வெண்பா - ஈற்றுச்சீர் - some Q&A

27 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jun 6, 2024, 10:41:50 AM6/6/24
to santhavasantham

வெண்பா ஈற்றுச்சீர்:


Background:

====

நான் முன்னர் எழுதிய வெண்பாக்களில் ஒன்று:

2017-09-21

முற்றெதுகையால் வந்த முடுகு வெண்பா

------------------------------

1)

மின்னலொத்த மென்மருங்குல் அன்னையஞ்சக் குன்றசைத்த

தென்னிலங்கை மன்னரற்ற முன்னடர்த்துப் பின்னளித்த

பொன்னிறத்தன் வன்னிமத்தம் சென்னிவைத்த நன்னிலத்தன்

இன்னலத்தை உன்னிநித்தம் பன்னு.


அரசி. பழனியப்பன் felt that the final seer - "பன்னு" - is not permitted as per veNba rules.

My clarifying question - "அத்தகைய சொல் வரக்கூடாது என்று ஏதேனும் இலக்கணக் கட்டுப்பாடு உள்ளதா? இருப்பின் சொல்க."


On Thu, Jun 6, 2024 at 3:21 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:

தகவு, கதவு, அறிவு (முறையே தகபு,கதபு, அறிபு) எனப் பிறப்பு வாய்பாடு ஆகும் என்ப!

ஆண்டாளைப் போற்றும்

"சூடிக் கொடுத்தாளைச் சொல்லு" என்பது சொல் என்ற நாள் வாய்பாட்டிலே நிற்கும் என்ப!

ஈற்றுச்சீர் முற்றியலுகரமாக இருக்க வேண்டும் என்ப!


My follow-up:

பாடலில் பிழை என்றால் திருத்துவதில் எனக்குத் தயக்கம் என்றும் இல்லை.

ஆனால் பிழை என்று ஐயந்திரிபறத் தெளிந்துகொள்ள விரும்புவேன்.


/ தகவு, கதவு, அறிவு (முறையே தகபு,கதபு, அறிபு) எனப் பிறப்பு வாய்பாடு ஆகும் என்ப! /

இதனை யார் எங்கே சொல்லியிருக்கின்றார்கள்? மேலும் அறிந்துகொள்ளவிரும்புகின்றேன்.


வாவா மணிவாயால் மாவின் தளிர்கோதிக்

கூவா திருந்த குயிற்பிள்ளாய் - ஒவாதே

பூமாம் பொழில்உடுத்த பொன்மதில்சூழ் காளத்திக்

கோமான்வர ஒருகாற் கூவு.


இப்பாடலில் கூவு என்பது சரியா?

ஆம் என்றால் எவ்வாறு?


He replied:

கூவு, தூவு

ஈற்றுச் சீராக அமையலாம்.

தங்களுக்கு "பன்னு" என்னும் சொல் சரியென்று பட்டால் அப்படியே ஈற்றுச் சீராகக் கொள்க.

=======


https://www.tamilvu.org/slet/l0O00/l0O00pd1.jsp?bookid=278&pno=221


https://www.tamilvu.org/slet/l0O00/l0O00pd1.jsp?bookid=278&pno=222

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல்

316.

இருவகை யுகரமோ டியைந்தவை வரினே

நேர்பு நிரைபு மாகு மென்ப.

--ள் : இருவகை யுகரமென்பன: குற்றுகர முற்றுகரங்கள்; அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒரு சொல் விழுக்காடுபட இயைந்துவரின் நிறுத்தமுறையானே நேரசையோடொன்றிவந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றி வந்த முற்றுகரமும் நேர்பசையெனப்படும்; நிரையசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் என்றவாறு.

....



317.

குறிலிணை யுகர மல்வழி யான.


என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர(ம்) நேர்பசை மூன்றும் நிரையசை நான்குமாயின.


உதாரணம்: வண்டு, நாகு, காம்பு எனவும், வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு எனவும் இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு.


இனி, முற்றுகரம் இரண்டசைப் பின்னும் வருங்காற் குறிலொற்றின் பின்னும், நெடிற்பின்னுமென நேரசைக்கு இரண்டல்லதாகாது. நிரையசைக்கண்ணும் குறிலிணைப்பின்னும் குறினெடிற் பின்னுமல்லதாகாது.


