கவியரங்கம் 62 - வெண்பா வித்தகம்

18 views
Skip to first unread message

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 7:23:35 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

                              உ

               வெண்பாக் கவியரங்கம்


      1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்

தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்

புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்

விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண். 


     2. பொந்துக்குள் இன்னுமொரு பொந்து. 

எம்மூரின் வான்குருவி இட்டமுட்டை காக்கத்தான்

தம்வீட்டைக்  கட்டுமே தச்சனைப்போல்-கம்பத்தில்

பந்துபோல்த் தொங்கும் பறவைவாழ் கூட்டில்பார்

பொந்துக்குள் இன்னுமொரு பொந்து. 


           3. நேசமாய் வந்த நெருப்பு

வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்

புத்தாடை  தீபற்றிப் போனதே- அத்தையார் 

ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்

நேசமாய் வந்த நெருப்பு. 


          4. காதுக்கு வேண்டாம் கதவு. 

சுற்றமும் நட்புமே சொல்வதைக் கேட்டபின்

உற்றதை ஏற்றே உயர்ந்திடுவோம்

-மற்றவர்சொல் 

தீதுடன் நன்றும் தெளிவாகக் கேட்கட்டும்

காதுக்கு வேண்டாம் கதவு.

            5.போதிலே பூத்ததிப் போது

சோலைக்குப் போய்த்தான்  சுகமாகத் தேடினோம்

மாலை தொடுக்க மலர்களை- காலையில் 

பாதி விரிசெம் பருத்தி பனிவிழும் 

போதிலே பூத்ததிப் போது. 


             6. பள்ளியாம் பாதையும் பார். 

 இன்பதுன் பம்தரும் இல்லறத்தி னுள்ளிலே

என்றும் நுழைதல் எளியதே- அன்பினை

அள்ளித் தருநல் லறமாம் துறவெனும் 

பள்ளியாம் பாதையும் பார்.


          7.பார்ப்பாரே! பார்ப்பாரே! பார். 

அயல்நாடு சென்றதும் அங்கிருநம் மூரார்

வியந்துதான் கேட்பார் விலாசம்- தயங்கியே

ஊர்பெயரைச் சொன்னால் உவந்து முகமலர்ந்தே

பார்ப்பாரே! பார்ப்பாரே! பார். 


             8. குறுக்குத் தெருவில் குடி.

திக்கெல்லாம் சென்று திரவியம் ஈட்டியும்

குக்கிரா மத்தோர்தான் கொண்டாடும் - சுக்கின்

நறுமணக்கும் காபியை நாடித்தே டித்தான்

குறுக்குத் தெருவில் குடி. 


             9. முதலைத் தொடரும் முடிவு. 

தலைவனைப் பின்பற்றித் தாமும் நடக்கும்

கலையினைக் கற்றோரே காப்போர்- அலைபோல்ப்

பதங்களை வீசியவர் பாங்காய் நடத்தல்

முதலைத் தொடரும் முடிவு. 


             10. வானம் இறங்கி வரும்

சந்தம் சுருதியுடன் தாளமும் சேர்ந்ததுமே

வந்த இசைதான் வளம்சேர்க்கும்- அந்தவொரு

கானத்தைக்  கேட்பதற்காய்க் கந்தர்வ ரோடுதான்

வானம் இறங்கி வரும். 


        11. கண்ணைமூ டிக்கொண்டே காண்

கண்டவர் சொன்னதில்லை கண்டதில்லை சொன்னவர் 

விண்ணுலகம் என்றுமொரு விந்தையன்றோ? -கண்குளிர

மண்ணுலகில் வாழ்ந்துகொண்டே மாதரங்கே ஆடுவதைக்

கண்ணைமூ டிக்கொண்டே காண். 


12. மறதியும் கூட வரம்.

