
மு. பா: அவர் வித்துவார் தேர்வு கொடுக்கலையே தவிர அவருக்கு அதுக்க்ம் மேலே எல்லாஅம் தெரியும். பரீட்சை வச்சுத்தான் சேர்த்துக்கிட்டாங்க. கோபாலகிருஷ்ணய்யர்னு ஒரு வித்துவான். அவர் தான் இந்த வேலை கிடைக்கக் காரணமா இருந்தாரு.
“பி. பா பாரதி அங்கே எப்படிப் பாடம் எடுத்தாராம். அவருட்டே படிச்சவங்க யாரவது பின்னாலே சொல்லியிருப்பாங்களே
மு.பா: சொல்லியிருக்காங்க எப்படித்தெரியுமா?
இவரைப் போல ஆசிரியர் வேண்டும் – பாடம்
இந்தவிதம் சொன்னால் படிக்கத் தூண்டும்
சுவையிருக்கும் நயமிருக்கும் பாடம் – இவர்
சொல்லச் சொல்லக் கேட்க மனம் நாடும்
பி.பா: அங்கே தொடர்ந்து வேலை செஞ்சாரா? எத்தனைநாள் வேலை செஞ்சாரு.
மு.பா: எத்தனைநாள்னு சரியாக் கேட்டே. அங்கே அவரு மூணுமாசம் கூட வேலை செய்யலே.
பி.பா: போகச் சொல்லிட்டாங்களா?
மு; இல்லையில்லை. அப்போ சுதேசமித்திரன்னு ஒரு பத்திரிகை நடந்துக்கிட்டிருந்தது. ஜி. சுப்ரமணிய அய்யர்னு ஒருத்தர் நடத்திக்கிட்டு இருந்தாரு. இங்கிலீசுலேருந்து தமிழுக்கு தர்ஜுமா பண்ற ஒருத்தர் அவருக்குத் தேவைப் பட்டாரு. மதுரையிலிருந்த கோபாலகிருஷ்ணய்யர் சுப்ரமணிய அய்யருக்குப் பழக்கம். அவர் மதுரைக்கு வந்த போது அவரிடம் சொன்னார். உடனே” நம்ம பாரதியிருக்கானே ? என்றார் கோபால கிருஷ்ணய்யார். பாரதியும் சுப்ரமணிய அய்யரும் சந்திச்சாங்க. சென்னைக்கு வந்து சுதேச மித்திரன்லே வேலைக்குச் சேரச்சொன்னாரு. பாரதியும் தனது தன்மைக்கு ஏத்த வேலைன்னு ஒத்துக்கிட்டுச் சென்னைக்குப் போனாரு. சுதேச மித்திரன்லே சேர்ந்தாரு.
பி.பா: தர்ஜுமான்னா என்னண்ணே?
மு. பா: தர்ஜுமான்னா மொழிபெயர்க்கிறதுன்னு அர்த்தம்.
பி” ஓ அப்படியா?
மு. பா: தர்ஜுமான்னா மொழிபெயர்க்கிறதுன்னு அர்த்தம்.
பி” ஓ அப்படியா?
மு: பாரதி வெள்ளைக்காரன் மாதிரி இங்கிலீசு எழுதுவாரு பேசுவாரு. பத்திரிகைக்குத் தினசரி ராய்ட்டர் என்கிற கம்பெனியிலிருந்து இங்கிலீஷிலே தந்தி வரும். அதை பாரதி மொழிபெயர்ப்பாரு, அவருடைய மொழிபெயர்ப்பைப் பார்த்து சுப்பிரமணிய அய்யர் அசந்து போனாரு.
“பி: பாரதிக்குப் பிடிச்ச வேலைதானே!
மு: பிடிச்சவேலைதான். அனால் வேலை அதிகமிருந்தது. வேலை வாங்கிறதுலே அய்யர் கில்லாடி. சாயங்காலம் வீட்டுக்குத் திரும்பலாம்னு பாரதி கிளம்பறபோது அய்யர் ஒரு டம்ளர்லெ காப்பியோட வருவாரு.
“பாரதி இந்தத் தந்தியைப் பார்த்தியா? இந்த கோர்ட் ஜட்ஜ்மெண்டிலே எத்தனை அநியாயம். இதை நாளைக்கே போடணும். இப்போ தர்ஜுமா பண்ணிக் கொடேன்” நு சொல்வாரு. பாரதியும் அந்த வேலையைச் சொல்வாரு.
பி” சுப்ரமணிய அய்யர் அதிகமாகத்தான் வேலை வாங்கியிருக்காரு
மு: அய்யர் நல்லவர்தான். அவரு பாரதியினுடைய எழுத்துலே மயங்கிக் கிடந்தாரு. அவரு சொல்லுவாரு
“புவியாளும் போஜனாகப் பாரதி - நானும்
பூமியிலே பொறந்திருந்தா பாரதி
கவியாளும் உன்சொல் ஒவ்வொன்றுக்கும் –இங்கே
கனகமணி ஆயிரமாய்க் கொட்டுவேன்
என்ன செய்வேன் போஜனாக இல்லையே – இங்கே
இங்கிலீசுக் காரன் வேறு தொல்லையே
என்றென்றும் உன்பெருமை வாழ்கவே!- நாட்டின்
இனிமையெலாம் உனையணுகிச் சூழ்கவே”
அப்படின்னு சொல்வாரு.
பி. பா:
பாரதி அதிலே கட்டுரையெல்லாம் எழுதினாரா? “
மு. பா: அப்பப்போ ஏதாவது எழுதுவாரு. உதவி ஆசிரியர்னு பேர் இருந்தாலும் அவருக்குத் தலையங்கம் எழுத வாய்ப்புக்கொடுக்கலை.
இதுக்கிடையிலே அவருக்குப் பெண்குழந்தை பிறந்தது. அட்தைப்போய்ப் பக்கக்கூட அவருக்கு விடுப்புக் கிடைக்கலே. குழந்தைக்குத் தங்கம்மான்னு பேர்வக்கச் சொல்லி எழுதினாரு. நாலுமாசம் கழிச்சு அவரது குடும்பம் சென்னைக்கு வந்திச்சு
பி.பா: எங்க தங்கியிருந்தாங்க?
“மு,பா: சென்னையிலே லிங்கிச்செட்டித்தெருவிலே ஒரு ஒண்டுக்குடித்தனத்திலே குடியிருந்தாங்க !பாரதிக்கு நெறய நண்பர்கள் சேர்ந்தாங்க! அந்தச் சமயத்திலே தான் லார்ட் கர்ஸான் என்ற வைசிராய் வங்காளத்தை இரண்டாகப் பிரிச்சாரு. நாட்டிலே பெரிய கலவரமே வெடிச்சுது.
பாரதி அப்போ “வங்கமே வாழிய”ன்னு ஒரு கவிதை எழுதி கடற்கரைக் கூட்டத்திலே பாடினாரு. அது பத்திரிகையிலே வெளிவந்திச்சு. பாரதியாரைப் பற்றி மக்களுக்குத் தெரியவந்தது.
அப்பத்தான் பாரதி கடினத்தமிழிலிருந்து எளிமைத் தமிழுக்கு இறங்கிண்டிருந்தார். அந்தப்பாட்டுக்கு அப்புறம் அவர் எழுதினதெல்லாம் மக்களுக்கு எழுச்சியூட்டுறமாதிரி எளிமையாகவும் இருந்தது. வந்தே மாதரம் என்கிற வார்த்தையை தமிழ்பாக்கள் பயன்படுத்தினதே பாரதி சொல்லித்தான்னு சொல்லணும்
பிபா: கேள்விப்பட்டிருக்கேண்ணே. அந்தக்காலத்தில் எந்தப் போராட்டமானாலும் வந்தேமாதரம் என்று பாரதியார் பாட்டைப் பாடிக்கிட்டுத்தான் போவாங்களாம்.
“மு.பா ஆமாம் உண்மைதான். சுபிரமணிய அய்யருக்குத் தெரிந்த வைத்திய நாதய்யர்னு ஒருத்தர் மாதர்களுக்காக ஒரு பத்திரிகை ஆரம்பிக்க நெனச்சாரு. அதை அய்யரிடம் அவர் சொன்ன போது அய்யர் பாரதியை அதுக்கு ஆசிரியராப் போடச்சொன்னாரு. அப்போ பாரதிக்கு 23 வயசுதான். அந்தப்பத்திரிகைக்குப் சக்கரவர்த்தினின்னு பேரு. பாரதி சுதேச மித்திரன் பத்திரிகையில் உதவியாசிரியரா இருந்துகொண்டே சக்கரவர்த்தினிப் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தாரு. அப்புறம் பின்னாலே பாலபாரதா என்று ஒரு பத்திரிகைக்கும் ஆசிரியரானாரு. திருமலாச்சாரியார்னு ஒருத்தர் “இந்தியான்னு ஒரு பத்திரிகை ஆரம்பிச்சாரு. சுதேசமித்திரன் வேலைய விட்டுட்டுப் பாரதி அதுக்கு ஆசிரியரானாரு
எத்தனை பத்திரிகையிலே எழுதியிருக்காரண்ணே
பாட்டு:
தம்பி இப்போ இந்தியன் பேங்க்னு ஒரு பேங்க் இருக்குத்தெரியுமா?
பி.பா: தெரியுமே. நான் கூட அந்தப் பேங்கிலே கணக்கு வச்சுருக்கேனண்ணே1
மு:
அந்த பேங்க் ஆரம்பிக்கவும் பாரதி ஒரு காரணமா இருந்தாரு.
:பி : அது என்ன கதைண்ணே
“மு: சொல்றேன். அந்தக்காலத்திலே அர்பத் நாட் பேங்க்னு ஒரு பேங்க் இருந்துது. அது ஒரு வெள்ளைக்காரன் பேங்க். அதுலே தான் ஏழைபாழையிலிருந்து பெரிய பணக்காரன்வரை எல்லோரும் பணம் போட்டு வச்சிருந்தாங்க! நெறயப் பணம் வந்த உடனே அதன் நிர்வாகிகள் கண்டபடி நிலம்வாங்கிறது ஆடம்பரமாச் செலவு பண்றது, வெளிநாட்டிலே கம்பெனி ஆரம்பிக்கிறதுன்னு செலவு பண்ணினாங்க. திடீர்னு ஒருநாள் பேங்க் திவாலாயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. கதவை இழுத்து மூடிட்டாங்க. பாரதி பணம் இழந்தவங்களுக்காக வாதாடி இந்தியாப்பத்திரிஅகையில் எழுதினாரு. வெள்ளைக்காரன் கையிலே பேங்க் இருக்கிறதனாலே தானே இப்படி நடக்குது. இந்தியர்களே ஒரு பேங்க் ஆரம்பிக்கணும்னு எழுதினாரு.
நமக்கென்றே வங்கியொன்று நாம்தொடங்க வேண்டும்
நாம்தொடங்கும் வங்கியில்தான் பணம் போட வேண்டும்
நமது பணம் தனைச் சுரண்டித் தான் சுருட்டிக் கொண்டு
நாசம் செய்யும் வெள்ளையனை விரட்டிவிட வேண்டும்
ஏழைகளின் பணத்தையெலாம் வீண்செலவு செய்தே
இழப்பென்று காட்டுகிறான் அர்பத்னாட் காரன்
வாழுதற்கு வகையரியா மக்களின் சே மிப்பு
வஞ்சகர்கள் சுருட்டிவிட்டு வாயிலை அடைத்தார்
செல்வந்தர் எத்தனைபேர் நம்மிடத்தே உண்டு
செட்டிமக்கள் மனம்வைத்தால் நடக்குமிக நன்று
சொல்லுகிறேன் உண்மையினை இதையுணர்ந்து கொண்டு
தொடங்கிடுவர் என நாமும் நம்புகிரோம் இன்று
“பரவாயில்லையே. இப்போ இந்தியன் பேங்கிலே பணம் போட்டிருப்பதிலே பெருமைப்படறேன். பாரதியோடே சம்பந்தம் இருக்கில்லையா?
மு.பா: இந்தியாப்பத்திரிகையிலே அவர் நெறையக் கவிதை எழுதினாரு. கனல் தெறிக்கக் கட்டுரை எழுதினாரு. அப்போ ஒரு நாள் அவரைத் தேடி ஒருவர் வந்தாரு. அவர் வேறு யாருமில்லே. கப்பலோட்டிய தமிழன் வ.வு. சிதம்பரம் பிள்ளைதான். ஒரே மாவட்டுத்துக்காரங்க. பக்கத்துப்பக்கத்து ஊரு . பேசிக்கிட்டே இருந்தாங்க. சாயங்காலம் மெரீனா பீச்சுக்குப் போனாங்க. அப்பொ எரிஞிண்டுக்க் இருந்த விளக்கெல்லாம் அணைஞ்சுது. அப்புறம் மீண்டும் எரிஞ்சுது.
அப்போ பாரதி சொன்னாரு
நல்லகாலம் பொறந்திருக்குப் பிள்ளைவாள் –நாமும்
நல்லபடி வாழ்ந்திடலாம் பிள்ளைவாள்
வல்லவளாம் காளிசக்தி பிள்ளைவாள் –நமை
வாழ்த்தியிங்கே சுடருகிறாள் பிள்ளைவாள்
பேச்செடுக்கும் முன்னமேயே பிள்ளைவாள்- சக்தி
பிள்ளைகளை வாழ்த்துகிறாள் பிள்ளைவாள்
மூச்செல்லாம் சுதந்திரமாய் பிள்ளைவாள் – நாம்
முன்னைவிட முனைய வேண்டும் பிள்ளைவாள்
துக்கமில்லை துக்கமில்லை பிள்ளைவாள் – பணி
தொடரவேண்டும் தொடரவேண்டும் பிள்ளைவாள்
உடனே வஉ சி சொன்னாரு
“மின்மினியாக இருந்த ஒளிதன்னை
மின்னலைப் போலச் சுடரவிட்டீர்
கன்னல் கவிதையாம் பாட்டின் மூலம் என்றன்
காதல் வளர்ந்தது தேசத்திலே”
அதுக்கப்புறம் நெண்டு பேருக்கும் நட்புத் தொடர்ந்தது. பாரதியை வ.வு.சி மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சாரு.
40 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தேன். சந்தவசந்த நண்பர்கள் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

பாரதி எட்டயாபுரம் ஜமீந்தாரோட இங்கிலீஷிலே பேசுவாரு. அதுனாலே அவர்ட்டே நெருக்கமாக இருந்தாரு. இது பல புலவர்களுக்குப் பிடிக்கலே!
மு;பா: அங்கே சேதுபதி ஹைஸ்கூலிலே தமிழாசிரியாராயிருந்த அரசண்சண்முகனார் என்னும் பெரும் புலவர் 3 மாசம் விடுமுறையிலே போனாரு. அந்த வேலை பாரதிக்குக் கிடைச்சது.
பி.பா பாரதி வித்வானுக்குப் படிச்சிருந்தாரா?
மு. பா: அவர் வித்துவார் தேர்வு கொடுக்கலையே தவிர அவருக்கு அதுக்க்ம் மேலே எல்லாஅம் தெரியும். பரீட்சை வச்சுத்தான் சேர்த்துக்கிட்டாங்க. கோபாலகிருஷ்ணய்யர்னு ஒரு வித்துவான். அவர் தான் இந்த வேலை கிடைக்கக் காரணமா இருந்தாரு.
அந்த நேரத்திலே காசியிலே காங்கிரஸ் மாநாடு நடந்தது. அதுக்குப் பாரதி போனாரு.
அடுத்த வருஷம் கல்கத்தாவிலே காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது காங்கிரசில்தீவிரவாதிகள் மிதவாதிகள் என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. பாரதி தீவிரவாதப்பிரிவில் இருந்தாரு.
மாநாடு முடிஞ்சதும் கல்கத்தாவிலே விவேகானந்தரோட சிஷ்யை நிவேதிதா தேவியைச் சந்திச்சாரு.
அந்த அம்மா பாரதியைப்பார்த்து “”மகனே நீ உன் மனைவியை அழைத்துக்கொண்டு வரவில்லையான்னு கேட்டாங்க.
“இதுக்கெல்லாம் நாங்க பெண்களை அழைச்சிக்கிட்டு வர்ரதில்லேன்னாரு பாரதி. அந்த அம்மாவுக்குக் கோபம் வந்திடுச்சு
பி.பா ஏன்
மு: பெண்களை விலக்கிவச்சு எப்படி சுந்திரம் வாங்கறதுன்னு கேட்டாங்க அவங்க சொன்னாங்க
பெண்கள் இல்லாமலே போராட்டமா?- தெய்வம்
பீடத்திலில்லாமல் தேரோட்டமா?
கண்களை மூடிப்பின் காட்சியுண்டா –மாதரைக்
கட்டிப் போட்ட பின்னே மாட்சியுண்டா
சக்தியில்லாமலே சாதனையா – நீங்கள்
தருவது பெண்ணுக்கு வேதனையா?
இக்கணம் தொட்டுக் குரல்கொடுப்பாய் – பெண்களுக்
கென்றே எழுத்தை விரல்தொடுப்பாய்
அப்படின்னாங்க
பி: நல்லாத்தான் சொல்லியிருக்கிறாங்க
மு: அந்த அம்மா இன்னும் சில இரகசியமான விஷயங்கள்ளாம் சொன்னாங்க. அன்னையிலிருந்து அந்த அம்மாவை பாரதி குருவா ஏத்துக்கிட்டாரு.
கல்கத்தாவிலே விபின சந்த்ர பாலர்ங்கற தேசபக்தரைச் சந்திச்சாரு. அவருடைய பேச்சைக் கேட்டு மயங்கிப்போயிட்டாரு. அவரை எப்படியாவது சென்னைக்கு வரவழைச்சுப் பேசச் சொல்லணும்னு நெனச்சாரு.
திரும்பி வந்ததற்கப்புறம் இந்தியாப்பத்திரிகையிலே மிகத் தீவிரமா எழுத ஆரம்பிச்சாரு.
இந்தக்காலகட்டத்தில் பாரதியின் புகழ் பெற்ற வந்தே மாதரம் பாட்டு வெளிவந்தது
பி.பா: அதென்ன பாட்டு அண்ணே
மு:பா:
வந்தே மாதரம் என்போம்- எங்கள்
மாநிலத்தாயை வணங்குதும் என்போம்
ஜாதிமதங்களைப் பாரொம்- உயர்
ஜன்மம் இத்தேயத் தெடுத்தனராயின்
வேதியராயினும் ஒன்றே- அவர்
வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே
ஒன்று பட்டா லுண்டு வாழ்வு- இங்கே
ஒற்றுமை நீங்கி அனைவர்க்கும் தாழ்வு
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்
பி: பா: ரொம்ப உணர்ச்சிகரமா இருக்கண்ணே,
மு: ஆமாம். வந்தே மாதரம்னா என்னென்னு மக்களுக்குத் தெரியாதென்பதனாலே இந்த மாநிலத் தாயை வணங்குதுமென்போம் நு அதுக்கு அர்த்தமும் சொல்லியிருக்காரு. அந்தக்காலத்திலே இதைப்பாடிக்கிட்டுத்தான் ஊர்வலம் போவாங்க! இதைப்பாடினாலே போலீஸ் மக்களைக் கைது செஞ்சாங்க!
அடுத்து விபின சந்த்ர பாலரைக் கூட்டிவந்து சென்னையிலே பேச வச்சாரு. தேசபக்தி தீவிரமாப் பரவ ஆரம்பிச்சது.
தமிழ் நாட்டிலில் அப்போ இருந்த புலவர்கள் தேசபக்திப் பாடல்கள் எழுதம்னு பாரதி ஆசைப்பட்டார். அதனாலே ஒரு அறிக்கைவிட்டார். நாட்டு வளம் நகர்வளம் இதெல்லாம் விடுத்து எழுச்சியூட்டும் தேசபக்திக் கவிதைகள் எழுதுங்கள் என்று வேண்டினார். சரியாக் கவிதைகள் கிடைக்கலே. அதுனாலே பாரதியாரே எழுதி வெளியிட்டாரு.
அதுலே முக்கியமா மூணு கவிதைகள். வந்தே மாதரம் என்போம், எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி, அப்புறம் மன்னும் இமயமலை எங்கள் மலையே
ஒருசமயம் பாரதியார் இந்தப் பாடல்களைப் பாடிக்கிட்டிருந்தபோது க். நடேசய்யர்னு ஒரு தேசபதரு கேட்டாரு. உடனே பாரதியார்ட்டே இந்தப்பாடல்களை நீங்க வக்கீல் கிருஷ்ணசாமி அய்யர்ட்டே பாடிக் காட்டணும்னாரு
“அய்யோ அவர் மிதவாதியாச்சே. அவரைத் தாக்கி நான் எத்தனையோ வியாசங்கள் இந்தியாவிலும் பாலபாரதியிலும் எழுதியிருக்கேனே என்றார் பாரதி
“அதைப்பத்திப் பரவாயில்லை. நீங்க வந்து உங்க நெலையை எடுத்துச் சொல்லுங்க என்றார் நடேசய்யரு. பாரதியைக் கூட்டிக்கிட்டு கிருஷ்ணசாமி அய்யர் வீட்டுக்குப் போனாரு நடேசய்யரு
“பி.பா: எந்த ஊர்லே அவருடைய வீடு இருந்துச்சு
மு; சென்னையிலே தான் மைலாப்பூர்லே. லஸ் கார்னர்னு சொல்றோமே அங்கே தான்.
பிபா அவரு அங்கே இருந்தாரா?
மு: இருந்தாரு சாயங்கால நேரம். வெளியிலே உட்கார்ந்திட்டிருந்தாரு. நடேசய்யர் முதல்லே போனாரு கிருஷ்ணசாமி அய்யரைப் பார்த்து
“இவரு நல்ல கவிஞரு. தேசத்து மேலே சில பாட்டுக்கள் பாடியிருக்காரு. அவர் பாடி நீங்க கேக்கணும்னு சொன்னாரு.
பேஷாப்பாடட்டுமேன்னு அய்யர் சொன்னாரு. உடனே பாரதி வந்தே மாதரம் என்போம் என்கிற பாட்டைப் பாடினாரு. சாஞ்சு படுத்திருந்த அய்யர் எழுந்து உட்கார்ந்தரு. பாரதியார் அடுத்து
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிங்கிற பாட்டைப் பாடினாரு.
பி:பா அண்னே அந்தப் பாட்டைக் கொஞ்சம் பாடுங்கண்ணே நாங்களும்தான் கேக்குறோம்
மு: பா:
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே- அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தியென்
வாயுர வாழ்த்தேனோ- இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று
வணங்கேனோ”
பாட்டைக் கேட்ட அய்யரு கண்ணிலே தண்ணி வந்தது
தொடர்ந்து பாடுங்கள் என்றாரு.
பாரதி மன்னும் இமயமலை எங்கள் மலையே என்கிற பாட்டைப் பாடினாரு.
நடேசய்யர் கிருஷ்ணசாமி அய்யரைப்பார்த்து “இவர் தான் பாரதியார்னு
சொன்னாரு
“யாரு, இந்தியாப் பத்திரிகை பாரதியா? அடேயப்பா என்ன எழுத்து என்ன எழுத்து! இவர் என்னைத்தாக்கி
எழுதினாலும் என்ன அழகாத் தாக்கிறார்னு படிச்சுப்பார்ப்பேன். அப்படின்னாரு. அதற்கப்புறம்
நடேசய்யரைப் பார்த்து
(தாழையாம் பூமுடித்து மெட்டு)
“பாரதியின் பாட்டைக் கேட்டுப் பரவசம் நான்
ஆகிப்பிட்டேன்-
ஆகிப்பிட்டேன் இந்தப்
பாட்டை யெல்லாம் வெளியிட்டே ஆகணும் – ஆமாம்
ஆகணும் -இது
பள்ளிக்கூடம் அத்தனைக்கும் போகணும்- ஆமாம்
போகணும்
செலவைப் பத்திக் கவலையில்லே நாந்தாரேன்
போட்டிடலாம்-
போட்டிடலாம்-
சீக்கிரமே வெளியிட்டுத் தீரணும் –தமிழ்
தேசத்திலே எல்லோருக்கும் சேரணும்- ஆமாம்
சேரணும்
அப்படின்னாரு.
உடனே 100 ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்தாரு. அதை ஆயிரக்கணக்கிலே அச்சடிச்சு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினாங்க. மக்களுக்கெல்லாம் கொடுத்தாங்க!
பி.பா: அந்தக் காலத்திலே கருத்து வேறுபாடு இருந்தாலும் பெருந்தன்மையா நடந்திருக்காங்க. இந்தக்காலத்தியும் இருக்காங்களே..
ஒரு சமயம் பாரதி திருநெல்வேலியிலிருந்து இரயிலே சென்னைக்கு வர்ரதுக்காக இரய்யில் ஏறப்போனாரு. அப்போ பிளாட்பாரத்திலே கால்வழுக்கிக் கீழே விழுந்தாரு
பி: அடடா ரொம்அ அடிபட்டிடுத்தோ?
முபா: இல்லை. அவர் என்ன செஞ்சாரு தெரியுமா
கால்வழுக்கித் தரையினிலே கவிஞனும் விழுந்தான்
கண்டவர்கள் மெய்பதறி தூக்கிவிட வந்தார்
பாலுண்ணும் சேய்போல இருபக்கம் மாறிப்
பாரதியார் மண்மேலே தாவிப் புரண்டார்
சக்தியிவள் சக்தியிவள் சக்தியிவள் அம்மா
சங்கடங்கள் தீர்க்கவரும் சக்தியிவள் அம்மா
எக்கணும் எப்பொழுதும் எவர்வந்த போதும்
எமைக்காத்து ரக்ஷிக்கும் தேவியிவள் அம்மா
பி: என்ன தேசபக்யதியண்ணே
மு/பா
1907ம் வருஷம் சூரத்திலே காங்கிரஸ் மாநாடு நடந்துச்சு. அதுக்குப் பாரதி, வ,உ,சி ராஜாஜி எல்லோரும் போயிருந்தாங்க. அங்கேதான் முதன்முதலா பாரதி பாலகங்காதர திலகரைச் சந்திச்சாரு. மிதவாதிங்க தங்கள் கை ஓங்க வேண்டுமென்று சொல்லி ஏற்பாடு செஞ்சாங்க. பாலாகங்காதர திலகர் பேச ஆரம்பிச்சபோது கலட்டா பண்ணுனாங்க.
பி.பா: அவரு பெரிய தலைவராச்சே. அவர் பேசறபோதா கலாட்டப் பண்ணுனாங்க
முபா: கலாட்டான்னா சாதாரண கலாட்டா இல்லே
பறந்தது ,நாற்காலி பறந்தது- அது
பறந்துபோயி திலகர் பக்கம் விழுந்தது
பி.பா: அவருக்கு அடிபட்டிருக்குமே.
முபா: எழுந்தது கோபம் எழுந்தது – வ உ.சி
எழுந்த வேகம் பார்த்து மேடை அதிர்ந்தது
பி.பா: வ.உ.சி மேடைக்குப் போனாரா?
போர்க்கால வியூகம்போல வ.வு.சி பாரதியார்
போயங்கே பாதுகாப்பா நின்னாங்க –நிறையப்
போனவங்க தமிழங்கன்னு சொன்னாங்க
ஓர்துரும்பும் திலகர் மேலே வீழாமல் அடிகள்தாங்கி
உத்தரம்போல் பாதுகாப்புத் தந்தாங்க – திலகர்
உயிர்காத்து வீரர்களாய் வந்தாங்க!
பி.பா: இதுக்குப்புறகு பாரதியாருடைய எழுத்திலே தீவிரம் அதிகமாயிருக்குமே
முபா: ஆமாம் . நெறையப்பாட்டுகள் எழுதினாரு. 1908ம் வருஷம் அதிலே சில பாடல்களைத் தொகுத்து புஸ்தகாம வெளியிட்டாங்க. அதுதான் முதன்முதல்லே வெளிவந்த பாரதியார் பொஸ்தகம்.
இதற்கிடையிலே கோர்ர்ட் அவமதிப்புக் குற்றத்திற்காக விபினசந்தர பாலரைக் கைது பண்ணினாங்க. அன்னல் கொஞ்ச நாள்லே விடுதலை பண்ணுவதா அறிவிச்சாங்க. விடுதலை தினமான 1908 மார்ச்சு 9ந்தேதியை சுயராஜ்யா தினமாகக் கொண்டாட வேணுமின்னு திட்டம்போட்டாங்க. சென்னையிலே பாரதி தலைமையிலே ஊர்வலம் நடத்துவதென்று தீமானமாச்சு. பிமாதமான ஏற்பாடு. பாரதி அந்த ஊர்வலத்திலே பாடுவதற்காக ஒரு பாட்டு எழுதினாரு
சுயராச்சிய தினமென்று அறிவித்ததாலே சுயராஜ்யம் கிடைத்துவிட்டதாகவே பாட்டு எழுதினாரு.
“பி.பா அது என்ன பாட்டிண்ணே!
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே
ஊர்வலத்திலே வாத்தியம் வாசிப்பதற்கு அனுமதி கிடைக்கலைன்னு விழா ஏற்பாடு செஞ்சவரு சொன்னாரு.
பி.பா அப்படின்னா விழாவை ரத்து பண்ணிட்டாங்களா?
மு: இல்லை பாரதி என்ன சொன்னாரு தெரியுமா”
அனுமதி அனுமதி அனுமதி அனுமதி யாருக்குடா
அவனையேன் கேட்கணுமனுமதி அனுமதி அனுமதிடா
அதுதினம் சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரண்டா
யாரவன் அனுமதி கொடுத்திட கொடுத்திடக் கொடுத்திடடா”
பி;பா
சரியாத்தான் சொல்லியிருக்காரு. சுயாரஜ்ய தினம் அடைஞ்சிட்டோம்னு பாடிப்புட்டு அன்னியண்டே ஏன் அன்மதி கேக்கணும்?
மு: சரியாத்தான் சொன்னே தம்பி. அன்னிக்கு ஊர்வலத்துக்குப் போகுமுன்னாலே மனைவி செல்லாம்மாளைப் பார்த்துப் பாரதி சொன்னாரு
”நான்சாக நேர்ந்தாலும் நேர்ந்தாலும் – செல்லம்மா
நடுக்கம் கொள்ளக் கூடாது கூடாது
நான் விட்ட தலைமையினை தலைமையினை- செல்லம்மா
நீயேற்று நடத்திடனும் நடத்திடனும்
“அப்படின்னாரு. அம்மையாரு என்ன சொல்லமுடியும்? சரின்னாங்க!
ஊர்வலம் ரொம்பச் சிறப்பா நடந்தது. நாதச்வர மேளதாளத்தோடு அமர்க்களம்தான் போயேன். நல்லவேளையா போலீஸ் தலையிடலே. ஆயிரக்கணக்கிலே கடற்கரையிலே கூட்டம். அமைதியா நடந்தது.
ஆனா இந்த அமைதி தூத்துக்குடியிலே இல்லை. தூத்துக்குடியிலே ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கலே. வ.உ.சியும் சுப்ரமனிய சிவாவையும் திருநெல்வேலிக்கு வரச்சொன்னாரு கலெக்டர் விஞ்ச். அப்போ வீர சிதம்பரானுக்கும் விஞ்சுக்கும் நடந்த உரையாடல் ரொம்பப் பிரசித்தம்.
பிபா: நான் அதைக் கப்பலோட்டிய தமிழன் படத்திலே பார்த்திருக்கண்ணே
“மு.பா: அந்த சம்பாஷணையை நம்ம பாரதியார் காவடிச்சிந்து மெட்டிலே உணர்ச்சிகரமான பாட்டாவே எழுதிப்புட்டாரு
“பி.பா: பாடுங்கண்ணே
மு: முதல்லே விஞ்ச் தொரை சொல்றமாதிரி எழுதியிருக்காரு
நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் கனல் மூட்டினாய்
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் வலி காட்டுவேன்
கூட்டங்கூடி வந்தே மாதரம் என்றே
கோஷித்தாய் எமைத் தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்கவென்றே கப்பல்
ஓட்டினாய் பொருள் ஈட்டினாய்
இதுக்குச் சிதம்பரம் பிள்ளை பதில் சொல்றாரு
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் –முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவ மானமோ
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளைகொண்டு
போகவோ -நாங்கள் - சாகவோ
அழுதுகொண்டிருப்போமோ ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ உயிர் வெல்லமோ
சதையைத் துண்டுதுண்டாக்கினும் உன் எண்ணம்
சாயுமோ ஜீவன் ஓயமோ
இதயத் துள்ளே இலங்குமகாபக்தி
ஏகுமோ நெஞ்சம் வேகுமோ?
பி.பா: அடேங்கப்பா என்ன வீரமாப் பாடியிருக்காங்கண்ணே!
முபா: வ.உ.சிக்குத் தீவாந்தர தண்டனை கொடுத்தாங்க. அடுத்து இந்தியாப்பத்திரிகை ஆசிரியரையும் கைது செய்யப்போறதா பேச்சு அடிபட்டது
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அரசாங்கத்திலிருந்த சில பெரியவங்களே பாரதிக்கு மறைமுகமாச் செய்தி அனுப்பிச்சாங்க. இந்தியாப்பத்திரிகை நிறுவனர் திருமலாச்சாரியார் பாரதியைக் கூப்பிட்டு புதுச்சேரிக்குப் போகச் சொன்னாரு.
பி: பாரதி என்ன சொன்னாரு“
மு.பா
கோழைமாதிரி தப்பிச்சுப் போகமாட்டேன்னாரு பாரதி.
ஆனால் மண்டையம் சீனிவாசாச்சாரியார் வற்புறுத்தினாரு
“சிறைக்குள்ளே நீபோனா எழுத்தும் போயிடும்- உன்
தேகம் அதைத் தாங்காது புண்ணாய் ஆயிடும்
பறங்கியனைக் கதிகலக்க உன்றனைப் போலே – யார்க்கே
பாங்குண்டு சொல்லுகிறோம் பாரதனாலே
தனிமனிதன் இல்லையைய்யா நீயும் பாரதி- பெரிய
ஸ்தாபனம்நீ பத்திரிகை ஓட்டும் சாரதி
இனிப்பாரேன் நீபோன கொஞ்ச நாளிலே – நம்ம
இந்தியாவும் வந்துவிடும் ஏற்பாய் தோளிலே
என்றார். பாரதியும் ஒத்துக்கிட்டாரு. இருந்தாலும் உடனே கிளம்பலே
“பி;பா காலதாமதம் ஆபத்தாச்சே
மு:பா பாரதி பத்திரிகை அலுவலகத்தில் இருக்கும் போதே ஒப்புக்குச் சப்பாணி ஆசிரியர் சீனிவாசன் என்பவரைக் கைது செய்துக்கிட்டுப் போனாங்க
பாரதியார் சைதாப் பேட்டை இரயில்வே ஸ்டேஷன்லே போய் டிக்கட்வாங்கிக்கிட்டு புதுச்சேரிக்கு ரயிலேறினார். எப்படித்தெரியுமா?
கைதாய்ப் போனால் நாட்டுப்பற்றுக்
கனலில் எழுச்சி குன்றுமென்று
சைதாப்பேட்டையில் டிக்கட் வாங்கித் தங்கக் கவிஞர்
ரயிலில் போனர் ரயிலில் போனார்
சிந்தும் இசையும் பாடிய நா
சிறையில் அடங்கி முடங்கிப் போனால்
வந்த வேலை மறையும் என்று மக்கள் கவிஞர்
ரயிலில் போனார் ரயிலில் போனார் ரயிலில் போனார்
தூங்கிக் கிடந்த மக்கள் உள்ளம்
துடிப்புப் பெற்று எழுச்சிகொள்ளப்
பாங்குடனே பாடல் தந்த பாரதியார்
ரயிலில் போனார் ரயிலில் போனார் ரயிலில் போனார்
பி: பாண்டிச்சேரியிலே எங்கே தங்கினாரு.
முபா: அது பெரிய கதை. பாண்டிச்சேரி குப்பு சுவாமி அய்யங்காருக்கு அவருடைய நண்பர் சீட்டுக் கொடுத்து அனுப்பியிருந்தார் . பாரதி புதுச்சேரி போய்ச் சீட்டைக்காடியதும் அவரை குப்புசாமி அய்யங்கார் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பாரதி புதுச்சேரிக்கு வந்தது போலிசாருக்குத் தெரியவே குப்புசாமி அய்யரை மிரட்டினாங்க. அவரு பயந்துபோய் பாரதியை வீட்டைக்காலிபணச்சொன்னாரு. நல்லவேளையா குஅளைக்கிருஷ்ணமாச்சார்யார் என்பவர் பார்த்து பாரதியை சுந்தரேஸ்வர அய்யர் என்பவரிடத்தில் கூட்டிக்கிட்டுப் போனாரு. சுந்தரேஸ்வர அய்யர் இந்தியா பத்திரிகை சந்தாதார். அவர் பாரதியை நல்லப்பாத்துக்கிட்டார்.
பி; நல்லதாப்போச்சு. இல்லாட்டி பாரதியார் ரொம்பக் கஷ்டப்பட்டிருப்பார்.
மு: கொஞ்ச நாளிலே மண்டையம் சீனிவாசாச்சாரியார் பாண்டிச்சேரிக்கு வந்தாரு. அவரோடு இந்தியாப் பத்திரிகை அச்சடிக்கும் எந்திரங்களும் வந்தன. மீண்டும் இந்தியா பத்திரிகை தொடங்கினாங்க.
பி: அப்போ பாரதி இன்னும் துணிச்சலா எழுதியிருக்க முடியுமே!
மு: எழுதினாரு. ஆனா பிரிட்டிஷ் போலீசார் மாறுவேடத்திலே ரொம்பத் தொல்லை கொடுத்தாங்க!
ஆனாலும் பாரதி பயப்படலே
எப்படி எழுதினாரு தெரியுமா?
பாட்டு வந்தது அய்யா பாட்டு வந்தது
பாரதத்து அன்னை வாழப் பாட்டு வந்தது (பாட்டு)
கேட்டுப் பொருளை வாங்கிவந்த கிழக்கிந்தியக் கன்பெனியான்
கீழ்த்தரமாய் நமையாண்டான் ஓடிடப் (பாட்டு)
உறவில் பகையைத் தூண்டிவிட்டு உற்சாகம் கொண்டுடனே
உறவை விழுங்கி ஏப்பமிட்டான் வீழ்ந்திடப் – (பாட்டு)
இந்த நாட்டு மண்ணின் மீது வீற்றிருந்து நம்மவரை
இன்னல் செய்து வாட்டியவர் வீழ்ந்திட (பாட்டு)
ஆட்டம்போட்டு மக்களெல்லாம் அடிமை என்றே நடத்திவந்த
ஆணவத்திமிர் பிடித்தான் வீழ்ந்திடப் (பாட்டு)
பி.பா அப்படீன்னா பாரதி தேசபக்திப்பாடல்கள் மட்டுந்தான் எழுதினாரா?
மு. பா” யாரு சொன்னது. அவருதான் சகலகலா வல்லவராச்சே. இந்தியாவிலிருந்த போதே ஞானரதம்னு ஒரு வசன காவியம் எழுதினாரு. . அதை புதுச்சேரிக்கு வந்தப்புறம் எழுதி முடிச்சாரு. அந்த நூலின் ரெணாம் பதிப்புக்கு முன்னுரை கொடுத்த இராஜாஜி அதைப்பத்தி என்ன எழுதியிருக்காரு தெரியுமோ?
பி.பா
சொல்லுங்கண்ணே
மு; வசனநடை எந்தவிதம் இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியார்
ஞானரதம் சாட்சி – அதில்
எத்தனையோ மிகவரிய காட்சி
அசத்திவிடும் தமிழாட்சி வைரம்போல் ஜொலிக்கிறது
அதிலிமயங்கி நம்முள்ளம் போகும் –தமிழ்
ஆற்றலைநாம் அதில் காணலாகும்
கற்பனையின் உச்சமது, நாட்டன்பின் தீக்கொழுந்து
ஹாஸ்யரசம் நோகாமல் பொங்கும் –அதில்
காணும் ஞான போதம் மனம் தங்கும்
பெற்றவள் யார் தமிழன்னை, செல்லப்பிள்ளை பாரதியார்
பெரியவரம், நாம்பெற்ற பேறு – அவர்
பீடு தமிழ் இலக்கியத்தின் ஏறு
மு:பா: பாரதியாருக்கு இரண்டாவது ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தப் பெண்குழந்தைக்கு சகுந்தலான்னு பேர் வச்சாரு. குழந்தையைக் கூட்டிக்கிட்டு பாண்டிச்சேரி வந்தாங்க. செல்லம்மாவுடைய அக்கா பார்வதி தங்கம்மாவைக் காசிக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
ஒருநாள பாரதி பதட்டத்தோடு உட்கார்ந்திட்டிருந்தாரு
“என்ன பாரதி, என்ன ஆயிற்று உனக்கு.? ஏனிப்படி ஒரு பதட்டம்?” என்று கேட்டார் மண்டையம் ஆச்சார்யார்
“பதட்டம் மட்டும் இல்லை. வேதனை. இந்தக்கட்டுரையைப் பாருங்கள். சிதம்பரம் பிள்ளையை எப்படியெல்லாம் சிறையில் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று நெல்லையப்ப பிள்ளை எழுதியிருக்கிறார்.. அவரைச் செக்கிழுக்கச் சொல்றாங்களாம் அதைப் படித்ததிலிருந்து என்னால் துக்கத்தைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை.” என்றார் பாரதி.
மண்டையம் ஆச்சார்யார் அதை வாங்கிப் படித்தார். இந்தக் கட்டுரையை இந்தியாவில் வெளியிடுவோம்” என்றார் ஆச்சார்யார்.. பாரதியின் கவிதை சூடேறத்தொடங்கியது
.
அந்தக் கட்டுரையின் முடிவில் நெல்லையப்ப பிள்ளை ”தேசபக்தருக்கு இத்தகைய கொடுமை இழைக்கும் சிறைக்கோட்டத் தலைவருக்கு ஆண்டவன் திருவருள் வீங்குவதாக!” என எழுதியிருந்தார். அந்தக்கட்டுரையை ‘இந்தியா’வில் வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் கண்டிருந்த செய்தி பாரதியை வெகுவாகப் பாதித்தது . தனது உற்ற நண்பர் தாய்நாட்டை அன்னியன் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் படும் அவதியைக் கண்டு அவரால் தாளமுடியவில்லை
.சிதம்பரனாரைச் செக்கிழுக்கச் செய்தார்கள் என்ற கொடுமைச் சொல் கேட்டதிலிருந்து பாரதி உறக்கமின்றித் தவித்தார். நாட்டுக்கு உழைப்பவருக்கு இதுதானா கதி? தேசபக்தர்களின் தியாகத்தின் உயர்வை அறியாமல் ஆட்டுமந்தைகளாக மக்கள் இருக்கின்றனரே என்ற வருத்தம் வேறு வாட்டியது.
கண்ணீர் சிந்தும் படி கசையடி பெற்றும் செக்கிழுத்தும், கற்ற பெரியோர்கள் எத்தனை இன்னல் படுகிறார்கள் என்பதை எண்ண நெஞ்சம் சூடேறியது. பாரதியின் கண்களிலும் நீர் திரண்டது. சர்வேசனிடத்தில் முறையிட்டுப் பாடல் பிறந்தது. அந்தப் பாடல்தான்
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ
..
..
என்று கதறினார்.
கண்ணிகளாக வெளிப்போந்த அப்பாடல்கள் அச்சடிக்கப்பட்ட காகிதத்துக்கும் சூடேற்றின. புரட்சி இளைஞர்களுக்கு தேவ கீதமாகப் பாரதியின் வந்தேமாதரமென்போம் பாடலும், என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம் என்ற பாடலும் , தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பாடலும் ஒலித்தன. வீடுகள் தோறும் இப்பாடல்கள் மனனம் செய்யப்பட்டன. போலீஸ்காரன் தொப்பியைக் கண்டால் வந்தே மாதரமென்போம் என்று பாடிவிட்டுச் சின்னஞ்சிறுவர்கள் வீட்டுக்குள் போய் ஒளிந்துகொண்டார்கள்.
தாயைவணங்குவோம் என்று சொல்வதிலே என்ன குற்றமிருக்கிறது? ஆனால் வந்தே மாதரம் என்ற அந்த இரண்டு சொற்கள் சிறியவைதான் .ஆனால் சிறப்புமிக்கவை. அச்சொற்றொடர்தான் பாரதியின் அக்கினிக்குஞ்சு. வந்தே மாதரம் என்பதைப் பாரத மாதாவின் விலங்கொடிக்கும் சாதனமாகப் பார்த்தான் தேசபக்தன். அதையே தம்மை வீழ்த்தப்போகும் ஆயுதமாகப் பார்த்தான் ஆங்கிலேயன். எனவே வந்தே மாதரம் எங்கே கேட்டாலும் நடுங்கினான். அதை நசுக்கத் தலைப்பட்டான்.
புதுச்சேரி வீதிகளிலே இளைஞர்களும் சிறுவர்களும் ‘படை நடைப் பாட்டு” பாடிக்கொண்டு கம்பீரமாக நடந்துசெல்வதைப் பார்த்த பாரதி இந்திய தமிழக இளைஞர்களும் படைநடைப் பாட்டு வீதிகளில் உலாவர வேண்டும் என்று நினைத்தார். ஆங்கிலப் படையிலே பணிபுரிந்த இந்தியப் போர்வீரர்கள்
ஆங்கிலச் சக்கரவர்த்தியைப் போற்றியல்லவா பாடினார்கள். எனவே பாரதி ஒரு அற்புதமான பாடல் எழுதினார்.
கம்பரமாயணத்திலே உறங்கிக் கொண்டிருந்த கும்பகர்ணனை எழுப்புவதைச் சொல்லும் பாடலை ஒரு கம்பீரமான சந்தத்தில் கம்பன் பாடியிருப்பான். “உறங்குகின்ற கும்பகர்ண உங்கள் மாய வாழ்வெலாம்” என்ற பாடல்தான் அது.
அதே சந்தத்தில் பாரதியும் ஒரு ‘மார்ச்சிங்’ பாடல் எழுதினார்.
தன்ன னன்ன தன்ன னன்ன தன்ன தன்ன தானனா” என நடக்கும் பாடல் அது.
சிறந்து நின்ற சிந்தை யோடு தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து வாழி சொன்ன போதினும்
இறந்து மாண்பு தீர மிக்க ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விகிர்லாது நிற்கும் அன்னை வெற்றி கொள்கவே”
அந்தப்பாடலை முடிக்கும் போது
விதம்பெ ரும்பன் னாட்டி னர்க்கு வேறொருண்மை தோற்றவே
சுதந்திரத்தில் ஆசையின்று தோற்றினாள்மன் வாழ்கவே!
என்று எழுதியிருந்தார்
பறக்குதுபார் பறக்குதுபார் எங்க விமானம்- தமிழ்ப்
பாட்டாளி செய்ததடா எங்கள் விமானம்
ஆகாயத்தில் பறக்குதுபார் எங்கள் விமானம்- இன்னும்
அதிக தூரம் போக வைப்போம் எங்க விமானம் - மிகச்
சீக்கிரமே செஞ்சுட்டாங்க எங்கள் விமானம்
ஜகதீச சந்திரரைப் போற்று- அவர்
செய்ததெலாம் ஒன்றிரண்டா சாற்று
ஜகம்வியக்க உயிரின் ஒலிபற்றி- சொன்ன
சாதனையும் இந்தியாவின் வெற்றி
வென்றுவிடக் கூடாதவர் என்றே- அவரை
வீழ்த்தப்பார்த்தான் வெள்ளைக்காரப் பாவி
அன்று வந்த கம்பியிலாத் தந்தி - அவர்
ஆய்ந்து செய்தார் யாவருக்கும் முந்தி
அந்தப்புகழ் மார்க்கோனிக்குப் போச்சு- வசு
ஆராய்ச்சியின் பேரில்லாமல் ஆச்சு
இந்தச் சதி வாரமலே பார்ப்போம் – நம்
இளைஞர்களின் ஆய்வுகளைக் காப்போம்
செக்கிழுத்த செம்மலைச் சிந்தை தன்னில் வைத்தவர்
துக்கம் தன்னைச் சுட்டெரித்துத் தொலையவைக்கும் வண்ணமே
அக்கணத்தில் பாட்டெழுதி அயர்ந்து தூங்கிக் கிடக்கிற
மக்கள் கூட்டம் மயக்கமின்றி மண்ணில் வேகம் நடக்கவே
கொக்கரித்துப் பாட்டெழுதிப் போட்ட காதை படித்தபின்
பக்கம் கோடி எழுதினாலும் துக்கம் போவதில்லையே!
இதுக்கிடையிலே பாரதியார் புதுச்சேரிக்கு கோழைத்தனமாத் தப்பிச்சுட்டு வந்துட்டாருன்னு விமசிருச்சாங்க. பாரதியார் காதிலே இது விழுந்தது.
தமிழ்நாட்டிலே மன்னார்குடிப் பக்கமிருக்கிற ற நாகைங்கிற ஒரு ஊரிலே கொடியாலம் ரங்கசாமி அய்யங்காருன்னு ஒரு பணக்காரரு இருந்தாரு. அவருக்குப் பாரதியாரை அவ்வளவாத் தெரியாது. ஒரே ஒரு முறை அரவிந்தரைப்பார்க்கப்போனபோது புதுச்சேரியிலே பார்த்திருக்கிறார். அவரும் பாரதியைப் பத்தித் தப்பா நெனச்சவருதான். ஒருநாள் அவர் வீட்டுத்திண்ணையிலே நண்பர்களுடன் பேசிக்கிட்டு இருந்தாரு. அப்போ அவர் வீட்டு வாசலிலே ஒரு வில்வண்டி வந்து நின்னது. அதிலேருந்து
“மொட்டைத் தலையும் பளபளக்க -ஒளி
மூட்டிடும் கண்கள் ஜொலிஜொலிக்க
எட்டிப்போட்ட நடை பாட்டிசைக்க - -ப்டி
ஏறிவந்தாரங்கே ஓர்மனிதர்
வந்த மனிதரைப் பார்க்கையிலே – அவர்
வந்த விதம் தன்னை நோக்கையிலே
இந்தத் திருநாட்டில் இப்படி ஓர் உரு
எப்படிவந்ததென நினைந்தார்.
வந்தவர் அய்யங்காரை தனியாக் கூப்பிட்டுக்கிட்டுப்போய் “நான் தான் பாரதியார்”னு சொன்னாரு. கேட்ட சுந்தரமய்யருக்குத் தூக்கிவாரிப் போட்டது. தான் வந்திருப்பதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அங்கே சுந்தரம் அய்யர் என்ற பெயரில் இரண்டு நாட்கள் தங்கினார்.
அப்படி இந்தியாவுக்குள்ளே போயிட்டுத் திரும்பி வரும் போது இரயிலிலே ஒரு பெண் ஒரு பாட்டுப்பாடினாள். அந்தப்பாட்டின் மெட்டிலே பாரதிய்யார் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாட்டை எழுதினார்.
இந்தியப் போலீசு கண்ணிலே மண்ணைத்துவிட்டு இந்தியாவுக்குப் போய்வந்த அவரா கோழை?
பி.பா நிச்சயமா இல்லையண்ணே. அதுவும் ஆஷ் கொலை வழக்கு சம்பந்தமா பிடி வாரண்ட் இருக்கிற போது போய் வருவது சாதாரண விஷயமா?
பாரதி ஒரே சமயத்தில் ஆறு பத்திரிகைகளில் எழுதினார்.
இந்தியா, சூர்யோதயம், விஜயா, , கர்மயோகி, தர்மா , பாலபாரதா என்ற ஆறுபத்திரிகைகளில் எழுதினார். இதில் விஜயா நாளிதழ். எப்படித்தான் ஒரே சமயத்தில் சமாளித்தார் என்பது ஆச்சர்யம்
இங்கிலீஷ்காரன் அடக்குமுறையினாலே இந்தியாவுக்குள்ளே பத்திரிகை போக முடியலே . அதனாலே 1910ம் வருடம் ஏப்ரல் மாதம் இந்தியாப் பத்திரிகை நின்னு போச்சு. இந்தியாப்பத்திரிகை நிற்பதற்கு முன் பாரதி மனம் நொந்து மக்களுக்கு ஒரு அறிக்கை கொடுத்தார். அந்த உரை நடையை இன்றும் படித்தால் கண்ணீர் வரும்
பி.பா: அதைப் பாட்டச் சொல்லுங்கண்ணே
“நீங்களெல்லாம் என்னுடைய இரத்தமல்லவா- என்றன்
நெஞ்சு கொதிக்கிறதே இன்னும் சொல்லவா
தாங்க முடியவில்லை என்ன செய்குவேன் – உங்கள்
சரித்திரம் மறப்பதுவும் நல்ல தல்லவே
இன்னும் உணர்ச்சியில்லாச் சோம்பல் ஆகுமோ உம்முள்
ஏற்றம் உயர்வு தாழ்வு என்று போகுமோ
பின்னும்நான் வந்துசொல்ல வாய்ப்பிருக்குமோ- அதனால்
பெரிய மனதுபண்ணிச் சொல்வது கேட்பீர்
சுதந்திரம் உங்களது உயிரின் மூச்சு – உயர்
சுதேசியம் என்பதுவே எங்கணும் பேச்சு
இதந்தரும் மானமுங்கள் நெஞ்சில் ஆலயம் – என
எண்ணியினி வாழ்ந்திடுக வெற்றி நிச்சயம்…
இதற்குப் பிறகு பாரதியார் எதிர்பார்த்தது போலவே இந்தியாப் பத்திரிகை நின்று போய்விட்டது.
பி.பா: மற்றப்பத்திரிகைகள் என்ன ஆச்சு.
