ஓடுவேன் இனும் ஓடுவேன்

11 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Feb 3, 2026, 8:16:30 PM (3 days ago) Feb 3
to santhavasantham

                  என் மனைவி பானு மறைந்து இன்றோடு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

ஈரைந் தாண்டுகள் ஏகி விட்டன
                என்னை விட்டவள் ஏகியே
வேரைச் சீரெனப் பாது காத்தவள்
                விட்டுச் சென்றனள் என்செய?
கூரை மீதிலே பொத்தல் பற்பல
                கூடின சரி யாயின
தேரை விட்டொரு தெய்வம் போனபின்
                 தேரைச் சுற்றியே  பார்க்கிறேன்

 

காலம்  இங்குக்க ழிந்து விட்ட
                கணக்கை எண்ணியே பார்க்கிறேன்
ஓலம் இட்டுநான் ஓய்ந்து போகவோ
                ஓடுவேன் இனும் ஓடுவேன்
ஞாலம் செய்திடும் நாட்டி யந்தனில்
                நானும் ஆடியே பார்க்கிறேன்
நீல வானினை நித்தம் காண்கிறேன்
                நேசமந்த நெ  ருப்பிலே

 

புறத்தில் செய்வது மட்டு மேயொரு
                 பூசனை எனச் சொல்வதோ
முறத்தி லேபுடை மூர்க்கம்  தன்னிலும்
                முந்தி ஆடுமே தானியம்
மறத்தல்  ஏதும னத்துள் வாழ்கையில்
                 மாளிகை புறத் தில்லையே!
பறக்கு மட்டும் பறந்து பார்க்கலாம்
                பாதையில் தடை இல்லையே!

 

இலந்தை

3-2-2026


image.png


இலக்கணம்.:  எழுத்தெண்னிக்கை உண்டு. நேரசையில் தொடங்கினால் அடிக்குப் பதினெட்டு எழுத்துகள்.

நிரையசையில்  தொடங்கினால் அடிக்குப் பத்தொன்பது எழுத்துகள்

Siva Siva

unread,
Feb 3, 2026, 8:19:40 PM (3 days ago) Feb 3
to santhav...@googlegroups.com
உங்கள் நினைவில் வாழ்கின்றார் !

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 4, 2026, 7:59:48 PM (2 days ago) Feb 4
to santhav...@googlegroups.com
தேரை விட்டொரு தெய்வம் போனபின்

                 தேரைச் சுற்றியே  பார்க்கிறேன்

 ஒவ்வொரு சொல்லும் உங்கள்  அன்புத் துணைவியின் பிரிவுத்துயரம் இன்னும் உங்கள் மனத்தில்  இருப்பதையும் உங்கள் இருவருக்கிடையே இருந்த/இருக்கும் அன்பின் ஆழத்தையும் வெளிப்படுத்துகிறது.  நங்கநல்லூரில்  உங்கள் இல்லத்திற்கு வரும்போதெல்லாம்  அவர் விருந்து பரிமாறுவது நினைவுக்கு வருகிறது. 

அன்புடன், அனந்த் 


On Tue, Feb 3, 2026 at 8:16 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

Subbaier Ramasami

unread,
Feb 4, 2026, 9:26:05 PM (2 days ago) Feb 4
to santhav...@googlegroups.com
நன்றி

On Wed, Feb 4, 2026 at 6:59 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
தேரை விட்டொரு தெய்வம் போனபின்

                 தேரைச் சுற்றியே  பார்க்கிறேன்

Subbaier Ramasami

unread,
Feb 4, 2026, 9:26:59 PM (2 days ago) Feb 4
to santhav...@googlegroups.com
நன்றி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOCqY1jsR%2BQcerKekCfuhPL%3D6V6PA8feEW8_43uwDrMTw%40mail.gmail.com.

K.R. Kumar

unread,
Feb 5, 2026, 9:01:34 AM (yesterday) Feb 5
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார்,

பானு மாமியின் சிரித்த முகத்துடன் அன்பான வரவேற்பும் உபசரிப்பும் கண்களிலும் நெஞ்சத்திலும் இன்னும் நிற்கின்றன.

குமார்(சிங்கை)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages