பத்துப்பாட்டில் சிறந்த பாடல் வரிகள்

625 views
Skip to first unread message

Niranjan Bharathi

unread,
May 10, 2021, 12:50:14 PM5/10/21
to santhav...@googlegroups.com
வணக்கம்,

சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரை எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள பல பாடல்கள் பரவலாக அறியப்பட்டிருக்கின்றன. புகழடைந்திருக்கின்றன

உதாரணத்துக்கு ,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
"செம்புலப் பெயல் போல் அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே"
"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி"
"நல்லை அல்லை நெடு வெண்ணிலவே"

இன்னும் இன்னும் பல.

இதே போல் பத்துப்பாட்டு இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள சிறந்த பாடல் வரிகளை அறிய விழைகிறேன்.

ஆன்றமைந்த பெரியோர் அந்தச் சிறந்த பாடல் வரிகளை பகிர மனமார வேண்டுகிறேன்.

அன்புடன்,
நிரஞ்சன் பாரதி

Saidevo ramaNi

unread,
May 10, 2021, 1:14:06 PM5/10/21
to சந்தவசந்தம்
பட்டினப்பாலை மேற்கோள்கள்

வான்பொய்ப்பினும் தான்பொய்யா 5
மலைத்தலிய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்

தமவும் பிறவும் ஒப்ப நாடி,
கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது, 210
பல் பண்டம் பகர்ந்து வீசும்,
தொல் கொண்டி, துவன்று இருக்கை
Reply all
Reply to author
Forward
0 new messages