மு.பா: அவை இன்னும் கொஞ்ச நாள் வந்துகொண்டிருந்தன. இந்தியா நின்னுபோன அதே மாசத்திலே மகான் அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தாரு. கொஞ்ச நாள் கழிச்சு தேசபக்தர் வ.வே சு அய்யரும் புதுச்சேரி வந்தாரு. மூன்று பேரும் மும்மணிகளாக புதுச்சேரியிலே வாழ்ந்தாங்க! வல்லூறு வட்டமிட மலர்க்கமல்ப் பொய்கையிலே
அன்னமொன்று சென்றதம்மா அஞ்சாது நின்றதம்மா
போலீசு மத்தியிலே புதுச்சேரி ஊரினிலே
புண்ணியனாம் பாரதியார் புகழோடு வாழ்ந்தாரம்மா
வங்காள அரவிந்தர் வ.வே.சு ஐயருடன்
மாக்கவிஞர் பாரதியார் வரலாறு கண்டாரம்மா
பாரதியார் ஆசிரியராயிருந்த எல்லாப்பத்திரிகையும் ஒண்ணொண்ணா நின்னு போச்சு. பாரதியாருடைய வருவாயும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போச்சு
அதுக்கப்புறம் பாரதிக்கு எழுதுறதுக்கு நெறைய நேரம் கெடச்சுது. அவர் பாஞ்சாலி சபதம்னு குறுங்காவியம் இரண்டு பாகமா எழுதினாரு. . அதனுடைய முதல் பாகம் 1912ம் வருஷம் வெளிவந்தது. அதுக்கப்புறம் பாரதியார் பொன்வால் நரிக்கதைன்னு ஆங்கிலத்தில் ஒரு குறுநாவல் எழுதினாரு. அன்னிபெஸண்ட் அம்மையார் ஆன்மீகத்திலே புகுந்து கிருஷ்ணமூர்த்தின்னு ஒரு பையனைத் தத்தெடுத்து அவந்தான் கடவுள்னு சொன்னது பாரதிக்குப்பிடிக்கலை. அதை அடிப்படையாவெச்சுத்தான் தி ஃபாக்ஸ் வித் தெ கோல்டன் டெய்ல் நு அந்த நாவலை எழுதினாரு. அந்த நாவலைப் பாராட்டி நெறயப் பேரு கடுதாசி எழுதுனாங்க. நஞ்சுண்ட ராவ்னு ஒரு டாக்டர் 500 பிரதிகளுக்கு ஆர்டர் பண்ணினாரு. பாராட்டி வந்த கடிதங்களை எடுத்துக்கிட்டு குவளைக்கண்ணன் பாரதிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னாரு. அவற்றைப்படிச்சுட்டூப் பாரதிக்குக் கோபம் வந்தது
பாரதி சொன்னாரு
தூக்கி எறிந்திடு கண்ணா இந்தச்
சோம்பேறிக் கும்பல் கடிதத்தை எல்லாம்
வேற்று மொழியினில் அன்று –ஏதோ
விந்தை நரிக்கதை செய்தனன் என்று
போற்ரிப் புகழ்ந்திடுகின்றார்-ம் இந்தப்
பூமியில் அற்புதம் என்ருரைக்கின்றார்
தாய்மொழிப் பற்றரியாதார்- நமைச் சார்ந்த பெருமைகள் தாம் குரியாதார்
ஆய்ந்த கலை தெரியாதார்- இவர்
ஆகா எனச் சொன்னால் ஆடிடுவேனோ?
நெஞ்சைப் பிழிந்துயிரேற்றி- முனி
நெய்த பாஞ்சாலி சபதத்தைப் போற்ரிச்
செஞ்சொல் தமிழில் தந்தேன் – தமிழ்
சேர்ந்தபுலமை இதுவென்றுவந்தேன்
நன்றென்று போற்ருவார் இல்லை – அதன்
நயத்தை உனை யன்ரித் தேற்ருவார் இல்லை
பொன்வால் நரிக்கதை தன்னை – ஏதோ
போக்கில் எழுதினேன் போற்றிடுகின்றார்
தூக்கி எறிந்திடு கண்ணா
என்று சொன்னாரு
பி;பா
அவருடைய கோபம் சரியானது தானே!
மு; சரியானதுதான். இன்னைக்கு பாஞ்சாலி சபதத்தைப் பெரியவங்களெல்லாம் பாராட்டுறாங்க. அன்னைக்கு பாரதியார் அமரரானதுக்கப்புறம் தான் பாஞ்சாலி சபதம் இரண்டாம் பாகம் வெளிவந்தது.
பி: அடப்பாவமே!
மு. அதற்கப்புறம் குயில் பாட்டுன்னு ஒரு குறுங்காவியம் எழுதினாரு. அதைப் போல ஒரு கற்பனைக்காவியம் தமிழிலே இல்லை. கண்ணன் பாட்டுன்னு ரொம்ப அற்புதமா எழுதினாரு.
கண்ணன் பாட்டைக் கேட்டுக் கனியாத நெஞ்சும் துள்ளும்
வண்ண இசைப்பாட்டோ மதுவின் போதி கொள்ளும்
தேச பக்திப் பாடல் சிறப்பான தெய்வப் பாடல்
ஆசை தீரப் பாடிவைத்த அழகு தமிழ்ப் பாடல்
தாளம் போடும் பாடல் தனியாத இசைப் பாடல்
காளிசக்தி பாடல் உயர் கானக் குயில் பாடல் கண்ணன்
தீஞ்சுவைசேர் அமுதம் திகட்டாமல் தேக்கும் பாடல்
பாஞ்சாலி சபதமென்னும் வளர் பாரதத்தின் பாடல் - கண்ணன்
நாட்டுப் பாடல் உண்டு நயமான பாடல் உண்டு
வேட்டுப் பாடல் உண்டு வடி வேலன் பாடல் உண்டு -கண்ணன்
கள்ளின் சுவையினிலே -ஒரு
காதை சபையினிலே
கொள்ளை எழிலுடனே-நீங்கள்
கொட்டிப் பொழிகையிலே
பிள்ளைப் பருவம்போல்-நான்
துள்ளும் உருவடைந்தேன்!
அள்ளிப் பருகுகிறேன்-இதை
அமுதாய்க் கருதுகிறேன்!
அஞ்சாத சிங்கமதை வெண்ணிலாவே-இவர்
அன்னமென்று சொல்லுகையில் வெண்ணிலாவே
காணாத இன்பமெல்லாம் வெண்ணிலாவே-எனைப்
பூணவந்த தென்னசொல்லு வெண்ணிலாவே!
புதுச்சேரி என்பதொரு குளமாச்சு -அது
மதுச்சேரி பெற்றுவிட்ட வளமாச்சு-அது
கவிச்சேரி ஆனதனால் வெண்ணிலாவே-ஒரு
கதைச்சேரி வந்ததடி வெண்ணிலாவே!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
பி: ஆகா, எவ்வளவு பாடியிருக்காரண்ணே
மு.பா பாரதி இன்னும் நெறயப்பாடியிருக்காரு. 1912க்குப்பிறகு வருமானம் இல்லாம வறுமையிலே வாடினாரு. அப்படியும் அவர் உற்சாகம் இழக்கலை. அவர் வறுமைக்கு முதல் காரணம் என்ன தெரியுமா? அவர் முன்னே யாரும் கஷ்டம்னு சொல்லி நிக்கக்கூடாது. கையிலே என்ன இருக்கோ அதை முழுதும் எடுத்துக்கொடுத்திடுவாரு. தான் போட்டிருக்கிற வேஷ்டி அங்கவஸ்த்ரம் கூட கழட்டிக்கொடுத்துடுவாரு. அவர் கையிலே ஒரு செல்லாக் காசு வச்சிருப்பாருநண்பர்களிடம் அதைக்காட்டிச் செல்லுமான்னு கேட்பாரு. அவங்க செல்லாது என்று சொல்லுவாங்க
பி: ஏண்ணே செல்லாக்காசைக் காட்டிச் செல்லுமான்னு கேட்டாரு
மு: கொஞ்சம் பொறு. அதுக்கு ஒரு காரணம் இருக்கு. பாரதியாருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பேரு கிருஷ்ணசாமிச் செட்டியார். பாரதி அவரைச் செல்லமா “வெல்லச்சுச் செட்டியார்”னு கூப்பிடுவார். அவருக்குப் பாரதி பாடக்கேட்பதிலே அவ்வளவு சந்தோஷம். ந்ண்பர்கள் காசு செல்லாது என்று சொன்னதும் பாரதி செல்லும் செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார் என்று சொல்லிப் பாடுவாரு
தந்தானா தனதந்தினா தன தந்தனான தந்தானனா\
செல்லாத சொல்லையெல்லாம் இங்கே செல்ல வைக்கும் கவிஞனுக்குச்
செல்லாத காசுகளை இங்கே செல்ல வைப்பார் செட்டியாரே ’
என்று பாடுவார். செட்டியார் உடனே தன் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுப்பாரு
பி.பா: ஏண்ணே பாரதி கேக்காமலே அந்தப் பணத்தைக் கொடுத்திருக்க வேண்டியதுதானே!
மு: பாரதி பாடிக்கேட்கவேண்டும் என்று காத்திருப்பார் செட்டியார். முதலிலேயே கொடுத்துட்டாப் பாட்டுக் கேட்க முடியாதே!
பாரதிக்கு மனிதர்கள் மேலே மட்டுமில்லை வாயில்லாப் பிராணிகளிடத்தும் அன்பு உண்டு. குறிப்பாப் பறவைகளைக் கண்டா ரொம்பப்பிடிக்கு,ம்
பி:
காக்கை குருவி எங்கள் ஜாதின்ந்னு பாடியிருக்கார்னு கேள்விப்பட்டிருக்கேன்
மு. பா:
ஒரு சமயம் பாரதியாருடைய சம்சாரம் அரிசி நோம்பி வச்சிருந்தாங்க. அதைக்கொஞ்சம் பாத்துக்குங்க. நான் கொஞ்சம் வெளியிலே போயிட்டு வந்திடறேன்னு சொல்லிட்டுப்போனங்க.
பி: நோம்பின்னா என்னண்ணே
மு;பா: அதாவது அரிசியிலே கல் போக்குவதற்காக சொளகுலே போட்டுப் புடைப்பாங்க
பி: அதென்னண்ணே புதுசு புதுசா வார்த்தைகளைச் சொல்லுறீங்க
சொளகுன்னா என்னண்ணே
மு;பா: சொளகுன்னா முறம்னு அர்த்தம்.
பி.பா: ஓ அப்படியா
மு;பா முறம்னா என்னண்ணு தெரியுமா?
பி.பா அதுதான் அரசியல் வாதிங்க மேடை தவறாம முறசால் புலியை ஓட்டிய தமிழ்ப்பெண் எங்கள் குலம்னு பேசுவாங்களே! முறம்னா அடிச்சுவிரட்டுற கொம்புதானே அண்ணே
மு பா: முறம்னா தானியங்களை பொடைக்கிற ஒரு சாதனம். ஓலையிலே முடைஞ்சிருப்பா
அந்த அம்மா வெளியிலே போனங்களா அப்போ நாலைஞ்சு குருவிங்க அவர் வீட்டு முற்றத்திலே வந்துதுங்க. உடனே பாரதியார் முறத்திலிருந்த அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துக் குருவிகளுக்குப் போட்டாரு. அவ்வளவுதான் . ஒரு குருவிக்கூட்டமே வந்திடுச்சு. அம்மையார் திரும்பி வந்து பாத்தா அரிசியைப் பாதிக்குமேலே குருவிக்குப் போட்டுட்டாரு. இதிலே பாட்டு
வேறே
பி. பா: என்ன பாட்டுண்ணே
விட்டு விடுதலை ஆகிநிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப்போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏரியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப்படாதெங்கும் கொட்டிக்கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு - விட்டு
முற்றத்திலேயும் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம்ம் தன்னை கொணர்ந்துண்டு
மற்றைப்பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை ஆகுமுன் பாடி விழிப்புற்று – விட்டு
பி: அம்மையாருக்குக் கோபம் வந்திருக்குமே
மு. வராதா பின்னே!
ஒருமுறை பாரதியும் குடும்பத்தாரும் கடற்கரைக்குப் போனாங்க. அங்க ஒரு படகிலே நின்னுக்கிட்டுச் சில செம்படவங்க பாட்டுப்பாடிக்கிட்டிருந்தாங்க . பாரதி அங்கே போய் அவங்களே முதலிலிருந்து பாடச் சொல்லி அதை ஒரு நோட்டுப் புத்தகத்திலே குறிச்சிக்கிட்டாரு. அதுக்கப்புறம் அதிலேருக்கும் குறைகளைச் சரிசெய்து அவங்களுக்குப் பாடிக்காட்டினாரு.
மு: அதை நீங்களும் கொஞ்சம் பாடுங்கண்ணே
“நாற்புறமும் தண்ணியிலே வாழுகிறோம் ஏலேலோ
நாதன் நெடுமாலழகன் காத்திடுவான் ஐலஸா
பாற்கடலில் பள்ளிகொண்டான் பரந்தாமன் ஏலேலோ
பரந்தாமன் புகழ்தன்னைப் பாடிடுவோம் ஐலஸா
நீரதனை முழுமையாகக் கொண்டாண்டி ஏலேலோ
நீர்பெரிது நிலம்சிறிது வாழ்ந்தாண்டி ஐலஸா
நிலம்பெரிது நீர் சிறிதாய் மாறினாண்டி ஏலேலோ
நிலத்தினிலே விலங்கு மனிதன் ஆனாண்டி ஐலசா
நிறைவுடைய முழுமனிதன் ஆகவந்தான் ஏலேலோ
மனித மனம் மிருககுணம் சேர்ந்ததடி ஐலஸா
மனிதனாகி வழிகாட்டி ஆனாண்டி ஏலேலோ
மனிதருள்ளே நெளிசுளிவு காட்டினாண்டி ஐலஸா
இன்னுமிங்கே வந்திடுவான் எம்பெருமான் ஏலேலோ
இம்மண்ணில் தர்மநெறி காத்திடுவான் ஐலஸா
பி.பா நொம்ப நல்லாருக்கண்ணே. ஆனால் தண்ணி, நீரு மனிசன் மிருகம்னு ஏதேது வந்தது. ஒண்ணும் புரியலேண்ணே
மு.பா
பாரதி அந்தச் செம்படவங்களுக்கு விளக்கமா எடுத்துச் சொன்னாரு
பி: எங்களுக்கு விளக்கமா எடுத்துச் சொல்லுங்கண்ணே!
மு: இது திருமாலினுடைய பத்து அவதாரங்களைப் பத்திய பாட்டு. அதாவது விஞ்ஞானப் படி உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை எடுத்துச் சொல்லுது. முதலிலே நீரில் வாழக்கூடிய ஜந்துக்கள் வந்தன. அதனாலே தான் திருமாலின் முதல் அவதாரம் மீனு அதாவது மச்சாவதாரம்
அடுத்து கூர்மா அவதாரம். அதாவது ஆமை. அது நீரிலே அதிகமாகவும் நிலத்திலே கொஞ்சமாகவும் வாழும்
பி அடுத்து பன்றி அவதாரம்ணே
மு: ஆமாம். அது நிலத்திலே வாழக்கூடிய பிராணி. அது நிலத்திலே வாழும். அவ்வப்போது குட்டையிலே படுத்துக்கிடக்க்கும். அப்புறம் பாதி மிருகம் பாதி மனிதன் அதுதான் நரசிம்மாவதாரம். அடுத்தது மனிதரிலேயே குள்ள உருவம். அதுதான் வாமனாவதாரம். அடுத்து முரட்டு மனிதன். அதுதான் பரசுராம அவதாரம்.
அப்புறம் மனிதர்களுக்கு வழிகாட்டி. அதுதான் ராமாவதாரம். அப்புறம் தந்திரங்கள் நெளிவு சுளிவு தெரிந்த மனிதன். அதுதான் பலராம கிரஷ்ணாவதாரங்கள்
:பி: ரொம்பத் தெளிவாயிருக்கண்ணே
மு: தர்மம் மோசமாகக் கெட்டுப்போகும் போது அடுத்த அவதாரம் வருங்கிறாங்க. அதுக்குக் கல்கி அவதாரம்னு பேரு. இதைப் பாரதியார் அவங்களுக்கு விளக்கிச் சொன்ன போது அவங்களுக்கு ரொம்பச் சந்தோஷம். பாரதியாரை அந்தப்பாட்டை எழுதித் தரச்சொல்லி வாங்கிட்டுப் போனாங்க!
"நீரதனை முழுமையாகக் கொண்டாண்டி ஏலேலோ
நீர்பெரிது நிலம்சிறிது வாழ்ந்தாண்டி ஐலஸா"
படகுபோலப் பாட்டுமிங்கு மிதந்து போகுது!
பாடிவைத்த பாவலர்யார் மனசு கேட்குது!
கடலலைமேல் காலைவைத்த இன்ப மூட்டுது!
காகுத்தன் குரலன்றோ காது கேட்குது!
சிவசூரி.
மு: பாரதிக்கு யாரு ரொம்பக் கடமைப்பட்டிருங்காங்க தெரியுமா?
பி: நாமெல்லாருந்தான்
மு: உண்மைதான்தம்பி ஆனால் பெண்கள்தான் அவருக்கு அதிகமாக் கடமைப்பட்டிருக்காங்க
பி: ஏண்ணே
மு.பா: அவரு வாழ்ந்த காலத்திலே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதுக்குன்னு கேட்டுக்கிட்டிருந்தாங்க. அவங்களை வீட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருந்தாங்க!
பி: கேள்விப்பட்டிருக்கேண்ணே
மு: பெண்களைப் பார்த்து பாரதியார் சொல்லுதாரு” பெண்களே நீங்கள் வெளிநாட்டுக்குப் போங்க. அங்கே தொழில்கல்வி கத்துக்கிட்டு இந்தியாவுக்கு வந்து நம்ம நாட்டை வளப்படுத்துங்க!
பி: அந்தக்காலத்திலேயா அப்படிச் சொன்னாரு.
ஆமாம் தம்பி. பெண்களுக்காக பெண்கள் எழுச்சிபெர்றுப் பாடுவதாக அவரே கவிதை எழுதினாரு.
பி: அவருடைய பாட்டைப் பாடுங்கண்ணே கேக்குறோம்
மு:
மாட்டை அடக்கி வசக்கித் தொழுவத்தில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே
வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் – அதை
வெட்டிவிட்டோம் என்று கும்மியடி
கற்பு நிலையென்று சொல்லவந்தார்- இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைதள்ளி மிதித்திடுவோம்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இழைப்பில்லை காணென்று கும்மியடி
“ ரொம்ப பிரமாதமாப்பாடியிருக்கிறாரண்ணே. இன்னைக்குப் பெண்கள் ரொமப முன்னேறிக்கிறதைப் பார்த்தா பாரதி சந்தோஷப்படுவாரு.
அண்ணே பத்திரிகையெல்லாம் நின்னுபோயிட்டதனாலே பாரதியாரு சப்பாட்டுக்கு என்ன செஞ்சாரு.
மு.பா: நல்லவேளையா சுதேச மித்திரன் அதிபர் ரங்கசாமி அய்யங்கார் சுதேசமித்திரன் பத்திரிகையிலே எழுதறதுக்காக மாதாமாதம் 30 ரூபாய் பணம் அனுப்பினாரு. அந்தப்பணம் அவரு கைக்கு வராதபடி போலீஸ்காரங்க இடைஞ்சல் பண்ணினாங்க. மாறுவேஷத்திலே வந்து வேவு பார்த்தாங்க.
