கவிதைத் தொடர் பட்டிமண்டம் 2

257 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 8, 2026, 12:02:45 PMMar 8
to santhavasantham
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்

மார்ச்சு 12ந்தேதி அரங்கம் தொடங்கும் என்றிருந்துவிட்டேன்.  இன்றைக்கு அதாவது மார்ச்சு 8ந்தேதி தொடங்குகிறது என்பதை இப்போதுதான் அறிந்தேன். 

வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற் றானை
 வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை, துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட் டானை
  வித்தானை மறையானை, குறையானை, வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை, கருணை யானை
  கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை, கவிதை யானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானைத்
  தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகின்றேன் காக்க நன்றே

தொடக்கம்
கவிதைத் தொடர் பட்டிமண்டம்

தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது
\
படை, குடி, கூழ்,  அமைச்ச், நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்வி


சண்டை போட்டால் சிலசம யத்தில்
   சந்தோ ஷம்மேன்  வருகிறது?
மண்டைக் குள்ளே வாதுக ளுக்குள்
   மாட்டிக் கொள்ளும் வகையுண்டோ
சிண்டு முடித்தல் என்கிற ஒன்றும்
   செய்வ துண்டு சிலசமயம்
உண்டிங் கேயோர் சொல்விளை யாட்டே
    உற்சாகம்நாம் பெற்றிடலாம்

பட்டி  மண்ட பத்தினில் இன்று
 பாடல், கவிதை விளையாடும்
வெட்டிப் பேச்சை வீசிட வேண்டாம்
  வித்தை காட்டும் ஆவேசம்
எட்டிப் பார்த்தால் எவ்விடத் தேயும்
   எரிச்சல் மூட்டும் நரியாட்டம்
கொட்டித் தீர்ப்போம் சொல்விளை யாட்டில்
  கும்மா ளந்தான், வாருங்கள்

**

நாடு சிறக்க மிகவதிகம்
   நமக்குத் தேவை எதுவென்றே
கூடி அலசிப் பேசுதற்கே
   குழுமி  யுள்ளோம் , வள்ளுவரின்
ஏடு நமக்கு வழிகாட்ட 
   எடுத்துக் கொண்ட தலைப்பினிலே
போடு போடென் றிங்கேநாம்
    புலமை காட்டப் போகின்றோம்.

தங்கள் கருத்தை வலியுறுத்தத்
    தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
   பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
   இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
     தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்


இமய வரம்பன் படையென்பார்
   இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
   ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
    நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
   எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்

இயற்கை வளமே அதிகமென
     இசைப்பார் அரசி பழனியப்பன்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
      தங்க வேலன் சாற்றிடுவார்
இயக்கம் யாவும் குடிபடையின்
      இருப்பில் என்பார் கவிஞரஷோக்
நியமம் செப்பும் அமைச்சுக்கு
      நேரம் இன்னும் இருக்கிறது

எல்லாம் தேவை என்றாலும்
  இதுதான் அதிகம் தேவையென
வல்லாங் கிங்கே வாதிடவே
  வாருங்கள்சொல் வல்லோரே
கல்லை எடுத்து வீசாமல்
  களத்தில் சொல்லை வீசுகிறோம்
சொல்லும் தாக்கும், வடுவின்றிச்
   சொல்லத் தெரிந்தால் அதுபோதும்

இற்றை நாளில் படைக் கென்றே
  எடுத்து வைக்கும் நிதியதிகம்
கற்றுக் கொள்ள வில்லையெனில்
  காசா இங்கே காப்பாற்றும்
பெற்றுக் கொள்ளும் கல்வியில்தான்
   பிழைப்பே உண்டென் ரியம்பிடலாம்
வெற்றுப் பேச்சேன்? கூழின்றி
    வீழ்ந்து கிடந்தால் என்ன பயன்?

எல்லா மிருந்தும் கொள்ளையிட
    எதிரி இருப்பான், காப்பாற்ற
நல்ல பாது காப்பாக, 
   நமக்குத் தேவை அரணன்றோ
வெல்லுமா வீண் பகைக் கூட்டம்
   வேண்டும் நட்பே வெற்றிதரும்
அல்ல அல்ல , நேர்மையினுக்(கு)
   அடுத்த படிதான் மற்றெல்லாம்

அன்று நாட்டு விடுதலையை
    ஐயா பெற்றோம் தியாகத்தால்
இன்றைக் கும்தான் அதுதேவை
    இயற்கை வளத்திற் கீடாக
ஒன்றை எடுத்துச் சொலப்போமா?
     உமக்கு வேண்டும் நல்லமைச்சன்
அன்று சாணக் கியனாலே
     ஆட்சி அமைந்த தறியீரோ

என்றெல் லாமிங் கிதமாக
     எடுத்துப் பேச வந்துள்ளீர்
ஒன்று சொல்வேன் , வித்தகமும்
     உள்ளே ஊறும் கவிப்பெருக்கும்
மன்றில் நடனம் ஆடட்டும்
     மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்
நன்று நடக்கும் அரங்கத்தின்
      நாட கத்தைக் கண்டிடலாம்
   

 இலந்தை
 8-3-2026
  
   








Subbaier Ramasami

unread,
Mar 8, 2026, 12:06:58 PMMar 8
to santhavasantham
முதல் அழைப்பு:    கவிஞர் இமயவரம்பன்

இமய மேதன் எல்லையென
  எடுத்துப் பேரில் வைத்துள்ள
இமய வரம்பன், நற்கவிஞர்
   இசைவாய்ப் பேசும் பேச்சாளர்
அமைவாய் உரைகள் எழுதுபவர்
    ஆராய் கின்ற அறிவாளி
தமது பங்காய்ப் படைச்சிறப்பைச்
    சாற்ற இங்கே அழைக்கின்றேன்

இலந்தை
8-3-2026

இமயவரம்பன்

unread,
Mar 8, 2026, 5:28:39 PMMar 8
to santhav...@googlegroups.com, santhavasantham
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

கடவுள் வாழ்த்து - முருகன் துதி
செடியார் வினைகள் செறுவாய் எனநான்
தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்
அடையார் வெருவ அடியார்க் கருளும் 
படைவேல் உடையான் பதம். 

(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)

தலைவர் வாழ்த்து
சொன்னயம் சான்ற சுடர்க்கவிஞர் உள்ளத்தில் 
உன்னதம் ஓங்கும் ஒருதலைவர்  - மன்னு
புகழ்சேர் இலந்தையார் பூந்தமிழாம் துன்பப்
பகைதீர்த் தொழிக்கும் படை.  

அவை அடக்கம்
சீராரும் தேவேந் திரனவையில் மேனகையின்
நேரேயோர் பேயாடி நின்றதுபோல் - ஏரார்
நடைநின்ற நாவலர்வாழ் நல்லவையில் நானும்
படையென்று பாடினேன் பா.

தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

படைப் பத்து
(நேரிசை வெண்பா)

விதையிட்டுச் செந்நெல் விளைமுன்னே மிக்க
முதலிட்(டு) அருந்தொழில்செய் முன்னே - புதிதோர்
கலமாக்கி விண்பயணம் காண்முன்னே நாட்டைப்
பலமாக்க வேண்டும் படை. (1).
(கலம் ஆக்கி = விண்கலம் செய்து)

சாலப் பழநெறிகள் தாம்சிறக்க எங்கும்நாம்
கோல விழவெல்லாம் கொண்டாடப் - பாலை
நனிவெயிலில் முந்நீர் நடுவில் குளிரும் 
பனிமலையில் வேண்டும் படை. (2).
(விழவு = விழா; முந்நீர் = கடல்)

ஆலைத் தொழில்வளர்க்க ஆன்ற கலைசிறக்கக்
காலம் கடக்கும் கவியிசைக்க - மூல
அடித்தளமாம் நல்ல அரணமைக்கும் சத்தி
படைத்திடவே வேண்டும் படை. (3).

விடம்பாய்ச்சித் தாக்காமல் வேற்றார் வெருவப்
படம்காட்டி ஓட்டிடுமாம் பாம்பும் - அடங்காத் 
துயருறுத்தும் வெம்பகையைத் தோள்வலிமை காட்டிப்
பயமுறுத்த வேண்டும் படை.  (4).
(வேற்றார் = பகைவர்; வெருவ = அஞ்சும்படியாக;)

ஞாலமிசைத் தாழாமல் நாடு தழைத்திடவும்
காலமெலாம் தன்னுரிமை  காத்திடவும் - மேலோர்
மதித்திடவோர் தொல்வழியில் வாழ்ந்துயர்ந்து வெற்றி
பதித்திடவும் வேண்டும் படை.   (5).

ஆதி அறங்காக்க அன்பின் நலங்காக்க 
தீதில் வினைஞர் திறல்காக்க - நீதி
நிலைகாக்க எங்கும் நிறைந்தோங்கும் செல்வம்
பலகாக்க வேண்டும் படை.  (6).

வரப்புடைக்கும் வெள்ளத்தும் வான்பிணிக்கா லத்தும் 
பொருப்புடைக்கும் பூப்பிளப்பின் போதும் - நிரப்பாம்
நசிவறுத்துச் சோறு நனிவழங்கி மக்கள்
பசியொழிக்க வேண்டும் படை (7).
(பொருப்பு  = மலை; பூப்பிளப்பு = பூகம்பம்; நிரப்பு = வறுமை;)

நிதியுயர வாழ்க்கை நிலையுயரக் கோணா
மதியுயர வாய்மை மலரக் - கதிர்போல்
கொடியுயரக் கோலுயரக் கோதிலா மாதர்
படியுயர வேண்டும் படை.  (8).
(கோது = மாசு; படி = நிலை)

சட்டமெலாம் சாய்ந்து தவறே பெருகுங்கால்
கெட்டழிவோர் கூக்குரல் கேட்குங்கால் - கட்டமெழும்
காலத்தே ஆட்சி கவிழுங்கால்  தேசத்தைப்
பாலிக்க வேண்டும் படை. (9).
(கட்டம் = கஷ்டம்; ஆட்சி = அரசு; பாலிக்க = காக்க)

கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டி
மடமை இருள்கவிய வாட்டிக் - குடியின் 
மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்ய
பகையடக்க வேண்டும் படை.(10).

- இமயவரம்பன் 

Kaviyogi Vedham

unread,
Mar 8, 2026, 8:43:56 PMMar 8
to santhav...@googlegroups.com
  ஆஹா. முதல் கவியே நல்ல  பொருள் சிறப்பைக் கொண்டதாக அழகுற அமைந்தது.  வாழ்க  இமயம் கவி..
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/D44E9588-D638-43F2-B48C-19726C9AF9E7%40gmail.com.

Kaviyogi Vedham

unread,
Mar 8, 2026, 8:47:39 PMMar 8
to santhav...@googlegroups.com
தலைமைக்கவிதை  மிக்க  சுவை. வாழ்க தலைவர்,
  யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 8, 2026, 9:05:16 PMMar 8
to சந்தவசந்தம்
நாற்படையில் முற்படையாம் நல்லநடை வெண்பாவாம் 
தேர்ப்படையில்  எண்ணங்கள் தேர்ந்தெடுத்தே - ஆர்ப்பரித்து  
வல்ல களம்கண்டீர் ; வன்தேர்ப் படையிதுவே 
வெல்லுமோ? காண்போம் விரைந்து!

அன்புடன் 
அரசி. பழனியப்பன் 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 8, 2026, 10:28:30 PMMar 8
to santhav...@googlegroups.com

படை என்றதும் பாடலைப் படைத்துவிட்டீர்!

Nice.

One minor comment inline below.

V. Subramanian



On Sun, Mar 8, 2026 at 5:28 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

கடவுள் வாழ்த்து - முருகன் துதி
செடியார் வினைகள் செறுவாய் எனநான்
தொடையார் தமிழால் தொழுதேன் - அடலார்
அடையார் வெருவ அடியார்க் கருளும் 
படைவேல் உடையான் பதம். 

(செடியார் = செடிகள் போல் பெருகி வளரும்; அடையார் = பகைவர்; தொடையார் = தொடுக்கப்பட்ட; அடல் = வலிமை; அடலார் அடையார் = வலிமைமிக்க பகைவர்)


==>
/செறுவாய் /

செறுதல் - செறாய் - என்று வரும் என்று எண்ணுகின்றேன்.
செறுக - may possibly fit.
 
...

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 1:06:06 AMMar 9
to santhav...@googlegroups.com

பட்டிமன்றத் தலைவர் கவிவேழம்

அவர்களின் தலைமைக் கவிதைக்குப்

பின்னூட்டம்.

 

விருத்தப் பாவில் திருத்தமுற

   விளக்கிச் சொன்னார் கவிவேழம்

பொருத்த மாகக் கவியாத்துப்

   பொதுவில் வைத்தார்; அவ்வழியே

வருத்த மின்றி வண்டமிழில்

   வன்னக் கவிதை வடித்திடலாம்

தருக்கம் செய்யும் மன்றத்தில்

   தமிழ்ப்பா மேலும் மெருகேறும்!


-கருவூர் இனியன்.

 

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 1:19:31 AMMar 9
to santhav...@googlegroups.com

படை குறித்துப் பாடிய பாவலர்

இமயவரம்பன் அவர்களின்

கவிதைக்குப் பின்னூட்டம்.

 

படைவேல் உடையான் பரிவோடு

   படைத்தார் கவிதை படைகுறித்து

தடையே இல்லா ஓசையுடன்

   தாவிச் செல்லும் வெண்பாக்கள்!

