நிலவும் கிழ்வியும்

8 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Mar 15, 2026, 5:36:26 PM (22 hours ago) Mar 15
to santhavasantham
image.png

நிலவி லிருந்து விழுந்த கிழவி
         நேரே மீண்டும் அதில் சேர
உலவும் மேக வாகனத்தில்
          உட்கார்ந் தபடி விரைகின்றாள்
தொலைவில் இருக்கும் நிலவை இந்தத்
          தொண்டுக் கிழவி பிடிப்பாளா?
நிலவும் பொலிவை இழந்து விட்ட
           நிலையி லன்றோ செல்கிறது!

இமயவரம்பன்

unread,
Mar 15, 2026, 6:01:07 PM (21 hours ago) Mar 15
to santhav...@googlegroups.com, santhavasantham
மிகச் செழிப்பான கற்பனை! நிலவிலிருந்து விழுந்த கிழவியின்மீது பரிவையும், அந்த நிலவை மீண்டும் அடைய விரையும் கிழவியின் விழைவையும், நிலவின் ஒளி முழுவதுமாக மங்கி விடுவதற்குள் அதை அந்தக் கிழவி அடைந்திட வேண்டுமே என்னும் ஏக்கத்தையும் நான்கே அடிகளில் தத்ரூபமாகக் காட்டிய விதம் மிக அருமை!

- இமயவரம்பன்

Siva Siva

unread,
Mar 15, 2026, 6:09:49 PM (21 hours ago) Mar 15
to santhav...@googlegroups.com
அக்கிழவி கற்பனைக்குதிரையில் பறக்கினறாள்!

V. Subramanian

Rajagopalan Soundararajan

unread,
Mar 15, 2026, 6:14:06 PM (21 hours ago) Mar 15
to சந்தவசந்தம்

மஞ்சள் நிலவின் மடியினிலே

. .வடைகள் சுட்டக் கிழவியிதோ?

பஞ்சாய்ப் பறந்து பரிதவித்துப்

. . பாங்காய் நிலவைப் பிடிப்பாளோ?

கொஞ்சம் இறங்கி வந்திடிலோ

. . கோங்க மரத்தில் வீழ்ந்திடுமோ?

விஞ்சும் தென்றல் உந்திடுமால்

. .விண்ணில் இலக்கை அடைந்திடுமே!

Kaviyogi Vedham

unread,
Mar 15, 2026, 8:38:45 PM (19 hours ago) Mar 15
to santhav...@googlegroups.com
abaramkavikal, yogiyar


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/24711f5e-e901-472f-9410-872fee7ef7abn%40googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Mar 15, 2026, 9:09:08 PM (18 hours ago) Mar 15
to santhav...@googlegroups.com
அருமையான கற்பனை, தலைவரே!

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



On Sun, Mar 15, 2026 at 5:36 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

sudha's creations

unread,
10:03 AM (5 hours ago) 10:03 AM
to santhavasantham
நிலவும் கிழவியும் என்ற தலைப்பில் அமைந்த அற்புதமான கவிதை... படிக்க படிக்க அந்த நிலவை.. நோக்கி என் மனம் செல்கிறது.....
பின்குறிப்பு..
சென்னையில் இப்பொழுது தாய்க்கிழவி என்ற படம் ரொம்ப பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது... இது கிழவிக் காலம் போல் இருக்கிறது..

அன்புள்ள 
சுதா வேதம்...

Reply all
Reply to author
Forward
0 new messages