05.07. இடைச்சொல் வெண்பா: நான்காம் வேற்றுமை: கு (ஆறு பொருள்களில்)
நான்காம் வேற்றுமை உருபு கு, ஆறு பொருள்களில் அமையும்.
• கொடை: புலவர்க்குப் பொன்னளித்தான்
• நேர்ச்சி (நட்பு): இராமனுக்கு நண்பன் குகன்
• தகவு (தகுதி): முகத்திற்கு அழகு கண்கள்; தாலிக்குத் தங்கம்.
• பொருட்டு: கூலிக்கு வேலை
• முறை (உறவு): தந்தைக்கு மகன்
• நான்காம் வேற்றுமையின் கு உருபு
• மேற்கண்ட ஆறு பொருள்களிலும் அமைவதாக
• ஓர் அளவியல் அல்லது பஃறொடை வெண்பா புனையலாம்.
• ஒரு பொருள் ஒரு முறை மட்டுமே அமைதல் வேண்டும்.
• உருபு அமையும் பொருள்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
05.07. இடைச்சொல் வெண்பா: நான்காம் வேற்றுமை: கு (ஆறு பொருள்களில்)
வாழ்வதற்குத் தந்தீர் வசதிகள் மெய்ப்பொருள்
ஆழ்வதற்குத் தந்தீரோர் ஆசானும் தாளிணை
பற்றற்குத் தந்தீர் பகுத்தறிவு ஊழ்வினை
குன்றற்குத் தந்தீர் குறையுணரும் உள்ளத்தை
சென்மப் பிணிக்கு மருந்தென் றருள்வீர்
சிறைப்படற்குத் தந்த சிறுமேனி கொள்வீர்
இறையுமக்குப் பிள்ளையன்றோ நான்? ... 1
வேற்றுமை உருபு கு-வின் பொருள்கள் முறையே:
கொடை, நட்பு, தகுதி, பொருட்டு, பகை, அதுவாதல், உறவு.
மலருக்குத் தேன்சொந்தம் வண்டுக்குப் பூவாம்
நிலவுக்கு வான்சொந்தம் நேர்வழிக்கு நாலறம்
உள்ளத்திற் குண்மை உளவுக்கு வாய்மொழி
கள்ளமனி தற்குக் கயம். ... 2
[உளவு: இரகசியம்; கயம்: கீழ்மை, கீழ்மக்கள்]
வேற்றுமை உருபு கு-வின் பொருள்கள் முறையே:
கொடை, நட்பு, தகுதி, பொருட்டு, அதுவாதல், பகை, முறை (உறவு).