 

முற்றும் சிறப்பாய் இருந்தாலும்

   முழுதாய் ஒப்பேன் அவர்கருத்தை

சற்றே இடிக்கக் காண்கின்றேன்

   சாற்ற வருவேன் என்சுற்றில்!

 

-கருவூர் இனியன்.

 

Arasi Palaniappan

unread,
Mar 9, 2026, 2:31:46 AMMar 9
to சந்தவசந்தம்
நடுவர்,கவிமாமணி இலந்தைக் கவிவேழம் அவர்களின் தலைமைக் கவிதைக்குப் பின்னூட்டம் 

கவிதைத் தொடராம்
 பட்டிமன்றக் 
     கனிவார் தலைமை நனியேற்றுச் 
செவியில் தைக்கும் வகையினிலே 
      செம்மை யாகத் தலைப்புகளைக் 
கவிஞர் தங்கள் பெயரோடு 
      காட்டும் விதமோ மிகுசிறப்பு 
குவித்தேன் என்கை,இயற்கையெனும் 
      கொஞ்சும் வளங்கள் மனம்கொண்டே!

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:15:02 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாரின் அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றி த்

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:21:58 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பசுந்தமிழ்தேர் சீரார் பழனியப்பர் வாழ்த்தால்
வசந்தமெனப் பூக்கும் மனம்.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:23:57 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நகைச்சுவையுடன் வாழ்த்திய திரு. சிவசிவா அவர்களுக்கு மிக்க நன்றி!

“செறுக” - நல்ல பரிந்துரை!

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 6:33:16 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தாக்கும் படைபோற்றித் தந்தார் இனியனார்
வாக்கில் சிறந்ததமிழ் வாழ்த்து.

🙏

M. Viswanathan

unread,
Mar 9, 2026, 8:03:41 AMMar 9
to Santhavasantham
"வேழம் முழங்க இமயப் படைசெல்லத்
தாழம்பூ வாசத் தமிழ்."

அற்புதம்.

அன்பன்,
மீ.விசுவநாதன்
09.03.2026 17.30pm


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 8:39:27 AMMar 9
to santhav...@googlegroups.com, Santhavasantham
மிக்க நன்றி, திரு. மீவி.

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:17:43 AMMar 9
to santhav...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 9, 2026, 11:20:37 AMMar 9
to santhav...@googlegroups.com
கவிதைத் தொடர் பட்டிமண்டபத் தலைவர் கவிவேழம் அவர்தம் அழைப்புக் கவிதைக்குப் பின்னூட்டம்:

படையின் பலத்தைப் பறைசாற் றிடவும்
… பணமும் உணவும் தேவை யென்றும்
இடையில் பகையை ஒழிப்ப தற்கே
… இயல்பாய் அரணும் இயற்கை யென்னும்
தடையில் லாத தனித்தாம் சிறப்பில்
… தங்கும் நேர்மை நட்பும் தியாகம்
குடிகள் மனத்தில் குறிக்கோ ளாக்கக்
… கொடுத்த கருத்தால் சிரம்தாழ் கின்றேன்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:21:25 AMMar 9
to santhav...@googlegroups.com
இமயவரம்பனார் கவிதைக்குப் பின்னூட்டம்

படைச்சிறப்புப் பற்றியிங்கே பத்தாதோ என்றே
நடைச்சிறப்புப் பாடல் நவின்றார்- தொடக்கமாய்
வாதிங்கு  இமய வரம்பன் வழங்கினார்
ஏதுண்டு பின்னர் இவண்?

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:27:32 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே!

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:31:40 AMMar 9
to santhav...@googlegroups.com
இரண்டாம் அழைப்பு  கவிஞர் இனியன்

ஆயுதங்கள் படைபலமாய் வைத்தி  ருந்தும்
    அவையியக்கம் பெறுவதற்கோ கல்வி வேண்டும்
போயுதவி வேறிடத்தே பெறவா கூடும்?
      புலமையின்றிக் கவிபாட முனையப் போமா? 
பாயுமொரு வீரத்தோடு இயக்கு கின்ற
       பட்டறிவும், தந்திரமும், படைக்கு வேண்டும்
ஆயுமொரு பார்வையினால் கல்வி மேன்மை
      அளிப்பதற்கு வருகின்றார் இனியன் இங்கே!

நல்லா சிரிய ராய்ப்பெருமை
  நாட்டி யுள்ள கவி இனியன்
சொல்லா டலிலே வல்லவராய்
  துளைந்து முத்தை எடுக்கிறவர்
கல்லா விட்டால் எப்பேறு
   கண்ட போதும் போதாதாம்
நல்லா ராய்ச்சி செய்திங்கே
    நல்க வருக கவியினியன்

இலந்தை



 

Subbaier Ramasami

unread,
Mar 9, 2026, 11:33:46 AMMar 9
to santhav...@googlegroups.com
இங்கே இமயவரம்பன் முதலில் வாதத்தை வைத்துள்ளதால்  எவரின் வாதத்திற்கும் பதில் வாதம் செய்ய வாய்ப்பில்லை. எனவே  இறுதியில் அவருக்கு  எதிர்வாதம் செய்ய வாய்ப்பளிக்கப்படும்

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:37:30 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இரண்டாவது வாய்ப்புக்கு மிக்க நன்றி, தலைவரே!

Ram Ramakrishnan

unread,
Mar 9, 2026, 11:37:46 AMMar 9
to santhav...@googlegroups.com
கவிஞர் இமயவரம்பன் கவிதைக்குப் பின்னூட்டம்:

படையின் பலத்தினைப் பாங்காய் உரைத்தீர்
குடிநலம் பேணற்குக் கொள்க - படையெனவே
யாத்த கவிப்பூக்கள் சேர்த்தளித்த செம்மையை
ஏத்துதற் கின்றொருசொல் இல்

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 9, 2026, 11:48:11 AMMar 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

தீராத அன்புடையார் சீரார் இராம்கிராம்

ஏரார்ந்த செஞ்சொல் இனிப்பு.


மிக்க நன்றி! 

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 10:20:04 PMMar 9
to santhav...@googlegroups.com
காலை எழுந்தவுடன் அரங்கத் தலைவரின் அழைப்பைக் கண்ணுற்றேன். இன்னும் சற்று நேரத்தில் என் வாதத்தை முன்வைப்பேன். நன்றி.

-கருவூர் இனியன்.

Govindaraju Arunachalam

unread,
Mar 9, 2026, 11:23:02 PMMar 9
to santhav...@googlegroups.com

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 

அவை வணக்கம்

 

அரங்கத் தலைவர் கவிவேழம்

   அடிகள் போற்றி வணங்குகின்றேன்

அரங்கில் உள்ளோர் அனைவரையும்

    அடியேன் வணங்கி மகிழ்கின்றேன்

அரங்கத் துள்ளான் அருளாலே

    ஆக்கித் தருவேன் மாக்கவிதை

அரங்கில் நின்று கோலோச்சும்

   அன்னைத் தமிழே அடிகோல்க!

 

அவையடக்கம்

 

பேச்சில் செயலில் பெருமையினைப்

   பெரிதும் போற்ற விழைகின்ற

ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல்

   ஒல்லும் வண்ணம் சிந்தித்து

மூச்சுக் கொருபா இயற்றுகின்ற

   மூத்தோர் உள்ள அவையினிலே

கீச்கீச் சென்று கத்துகின்ற

   கிளிபோல் யானும் வந்தேனே!

 

கல்வி

 

அமைவாய் தேசம் இருப்பதற்கு

   அரணாய்ப் படைகள் அமைப்பாக

அமைய வேண்டும் என்பதனை

   அடுக்க டுக்காய் அழகாக

இமய வரம்பன் எடுத்துரைத்தார்

   எனினும் நாட்டின் வருமானம்

இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்

   இன்னல் விளைக்கும் போராலே!

 

கல்வி என்னும் கைவிளைக்கைக்

   கையில் ஏந்தும் தலைவர்தாம்

சொல்லில் செயலில் தூய்மையினைச்

   சுடராய்ப் படர விடுவார்கள்

அல்லும் பகலும் அறவினையை

   அழகாய்ச் செய்ய முன்வருவர்

தொல்லை நல்கும் படைக்கலனைத்

   தொட்டுப் பார்க்கச் செய்யாரே!

 

பிச்சை எடுத்துக் கற்பதையும்

   பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்

கச்சை கட்டி வருகின்ற

   கழிபே ரின்னல் கடிந்தேகப்

பச்சை விளக்காய்ப் பாதையிலே

   பரவி நிற்கும்; அதனாலே

இச்சை கொண்டு கற்றால்தான்

   இனிய தேசம் உருவாகும்!

 

கல்லா மாக்கள் என்பவர்கள்

   கல்லும் மண்ணும் போன்றோரே

எல்லாம் இருந்தும் என்னபயன்

   ஏற்ற கல்வி இல்லையெனின்

வல்லான் வகுக்கும் வாய்க்காலை

   இல்லா தாக்கும் ஓர்கருவி

நல்ல கல்வி மட்டும்தான்

   நல்லோர் இதனை ஏற்பாரே!

 

கல்வி என்னும் ஆயுதத்தைக்

   கையில் எடுக்கும் பாரதமே

வெல்லும் செல்லும் திசையினிலே

   வெற்றி வாகை சூடிடுமே

எல்லா நாடும் இதன்வழியை

   ஏற்று நாளும் பின்பற்றும்

இல்லா தொழியும் இழிசெயல்கள்

   இகத்தில் இன்பம் மேவிடுமே!

 

கற்று வாழக் கருதாதார்

   கண்கள் இரண்டும் புண்ணென்று

முற்றும் முடிவாய் வள்ளுவனார்

   முழக்கம் செய்தார் கேளீரோ

பெற்றுப் பிழைத்தல் வாழ்வாமோ

   பெற்றம் அதனைச் செய்திடுமே

விற்றுத் தொலைத்தால் மானத்தை

   விறைப்பாய் நிற்க முடியாதே!

 

நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்

   நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்

மறைவாய் உள்ள மாசெல்லாம்

   மாயம் நிகழ்ந்து நீங்கிவிட

துறைகள் தோறும் கல்வியினைத்

   துலங்கச் செய்தல் முதற்கடமை

குறைகள் இருப்பின் என்கருத்தில்

   குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!

 

-கருவூர் இனியன்.

 

 

Arasi Palaniappan

unread,
Mar 9, 2026, 11:46:40 PMMar 9
to சந்தவசந்தம்
இனியனார் கவிதைக்குப் பின்னூட்டம் 

கல்வி கற்ற பேராசான் 
    கல்வி மேன்மை 
கனிந்துரைத்தார் 
செல்வம் சற்றும் வேண்டாமோ?
    தேசம் செழித்தே ஓங்குதற்கே!
நல்வ ளங்கள் வேண்டாவோ?
     நாடு தழைத்தே ஓங்குதற்கே!
சொல்வார் நடுவர்  நாடுயரச்
     சொக்கு தமிழில் நல்தீர்ப்பே!

அரசி. பழனியப்பன் 
      
      
       
    
      
     
     
     

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 10, 2026, 1:06:58 AMMar 10
to சந்தவசந்தம்
On Sunday, March 8, 2026 at 9:32:45 PM UTC+5:30 Subbaier Ramasami wrote:
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்

தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
      தங்க வேலன் சாற்றிடுவார்

 இலந்தை
 8-3-2026
  
   
தலைவரே எழுதத் தொடங்குகிறேன் .
தியாகத்தைப்பற்றி
நன்றி

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 10, 2026, 1:09:14 AMMar 10
to சந்தவசந்தம்

இமையவரம்பன் அவர்களின் கவிதை அனைத்து இனிக்கிறது.


( பாவகை வஞ்சி விருத்தம் பூ பூ மா)

படைக்கப்பட்ட அற்புதமான பா
படைக்குச்சென்றோர் தியாகத்தையெண்ணிப் பார்
படைக்குச்சென்றி றந்தோரையுமெண்ணி பார்
படைக்குப்பின்னே தியாகத்தையெண்ணிப் பார்


On Monday, March 9, 2026 at 2:58:39 AM UTC+5:30 இமயவரம்பன் wrote:
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:


தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

படைப் பத்து
(நேரிசை வெண்பா)

கடவுள் பெயராலே காழ்ப்பனைத்தும் காட்டி
மடமை இருள்கவிய வாட்டிக் - குடியின் 
மகிழ்வனைத்தும் மாய்க்கும் மதவெறியாம் வெய்ய
பகையடக்க வேண்டும் படை.(10).

- இமயவரம்பன் 

மிகவும் சிறப்பான கவிதை இது.

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 10, 2026, 3:29:05 AMMar 10
to சந்தவசந்தம்
கருவூர் இனியன் அவர்களின் பாடல்கள் 
எப்போதும் இனிக்கும் கற்கண்டு.


குறைகள் ஏதும் இல்லாத
   குறிப்பு மிக்க தரமான
நிறைகள் நிறைந்த பாடலது
   நித்தம் கல்வி கற்றிடவே
மறைவாய் தியாகம் செய்வோரும்
  மண்ணில் இருந்து நிஜம்தானே
துறைகள் பலவும் இருந்தாலும்
  துயரைத் துடையோர் தியாகிகளே

On Tuesday, March 10, 2026 at 8:53:02 AM UTC+5:30 Govindaraju Arunachalam wrote:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 

அவை வணக்கம்

 


நிறைவாய் ஒன்றைச் சொல்லிடுவேன்

   நிலைத்த புகழ்சேர் பாரதத்தில்

மறைவாய் உள்ள மாசெல்லாம்

   மாயம் நிகழ்ந்து நீங்கிவிட

துறைகள் தோறும் கல்வியினைத்

   துலங்கச் செய்தல் முதற்கடமை

குறைகள் இருப்பின் என்கருத்தில்

   குழந்தைப் பேச்சென் றொதுக்கிடுக!