உதாரணம்: 2மின்னு, நாணு எனவும், உருமு, குலாவு எனவும் வரும். வாழ்வு, தாழ்வு என நெடிலொற்றின்பின்னும் முற்றுகரம் வந்ததாலெனின்,--அவை ஆகாவென்பதூஉம் இக்காட்டிய நான்குமே ஆவனவென்பதூஉம் முன்னர்,


2. மின்னு--குறிலொற்றின்பின் வந்தது. நாணு--நெடிற் பின் வந்தது. உருமு--குறிலிணைப்பின் வந்தது. குலாவு--குறினெடிற்பின் வந்தது. ஒரு சாரார் என்றது சிறுகாக்கை பாடினியார் முதலானோரை. அமையாதே--அமையாதா?


==========


மேற்காணும் இலக்கண விளக்கம் எனக்கு ஓரளவே புரிந்தது. "மின்னு" முதலிய சொற்கள் வெண்பா ஈற்றில் வரலாமா வரக்கூடாதா?

தெளிவாக்கினால், அதன்படி நான் முன் எழுதிய வெண்பாவைத் தக்கபடி திருத்த உதவும்.


V. Subramanian

Siva Siva

unread,
Jun 6, 2024, 3:26:54 PM6/6/24
to santhavasantham
Came across this writeup.

V. Subramanian
===

https://iaraindia.com/wp-content/uploads/2019/07/6.pdf


தமிழாய்வுச் சங்கமம் ~ பன்னாட்டு ஆய்விதழ்
பகுதி VI, பதிப்பு 17 - ஏப்ரல் - ஜூன் 2019
Formally UGC Approved Journal (64089), C Author

வெண்பாவின் ஈற்றுச்சீரும் ஈற்றயற்சீரும்
முனைவர்.மு.கஸ்தூரி
உதவிப் பேராசிரியர் - தமிழ்த்துறை
தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, சென்னை


Concluding paragraph of this article.

நிறைவாக

இக்கட்டுரையில் வெண்பாவின் ஈற்றுச்சீர் குறித்தும் ஈற்றயற்சீர் குறித்தும் இலக்கண நூல்களில் உள்ள விடயங்களை எடுத்துக்கொண்டு அதனை வரலாற்று நிலையில் இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்த நிலையில் சில முடிவுகள் பெறப்படுகின்றன.


வெண்பாவின் ஈற்றுச்சீரில் நேர்பு, நிரைபாக வரும் காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் குற்றியலுகரங்கள் வருவதுதான் மரபு என்று குறிப்பிடுவதும் முற்றியலுகரங்கள் வருவது இலக்கணப் பிழை என்று குறிப்பிடுவதும் தவறான ஆய்வு முடிவுகள். உண்மையில் முற்றியலுகரம் வருவது அரிது. இருவகை உகரமும் வரும் எனத் தொல்காப்பியம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.


தொல்காப்பியர் குறிப்பிடும் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்ற வாய்பாடுகள் தெளிவாக இருக்க நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகள் தெளிவின்றி அமைந்துள்ளது. மேலும் வெண்பாவின் ஈற்றுச்சீர் குற்றியலுகரத்தால் மட்டும் தான் முடிய வேண்டும் என்பது போலக் காசு, பிறப்பு வாய்பாடுகள் அமைந்துள்ளது. ஆனால் தொல்காப்பியரின் நேர்பு, நிரைபு இருவகை உகரங்களையும் தனக்குள் கொண்டுள்ளது.


ஒன்றைக் குறிப்பதற்கு வாய்பாட்டைப் பயன்படுத்துங்கால் அது முன்னதைவிட மிகவும் தெளிவான நிலையில் அமைந்திருந்தால் அது உருவானதற்கான பயனைப் பெற்றுவிடும். தொல்காப்பியரின் நேர், நிரை, நேர்பு, நிரைபு கோட்பாடுகளே தெளிவாக இருக்கும் நிலையில் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகள் தேவையற்றது என்று தோன்றுகிறது. நேர், நிரை என்பவை எந்த அடிப்படையில் வரும் என்பதற்கு அடிப்படையைப் புரிந்துகொண்டால் நேர், நிரை, நேர்பு, நிரைபு என்ற வாய்பாடுகளில் காணப்படும் தெளிவு நாள், மலர், காசு, பிறப்பு என்பவற்றில் இல்லை என்பதை உணரமுடியும்.

