ஈற்றடி: நற்றாளைப் போற்று நயந்து

15 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jun 17, 2026, 1:39:33 PM (8 days ago) Jun 17
to santhavasantham


கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த வெண்பா

ஈற்றடி:

நற்றாளைப் போற்று நயந்து

வெண்பா

கற்றைச் சடைமுடிமேல் கங்கையணி நாதனவன்
நற்பவம் நல்கும் நடராசன்சிற்சபையோன்
எற்றைக்கும் வற்றாத சொற்குவையால் பற்றற்றான்
நற்றாளைப் போற்று நயந்து.

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
17/06/2026


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Siva Siva

unread,
Jun 17, 2026, 3:00:13 PM (8 days ago) Jun 17
to santhav...@googlegroups.com
நற்பவம்  நல்கும்  / = ?

வி. சுப்பியமணியன்

Ram Ramakrishnan

unread,
Jun 17, 2026, 3:02:02 PM (8 days ago) Jun 17
to santhav...@googlegroups.com
பவம் என்பது பிறப்பைக் குறித்தது என்றறிகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 17, 2026, at 15:00, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPbeCqc6Ki7gvxjUV24NgVebP4SooP2CQ43PCCiAn-5VA%40mail.gmail.com.

Siva Siva

unread,
Jun 17, 2026, 3:06:53 PM (8 days ago) Jun 17
to santhav...@googlegroups.com
ஆம்.

Parthasarathy S

unread,
Jun 17, 2026, 10:30:01 PM (7 days ago) Jun 17
to சந்தவசந்தம்
_கொடுத்த ஈற்றடிக்கு விடுத்த  வெண்பா

ஈற்றடி:- _நற்றாளைப் போற்று நயந்து_

வற்றாத ஊற்றாக வாழும் இலக்கியத்தில்
பற்றாகக் கொள்ளப் பலவுள - நிற்காது
கற்றாலும் கற்றவழி காலமும் நிற்போரின்

நற்றாளைப் போற்று நயந்து.

_புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்_

17/06/2026

Parthasarathy S

unread,
Jun 18, 2026, 12:14:44 AM (7 days ago) Jun 18
to சந்தவசந்தம்
பவம் என்பதற்குப் பாவம் என்றும் நாசம் என்றும் அர்த்தம் உள்ளதால் ஸ்வாமி அவ்வாறு கேட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.   
பவம்
pavam   n. pāpa. 1. Sin; பாவம் (பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு.அயிராணிசோ. 13). 2. Rancour; மனவைரம்.(திவா.). 3. Destruction; நாசம் (W.)  
இன்ன பொருள் எடுத்துக்கொள்ள வேண்டும் ஒரு குறிப்பிட்டால் குழப்பம் தீரும்.
தாஸன் புதுஅக்ரஹாரம் எஸ். பார்த்தசாரதி, பெங்களூர்

Ram Ramakrishnan

unread,
Jun 18, 2026, 1:41:51 PM (7 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
பவம் - வடமொழிச்சொல் - பிறப்பு என்பதைக் குறிக்கும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 18, 2026, at 00:14, Parthasarathy S <spart...@gmail.com> wrote:

பவம் என்பதற்குப் பாவம் என்றும் நாசம் என்றும் அர்த்தம் உள்ளதால் ஸ்வாமி அவ்வாறு கேட்டுள்ளார் என்று நினைக்கிறேன்.   

Arasi Palaniappan

unread,
Jun 18, 2026, 11:07:02 PM (6 days ago) Jun 18
to சந்தவசந்தம்
நல்லதொரு வெண்பா அண்ணலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 18, 2026, 11:08:50 PM (6 days ago) Jun 18
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 18 Jun 2026, at 11:07 PM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages