--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAviTP9UXo_uwt0tpgfkm82jv4cny%3DEFmjhqh%3DG6Eod9w%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2நாள்: 8-மார்ச்-2026நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையேகடவுள் வாழ்த்து - முருகன் துதிசெடியார் வினைகள் செறுவாய் எனநான்தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்அடையார் வெருவ அடியார்க் கருளும்படைவேல் உடையான் பதம்.(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)
...
பட்டிமன்றத் தலைவர் கவிவேழம்
அவர்களின் தலைமைக் கவிதைக்குப்
பின்னூட்டம்.
விருத்தப் பாவில் திருத்தமுற
விளக்கிச் சொன்னார் கவிவேழம்
பொருத்த மாகக் கவியாத்துப்
பொதுவில் வைத்தார்; அவ்வழியே
வருத்த மின்றி வண்டமிழில்
வன்னக் கவிதை வடித்திடலாம்
தருக்கம் செய்யும் மன்றத்தில்
தமிழ்ப்பா மேலும் மெருகேறும்!
-கருவூர் இனியன்.
படை குறித்துப் பாடிய பாவலர்
இமயவரம்பன் அவர்களின்
கவிதைக்குப் பின்னூட்டம்.
படைவேல் உடையான் பரிவோடு
படைத்தார் கவிதை படைகுறித்து
தடையே இல்லா ஓசையுடன்
தாவிச் செல்லும் வெண்பாக்கள்!
முற்றும் சிறப்பாய் இருந்தாலும்
முழுதாய் ஒப்பேன் அவர்கருத்தை
சற்றே இடிக்கக் காண்கின்றேன்
சாற்ற வருவேன் என்சுற்றில்!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/4C493C6D-1E3B-45E8-8F79-244E04ADEECF%40gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/EBAA5F77-C4EA-4833-8962-AFE63F16EEA3%40gmail.com.

To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1D35CB60-73ED-4466-AE48-2C94754FF5DB%40gmail.com.
தீராத அன்புடையார் சீரார் இராம்கிராம்
ஏரார்ந்த செஞ்சொல் இனிப்பு.
மிக்க நன்றி!
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
அவை வணக்கம்
அரங்கத் தலைவர் கவிவேழம்
அடிகள் போற்றி வணங்குகின்றேன்
அரங்கில் உள்ளோர் அனைவரையும்
அடியேன் வணங்கி மகிழ்கின்றேன்
அரங்கத் துள்ளான் அருளாலே
ஆக்கித் தருவேன் மாக்கவிதை
அரங்கில் நின்று கோலோச்சும்
அன்னைத் தமிழே அடிகோல்க!
அவையடக்கம்
பேச்சில் செயலில் பெருமையினைப்
பெரிதும் போற்ற விழைகின்ற
ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல்
ஒல்லும் வண்ணம் சிந்தித்து
மூச்சுக் கொருபா இயற்றுகின்ற
மூத்தோர் உள்ள அவையினிலே
கீச்கீச் சென்று கத்துகின்ற
கிளிபோல் யானும் வந்தேனே!
கல்வி
அமைவாய் தேசம் இருப்பதற்கு
அரணாய்ப் படைகள் அமைப்பாக
அமைய வேண்டும் என்பதனை
அடுக்க டுக்காய் அழகாக
இமய வரம்பன் எடுத்துரைத்தார்
எனினும் நாட்டின் வருமானம்
இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்
இன்னல் விளைக்கும் போராலே!
கல்வி என்னும் கைவிளைக்கைக்
கையில் ஏந்தும் தலைவர்தாம்
சொல்லில் செயலில் தூய்மையினைச்
சுடராய்ப் படர விடுவார்கள்
அல்லும் பகலும் அறவினையை
அழகாய்ச் செய்ய முன்வருவர்
தொல்லை நல்கும் படைக்கலனைத்
தொட்டுப் பார்க்கச் செய்யாரே!
பிச்சை எடுத்துக் கற்பதையும்
பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்
கச்சை கட்டி வருகின்ற
கழிபே ரின்னல் கடிந்தேகப்
பச்சை விளக்காய்ப் பாதையிலே
பரவி நிற்கும்; அதனாலே
இச்சை கொண்டு கற்றால்தான்
இனிய தேசம் உருவாகும்!
கல்லா மாக்கள் என்பவர்கள்
கல்லும் மண்ணும் போன்றோரே
எல்லாம் இருந்தும் என்னபயன்
ஏற்ற கல்வி இல்லையெனின்
வல்லான் வகுக்கும் வாய்க்காலை
இல்லா தாக்கும் ஓர்கருவி
நல்ல கல்வி மட்டும்தான்
நல்லோர் இதனை ஏற்பாரே!
கல்வி என்னும் ஆயுதத்தைக்
கையில் எடுக்கும் பாரதமே
வெல்லும் செல்லும் திசையினிலே
வெற்றி வாகை சூடிடுமே
எல்லா நாடும் இதன்வழியை
ஏற்று நாளும் பின்பற்றும்
இல்லா தொழியும் இழிசெயல்கள்
இகத்தில் இன்பம் மேவிடுமே!
கற்று வாழக் கருதாதார்
கண்கள் இரண்டும் புண்ணென்று
முற்றும் முடிவாய் வள்ளுவனார்
முழக்கம் செய்தார் கேளீரோ
பெற்றுப் பிழைத்தல் வாழ்வாமோ
பெற்றம் அதனைச் செய்திடுமே
விற்றுத் தொலைத்தால் மானத்தை
விறைப்பாய் நிற்க முடியாதே!
நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்
நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்
மறைவாய் உள்ள மாசெல்லாம்
மாயம் நிகழ்ந்து நீங்கிவிட
துறைகள் தோறும் கல்வியினைத்
துலங்கச் செய்தல் முதற்கடமை
குறைகள் இருப்பின் என்கருத்தில்
குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!
