சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி

295 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jul 16, 2009, 9:50:19 PM7/16/09
to santhavasantham
சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 29-Jul-09

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7083&padhi=100+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சுந்தரர் தேவாரம் - 7.83.1

அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்(கு)
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 17, 2009, 5:36:56 PM7/17/09
to santhavasantham

2009-03-05
வெண்காடு அடை மனமே (திருவெண்காடு)
----------------------------------------------------------
(
வெண்டளை பயின்று வரும் "தேமா/கூவிளம், விளங்காய், தேமா/கூவிளம், விளங்காய்" என்ற வாய்பாடு. இதை எப்பாடல் வகையாகக் கருதலாம்?)

(
சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி" -
சுந்தரரின் இப்பதிகத்தில் பெரும்பாலான 'காய்'ச்சீர்களின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வருகிறது.)

1)
முன்னை வினையதனால் மோகக் கடலினிலே
இன்னல் உறுவதுமேன் என்றும் மகிழ்ந்திருக்க
அன்னை உமையவளை ஆகத் திடமுடையான்
மின்னற் சடையரன்றன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2009/7/16 Siva Siva <naya...@gmail.com>
சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 29-Jul-09
--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 18, 2009, 6:16:33 PM7/18/09
to santhavasantham

2)
நாளைக் கெனநினைந்து நம்பன் கழல்மறந்து
நாளைக் கழிப்பதுமேன் நல்ல கதியடைய
காளைக் கொடியுடையான் கண்ணால் மலர்ச்சரத்து
வேளை எரித்தவன்றன் வெண்கா டடைமனமே.

நம்பன் - விரும்புபவன்/விரும்பப்படுபவன் - சிவன்; (நம்புதல் - விரும்புதல்);

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/17 Siva Siva <naya...@gmail.com>

2009-03-05
வெண்காடு அடை மனமே (திருவெண்காடு)
----------------------------------------------------------
(
வெண்டளை பயின்று வரும் "தேமா/கூவிளம், விளங்காய், தேமா/கூவிளம், விளங்காய்" என்ற வாய்பாடு. இதை எப்பாடல் வகையாகக் கருதலாம்?)

(
சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி" -
சுந்தரரின் இப்பதிகத்தில் பெரும்பாலான 'காய்'ச்சீர்களின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வருகிறது.)

1)

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

unread,
Jul 19, 2009, 4:30:49 PM7/19/09
to santhav...@googlegroups.com


2009/7/17 Siva Siva <naya...@gmail.com>

2009-03-05
வெண்காடு அடை மனமே (திருவெண்காடு)
----------------------------------------------------------
(
வெண்டளை பயின்று வரும் "தேமா/கூவிளம், விளங்காய், தேமா/கூவிளம், விளங்காய்" என்ற வாய்பாடு. இதை எப்பாடல் வகையாகக் கருதலாம்?)

(
சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி" -
சுந்தரரின் இப்பதிகத்தில் பெரும்பாலான 'காய்'ச்சீர்களின் முதல் அசையில் நெடிலோ ஒற்றோ வருகிறது.)

 
 
வெண்டளை பயிலும் தரவு கொச்சகம் அல்லது கலிவிருத்தம் என்று
வகைப்படுத்தலாம். 13 எழுத்தடிகள்.
 
 
 
 
 
 
 



1)
முன்னை வினையதனால் மோகக் கடலினிலே
இன்னல் உறுவதுமேன் என்றும் மகிழ்ந்திருக்க
அன்னை உமையவளை ஆகத் திடமுடையான்
மின்னற் சடையரன்றன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jul 19, 2009, 5:12:43 PM7/19/09
to santhavasantham

3)
தேடும் பொருள்பலவும் செல்லும் வழிவருமா
ஆடும் திருவடியான் ஆர்க்கும் ஒருதலைவன்
ஓடு[ம்] நதிச்சடையான் உன்னும் அடியவர்க்கு
வீடும் தருமிறைவன் வெண்கா டடைமனமே.