ஒரு சமயம் ஒரு போலீஸ்காரர் திருநெல்வேலிக்காரர் மாதிரி வேஷம் போட்டு அவர் வீட்டுக்கு வந்தாரு. அவர் பேசுற முறையிலேருந்து அவரு திருநெல்வேலிக்காரர் இல்லேன்னு பாரதிக்குத் தெரிஞ்சு போச்சு. வந்திருப்பவர் போலீஸ்காரர் என்று தெரிஞ்சு பாரதி அவரைப் பார்த்து
“நாயும் பிழைக்குமிந்தப் பிழைப்பு
நாளெல்லாம் மற்றதிலே உழைப்பு
பாயும் காடிநாய்ப் போலீசுக் காரப்
பார்ப்பானுக்குண்டிதிலே பீஸு
அப்படினார். வந்தவர் சொல்லாமல் எழுந்து ஓடிப்போய்விட்டார்.
பிபா”: அண்ணே பாவேந்தர் கூடப் புதுச்சேரியிலே இருந்ததாகச் சொல்றாங்களே
மு.பா: ஆமாம். அவருடைய பேரு கனகரத்னம். பாரதி அமரரானதுக்குப் பிற்பாடு தன் பேரைப் பாரதிதாசன்னு மாத்திவச்சுக்கிட்டாரு.. பாரதியோட பழக்கம் ஏற்பட்டபிறகு அவருடைய கவிதைகளின் போக்கே மாறிவிட்டது. அவர் புரட்சிக்கவிஞரானார். அவருடைய பாட்டைப் பாராட்டி பாரதியார் எழுதியிருக்காரு.
உண்மையான புலமையிருந்தால் பாரதி பாராட்டுவாரு. ஆனால் திறமையில்லாம வேஷம் போட்டா பாராதி காலைவாரிவிட்டுடுவாரு. ஒரு சமயம் புதுச்சேரிக்கு ஒரு பாகவதர் கதை சொல்றதுக்காக வந்தாரு.
பாகவதம் கதை சொல்லிடவே ஒரு
பாகவதர் புதுச்சேரி வந்தார்
பாகவதம் கதை கேட்டிடவே கவி
பாரதி அங்கே வருகை தந்தார்.
சொல்லும் முறையில் தெளிவுமில்லை- சுவை
சூழும் நெளிவு சுளிவுமில்லை
மெல்ல மேல அவை மாறியது- அங்கே
மேலும் மேலும் கூச்சல் ஏறியது.
பாகவதருக்குக் கதை சொல்லத் தெரியவில்லை.
அவரு கூச்சலலைக் குறைக்க ஒரு தந்திரத்தைக் கையாண்டாரு
பி: என்ன தந்திரம் அண்ணே
மு: கோபிகா ஜீவன ஸ்மரணேன்னு சொல்லுவாரு . உடனே கோவிந்தா கோவிந்தான்னு கத்துவாங்க! கொஞ்சம் கூச்சல் குறையும். திரும்ப ஆரம்பிக்கும். மறுபடி கோவிந்த நாம சங்கீர்த்தனம் நு சொல்லுவாரு.
உடனே கூட்டம் கோவிந்தா கோவிந்தானு கத்தும் இப்படி நடந்துக்கிட்டிருந்தது. பாரதியார் பொன்னு முருகேசம் பிள்ளை வீட்டு வேலைக்காரன் காதிலே என்னமோ சொன்னாரு.
:பி: அப்படி என்னண்ணே சொன்னாரு
“ சொல்றேன் கேளு. அடுத்த முறை கூட்டம் கோவிந்தா கோவிந்தானு கத்தினபோது கோவிந்தன் மேடையிலே. “ஏறினான்
“ கோவிந்தன் நானிங்கு வந்து விட்டேன் என்னைக்
கூப்பிட்ட காரணம் என்னவென்றான்
கோவிந்தாப்போட்ட அக் கூட்டம் சிரித்தது
கூசியே பாகவதர் நகர்ந்தார்.”
பி: பா நல்ல வேடிக்கையண்ணே
முபா: பாரதிக்குத் தன் கவிதைகளையெல்லாம் வெளியிடனும்னு ஆசை,
ஆனால் பதிப்பகத்தாரெல்லாம் பயந்தாங்க. ஆனால் பரலி சு நெல்லையப்பபிள்ளை தன் சொந்தப்பொறுப்பிலே சில புஸ்தகங்களை வெளியிட்டாரு.
தான் எழுதின எல்லா நூல்களயும் வெளியிடனுனா இந்தியாவுக்குப் போனாத்தான் முடியும்னு நெனைச்சாரு. முதல் உலக மாகயுத்தம் முடிஞ்சுடடடதனாலே சுதேசியப் போராளிகளையெல்லாம் கைது செய்யமாட்டங்கன்னு சொன்னாங்க , அதனாலே பாரதியார் பாண்டிச்சேரியை விட்டுசென்னைக்குப் போகணும்னு புதுச்சேரியை விட்டு வெளியே வந்தாரு.
பி: வெள்ளைக்காரங்க ஒண்ணுஞ்செய்யலியே!
முபா: வில்லியனூர் தாண்டின உடனே பாரதியாரைக் கைது செஞ்சாஙக , கடலூர் சிறையிலே அடைச்சாங்க. 22 நாள்கழிச்சு நிபந்தனை ஜாமீனிலே வெளியே விட்டாங்க. திருநெல்வேலிக்குப் போக அனுமதிச்சாங்க. மனைவி ஊருக்குப் போக அனுமதிச்சாங்க. வேறே எங்கேயும் போகணும்னா அனுமதி வாங்கணூம். நேரே கடயத்துக்குப் போனாரு.
“பி;பா’ தமிழ்நாட்டு மக்கள் அவரை நொம்ப வரவேற்றிருப்பாங்களே
மு” அதுதான் இல்லை. பலபேரு பயந்தாங்க! கடையத்து அக்கிரஹாரம் கடுமையா நடந்தது. அவரு கண்டவங்க கூட சாப்பிடறாருன்னும் கழுதைக்குட்டியைக் கட்டிப்பிடிச்சாரும்னும் சொல்லி ஊர்லேருந்து விலக்கி வச்சாங்க
“பி: அடப்பாவிகளா?
முபா: தான் இந்தியாவுக்கு வந்தபின்னாலே தன்னுடைய புத்தகங்களை எல்லாம் பதிப்பித்துவிடலாம் என்று நினைச்சாரு பாரதியாரு. அதுவும் நடக்கலே! புத்தகங்களைத் தானே பதிப்பிக்க நெனச்சாரு. அதுனாலே தெரிஞ்சவங்க எல்லாருக்கும் ஒரு கார்டிலே கடிதாசு எழுதினாரு. ஒவ்வொருத்தும் நூறு ரூபாய் கொடுங்க ரெண்டு வருஷத்திலே வட்டியோடே திருப்பிக் கொடுத்திடறேன்னார்
பி: அய்யோ நெனச்சா கண்கலங்குதண்ணே1
முபா:
வேண்டுவது நூறு ரூபாய் மட்டும்- பண
விடையனுப்ப உங்களுக்குப் புத்தகங்கள் கிட்டும்-- வேண்டுவது
என்றனது புத்தகங்கள் யாவும் – இங்கே
ஏராளம் தீப்பெட்டி விற்பதுபோல் விற்கும்
சொன்னபடி வட்டியுடன் தருவேன் – சக்தி
துணையிருப்பாள் தமிழ்நாட்டில் மீண்டும் வலம் வருவேன்
அப்படின்னு எழுதியிருந்தாரு. ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் பணம் அனுப்பலே. அவர் கடிதாசி அனுப்பறதுக்கு எப்படியோ காசு ஏற்பாடு பண்ணிக் கார்டுகள் வாங்கிவச்சிருந்தாரு.. அந்தக்கார்டுகளை இராமய்யான்னு ஒரு பையன் பாரதியாருக்குத் தெரியாமத் திருடிட்டான். பாரதிக்குக் கடுமையாக் கோபம் வந்துது. அந்தப்பையனை அடிச்சிட்டாரு. அவன் ரெண்டுநாள் திரும்பி வரலை. பாரதியாருக்கு மனசு ரொம்ப வருத்தமாப்போயிடுச்சு. சின்னப்பையனை அடிச்சுப்பிட்டோமேன்னு அழ ஆரம்பிச்சுட்டாரு
“பி.பா:
அந்தப்பையன் திரும்பி வந்தானா?
“மு” நான் கோபிச்சுக்க மாட்டேனு அவனைக் கூட்டிக்கிட்டு வாங்கடான்னு சின்னப்பையங்க கிட்டேச் சொல்லி அனுப்பிச்சாரு. அந்தப்பையன் வந்தான். அவன் கையைப் பிடித்துக்கொண்டு பாரதி சொன்னாரு
கார்டுகளைத் திருடலாமா ராமையா- கேட்டால்
கையில்ரெண்டு தந்திருப்பேன் ராமையா
வேர்வை சிந்தி உழைக்கவேண்டும் ராமையா – திருடு
வெங்கங்கெட்ட செயலன்றோ ராமையா
உன்னை நானும் அடித்துவிட்டேன் ராமையா- கோபம்
உள்ளவன்நான் தவறுசெஞ்சேன் ராமையா
என்னையும் நீ மன்னிப்பாய் ராமையா – உனக்கு
என்னவேண்டும் என்னிடம்கேள் ராமய்யா
அப்படின்னாரு
“பி: அய்யோ என்ன இளகிய மனசுண்ணே!
முதென்காசியிலே சொக்கலிங்கம்னு ஒரு இளைஞன் பெட்டிக்கடை ஒண்ணு வச்சிருந்தான். தமிழிலே ஈடுபாடுகொண்டவன். அவனை ஒரு முறை பாரதி சந்திச்சாரு. ”சொக்கலிங்கம் நமக்கு உடனடியா ஒரு லட்சம் ரூபாய் வேண்டும். அதை உடனடியாச் சேகரம் செஞ்சாகணும்னு சொன்னாரு.
“பி: ஒரு லட்சம் ரூபாயா கேட்டாரு. எதுக்கண்ணே
மு: அதே கேள்வியைத்தான் சொக்கலிங்கமும் கேட்டாரு.
பாரதி சொன்னாரு. என் புத்தகங்களையெல்லாம் பதிப்பக்கத்தான் அவ்வளவு செலவாகும் அப்படின்னாரு
“அமெரிக்காவில் வெளியாகும் புத்தகங்கள் போலே
அருமையான காகிதத்தில் அச்சாக வேண்டும்
அமைவுடனே கவிதைவொவ் வொன்றுக்கும் அங்கே
அழகான சித்திரங்கள் வரைந்திடவும் வேண்டும்
அப்படியே படம்வரையும் கலைஞருக்கு நானும்
ஐம்பதா யிரம்தருவேன் அதுபோக மிச்சம்
செப்பமுடன் அச்சடிக்கச் செலவாகும் , அதனால்
சேர்த்திடனும் உடனடியாய் ஒருலட்சம் ரூபாய்
என்றார்
அந்தச் சொக்கலிங்கந்தான் பின்னாளில் நவசக்தி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர்.
மு.பா: கடயத்திலே இருக்கும் போது பொட்டல் புதூர் என்னும் ஊரிலே இஸ்லாம் பத்திப் பேசுனாரு. அது கிராமத்துக்காரங்களுக்குப் பிடிக்கலே.
இதுக்குள்ளே அவருக்கிருந்த கட்டுப்பாட்டை அரசாங்கத்திலே தளர்த்தினாங்க. பாரதியாரு திருவனந்தபுரம் போனாரு.
. திருவனந்த புரத்திலுள்ள மிருகக்காட்சி சாலை மிகவும் அருமையான இயற்கைச் சூழ்நிலையும் மரங்களும் செடிகொடிகளும் அடங்கிய ஒரு பகுதியில் இருந்தது. தனது மனைவி மகளுடன்அதைப் பார்ப்பதற்காகப் போனாரு பாரதி . இயல்பாகவே மிருகங்ககிட்ட அதிக அன்பு பாராட்டும் பாரதியார் ஒரு சிறு குழந்தையைப் போல ஒவ்வொரு மிருகத்தையும் பார்த்துக்கிட்டிருந்தாரு.
அங்கே ஒரு சிங்கம் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்திச்சு . அதைப்
பார்த்த பாரதியார் அதைத் தொட்டுத் தடவிக்கொடுக்க ஆசைப்பட்டாரு ஆனால் அங்கிருந்த காவலாளி அதற்கு அனுமதிக்கவில்லை. குழந்தையைப்போல் கெஞ்சினார். சிங்கம் கொஞ்சமும் அசையாமல் படுத்துக் கிடந்தது. உடனே பாரதி நிமிர்ந்து நின்று
“கண்டுக்காம இருக்கிறயே சிங்க ராஜா – பார்
கவிராஜன் வந்திருக்கேன் சிங்கராஜா
கண்டத்தாலே கர்ஜ்ஜிப்பாய் சிங்க ராஜா – உன்றன்
களிப்பதனை வெளிக்காட்டு சிங்கராஜா
கூண்டுக்குள்நீ இருக்கின்றாய் சிங்கராஜா- நானும்
கூண்டுக்குள் அடைபட்டுள்ளேன் சிங்கராஜா
வேண்டுகிறோம் விடுதலைநாம் சிங்கராஜா- நாமும்
வேடிக்கைப் பொருளானோம் சிங்கராஜா!
அப்படின்னு பாடினாரு.
உடனே சிங்கம் எழுந்து நின்று தலையைத் தூக்கி நிமிர்ந்து நின்று கர்ஜனை செய்தது . அதனுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தது.
“பார்த்தாயா, சிங்கராஜா தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துவிட்டது” என்றார்.
மறு நாள் மாலை நேரம். பாரதி மட்டும் தனியாக ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாரு.. ஒரு தெருவில் அவர் சென்று கொண்டிருந்த போது அங்கே ஓரிருவர் ஒரு கட்டடத்துக்குள் நுழைவதைப் பார்த்தாரு. வாசலில் ஒருத்தர் நின்றுகொண்டு வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தாரு. கட்டடத்தின் வாசலில் சைவப் பிரகாச சபை என்ற பெயர்ப்பலகை தொங்கியது. பாரதி அங்கே வெளியில் நின்று கொண்டிருந்தவரிடம் சென்று “ இன்று இங்கே என்ன விசேசம்?” னுகேட்டாரு.
“ இங்கே ஒரு இலக்கியக் கூட்டம் நடைபெறப்போகிறது” என்றாரு அவரு.
“ எம்மைத் தெரிகிறதா உமக்கு?” என்று கேட்டாரு பாரதி.
“ தெரியவில்லையே ?” என்றார் அவர்.
“ நாம்தான் சுப்ரமணிய பாரதி.”
வெளியே நின்று கொண்டிருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி..
“நான் காண்பது கனவா, நனவா? வாருங்கள், வாருங்கள்” என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றாரு. அவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கிய மேதை பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
பாரதியாரை உள்ளே அழைத்துச் சென்று அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சாரு. ஆனால் அந்த அறிஞர்கள் பாரதி ஒரு புரட்சிக்காரர் என்றுதான் அறிந்திருந்தார்களே தவிர அவருடைய உண்மையான கவித்திறமையை அறிந்திருக்கவில்லை. அவருடைய புகழ் மலையாளம் பேசும் அந்தப் பகுதியில் அவ்வளவாகப் பரவவில்லை.
“அய்யா, தாகமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. கொஞ்சம் ஆரஞ்சு நீர் கொண்டுவரச் சொல்கிறேன்” என்றார் வையாபுரிப்பிள்ளை.
‘எனக்குத் தண்ணீரே போதும்.” என்றார் பாரதி.
அந்தக்காலத்தில் திருவனந்தபுரம் பகுதியில் பந்தி பேதம் அதிகம் உண்டு . பிராமணர்கள் மற்றவர்கள் வீட்டில் தண்ணீர் சாப்பிட மாட்டார்கள் எனவே வையாபுரிப்பிள்ளை ஒரு ஆளை ஆரஞ்சு நீர் கொண்டுவர அனுப்பிவிட்டுத் தயக்கத்துடன் நின்றாரு
“என்ன தயக்கம்?” என்றார் பாரதி
“ இல்லை, இந்தப்பக்கத்தில் அந்தணர்கள் யாரும் இல்லை” என்று இழுத்தார் வையாபுரிப்பிள்ளை.
பாரதியின் முகபாவம் மாறிடிச்சு
“ஜாதிமத பேதமெல்லாம் நாம் பார்ப்பதில்லை- இது
தங்களுக்குத் தெரியாதா அது பெரிய தொல்லை
ஏதுநீர் ஆனாலும் எமக்கதுவே போதும் –ஆமாம்
இங்கிருக்கும் நீர் கொடுங்கள் அது தணிக்கும் தாகம்”
என்றாரு பாரதி
.“அதற்குள் ஆரஞ்சு பானம் வந்து விட்டது. அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக்கொண்டார்.
அவர்கள் கேட்டுக்கொண்டதால் சின்னஞ்சிறுகிளியே பாடலையும் வெடிபடுமண்டத்திடிபல தாளம் போட என்ற பாடலையும் பாடினாரு.
இன்னொருநாள் இங்கே வந்து பேசணுனாரு வையாபுரிப்பிள்ளை. அழைத்தால் வருகிறோம் என்றார் பாரதி. ஆனால் அந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரை அழைப்பதற்கு அஞ்சினார்கள். அதனால் அவர்களுக்கு மீண்டும் பாரதியின் பேச்சைக் கேக்கற வாய்ப்புக் கிடைக்கலே
முபா: பாரதி எட்டயாபுரம் போனாரு. எட்டயபுரம் ஜமீந்தாருக்குச் சீட்டுக்கவியெல்லாம் எழுதினாரு. சீட்டுக்கவின்னா எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அது ஒரு அழகான உதாரணம்.. அங்கேயும் எந்த உதவியும் கிடைக்கலே
1919 ந்தேதி மார்ச்சு மாதம் 30ம் நாள் பாரதி சென்னையிலே காந்திஜியைச்ச் சந்திக்கப்போனாரு. இப்போ சோழா ஹோட்டல் இருக்கிற இடத்திலே அப்போ இராஜாஜியின் வீடு இருந்தது. அங்கேதான் காந்திஜி தங்கி இருந்தாரு. ஒத்துழையாமை இயக்கத்தை அப்பொழுதான் அறிவிச்சாரு.