முன்ஜென்மத் தில்செய்த  மூடத் தனங்களெல்லாம் 

இன்றும் நினைவிருந்தால் ஏளனமே- என்றோ

இறப்புவரும் போதில் எவர்க்கும் கிடைக்கும்

மறதியும் கூட வரம்.


13. நெருப்பை அணைக்காத நீர்.

அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல் 

எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க 

விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்

நெருப்பை அணைக்காத நீர்.


       14. கொஞ்சமே னும்மிதைக் கொள். 

கிண்ணத்தில் சாம்பார் கிளிமாங்காய் ஊறுகாய்

தண்மைகொள் மோருடன் சாதத்தை - உண்டபிள்ளாய்! 

மிஞ்சும் அடிக்குழம்பு விஞ்சு சுவைகொள்ளும்

கொஞ்சமே னும்மிதைக் கொள். 


             15. நட்டத்தில் உச்ச நடம். 

அட்டையைத் தேய்த்துத்தான் அங்காடிச் சாமானும்

குட்டித்தீ வையுமே வாங்கலாம்- திட்டமின்றி

வட்டிக்கு வாங்கியே வாழ்க்கையை ஓட்டுவதே

நட்டத்தில் உச்ச நடம். 


         16. நீயென்றேன் நீயென்றாய் நீ. 

நாமணக்கும் பேச்சினால் நாயகனின் தோற்றத்தால்

பூமணக்கும் உன்மனத்தைப் புன்னகையால்-காமத்தால்

தீயென்றே தொட்ட திருமகனைக் காட்டுவாய்

நீயென்றேன் நீயென்றாய் நீ. 


        17. புன்னகை யார்க்கும் பொது.

மொட்டுவிரி பூவை முடியின்மேல் சூடியதும்

கட்டியவன் சம்பளத்தைக் கண்டதும்

-பட்டுடனே

பொன்நகையைப் பார்த்ததும் பூக்கின்ற மங்கையரின்

புன்னகை யார்க்கும் பொது. 


      18.கட்டுக்குள் மாட்டாத கட்டு. 

நிறைவான வாழ்வுடன் நிம்மதியும் சேர

மறையுமே சொல்லும் வழியாம்

-இறைபதத்தைக் 

கட்டிப் பிடித்தலே கர்மம்சேர் சம்சாரக் 

கட்டுக்குள் மாட்டாத கட்டு. 


—- சத்ய வேழன் H சாயி கணேசன். 

30-06-2026

Govindaraju Arunachalam

unread,
Jun 30, 2026, 7:33:45 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com

சத்ய வேழன் H சாயி கணேசன் பாட்டுக்கு என் பின்னூட்டம்.

 

பொந்துக்குள் இன்னுமோர் பொந்து

   போற்றுகின்றேன் நல்லதோர் வெண்பா

சந்தமிக்க பாக்களைத் தந்தார்

   சான்றோர்தம் நெஞ்சிலே நின்றார்!

 

-கருவூர் இனியன்,


On Tue, Jun 30, 2026 at 4:53 PM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

                              உ

               வெண்பாக் கவியரங்கம்


      1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்

தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்

புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்

விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண். 


Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 7:54:43 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பாராட்டிற்கு மிக்க நன்றி, ஐயா! 

— சத்ய வேழன் H சாயி கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gu2PcfW9NoEDc-KgavhembOA8tRZvwnUMh1e%3DuKEswAdQ%40mail.gmail.com.

Arasi Palaniappan

unread,
Jun 30, 2026, 7:57:25 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்
புதியதொரு கோணத்தில் போற்றும்வெண் பாக்கள் 
அதிகச் சுவைஆகு மாம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 7:59:22 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, ஐயா! 

— சத்ய வேழன் H சாயி கணேசன்

Siva Siva

unread,
Jun 30, 2026, 9:04:04 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
சாயிகணேசன் பாடல்கள் - பிற்கருத்து:

இனிய பாடல்கள். 

இன்னும் சில கருத்துகளைக் கீழ்க்காண்க.