உன்னுதல் - எண்ணுதல்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/18 Siva Siva <naya...@gmail.com>

2)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jul 20, 2009, 4:14:45 AM7/20/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
"வெண்காடடை மனமே!"பாடல்கள் வெகு எளிமையாய்,
இனிமையாய், புரியும்படியாக இருக்கிறது.நன்றி!
'ஆர்க்கும்' என்பது
யார்க்கும்-எவருக்கும் என்ற பொருள்தானே?

அன்புடன்,
தங்கமணி.

On Jul 19, 2:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> தேடும் பொருள்பலவும் செல்லும் வழிவருமா
> ஆடும் திருவடியான் ஆர்க்கும் ஒருதலைவன்
> ஓடு[ம்] நதிச்சடையான் உன்னும் அடியவர்க்கு
> வீடும் தருமிறைவன் வெண்கா டடைமனமே.
>
> உன்னுதல் - எண்ணுதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/7/18 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 2)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jul 20, 2009, 8:22:12 AM7/20/09
to santhav...@googlegroups.com
ஆம். இப்பாடலில் ஆர்க்கும் என்பது எவருக்கும் என்ற பொருளில் வருகிறது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/7/20 thangamani <tvthan...@gmail.com>

அன்புள்ள சிவசிவா!
"வெண்காடடை மனமே!"பாடல்கள் வெகு எளிமையாய்,
இனிமையாய், புரியும்படியாக இருக்கிறது.நன்றி!
'ஆர்க்கும்' என்பது
யார்க்கும்-எவருக்கும் என்ற பொருள்தானே?

அன்புடன்,
தங்கமணி.

On Jul 19, 2:12 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 3)
> தேடும் பொருள்பலவும் செல்லும் வழிவருமா
> ஆடும் திருவடியான் ஆர்க்கும் ஒருதலைவன்
> ஓடு[ம்] நதிச்சடையான் உன்னும் அடியவர்க்கு
> வீடும் தருமிறைவன் வெண்கா டடைமனமே.
>
> உன்னுதல் - எண்ணுதல்;
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>


Kaviyogi Vedham

unread,
Jul 20, 2009, 8:28:33 AM7/20/09
to santhav...@googlegroups.com
நல்ல கவிகளால் நம்பனைப் பாடிடும்்
வெல்ல சிவசிவா! வெல்!
(+ஆங்கில well!??)
2009/7/20 Siva Siva <naya...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Jul 20, 2009, 6:28:03 PM7/20/09
to santhavasantham

4)
ஆலைக் கரும்பெனவே அல்லல் படுவதுமேன்
மேலை வினையனைத்தும் விட்டு விலகிடவே
சூலப் படையுடையான் தூவெண் பொடியணிவான்
வேலை விடமிடற்றன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/19 Siva Siva <naya...@gmail.com>

3)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 21, 2009, 9:27:45 PM7/21/09
to santhavasantham

5)
துக்க[ம்] மிகக்கொடுக்கும் தொல்வினை யாவுமறப்
பக்கென முப்புரந்தீப் பற்ற நகைத்தஅரன்
முக்குள நீர்தனிலே மூழ்கி வணங்கவரம்
மிக்கருள் செய்பவன்தன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/20 Siva Siva <naya...@gmail.com>

4)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 22, 2009, 8:08:44 PM7/22/09
to santhavasantham

6)
கள்ளம் இலாதவராய்க் கைதொழு தன்றலர்ந்த
கள்ளிழி பூச்சொரிந்து காவென வேண்டுவரம்
அள்ளி அளிக்கிறவன் அன்பர்க் கருந்துணைவன்
வெள்விடை ஏறுமிறை வெண்கா டடைமனமே.

பதம் பிரித்து:
கள்ளம் இலாதவராய்க், கைதொழு(து), அன்(று) அலர்ந்த
கள் இழி பூச் சொரிந்து 'கா' என, வேண்டு வரம்
அள்ளி அளிக்கிறவன், அன்பர்க்(கு) அரும் துணைவன்,
வெள் விடை ஏறும் இறை வெண்கா(டு) அடை மனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/21 Siva Siva <naya...@gmail.com>

5)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jul 23, 2009, 5:40:49 AM7/23/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
நான் ஒரு பாடல் இயற்றினேன்.தயவுசெய்து சரி பார்க்கவும்.