 

-கருவூர் இனியன்.

 


 

 

 

O

Rajagopalan Soundararajan

unread,
Mar 10, 2026, 6:57:53 AMMar 10
to சந்தவசந்தம்
பட்டி மண்டபத்துக்கே உரிய விறுவிறுப்பு. படை உதவாது என்று வாதாடி, இவரும் கையிலே ஆயுதத்தையே எடுக்கச் சொல்கிறார்!

"கல்வி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் பாரதமே வெல்லும்"

மிகச் சரியே. 

'கல்லாதார் இலங்கை கட்டழித்த காகுத்தன்' என்கிறார் ஆழ்வார். கற்றறிந்து தர்மத்தை எடுத்துக்கூறும் ஒருவன் இருந்தான், அவனும் வெளியேறி காகுத்தனையே சரண் புகுந்தான், இனி இலங்கை 'கல்லாதார் இலங்கை'யாக ஆகிவிட்டது என்று கூறி இலங்கையை அழித்தான் என்பது விளக்கம்.

கல்விக்கே என் ஓட்டு

ஸௌந்தர் 



Ram Ramakrishnan

unread,
Mar 10, 2026, 11:47:02 AMMar 10
to santhav...@googlegroups.com
இனியனார் கவிதைக்குப் பின்னூட்டம்

பார்போற்றுங் கல்வியதன் பங்கைத் தந்தார்
… படையன்று நாட்டிற்கு முதன்மை என்றார்
தீர்வதனைச் சொல்கின்ற திகட்டாப் பேச்சு
… தெம்புதர மக்கள்தமைத் தெருட்டும் வீச்சு
ஈர்கின்ற கவிதையதில்  இனியன்  சொன்னார்
... ஏற்கின்ற வகையமைந்தே ஆர்க்கும் தன்னால்
சார்வோமோ தீர்ப்பிதென்றே நாட்டின் தேவை
… தருணமல்ல முடியும்வரை காத்தற் காவல்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Mar 10, 2026, 3:47:08 PMMar 10
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
இனியர் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு உண்டோ?

தெள்ளார் அறிவொன்றே திண்ணார் படையென்போம்
உள்ளார் மறுவொழியும் என்றுரைத்தார்  - கொள்ளக்
குறையாத கல்விக் குவையீயும் ஆசான் 
நறவார் மொழியினியர் நன்று.  

- இமயவரம்பன் 

Siva Siva

unread,
Mar 10, 2026, 4:29:00 PMMar 10
to santhav...@googlegroups.com
இனிய பாடல்.

நாட்டின் வருமானம் இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும் இன்னல் விளைக்கும் போராலே /

படைக்கும் படைக்கலனுக்கும் காசு வேண்டும்.
காசுக்குக் கல்வி வேண்டும் 
என்ற கருத்தமைந்த பாடல் காலத்தைப் பிரதிபலிக்கின்றது.

கல்வி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுக்கும் பாரதமே /

ஒரு பழைய சினிமாவில் ஜெய்சங்கர், "நான் போட்டால் தெரியும் போடு" என்று பாடுவதுபோல் வரும் காட்சி நினைவிற்கு வந்தது.

வி. சுப்பிரமணியன்


On Mon, Mar 9, 2026 at 11:23 PM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 ...

கல்வி

 

அமைவாய் தேசம் இருப்பதற்கு

   அரணாய்ப் படைகள் அமைப்பாக

அமைய வேண்டும் என்பதனை

   அடுக்க டுக்காய் அழகாக

இமய வரம்பன் எடுத்துரைத்தார்

   எனினும் நாட்டின் வருமானம்

இமைக்கும் பொழுதில் தீர்ந்துவிடும்

   இன்னல் விளைக்கும் போராலே!

 

....

Kaviyogi Vedham

unread,
Mar 10, 2026, 8:51:28 PMMar 10
to santhav...@googlegroups.com

KKSR

unread,
Mar 11, 2026, 1:46:06 PMMar 11
to santhav...@googlegroups.com
தலைவர், இமயவரம்பர் மற்றும் இனியன் அண்ணா கவிதைகளுக்கு பின்னூட்டமா?

முதலில் தலைவர்

எண்ணுவதும் ஏட்டில் எழுதுவதும் எப்போதும்
நண்ணுவதும் நற்றமிழும் நானிலமும்! - பண்ணிதனில்
பார்போற்றப் பாவலரைக் கூட்டிய நம்தலைவர்
ஏரார் தலைக்கவிதை ஏத்து!

இளவல் இமயவரம்பர்

படையே நடுங்கப் படர்ந்தசொற் கூட்டம் 
இடையே நிமிர்ந்ததமிழ் என்சொல்? - தடையினியில்!
என்தேசம் வெல்லும்! எதிர்வரயார்? என்பதுபோல்
தன்பதிலைத் தந்தவர்க்கு வாழ்த்து!

அண்ணல் இனியனார்

இவர்சொல்லைக் கேட்டால் இனிமை! வளமை!
தவறில்லாப் பான்மை! தலைமை! - எவர்மாட்டும்
கூனிக் குறுகா நிலைமை! குவலயத்தில்
ஏனினித் துன்பமும்? கூறு!

~சுரேஜமீ
11.03.2026 இரவு 09:45


---------------------------------------------------------------------------------------------------
This email transmission is confidential and intended for the addressee only. It may contain privileged and confidential information. If you are not the person or organisation to whom it is addressed, you must not copy, distribute, or take any action in reliance upon it. If you have received this message in error, please notify the sender immediately.


Subbaier Ramasami

unread,
Mar 11, 2026, 2:11:39 PMMar 11
to santhav...@googlegroups.com

,கல்வி நல்ல கைவிளக்காய்க்
  கவிஞர் இனியன் காட்டிவிட்டார்
சொல்ல, தொழிலைத் தொடங்கிவிட
  சோறு சமைக்க, நட்பேற
வல்ல அமைச்சாய் வழிநடத்த
   வருமே முதலில் அறிவுநலம்
நல்ல வாதம் வைத்திங்க 
    நகர்த்தி விட்டார் இத்தொடரே

 

பசிவந்  தாலோ தலைப்பிலுள
    பத்தும் பறக்கும் எனச்சொல்ல
புசிக்கும் கூழை அடிப்படையாய்க்
     கொண்டே கவிஞர் ராம் வருக!
விசையாய்  எதையும் விருப்பமுடன்
     விரைந்து கொடுக்கும் ஆற்றலுளார்
வசமாய் மற்றோர் திணரும்வகை
      வாதம் எடுத்தே வைத்திடுக!
இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 2:41:15 PMMar 11
to santhav...@googlegroups.com
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்  2


மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு. 

பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு

புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.


அண்மையில் இயற்கை எய்திய அருமையான எழுத்துச் சிற்பியும், சிறிது காலப் பழக்கமென்றாலும் 

மிக நெருங்கிப் பழகிய உணர்ச்சியை அளித்தவருமான கவிஞர் தில்லைவேந்தன் அவர்களுகோர்ப்

புகழஞ்சலிக் கவிதை ஒன்றும் இங்கிடுதற்குத் தலைவர் அனுமதிப்பீராக.



தலைமை: கவிவேழம் திரு. இலந்தை சு ராமசாமி

கடவுள் வாழ்த்து

நேரிசை வெண்பா

நாடதன் கூழ்ப்பெருமை நானுரைக்க நாவமர்வாய்

ஆடவல்லான் ஈந்தோனே ஐங்கரனே – கோடுவெள்ளம்

ஓடியடை வாரிதியில் ஓடமென ஆகிநின்றேன்

பாடுபொரு ளிங்கெனக்கீ வாய்.

 

கோடுவெள்ளம் – மலையுச்சிலினின்று வரும் வெள்ளம்., வாரிதி – கடல்

 

மறைந்த கவிஞர் தில்லைவேந்தன் புகழஞ்சலி

எண்சீர் விருத்தம்

மண்புரக்க மழைமேகம் வானின்று கொட்டும்

… மாந்தர்க்கு விளைவீட்டும் மங்கலத்தைச் சுட்டும்

பண்புரக்கப் பாப்புனைந்தார் பட்டமிலா வேந்தர்

… படைத்ததெலாம் தேன்தோய்த்துப் பாரோர்க்கு மீந்து

செண்டுமலர்க் கொத்துகளாம் செகத்தளித்த பாடல்

… “சென்றறியாப் பாதை”யதே தந்துசென்றார்த் தேடல்

விண்சிறக்க அழைத்தானின் விருப்பேற்றார் தில்லை

… வேந்தரவர் புகழினிற்கு மளவேது மில்லை.

 

“சென்றறியாப் பாதை” – கவிஞர் தில்லைவேந்தன் கவிதைத் தொகுப்பு

அவையடக்கம்:

நேரிசை வெண்பா

ற்றோர்முன் விற்பனர்போல் கைவரிசை காட்டுகிலேன்

விற்போரில் வாள்வீச்சு வீணன்றோ - சிற்றரங்கில்

பற்பலவாய் நானளித்தல் அற்பமெனத் தோன்றிடினும்

புற்கம் பொறுத்தால் புனை.

புற்கம் – புல்லறிவு, புன்மை, புனை – அழகு,

கவிதைத் தொடர் பட்டிமண்டபத் தலைவர் வாழ்த்து

கட்டளைக் கலித்துறை

உவப்பினிற் தோற்றிடும் ஓரா யிரமாய் ஒளிர்கவிகள்

செவிக்கினி வாக்கிடச் செந்தமிழ்க் கோவையாய்ச் சேர்த்தளிக்கும்

கவிக்கொரு வேழம் அவைக்காம் தலைவர் கழல்பணிந்தேன்

குவித்திடு கையனென் குற்றமும் நீக்குவீர் கோமகனே.

.

முதலுரை:

நேரிசைக் கலிவெண்பா

இறைமாட்சி” வள்ளுவத்தி லிட்டது மாறே

மறைபோற்றும் மாட்சியென நான்கைச் – சிறப்பாகச்

சேர்த்தார் கவிவேழம்., சீர்த்ததே இம்மன்றம்.,

ஆர்த்துக் கவிபடைப்போம் அன்புடனாய்ப் – போர்தவிர்போம்

நானிலத்தில் கல்வியொடு நல்லொழுக்க நேர்மையுடன்      5

கானின் இயற்கையைக் கட்டமைப்போம் – தேனொத்த

விட்டுக் கொடுத்தலை வேட்டுவோம்., வ்வனைத்தும்

கொட்டி முழங்கிடக் கூடுவோம் - சுட்டும்

படையமைச்சு. கூழும். குடியரண் நட்பாம்

அடித்தள ஆறைத் தொடர்ந்தே – எடுப்போம்.,                  10

படையதே நாட்டைப் பகையொழித்துக் காக்கும்

இடையில் எவர்வரினும் ஈதை – உடனளிக்கும்

நாட்டிற்குத் தேவைபடை நன்கறிவோம்., போதுமிதா

கூட்டுக் குடும்பத்திற் கூட்டுவதோ – ஏட்டறிவு

உண்ணற் குதவுமோ? மண்ணின் குடிநலம்                       15

எண்ணத்தில் ஏழ்தல் இயல்பன்றோ – திண்ணமாய்

ஒன்றுரைப்பேன் தேசபக்தி, ஓர்ந்த அறிவோடு

நன்றமையும் தன்னடக்கம் நாணயம், – ஒன்றில்

குடிவுயரும், உண்மை, வடிவாய் உணர்ந்தோம்.

நெடிதுயர ஈதே படியோ? – திடமாய்                              20

அரணமைத்த ஆட்சி அமையேல் பயனென்?

முரணில் பகையன்றோ முந்தும்? – “கரணமொன்று

தப்பின் மரணமே” சாற்றுவோர் சான்றோர்.,

அமைச்சின் பெருமை அவனி யறியும்

நமக்கெனு மாட்சி நலத்திற் – கமைச்சவைத்                     25

தேவையை யாமறிவோம். தீதற்ற நட்புற,

சேவை மனப்பான்மைச் சீருர – ஆவலுறும்

மக்கள் உளத்தினில் முக்காலும் தோன்றுவது

எக்கால் அமைச்சு மெழுற்சியுறும் – சிக்கல்கள்

ஈதாகக் கூழ்ப்பற்றி யிச்சபையில் சிந்திப்போம்                30

கோதற நாட்டிற்குக் கூழெனும் – ஆதாரம்

நாட்டின் வளர்ச்சியுடன் நாள்தோறும் முன்னேற்றம்

கூட்டிடும் செல்வவளம் கொள்வதுடன் – தேட்டம்

உணவினில் தன்னிறைவு, உற்பத்தி, மேலும்

பணம்நோக்காப் பான்மை, உழைப்பு., – கணநேரம்           35

கூழதன் மேம்பாட்டைக் கொண்டாடிச் கூறற்குத்

தாழ்வேனென் சென்னி சபைக்கு.                                 38


அருஞ்சொற் பொருள்:

ஈதை – துன்பம்

கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது

நிலைமண்டில ஆசிரியப்பா

வாழிய நடுவர் வாழ்கவிவ் வவையே

கூழெனப் படுதல் கூறற் கேண்மிரே

உழைப்பவர் வியர்வை என்றவவ் வமுதமே                              

தழைக்கு முண்டிக் கஃதா தாரமாம்

தடுத்தலி லதாய்ப்பெரு தனந்தரும் தரணியில்,                       5

அடுக்களை முதலென அரசவை வரைக்கும்

எள்ளள வுமையமில், இதுவாங் கூழே

வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில்

கூழே மேலாய்க் கூறலென் கடமை.