வி. சுப்பிரமணியன்

On Tue, Jun 30, 2026 at 7:23 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

                              உ

               வெண்பாக் கவியரங்கம்


      1 . கண்ணெல்லாம் ஆகுமோ கண்

தித்திக்கும் கோவா திரட்டும் திருவில்லிப்

புத்தூர்க் கொருநாள்தான் போய்வந்தே-இத்தரைகொள்

விண்ணுயர் கோபுர மேன்மையைக் காணாத

கண்ணெல்லாம் ஆகுமோ கண். 


==> வில்லிபுத்தூர். ப் மிகாது.
 

     2. பொந்துக்குள் இன்னுமொரு பொந்து. 

எம்மூரின் வான்குருவி இட்டமுட்டை காக்கத்தான்

தம்வீட்டைக்  கட்டுமே தச்சனைப்போல்-கம்பத்தில்

பந்துபோல்த் தொங்கும் பறவைவாழ் கூட்டில்பார்

பொந்துக்குள் இன்னுமொரு பொந்து. 


==> / பந்துபோல்த் தொங்கும்  / 
த் - ?
புணர்ச்சியோடு நோக்கின் - பந்துபோற் றொங்கும்


           3. நேசமாய் வந்த நெருப்பு

வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்

புத்தாடை  தீபற்றிப் போனதே- அத்தையார் 

ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்

நேசமாய் வந்த நெருப்பு. 


==> தீப்பற்றிப்.
 

          4. காதுக்கு வேண்டாம் கதவு. 

சுற்றமும் நட்புமே சொல்வதைக் கேட்டபின்

உற்றதை ஏற்றே உயர்ந்திடுவோம்

-மற்றவர்சொல் 

தீதுடன் நன்றும் தெளிவாகக் கேட்கட்டும்

காதுக்கு வேண்டாம் கதவு.

            5.போதிலே பூத்ததிப் போது

சோலைக்குப் போய்த்தான்  சுகமாகத் தேடினோம்

மாலை தொடுக்க மலர்களை- காலையில் 

பாதி விரிசெம் பருத்தி பனிவிழும் 

போதிலே பூத்ததிப் போது. 


==>  / செம் பருத்தி   /
செம்பரத்தை.

             6. பள்ளியாம் பாதையும் பார். 

 இன்பதுன் பம்தரும் இல்லறத்தி னுள்ளிலே

என்றும் நுழைதல் எளியதே- அன்பினை

அள்ளித் தருநல் லறமாம் துறவெனும் 

பள்ளியாம் பாதையும் பார்.


==> /  இல்லறத்தி னுள்ளிலே  / 
உள்ளிலே = ?
இல்லறம் தன்னிலே?  இல்லறம் தன்னுளே?


          7.பார்ப்பாரே! பார்ப்பாரே! பார். 

அயல்நாடு சென்றதும் அங்கிருநம் மூரார்

வியந்துதான் கேட்பார் விலாசம்- தயங்கியே

ஊர்பெயரைச் சொன்னால் உவந்து முகமலர்ந்தே

பார்ப்பாரே! பார்ப்பாரே! பார். 


             8. குறுக்குத் தெருவில் குடி.

திக்கெல்லாம் சென்று திரவியம் ஈட்டியும்

குக்கிரா மத்தோர்தான் கொண்டாடும் - சுக்கின்

நறுமணக்கும் காபியை நாடித்தே டித்தான்

குறுக்குத் தெருவில் குடி. 


             9. முதலைத் தொடரும் முடிவு. 

தலைவனைப் பின்பற்றித் தாமும் நடக்கும்

கலையினைக் கற்றோரே காப்போர்- அலைபோல்ப்

பதங்களை வீசியவர் பாங்காய் நடத்தல்

முதலைத் தொடரும் முடிவு. 