-கருவூர் இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
தங்க வேலன் சாற்றிடுவார்
இலந்தை8-3-2026
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:
தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையேபடைப் பத்து(நேரிசை வெண்பா)
கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டிமடமை இருள்கவிய வாட்டிக் - குடியின்மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்யபகையடக்க வேண்டும் படை.(10).- இமயவரம்பன்
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
அவை வணக்கம்
நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்
நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்
மறைவாய் உள்ள மாசெல்லாம்
மாயம் நிகழ்ந்து நீங்கிவிட
துறைகள் தோறும் கல்வியினைத்
துலங்கச் செய்தல் முதற்கடமை
குறைகள் இருப்பின் என்கருத்தில்
குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!
-கருவூர் இனியன்.
O
"கல்வி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் பாரதமே வெல்லும்"
மிகச் சரியே.
'கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன்' என்கிறார் ஆழ்வார். கற்றறிந்து தர்மத்தை எடுத்துக்கூறும் ஒருவன் இருந்தான், அவனும் வெளியேறி காகுத்தனையே சரண் புகுந்தான், இனி இலங்கை 'கல்லாதார் இலங்கை'யாக ஆகிவிட்டது என்று கூறி இலங்கையை அழித்தான் என்பது விளக்கம்.
கல்விக்கே என் ஓட்டு
ஸௌந்தர்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
...
கல்வி
அமைவாய் தேசம் இருப்பதற்கு
அரணாய்ப் படைகள் அமைப்பாக
அமைய வேண்டும் என்பதனை
அடுக்க டுக்காய் அழகாக
இமய வரம்பன் எடுத்துரைத்தார்
எனினும் நாட்டின் வருமானம்
இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்
இன்னல் விளைக்கும் போராலே!
....
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqti_%2BY79Q7WXB%2BrbEAKJLQA4LXnQT1xGRd%2BUMjFbrQui1w%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-%2B6aKudqSn9mSw88nHzLc31_5TMcy5xEYFNV2cDKao%2Bng%40mail.gmail.com.
,கல்வி நல்ல கைவிளக்காய்க்
கவிஞர் இனியன் காட்டிவிட்டார்
சொல்ல, தொழிலைத் தொடங்கிவிட
சோறு சமைக்க, நட்பேற
வல்ல அமைச்சாய் வழிநடத்த
வருமே முதலில் அறிவுநலம்
நல்ல வாதம் வைத்திங்க
நகர்த்தி விட்டார் இத்தொடரே
பசிவந் தாலோ தலைப்பிலுள
பத்தும் பறக்கும் எனச்சொல்ல
புசிக்கும் கூழை அடிப்படையாய்க்
கொண்டே கவிஞர் ராம் வருக!
விசையாய் எதையும் விருப்பமுடன்
விரைந்து கொடுக்கும் ஆற்றலுளார்
வசமாய் மற்றோர் திணரும்வகை
வாதம் எடுத்தே வைத்திடுக!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.
மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு.
பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு
புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அண்மையில் இயற்கை எய்திய அருமையான எழுத்துச் சிற்பியும், சிறிது காலப் பழக்கமென்றாலும்
மிக நெருங்கிப் பழகிய உணர்ச்சியை அளித்தவருமான கவிஞர் தில்லைவேந்தன் அவர்களுகோர்ப்
புகழஞ்சலிக் கவிதை ஒன்றும் இங்கிடுதற்குத் தலைவர் அனுமதிப்பீராக.
தலைமை: கவிவேழம்
திரு. இலந்தை சு ராமசாமி
கடவுள் வாழ்த்து
நேரிசை வெண்பா
நாடதன் கூழ்ப்பெருமை நானுரைக்க நாவமர்வாய்
ஆடவல்லான் ஈந்தோனே ஐங்கரனே – கோடுவெள்ளம்
ஓடியடை வாரிதியில் ஓடமென ஆகிநின்றேன்
பாடுபொரு ளிங்கெனக்கீ வாய்.
கோடுவெள்ளம் – மலையுச்சிலினின்று வரும் வெள்ளம்., வாரிதி – கடல்
மறைந்த கவிஞர் தில்லைவேந்தன் புகழஞ்சலி
எண்சீர் விருத்தம்
மண்புரக்க மழைமேகம் வானின்று கொட்டும்
… மாந்தர்க்கு விளைவீட்டும் மங்கலத்தைச் சுட்டும்
பண்புரக்கப் பாப்புனைந்தார் பட்டமிலா வேந்தர்
… படைத்ததெலாம் தேன்தோய்த்துப் பாரோர்க்கு மீந்து
செண்டுமலர்க் கொத்துகளாம் செகத்தளித்த பாடல்
… “சென்றறியாப் பாதை”யதே தந்துசென்றார்த் தேடல்
விண்சிறக்க அழைத்தானின் விருப்பேற்றார் தில்லை
… வேந்தரவர் புகழினிற்கு மளவேது மில்லை.
“சென்றறியாப் பாதை” – கவிஞர் தில்லைவேந்தன் கவிதைத் தொகுப்பு
அவையடக்கம்:
நேரிசை வெண்பா
கற்றோர்முன் விற்பனர்போல் கைவரிசை காட்டுகிலேன்
விற்போரில் வாள்வீச்சு வீணன்றோ - சிற்றரங்கில்
பற்பலவாய் நானளித்தல் அற்பமெனத் தோன்றிடினும்
புற்கம் பொறுத்தால் புனை.
புற்கம் – புல்லறிவு, புன்மை, புனை – அழகு,
கவிதைத் தொடர் பட்டிமண்டபத் தலைவர் வாழ்த்து
கட்டளைக் கலித்துறை
உவப்பினிற் தோற்றிடும் ஓரா யிரமாய் ஒளிர்கவிகள்
செவிக்கினி வாக்கிடச் செந்தமிழ்க் கோவையாய்ச் சேர்த்தளிக்கும்
கவிக்கொரு வேழம் அவைக்காம் தலைவர் கழல்பணிந்தேன்
குவித்திடு கையனென் குற்றமும் நீக்குவீர் கோமகனே.
.