ஆழ்ந்து நோக்கிட அனைத்துமே புலப்படும்                            10                  

படைவலி கொளுபவர் பசியுறுஞ் சமயமேல்

உடைவாள் விட்டுடன் உதரம் பற்றுவர்

குடியினர் அமைச்சுடன் கொளுநட் போடரண்

பொடியாம் கூழெனும் புறப்பொரு ளிருந்திடேல்

பிணியற விளைவுடன் பெறுந்தனம் அரணிவை                     15            

அணியாய் நாட்டிற் கைந்தாய்க் கொள்ளினும்

விளைவாம் கூழே வித்தென் றாகிடும்

பொருளில் லார்க்கும் புத்தொளி தருவது

பொருளாம் கூழே போற்றலும் பிறிதிலை

பொருளில் லார்க்கிப் பூதல மிலையெனும்                            20            

மறைமொழி யதன்றன் மாண்பினை உரைத்திடும்

உழைப்பில் வாரா ஒக்கம் இல்லையே        

உழைப்பால் மக்களின் ஒழுக்கம் மேம்படும்

உழைப்பது மறிவிற் கூட்டுதல் வலிமையே           

உழைப்பினா லியற்கையும் உயர்தல் காணுவோம்                  25

உழைப்பே கூழதன் உறுதியென் றறிவோம்

மெய்வருத் தமுறுமவ் வினையில் என்றும்

வையம் உய்ந்திட வளர்கூழ் வான்போல்

கற்றவர் படித்துநற் கசடற மிளிர்ந்தே                         

உற்ற வூதியம் உடன்தரும் முதற்றளம்                                       30

படிப்பறி  வுமட்டுமே பசியறுக்  கலாகுமோ

வயிற்றினில் பசிவர வலிமை, நேர்மை

வற்றிப் போய்விட வறுமை வாட்டுமே

அறம்புகல் செயலதும் அவிந்து போகுமே                            

வறண்ட நாட்டினில் வயிற்றதன் பிழைப்பால்                          35

தன்னலம் துறத்தலாம் தியாகமும் தழைக்க

உன்னதப் பொருளே ஊர்ஜிதம் என்பேன்

ஊனுடல் வருந்திட வொழிந்திடும் தியாகம்

வானுயர்க் கருத்துமே வரட்சியில் அமிழும்   

மண்ணினிற் கிடைத்திடு மியற்கையின் வளங்கள்                 40

உண்ணற் கேதுவாய்ருவா கிட்டால்

ந்தநாள் ஆக்கும் இந்தநாட் டுயர்வு

கச்சாப் பண்டமும் கணிசமாய்க் கிடைப்பின்

உச்சம் விற் ஓங்கும் கூழதும்                 

தொழிலரின் வியர்வையே துளிகளாய்ப் பெருகி                     45

எந்திரச் சுழல்களில் இயற்றும் வர்த்தகம்

கருவுலம் நிறைதிடுங்ருப்பொருள் ஆகும்

அந்நியச் செலாவணி அமுதமாய்ப், பெருகும்

தன்நிறைத் தகவில் தார்மிக வழியில்                        

கூழே யிங்குக் கூடியோர்க் கடிப்படை                                        50

தொழிலினைத் தொடர்பவர் துணிச்சல் மேம்படு(ம்)

அழித்திடாச்  சிறப்பை  ஆக்குங் கூழே

ஆதலால் அறிவுடன், தியாகம், நேர்மை

நீதியொ டமைந்த நித்திய இயற்கை    

சூதிலா அமைச்சும் சுந்தர வரணுடன்                                        55

படைபலம் குடிநலம் கிடைத்த நட்பும்

தாங்கியே தழைக்கச் செய்திடும் வலிமை

ஈங்குக் கொண்ட வேற்றங் கூழே!                                  58

 

அருஞ்சொற் பொருள்:

உதரம் – வயிறு., எள்ளள வுமையமில் – எள்ளளவும் + ஐயம் + இல் 

வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில் – வள்ளுவர் இறைமாட்சி எனும் அதிகாரத்தில் சொன்ன 

படை, குடி, கூழ், அரண், அமைச்சு, நட்பு எனச் சொன்ன ஆறு அங்கங்களில்,

ஒக்கம் – உயர்வு., வளர்கூழ் – வினைத்தொகை

முதற்றளம் – முதல் தளம்., ஊர்ஜிதம் - உறுதி

உற்பவம் – உற்பத்தி., கருவுலம் – கருவூலம் என்பதன் இடைக்குறை

தன்னிறை –  தன்னுள் நிறைவு, self - sufficiency

 

இறுதியுரை:

கட்டளைக் கலித்துறை

வேழம் அளித்த வியத்தகு ஆய்வை விளக்குகையில்

ஆழக் கருத்தை அவையினிற் சொன்னேன் அருங்கவிகாள்

பேழையில் வைத்துப் பெருமையாய்ப் போற்றிடில் பேறெனதே

கூழைப் புகழ்ந்து கொடுத்த கருத்தினைக் கொள்ளுவிரே.

 

அன்பன்

ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 2:43:54 PMMar 11
to santhav...@googlegroups.com
தட்தச்சுப் பிழை:

"அவர்களுக்கோர்" எனத் திருத்துகிறேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Mar 11, 2026, 3:53:03 PMMar 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி அண்ணலே

இமயவரம்பன்

unread,
Mar 11, 2026, 6:15:41 PMMar 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தில்லைவேந்தர் புகழஞ்சலியுடன் தொடங்கிய திரு. இராம்கிராம் அவர்களின் அருமையான கவிதைக்கு எனது பின்னூட்டம்:

கூழதுவே வான்படைக்குக் குன்றா வலம்கொடுக்கும் 
கூழதுவே நாட்டின் குறையறுக்கும் - கூழதுவே
ஈடில் அறிவுயர்த்தும் என்றார் இராம்கிராம்
பாடல் விருந்து படைத்து. 

- இமயவரம்பன் 

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 6:17:32 PMMar 11
to santhav...@googlegroups.com
மிக அழகான பின்னூட்டத்திற்கு நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 11, 2026, at 18:15, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 11, 2026, 8:47:01 PMMar 11
to santhav...@googlegroups.com
நீண்ட பாடல்! Impressive. வாழ்க!

சில ஐயங்கள்.

வேட்டுவோம் / = ?
வேட்போம்? வேட்டிடுவோம்? வேண்டிடுவோம்?

எண்ணத்தில் ஏழ்தல்  /
எண்ணத் தெழுதல்?

குடிவுயரும் /
Typo. குடியுயரும்.

அரணமைத்த ஆட்சி அமையேல் பயனென்? /
அமையேல் = ?

வி. சுப்பிரமணியன்

On Wed, Mar 11, 2026 at 2:41 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்  2


....

முதலுரை:

நேரிசைக் கலிவெண்பா

இறைமாட்சி” வள்ளுவத்தி லிட்டது மாறே

மறைபோற்றும் மாட்சியென நான்கைச் – சிறப்பாகச்

சேர்த்தார் கவிவேழம்., சீர்த்ததே இம்மன்றம்.,

ஆர்த்துக் கவிபடைப்போம் அன்புடனாய்ப் – போர்தவிர்போம்

நானிலத்தில் கல்வியொடு நல்லொழுக்க நேர்மையுடன்      5

....

பணம்நோக்காப் பான்மை, உழைப்பு., – கணநேரம்           35

கூழதன் மேம்பாட்டைக் கொண்டாடிச் கூறற்குத்

தாழ்வேனென் சென்னி சபைக்கு.                                 38


அருஞ்சொற் பொருள்:

ஈதை – துன்பம்

கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது

நிலைமண்டில ஆசிரியப்பா

வாழிய நடுவர் வாழ்கவிவ் வவையே

கூழெனப் படுதல் கூறற் கேண்மிரே

உழைப்பவர் வியர்வை என்றவவ் வமுதமே                              

தழைக்கு முண்டிக் கஃதா தாரமாம்

தடுத்தலி லதாய்ப்பெரு தனந்தரும் தரணியில்,                       5

அடுக்களை முதலென அரசவை வரைக்கும்

எள்ளள வுமையமில், இதுவாங் கூழே

.....

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 9:03:00 PMMar 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சிவசிவா.

உங்கள் கருத்திற்கு என் விளக்கங்கள்:

வேட்டுவோம் / = ?
வேட்போம்? வேட்டிடுவோம்? வேண்டிடுவோம்?

வேண்டுவோம் என்பதன் வலித்தல் விகாரமாய்க் கொள்ளலாகாதா?

எண்ணத்தில் ஏழ்தல்  /
எண்ணத் தெழுதல்?

உங்கள் கருத்தை ஏற்கிறேன்

 குடிவுயரும் /
Typo. குடியுயரும்.

ஆம். சரியே.

 அரணமைத்த ஆட்சி அமையேல் பயனென்? /
அமையேல் = ?

அமையேல் - அமையாவிட்டால் - இந்தப் பொருள் ஏற்புடையதன்றா?

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 11, 2026, at 20:47, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Mar 11, 2026, 9:07:47 PMMar 11
to santhav...@googlegroups.com
வலித்தல் விகாரம் - இங்கு அதன் தேவை என்ன? யாப்பு / எதுகை / சந்தம் ?
வேண்டுவோம் என்றிருந்தால் இந்த இடத்தில் பொருந்தாதா?

அமைதல் - அமைந்திலையேல் / அமையாவிடில் / etc.
அமையேல் = எதிர்மறை ஏவல்.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 10:00:45 PMMar 11
to santhav...@googlegroups.com
வேண்டுவோம் - நிசரசயமாய்ப் பொருந்தும்

அமையேல் - உங்கள் கருத்துப் புரிந்தது. ஏற்கிறேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 11, 2026, at 21:07, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Mar 11, 2026, 10:12:56 PMMar 11
to சந்தவசந்தம்
அண்ணலார் ராம்கிராம் கவிதைக்குப் பின்னூட்டம் 

கூழே சிறந்ததெனக் கூறுகிற அண்ணலவர் 
ஆழக் கவிதை அழகான(து)- ஊழால் 
மறைந்ததில்லை வேந்தர் மலர்நினைவு போற்ற 
நிறைந்ததெங்கள் எல்லோரின் நெஞ்சு!

அரசி. பழனியப்பன் 

Ram Ramakrishnan

unread,
Mar 11, 2026, 10:14:49 PMMar 11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி. திரு. பழனியப்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 11, 2026, at 22:12, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Govindaraju Arunachalam

unread,
Mar 11, 2026, 10:45:52 PMMar 11
to santhav...@googlegroups.com

என்னிடம் இல்லாத சிறப்பினை இருப்பதாகச் சொல்லி அழைப்புக் கவிதையும் பின்னூட்டமும் அளித்த கவிமாமணி இலந்தையார், என் கவிதையைப் பதிவிட்ட அடுத்த நொடியில் பின்னூட்டம் அளித்த அரசி.பழனியப்பன், என் பாட்டை இனிக்கும் கற்கண்டு என மிகைமொழியால் பாராட்டிய காஞ்சீபுரம் தங்கவேல், கல்விக்கே என் ஓட்டு என்று சொல்லி என்னை ஊக்குவித்த ஸௌந்தர், ஈர்க்கின்ற கவிதையென என் முதுகில் தட்டிக்கொடுத்த ராம்கிராம், இனிய பாடல் எனப் பாராட்டி மகிழ்ந்த நக்கீரர் சிவசிவா, வெண்பா மலரொன்றை விரும்பியளித்த தம்பி சுரேஜமி, அபாரம் என ஒற்றைச் சொல் மூலம் என்னை, தரையில் கால் பாவாமல் நடக்கச் செய்த மூதறிஞர் கவியோகி வேதம், என் கவிதையைப் படித்து, சற்றே பரவாயில்லை என நினைத்த மற்ற அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிப் பெருக்கு உரித்தாகுக.

    எதை நான் சந்த வசந்தத்திலிருந்து பெற்றேனோ அதை இப்போது திருப்பித் தருகிறேன், ஒரு செய்யறிவு மென்பொருள் போல. எனவே எல்லாப் புகழும் சந்த வசந்தத்திற்கே. என்னை இத் தளத்தில் இணைத்த முனைவர் சு.பசுபதி அவர்களையும் ஈண்டு நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

 

-கருவூர் இனியன்..