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்
வெற்றித் தரும் அரனின் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 22, 5:08 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> கள்ளம் இலாதவராய்க் கைதொழு தன்றலர்ந்த
> கள்ளிழி பூச்சொரிந்து காவென வேண்டுவரம்
> அள்ளி அளிக்கிறவன் அன்பர்க் கருந்துணைவன்
> வெள்விடை ஏறுமிறை வெண்கா டடைமனமே.
>
> பதம் பிரித்து:
> கள்ளம் இலாதவராய்க், கைதொழு(து), அன்(று) அலர்ந்த
> கள் இழி பூச் சொரிந்து 'கா' என, வேண்டு வரம்
> அள்ளி அளிக்கிறவன், அன்பர்க்(கு) அரும் துணைவன்,
> வெள் விடை ஏறும் இறை வெண்கா(டு) அடை மனமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/7/21 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 5)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jul 23, 2009, 10:08:29 AM7/23/09
to santhav...@googlegroups.com


2009/7/23 thangamani <tvthan...@gmail.com>

அன்புள்ள சிவசிவா!
நான் ஒரு பாடல் இயற்றினேன்.தயவுசெய்து சரி பார்க்கவும்.

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன்  நீல மணிமிடறன்
வெற்றித் தரும் அரனின் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

அமைப்புச் சரியாக வந்துள்ளது.
வெற்றி தரும் - 'த்' மிகாது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 
On Jul 22, 5:08 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 6)
> கள்ளம் இலாதவராய்க் கைதொழு தன்றலர்ந்த
> கள்ளிழி பூச்சொரிந்து காவென வேண்டுவரம்
> அள்ளி அளிக்கிறவன் அன்பர்க் கருந்துணைவன்
> வெள்விடை ஏறுமிறை வெண்கா டடைமனமே.

thangamani

unread,
Jul 23, 2009, 11:26:07 AM7/23/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சிவசிவா!
மிக்கநன்றி!மகிழ்ச்சி!
வெற்றி த் தரும்-- மிகுந்துள்ள'த்'தை
நீக்கிவிட்டேன்!(தங்கமணி!ஒற்றிலக்கணத்
தவறுகள் செய்வதிலிருந்து திருந்துவாய்..... என்ற
நம்பிக்கை இருக்கிறது!)

அன்புடன்,
தங்கமணி.

பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?


சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
நெற்றி விழிஅழலன் நீல மணிமிடறன்

வெற்றி தரும் அரனின் வெண்கா டடைமனமே!

On Jul 23, 7:08 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/7/23 thangamani <tvthangam...@gmail.com>


>
> > அன்புள்ள சிவசிவா!
> > நான் ஒரு பாடல் இயற்றினேன்.தயவுசெய்து சரி பார்க்கவும்.
>
> > பற்றும் இருவினையில் பங்கம் உறுவதுமேன்?
> > சற்றும் சிவநினைவில் தோய்தல் நலம்பயக்கும்
> > நெற்றி விழிஅழலன்  நீல மணிமிடறன்
> > வெற்றித் தரும் அரனின் வெண்கா டடைமனமே!
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> அமைப்புச் சரியாக வந்துள்ளது.
> வெற்றி தரும் - 'த்' மிகாது.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
>
> > On Jul 22, 5:08 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > 6)
> > > கள்ளம் இலாதவராய்க் கைதொழு தன்றலர்ந்த
> > > கள்ளிழி பூச்சொரிந்து காவென வேண்டுவரம்
> > > அள்ளி அளிக்கிறவன் அன்பர்க் கருந்துணைவன்
> > > வெள்விடை ஏறுமிறை வெண்கா டடைமனமே.
>

