நெஞ்சுக்கு நீதி

7 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 5:43:28 PM (10 days ago) Nov 15
to santhavasantham

SAPNE (South Asian poets of New England) என்னும் அமைப்பு  நாளை நடத்தவிருக்கும் பன்மொழிக் கவியரங்கில் அடியேன் பங்கேற்றுப் படிக்கப்போகும் கவிதை இது. இந்தக் கவியரங்கின் Theme : Protest.  


( “இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்” என்னும் சந்தவசந்தக் கவியரங்கிற்காக அடியேன் அளித்த கவிதையின் கருத்துகள் சிலவற்றை இங்கே சந்தப் பா வடிவில் கொடுத்துள்ளேன்.)


நெஞ்சுக்கு நீதி

(எழுசீர்ச் சந்த விருத்தம்)


இனத்தி னால்நி றத்தி னால்பி ரிப்ப தற்கெ திர்த்திடு

நினக்கு ளேவெ றுப்பெ னுந்நெ ருப்பி னைத்த ணித்திடு

சினத்தி னால்செ கத்தி னைச்சி தைத்த போர்த டுத்திடு

அனைத்து யிர்க்கும் நன்மை நாடும் என்றன் அன்பு நெஞ்சமே! (1).


(பிரிப்பதற்கு = பிரிப்பதை - உருபு மயக்கம்; 

நினக்கு ளேவெ றுப்பெ னுந்நெ - இங்கே சந்தத்திற்காக ந் விரிந்தது)


பொய்பு ரட்டு வஞ்ச கம்பொ றுத்தி டாதெ திர்த்திடு

செய்தி ருட்டி னால்பொ ருள்கள் சேர்ப்ப தைத்த டுத்திடு

மெய்யு ரைத்து வாழ்ந்தி டாத வெற்ற ரைத்த விர்த்திடு

வைய மெங்கும் உண்மை இன்மை கண்டு வாடும் நெஞ்சமே! (2).


பொன்பொ ருள்பு கழ்க்கு மோது புன்மை யைப்ப ழித்திடு

தன்பொ ருள்த னக்கெ னும்செ ருக்கி னைத்த விர்த்திடு

வன்மு றைச்செ யல்க ளால்ம ருட்டலுக்கெ திர்த்திடு

இன்னல் தீர்ந்திவ் வையம் வாழ ஏங்கும்  என்றன்  நெஞ்சமே! (3).


பணத்தை யீட்டு நோக்கு டன்ப டிப்ப தைத்த விர்த்திடு

குணத்தில் ஏற்றம் ஒன்றி லாக்கு தர்க்கர் சொல்லெ திர்த்திடு

உணர்ச்சி ஒத்திவ் வையம் உன்கு டும்ப மென்று ரைத்திடு

இணக்க மோடு மாந்தர் வாழ எண்ணும் என்றன் நெஞ்சமே! (4).


மதங்கள் தம்முள் மோதும் இம்ம டத்த னம்ப ழித்திடு 

சிதைந்த பாரின் மேன்மை கள்தி ரும்பி டத்து டித்தெழு

சுதந்தி ரத்தின் வீழ்ச்சி யைத்த டுக்க வாள்சு ழற்றிடு

வதங்கி வாடும் மாந்தர் வாழ்வு கண்டு வாடும் நெஞ்சமே! (5).


- இமயவரம்பன் 

image1.jpeg

Ram Ramakrishnan

unread,
Nov 15, 2025, 9:22:11 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com
ஆக! அருமையான எழுசீர்ச் சந்த விருத்தம், அனாயாசமாய்ப் புனைந்தளித்தீர்.

வாழ்க நுந்தம் கவிப்பணி.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 16 Nov 2025, at 4:13 AM, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:



<image1.jpeg>

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/B402D691-12F5-4A19-BAA6-7DAB5C445C85%40gmail.com.

Siva Siva

unread,
Nov 15, 2025, 9:50:58 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com
இனிய பாடல்கள்.