Dr. Pushpa Christy Canada

unread,
Mar 12, 2026, 11:23:58 AMMar 12
to santhav...@googlegroups.com
அருமையான வரிகளால் படை பற்றிப் பாடினீர்கள். வாழ்த்துகள் இமயவரம்பன் 
சோதரி புட்பா கிறிட்டி


வரப்புடைக்கும் வெள்ளத்தும் வான்பிணிக்கா லத்தும் 
பொருப்புடைக்கும் பூப்பிளப்பின் போதும் - நிரப்பாம்
நசிவறுத்துச் சோறு நனிவழங்கி மக்கள்
பசியொழிக்க வேண்டும் படை (7).
(பொருப்பு  = மலை; பூப்பிளப்பு = பூகம்பம்; நிரப்பு = வறுமை;)


- இமயவரம்பன் 


Dr. Pushpa Christy Canada

unread,
Mar 12, 2026, 11:27:22 AMMar 12
to santhav...@googlegroups.com
தொடக்கக் கவிதை மிகவும் அருமை இலந்தை ஐயா. வாழ்த்துகள்
சோதரி புட்பா கிறிட்டி 

தங்கள் கருத்தை வலியுறுத்தத்
    தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
   பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
   இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
     தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்


இமய வரம்பன் படையென்பார்
   இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
   ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
    நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
   எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்

Dr. Pushpa Christy Canada

unread,
Mar 12, 2026, 11:31:16 AMMar 12
to santhav...@googlegroups.com
கவிஞர் கருவூர் இனியன் கவிதை அருமை. 
சோதரி புட்பா கிறிட்டி


 

கல்வி

 


 

கல்வி என்னும் கைவிளைக்கைக்

   கையில் ஏந்தும் தலைவர்தாம்

சொல்லில் செயலில் தூய்மையினைச்

   சுடராய்ப் படர விடுவார்கள்

அல்லும் பகலும் அறவினையை

   அழகாய்ச் செய்ய முன்வருவர்

தொல்லை நல்கும் படைக்கலனைத்

   தொட்டுப் பார்க்கச் செய்யாரே!

 

-கருவூர் இனியன்.

 

 






 







Dr. Pushpa Christy Canada

unread,
Mar 12, 2026, 11:36:02 AMMar 12
to santhav...@googlegroups.com
ராம் அவர்கள் கருத்துக் கவிதை அருமை. 
சோதரி புட்பா கிறிட்டி

Subbaier Ramasami

unread,
Mar 12, 2026, 11:43:44 AMMar 12
to santhavasantham
படையு,  கல்வி,  கூழும்  இங்கே
      படையெ டுத்து வந்தததன்
குடிவந் தால்தான் சரியாகும்
      குறுக்கு வாதம்  கூழுக்கே
எடுத்துவைத்தார் இராம் கவிஞர்
       இவரின் கூற்றை ஏற்பாரா
அடுத்து வடுவார் கவிஞரஷோக்
       ஆக்கம் தருவார் குடிபடைக்கே!

பாட வல்லார் பாவகைகள்
        பலவும் பாடும் திறமையுளார்
கூடும் வரையில் சித்ர கவி
        கொடுப்பதற்கும் முனைநிற்பார்
ஏடு தூக்கி இன்றைக்கே
        என்ன சொல்லப் போகிறார்?
ஆடும் ஆட்டம் பார்ப்பதற்கே
        ஆர்வ மாகக் காத்துள்ளோம்

மக்கள் என்போர் மாண்புடையார்
         வந்து பிறந்த நாட்டுக்குத்
தக்க வெல்லாம் செய்வதற்குத்
          தயாரா யிருப்பார், தம்மரசு
சிக்கல் தந்தால் சீறிடுவார்
           தேசம் காக்க முன்நிற்பார்
மக்கர் செய்யும் சகமனிதர்
           வழியில் சென்றும் எதிர்நிற்பார்

தெளிவுடனே இங்கே சிறந்தபல்  வாதம்
அளித்திடுக அன்பர் அஷோக்.

இலந்தை
 
        
        

On Sun, Mar 8, 2026 at 11:02 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
இந்தத் திரியிலேயே இனி அரங்கம் தொடரட்டும்

மார்ச்சு 12ந்தேதி அரங்கம் தொடங்கும் என்றிருந்துவிட்டேன்.  இன்றைக்கு அதாவது மார்ச்சு 8ந்தேதி தொடங்குகிறது என்பதை இப்போதுதான் அறிந்தேன். 

வஞ்சத்தில் ஒன்றானை நெஞ்சத்தில் நின்றானை மாசற் றானை
 வலம்வந்து கனியொன்றைப் பெற்றானை, வயிற்றானை, துதிக்கை யானை
விஞ்சித்தான் நின்றிட்ட கஜமுகனை வென்றானை மாற்றிட் டானை
  வித்தானை மறையானை, குறையானை, வள்ளியினை வெருட்டி னானை
கஞ்சத்தாள் பதத்தானை, கதித்தோடும் மதத்தானை, கருணை யானை
  கமண்டலத்தைக் கவிழ்த்தானை காவிரியை விரித்தானை, கவிதை யானை
தஞ்சந்தான் என்றவரைத் தள்ளானை புரப்பானை தாங்கு வானைத்
  தமிழ்கேட்கும் இருபெரிய செவியானைப் பாடுகின்றேன் காக்க நன்றே

தொடக்கம்
கவிதைத் தொடர் பட்டிமண்டம்

தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது
\
படை, குடி, கூழ்,  அமைச்ச், நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்வி


சண்டை போட்டால் சிலசம யத்தில்
   சந்தோ ஷம்மேன்  வருகிறது?
மண்டைக் குள்ளே வாதுக ளுக்குள்
   மாட்டிக் கொள்ளும் வகையுண்டோ
சிண்டு முடித்தல் என்கிற ஒன்றும்
   செய்வ துண்டு சிலசமயம்
உண்டிங் கேயோர் சொல்விளை யாட்டே
    உற்சாகம்நாம் பெற்றிடலாம்

பட்டி  மண்ட பத்தினில் இன்று
 பாடல், கவிதை விளையாடும்
வெட்டிப் பேச்சை வீசிட வேண்டாம்
  வித்தை காட்டும் ஆவேசம்
எட்டிப் பார்த்தால் எவ்விடத் தேயும்
   எரிச்சல் மூட்டும் நரியாட்டம்
கொட்டித் தீர்ப்போம் சொல்விளை யாட்டில்
  கும்மா ளந்தான், வாருங்கள்

**

நாடு சிறக்க மிகவதிகம்
   நமக்குத் தேவை எதுவென்றே
கூடி அலசிப் பேசுதற்கே
   குழுமி  யுள்ளோம் , வள்ளுவரின்
ஏடு நமக்கு வழிகாட்ட 
   எடுத்துக் கொண்ட தலைப்பினிலே
போடு போடென் றிங்கேநாம்
    புலமை காட்டப் போகின்றோம்.


தங்கள் கருத்தை வலியுறுத்தத்
    தக்க வாறு மற்றோர்க்குப்
பங்கம் வாரா வகையினிலே
   பதமாய் மறுத்துப் பேசிடலாம்
இங்கே வேண்டும் கண்ணியமும்
   இதமும் வாதத் திறமையுமே
சிங்கங் கள்தாம் எல்லோரும்
     தெரிந்தே இங்கே அழைக்கின்றேன்


இமய வரம்பன் படையென்பார்
   இனியன் கல்வி எனச் சொல்வார்
அமைவாய்க் கவிராம் கூழென்பார்
   ஆம்சாய் கணேஷோ அரணென்பார்
நமக்கு நேர்மை தானேன்றே
    நல்கு வாரே சுதாவேதம்
எமக்கு நட்பே , புஷ்பாவும்
   எடுத்துச் சொல்வார் , நாம் கேட்போம்

இயற்கை வளமே அதிகமென
     இசைப்பார் அரசி பழனியப்பன்
தயக்கம் வேண்டாம், தியாகந்தான்
      தங்க வேலன் சாற்றிடுவார்
இயக்கம் யாவும் குடிபடையின்
      இருப்பில் என்பார் கவிஞரஷோக்
நியமம் செப்பும் அமைச்சுக்கு
      நேரம் இன்னும் இருக்கிறது

எல்லாம் தேவை என்றாலும்
  இதுதான் அதிகம் தேவையென
வல்லாங் கிங்கே வாதிடவே
  வாருங்கள்சொல் வல்லோரே
கல்லை எடுத்து வீசாமல்
  களத்தில் சொல்லை வீசுகிறோம்
சொல்லும் தாக்கும், வடுவின்றிச்
   சொல்லத் தெரிந்தால் அதுபோதும்

இற்றை நாளில் படைக் கென்றே
  எடுத்து வைக்கும் நிதியதிகம்
கற்றுக் கொள்ள வில்லையெனில்
  காசா இங்கே காப்பாற்றும்
பெற்றுக் கொள்ளும் கல்வியில்தான்
   பிழைப்பே உண்டென் ரியம்பிடலாம்
வெற்றுப் பேச்சேன்? கூழின்றி
    வீழ்ந்து கிடந்தால் என்ன பயன்?

எல்லா மிருந்தும் கொள்ளையிட
    எதிரி இருப்பான், காப்பாற்ற
நல்ல பாது காப்பாக, 
   நமக்குத் தேவை அரணன்றோ
வெல்லுமா வீண் பகைக் கூட்டம்
   வேண்டும் நட்பே வெற்றிதரும்
அல்ல அல்ல , நேர்மையினுக்(கு)
   அடுத்த படிதான் மற்றெல்லாம்

அன்று நாட்டு விடுதலையை
    ஐயா பெற்றோம் தியாகத்தால்
இன்றைக் கும்தான் அதுதேவை
    இயற்கை வளத்திற் கீடாக
ஒன்றை எடுத்துச் சொலப்போமா?
     உமக்கு வேண்டும் நல்லமைச்சன்
அன்று சாணக் கியனாலே
     ஆட்சி அமைந்த தறியீரோ

என்றெல் லாமிங் கிதமாக
     எடுத்துப் பேச வந்துள்ளீர்
ஒன்று சொல்வேன் , வித்தகமும்
     உள்ளே ஊறும் கவிப்பெருக்கும்
மன்றில் நடனம் ஆடட்டும்
     மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்
நன்று நடக்கும் அரங்கத்தின்
      நாட கத்தைக் கண்டிடலாம்
   

 இலந்தை
 8-3-2026
  
   








Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 3:55:30 PMMar 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, சோதரி புட்பா.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 4:16:26 PMMar 12
to santhav...@googlegroups.com
திரு. சிவசிவா அவர்தம் பரிந்துரை ஏற்று

வேட்டுவோம் என்பதனை வேண்டுவோம்

என்றும்

எண்ணத்தில் ஏழ்தல்  என்பதனை எண்ணத் தெழுதல்

"அமையேல் பயனென்?" என்பதனை 

அரணமைத்த ஆட்சி அமையா திருப்பின்

முரணில் பகையன்றோ முந்தும்? –....
.....
என்று மாற்றி அமைத்தேன்.

குடிவுயரும் என்ற தட்டச்சுப் பிழையைத் திருத்தி, "குடியுயரும்" என்றாக்கினேன்.

மீண்டும் திரு. சிவசிவா அவர்கட்கென் நன்றி உரித்தாகுக.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


இமயவரம்பன்

unread,
Mar 12, 2026, 5:57:53 PMMar 12
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
சோதரி அவர்களுக்கு மிக்க நன்றி

- இமயவரம்பன்

GOPAL Vis

unread,
Mar 12, 2026, 9:21:05 PMMar 12
to santhav...@googlegroups.com
தேரும் கயமும் தெரித்தோடும் காண்கின்ற
பாரும் வியக்கும் படைபடைத்தீர்! - கூரும்
விசையும் தமிழமுத வெண்பா வடிவில் 
திசையைப் பிளக்கும் திறன்!
கோபால். 

On Mon, Mar 9, 2026 at 2:58 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
அழகிய பாட்டால் என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி, தலைவரே! இதோ எனது பாடல்:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2
நாள்: 8-மார்ச்-2026
நடுவர் : தலைவர் கவிமாமணி இலந்தையார்
எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

.................
தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது படையே

படைப் பத்து
(நேரிசை வெண்பா)

விதையிட்டுச் செந்நெல் விளைமுன்னே மிக்க
முதலிட்(டு) அருந்தொழில்செய் முன்னே - புதிதோர்
கலமாக்கி விண்பயணம் காண்முன்னே நாட்டைப்
பலமாக்க வேண்டும் படை. (1).
(கலம் ஆக்கி = விண்கலம் செய்து)

..........

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 12, 2026, 10:09:10 PMMar 12
to சந்தவசந்தம்
கலப்படம் இல்லாக்  கருதுக்கள் 
பலப்பல கூழை படைத்திட்டார்
இலக்கிண மாற இன்தமிழில்
இலக்கியம் தந்தார்  இராம்கிராம்

அற்புதமான படைப்பு.

உணவைப் பற்றி உண்மை சொன்னீர் 
உணவின் பக்கம் உலகோர் செல்வர் 
உணர்வு மிக்க உண்மை தியாகி 
உணவைத் துறக்கும் உபாயம் அறிந்தே 
உணவை விட்டும் உயிர்வாழ் வாரே

On Thursday, March 12, 2026 at 12:11:15 AM UTC+5:30 Ram Ramakrishnan wrote:
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்  2



 

தியாக சீலரே மிக்க நன்றி.
 

Ram Ramakrishnan

unread,
Mar 12, 2026, 10:11:56 PMMar 12
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தங்கவேல்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 12, 2026, at 22:09, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

KKSR

unread,
Mar 13, 2026, 1:03:57 AMMar 13
to santhav...@googlegroups.com
பாத்திறமும் பண்பாடும் பாரதம் போற்றுவகைச்
சாத்திரத்தைச் செப்புமச் சால்பெண்ணிப் - பூத்தனன்யான்!
அண்ணல் இராம்கிஇராம் ஆற்றலைச் சாற்றுகூழ்
விண்ணோர்க்கும் வித்தாகக் காண்!