முதலுரை:
நேரிசைக் கலிவெண்பா
“இறைமாட்சி” வள்ளுவத்தி லிட்டது மாறே
மறைபோற்றும் மாட்சியென நான்கைச் – சிறப்பாகச்
சேர்த்தார் கவிவேழம்., சீர்த்ததே இம்மன்றம்.,
ஆர்த்துக் கவிபடைப்போம் அன்புடனாய்ப் – போர்தவிர்போம்
நானிலத்தில் கல்வியொடு நல்லொழுக்க நேர்மையுடன் 5
கானின் இயற்கையைக் கட்டமைப்போம் – தேனொத்த
விட்டுக் கொடுத்தலை வேட்டுவோம்., இவ்வனைத்தும்
கொட்டி முழங்கிடக் கூடுவோம் - சுட்டும்
படையமைச்சு. கூழும். குடியரண் நட்பாம்
அடித்தள ஆறைத் தொடர்ந்தே – எடுப்போம்., 10
படையதே நாட்டைப் பகையொழித்துக் காக்கும்
இடையில் எவர்வரினும் ஈதை – உடனளிக்கும்
நாட்டிற்குத் தேவைபடை நன்கறிவோம்., போதுமிதா
கூட்டுக் குடும்பத்திற் கூட்டுவதோ – ஏட்டறிவு
உண்ணற் குதவுமோ? மண்ணின் குடிநலம் 15
எண்ணத்தில் ஏழ்தல் இயல்பன்றோ – திண்ணமாய்
ஒன்றுரைப்பேன் தேசபக்தி, ஓர்ந்த அறிவோடு
நன்றமையும் தன்னடக்கம் நாணயம், – ஒன்றில்
குடிவுயரும், உண்மை, வடிவாய் உணர்ந்தோம்.
நெடிதுயர ஈதே படியோ? – திடமாய் 20
அரணமைத்த ஆட்சி அமையேல் பயனென்?
முரணில் பகையன்றோ முந்தும்? – “கரணமொன்று
தப்பின் மரணமே” சாற்றுவோர் சான்றோர்.,
அமைச்சின் பெருமை அவனி யறியும்
நமக்கெனு மாட்சி நலத்திற் – கமைச்சவைத் 25
தேவையை யாமறிவோம். தீதற்ற நட்புற,
சேவை மனப்பான்மைச் சீருர – ஆவலுறும்
மக்கள் உளத்தினில் முக்காலும் தோன்றுவது
எக்கால் அமைச்சு மெழுற்சியுறும் – சிக்கல்கள்
ஈதாகக் கூழ்ப்பற்றி யிச்சபையில் சிந்திப்போம் 30
கோதற நாட்டிற்குக் கூழெனும் – ஆதாரம்
நாட்டின் வளர்ச்சியுடன் நாள்தோறும் முன்னேற்றம்
கூட்டிடும் செல்வவளம் கொள்வதுடன் – தேட்டம்
உணவினில் தன்னிறைவு, உற்பத்தி, மேலும்
பணம்நோக்காப் பான்மை, உழைப்பு., – கணநேரம் 35
கூழதன் மேம்பாட்டைக் கொண்டாடிச் கூறற்குத்
தாழ்வேனென் சென்னி சபைக்கு. 38
அருஞ்சொற் பொருள்:
ஈதை – துன்பம்
கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது
நிலைமண்டில ஆசிரியப்பா
வாழிய நடுவர் வாழ்கவிவ் வவையே
கூழெனப் படுதல் கூறற் கேண்மிரே
உழைப்பவர் வியர்வை என்றவவ் வமுதமே
தழைக்கு முண்டிக் கஃதா தாரமாம்
தடுத்தலி லதாய்ப்பெரு தனந்தரும் தரணியில், 5
அடுக்களை முதலென அரசவை வரைக்கும்
எள்ளள வுமையமில், இதுவாங் கூழே
வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில்
கூழே மேலாய்க் கூறலென் கடமை.
ஆழ்ந்து நோக்கிட அனைத்துமே புலப்படும் 10
படைவலி கொளுபவர் பசியுறுஞ் சமயமேல்
உடைவாள் விட்டுடன் உதரம் பற்றுவர்
குடியினர் அமைச்சுடன் கொளுநட் போடரண்
பொடியாம் கூழெனும் புறப்பொரு ளிருந்திடேல்
பிணியற விளைவுடன் பெறுந்தனம் அரணிவை 15
அணியாய் நாட்டிற் கைந்தாய்க் கொள்ளினும்
விளைவாம் கூழே வித்தென் றாகிடும்
பொருளில் லார்க்கும் புத்தொளி தருவது
பொருளாம் கூழே போற்றலும் பிறிதிலை
பொருளில் லார்க்கிப் பூதல மிலையெனும் 20
மறைமொழி யதன்றன் மாண்பினை உரைத்திடும்
உழைப்பில் வாரா ஒக்கம் இல்லையே
உழைப்பால் மக்களின் ஒழுக்கம் மேம்படும்
உழைப்பது மறிவிற் கூட்டுதல் வலிமையே
உழைப்பினா லியற்கையும் உயர்தல் காணுவோம் 25
உழைப்பே கூழதன் உறுதியென் றறிவோம்
மெய்வருத் தமுறுமவ் வினையில் என்றும்
வையம் உய்ந்திட வளர்கூழ் வான்போல்
கற்றவர் படித்துநற் கசடற மிளிர்ந்தே
உற்ற வூதியம் உடன்தரும் முதற்றளம் 30
படிப்பறி வுமட்டுமே பசியறுக் கலாகுமோ
வயிற்றினில் பசிவர வலிமை, நேர்மை
வற்றிப் போய்விட வறுமை வாட்டுமே
அறம்புகல் செயலதும் அவிந்து போகுமே
வறண்ட நாட்டினில் வயிற்றதன் பிழைப்பால் 35
தன்னலம் துறத்தலாம் தியாகமும் தழைக்க
உன்னதப் பொருளே ஊர்ஜிதம் என்பேன்
ஊனுடல் வருந்திட வொழிந்திடும் தியாகம்
வானுயர்க் கருத்துமே வரட்சியில் அமிழும்
மண்ணினிற் கிடைத்திடு மியற்கையின் வளங்கள் 40
உண்ணற் கேதுவாய் உருவா கிட்டால்
அந்தநாள் ஆக்கும் இந்தநாட் டுயர்வு
கச்சாப் பண்டமும் கணிசமாய்க் கிடைப்பின்
உச்சம் விற்க ஓங்கும் கூழதும்
தொழிலரின் வியர்வையே துளிகளாய்ப் பெருகி 45
எந்திரச் சுழல்களில் இயற்றும் வர்த்தகம்
கருவுலம் நிறைதிடுங் கருப்பொருள் ஆகும்
அந்நியச் செலாவணி அமுதமாய்ப், பெருகும்
தன்நிறைத் தகவில் தார்மிக வழியில்