வெண்பாவின் ஈற்றயற்சீர் காய்ச்சீராக வரவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை. அவருடைய அசை கோட்பாட்டில் மூவசைச்சீர்களான காய்ச்சீர் வருவது அரிதாக அமைந்துள்ளது. இந்நிலையில் அவர் இயற்சீர் வருவதை மட்டும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

===

GOPAL Vis

unread,
Jun 6, 2024, 10:51:19 PM6/6/24
to santhav...@googlegroups.com
Very valuable discussion! Humbly awaiting a guiding conclusion.
gopal.

On Fri, Jun 7, 2024 at 12:56 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Came across this writeup.

V. Subramanian
===

https://iaraindia.com/wp-content/uploads/2019/07/6.pdf


தமிழாய்வுச் சங்கமம் ~ பன்னாட்டு ஆய்விதழ்
பகுதி VI, பதிப்பு 17 - ஏப்ரல் - ஜூன் 2019
Formally UGC Approved Journal (64089), C Author

வெண்பாவின் ஈற்றுச்சீரும் ஈற்றயற்சீரும்
முனைவர்.மு.கஸ்தூரி
உதவிப் பேராசிரியர் - தமிழ்த்துறை
தருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி, சென்னை

Concluding paragraph of this article.

நிறைவாக

இக்கட்டுரையில் வெண்பாவின் ஈற்றுச்சீர் குறித்தும் ஈற்றயற்சீர் குறித்தும் இலக்கண நூல்களில் உள்ள விடயங்களை எடுத்துக்கொண்டு அதனை வரலாற்று நிலையில் இலக்கியங்களோடு ஒப்பிட்டு ஆராய்ந்த நிலையில் சில முடிவுகள் பெறப்படுகின்றன.

வெண்பாவின் ஈற்றுச்சீரில் நேர்பு, நிரைபாக வரும் காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளில் குற்றியலுகரங்கள் வருவதுதான் மரபு என்று குறிப்பிடுவதும் முற்றியலுகரங்கள் வருவது இலக்கணப் பிழை என்று குறிப்பிடுவதும் தவறான ஆய்வு முடிவுகள். உண்மையில் முற்றியலுகரம் வருவது அரிது. இருவகை உகரமும் வரும் எனத் தொல்காப்பியம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

. . . . . . . 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jun 7, 2024, 2:12:29 AM6/7/24
to santhav...@googlegroups.com

பண்டைய இலக்கண நூல்களில் தரப்படும் செய்யுள் விதிகள் பின்னர் வரும் இலக்கியத்தி 

தொல்காப்பியத்தில் முற்றியலுகர ஈற்றுச்சீர் வெண்பாவில் வரலாம் எனக் குறிப்பிட்டிருந்தாலும்,  அதன் பின்னர் வந்த நல்வழி, மூதுரை, திருக்குறள், நளவெண்பா போன்ற நூல்களில் முற்றியலுகர ஈற்றுச்சீரைக் காணல் அரிது.   ’இலக்கண விளக்கம்’ என்னும் தமிழ் இலக்கண நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது. (தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு. திருவாரூரைச் சேர்ந்த வைத்தியநாத தேசிகர் என்பவர் இந்நூலை இயற்றினார்[1]. இது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.). அண்மையில் வெளிவந்த  மு. அருணாசலம் தொகுத்த 'தமிழ் இலக்கிய வரலாறு’, தி.வே. கோபாலையர், ரா.பி. சேதுப்பிள்ளை  ஆகியோரின் நூல்களும் பேராசிரியர் பசுபதி அவர்களின் ’கவிதை இயற்றிக் கலக்கு’ நூலும் மிக்க பயன் தருவன.       