~ சுரேஜமீ
13.03.2026 காலை 09:02

Sent from Mobile


On Wed, Mar 11, 2026 at 10:41 PM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்  2


மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு. 

பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு

புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4Gvdi%3DzSwdDdbt7QELbLeHKRC0aziLVQ81T4qxRPxOPHMg%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்"
.

GOPAL Vis

unread,
Mar 13, 2026, 2:25:58 AMMar 13
to santhav...@googlegroups.com
அருமையான இனிய கவிதை திரு இனியன்!

படைகள் இருந்து பயனென்ன
......பாதை தெரியக் கற்றிலையேல்?
விடையிங்(கு) ஆமாம் என்பதனை
......விடுத்தொன் றுண்டோ செப்பிடவே!
அடையா உயரம் கல்வியிலே
......அடைந்த பிறகும் போர்களையேன்
தடைசெய் திடவே இயலவிலை?
......தருமம் சாக விடலாமோ?

கல்விக் கூடம் கணக்கெல்லாம்
......காணா உயரம் கண்டபினே
வில்லும் சரமும் வீணாகி
......விண்ணும் மண்ணும் பிளந்தெரிக்க
வல்ல படைகள் வந்தனவே!
......வளமாய் வாழ வழிதன்னைச்
சொல்லாக் கல்வி மன்பதையைச்
......சுரண்டி அழிக்கும் சுமையன்றே!

கோபால். 

On Tue, Mar 10, 2026 at 8:53 AM Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:

சந்தவசந்தத் தொடர் பட்டிமன்றம் - 2

நாள்: 8-மார்ச்-2026

நடுவர் : கவிமாமணி இலந்தையார்

எனது தலைப்பு : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது கல்வியே

 

............

 

கல்வி

 

...............

கல்வி என்னும் கைவிளைக்கைக்

   கையில் ஏந்தும் தலைவர்தாம்

சொல்லில் செயலில் தூய்மையினைச்

   சுடராய்ப் படர விடுவார்கள்

அல்லும் பகலும் அறவினையை

   அழகாய்ச் செய்ய முன்வருவர்

தொல்லை நல்கும் படைக்கலனைத்

   தொட்டுப் பார்க்கச் செய்யாரே!

 

பிச்சை எடுத்துக் கற்பதையும்

   பெரிதாய்ப் பேசும் இலக்கியங்கள்

கச்சை கட்டி வருகின்ற

   கழிபே ரின்னல் கடிந்தேகப்

பச்சை விளக்காய்ப் பாதையிலே

   பரவி நிற்கும்; அதனாலே

இச்சை கொண்டு கற்றால்தான்

   இனிய தேசம் உருவாகும்!

 

...........


Govindaraju Arunachalam

unread,
Mar 13, 2026, 2:43:11 AMMar 13
to santhav...@googlegroups.com

பாவலர் ராம்கிராம் அவர்களுடைய கவிதைக்குப் பின்னூட்டம்

 

கூழைப் புகழ்ந்து கூறிய கவிதை

    கூறும் செய்தி குன்றின் பெரிதாம்

ஊழை எண்ணி உருகி நலிவரோ

   உண்டேல் கையில் உறுகூ ழெனினே

 

பலவாய் யாப்பில் பாங்கின் சொன்ன

    பாட்டுத் திறத்தைப் பரக்கக் கண்டேன்

மலரில் தேனை மாந்தும் வண்டாய்

    மயங்கி நின்றேன் மாற்ற மில்லை.

 

-கருவூர் இனியன்..

 

 



GOPAL Vis

unread,
Mar 13, 2026, 2:58:27 AMMar 13
to santhav...@googlegroups.com
ஆராய்ந்து படைத்த சீரான கவிதை, திரு ராம்கிராம். 

அன்னம் நிறைக்கவோர் ஆணை கொடுத்தது
முன்னே மறையின் முடிபு!

[மறையின் முடிபு = வேதாந்தம்/உபநிடதம்
 "அன்னம் பஹு குர்வீத. தத் வரதம்".]

On Thu, Mar 12, 2026 at 12:11 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
கவிதைத் தொடர் பட்டிமண்டபம்  2


மிக அழகான கவிதையால் அழைப்பு விடுத்த தலைவருக்கு அன்பு கலந்த வணக்கம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது முன்னோர் வாக்கு. 

பொன் என்பதுவாம் கூழ் பற்றிய கவிதையை இடுவதற்கு

புதன் கிடைத்ததனால் இரட்டிப்பு மகிழ்ச்சி.


அண்மையில் இயற்கை எய்திய அருமையான எழுத்துச் சிற்பியும், சிறிது காலப் பழக்கமென்றாலும் 

மிக நெருங்கிப் பழகிய உணர்ச்சியை அளித்தவருமான கவிஞர் தில்லைவேந்தன் அவர்களுகோர்ப்

புகழஞ்சலிக் கவிதை ஒன்றும் இங்கிடுதற்குத் தலைவர் அனுமதிப்பீராக.



........... 

கூழே ஒரு நாட்டின் மேன்மைக்கு முதன்மையானது

நிலைமண்டில ஆசிரியப்பா

..... தரணியில்,                       5

அடுக்களை முதலென அரசவை வரைக்கும்

எள்ளள வுமையமில், இதுவாங் கூழே

வள்ளுவர் வகுத்த வாறங் கத்தில்

கூழே மேலாய்க் கூறலென் கடமை.

ஆழ்ந்து நோக்கிட அனைத்துமே புலப்படும்                            10                  


..........

Ram Ramakrishnan

unread,
Mar 13, 2026, 8:41:41 AMMar 13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, அருமைத் தம்பியரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 13, 2026, at 01:03, KKSR <aur...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Mar 13, 2026, 8:42:26 AMMar 13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, இனியனாரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 13, 2026, at 02:43, Govindaraju Arunachalam <agrp...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 13, 2026, 8:43:42 AMMar 13
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, வண்ணப்பா வித்தகர் திரு. கோபால் அவர்களே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 13, 2026, at 02:58, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Vivek Bharathi

unread,
Mar 14, 2026, 1:09:01 AMMar 14
to சந்தவசந்தம்
ஆஹா! அட்டகாசமாகச் சென்றுகொண்டிருக்கிறது கவிதைப் பட்டிமண்டபம்!

நாட்டுக்குப் பயனளிக்கும் நல்லவற்றைக் கவிஞர்கள் நலமாய்க் கூட்டிப் 
பாட்டுக்குள் சொல்கின்ற பட்டிமன்றப் பதிவுகளைப் படித்துத் துய்த்தேன்
மாட்டுக்குச் செக்கைப்போல் மனத்திற்குப் பணிவந்து வாய்த்த தாலிக் 
கூட்டுக்குள் வாராமல் வாய்ப்பிழந்த நிலையெண்ணிக் குறைபட்டேனே! 

அனைவருக்கும் வாழ்த்துகள்! 

KKSR

unread,
Mar 14, 2026, 3:39:53 AMMar 14
to santhav...@googlegroups.com
உனக்காகத் தலைவர் ஒருதலைப்பைக் கூட்டுவார் வா!வந்து கவிபாடு விவேக்!

அன்புடன்
சுரேஜமீ
14.03.2026 காலை 11:39



Sent from Mobile


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Mar 14, 2026, 11:09:45 AMMar 14
to santhavasantham

நான்காவது அழைப்பு
கவிஞர் அஷோக் சுப்ரமண்யம்

On Sun, Mar 8, 2026 at 12:06 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
முதல் அழைப்பு:    கவிஞர் இமயவரம்பன்

இமய மேதன் எல்லையென
  எடுத்துப் பேரில் வைத்துள்ள
இமய வரம்பன், நற்கவிஞர்
   இசைவாய்ப் பேசும் பேச்சாளர்
அமைவாய் உரைகள் எழுதுபவர்
    ஆராய் கின்ற அறிவாளி
தமது பங்காய்ப் படைச்சிறப்பைச்
    சாற்ற இங்கே அழைக்கின்றேன்

இலந்தை
8-3-2026

Subbaier Ramasami

unread,
Mar 16, 2026, 7:25:21 AMMar 16
to santhavasantham
I am waiting for ASHOK subramaniam. I have messaged him. I will invite the next poet tomorrow

Ramasami

Arasi Palaniappan

unread,
Mar 16, 2026, 7:58:45 AMMar 16
to சந்தவசந்தம்
தலைவருக்கு வணக்கம். எனது இயற்கை வளம் எப்போது வரும்? 
சிறிது உடல் நலம் குன்றியிருக்கிறது. நிறைவாக அழைத்தால் ஏதுவாக இருக்கும்! நன்றி 

அரசி. பழனியப்பன் 
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Mar 16, 2026, 8:06:20 AMMar 16
to santhav...@googlegroups.com
தலைவருக்கு வணக்கம். 
எனது கவிதை ‘ அரண் ‘ தயாராக உள்ளது.
எப்போது வேண்டுமானாலும் என்னை அழைக்கலாம். 


சத்ய வேழன் H சாயி கணேசன்



Ashok Subramaniam

unread,
Mar 16, 2026, 3:01:31 PMMar 16
to santhav...@googlegroups.com
ஐயா இலந்தையாரே, 

நான் பெயர் கொடுத்தபின்னர், இப்போதுதான் குழுமத்திற்கே வருகை தந்தேன்.. சென்னையிலிருந்து, மீண்டும் மூன்று மாதத்திற்குப்பின் ஸான்ப்ரான்ஸிஸ்கோ வந்து சேர்ந்ததும் குளிரும் காய்ச்சலும் இரண்டுவாரம் படுக்கப்போட்டு விட்டது... என்னை இறுதியாக அழைக்க முடியுமா? நேரம் இருக்கிறதா? நன்றி..

அன்புடன்..

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--

Subbaier Ramasami

unread,
Mar 17, 2026, 9:48:00 AMMar 17
to santhav...@googlegroups.com
உங்கள் உடல்நிலை சீரடைய வேண்டுகிறேன்.  நிறைவாக அழைப்பேனா குறைவாக அழைப்பேனா என்பது எனக்கே தெரியாது.
பொதுவாக மனம் நிறைவாக அழைப்பதுதான் என் வழக்கம்

இலந்தை

Arasi Palaniappan

unread,
Mar 17, 2026, 9:53:29 AMMar 17
to சந்தவசந்தம்
ஆஹா! மகிழ்ச்சி தலைவரே!உடல் நலம் தேறி வருகிறது.  நாளை கவிதையை எழுதி முடித்து விடுவேன். நன்றி 

Subbaier Ramasami

unread,
Mar 17, 2026, 10:06:07 AMMar 17
to santhavasantham
வாதிலே நட்பி னுற்கு
     வாய்ப்பினை கொடுக்க வேண்டி
சோதரி புட்பா கிறிட்டி
      சொல்தர வருவார் இங்கே
வாதினை எழுதி  முன்பே
     வரவிவண் விடுத்த தாலே
தூதுவ னாக வாதம்
      தூக்கியே தருகின்றேன் நான்

நட்புப் பற்ரிப் புட்பா கிறிட்டி
       நல்கும் பாடல் நாம் பார்ப்போம்
ஒப்புக் கென்றே வாய்வார்த் தைகள்
       உதவிப் பின்னர் பகைதாக்க
அப்போ தைக்கே ஒதுங்கிக் கொள்ளும்
       அவதி நட்பால் பயனில்லை
எப்போ தக்கும் நாட்ப்பாய் உள்ளோர்
       ஏதம் தீர்ப்பார், உண்மையிதே!

இதோ சோதரி புட்பா கிறிட்டியின் பாடல்

Dr. Pushpa Christy Canada

Mar 13, 2026, 3:37 PM (4 days ago)
to me
வணக்கம் ஐயா, இப்போது கொஞ்சம் மாற்றியுள்ளேன். சரியா எனப் பார்க்கவும். நன்றி ஐயா. 



சந்த வசந்தக் கவிதைத் தொடர் பட்டிமண்டம் -2
தலைவர் கவிமாமணி இலந்தை ஐயா


தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது

படை, குடி, கூழ்,  அமைச்சு, நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்வி
எனது தலைப்பு - ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது - நட்பு.