கூழே யிங்குக் கூடியோர்க் கடிப்படை 50
தொழிலினைத் தொடர்பவர் துணிச்சல் மேம்படு(ம்)
அழித்திடாச் சிறப்பை ஆக்குங் கூழே
ஆதலால் அறிவுடன், தியாகம், நேர்மை
நீதியொ டமைந்த நித்திய இயற்கை
சூதிலா அமைச்சும் சுந்தர வரணுடன் 55
படைபலம் குடிநலம் கிடைத்த நட்பும்
தாங்கியே தழைக்கச் செய்திடும் வலிமை
ஈங்குக் கொண்ட வேற்றங் கூழே! 58
அருஞ்சொற் பொருள்:
உதரம் – வயிறு., எள்ளள வுமையமில் – எள்ளளவும் + ஐயம் + இல்
வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில் – வள்ளுவர் இறைமாட்சி எனும் அதிகாரத்தில் சொன்ன
படை, குடி, கூழ், அரண், அமைச்சு, நட்பு எனச் சொன்ன ஆறு அங்கங்களில்,
ஒக்கம் – உயர்வு., வளர்கூழ் – வினைத்தொகை
முதற்றளம் – முதல் தளம்., ஊர்ஜிதம் - உறுதி
உற்பவம் – உற்பத்தி., கருவுலம் – கருவூலம் என்பதன் இடைக்குறை
தன்னிறை – தன்னுள் நிறைவு, self - sufficiency
இறுதியுரை:
கட்டளைக் கலித்துறை
வேழம் அளித்த வியத்தகு ஆய்வை விளக்குகையில்
ஆழக் கருத்தை அவையினிற் சொன்னேன் அருங்கவிகாள்
பேழையில் வைத்துப் பெருமையாய்ப் போற்றிடில் பேறெனதே
கூழைப் புகழ்ந்து கொடுத்த கருத்தினைக் கொள்ளுவிரே.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBC5Lpn_r_Jk_T4jatAX6QgOXaJ6u%2B%2B-s6DAQKGfUbjG_A%40mail.gmail.com.
On Mar 11, 2026, at 18:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/C0170F7F-899D-4CDB-AD73-F70F22563303%40gmail.com.
கவிதைத் தொடர் பட்டிமண்டபம் 2
....
முதலுரை:
நேரிசைக் கலிவெண்பா
“இறைமாட்சி” வள்ளுவத்தி லிட்டது மாறே
மறைபோற்றும் மாட்சியென நான்கைச் – சிறப்பாகச்
சேர்த்தார் கவிவேழம்., சீர்த்ததே இம்மன்றம்.,
ஆர்த்துக் கவிபடைப்போம் அன்புடனாய்ப் – போர்தவிர்போம்
நானிலத்தில் கல்வியொடு நல்லொழுக்க நேர்மையுடன் 5
....
பணம்நோக்காப் பான்மை, உழைப்பு., – கணநேரம் 35
கூழதன் மேம்பாட்டைக் கொண்டாடிச் கூறற்குத்
தாழ்வேனென் சென்னி சபைக்கு. 38
அருஞ்சொற் பொருள்:
ஈதை – துன்பம்
கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது
நிலைமண்டில ஆசிரியப்பா
வாழிய நடுவர் வாழ்கவிவ் வவையே
கூழெனப் படுதல் கூறற் கேண்மிரே
உழைப்பவர் வியர்வை என்றவவ் வமுதமே
தழைக்கு முண்டிக் கஃதா தாரமாம்
தடுத்தலி லதாய்ப்பெரு தனந்தரும் தரணியில், 5
அடுக்களை முதலென அரசவை வரைக்கும்
எள்ளள வுமையமில், இதுவாங் கூழே
.....
/ வேட்டுவோம் / = ?வேட்போம்? வேட்டிடுவோம்? வேண்டிடுவோம்?
/ எண்ணத்தில் ஏழ்தல் /எண்ணத் தெழுதல்?
குடிவுயரும் /Typo. குடியுயரும்.
அரணமைத்த ஆட்சி அமையேல் பயனென்? /அமையேல் = ?
On Mar 11, 2026, at 20:47, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOK0OSEguHtryCsNdZj%3DwXbOLo3PAMkH3upUeEycJnPmw%40mail.gmail.com.
On Mar 11, 2026, at 21:07, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN%2Bie3LZVBZbyWswNwrYf2vDb7nJxBZ%2Buj0s-mOPqTDXA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtgoi%3DSGeZJsLzqSh4ywy3tjQUwB3NtudE%3DHb9g0mYK2cA%40mail.gmail.com.
On Mar 11, 2026, at 22:12, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZ7Ddeqqx%3Dg62a_pazRpNycyUYGxQ4uipDuA7FA0kX7gA%40mail.gmail.com.
என்னிடம் இல்லாத சிறப்பினை இருப்பதாகச் சொல்லி அழைப்புக் கவிதையும் பின்னூட்டமும் அளித்த கவிமாமணி இலந்தையார், என் கவிதையைப் பதிவிட்ட அடுத்த நொடியில் பின்னூட்டம் அளித்த அரசி.பழனியப்பன், என் பாட்டை இனிக்கும் கற்கண்டு என மிகைமொழியால் பாராட்டிய காஞ்சீபுரம் தங்கவேல், கல்விக்கே என் ஓட்டு என்று சொல்லி என்னை ஊக்குவித்த ஸௌந்தர், ஈர்க்கின்ற கவிதையென என் முதுகில் தட்டிக்கொடுத்த ராம்கிராம், இனிய பாடல் எனப் பாராட்டி மகிழ்ந்த நக்கீரர் சிவசிவா, வெண்பா மலரொன்றை விரும்பியளித்த தம்பி சுரேஜமி, அபாரம் என ஒற்றைச் சொல் மூலம் என்னை, தரையில் கால் பாவாமல் நடக்கச் செய்த மூதறிஞர் கவியோகி வேதம், என் கவிதையைப் படித்து, சற்றே பரவாயில்லை என நினைத்த மற்ற அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிப் பெருக்கு உரித்தாகுக.