From: இலக்கண விளக்க யாப்பியல் – 1 (https://www.vallamai.com/?p=82004)

– ம.பிரபாகரன்

 தொல்காப்பியச் செய்யுளியலையும் (கி.பி 2) இலக்கணவிளக்கச் செய்யுளியலையும் (கி.பி 17) ஒப்பிட்டு இலக்கணவிளக்கத்தினுடைய செய்யுளியல் வழியை (Root) அடையாளப்படுத்துவதை, இக்கட்டுரை தன்  நோக்கமாகக் கொள்கிறது. அங்ஙனம் அடையாளப்படுத்துவதன் வழி இடைக்கால யாப்பிலக்கண வரலாற்றிற்குப் பயன்படும் செய்திகளைத் தரவல்லதாக இக்கட்டுரை அமையும்.

தொல்காப்பியத்தையும் இலக்கணவிளக்கத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்கையில் அதற்கு இடைப்பட்ட நூல்களை விட்டுவிட்டு ஒப்பீடு செய்யமுடியாது. இடைப்பட்ட நூல்களைக் கணக்கில் கொண்டாலே இலக்கணவிளக்கத்தின் வழியை (Root) கண்டறிய முடியும். அவ்வகையில் தொல்காப்பியத்திற்குப் பின்னும் இலக்கணவிளக்கத்திற்கு முன்னும் உள்ள யாப்புச் சிந்தனைப்பள்ளிகளான யாப்பருங்கல மரபும், வீரசோழிய மரபும் இங்குக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இலக்கண விளக்கம், யாப்பருங்கலக்காரிகையைப் பின்பற்றுகிறது என்று யாப்பிலக்கண வரலாற்று நிலையில் செய்யப்பட்ட  முன்னைய ஆய்வுகள் பொதுவாகக்  கூறினாலும், இலக்கண விளக்கத்தை மூலத்தையும் உரையையும் இணைத்து நோக்கி அதன் வழியை முந்தைய ஆய்வுகள் சுட்டவில்லை என்றே கூறலாம். எனவே இக்கட்டுரை இலக்கண விளக்கத்தை மையப்படுத்தியதாக அமைகிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCM2M7CZsLCA3%2BomO2ykZczF8hp3EMCa-TqaSpF0w8f-pg%40mail.gmail.com.

வெண்கொற்றன்

unread,
Jun 7, 2024, 6:50:11 AM6/7/24
to சந்தவசந்தம்
வணக்கம்,

இலக்கண-இலக்கியங்களை அலசும் புலவர் பெருமக்களுக்கிடையே அடியேன் எனது புரிதலையும் சொல்ல விழைகிறேன்:

‘நேர்பு’, ‘நிரைபு’ என்பனவற்றையும் ஓரசையாகவே பார்க்க வேண்டும் என்பதே இலக்கணக்காரர்களின் குறிக்கோள்.

வெண்பாவின் ஈற்றுச்சீர் என்றல்ல, பொதுவாகவே தமிழ்ச்சொற்களில் பெரும்பாலானாவை ஓரசைச் சொற்கள் (monosyllabic), தமிழின் இந்தப் பண்பைக் கொரிய மொழியோடு ஒப்பிடும் சில மொழியியல் ஆய்வுகள் உள்ளன!

ஓரசை என்ற கணக்கில் நேர்பு, நிரைபு சொற்களையும் சேர்த்தால்தான் அவை பெரும்பான்மையாகின்றன. தமிழ் அடிப்படைஎண்கள் சிறந்த (1-8) எடுத்துக்காட்டு!

வெண்பாவின் ஈற்றடியும் (சிந்தடியாக), ஈற்றுச்சீரும் (அசைச்சீராக) அளவில் குறைந்து வருவது அவ்விடத்தில் ஓரழுத்தம் தருவதற்காக என்பது எனது புரிதல்.

ஆங்கிலக் கவிதையில் ‘செசுரா’ (cesura) என்ற இடைவெளி இவ்வகையில் அமையும். நேரிசை ஆசிரியப்பாவில் இந்த இடைவெளி ஈற்றயலில் அமைகிறது. இவற்றின் இனங்களும் இப்பண்பை ஒட்டியே அமைகின்றன.