ம ருட்டலுக்கெ திர்த்திடு
இன்னல் /

சொல்லெ திர்த்திடு

உணர்ச்சி ஒத்திவ் வையம் உன்கு டும்ப மென்று ரைத்திடு

இணக்க மோடு /

சந்தி விலக்கப்பட்டதா?

வி. சுப்பிரமணியன்

NATARAJAN RAMASESHAN

unread,
Nov 15, 2025, 10:02:22 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com
அருமை 
   —தில்லைவேந்தன்


இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 10:13:43 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி!

திர்த்திடு ன்னல்
திர்த்திடு உணர்ச்சி
ரைத்திடு ணக்க 

இங்கெல்லாம் சந்தத்திற்காகச் சந்தியை விலக்கியுள்ளேன். எதிர்த்திடு உரைத்திடு போன்ற சொற்கள் கட்டளை இடுவது போல் இருப்பதால் சந்தி தேவையில்லை என்று நினைத்தேன். இது சரியா என்று தெரிவிக்கவும். 

Arasi Palaniappan

unread,
Nov 15, 2025, 10:14:19 PM (10 days ago) Nov 15
to சந்தவசந்தம்
மிக அருமை. "அச்சமில்லை அச்சமில்லை" என்னும் பாரதி பாடலை ஒத்திருக்கிறது!

--
image1.jpeg

இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 10:14:21 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 10:16:03 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்

Siva Siva

unread,
Nov 15, 2025, 10:17:48 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com
Yes, I think that possibly is permitted.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Nov 15, 2025, 10:18:51 PM (10 days ago) Nov 15
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you

இமயவரம்பன்

unread,
Nov 16, 2025, 6:20:02 AM (10 days ago) Nov 16
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com
திரு. சிவசிவா அவர்கள் எனக்குத் தனியாகத் தெரிவித்த பிற திருத்தங்களின் படி மாற்றிய கவிதை:

நெஞ்சுக்கு நீதி


இனத்தினால் பிரித்திடும் பிணக்கெலாம் எதிர்த்திடு

சினத்தினால் செகத்தினைச் சிதைத்தபோர் தடுத்திடு

அனைத்துமா னிடர்க்கும்உன்றன் அன்பெலாம் அளித்திடு 

நினைப்பெலாம் அறஞ்சிறந்(து) ஒளிர்ந்துநின்ற நெஞ்சமே! (1).


பொன்பொருள் புகழ்க்குமோது பொய்ம்மைவாழ்(வு) ஒழித்திடு

தன்பொருள் தனக்கெனும் செருக்கெலாம் தவிர்த்திடு

வன்முறைத் தனம்கெடுத்(து) வஞ்சகம் தடுத்திடு

இன்னல்தீர்ந்திவ் வையம்வாழ ஏங்கும்என்றன்  நெஞ்சமே! (2).


பணத்தையீட்டு நோக்குடன் படிப்பதைத் தவிர்த்திடு

குணத்தில்ஏற்றம் ஒன்றிலாக் குதர்க்கர்சொல் பழித்திடு

உணர்ச்சியொன்றி வையம்உன் குடும்பமென்று உரைத்திடு

இணக்கமோடு மாந்தர்வாழ எண்ணும்என்றன் நெஞ்சமே! (3).


மதங்களுக்குள் மோதலாம் மடத்தனம் பழித்திடு 

சிதைந்தபாரின் மேன்மைகள் திரும்பிடத் துடித்தெழு

சுதந்திரத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவாள் சுழற்றிடு

நிதம்சகத்தில் நீதியின்மை கண்டுவாடும் நெஞ்சமே! (4).


 - இமயவரம்பன் 

On Nov 15, 2025, at 10:18 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:

Thank you

இமயவரம்பன்

unread,
Nov 16, 2025, 2:36:16 PM (9 days ago) Nov 16
to santhavasantham
இன்று SAPNE கவியரங்கில் அடியேன் கலந்துகொண்டு படித்த இக்கவிதையின் இறுதி வடிவம்:

அன்புடன்,
இமயவரம்பன் 

Reply all
Reply to author
Forward
0 new messages