காந்திஜி அந்த வீட்டுக்குப் போனாரு. வாசலில் வ. ரா காவல் காத்துக்கிட்டு இருந்தாரு, இந்த வ,ரா தான் மகாகவி பாரதியார் எங்கிற பேர்லே பின்னாளில் புஸ்தகம் எழுதினவரு. உள்ளே ராஜாஜி, சத்திய மூர்த்தி இன்னும் சிலபேர் இருந்தாங்க. யாரையும் உள்ளே விடக்கூடாது என்று சொல்லியிருந்தாங்க. ஆனால் பாரதி தான் புயலாச்சே. யாராலே அவரைத் தடுக்க முடியும். எப்படிப்போனாரு தெரியுமா?
புயலொன்று வேகமுடன் அங்கே
புகுந்து வந்ததைப்போல்
தயக்கமே இல்லாமல் பாரதி
தானாகவே நுழைந்தார்
பஞ்சுப் படுக்கையிலே – காந்திஜி
பாங்குடன் வீற்றிருக்கச்
செஞ்சொல் கவிராயர் – அருகே
சிங்கமென அமர்ந்தார்
கண்ணில் சுடர் நெருப்பும் – வந்த
கம்பீரமும் பார்த்தே
எண்ணில் உயர்ந்தமகான் – அவரை
ஏதெனச் சொல்லுமென்றார்
நிலவுச் சுடரொளியில் -நாளை
நேர்ந்திடும் கூட்டமொன்றில்
தலைமை தாங்க வேண்டும் –அண்ணலே
சம்மதம் சொல்லுமென்றார்.
உடனே காந்திஜி தன்னுடைய காரியதரிசி மகாதேவ தேசாயைப் பார்த்தார். அவர் மறுநாள் நிகழ்ச்சியிருக்கிறது என்றார். உங்கள் கூட்டத்தை ஒருநாள் தள்ளிப் போட முடியுமா என்று கேட்டார் காந்திஜி
“முடிவெடுத்த வொன்றை – அன்றே
முடிப்பது தானழகு –
கடமை யாகுமென்று - கவிஞர்
காந்திக்குச் சொல்லுகிறார்
அண்ணலே உம்மியக்கும் – வெற்றி
அடைந்திட ஆசிதந்தேன்
கண்ணன் அருள்க வெனச் சொல்லிக்
கடுகி வெளிநடந்தார்
யாரிவர் ? என்று காந்திஜி இராஜாஜியைக் கேட்க “இவர் எங்கள் தமிழ் நாட்டுக் கவி” என்றார் இராஜாஜி
பாம்பின் கால்ல பாம்பறியுனு சொல்லுவான்களில்லையா? அதைப்போல காந்திஜி பாரதியை நல்லாப் புரிஞ்சிக்கிட்டாரு.
“இவரு சாதாரணமானவர் இல்லை. இவரைப் பாதுகாக்கத் தமிழ் நாட்டில் யாரும் இல்லையா?”என்று கேட்டார்
“ஜீவ களை ததும்பும் – இந்தத்
தேசக் கவிஞரையே
ஆவலுடன் காப்பீர் –என்றே
அண்ணலும் தான்மொழிந்தார்.
பி:பா எவ்வாளவு தைர்யம் இருந்தா பாரதி காந்திக்கே ஆசி கொடுத்திருக்க முடியும்!
“தம்பி பாரதியார் ஒரு சித்த புருஷன்
1919-ஆம் ஆண்டு இந்திய மக்களுக்குக் காந்தி மகான் வேண்டுகோள் விடுத்தாரு .பாரதி காந்திஜியைச் சந்த்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று நடந்த ஒரு நிகழ்ச்சி கேட்டா ஆச்சர்யமாக இருக்கும். இப்படியும் நடக்குமான்னு தோணும். ஆனா அந்த நிகழ்ச்சியைப் பத்திச் சொன்னவங்க சாதாரண ஆளுங்க இல்லை. தி.ரு.வி.க , சாமிநாத சர்மா இரண்டு பேரும் நடந்ததை நடந்தபடி சொல்லியிருக்காங்க!
பி:’ சொல்லுங்கண்ணே கேக்குறோம்
மு: தி ரு வி க எழுதியுள்ளதை நம்ம பாஷையிலே சொல்றேன் கேளு.
பி: பாடுங்கண்ணே
மு: ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி
பி: ஆறாம் தேதி
மு: இராயப்பேட்டை பஜனைக் கோஷ்டி
பி: பஜனைக் கோஷ்டி
மு: பாடிக்கிட்டே வந்த போது
பி: வந்த போது
மு: பாரதியார் அங்கே வந்தார்-
பி: அங்கே வந்தார்
மு: பாட்டு ஒண்ணு பாடுங்கன்னு
பி: பாடுங்கன்னு
மு: பாரதியை நானும் கேட்டேன்
பி: நானும் கேட்டேன்
போடு ஏப்ரல் மாதம் ஆறம் தேதி ஆறாந்தேதி இராயப்பேட்டை பஜனைக் கோஷ்டி பஜனைக்கோஷ்டி
மு: உடனே பாரதி முருகா முருகா முருகான்னு ஊனுருகப் பாடினாரு
அன்று நாங்கள் கண்டது போல் அதிசயமே அதிசயம்
அதுவரையில் கண்டதில்லை அது நிசமே அது நிசம்
பி. பா: அப்படி என்னண்ணே அதிசயம்.
மு: பல்லாக்கில் வைத்திருந்த
படத்ததன் உள்ளிருந்து
பால குகன் வருவதுபோல்
எல்லோரும் கண்டார்கள்
எல்லோரும் கண்டார்கள்
இமையாம நின்றார்கள்
அதிசயமே அதிசயமே
எனக்கண்ணீர் விட்டார்கள்
பாரதியும் இதைப் பார்த்தார்
பரவசமே தான் கொண்டார்
பாட்டினைப்போல் ஆச்சரியம்
பாரின்மிசை இல்லையடா!
பி: அண்ணே பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடாங்கிற வரியை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே!
மு: ஆமா பாரதியாரோடே குயில் பாட்டிலே வர்ர அடி அது.
பி: ரொம்பப்பொருத்தமாத்தாண்ணே இருக்கு
மு: நான்கண்ட நால்வர்ங்கிற நூலில் சாமிநாத சர்மாவும் இதைப்பத்தி எழுதியிருக்கிறாரு. அவரும் அந்த அதிசயத்தைப் பார்த்தாராம்.
:பி: பாரதியாரு என்ன சாதாரண ஆளா
'புயலொன்று வேகமுடன் அங்கே
புகுந்து வந்ததைப்போல்
தயக்கமே இல்லாமல் பாரதி
தானாகவே நுழைந்தார்'
என்று வரும் இந்தப் பாடலைப் படிக்கும்போதே, நீங்கள் பாரதியாக மாறி அடாணா இராகத்தில் கம்பீரமாக இதைப் பாடுவது என் காதுகளில் ஒலிப்பதுபோல் உணர்ந்தேன்!
சிவசூரி.
அந்த சந்திப்புப் பற்றி, வ.ரா.விற்கு நண்பனாகவும், பாரதிக்கும் அரவிந்தருக்கும்
சிஷ்யராகவும் விளங்கிய அமிர்தா, இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"1919-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார், மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப்
போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அப்போது காந்தி ராஜாஜி
இல்லத்தில் தங்கி இருந்தார். மகாத்மா காந்தியைக் காண மக்கள் திரள் திரளாய் வந்து
கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய பாரதியாருடன் நானும் அங்கு வந்து சேர்ந்தேன்.
வேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய தோட்டத்தின் நடுவிலிருந்து அழகான பங்களாவில் ஒருவர்
"ஷூ-பாலிஷ்" போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரை அணுகி பாரதியார்
வந்திருக்கும் விஷயத்தைத் தெரிவித்தேன்.
அவர் தலை நிமிர்ந்ததும் எனது உள்ளம் பூரித்தது. வ.ரா.வை அங்கு நீண்ட நாட்களுக்குப்
பிறகு கண்டேன். கையிலிருந்த ஷூஸ் முதலியவற்றைப் போட்டு விட்டு, வ.ரா. என்னை வாரி
அணைத்துக் கொண்டார். சிறிது தொலைவில் பாரதியார் நான் கொண்டு வரும் பதிலுக்காகக்
காத்துக் கொண்டிருந்தார்.
வ.ரா. "ஏதடா தர்மசங்கடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டாய். காந்திஜியைப்
பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் ராஜாஜியிடம் தெரிவிக்க வேண்டும். பிறகு அவர்
காந்திஜியைக் கேட்டு நாள் குறிப்பிடுவார். இது உடனே நடக்கக் கூடிய காரியமல்ல"
என்றார்.
இந்தப் பதிலை பாரதியாரிடம் தெரிவிக்க எனக்குத் தைரியமில்லை. பிறகு பாரதியை
வணங்கிவிட்டு வ.ரா., "உள்ளே கூடத்தில் வந்து அமருங்கள். நீங்களே ராஜாஜியிடம்
வந்து காரியத்தை நேரில் சொல்லலாம்" என்றார்.
பாரதியாரோ, "நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன். அவரை
உடனே பார்க்க வேண்டும்" என்றார். பாரதியார் சொன்னதை ராஜாஜி கேட்டு பிரமித்து
சிறிது தயங்கி, /இதோ பதில் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே
காந்தியைக் காண சென்றார்.
பாரதி காந்திஜியைப் பார்த்து திரும்பியது இரண்டு நிமிடங்கூட இருக்காது. பங்களாவில்
அரைக் கணம் கூடத் தங்காது வ.ரா.விடம் விடையும் பெறாது என் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டே பங்களாவை விட்டு வெளியே பறந்து விட்டார் பாரதியார், வில்லை
விட்டுக் கிளம்பிய அம்பைப் போல.
காந்திஜியுடன் என்ன நடந்தது என்று எனக்குச் சொல்ல யாருமே இல்லை. என்னன்னவோ
வதந்தியெல்லாம் கிளம்பிற்று அவ்வளவுதான்!.
வெங்கடாஜலபதி பாரதியின் கட்டுரைகளைத் தொகுப்பதில் அருந்தொண்டாற்றியுள்ளார். விஜயா பத்திரிகைக் கட்டுரைகள் வெளிவர அவர்தான் மூல காரணம். அவர் எழுதியிருப்பதாக நீங்கள் சொல்வது என்பார்வையில் படவில்லை.
இலந்தை
பாரதி காந்திகஜியைச் சந்தித்தது உண்மை. மூன்று பேர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.
[...]
இலந்தை
வ. ரா. வின் புத்தகத்தில் நானும் இந்த காந்தி - பாரதி - ராஜாஜி சந்திப்பு , சம்பாஷணைகளைப் படித்திருக்கிறேன். இம்மாதிரி நடந்திருக்கும் என்று நம்பினேன். ஆனால் அ. ரா. வெங்கடாசலபதியின் ஆய்வுக் கட்டுரையிலோ புத்தகத்திலோ இது இம்மாதிரி நடக்கவில்லை, நடந்திருக்க முடியாது என்று படித்ததாகவும் ஞாபகம்
பாரதி காந்திகஜியைச் சந்தித்தது உண்மை. மூன்று பேர் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள்.இராஜாஜி பாரதியை எப்பொழுதெல்லாம் சந்தித்தார் என்பதைப் பற்ரி எழுதியிருக்கிறார். அதில் ஒரே வரி- ஒரு முறை காந்திஜியுடன் " என்று எழுதியுள்ளார்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் நாளை சத்யாகிரக நாளாகக் கொண்டாடுங்கன்னு இந்திய மக்களுக்குக் காந்தி மகான் வேண்டுகோள் விடுத்தாரு .பாரதி காந்திஜியைச் சந்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று நடந்த ஒரு நிகழ்ச்சி கேட்டா ஆச்சர்யமாக இருக்கும். இப்படியும் நடக்குமான்னு தோணும். ஆனா அந்த நிகழ்ச்சியைப் பத்திச் சொன்னவங்க சாதாரண ஆளுங்க இல்லை. தி.ரு.வி.க , சாமிநாத சர்மா இரண்டு பேரும் நடந்ததை நடந்தபடி சொல்லியிருக்காங்க!
(இப்பாடலை மு:பா பி:பா இருவரும் மாறிமாறிப் பாடவேண்டும்)
பி: அண்ணே பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடாங்கிற வரியை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே!
மு: ஆமா பாரதியாரோடே குயில் பாட்டிலே வர்ர அடி அது.
பி: ரொம்பப்பொருத்தமாத்தாண்ணே இருக்கு
மு: நான்கண்ட நால்வர்ங்கிற நூலில் சாமிநாத சர்மாவும் இதைப்பத்தி எழுதியிருக்கிறாரு. அவரும் அந்த அதிசயத்தைப் பார்த்தாராம்.
:பி: பாரதியாரு என்ன சாதாரண ஆளா?
ராஜாஜி மிகைப்படுத்துவார் என்று நான் இதுவரை கேட்டதில்லை
தடைநீக்கப்பட்ட புத்தகம் என்று ரப்பர் ஸ்டாம்ப்போடு அப்புத்தகங்கள் விற்கப்பட்டன. அந்த ஸ்டாம்போடு அப்புத்தகங்கள் இன்னும் சிலரிடம் இருக்கக்கூடும்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
கல்கி’ தொடங்கிய பாரதி மணிமண்டப முயற்சிக்கு காந்தி தமிழில் எழுதி வாழ்த்து அனுப்பியதையும் இத்துடன் சேர்ந்து சிந்திக்க வேண்டும்.
அதன் நகல் என்னிடம் எங்கோ இருக்கிறது.தேட வேண்டும்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
On Aug 19, 4:43 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> அமிர்தா அரவிந்தாஸ்ரமத்தின் நிர்வாகத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலிருந்தவர். அவர்
> கூறியுள்ளதை நான் முழுக்க நம்புகிறேன்.அரவிந்த தரிசம் புத்தகம் கிடைத்தால்
> வாங்கிப் படித்துப் பாருங்கள். மிகச் சிறிய புத்தகம்தான். என்னிடம் உள்ள
> புத்தகம் இப்பொழுது என்கைவசம் இல்லை. இருந்தால் ஒளிநகல் எடுத்து
> அனுப்பியிருப்பேன்
> இராஜிஜியின் சான்றும் இருக்கிறது. வேறென்ன வேண்டும்? ஆதாரம் பெ.சு மணியின்
> புத்தகம்.
>
> இலந்தை
>
பெ. சு. மணியின் புத்தகப் பெயர் தாருங்கள். ராஜாஜி எழுதிய கட்டுரை
முழுக்க
அதில் இருக்கிறதா? நன்றி.
நா. கணேசன்
> 2012/8/19 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
>
> > ராஜாஜி மிகைப்படுத்துவார் என்று நான் இதுவரை கேட்டதில்லை.
>
> > காந்தி -பாரதி சந்திப்பு நடந்தது என்பதற்கு ...என்னைப் பொறுத்தவரை...வேறு
> > எந்த ஆதாரமும் வேண்டியதில்லை.
>
> > 2012/8/19 Parthasarathy Krishnan <paakila...@gmail.com>
On Aug 18, 11:21 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> பாரதி காந்திகஜியைச் சந்தித்தது உண்மை. மூன்று பேர் இதைப்பற்றி
> எழுதியிருக்கிறார்கள்.
>
> இராஜாஜி பாரதியை எப்பொழுதெல்லாம் சந்தித்தார் என்பதைப் பற்ரி
> எழுதியிருக்கிறார். அதில் ஒரே வரி- ஒரு முறை காந்திஜியுடன் " என்று
> எழுதியுள்ளார்.
>
> 2. வரா "மகாகவி பாரதி" என்ற புத்தகத்தில் விவரமாக எழுதியிருக்கிறார். நீண்ட
> நாள்கள் கழித்து அவர் எழுதியிருப்பதால் அதிலும் சிலவிவரங்கள் விடுபட்டுள்ளன.
>
> 3 பாரதியின் மேல் அப்பார பக்திகொண்ட அமிர்தா அரவிதரின் சீடர். அரவிதரின்
> உத்தரவின்படி அவர் சென்னையில் தங்கிப்படித்துக்கொண்டிருந்தார். அவரைப் பாரதி
> சந்தித்து"வா காந்திஜியைப் பார்க்கா வேண்டும் " என்று அழைத்துச் சென்றார்.
> அதன் பிறகு என்ன நடந்தது. இதோ அரவிந்த தரிசனம் என்னும் நூலில் அவர்
> எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.
> "1919-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை வந்து ராஜாஜி வீட்டில் காந்திஜியை
> சந்தித்தார்.
>
> அந்த சந்திப்புப் பற்றி, வ.ரா.விற்கு நண்பனாகவும், பாரதிக்கும்
> அரவிந்தருக்கும் சிஷ்யராகவும் விளங்கிய அமிர்தா, இவ்வாறு குறிப்பிடுகிறார்.
> "1919-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார், மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப்
> போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அப்போது காந்தி ராஜாஜி
> இல்லத்தில் தங்கி இருந்தார். மகாத்மா காந்தியைக் காண மக்கள் திரள் திரளாய்
> வந்து கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய பாரதியாருடன் நானும் அங்கு வந்து
> சேர்ந்தேன்.
காந்தி ராஜாஜி இல்லத்தில் இருக்கவில்லை. காந்தி தங்கியது கஸ்தூரிரங்க
ஐயங்கார் இல்லத்தில் ஆகும். இதைக் காந்தியே குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜாஜி இந்த காந்தி விஜயத்தின் போதுதான் காந்தியுடன்
பழகுகிறார் என்றும் காந்தியின் எழுத்துக்களால் தெரிகிறது.
நா. கணேசன்
> 2012/8/18 Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வ. ரா. வின் புத்தகத்தில் நானும் இந்த காந்தி - பாரதி - ராஜாஜி சந்திப்பு ,
> > சம்பாஷணைகளைப் படித்திருக்கிறேன். இம்மாதிரி நடந்திருக்கும் என்று நம்பினேன்.
> > ஆனால் அ. ரா. வெங்கடாசலபதியின் ஆய்வுக் கட்டுரையிலோ புத்தகத்திலோ இது
> > இம்மாதிரி நடக்கவில்லை, நடந்திருக்க முடியாது என்று படித்ததாகவும் ஞாபகம்.
> > இந்த ஞாபகமோ, அல்லது எனது புரிதலோ தவறாக இருக்கலாம். அ. ரா. வே. இப்படி
> > எழுதியிருந்தால் அதற்கு யாரேனும் ஆதாரங்களுடன் மறுப்பு எழுதியிருக்கிறார்களா?
>
> > சங்கரன்
>
> > 2012/8/17 Subbaier Ramasami <eland...@gmail.com>
>
> >> முபா: பாரதி எட்டயாபுரம் போனாரு. எட்டயபுரம் ஜமீந்தாருக்குச்
> >> சீட்டுக்கவியெல்லாம் எழுதினாரு. சீட்டுக்கவின்னா எப்படி இருக்கவேண்டும்
> >> என்பதற்கு அது ஒரு அழகான உதாரணம்.. அங்கேயும் எந்த உதவியும் கிடைக்கலே
>
> >> 1919 ந்தேதி மார்ச்சு மாதம் 30ம் நாள் பாரதி சென்னையிலே காந்திஜியைச்ச்
> >> சந்திக்கப்போனாரு. இப்போ சோழா ஹோட்டல் இருக்கிற இடத்திலே
>
> ...
>
> read more »
ஆ. இரா. வெங்கடாசலபதி கட்டுரையும் பார்க்கவேண்டும். ராஜாஜி இல்லம்
என்று பலர் எழுதுவது சரியாக இல்லை. அது கஸ்தூரிரங்கையங்கார் இல்லம்.
அமிர்தா எழுதியிருப்பது உண்மையெனில் பாரதியார் எழுதிக் கையொப்பமிட்ட
கடிதத்துக்குப் புறம்பாக அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ளார் என்றாகிறதே.
”I once again assure your Excellency that I have renounced every form
of politics,
I shall ever be loyal to the British Government and law abiding.”
என்று நவம்பர் 1918-ல்
எழுதி நீதிமன்றில் தந்துவிட்டுக் கடையம் சென்ற பாரதியார் அமிர்தாவுடன்
தொடர்பில் இருந்து சென்னைக்கு இருவரும் ஒன்றாகச் சென்றார்களா?
என்பது ஆய்வுக்குரியது.
பிரிடீஷ் அரசாங்கத்துக்கு கோர்ட்டில் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
அதில் அரசியலில் இனி ஈடுபடுவதில்லை என்று எழுதிக் கையொப்பமிட்டுக்
கொடுத்த பாரதியார் எப்படி அமிர்தாவை கடையத்தில் இருந்து புதுச்சேரி
வந்து இருவரும் சென்னை சென்றார்களா? அல்லது சென்னையில் சந்தித்தனரா?
என்று தெரிந்தவர்கள் எழுதுவார்கள்.
காந்தி மார்ச் 1919-ல் பேசிய கூட்டங்களில் வ.உ.சி, நாவலர் சோமசுந்தர
பாரதியார் பேசியிருக்கின்றனர். அதுவும் தமிழிலே பேசியுள்ளனர்.
ஆனால் பாரதி விருட்டென்று அம்புபோலக் காந்தியைப் பார்த்து
வெளியேறக் காரணம் அவரே அரசியலில் ஈடுபடமாட்டேன்
என்று எழுதிக்கொடுத்தது எனக் கருதுகிறேன்.
அமிர்தா கொடுக்கும் தகவல் உண்மையெனில், பாரதி
அரசியலில் ஈடுபாட்டை விடவில்லை. குறைத்துக் கொண்டுள்ளார்
எனத் தெரிகிறது. பாரதி மறைந்த சில தினங்களில்
காந்திஜி தமிழ்நாட்டில் 10 நாள் சுற்றுப்பிரயாணம் செய்து
உரையாற்றினார். ஆனால், ஒரு இடத்திலும் பாரதியாரைப்
பற்றிக் குறிப்பிடவில்லை.
கடலூர் ஜட்ஜுக்கு பாரதியார் எழுதிய கடிதம் யாரால்
அண்மைக்காலத்தில் வெளியிடப்பட்டது? பாரதியாய்வர்கள் -
பத்மநாபனா? சீனி. விசுவநாதனா? வெங்கடாசலபதியா? பெ. சு. மணியா?
அமிர்தா ‘அரவிந்த தரிசனம்’ குறிப்பும், ராஜாஜி கட்டுரையும்
மிக முக்கியமானவை. பாரதி ஆய்வாளர்களுக்குத் துணைகொடுக்கும்.
நா. கணேசன்
Om Sakthi
District Jail, Cuddalore,
28 November-1918
To,
His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George, Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way
from Pondicherry to Tirunelveli which is my native district. After
many loyal assurance on my part as your excellency may well remember,
the Dy.I.G (C.I.D) was sent by your Excellency’s Government a few
months back, to interview me at Pondicheery. The D.I.G after being
thoroughly satisfied with my attitude towards the Government asked me
if I would be willing to be kept interned, purely as a war measure, in
any two districts of the Madras presidency during the period of the
war. I could not consent to that proposal, because, having absolutely
renounced politics, I could see no reason why any restraint should be
placed on my movements even while the war lasted. Subsequent to that
also, I have addressed several petitions to your Excellency clearing
away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I
ventured to leave Pondicherry, honestly believing that there would be
no difficulty whatsoever in the way of my setting in British India as
a peaceful citizen. Contrary to my expectations, however I have been
detained and placed in the Cuddalore District Jail under conditions
which I will not weary your Excellency by describing here at any
length but which are altogether disagreeable to a man of my birth and
status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form
of politics, I shall ever be loyal to the British Government and law
abiding. I therefore, beg of your Excellency to order my immediate
release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain Your Excellency’s most obedient Servant
C.Subramania Bharathi.
(G.O.No.1331 dt.18.12.1918 Public) (32)
> > 2012/8/18 Swaminathan Sankaran <swaminathan...@gmail.com>
>
> > > வ. ரா. வின் புத்தகத்தில் நானும் இந்த காந்தி - பாரதி - ராஜாஜி சந்திப்பு ,
> > > சம்பாஷணைகளைப் படித்திருக்கிறேன். இம்மாதிரி நடந்திருக்கும் என்று நம்பினேன்.
> > > ஆனால் அ. ரா. வெங்கடாசலபதியின் ஆய்வுக் கட்டுரையிலோ புத்தகத்திலோ இது
> > > இம்மாதிரி நடக்கவில்லை, நடந்திருக்க முடியாது என்று படித்ததாகவும் ஞாபகம்.
> > > இந்த ஞாபகமோ, அல்லது எனது புரிதலோ தவறாக இருக்கலாம். அ. ரா. வே. இப்படி
> > > எழுதியிருந்தால் அதற்கு யாரேனும் ஆதாரங்களுடன் மறுப்பு எழுதியிருக்கிறார்களா?
>
> > > சங்கரன்
>
> > > 2012/8/17 Subbaier...
>
> read more »
>
> read more »
On Aug 19, 10:17 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> பாரதி காந்திஜியைச் சந்தித்தது உண்மை. காந்திஜியைச் சந்தித்து அவருடைய
> இயக்கத்துக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கத்துடன் பாரதி
> சென்றிருக்கக்கூடும். என்னுடைய பாரதியும் ஜாலியன்வாலபாக்கும் இடுகையில்
> இதைப்பற்ரிக் குறிப்பிட்டுள்ளேன். பாரதி 1919 மார்ச்சில் சென்னை வந்ததும்
> உண்மை. அமிர்தா எழுதியிருப்பது 100 சதவிகிதம் உண்மை. அமிர்தா சென்னையில்
> தங்கிப்படித்துக்கொண்டிருந்தஅர். அப்பொழுது கடையத்திலிருந்து வந்த கபாரதி
> அவரைச் சந்தித்தார், காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார் என்பது தனக்குத்
> தெரியாது என்றுதான் அமிர்தா சொல்கிறார். எனவே பாரதி அரசியல் பேசவில்லை.
> அரசியலில் ஈடுபடவில்லை. அதனால்தான் ஜாலியன்வால பக்கைப்பற்ரியும் எழுதவில்லை.
>
> பாரதி அரசியல்கூட்டத்தில் பேச காந்திஜியை அழைத்தார் என்பதும் ஒரு
> அனுமானந்தான். இராஜாஜியோ சத்தியமூர்த்தியோ காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார்
> என்று சொல்லவ்வில்லை.
>
> இலந்தை
>
On Aug 19, 10:17 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> பாரதி காந்திஜியைச் சந்தித்தது உண்மை. காந்திஜியைச் சந்தித்து அவருடைய
> இயக்கத்துக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கத்துடன் பாரதி
> சென்றிருக்கக்கூடும். என்னுடைய பாரதியும் ஜாலியன்வாலபாக்கும் இடுகையில்
> இதைப்பற்ரிக் குறிப்பிட்டுள்ளேன். பாரதி 1919 மார்ச்சில் சென்னை வந்ததும்
> உண்மை. அமிர்தா எழுதியிருப்பது 100 சதவிகிதம் உண்மை. அமிர்தா சென்னையில்
> தங்கிப்படித்துக்கொண்டிருந்தஅர். அப்பொழுது கடையத்திலிருந்து வந்த கபாரதி
> அவரைச் சந்தித்தார், காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார் என்பது தனக்குத்
> தெரியாது என்றுதான் அமிர்தா சொல்கிறார். எனவே பாரதி அரசியல் பேசவில்லை.
> அரசியலில் ஈடுபடவில்லை. அதனால்தான் ஜாலியன்வால பக்கைப்பற்ரியும் எழுதவில்லை.
>
> பாரதி அரசியல்கூட்டத்தில் பேச காந்திஜியை அழைத்தார் என்பதும் ஒரு
> அனுமானந்தான். இராஜாஜியோ சத்தியமூர்த்தியோ காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார்
> என்று சொல்லவ்வில்லை.
>
> இலந்தை
>
பாரதி காந்திஜியைச் சந்தித்தது உண்மை. இதில் ஓர் ஐயமும் இல்லை.
1920-ல் நடந்திருக்கிறது. general amnesty அப்போது அமுலுக்கு
வந்துவிட்டது.
ஆ. ரா. வெங்கிடாஜலபதி ’தி ஹிந்து’ பத்திரிகைக்கு பாரதி எழுதிய
கடிதங்களைக் கண்டறிந்தார்:
http://www.hindu.com/2008/04/06/stories/2008040655500800.htm
”The poet was closely associated with many Swadeshi leaders in the
south, including V.O. Chidambaram Pillai. When the British Raj clamped
down on the Swadeshis, he took refuge in Pondicherry in 1908;
Aurobindo and V.V.S. Iyer also sought shelter there later. In 1920,
Bharati returned to Madras to rejoin Swadesamitran. He met Mahatma
Gandhi and wrote an oft-quoted poem in praise of non-violence. But his
last years were tragic and he died in semi-obscurity in September
1921.”
காந்தி 1920 விஜயத்தின் போது ராஜாஜி இல்லத்தில் இருந்தாரா? என்பதை
தெரிந்துபார்ப்போம். அது சரியென்றால், அமிர்தா குறிப்பிடுவது 1920
சந்திப்பைப்
பற்றியதாகும். வ.ரா., அமிர்தா ராஜாஜி இல்லத்தில் பாரதி காந்தியச்
சந்தித்தார் என்கிறார்கள்.
1919-ல் கஸ்தூரிரங்க ஐயங்கார் இல்லத்தில் காந்தி தங்கியிருந்தேன்
என்கிறார்,
அவ்வளவாக ராஜாஜியையே காந்திக்கு தெரியாத காலம் அது.
வ. ரா., அமிர்தா, குறிப்பிடுவது பாரதி-காந்தியின் சந்திப்பு. இது 1920
சந்திப்பா எனப்
பார்க்கவேண்டும்.
நா. கணேசன்
> 2012/8/19 N. Ganesan <naa.gane...@gmail.com>
> ...
>
> read more »
கோர்ட்டில் எழுதிக் கொடுத்த கடிதத்துக்குப் புறம்பாக
சத்தியம் கடைப்பிடித்த பாரதி வ. ரா. கதைப்படியா நடப்பார்?
A meeting between Bharati and Mahatma Gandhi cameabout in March 1919,
when the latter visisted Madras to consult with congress leaders befor
launching a movement against the Rowlatt Act. As Va. Ra. describes the
incident , Bharati met Gandhiji in C. Rajagopalachari’s house where he
was staying. There were Gandhiji’s secretary Mahadev Desai,
Adinarayana Chettiar, A. Rangasamy Iyengar who was theeditor of
“Swadesamitran”, S. Satymurti Rajaji, Va. Ra., and others surrounding
the Mahatma. Bharati entered and sat besides Gandhiji and asked him if
he could preside over a meeting in which Bharati was going to be the
featured speaker.
Gandhji enquired Desai as to his engagements for the day, and as he
had another engagement, he asked Bharati if he could postpone the
meeting for the newxt day. Bharati said this was not possible, and
blessed Gandhiji’s movement and quickly took his leave. Gandhiji asked
who his visitor was and Rajaji answered that he was a nationalistic
poet from Tamil Nadu, On hearing this Gandhiji sems to have remarked
that good care must be taken of such poets as Bharati.
Bharati paid a poetical tribute to Gandhiji later. In a poem
forecasting the freedom of India by Gandhiji’s non-violent methods
Bharati speaks of the Mahatma:
You have brought into politics a spiritual
awareness and courage-
Politics that is entwined with war, murders
and chastisement-
To regard all human beings children of God and to perceive in them
forms of Godliness,
To regard one’s own life on a par with other lived that may be full of
evil-
…..All this you have done.
This poem must be dated later in 1921 because Bharati wrote an article
about his own ideas against Gandhiji’s non-cooperation methods in “
Swadesamitran” in November 1920. This essay is in the form of a reply
to friends who were asking him in letters and in person, about his
ideas of the Mahatma’s non-cooperation movement.
--------------------------
ஜெனரல் அம்னெஸ்ட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் 1920-ல் அனைவருக்கும்
வழங்கியபின் பாரதி கடையத்தில் இருந்து சென்னை திரும்பினார்.
அப்போது ராஜாஜி காந்திஜிக்கு நல்ல நண்பர். ராஜாஜி இல்லத்தில்
சந்தித்ததாய் வ. ரா., அமிர்தா, எல்லோரும் எழுதுவதை நினைவில்
நிறுத்தினால் காந்தி-பாரதி சந்திப்பு விளங்கக்கூடும்.
நா. கணேசன்
> On Aug 19, 10:17 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
>
> > பாரதி காந்திஜியைச் சந்தித்தது உண்மை. காந்திஜியைச் சந்தித்து அவருடைய
> > இயக்கத்துக்கு வாழ்த்துத் தெரிவுக்கும் நோக்கத்துடன் பாரதி
> > சென்றிருக்கக்கூடும். என்னுடைய பாரதியும் ஜாலியன்வாலபாக்கும் இடுகையில்
> > இதைப்பற்ரிக் குறிப்பிட்டுள்ளேன். பாரதி 1919 மார்ச்சில் சென்னை வந்ததும்
> > உண்மை. அமிர்தா எழுதியிருப்பது 100 சதவிகிதம் உண்மை. அமிர்தா சென்னையில்
> > தங்கிப்படித்துக்கொண்டிருந்தஅர். அப்பொழுது கடையத்திலிருந்து வந்த கபாரதி
> > அவரைச் சந்தித்தார், காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார் என்பது தனக்குத்
> > தெரியாது என்றுதான் அமிர்தா சொல்கிறார். எனவே பாரதி அரசியல் பேசவில்லை.
> > அரசியலில் ஈடுபடவில்லை. அதனால்தான் ஜாலியன்வால பக்கைப்பற்ரியும் எழுதவில்லை.
>
> > பாரதி அரசியல்கூட்டத்தில் பேச காந்திஜியை அழைத்தார் என்பதும் ஒரு
> > அனுமானந்தான். இராஜாஜியோ சத்தியமூர்த்தியோ காந்திஜியிடம் பாரதி என்ன பேசினார்
> > என்று சொல்லவ்வில்லை.
>
> > இலந்தை
>
> > > > On Aug 18, 11:21 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
>
> > > > > பாரதி காந்திகஜியைச் சந்தித்தது உண்மை. மூன்று பேர் இதைப்பற்றி
> > > > > எழுதியிருக்கிறார்கள்.
>
> > > > > இராஜாஜி பாரதியை எப்பொழுதெல்லாம் சந்தித்தார் என்பதைப் பற்ரி
> > > > > எழுதியிருக்கிறார். அதில் ஒரே வரி- ஒரு முறை காந்திஜியுடன் " என்று
> > > > > எழுதியுள்ளார்.
>
> > > > > 2. வரா "மகாகவி பாரதி" என்ற புத்தகத்தில் விவரமாக எழுதியிருக்கிறார்.
> > > நீண்ட
> > > > > நாள்கள் கழித்து அவர் எழுதியிருப்பதால் அதிலும் சிலவிவரங்கள்
> > > விடுபட்டுள்ளன.
>
> > > > > 3 பாரதியின் மேல் அப்பார பக்திகொண்ட அமிர்தா அரவிதரின் சீடர். அரவிதரின்
> > > > > உத்தரவின்படி அவர் சென்னையில் தங்கிப்படித்துக்கொண்டிருந்தார். அவரைப்
> > > பாரதி
> > > > > சந்தித்து"வா காந்திஜியைப் பார்க்கா வேண்டும் " என்று அழைத்துச் சென்றார்.
> > > > > அதன் பிறகு என்ன நடந்தது. இதோ அரவிந்த தரிசனம் என்னும் நூலில் அவர்
> > > > > எழுதியிருப்பதைப் பார்க்கலாம்.
> > > > > "1919-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை வந்து ராஜாஜி வீட்டில் காந்திஜியை
> > > > > சந்தித்தார்.
>
> > > > > அந்த சந்திப்புப் பற்றி, வ.ரா.விற்கு நண்பனாகவும், பாரதிக்கும்
> > > > > அரவிந்தருக்கும் சிஷ்யராகவும் விளங்கிய அமிர்தா, இவ்வாறு
> > > குறிப்பிடுகிறார்.
> > > > > "1919-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார், மகாத்மா காந்தியைத் தான்
> > > பார்க்கப்
> > > > > போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அப்போது காந்தி
>
> ...
>
> read more »
http://www.mahakavibharathiyar.info/vazhkaikurippu.htm
”பாரதி வாழ்வு: சில காலக் குறிப்புகள்”
[...]
”1917
கண்ணன் பாட்டு (முதற் பதிப்பு); பரலி சு.நெல்லையப்பர் வெளியிட்டார்.