எனவே, நாம் கருத்தில் கொள்ள வேண்டியது ஈற்றுச்சீரில் அந்த இடைவெளி, அசைக்குறைவு இருக்கிறதா இல்லையா என்பதைத்தான்.

கேள்விக்குரிய அச்சொல்லை அடுத்து உயிரெழுத்தைப் புணர்த்திப் பார்த்து, அது குற்றியலுகரத்தைப் போல (உக்குறள் உயிர்விட்டோடி, இயல்பாக)ப் புணர்கிறது என்றால் ஏற்கலாம், இல்லை (உடம்படுமெய் தேவைப்படுகிறது) என்றால் விடுக்கலாம்!

கதவு+அடைத்தான் = கதவடைத்தான்

மின்னு+இடை = மின்னிடை (இங்கே, ‘மின்’ என்ற அடிச்சொல்லே நிலைமொழியாக நின்று, ‘தன்னொற்றிரட்டல்’ என்ற வழியில் புணர்ந்தது, மின்னு, பண்ணு முதலியவற்றைப் பேச்சு வழக்கிலேயே பெரும்பாலும் ஈற்றுகரத்தோடு வழங்குகிறோம்!)

நன்றி!

வெள்ளி, 7 ஜூன், 2024அன்று 11:42:29 AM UTC+5:30 மணிக்கு VETTAI ANANTHANARAYANAN எழுதியது:

Siva Siva

unread,
Jun 7, 2024, 3:05:14 PM6/7/24
to santhav...@googlegroups.com

கி.வா.- கவி பாடலாம் -

பக்கம் 233 - வினா விடைகள்

38.
வினா:

தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக்

கண்ணாரக் காணக் கதவு.

இதில் ஈற்றுச்சீர் வெண்பா இலக்கணப்படி அமைய வில்லையே. காரணம் என்ன?


விடை:

நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகள் நான்கில் கதவு என்பது பிறப்பு என்னும் வாய்பாட்டில் அமைந்தது. குற்றியலுகரம் வருவதே பெரும்பான்மை யாயினும் சிறுபான்மை முற்றுகரமும் வரும்.

***


பசுபதி - கவிதை இயற்றிக் கலக்கு -

பக்கம் 78

12 வெண்பாவின் ஈற்றடி

நேர்பு .... பெரும்பான்மை குற்றியலுகரம்தான் வரும். ... சிறுபான்மை முற்றியலுகரமும் வரும். (காட்டுகள் - சொல்லு, எண்ணு, கதவு).

=========

V. Subramanian

Siva Siva

unread,
Jun 7, 2024, 4:16:30 PM6/7/24
to santhav...@googlegroups.com

யாப்பருங்கலக்காரிகை

மூலமும்

குணசாகரர் உரையும்


சிந்தியல் வெண்பா, வெண்பாவின் ஈற்றடி


25.

நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்

நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில் வெள்ளைக்

கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற

சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே.

- கை. நேரிசைச் சிந்தியல் வெண்பாவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவு மாமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறு முணர்த்....று.

....

....

https://www.tamilvu.org/slet/l0100/l0100pd2.jsp?bookid=4&pno=83

"ஒளிசேர் பிறப்பும் ஒண்காசும்" என்று சிறப்பித்தவதனால் காசு பிறப்பு என்னுங் குற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் முடிவதுபோல முற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் இறுதியாக வருவனவுமுள ஒருசார் வெண்பா எனக் கொள்க.


வரலாறு


'(8) மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்

அஞ்சொன் மடவாட் கருளு.'

இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றிய லுகர மீறாக இற்ற வெண்பா.


' 7 இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன்

புனைமலர்த் தாரகலம் புல்லு.'

இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா.

=========

Subbaier Ramasami

unread,
Jun 8, 2024, 8:58:31 AM6/8/24
to santhav...@googlegroups.com
மின்- என்றால் மின்னலைக் குறைக்கும். பெயர்
மின்னு என்றால் மின்னுதல் என்ற வினையைக் குறிக்கும். இரண்டும் ஒரே மாதிரிப் புணராது. குற்றியலுகரத்தில் இது மாறுபடும்
நோக்கு என்பது வினையாகவும் பெயராகவும் இருக்கும்.