எதை நான் சந்த வசந்தத்திலிருந்து பெற்றேனோ அதை இப்போது திருப்பித் தருகிறேன், ஒரு செய்யறிவு மென்பொருள் போல. எனவே எல்லாப் புகழும் சந்த வசந்தத்திற்கே. என்னை இத் தளத்தில் இணைத்த முனைவர் சு.பசுபதி அவர்களையும் ஈண்டு நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
-கருவூர் இனியன்..
வரப்புடைக்கும் வெள்ளத்தும் வான்பிணிக்கா லத்தும்பொருப்புடைக்கும் பூப்பிளப்பின் போதும் - நிரப்பாம்நசிவறுத்துச் சோறு நனிவழங்கி மக்கள்பசியொழிக்க வேண்டும் படை (7).(பொருப்பு = மலை; பூப்பிளப்பு = பூகம்பம்; நிரப்பு = வறுமை;)- இமயவரம்பன்
தங்கள் கருத்தை வலியுறுத்தத்
தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்இமய வரம்பன் படையென்பார்
இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்
கல்வி
கல்வி என்னும் கைவிளைக்கைக்
கையில் ஏந்தும் தலைவர்தாம்
சொல்லில் செயலில் தூய்மையினைச்
சுடராய்ப் படர விடுவார்கள்
அல்லும் பகலும் அறவினையை
அழகாய்ச் செய்ய முன்வருவர்
தொல்லை நல்கும் படைக்கலனைத்
தொட்டுப் பார்க்கச் செய்யாரே!
-கருவூர் இனியன்.
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்
மார்ச்சு 12ந்தேதி அரங்கம் தொடங்கும் என்றிருந்துவிட்டேன். இன்றைக்கு அதாவது மார்ச்சு 8ந்தேதி தொடங்குகிறது என்பதை இப்போதுதான் அறிந்தேன்.
வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற் றானை
வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை, துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட் டானைவித்தானை மறையானை, குறையானை, வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை, கருணை யானை
கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை, கவிதை யானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானைத்
தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகின்றேன் காக்க நன்றே
தொடக்கம்கவிதைத் தொடர் பட்டிமண்டம்
தலைப்பு: ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது
\படை, குடி, கூழ், அமைச்ச், நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்விசண்டை போட்டால் சிலசம யத்தில்
சந்தோ ஷம்மேன் வருகிறது?
மண்டைக் குள்ளே வாதுக ளுக்குள்
மாட்டிக் கொள்ளும் வகையுண்டோ
சிண்டு முடித்தல் என்கிற ஒன்றும்
செய்வ துண்டு சிலசமயம்
உண்டிங் கேயோர் சொல்விளை யாட்டே
உற்சாகம்நாம் பெற்றிடலாம்பட்டி மண்ட பத்தினில் இன்று
பாடல், கவிதை விளையாடும்
வெட்டிப் பேச்சை வீசிட வேண்டாம்
வித்தை காட்டும் ஆவேசம்
எட்டிப் பார்த்தால் எவ்விடத் தேயும்
எரிச்சல் மூட்டும் நரியாட்டம்
கொட்டித் தீர்ப்போம் சொல்விளை யாட்டில்
கும்மா ளந்தான், வாருங்கள்
**
நாடு சிறக்க மிகவதிகம்
நமக்குத் தேவை எதுவென்றே
கூடி அலசிப் பேசுதற்கே
குழுமி யுள்ளோம் , வள்ளுவரின்ஏடு நமக்கு வழிகாட்ட
எடுத்துக் கொண்ட தலைப்பினிலே
போடு போடென் றிங்கேநாம்
புலமை காட்டப் போகின்றோம்.
தங்கள் கருத்தை வலியுறுத்தத்
தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்
இமய வரம்பன் படையென்பார்
இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்
இயற்கை வளமே அதிகமென
இசைப்பார் அரசி பழனியப்பன்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
தங்க வேலன் சாற்றிடுவார்
இயக்கம் யாவும் குடிபடையின்
இருப்பில் என்பார் கவிஞரஷோக்
நியமம் செப்பும் அமைச்சுக்கு
நேரம் இன்னும் இருக்கிறதுஎல்லாம் தேவை என்றாலும்
இதுதான் அதிகம் தேவையென
வல்லாங் கிங்கே வாதிடவே
வாருங்கள்சொல் வல்லோரே
கல்லை எடுத்து வீசாமல்
களத்தில் சொல்லை வீசுகிறோம்
சொல்லும் தாக்கும், வடுவின்றிச்
சொல்லத் தெரிந்தால் அதுபோதும்இற்றை நாளில் படைக் கென்றே
எடுத்து வைக்கும் நிதியதிகம்
கற்றுக் கொள்ள வில்லையெனில்
காசா இங்கே காப்பாற்றும்
பெற்றுக் கொள்ளும் கல்வியில்தான்
பிழைப்பே உண்டென் ரியம்பிடலாம்
வெற்றுப் பேச்சேன்? கூழின்றி
வீழ்ந்து கிடந்தால் என்ன பயன்?எல்லா மிருந்தும் கொள்ளையிட
எதிரி இருப்பான், காப்பாற்ற
நல்ல பாது காப்பாக,
நமக்குத் தேவை அரணன்றோ
வெல்லுமா வீண் பகைக் கூட்டம்
வேண்டும் நட்பே வெற்றிதரும்
அல்ல அல்ல , நேர்மையினுக்(கு)
அடுத்த படிதான் மற்றெல்லாம்அன்று நாட்டு விடுதலையை
ஐயா பெற்றோம் தியாகத்தால்
இன்றைக் கும்தான் அதுதேவை
இயற்கை வளத்திற் கீடாக
ஒன்றை எடுத்துச் சொலப்போமா?
