எண்சீர் விருத்தத் தொடர்

2 views
Skip to first unread message

Parthasarathy S

unread,
Feb 15, 2026, 1:32:29 AM (4 days ago) Feb 15
to santhav...@googlegroups.com
இன்றைய பா - எண்சீர் விருத்தம்

தவசி யர்க்கு சொல்கொடுத்த தாசரதீ!

            தவறு டைத்த என்றனையும் காத்திடுவாய்

அவசி யத்தில் அடியேனும் அழைக்கின்றேன்

            அஞ்ச லென்றே கரமென்பால் இட்டிடுவாய்

திவச முன்னை நினைக்காத நெஞ்சுடைத்தேன்

            திசைமு ழுக்க வுன்கருணை காணவைத்தாய்

கவச மென்ன நின்நாமம் பாடவைத்துக்

            கதியெ னக்கு யீயுமந்நாள் எந்நாளோ?     

--
S. Parthasarathy

+91 98441 24542/9980794542
Reply all
Reply to author
Forward
0 new messages