> --http://www.geocities.com/nayanmars

thangamani

unread,
Jul 24, 2009, 4:08:30 AM7/24/09
to சந்தவசந்தம்
பண்ணீ ரொருதவமும் பாவ வினையொழிமின்!
கண்ணீ ரதிலுணர்ந்து காணும் அருள்நிதியன்
தண்ணீ ரென உயிரைத் தாங்கும் இறைவனவன்
வெண்ணீ றணிஅரனின் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 18, 3:16 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2)
> நாளைக் கெனநினைந்து நம்பன் கழல்மறந்து
> நாளைக் கழிப்பதுமேன் நல்ல கதியடைய
> காளைக் கொடியுடையான் கண்ணால் மலர்ச்சரத்து
> வேளை எரித்தவன்றன் வெண்கா டடைமனமே.
>
> நம்பன் - விரும்புபவன்/விரும்பப்படுபவன் - சிவன்; (நம்புதல் - விரும்புதல்);
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/7/17 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
>
>
> > 2009-03-05
> > வெண்காடு அடை மனமே (திருவெண்காடு)
> > ----------------------------------------------------------
> > (வெண்டளை பயின்று வரும் "தேமா/கூவிளம், விளங்காய், தேமா/கூவிளம், விளங்காய்" என்ற
> > வாய்பாடு. இதை எப்பாடல் வகையாகக் கருதலாம்?)
>
> > (சுந்தரர் தேவாரம் - 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுப தம்சொல்லி" -
> > சுந்தரரின் இப்பதிகத்தில் பெரும்பாலான 'காய்'ச்சீர்களின் முதல் அசையில்
> > நெடிலோ ஒற்றோ வருகிறது.)
>
> > 1)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Siva

unread,
Jul 24, 2009, 10:04:32 AM7/24/09
to santhavasantham

7)
பாண்டவ னுக்கருளப் பண்டொரு வேடனுருப்
பூண்டவன் எவ்விடமும் போகும் அரண்களில்தீ
மூண்டு விடச்சிரித்தான் முக்குள[ம்] மூழ்குபவர்
வேண்டு வரந்தருவான் வெண்கா டடைமனமே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/22 Siva Siva <naya...@gmail.com>

6)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 25, 2009, 11:52:12 AM7/25/09
to santhavasantham

8)
வல்லன் எனச்செருக்கி மாவெற் பெடுப்பவன்மேல்
மெல்விரல் இட்டடர்த்து வீணை இசைக்கருள்வான்;
எல்லியில் ஆடுபவன்; ஈடிலி; ஓர்மலையை
வில்லென ஏந்துபவன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/24 Siva Siva <naya...@gmail.com>

7)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jul 25, 2009, 9:14:13 PM7/25/09
to santhavasantham
சுந்தரர் வரலாற்றுச் சுருக்கம் - தினமணியில்:

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Religion&artid=94491&SectionID=152&MainSectionID=152&SEO=&Title=

pdf attached.

2009/7/25 Siva Siva <naya...@gmail.com>


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

sundarar - Dinamani - 2009-07-24.pdf

thangamani

unread,
Jul 26, 2009, 3:55:06 AM7/26/09
to சந்தவசந்தம்
பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சித் தருமிறையாம்
வேத மறையவனின் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 25, 8:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)
> வல்லன் எனச்செருக்கி மாவெற் பெடுப்பவன்மேல்
> மெல்விரல் இட்டடர்த்து வீணை இசைக்கருள்வான்;
> எல்லியில் ஆடுபவன்; ஈடிலி; ஓர்மலையை
> வில்லென ஏந்துபவன் வெண்கா டடைமனமே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/7/24 Siva Siva <nayanm...@gmail.com>


>
> > 7)
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jul 26, 2009, 7:51:59 AM7/26/09
to santhav...@googlegroups.com


2009/7/26 thangamani <tvthan...@gmail.com>

பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
காத லுறுமனதில் காட்சித் தருமிறையாம்
வேத மறையவனின் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

"காட்சி தரும்" என்று 'த்' மிகாமல் வரும்.