உமக்கு வேண்டும் நல்லமைச்சன்
அன்று சாணக் கியனாலே
ஆட்சி அமைந்த தறியீரோஎன்றெல் லாமிங் கிதமாக
எடுத்துப் பேச வந்துள்ளீர்
ஒன்று சொல்வேன் , வித்தகமும்
உள்ளே ஊறும் கவிப்பெருக்கும்
மன்றில் நடனம் ஆடட்டும்
மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்
நன்று நடக்கும் அரங்கத்தின்
நாட கத்தைக் கண்டிடலாம்
இலந்தை8-3-2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALScqMsg-6WwN3d-tS3qNWbiGVyfn-qnLP3AtLvh5oWmR731vQ%40mail.gmail.com.
அரணமைத்த ஆட்சி அமையா திருப்பின்
முரணில் பகையன்றோ முந்தும்? –....அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே.................தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையேபடைப் பத்து(நேரிசை வெண்பா)விதையிட்டுச் செந்நெல் விளைமுன்னே மிக்கமுதலிட்(டு) அருந்தொழில்செய் முன்னே - புதிதோர்கலமாக்கி விண்பயணம் காண்முன்னே நாட்டைப்பலமாக்க வேண்டும் படை. (1).(கலம் ஆக்கி = விண்கலம் செய்து)..........
கவிதைத் தொடர் பட்டிமண்டபம் 2
On Mar 12, 2026, at 22:09, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/f84482c5-03fa-4075-ae90-fffa3fb332ban%40googlegroups.com.
கவிதைத் தொடர் பட்டிமண்டபம் 2
மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு.
பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு
புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்"
.
சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே
............
கல்வி
...............
கல்வி என்னும் கைவிளைக்கைக்
கையில் ஏந்தும் தலைவர்தாம்
சொல்லில் செயலில் தூய்மையினைச்
சுடராய்ப் படர விடுவார்கள்
அல்லும் பகலும் அறவினையை
அழகாய்ச் செய்ய முன்வருவர்
தொல்லை நல்கும் படைக்கலனைத்
தொட்டுப் பார்க்கச் செய்யாரே!
பிச்சை எடுத்துக் கற்பதையும்
பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்
கச்சை கட்டி வருகின்ற
கழிபே ரின்னல் கடிந்தேகப்
பச்சை விளக்காய்ப் பாதையிலே
பரவி நிற்கும்; அதனாலே
இச்சை கொண்டு கற்றால்தான்
இனிய தேசம் உருவாகும்!
...........
பாவலர் ராம்கிராம் அவர்களுடைய கவிதைக்குப் பின்னூட்டம்
கூழைப் புகழ்ந்து கூறிய கவிதை
கூறும் செய்தி குன்றின் பெரிதாம்
ஊழை எண்ணி உருகி நலிவரோ
உண்டேல் கையில் உறுகூ ழெனினே
பலவாய் யாப்பில் பாங்கின் சொன்ன
பாட்டுத் திறத்தைப் பரக்கக் கண்டேன்
மலரில் தேனை மாந்தும் வண்டாய்
மயங்கி நின்றேன் மாற்ற மில்லை.
-கருவூர் இனியன்..
கவிதைத் தொடர் பட்டிமண்டபம் 2
மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு.
பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு
புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.
அண்மையில் இயற்கை எய்திய அருமையான எழுத்துச் சிற்பியும், சிறிது காலப் பழக்கமென்றாலும்
மிக நெருங்கிப் பழகிய உணர்ச்சியை அளித்தவருமான கவிஞர் தில்லைவேந்தன் அவர்களுகோர்ப்
புகழஞ்சலிக் கவிதை ஒன்றும் இங்கிடுதற்குத் தலைவர் அனுமதிப்பீராக.
...........
கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது
நிலைமண்டில ஆசிரியப்பா
..... தரணியில், 5
அடுக்களை முதலென அரசவை வரைக்கும்
எள்ளள வுமையமில், இதுவாங் கூழே
வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில்
கூழே மேலாய்க் கூறலென் கடமை.
ஆழ்ந்து நோக்கிட அனைத்துமே புலப்படும் 10
..........
On Mar 13, 2026, at 01:03, KKSR <aur...@gmail.com> wrote:
On Mar 13, 2026, at 02:43, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GvY%3Dw85PfdEh8Prmj_dFziAWtDs5DdozqE9NYir6Wr-kA%40mail.gmail.com.
On Mar 13, 2026, at 02:58, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvZOUwsxp5eO1njVuZMgxOhHwuA3u-j0s%2BzJ71tfgVvPA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/367e8b8a-f252-42eb-8620-9c736a91427fn%40googlegroups.com.
முதல் அழைப்பு: கவிஞர் இமயவரம்பன்
இமய மேதன் எல்லையென
எடுத்துப் பேரில் வைத்துள்ள
இமய வரம்பன், நற்கவிஞர்
இசைவாய்ப் பேசும் பேச்சாளர்
அமைவாய் உரைகள் எழுதுபவர்
ஆராய் கின்ற அறிவாளி
தமது பங்காய்ப் படைச்சிறப்பைச்
சாற்ற இங்கே அழைக்கின்றேன்
இலந்தை8-3-2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDvaroB6HkGWcXLoj4QR%2B3uFtgKvNfNxX1_2Z4tB95JUQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbPw4_dbtUuOQS5uTyW_DZm3UWC_vQFCwb8MZ0ZUZ3sqA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBKr8E%2BeyESrKp%2B3XJ8sCEm9MaY94nA0xCw_xAawp%3DY4g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbPw4_dbtUuOQS5uTyW_DZm3UWC_vQFCwb8MZ0ZUZ3sqA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDiX_GpmU%2BYfLX_yOqRvYcGH-B0u0UnA5pN7V-ekYinxg%40mail.gmail.com.
| Mar 13, 2026, 3:37 PM (4 days ago) | |||
| ||||
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBBVaSJbq14mTkEG7uXHp6TyzRw-0s_j5fVHuXYY-gM%3DFg%40mail.gmail.com.
......
இதோ சோதரி புட்பா கிறிட்டியின் பாடல்
Dr. Pushpa Christy Canada
Mar 13, 2026, 3:37 PM (4 days ago)
..