==> / அலைபோல்ப் பதங்களை / 

அலைபோற் பதங்களை


             10. வானம் இறங்கி வரும்

சந்தம் சுருதியுடன் தாளமும் சேர்ந்ததுமே

வந்த இசைதான் வளம்சேர்க்கும்- அந்தவொரு

கானத்தைக்  கேட்பதற்காய்க் கந்தர்வ ரோடுதான்

வானம் இறங்கி வரும். 


        11. கண்ணைமூ டிக்கொண்டே காண்

கண்டவர் சொன்னதில்லை கண்டதில்லை சொன்னவர் 

விண்ணுலகம் என்றுமொரு விந்தையன்றோ? -கண்குளிர

மண்ணுலகில் வாழ்ந்துகொண்டே மாதரங்கே ஆடுவதைக்

கண்ணைமூ டிக்கொண்டே காண். 


12. மறதியும் கூட வரம்.

முன்ஜென்மத் தில்செய்த  மூடத் தனங்களெல்லாம் 

இன்றும் நினைவிருந்தால் ஏளனமே- என்றோ

இறப்புவரும் போதில் எவர்க்கும் கிடைக்கும்

மறதியும் கூட வரம்.


==> மறதியைப் புதிய கோணத்தில் சிந்தித்தீர்! நன்று.


13. நெருப்பை அணைக்காத நீர்.

அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல் 

எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க 

விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்

நெருப்பை அணைக்காத நீர்.


==> புதிய உவமை! நன்று. 

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 9:07:51 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! 

பிழைகளைத் திருத்திக்கொள்கிறேன்! சுட்டியமைக்கு மிக்க நன்றி! 

—- சத்ய வேழன் H சாயி கணேசன்



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 30, 2026, 10:39:11 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
புத்தம் புதுநோக்கில் பூத்துவந்த வெண்பாக்கள்
அத்தனையும் இங்கே அருமையாம் - வித்தகத்தை
ஆய்ந்தோய்ந்து காட்டி அசத்திய நம்கவிஞர்
சாய்கணேஷ் பாடல் தரம்

இலந்தை

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Jun 30, 2026, 10:41:46 AM (3 days ago) Jun 30
to சந்தவசந்தம்

விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்

நெருப்பை அணைக்காத நீர்.


அற்புதம் 
On Tuesday, June 30, 2026 at 4:53:35 PM UTC+5:30 Sai Ganesan H wrote:

                              உ

               வெண்பாக் கவியரங்கம்


      1 . 

13. நெருப்பை அணைக்காத நீர்.

அடுத்தவர் துன்பம் அகற்றுமே வள்ளல் 

எடுத்த பிறவிசெய் ஈகை - கொடுக்க 

விருப்பமே இல்லாத வீணர்கைச் செல்வம்

நெருப்பை அணைக்காத நீர்.


       14. 


Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 10:52:58 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ! ஐயா! 

- சத்ய வேழன் H சாயி கணேசன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 11:00:06 AM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி, ஐயா! 

சுவாரஸ்யமும் சவாலும் நிறைந்த தங்களின் ஈற்றடிகள்தான் பாடல்கள் நன்றாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். அதற்காகவும் தங்களுக்குப் பணிவுடன் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

— சத்யவேழன் H சாயி கணேசன். 

Ram Ramakrishnan

unread,
Jun 30, 2026, 3:24:30 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
மிக அருமையான கற்பனை செறிந்த கவிதைகள்.

இந்தக் கவிதை புதுத்தன்மைத்து

// வைத்ததொரு புஸ்வாணம் மங்கி வெடித்ததனால்

புத்தாடை  தீபற்றிப் போனதே- அத்தையார் 

ஆசையாய் வாங்கிவந்த அந்தவொரு வாணந்தான்

நேசமாய் வந்த நெருப்பு. //


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Tue, Jun 30, 2026 at 7:23 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Jun 30, 2026, 5:22:52 PM (3 days ago) Jun 30
to santhav...@googlegroups.com
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ! ஐயா! 

- சத்ய வேழன் H சாயி கணேசன்
Reply all
Reply to author
Forward
0 new messages