மனோன்மனி - மனோன்மணி ?

420 views
Skip to first unread message

Siva Siva

unread,
Dec 8, 2015, 11:16:12 PM12/8/15
to santhavasantham
Today a word happened to catch my eye.

thevaaram.org uses the spelling மனோன்மனி in all songs where this word occurs.

The last letter is னி (and not ணி).
That spelling corresponds to what I see in Sanskrit dictionary:

 मनोन्मनी A form of Durgā. 

However, the Tamil dictionary uses a slight variation in the spelling - மனோன்மணி.
மனோன்மணி maṉōṉmaṇi , n. < manōn- manī. Pārvatī; பார்வதி. (பிங்.) 

The dictionary does point to the Sanskrit root with correct Sanskrit spelling!

Are both spellings - மனோன்மனி - மனோன்மணி - accepted in Tamil?

Just curious!



--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

Hari Krishnan

unread,
Dec 8, 2015, 11:31:01 PM12/8/15
to santhavasantham

On 9 December 2015 at 09:46, Siva Siva <naya...@gmail.com> wrote:
Are both spellings - மனோன்மனி - மனோன்மணி - accepted in Tamil?

Just curious!

மனோன்மணி--மட்டுந்தான் தமிழில் பயன்படுத்தப்படும் எழுத்தமைப்பு. 

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையால்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

அபிராமி அந்தாதி.

மனோன்மணீயம்--சுந்தரம் பிள்ளை இயற்றிய நாடகம்.

thevaaram.org மட்டுமே மனோன்மனி என்ற எழுத்தமைப்பைப் பயன்படுத்துகிறது போலும்.  தேடலில் கிடைத்தது:

Search results: மனோன்மணி occurs in 14 location(s)
Etexts from Project Madurai are linked to the PM website in appreciation of the volunteers.
==========================================================================

தேவாரம்: 5x91x1 ஏ இலானை என் இச்சை அகம்படிக்
தேவாரம்: 5x91x1 கோயிலானை குணப் பெருங்குன்றினை
தேவாரம்: 5x91x1 வாயிலானை மனோன்மணியைப் பெற்ற
தேவாரம்: 5x91x1 தாய் இலானை தழுவும் என் ஆவியே.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Vis Gop

unread,
Dec 9, 2015, 12:03:40 AM12/9/15
to santhav...@googlegroups.com
மனோன்மனீ ( மனோன்மனி ) என்பதே பெரும்பாலான இடங்களில் இறைவியைக் குறிக்கப் பயன்படும் சொல்.
மனோன்மனீ = மனத்தில் கிளர்ச்சி செய்பவள்; புத்துணர்ச்சி தருபவள்.
மனோன்மணி என்பது தவறென்று தோன்றவில்லை. ஆனால் பொருள் வேறுபடும். மனத்தைக் கொள்ளைகொள்ளும் (அள்ளும்) மணி (கல்) என்ற பொருள் பொருந்தலாம்.
நகுபோலியன், தேவராஜ் ஆகியோர் சரியான விளக்கம் தருவார்கள்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

N. Ganesan

unread,
Dec 9, 2015, 7:01:12 AM12/9/15
to சந்தவசந்தம்
It looks so. 

திருமந்திரம் - சை.சி.நூ. கழகப் பதிப்பு, சுமார் 25 இடங்களில் மனோன்மனி
என்கிறது. 

உரையிலும் மனோன்மனி என்று எழுதியுள்ளனர்.

இலங்கையில் ஒரு கோவில் மனோன்மனி அம்பாள் (கொக்குவில்) கோவில் என்றும்,
பலரும் பெயரை மனோன்மனி என்றும் கையெழுத்திடுகின்றனர்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 9, 2015, 7:25:51 AM12/9/15
to சந்தவசந்தம்

On Tuesday, December 8, 2015 at 8:16:12 PM UTC-8, siva siva wrote:
Today a word happened to catch my eye.

thevaaram.org uses the spelling மனோன்மனி in all songs where this word occurs.

The last letter is னி (and not ணி).
That spelling corresponds to what I see in Sanskrit dictionary:

 मनोन्मनी A form of Durgā. 

However, the Tamil dictionary uses a slight variation in the spelling - மனோன்மணி.
மனோன்மணி maṉōṉmaṇi , n. < manōn- manī. Pārvatī; பார்வதி. (பிங்.) 


னி > ணி நிலையை ஒரு அப்பர் தேவாரப்பாட்டில் காணலாம்.

காயமே கோயி லாகக் கடிமன மடிமை யாக
வாய்மையே தூய்மை யாக மனமணி யிலிங்க மாக
நேயமே நெய்யும் பாலா நிறையநீ ரமைய வாட்டிப்
பூசனை யீச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே. 