நட்பினைப் போற்றும் புட்பா
… நற்றமிழ் நுந்தம் சொல்லை
திட்டமாய் நாடும் ஏற்றால்
… செம்மையில் உயர்வு காணும்
மட்டிலா அன்புஞ் சேர
… மானுடம் மேன்மை யடையும்
விட்டிலா நட்பு ஒன்றே
… வேண்டினீர் வாழ்த்து கின்றேன்
On Mar 19, 2026, at 17:02, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXZQe2DwQM%3DsuhzFKRFjAESaoQzg8mDpNqLiQzJQF0wE-Q%40mail.gmail.com.
வாதிலே நட்பி னுற்கு
வாய்ப்பினை கொடுக்க வேண்டி
சோதரி புட்பா கிறிட்டி
சொல்தர வருவார் இங்கே
வாதினை எழுதி முன்பே
வரவிவண் விடுத்த தாலே
தூதுவ னாக வாதம்
தூக்கியே தருகின்றேன் நான்
நட்புப் பற்ரிப் புட்பா கிறிட்டி
நல்கும் பாடல் நாம் பார்ப்போம்
ஒப்புக் கென்றே வாய்வார்த் தைகள்
உதவிப் பின்னர் பகைதாக்க
அப்போ தைக்கே ஒதுங்கிக் கொள்ளும்
அவதி நட்பால் பயனில்லை
எப்போ தக்கும் நாட்ப்பாய் உள்ளோர்
ஏதம் தீர்ப்பார், உண்மையிதே!
புட்பா கிறிட்டி அவர்களின்
பாட்டுக்குப் பின்னூட்டம்
மண்ணிலே நண்பன் போன்ற
மனிதனும் இல்லை மாதோ
எண்ணியே சொல்லு கின்றார்
எழுகவி புட்பா கிறிட்டி
வண்ணமாய் விருத்தம் பாடி
வைத்தனர் விருந்து பாட்டில்
உண்டனம் அமுதம் என்றே
உறுபுகழ் பெற்று வாழ்க!
-கருவூர் இனியன்.
On Mar 19, 2026, at 18:25, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDb8tkn1Ed1N9hqYQyOCpewtO_RwEnyuqozgr4QxtkeZg%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1A1BB1E1-9773-4022-BB3C-9BA9D29DC11C%40gmail.com.
சந்த வசந்தம் கவிதைப் பட்டிமண்டபம்- 02
தொடக்க நாள்: 08-03-2026
தலைப்பு: : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது
அரணே!
இறை வணக்கம்
விநாயகர் துதி
(நேரிசை வெண்பா)
நல்லதமிழ் என்றுமென் நாவில் நடனமிடச்
சொல்வளம் நன்றாய்ச் சுரந்திட- அல்லல்கள்
தீண்டாதே ஆனைமுகத் தெய்வம் அருள்வாரே
வேண்டியவை யெல்லாம் விரைந்து.
கலைமகள் துதி
(கட்டளைக் கலித்துறை)
வாணியே! என்றும் வழங்குவாய் இன்சொலே வாக்கினிலே
பேணினேன் நின்னைப் பெருமைகள் யாவையும் பெற்றிடவே
ஏணியாம் சான்றோர் எழுதிய நன்னூல் இலக்கியங்கள்
தோணியாய்க் கொண்டே துயர்கடல் தாண்டத் தொழுதனனே.
அவையடக்கம்
(நேரிசை வெண்பா)
ஆன்ற கவிஞர் அவையிலொரு பாவலனாய்த்
தோன்ற எழுந்தேன் தொடைநடுங்கி - ஈன்ற
குழவிசொல் பாட்டின் குறைபொறுத்தே என்றன்
மழலைச்சொல் கேளீர்! மகிழ்ந்து.
நடுவர் வணக்கம்
(நேரிசை வெண்பா)
சந்தக் கவிதைகளைச் சட்டெனவே தான்புனைந்து
சிந்துகவி வேழமெனும் சிம்மத்தைத்- தந்தமுடை
குஞ்சரத்தைத் தன்பெயரில் கொண்டநான் போற்றுகிறேன்
நெஞ்சிலவர் சீரை நினைத்து.
தலைப்பு: ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது
அரணே!
(பாவகை : அகவற்பா)
சந்த வசந்தச் சபையோர் நடத்தும்
கவிதைப் பட்டி மண்டபம் தன்னில்
நாடுமுன் னேறவே பெரிதும் தேவை
அரணே! என்னும் அணிக்காய் வேண்டி
ஆவ லுடனே அகவற் பாவில்
அடித்துரைக் கின்றேன் அவையை வணங்கி. 6
ஏரினும் நன்றாம் எருவிடல் நட்டபின்
நீரினும் நன்றதன் காப்பென வள்ளுவர்
காவலின் உயர்வைக் காட்டிச் சொன்னார்
கழனி சிறக்கவே காவல் வேண்டுமாம்
தேசம் வளரவும் தேவைதா னேயது? 11
இயற்கை வளத்தை இயலும் மட்டும்
என்றும் காத்தல் எல்லோர் கடமை
இல்லை யென்றால் எதிரிகள் வந்தே
எடுத்துச் செல்தல் எளிதாம் காணீர்
அரணாய் அதனை அனைவரும் காக்கும்
அரசுகள் மட்டுமே அவனியை ஆளும். 17
கல்வி யாளர் கண்விழித் தேதான்
கண்டுபி டித்தக் கருவிக ளுக்குக்
காப்புரி மையவர் கைகளி லிலையெனில்
கண்டவன் வந்ததைக் கவர்ந்துதான் செல்வான்
கல்வி யால்வரு செல்வம் அனைத்தும்
கள்வன் அவனின் கைவசம் போகுமே
அந்தக் காப்புரி மையெனும் அரணே
அத்தனை வளத்துடன் அவர்பெயர் காக்கும். 25
நல்லிணக் கங்கொள் நாடுக ளோடே
நட்புபா ராட்டல் நல்லதே எனினும்
எப்பொழு தெவன்தான் எம்மைக் கவிழ்ப்பான்
என்ற எண்ணமே இறுதி வரையில்
அரணாய் இருந்தே அரசைக் காக்கும்
அவர்தம் நட்பும் அதனால் தொடரும். 31
நேர்மை தியாகம் பண்பா டெல்லாம்
பேணப் பேணப் பெரிதாய் வளரும்
பேணல் குறைந்தால் பேருடன் நிற்கும்
பேணுத லேயிவை காக்கும் அரணாம்
நேரிய பண்பதை நித்தமும் பேணவே
நீண்டநாள் அவைதான் நிலைக்கும் நாட்டிலே. 37
பஞ்சம் வந்தால் பசிபோக் கிடவே
உணவுப் பொருளை ஒழுங்காய்க் கிடங்கில்
சேமித் துவைத்தலே சிறந்ததோர் அரணாம்
ராணுவம் எத்தனை பெரிதா னாலும்
தளவா டங்களைத் தான்கொளும் பாசறை
தன்னைக் காத்தலே தலைகொள் பணியாம்
அமைச்சகம் தொடங்கி அலுவல கம்வரை
கண்கா ணிப்புக் கேமரா தானே
கள்வரைப் பிடிக்கும் கருவியாய் உளது?