'வேத மறையவன்' - வேதம், மறை - ஒரே பொருளன்றோ?
"வேதம் அறை அவன்" என்று பொருள் கொள்ளவேண்டுமோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

On Jul 25, 8:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 8)

thangamani

unread,
Jul 26, 2009, 11:42:43 AM7/26/09
to சந்தவசந்தம்
//'வேத மறையவன்' - வேதம், மறை - ஒரே பொருளன்றோ?
"வேதம் அறை அவன்" என்று பொருள் கொள்ளவேண்டுமோ?//

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

கேட்டு(கேட்) வாசப்படி என்பது போல்
வேத மறையவன் எனக் கூற நினைத்தேன்.
சரி.
இப்பொழுது
"வேதமுதல்வன்" என்று எழுதியிருகின்றேன்.
சரி என்று எண்ணுகின்றேன்.

//"காட்சி தரும்" என்று 'த்' மிகாமல் வரும்.//
மிகுகின்ற "த்" தை நீக்கிவிட்டேன். நன்றி!


பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து

காத லுறுமனதில் காட்சி தருமிறையாம்
வேத முழுமுதல்வன் வெண்கா டடைமனமே!

அன்புடன்,
தங்கமணி.

On Jul 26, 4:51 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2009/7/26 thangamani <tvthangam...@gmail.com>


>
> > பாத மிடுநடனம் பார்க்கப் பரவசமாம்
> > சீத மிகுமிமய சீலன் அருள்விழைந்து
> > காத லுறுமனதில் காட்சித் தருமிறையாம்
> > வேத மறையவனின் வெண்கா டடைமனமே!
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> "காட்சி தரும்" என்று 'த்' மிகாமல் வரும்.
>
> 'வேத மறையவன்' - வேதம், மறை - ஒரே பொருளன்றோ?
> "வேதம் அறை அவன்" என்று பொருள் கொள்ளவேண்டுமோ?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
>
>
> > On Jul 25, 8:52 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> > > 8)
>

> --http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Jul 26, 2009, 9:41:34 PM7/26/09
to santhavasantham

9)
பன்றியும் அன்னமுமாய்ப் பாற்கட லான்பிரமன்
சென்றடி யோடுமுடி தேடிய சோதியவன்
என்றும் இருக்கிறவன் இன்பம் அளிக்கிறவன்
வென்றி விடைக்கொடியான் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/25 Siva Siva <naya...@gmail.com>

8)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jul 27, 2009, 11:25:24 AM7/27/09
to சந்தவசந்தம்
எங்கு மிருப்பவனை ஏகன் அவன்புகழை
துங்கத் தமிழணியாய்ச் சூட்டி மகிழுறுக!
மங்கை உமையவளை வாம மிடமுடையான்
வெங்க ணெனுவினைதீர் வெண்கா டடைமனமே!

வெங்கண்= கொடுமை

அன்புடன்,
தங்கமணி.

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 12:05:28 PM7/27/09
to santhav...@googlegroups.com
 மலையை வில்லென ஏந்துபவன் ..
 அது என்ன சரித்திரம்ம்..?(சிவனுக்கு..?)
 சொல்லி அருள வேண்டும்..
 யோகியார்

2009/7/25 Siva Siva <naya...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 12:06:44 PM7/27/09
to santhav...@googlegroups.com
"வேதம் அறை அவன்"..??!!
 என் மேல் என்ன கோபம் சிவாவுக்கு,,?
யோகியார்

2009/7/26 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Jul 27, 2009, 2:22:10 PM7/27/09
to santhav...@googlegroups.com
கல் எறிந்து சாக்கியநாயனார் வழிபட்டது போலவோ? :)

2009/7/27 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

"வேதம் அறை அவன்"..??!!
 என் மேல் என்ன கோபம் சிவாவுக்கு,,?
யோகியார்




--

Siva Siva

unread,
Jul 27, 2009, 5:26:14 PM7/27/09
to santhav...@googlegroups.com
முப்புரம் எரித்தது:

www.thevaaram.org தளத்திலிருந்து:

''
......... தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி' என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த 'பொன், வெள்ளி, இரும்பு' இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர்.

...............
சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.

இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, 'அப்பெருமானே கருத்தா' என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம்........"