மனமணியிலிங்கமாதல்:- `மனோன்மனி` என்பது மனமனி என்று குறிக்கப்பட்டிருந்து, அதை மனமணி எனப் பிழைபட எழுதியிருக்கலாம் போலும். என்னை? முன்னர் மனத்தை அடிமையாகக் குறித்ததால், மீண்டும் அம்மனத்தையே இலிங்கமாகக் குறித்தல் செய்யார். சிவபிரானுக்கு மனம் இலிங்கமாகாது. மணிலிங்கம், அணிலிங்கம், மணியிலிங்கம் என்று எவ்வாறு கொளினும் மனத்தொடு பொருந்தாது. சிவனுக்குச் சத்திமூர்த்தியாதலின் மனோன்மனியை மனமனி என்று குறித்தருளினார்போலும். 

-----------------

 மனோன்மனி உடனுறை அநேகதங்காவதநாதர் - இமயமலையில்.

Siva Siva

unread,
Dec 9, 2015, 6:37:37 PM12/9/15
to santhavasantham
I think மனோன்மனி is the correct spelling. (A friend confirmed that it is మనోన్మని in Telugu usage as well).
Probably due to some common misconception, it may have been "corrected" as மனோன்மணி.

See this news item (which seems to spell with correct னகரம்!) and the Manomaniam Sundaranar Univ board!


Inline image 1

N. Ganesan

unread,
Dec 31, 2015, 10:31:15 AM12/31/15
to சந்தவசந்தம்


On Tuesday, December 8, 2015 at 11:03:40 PM UTC-6, visgop wrote:
மனோன்மனீ ( மனோன்மனி ) என்பதே பெரும்பாலான இடங்களில் இறைவியைக் குறிக்கப் பயன்படும் சொல்.
மனோன்மனீ = மனத்தில் கிளர்ச்சி செய்பவள்; புத்துணர்ச்சி தருபவள்.
மனோன்மணி என்பது தவறென்று தோன்றவில்லை. ஆனால் பொருள் வேறுபடும். மனத்தைக் கொள்ளைகொள்ளும் (அள்ளும்) மணி (கல்) என்ற பொருள் பொருந்தலாம்.
நகுபோலியன், தேவராஜ் ஆகியோர் சரியான விளக்கம் தருவார்கள்.
நல்வாழ்த்துக்களுடன்,
கோபால்.

கிவாஜ விளக்கம் தந்துள்ளார்:

”பெருமாட்டியின் இரண்டு நகில்களும் செப்பை உவமையாக உரைக்கும் வடிவுடையன; அன்னையின் மருங்குலை வருத்துவன.

செப்பு உரைசெய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல்.

புணர்முலை-இரண்டு தனங்கள்; காமேசுவரனோடு ஒன்றுகின்ற தனங்கள் என்றும் சொல்லலாம். இத்தகைய மருங்குலையுடைய மனோன்மணி என்று அம்பிகையைப் புகழ்கிறார்.

மனோன்மனி என்பது தமிழில் மனோன்மணி என்று வந்தது. லலிதாம்பிகையின் திருநாமங்களில் மனோன்மணி என்பதும் ஒன்று. அத்திருநாமத்துக்கு மனத்தை ஞான நிலைக்கு எழும்புகிறவள் என்பது ஒரு பொருள். ஸ்ரீவித்யாஸ்வரூபியாகிய அம்மை ஞானத்தை அடியார்களுக்கு அருள்பவள். ஞானப் பெட்டகமாகிய வடிவை உடையவள். தன்னை விரும்பிக் குழந்தையாகியவர்களுக்கு ஞானப்பாலை ஊட்டுகிறவள். ஞானத்தின் உறைவிடத்தையே தனமாகக் கொண்டவள் என்று நினைத்தவுடன், அவள் ஞான நிலைக்கு மனத்தை ஏற்றும் தகைமையினள் என்ற நினைவும் வந்து, அதனைக் குறிக்கும் திருநாமமாகிய மனோன்மணி என்பதும் நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றையும் சேர்த்து,

புணர்முலையால் வருந்திய வஞ்சி


மருங்குல் மனோன்மணி

என்று பாடுகிறார்.

புருவ மத்திக்குமேலே பிரமரந்திரத்திற்குக் கீழே உள்ள இந்து முதலிய எண்வகை நிலைகளில் இறுதிநிலை உன்மனி அல்லது மனோன்மனியாகும். அவ்விடத்தே உறைதலின் அன்னைக்கு மனோன்மணியென்ற திருநாமம் வந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. மனம் பற்றற்றுச் சலனமற்று இயங்காமல் நிற்கும் நிலையை உன்மனி என்று கூறுவர். அந்த மனோலயத்தை அருளுவதனால் இந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வதும் பொருந்தும்.”


தெரிவு:

நா. கணேசன்

 
Reply all
Reply to author
Forward
0 new messages