மின்னு போன்றசொற்கள் ஈற்றுச் சீராக் வேன்பாவில் பயன்படுத்தப்பட்டிருப்பினும் ஒரோவழிதான் வரலாம். அது வராமல் தவிர்க்கக்கூஉமென்றால் வலிந்து வரவைக்க வேண்டாம்

இலந்தை

Siva Siva

unread,
Jun 8, 2024, 9:08:46 AM6/8/24
to santhav...@googlegroups.com
I thank Arasi Palaniappan for raising this topic.
My thanks to all who provided additional information and insight.

The following is a summary of my understanding of the information I gathered during the process of looking up several references to learn more about the permissible patterns for veNba last seer.

My summary:

வெண்பாவின் ஈற்றுச்சீர் - நேர், நிரை, உகர ஓசையில் முடியும் மாச்சீர் (குற்றியலுகரம் முற்றியலுகரம் எதுவும் வரலாம்) - என்ற இந்த அமைப்புகளில் ஒன்றாக இருக்கவேண்டும் .

(தமிழில் முற்றியலுகரத்தில் முடியும் சொற்கள் குறைவாக இருப்பதால் வெண்பா ஈற்றிலும் சிறுபான்மையே முற்றியலுகரம் வரக் காணலாம்).


நேர் / நிரை - இவற்றைத் தொடர்ந்து உகர ஓசையுடைய ஓரெழுத்து வரும்பொழுது அவை தொல்காப்பியத்தில் நேர்பு, நிரைபு என்று குறிப்பிடப்படுவன.

நேர்பு / நிரைபு - இந்த அமைப்பில் அலகிடப்படும் சொல் (/ சொற்றொடர்) வல்லின உயிர்மெய்யில் (கு, சு, டு, து, பு, று) முடிந்தால் அது குற்றியலுகரம்; இடையின / மெல்லின உயிர்மெய்யில் (லு, வு, ழு, ளு, ணு, மு, னு, இத்யாதி) முடிந்தால் அது முற்றியலுகரம்.


V. Subramanian

On Sat, Jun 8, 2024 at 8:58 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
மின்- என்றால் மின்னலைக் குறைக்கும். பெயர்
மின்னு என்றால் மின்னுதல் என்ற வினையைக் குறிக்கும். இரண்டும் ஒரே மாதிரிப் புணராது. குற்றியலுகரத்தில் இது மாறுபடும்
நோக்கு என்பது வினையாகவும் பெயராகவும் இருக்கும்.

மின்னு போன்றசொற்கள் ஈற்றுச் சீராக் வேன்பாவில் பயன்படுத்தப்பட்டிருப்பினும் ஒரோவழிதான் வரலாம். அது வராமல் தவிர்க்கக்கூடுமென்றால் வலிந்து வரவைக்க வேண்டாம்

இலந்தை


Mahesh Krishnamurthy

unread,
Jun 8, 2024, 9:09:00 AM6/8/24
to santhav...@googlegroups.com
தகவலுக்கு நன்றி..
அருகி வந்தாலும் முற்றுகைப் இலக்கணம் சரி என விளங்கியது..



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2024, 11:58:59 AM6/8/24
to santhav...@googlegroups.com
In short, my understanding from the discussion is to avoid முற்றியலுகர ஈற்றடி ஈற்றுச்சீர் in வெண்பா. Is this correct?

Sorry to write this in English and Tamil letters.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 8, 2024, at 18:38, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jun 8, 2024, 12:37:36 PM6/8/24
to santhav...@googlegroups.com
I will state it this way.
One does not have to worry about what type of "u" comes at the end of a veNbA. One should go with the word that will be best suited for the message of that song. 
(i.e. Avoid using a less suited word just because it is a kutRiyalugaram - if a mutRiyalugaram word is deemed ideal for the message of the song).
Given the low frequency of mutRiyalugram words in Tamil, occurrence of mutRiyalugaram in the end seer will naturally be a low frequency occurrence.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 8, 2024, 12:39:37 PM6/8/24
to santhav...@googlegroups.com
Well summarized.

Thanks very much.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 8, 2024, at 22:07, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages