ஈற்றடி: ஓசையும் நஞ்சாம் ஒழி
தேசத்தை நேசிக்காத் தீயவரும் நஞ்சனையர்
நீசமனம் கொண்டார் நிலையஃதே -
காசினியில்
வீசுபுயல் தாக்குதற்போல் வீண்பேச்சில் வாய்முழக்கும்
ஓசையும் நஞ்சாம் ஒழி.
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
23/08/2025
On Aug 24, 2025, at 15:16, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPTXp_1B_zK5zWKQFPq%2B_9K1j%3DRzvQu%2BUrvJryND8L%3Dxg%40mail.gmail.com.
2025-08-25
ஈற்றடிக்கு வெண்பா - ஓசையும் நஞ்சாம் ஒழி
---------------
நீள்கயிலை பேர்த்தான் நிணம்சிதற ஊன்றிப்பின்
வாள்கரத்தில் ஈந்தானை வாழ்த்தாராய் - ஆள்சேர்க்கக்
காசையும் காட்டும் கபடர்கள் வாய்கத்தும்
ஓசையும் நஞ்சாம் ஒழி.
வி. சுப்பிரமணியன்
On Aug 25, 2025, at 11:06, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMBfx5a%2B-2odC9PaK_NU2SKeQ6kU9t15-0sdzOFwhgVzg%40mail.gmail.com.
--
இன்னொன்றும் எழுதினேன்.
2)
ஈட்டும் வினைதனை எண்ணார் எதிர்காலக்
கேட்டைப் பொருட்படுத்தார் கிஞ்சித்தும் - சூட்டையும்
மாசையும் கூட்டும்பல் வாகனங்கள் போடுகின்ற
ஓசையும் நஞ்சாம் ஒழி.
வி. சுப்பிரமணியன்
On Aug 25, 2025, at 12:04, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhAOU8mBGBa_d-NMki4JgkGjk-0zdsxaqL8Jaw1h_oVxA%40mail.gmail.com.
பொருந்து மா மரம் ஏழும் எய்த புனிதனார்
திருந்து சேவடி என் மனத்து நினைதொறும்
கருந் தண் மா கடல் கங்குல் ஆர்க்கும் அது அன்றியும்
வருந்த வாடை வரும் இதற்கு இனி என் செய்கேன்
இதே பதிகத்தில் நஞ்சைப் பற்றியும் பாசுரம் வருகிறது:
வெம் சுடர் போய் விடியாமல் எவ்விடம் புக்கதோ?
நஞ்சு உடலம் துயின்றால் நமக்கு இனி நல்லதே
On Aug 25, 2025, at 12:04 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:
Nice veNbAs.V. Subramanian