கடவுள் வாழ்த்து
இறைவா அருள்வாய் இதய மகிழ்வாய்
நிறைவாய் எனக்குள் நிலை  

தமிழ்த் தாய் வாழ்த்து
இளமைத் தமிழே இனிய மொழியே
வளமுடன் என்னிலே வாழ்

தலைவர் வாழ்த்து
அன்புடன் ஆழும் அருமைத் தலைவரே
நன்றாய்த் திகழ்க நலம்  

அவையோர் வாழ்த்து
அருமைக் கவிகளே அன்புத் தமிழின்
கருத்தில் நிறைவுக் கனவு  
 

விளம் மா தேமா

1
பகையது தவிர்த்து நாளும்
பாசமும் தருவான் நண்பன்
சிகையிலே எற்றி வைத்துச்
சித்திரம் வரைந்து காப்பான்
நகையிலே எம்மைச் சேர்த்து
நன்மைகள் கூட்டி வைப்பான்
குகையிலே வாழும் போதும்
குடும்பமும் மகிழ்வில் தேறும்

2
நட்புடன் தழைக்கும் அன்பு
நன்மையும் தருமே நாளும்
உட்பகை இன்றி என்றும்
உவப்புடன் "இயற்கை" காக்கா  
துட்டரின்" தியாகத்" தூய்மை
துளியென  நிலைக்க மாட்டா  
இட்டிடும் நாட்டின் துன்பம்
இதயமும் வாழும் என்றும்  

3
பூமியில் வாழும் காலம்
புதுமையாய் வாழ்க்கை மாளும்
தாமிர பரணி நீராய்
தாமுமே வாழத் தானே  
நாமினி "அமைச்சு" தன்னில்  
நன்றுடன் இணைந்து வாழ
பாமிகுத் தூய்மை நட்பைப்
பாசமும் அணைத்துக் காப்போம்  

4
நாட்டினைக் காக்கும் வேந்தன்
"நட்படை" மட்டும் கொண்டால்  
வீட்டிலும் மனிதர் எல்லாம்
விடுதலை காண மாட்டார்
கூட்டிலே பறவை போல
குறுகிட வேண்டாம் என்றும்
ஏட்டிலும் "அரண்ப டைகள்
எழுந்துமே வாரா(து) காண்பீர்  

5
வீதியில் நின்றால் கூட
விளக்காம் "கல்வி" காக்கா  
பாதியில் நீங்கா நட்பு  
பாசமும் கொட்டி நிற்கும்  
சாதியக்" குடிகள்" பார்த்து
சரித்திரம் காக்கும் சூரர்
ஆயினும் நட்பின் வேதம்  
ஆனதே நாட்டின் பாசம்

6
காலமும் வாழும் நட்பில்
கற்பினைக் காணல் நன்று
ஞாலமும் நிறைக்கும் வாழ்வில்
ஞாயிறு போன்ற "கூழும்"
வாலையாம் வயதுக் காலம்  
வளருமே நட்பால் என்றும்  
ஆலயத் தெய்வம் என்றே
அன்பினால் ஆழும் நாட்டை

7
நண்பனின் நட்பு ஒன்றே
நம்மையும் வாழ வைக்கும்
அண்மையில் இருந்து காக்கும்
அழுகையும் மாற்றித் தேற்றும்
விண்ணையும் எட்டச் சொல்லும்
விழியதன் கண்ணீர் மாற்றும்  
மண்ணிலே நண்பன் போன்ற
மனிதனும் இல்லைக் காண்பீர்

8
நாட்டிலே விழையும் நன்மை
நல்லவை தருமே தன்னால்  
வீட்டிலே நிகழும் விந்தை
விடியலாய் தோன்றும் காணீர்
கூட்டிலே அடைய வேண்டாம்
கூக்குரல் போடல் ஏனோ?
பாட்டுடன் வாழ்வோம் வாரீர்
பண்புடை நட்பு வாழ்த்தும்

9
நல்லவர் தமது வாழ்க்கை
நட்புடன் வாழல் என்றே
சொல்பவர் மனதில் என்றும்
சொந்தமாய் நிற்கும் எண்ணம்
வெல்பவர் யாரும் இன்றே
வெற்றியைச் சேர்ப்பர் தாமே
பல்லின மக்கள் யாரும்
பணிவுடன் நட்பைக் காப்பர்

10
ஆதலால் சொல்வேன் கேட்பீர்
ஆறுதல் சொல்லும் நட்பு
வேதனை வேண்டாம் நன்றாய்
வேண்டுவீர் தோழர் நட்பை
சோதனை நேரம் கூடச்
சோர்ந்திட விழாது காக்கும்
போதனை தந்து வாழ்த்தும்  
பொன்னெழில் நட்பே வாழ்க

பாமிகுத் தூய்மை அன்பால் - பாட்டைப் போன்ற தூய அன்பு
சோதரி புட்பா கிறிட்டி


      

Kaviyogi Vedham

unread,
Mar 17, 2026, 11:08:37 AMMar 17
to santhav...@googlegroups.com
pushpa's  song  is very  good
yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Mar 17, 2026, 11:30:50 AMMar 17
to santhav...@googlegroups.com
அருமை!
கோபால். 

7
நண்பனின் நட்பு ஒன்றே
நம்மையும் வாழ வைக்கும்
அண்மையில் இருந்து காக்கும்
அழுகையும் மாற்றித் தேற்றும்
விண்ணையும் எட்டச் சொல்லும்
விழியதன் கண்ணீர் மாற்றும்  
மண்ணிலே நண்பன் போன்ற
மனிதனும் இல்லைக் காண்பீர்


On Tue, Mar 17, 2026 at 7:36 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
......
இதோ சோதரி புட்பா கிறிட்டியின் பாடல்

Dr. Pushpa Christy Canada

Mar 13, 2026, 3:37 PM (4 days ago)
to me
வணக்கம் ஐயா, இப்போது கொஞ்சம் மாற்றியுள்ளேன். சரியா எனப் பார்க்கவும். நன்றி ஐயா. 

சந்த வசந்தக் கவிதைத் தொடர் பட்டிமண்டம் -2
தலைவர் கவிமாமணி இலந்தை ஐயா

தலைப்பு:  ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப் படுவது

படை, குடி, கூழ்,  அமைச்சு, நட்பு, அரண், இயற்கை வளம், தியாகம், கல்வி
எனது தலைப்பு - ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது - நட்பு.

..................
7
நண்பனின் நட்பு ஒன்றே
நம்மையும் வாழ வைக்கும்
அண்மையில் இருந்து காக்கும்
அழுகையும் மாற்றித் தேற்றும்
விண்ணையும் எட்டச் சொல்லும்
விழியதன் கண்ணீர் மாற்றும்  
மண்ணிலே நண்பன் போன்ற
மனிதனும் இல்லைக் காண்பீர்

................ 

Siva Siva

unread,
Mar 17, 2026, 11:50:05 AMMar 17
to santhav...@googlegroups.com
நட்பைத் தூக்கிச் சொல்லும் பாடல் தந்தீர்!
வாழ்க.

வி. சுப்பிரமணியன்

On Tue, Mar 17, 2026 at 10:06 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
..

2
நட்புடன் தழைக்கும் அன்பு
நன்மையும் தருமே நாளும்
உட்பகை இன்றி என்றும்
உவப்புடன் "இயற்கை" காக்கா  
துட்டரின்" தியாகத்" தூய்மை
துளியென  நிலைக்க மாட்டா  
இட்டிடும் நாட்டின் துன்பம்
இதயமும் வாழும் என்றும்  

KKSR

unread,
Mar 17, 2026, 12:17:19 PMMar 17
to santhav...@googlegroups.com
சகோதரி புட்பா கிறிட்டி அவர்களின் நட்பு குறித்த பாடல்கள் அருமை!

அருமையாம் நட்பை எண்ணி 
   அழகியல் கவிதை சொல்லிப்
பெருமையைச் சேர்த்துக் கொண்டீர்
   பேறுகள் பெற்று வாழி!

அன்புடன்
சுரேஜமீ
17.032026 இரவு 08:16


Sent from Mobile

sudha's creations

unread,
Mar 17, 2026, 1:19:23 PMMar 17
to santhavasantham
புஷ்பா Mam.. கவிதை நட்பை பற்றி ரொம்ப அழகாக சொல்கிறது. 

அன்புடன் சுதா வேதம்

M. Viswanathan

unread,
Mar 17, 2026, 1:27:22 PMMar 17
to Santhavasantham
ஆஹா...சோதரி புட்பா கிருட்டி அவர்களின் "நட்பு" -  கவிதை தெளிந்த நீரோட்டம் போன்றது. சிறப்பான கருத்தோட்டம். சபாஷ்.

அன்பன்,
மீ. விசுவநாதன்
17.03.2026 22.56 pm

Arasi Palaniappan

unread,
Mar 19, 2026, 7:32:33 AMMar 19
to சந்தவசந்தம்
சோதரி புட்பா கிறிட்டி அவர்கள் கவிதைக்குப் பின்னூட்டம் 

புட்பா கிறிட்டி பொலியும் விதமாக 
நட்பே தலையென்று நாட்டினார் - பிற்பாடு 
பாடவரும் எம்போன்றோர் பாடு பெரும்பாடே 
பாடுவேன் பாட்டோடு பாட்டு!

அரசி. பழனியப்பன் 

Ram Ramakrishnan

unread,
Mar 19, 2026, 8:05:17 AMMar 19
to santhav...@googlegroups.com
சோதரி புட்பா அவர்களின் கவிதைக்குப் பின்னூட்டம்:

நட்பினைப் போற்றும் புட்பா

… நற்றமிழ் நுந்தம் சொல்லை

திட்டமாய் நாடும் ஏற்றால்

… செம்மையில் உயர்வு காணும்

மட்டிலா அன்புஞ் சேர

… மானுடம் மேன்மை யடையும்

விட்டிலா நட்பு ஒன்றே

… வேண்டினீர் வாழ்த்து கின்றேன்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 17:02, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Mar 19, 2026, 8:19:45 AMMar 19
to சந்தவசந்தம்
ஆஹா அற்புதம் மிகவும் அருமையான பாடல்கள்.

நட்பினை போற்று கின்ற
  நல்லதோர் இனிய பாடல்
நட்புடன் நாட்டைக் காக்க
   நல்லவர் தியாகம் செய்தால்
எட்டிசை போற்றும் அவரை
  என்றுமே வாழ்வார் இனிதே
நட்பினைக் கடந்த தியாகம்
  நன்மையே நாட்டுக் கேன்றும்

On 

நட்புடன் தழைக்கும் அன்பு
நன்மையும் தருமே நாளும்
உட்பகை இன்றி என்றும்
உவப்புடன் "இயற்கை" காக்கா  
துட்டரின்" தியாகத்" தூய்மை
துளியென  நிலைக்க மாட்டா  
இட்டிடும் நாட்டின் துன்பம்
இதயமும் வாழும் என்றும்  

10
ஆதலால் சொல்வேன் கேட்பீர்
ஆறுதல் சொல்லும் நட்பு
வேதனை வேண்டாம் நன்றாய்
வேண்டுவீர் தோழர் நட்பை
சோதனை நேரம் கூடச்
சோர்ந்திட விழாது காக்கும்
போதனை தந்து வாழ்த்தும்  
பொன்னெழில் நட்பே வாழ்க


வாழ்க நட்பு வளர்க தியானம் 

அருமையான பாடல் 

Subbaier Ramasami

unread,
Mar 19, 2026, 8:55:11 AMMar 19
to santhavasantham
அடுத்த அழைப்பு:  கவிஞர் சத்ய வேழன்

நட்பினைப் பற்றி இங்கே
   நாமெலாம் வியக்கும் வண்ணம்
திட்பமாய்க் கவியுரைத்தார்
     திருமதி புட்பா கிறிட்டி
நட்புள நாடு வேண்டும்
     நலமெலாம் தேவைக் கேற்பப்
பெட்புடன் செய்யும் அந்தப்
     பெறது சிறந்த தாகும்

எல்லாம் இங்கே இருந்தாலும் 
     இருப்பைப் பாது காத்திடவே
நல்ல சேமம் இலையெனிலோ
      நாச காரன் உட்புகுவான்
எல்லைப் பாது காப்புடனே
       ஏதமின்றி உள்நாட்டார்
தொல்லை தாரா வகைகாக்கும்
       சூழ்ச்சி அறிதல் அவசியமாம்

சத்ய வேழன் அரண்பற்றிச்
       சாற்ற அரங்கில் ஏறட்டும்
நித்தம் நித்தம் சிறப்பாக
       நிறைவாய்க் கவிதை படைக்கின்ற
உத்தி அறிந்த கவிஞரிவர்
        உடைந்து போகா அரண்பற்றி
சத்துக் கவிதை தந்திடுக
        சபையில் வாதம் வென்றிடுக!

இலந்தை

இமயவரம்பன்

unread,
Mar 19, 2026, 8:56:48 AMMar 19
to santhav...@googlegroups.com, santhavasantham
சோதரி அவர்களின் பாடல் மிகச் சிறப்பு!

- இமயவரம்பன்

Dr. Pushpa Christy Canada

unread,
Mar 19, 2026, 10:43:11 AM (14 days ago) Mar 19
to santhav...@googlegroups.com

Dr. Pushpa Christy Canada

unread,
Mar 19, 2026, 10:46:27 AM (14 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
அருமையான அழைப்புடன் என் கவிதையைத் தரவிறக்கம் செய்த இலந்தை ஐயாவுக்கு என் தலை சாய்ந்த நன்றி. அன்புடன் சோதரி புட்பா கிறிட்டி. 

வாதிலே நட்பி னுற்கு
     வாய்ப்பினை கொடுக்க வேண்டி
சோதரி புட்பா கிறிட்டி
      சொல்தர வருவார் இங்கே
வாதினை எழுதி  முன்பே
     வரவிவண் விடுத்த தாலே
தூதுவ னாக வாதம்
      தூக்கியே தருகின்றேன் நான்

நட்புப் பற்ரிப் புட்பா கிறிட்டி
       நல்கும் பாடல் நாம் பார்ப்போம்
ஒப்புக் கென்றே வாய்வார்த் தைகள்
       உதவிப் பின்னர் பகைதாக்க
அப்போ தைக்கே ஒதுங்கிக் கொள்ளும்
       அவதி நட்பால் பயனில்லை
எப்போ தக்கும் நாட்ப்பாய் உள்ளோர்
       ஏதம் தீர்ப்பார், உண்மையிதே!