1918
பரலி நல்லையப்பர் பாரதியின் 'நாட்டுப் பாட்டு' (முதற் பதிப்பு)
வெளியிட்டார்.
நவம்பரில் புதுவையை விட்டுப் புறப்பட்ட பாரதியைக் கடலூரில் கைது
செய்தனர். சென்னை வழக்கறிஞர் திரு.துரைசாமி ஐயர், 'சுதேசசமித்திரன்'
ஆசிரியர் திரு.ஏ.ரங்கசாமி ஐயங்கார் சி.பி.இராமசாமி ஐயர் ஆகியோர்
முயற்சியால் விடுதலை பெற்றார்.
1919
கடையம் (திருமதி செல்லம்மாள் ஊர்), எட்டயபுரம் - இரண்டு ஊர்களிலும் தங்கி
வந்தார். இடையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு திருமணத்துககுப் போனபோது
திரு.கே.ஜி.சேஷையரின் பழக்கம் ஏற்பட்டது.
1920
மீண்டும் 'சுதேசமித்திரன்' உதவியாளரானார். புதுவையிலிருந்து
வ.வே.சு.ஐயரும் பல நண்பர்களும் சென்னை வந்து சேர்ந்தனர்.
காந்தியடிகளைக் கண்டு, சில மணித்துளிகள் பேசும் வாய்ப்பினைப் பாரதியார்
பெற்றார். நேரம் சிறிதளவேயாயினும் இரு பெருமக்களும் ஒருவரை யொருவர்
இனங்கண்டு கொண்ட அற்புதமான சந்திப்பு.
1921
திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் யானை பாரதியைத் தூக்கி எறிந்தது.
செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் பாரதி மறைவு.”
----------------
ராஜாஜி வீட்டில் இச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது அமிர்தா
போன்றோர்
எழுத்தால் தெரிகிறது.
நா. கணேசன்
ஒரு சமயம் பாரதி, நெல்லையப்பபிள்ளை , விஸ்வநாத பாரதி(இவர் பாரதியின் தம்பியில்லை. இவர் வேறு கவிஞர். பாரதியைக் குருவாகக் கருதும் சீடன்)ஆகிய மூவரும் கோவில்பட்டி இரயில்வே ஸ்டேஷனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தாங்க. போகிற வழியிலே பூக்காரங்க பூ வித்துக்கிட்டிருந்தாங்க. பாரதி மூணு பூமாலை வாங்கினாரு. ஒண்ணைத் தன் கழுத்துலே போட்டிக்கிட்டாரு. மற்ற இரண்டு பேருக்கும் ஆளுக்கொண்ணு போட்டாரு. ரோட்டிலே பாட்டுப்பாடிக்கிட்டே ஏறுபோல நடக்க ஆரம்பிச்சாரு.
“நம்ம எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்க. பைத்தியம்னு நெனக்கப்போறாங்க” என்றாரு நெல்லையப்ப பிள்ளை. உடனே பாரதியார் அவரைப்பார்த்துச் சொன்னாரு
“பாட்டை வழி தெரியாமல் பரிதவித்த மக்களுக்குப்
பாட்டெடுத்து வழிகொடுத்தேன் தம்பி தம்பி-அந்தப்
பாட்டுக்ளைப் பதிப்பித்தாய் தம்பி தம்பி
பாதைவழி சென்றபின்னும் பாராட்டத் தெரியவில்லை
பயனில்லை நாமிவரை நம்பி நம்பி –நாமே
பாராட்டிக் கொள்ள வேண்டும் தம்பி தம்பி
ஏறுபோல நடைநடந்து எண்ணச் சிறகசைத்து
வீறுகொண்டு சென்றிடுவோம் தம்பி தம்பி- நாமே
வேந்தரெனச் வென்றிடுவோம் தம்பி தம்பி
எத்தனையோ எதிர்பார்த்து இந்தியாவுக் குள்ளே வந்தேன்
அத்தனையும் வீணாச்சு தம்பி தம்பி- ஜனங்க
அச்சத்திலே வாழுறாங்க வெம்பி வெம்பி
அப்படின்னு சொன்னாரு
பி: எவ்வளவு வேதனைப் பட்டிருக்காரண்ணே!
மு.பா: ஆமாம். இதற்கிடையிலே பாரதி மேலேருந்த தடையெல்லாம் நீக்கிட்டாங்க. ஆகையாலே பாரதி கானாடு காத்தான் போனாரு. காரைக்குடி போனாரு. அங்கே பாராட்டுக்கெடச்சுது. பாட்டுக்களைப் பதிப்பிக்கறதா வாக்குறுதி கிடைச்சது. ஆனால் ஒண்ணும் நடக்கலே. சரி, சென்னைக்குப் போகலாமுன்னு முடிவெடுத்தாரு. ஆனால் அவங்க குடும்பத்தாரோடே சம்மதம் கிடைக்கலே. அந்த ஊரிலே இருந்த நாராயணப்பிள்ளையோடே நடந்த ஒரு தகராறாலே அவர் குடும்பம் அவரோடே சென்னைக்குப் போக ஒத்துக்கிட்டாங்க! 1920ம் வருஷக் கடைசியிலே பாரதி சென்னைக்குப் போனாரு.
பி” எங்கே தங்கினாரு அண்ணே
மு: அவருடைய நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா வீட்டிலே கொஞ்சகாலம் தங்கியிருந்தாரு. அப்புறம் தம்புச்செட்டித்தெருவிலே கொஞ்சநாள் இருந்தாரு. சுதேசமித்திரனிலே உதவி ஆசிரியராச் சேர்ந்தாரு/
பி: இந்தியா பத்திரிகையிலே ஆசிரியரா இருந்தவரு உதவி ஆசிரியராப் போனாரா?
மு: என்ன செய்ய? வவுத்துப்பிழைப்பிருக்கே! அது மட்டுமில்லே. எழுதறதுக்கு ஒரு பத்திரிகை கிடைச்சிதில்லே. அப்புறம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்திலே துளசிங்கப்பெருமாள் கோயில் தெருவிலே ஒரு வீட்டிலே தங்கினாரு. பக்கத்திலே கோயில் இருந்ததனாலே அடிக்கடி கோயிலுக்குப் போனாரு.
பி: கண்ணன் தானே பார்த்தசாரதி? அவருக்குப் பிடிச்ச கண்ணன் கோயிலாச்சே. போகாமலிருப்பாரா?
மு: அவருக்குத்தான் மிருகங்கங்கள்னா ரொம்பப்பிடிக்குமே. அந்தக்கோயில் யானைக்குப் போகிறபோதெல்லாம் பழங்கொடுப்பாரு. அது அவரோடே நண்பனாயிடுச்சு
பி: அண்ணே “காக்கை குருவி எங்கள் ஜாதி”ன்னு பாடினவராச்சே!
மு: ஆமாம். அப்படி இருக்கிறபோது ஒரு நாள் அந்த யானைக்கு மதம் பிடிச்சிருச்சு. அது பாரதிக்குத் தெரியாது. வழக்கம் போலப் பழங்கொடுக்கப்போனாரு. யானைப்பாகன் தடுத்தான். ஆனால் அதுக்குள்ளே அந்த யானை அவரைத் துதிக்கையிலே தூக்கிடுச்சு
“தூக்கியது யானை தூக்கியது கையால்
தூக்கிக் கீழே போட்டதுவே
பாக்களிலே எண்ணப் பூக்களிலே சிறந்த
பாரதியைக் கீழே போட்டதுவே
ஓடிவந்தார் கண்ணன் ஓடிவந்தார் வந்து
உடனே கவிஞரைத் தூக்கிவிட்டார்.
ஆடியது தேகம் வாடியது அந்த
ஆனை முகமும் வாடியது
பி: அடப் பாவமே
மு: கொஞ்சம் சிராய்ப்பு. அந்த யானை யாரோன்னு நெனைச்சுத் துக்கிட்டுது. பாரதின்னு தெரிஞ்சதும் கீழே போட்டுவிட்டது. இல்லைன்னா காலாலே நசுக்கியிருக்கும். பாரதியைக் கீழே போட்டுவிட்டோமேன்னு அந்த ஆனைக்கும் முகம் வாடியது.
பி: அதெப்படிண்ணே ஆனைக்குத் தெரியும்
மு: அதைப்பத்தி பின்னாலே பாரதியார் காளி கோயில் ஆனைன்னு ஒரு கட்டுரையிலே எழுதியிருக்காரு. அடிபட்ட பாரதியாரை குவளைக்கண்ணன் காப்பாத்தினாரு, இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்கே வெளி நோயாளியா சிகிச்சை அளித்து அனுப்பிச்சுட்டாங்க
பி: பின்னே ஏன்ணே யானை தூக்கிப்போட்டதாலே பாரதி செத்தாருன்னு சொல்றாங்க
மு: அது சரியில்லே. அது ஒரு அதிர்ச்சி அவ்வளவுதான். பாரதி குணமாயித் திரும்பவும் வேலைக்குப் போனாரு. அதுக்கப்புறம் ஈரோடு போய்”மரணமில்லாப் பெருவாழ்வு” என்னும் தலைப்பிலே பேசினாரு. ஆனால் அவருக்கு வவுத்து நோவு வந்தது. அது அவரை ரொம்ப வாட்டி எடுத்தது, வைத்தியம் பாத்தாங்க. ஆனால் பாரதி மருந்து சாப்பிட மறுத்துட்டாரு. 1921ம் வருஷம் செப்டம்பர் மாதம் 11ந்தேதி உடல்நிலை ரொம்ப மோசமாகப் போயிட்டுது. அன்னைக்கு ராத்திரி ஒண்ணரை மணிக்கு அவர் அமரராயிட்டாரு
செந்தமிழில் மணம் பெய்து சிந்துபுகழ் பாடியவாய் திறக்காமல் மூடிக்கொண்டது- அந்தோ
செந்தமிழும் வாடிவிட்டது
வந்துவிழும் சொல்லழகில் வரலாறு கண்டுவிட்ட மாக்கவிஞன் நாக்கும் ஓய்ந்தது- கவிதை
மன்னவனின் தலையும் சாய்ந்தது
சுதந்திரந்தைக் கண்டுவிட்டேன் என்று பள்ளுப் பாடியவன் சுதந்திரமாய்ப் பறந்துவிட்டனன் உலகத்
துன்பமெல்லாம் மறந்து விட்டனன்
காலனையும் புல்லெனவே கவிபாடிச் சவால்விட்ட கவிஞன் எங்கோ சென்று விட்டனன் அந்தக்
காலன் செயல் வென்று விட்டனன்
காலமெல்லாம் மக்களுக்குக் கவிபாடி வந்தவனைக் காடேற்றக் கூட்டமில்லையே- அந்தோ
கயமைக்கும் வாட்டமில்லையே
அவ்வளவு பெரிய கவிஞருடைய இறுதிச் சடங்கிலே எத்தனை திரளா மக்கள் வந்திருக்கணும். ஆனால் இருபது பேரே வந்தாங்க! நன்றி கெட்ட ஜனங்க!
பி. : அப்படிச் சொல்ல முடியாது. கோயில் பக்கத்திலே வீடு இருந்ததாலே சீக்கிரம் எடுங்கண்ணு சொல்லியிருப்பாங்க. விஷயம் தெரிந்து மக்கள் வர்ரதுக்குள்ளே கொண்டுபோயிருப்பாங்க!
மு: நீ சொல்றமாதிரியும் இருக்கலாம். சுடுகாட்டுலே சுரேந்திரநாத் ஆர்யா ரொம்ப உருக்கமா பேசினாரு
உருவிழந் தடிமை நாட்டில்
உழன்றுமே என்றும் நெஞ்சம்
கருகிய மக்கள் வாழக்
கவிதைகள் தந்தான் எங்கே
நெருப்பினைக் கடைந்தெ டுத்தே
நெல்லையின் தமிழ் தொடுத்தே
சரித்திரம் படைத்து விட்ட
சாரதி எங்கே எங்கே!
விண்ணவர் கவிதை வேண்டி
விரும்பியே அழைத்த போதும்
புண்ணியா எம்மை விட்டுப்
போகுதல் என்ன நீதி
கண்ணிலே கவிதை தந்தும்
கருதிடா மக்கள் தம்மை
எண்ணியோ எம்மை விட்டே
ஏகினாய் கவிஞ ரேறே~
ஆர்த்திடும் அணிமுரசம் போர்த்தொழில் கைவிட்டே ஆகாசம் போன தம்மா
பார்த்திடும் நல்லொளி பாரினில் இடமின்றிப் பரலோகம் சென்றதம்மா
கூர்த்திடும் நல்லிசை குவலயத் திடமின்றிக் குரிசிலைச் சார்ந்ததம்மா
யாருளர் இனியெமக்கு யாருளர் என்றன்பர் உள்ளமே அழுததம்மா!
பி: “எவ்வளவு உருக்கமாச் சொல்லியிருக்காரண்ணே
மு:
பாரதி மறைய வில்லை
பாக்களும் மறைய வில்லை
பாரதி தெய்வ மாகிப்
பாட்டிலே பிறந்து விட்டார்
சாரதி யாகி நாட்டில்
சரித்திரம் படைத்து விட்டார்
பாரதம் உள்ள மட்டும்
பாரதி உண்டு வாழ்க!
பி: அண்ணே வாழ்த்துப்பாடிடுவோம்
வாழியவே பல்லாண்டு காலம் இந்தக் கதைபடித்த நீங்களெல்லாம் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இதைப் படித்துக் கருத்துரைத்தோர் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இதைப் படியா திருந்தோரும் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இந்தக் கதை சொன்ன நாங்களெல்லாம் வாழியவே
வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழியவே!
இலந்தை சு இராமசாமி
21-8-2012
“பாரதி வாழ்க்கைச் சரித்திரத்தில் இன்னும் எழுத வேண்டியவை எத்தனையோ உண்டு. வில்லுப்பாட்டில் அவற்றையெல்லாம் கொண்டுவந்தால் நீண்டுவிடும் என்பதால் இந்த அளவில் நிறைவு செய்கிறேன்
1919-ஆம் ஆண்டு இந்திய மக்களுக்குக் காந்தி மகான் வேண்டுகோள் விடுத்தாரு .பாரதி காந்திஜியைச் சந்த்தித்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அன்று நடந்த ஒரு நிகழ்ச்சி கேட்டா ஆச்சர்யமாக இருக்கும். இப்படியும் நடக்குமான்னு தோணும். ஆனா அந்த நிகழ்ச்சியைப் பத்திச் சொன்னவங்க சாதாரண ஆளுங்க இல்லை. தி.ரு.வி.க , சாமிநாத சர்மா இரண்டு பேரும் நடந்ததை நடந்தபடி சொல்லியிருக்காங்க!
பாட்டினைப்போல் ஆச்சரியம்
பாரின்மிசை இல்லையடா!
பி: அண்ணே பாட்டினைப்போல் ஆச்சர்யம் பாரின்மிசை இல்லையடாங்கிற வரியை எங்கோ கேட்ட மாதிரி இருக்கே!
மு: ஆமா பாரதியாரோடே குயில் பாட்டிலே வர்ர அடி அது.
பி: ரொம்பப்பொருத்தமாத்தாண்ணே இருக்கு
மு: நான்கண்ட நால்வர்ங்கிற நூலில் சாமிநாத சர்மாவும் இதைப்பத்தி எழுதியிருக்கிறாரு. அவரும் அந்த அதிசயத்தைப் பார்த்தாராம்.
2012/8/17 Subbaier Ramasami <elan...@gmail.com>
2012/8/16 Subbaier Ramasami <elan...@gmail.com>
வாழியவே பல்லாண்டு காலம் இந்தக் கதைபடித்த நீங்களெல்லாம் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இதைப் படித்துக் கருத்துரைத்தோர் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இதைப் படியா திருந்தோரும் வாழியவே
வாழியவே பல்லாண்டு காலம் இந்தக் கதை சொன்ன நாங்களெல்லாம் வாழியவே
வாழிய வாழிய வாழிய வாழிய வாழிய வாழியவே!
இலந்தை சு இராமசாமி
21-8-2012
“பாரதி வாழ்க்கைச் சரித்திரத்தில் இன்னும் எழுத வேண்டியவை எத்தனையோ உண்டு. வில்லுப்பாட்டில் அவற்றையெல்லாம் கொண்டுவந்தால் நீண்டுவிடும் என்பதால் இந்த அளவில் நிறைவு செய்கிறேன்
On Aug 20, 5:35 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> பாரதி வரலாற்றை வில்லுப்பாட்டில் அழகுறச் சொன்னீர்கள்.
>
> இதைத் தொகுப்பாக txt file வடிவில் இங்கே இணைக்கலாமே!
>
> இந்தியாவில் இருக்கும்போது வாய்ப்புக்கிடைத்தால் பொதிகை போன்ற
> தொலைக்காட்சியில் நிகழ்த்தலாம்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
மகாகவி மறைந்தபோது சுதேசமித்திரன் வெளியிட்ட குறிப்பு:
”. . . பள்ளிக் கூடத்தை விட்டுக் கிளம்பியதும், ஸ்ரீமான் ஜி,சுப்பிரமணிய
ஐயரிடத்தில் மித்திரன் உதவி ஆசிரியராக அமர்ந்து, வேலை செய்து வரும்
நாளில், ‘இந்தியா’ என்ற வாரப் பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார்.
அதன் மூலமாக ராஜாங்கத்தாருடைய கோபத்துக்கு ஆளாகி சுமார் 10 வருஷ காலம்,
பிரஞ்சு இந்தியாவில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
பரபரப்பாக வேலை செய்யும் இயல்புடைய ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த
காரணத்தால், அவருடைய தேகம்மெலிந்து போய், பழைய பாரதியின் சாயல்போல்
இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து மீண்டு வந்தார்.
சிறிதுகாலம் தம்முடைய ஊராகிய கடையத்தில் இருந்து விட்டுத் தமது ஆசையைக்
கவர்ந்த பத்திரிகை வேலைக்குத் திரும்பி வந்து மித்திரன் உதவி
ஆசிரியர்களில் ஒருவராகி தேச ஊழியம் செய்து வரும் நாளில் திடீரென்று
நம்மையெல்லாம் விட்டுமறைந்து போய்விட்டார்.”
- சுதேச மித்திரன் 13.9.1921 பக்.1.
(மகாகவி பாரதி வரலாறு, பக்.521)
http://www.tamilvu.org/courses/degree/c011/c0112/html/c0112263.htm
நா. கணேசன்
> 2012/8/20 Subbaier Ramasami <eland...@gmail.com>