2009/7/27 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>
 மலையை வில்லென ஏந்துபவன் ..
 அது என்ன சரித்திரம்ம்..?(சிவனுக்கு..?)
 சொல்லி அருள வேண்டும்..
 யோகியார்

2009/7/25 Siva Siva <naya...@gmail.com>

8)
வல்லன் எனச்செருக்கி மாவெற் பெடுப்பவன்மேல்
மெல்விரல் இட்டடர்த்து வீணை இசைக்கருள்வான்;
எல்லியில் ஆடுபவன்; ஈடிலி; ஓர்மலையை
வில்லென ஏந்துபவன் வெண்கா டடைமனமே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 5:44:20 PM7/27/09
to santhav...@googlegroups.com
ரொம்ப நன்றி சிவா..கொஞ்சமே கொஞ்சம்தான் நினைவில் இருந்தது.
ஆகவே முழுசாய்க் ‘காண்’பித்த உங்கட்கு நன்றி!,
 யோகியார்

2009/7/27 Siva Siva <naya...@gmail.com>
முப்புரம் எரித்தது:

www.thevaaram.org தளத்திலிருந்து:

''
......... தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி' என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த 'பொன், வெள்ளி, இரும்பு' இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர்

.

...............
சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வரு சித்தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Jul 27, 2009, 7:47:34 PM7/27/09
to santhavasantham

கடைசி இரு பாடல்கள்:

10)
போதனை ஒன்றறியார் பொய்யுரை செய்பவர்தம்
வேதனை மிக்கவழி விட்டரன் இன்பநெறி
ஏதம் இலாதநெறி எய்தி மகிழ்பவர்சொல்
வேத முதல்வனுறை வெண்கா டடைமனமே.

விட்டு - நீங்கி;
சொல்லுதல் - புகழ்தல்;

11)
மாணியை நாடுமெமன் மாள உதைத்தருள்வான்
கோணிய வெண்பிறையைக் கோலம் உறத்தலைமேல்
பூணிறை நம்வினையைப் போக்கி அருள்புரிவான்
வேணியில் நீருடையான் வெண்கா டடைமனமே.

பதம் பிரித்து:

மாணியை நாடும் எமன் மாள உதைத்(து) அருள்வான்;
கோணிய வெண் பிறையைக் கோலம் உறத் தலைமேல்
பூண் இறை; நம் வினையைப் போக்கி அருள்புரிவான்;
வேணியில் நீர் உடையான் வெண்கா(டு) அடை மனமே.

மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;
கோணிய - வளைந்த;
வேணி - சடை;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/7/26 Siva Siva <naya...@gmail.com>

9)


--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Kaviyogi Vedham

unread,
Jul 27, 2009, 9:11:13 PM7/27/09
to santhav...@googlegroups.com
ரொம்ப அற்புதமான பாட்டு இது. சொற்செட்டுடன் அமைந்துளது.(வஞ்சி விருத்தமா?)
..
இதே எளிமைதான். எனினும், இன்னும் எளிமையுற அமைக்கலாமோ என்று சிந்தித்ததில், வந்தது,
 பிழைபொறுத்தே எப்படியிருக்கு என்று சொல்க!
..

மார்க்கண் டனைப்பிடித்தோன் மாள, உதைத்தவன்தான்;
பார்க்கும் ஒளிர்பிறையைப் பாரே புகழ்தலைமேல்
சேர்த்தோன்,நமதுவினை  தேய்த்தே அருள்புரிவோன்;
தீர்த்தச்  சடையன்திரு வெண்கா டடைமனமே!
யோகியார்


2009/7/27 Siva Siva <naya...@gmail.com>


மாணியை நாடுமெமன் மாள உதைத்தருள்வான்
கோணிய வெண்பிறையைக் கோலம் உறத்தலைமேல்
பூணிறை நம்வினையைப் போக்கி அருள்புரிவான்
வேணியில் நீருடையான் வெண்கா டடைமனமே.