Dr. Pushpa Christy Canada

unread,
Mar 19, 2026, 10:47:05 AM (14 days ago) Mar 19
to santhav...@googlegroups.com
என் பேரக்குழந்தைகள் நலமின்மை, என் மருமகளின் கண் சத்திரசிகிச்சை காரணமாக என்னால், இணையப்பக்கம் வரமுடியவில்லை. மன்னிக்கவும். இன்று தான் வந்து பார்த்தேன். இலந்தை ஐயா என் கவிதையைத் தரவிறக்கியுள்ளார். மிக்க நன்றி ஐயா.

என் கவிதைக்குப் பின்னூட்டம் அளித்த, கவியோகி ஐயா, கோபால், சிவா ஐயா, சுரேஜமீ, சுதா வேதம், விசுவநாதன், அரசி பழனியப்பன், ராம் ராமகிருஷ்ணன், தங்கவேல், இமயவரம்பன் ஆகிய அனைத்துக் கவிஞர்கட்கும் என் பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் சோதரி புட்பா கிறிட்டி.
 

Govindaraju Arunachalam

unread,
Mar 20, 2026, 8:17:38 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

புட்பா கிறிட்டி அவர்களின்

பாட்டுக்குப் பின்னூட்டம்

 

மண்ணிலே நண்பன் போன்ற

   மனிதனும் இல்லை மாதோ

எண்ணியே சொல்லு கின்றார்

   எழுகவி புட்பா கிறிட்டி

வண்ணமாய் விருத்தம் பாடி

   வைத்தனர் விருந்து பாட்டில்

உண்டனம் அமுதம் என்றே

   உறுபுகழ் பெற்று வாழ்க!

 

-கருவூர் இனியன்.




Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 11:35:31 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
கவிஞர் சத்யவேழன் தலைவரின் அழைப்பைக் காணவில்லையா?

அவர்தம் கவிதை தயார் என்ற சொல்லியதாக நினைவு.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 19, 2026, at 18:25, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 11:38:00 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
இப்பொழுதுதான் பார்த்தேன். உடனே பதிவிடுகிறேன். 
-சத்ய வேழன். 

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 11:44:08 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com

சந்த வசந்தம் கவிதைப் பட்டிமண்டபம்- 02 

தொடக்க நாள்: 08-03-2026

தலைப்பு: : ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது 

அரணே! 

இறை வணக்கம்

விநாயகர் துதி 

(நேரிசை வெண்பா)

நல்லதமிழ் என்றுமென்  நாவில் நடனமிடச்

சொல்வளம் நன்றாய்ச் சுரந்திட- அல்லல்கள்

தீண்டாதே ஆனைமுகத் தெய்வம் அருள்வாரே

வேண்டியவை யெல்லாம் விரைந்து. 


கலைமகள் துதி

(கட்டளைக் கலித்துறை)

வாணியே! என்றும் வழங்குவாய் இன்சொலே வாக்கினிலே

பேணினேன் நின்னைப்  பெருமைகள் யாவையும் பெற்றிடவே

ஏணியாம் சான்றோர் எழுதிய நன்னூல் இலக்கியங்கள்

தோணியாய்க் கொண்டே துயர்கடல் தாண்டத் தொழுதனனே.


அவையடக்கம்

(நேரிசை வெண்பா)

ஆன்ற கவிஞர் அவையிலொரு பாவலனாய்த்

தோன்ற எழுந்தேன் தொடைநடுங்கி - ஈன்ற

குழவிசொல் பாட்டின் குறைபொறுத்தே என்றன்

மழலைச்சொல் கேளீர்! மகிழ்ந்து. 


நடுவர் வணக்கம்

(நேரிசை வெண்பா)


சந்தக் கவிதைகளைச் சட்டெனவே தான்புனைந்து

சிந்துகவி வேழமெனும் சிம்மத்தைத்- தந்தமுடை

குஞ்சரத்தைத் தன்பெயரில்  கொண்டநான் போற்றுகிறேன்

நெஞ்சிலவர் சீரை நினைத்து. 


தலைப்பு: ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது 

அரணே! 

(பாவகை : அகவற்பா)

சந்த வசந்தச் சபையோர் நடத்தும்

கவிதைப் பட்டி மண்டபம் தன்னில்

நாடுமுன் னேறவே பெரிதும் தேவை 

அரணே! என்னும் அணிக்காய் வேண்டி

ஆவ லுடனே அகவற் பாவில் 

அடித்துரைக் கின்றேன் அவையை வணங்கி. 6


ஏரினும் நன்றாம் எருவிடல் நட்டபின்

நீரினும் நன்றதன் காப்பென வள்ளுவர்

காவலின் உயர்வைக் காட்டிச் சொன்னார்

கழனி சிறக்கவே காவல் வேண்டுமாம்

தேசம் வளரவும் தேவைதா னேயது?    11


இயற்கை வளத்தை இயலும் மட்டும்

என்றும் காத்தல் எல்லோர் கடமை

இல்லை யென்றால் எதிரிகள் வந்தே

எடுத்துச் செல்தல் எளிதாம் காணீர்

அரணாய் அதனை அனைவரும் காக்கும் 

அரசுகள் மட்டுமே அவனியை ஆளும்.        17


கல்வி யாளர் கண்விழித் தேதான்

கண்டுபி டித்தக்  கருவிக ளுக்குக்

காப்புரி மையவர் கைகளி லிலையெனில்

கண்டவன் வந்ததைக் கவர்ந்துதான்  செல்வான்

கல்வி யால்வரு செல்வம் அனைத்தும்

கள்வன் அவனின் கைவசம் போகுமே

அந்தக் காப்புரி மையெனும் அரணே

அத்தனை வளத்துடன்  அவர்பெயர் காக்கும். 25


நல்லிணக் கங்கொள் நாடுக ளோடே

நட்புபா ராட்டல் நல்லதே எனினும்

எப்பொழு தெவன்தான் எம்மைக் கவிழ்ப்பான்

என்ற எண்ணமே இறுதி வரையில்

அரணாய் இருந்தே அரசைக் காக்கும்

அவர்தம் நட்பும் அதனால் தொடரும்.         31


நேர்மை தியாகம் பண்பா டெல்லாம்

பேணப்  பேணப் பெரிதாய் வளரும்

பேணல் குறைந்தால் பேருடன் நிற்கும்

பேணுத லேயிவை காக்கும் அரணாம்

நேரிய பண்பதை நித்தமும் பேணவே

நீண்டநாள் அவைதான் நிலைக்கும் நாட்டிலே. 37


பஞ்சம் வந்தால் பசிபோக் கிடவே

உணவுப் பொருளை ஒழுங்காய்க் கிடங்கில்

சேமித் துவைத்தலே சிறந்ததோர் அரணாம்

ராணுவம் எத்தனை பெரிதா னாலும்

தளவா டங்களைத் தான்கொளும் பாசறை

தன்னைக் காத்தலே தலைகொள் பணியாம்

அமைச்சகம் தொடங்கி அலுவல கம்வரை

கண்கா ணிப்புக் கேமரா தானே

கள்வரைப் பிடிக்கும் கருவியாய் உளது? 

அரசுப் பணிக்குமே அதுவும் அரணாம்! 47


வங்கிப் பணமும் வாக்குப் பெட்டியும்

பாது காப்பாய்ப் பயமின் றிருக்கும்

பல்வகை அடுக்கில் கணனியும் இணையமும்

பலம்கொள் கடவுச் சொற்களோ டி்ருந்தால்

இதனை நன்றாய்ச் செய்திடும் நாடே

இன்றைய உலகில் இனிதொரு நாடாம்! 53


செயற்கைக் கோள்கள் செயல்படா விட்டால்

ஜெகத்தினில் வாழ்க்கை சீர்குலைந் திடுமே! 

எதிரிக ளாலவை இறக்கா திருக்க

எத்தனை விதங்கள் இவற்றைக் காக்குமோ

அத்தனை யும்சேர் அதிதொழில் நுட்ப

ஒருங்கி ணைந்த உன்னதச் செயலியைக்

கொண்ட  நாடே குவலயம் ஆளும்!  60


நாளைய போர்தான் நடக்கப் போவது

வானின் வெளியிலும் வாரியி லும்தான்

வதம்செயும் கணைகள் வருவதும் கூட

வானில் இருந்தென வல்லுனர் உரைப்பார்

எனவே ஏவு கணைகளைத் தாக்கும்

எதிர்க்கணை பலவகை இருக்கும் நாடே

இருநில மீதினில் ஏற்றம் கொளுமாம்! 

தூரத் தில்வரும் தூசியைக் கூடத்

துல்லிய மாகக் கணித்திடும் ரேடார்

தீரங் களிலே சீருடன் அமைப்பார் 

நேரிய காவல் நிறைந்தொரு நாட்டில்! 

முத்தம் கொடுக்கும் ஏவு கணைகளை

( kissing missiles) 

மொத்தமாய் எல்லை  முழுவதும் வரிசையாய் 

வைத்திருந் தாலே வலிமைகொள் நாடாம்! 

அணுசக் தியினால்ப் பலநாள் இயங்கும்

மூழ்கிக் கப்பல் முழுதும் காக்கும்

கரைகளைக் கொண்ட கடல்சூழ் நாடே

கலியினில் வல்லமை கொளும்சீர் நாடாம்! 

வலியவ னைத்தான் வலியவன் என்றும்

வணங்குவான் என்றே வான்வெளி ஆய்ந்த 

அறிவிய லாளராம்  அப்துல் கலாமும்

அடித்துச் சொன்னதும் அதுவே  தானே? 

 இவைதான் அரணாய் இருந்தே கண்ணின்

இமைபோல் நாட்டை இனிமேல் காக்கும்

கோட்டையும் அகழியும் கொத்தளங் களுந்தான்

நாட்டினைக் காத்த நாள்களை யெல்லாம்

வரலாற் றினிலே வைத்தே படிக்கலாம்!  87


காப்புரி மைதான் கல்விக் கரணே! 

கடவுச் சொற்கள் கணனிக் கரணே! 

கள்ளத் தனத்தைக் கனிவுடன் தடுக்கக் 

கண்கா ணிப்புக்்கேமரா அரணே! 

ஏவு கணைகள் எல்கைக் கரணே! 

மேவும்  நாவாய் வேலைக் கரணே! 

அரணே காக்கும் அனைத்தையும் எனவே

நாடு சிறக்கப்  பெரிதும் தேவை

அரணே! என்றுதான் அறுதியிட் டிறுதியில்

தீர்ப்பினை வழங்கத் திரும்பவும் வேண்டி

நடுவரை வணங்கி நானும் நிறுத்துமுன்

தடையிலா மழைபோல் சந்தக் கவிதைகள்

கொடையெனக் கொடுக்கும்  கோன்களைப் போற்றினன் 

விடைபெறும் சத்திய  வேழனாம் நானே.      101


அருஞ்சொற் பொருள்: 

வேலை - கடல்; நாவாய் - கப்பல்

வேழம் , குஞ்சரம் - யானை; 

காப்புரிமை - patent, copyright 

பலம்கொள் கடவுச் சொல்- strong password 

கோன் - அரசன்


















Siva Siva

unread,
Mar 20, 2026, 11:59:50 AM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
Impressive length!

/  அடித்துரைக் கின்றேன் அவையை வணங்கி   /

T20 style! 

/ எதிரிக ளாலவை இறக்கா திருக்க /
இறவா திருக்க

/ வல்லுனர் /
வல்லுநர்.
வல்லோர் என்றே சொல்லலாமோ?
 
/ அணுசக் தியினால்ப் பலநாள் இயங்கும்
மூழ்கிக் கப்பல் /

இயங்கு(ம்)நீர் மூழ்கிக் கப்பல்?

V. Subramanian

On Fri, Mar 20, 2026 at 11:44 AM Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:

...


தலைப்பு: ஒரு நாடு சிறக்க அதிகம் தேவைப்படுவது 

அரணே! 

(பாவகை : அகவற்பா)

சந்த வசந்தச் சபையோர் நடத்தும்

கவிதைப் பட்டி மண்டபம் தன்னில்

நாடுமுன் னேறவே பெரிதும் தேவை 

அரணே! என்னும் அணிக்காய் வேண்டி

ஆவ லுடனே அகவற் பாவில் 

அடித்துரைக் கின்றேன் அவையை வணங்கி. 6

...

காப்புரி மைதான் கல்விக் கரணே! 

கடவுச் சொற்கள் கணனிக் கரணே! 

...

Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 12:06:55 PM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
கவிதையை உடனே படித்துப் பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி! 

தங்களின் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி!
திருத்திக் கொள்கிறேன். 
- சத்ய வேழன். 
20-04-2026

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 20, 2026, 12:20:01 PM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
அருமை -  சரளம், கருத்துச் செறிவு நிறைந்த அகவற்பா, திரு. சத்யவேழன்.

ஈரசைச்சீர்களே மிகவும் கவனத்துடன் உபயோகித்தீர்கள். பாராட்டுகள்.

முடிந்த வரையில் இயற்சீர் வெண்டளை அதிகமாய் வராமல் பார்த்துக் கொண்டால் அகவலோசை இன்னும் நன்கு வெளிப்படும் என்பது எற்றன் கருத்து.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Mar 20, 2026, at 21:36, Sai Ganesan H <saisree...@gmail.com> wrote:



Sai Ganesan H

unread,
Mar 20, 2026, 12:22:44 PM (13 days ago) Mar 20
to santhav...@googlegroups.com
தங்களின் பாராட்டுகளுக்கும் பரிந்துரைகளுக்கும் மிக்க நன்றி! 

— சத்ய வேழன் H சாயி கணேசன்
20-03-2026

It is loading more messages.
0 new messages