அரசுப் பணிக்குமே அதுவும் அரணாம்! 47
வங்கிப் பணமும் வாக்குப் பெட்டியும்
பாது காப்பாய்ப் பயமின் றிருக்கும்
பல்வகை அடுக்கில் கணனியும் இணையமும்
பலம்கொள் கடவுச் சொற்களோ டி்ருந்தால்
இதனை நன்றாய்ச் செய்திடும் நாடே
இன்றைய உலகில் இனிதொரு நாடாம்! 53
செயற்கைக் கோள்கள் செயல்படா விட்டால்
ஜெகத்தினில் வாழ்க்கை சீர்குலைந் திடுமே!
எதிரிக ளாலவை இறக்கா திருக்க
எத்தனை விதங்கள் இவற்றைக் காக்குமோ
அத்தனை யும்சேர் அதிதொழில் நுட்ப
ஒருங்கி ணைந்த உன்னதச் செயலியைக்
கொண்ட நாடே குவலயம் ஆளும்! 60
நாளைய போர்தான் நடக்கப் போவது
வானின் வெளியிலும் வாரியி லும்தான்
வதம்செயும் கணைகள் வருவதும் கூட
வானில் இருந்தென வல்லுனர் உரைப்பார்
எனவே ஏவு கணைகளைத் தாக்கும்
எதிர்க்கணை பலவகை இருக்கும் நாடே
இருநில மீதினில் ஏற்றம் கொளுமாம்!
தூரத் தில்வரும் தூசியைக் கூடத்
துல்லிய மாகக் கணித்திடும் ரேடார்
தீரங் களிலே சீருடன் அமைப்பார்
நேரிய காவல் நிறைந்தொரு நாட்டில்!
முத்தம் கொடுக்கும் ஏவு கணைகளை
( kissing missiles)
மொத்தமாய் எல்லை முழுவதும் வரிசையாய்
வைத்திருந் தாலே வலிமைகொள் நாடாம்!
அணுசக் தியினால்ப் பலநாள் இயங்கும்
மூழ்கிக் கப்பல் முழுதும் காக்கும்
கரைகளைக் கொண்ட கடல்சூழ் நாடே
கலியினில் வல்லமை கொளும்சீர் நாடாம்!
வலியவ னைத்தான் வலியவன் என்றும்
வணங்குவான் என்றே வான்வெளி ஆய்ந்த
அறிவிய லாளராம் அப்துல் கலாமும்
அடித்துச் சொன்னதும் அதுவே தானே?
இவைதான் அரணாய் இருந்தே கண்ணின்
இமைபோல் நாட்டை இனிமேல் காக்கும்
கோட்டையும் அகழியும் கொத்தளங் களுந்தான்
நாட்டினைக் காத்த நாள்களை யெல்லாம்
வரலாற் றினிலே வைத்தே படிக்கலாம்! 87
காப்புரி மைதான் கல்விக் கரணே!
கடவுச் சொற்கள் கணனிக் கரணே!
கள்ளத் தனத்தைக் கனிவுடன் தடுக்கக்
கண்கா ணிப்புக்்கேமரா அரணே!
ஏவு கணைகள் எல்கைக் கரணே!
மேவும் நாவாய் வேலைக் கரணே!
அரணே காக்கும் அனைத்தையும் எனவே
நாடு சிறக்கப் பெரிதும் தேவை
அரணே! என்றுதான் அறுதியிட் டிறுதியில்
தீர்ப்பினை வழங்கத் திரும்பவும் வேண்டி
நடுவரை வணங்கி நானும் நிறுத்துமுன்
தடையிலா மழைபோல் சந்தக் கவிதைகள்
கொடையெனக் கொடுக்கும் கோன்களைப் போற்றினன்
விடைபெறும் சத்திய வேழனாம் நானே. 101
அருஞ்சொற் பொருள்:
வேலை - கடல்; நாவாய் - கப்பல்
வேழம் , குஞ்சரம் - யானை;
காப்புரிமை - patent, copyright
பலம்கொள் கடவுச் சொல்- strong password
கோன் - அரசன்
...
தலைப்பு: ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது
அரணே!
(பாவகை : அகவற்பா)
சந்த வசந்தச் சபையோர் நடத்தும்
கவிதைப் பட்டி மண்டபம் தன்னில்
நாடுமுன் னேறவே பெரிதும் தேவை
அரணே! என்னும் அணிக்காய் வேண்டி
ஆவ லுடனே அகவற் பாவில்
அடித்துரைக் கின்றேன் அவையை வணங்கி. 6
...
காப்புரி மைதான் கல்விக் கரணே!
கடவுச் சொற்கள் கணனிக் கரணே!
...
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOGXXarcO9VCy-3RjBP%3D%2B-S7C3ssesMT8D4n534LVWt9g%40mail.gmail.com.
On Mar 20, 2026, at 21:36, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF2vw7hig95DfeMhm9CW22fbexJg_zfqrwURS0azhkE8xw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/2340A834-6C6E-4DC9-AA9A-37D6DA5200CF%40gmail.com.