பதம் பிரித்து:
மாணியை நாடும் எமன் மாள உதைத்(து) அருள்வான்;
கோணிய வெண் பிறையைக் கோலம் உறத் தலைமேல்
பூண் இறை; நம் வினையைப் போக்கி அருள்புரிவான்;
வேணியில் நீர் உடையான் வெண்கா(டு) அடை மனமே.

மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;
கோணிய - வளைந்த;
வேணி - சடை;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
  அனைவரும் வாழ்க நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

Siva Siva

unread,
Jul 28, 2009, 11:17:45 AM7/28/09
to santhav...@googlegroups.com


2009/7/27 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

ரொம்ப அற்புதமான பாட்டு இது. சொற்செட்டுடன் அமைந்துளது.(வஞ்சி விருத்தமா?)
..

பசுபதியார் சொன்னது: "வெண்டளை பயிலும் தரவு கொச்சகம் அல்லது கலிவிருத்தம் என்று
வகைப்படுத்தலாம். 14 எழுத்தடிகள்."


இதே எளிமைதான். எனினும், இன்னும் எளிமையுற அமைக்கலாமோ என்று சிந்தித்ததில், வந்தது,
 பிழைபொறுத்தே எப்படியிருக்கு என்று சொல்க!
..

மார்க்கண் டனைப்பிடித்தோன் மாள, உதைத்தவன்தான்;
பார்க்கும் ஒளிர்பிறையைப் பாரே புகழ்தலைமேல்
சேர்த்தோன்,நமதுவினை  தேய்த்தே அருள்புரிவோன்;
தீர்த்தச்  சடையன்திரு வெண்கா டடைமனமே!
யோகியார்

நன்று.
"பாரே புகழ்தலைமேல்" என்னாமல் "பார்புக ழத்தலைமேல்" என்றும்
"தேய்த்தே அருள்புரிவான்" என்னாமல் "தீர்த்து நலம்புரிவான்" என்றும் இருப்பின் ஒலி இன்னும் மெருகேறுமோ?


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




2009/7/27 Siva Siva <naya...@gmail.com>


மாணியை நாடுமெமன் மாள உதைத்தருள்வான்
கோணிய வெண்பிறையைக் கோலம் உறத்தலைமேல்
பூணிறை நம்வினையைப் போக்கி அருள்புரிவான்
வேணியில் நீருடையான் வெண்கா டடைமனமே.

பதம் பிரித்து:
மாணியை நாடும் எமன் மாள உதைத்(து) அருள்வான்;
கோணிய வெண் பிறையைக் கோலம் உறத் தலைமேல்
பூண் இறை; நம் வினையைப் போக்கி அருள்புரிவான்;
வேணியில் நீர் உடையான் வெண்கா(டு) அடை மனமே.

மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;
கோணிய - வளைந்த;
வேணி - சடை;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்


Kaviyogi Vedham

unread,
Jul 28, 2009, 11:57:31 AM7/28/09
to santhav...@googlegroups.com
sabaash!.. yu r correct. Sivaa! oli  nanraayirukkirathu as per yur advice.. i will correct in my file as yu said.
 Thanks, a lot..ok. it is kaliviruththam..i forgot the grammar
 yogiyaar

2009/7/28 Siva Siva <naya...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 28, 2009, 2:54:51 PM7/28/09
to santhav...@googlegroups.com

சிவசிவா மணியின் மணியான துதி அரனுக்கு இன்னொரு அணிகலமாகத் திகழும்.

அனந்த்

2009/7/27 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Jul 28, 2009, 11:42:10 PM7/28/09
to santhavasantham

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2009-07-29

1) --- ("
மாங்காய் மாங்காய் மாங்காய் மா" என்ற வாய்பாடு -- "பித்தாபிறை...") ---
புரமூன்றினை நகைசெய்தெரி புகச்செய்கிற முக்கண்
பரனேஒரு பழஆவணப் படிநீஎன தடிமை
விரைவாய்உடன் வருவாய்என விரும்பிப்பணி கொண்ட
புரைதீர்திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி.

ஆவணம் - உரிமைப்பத்திரம்;
புரை தீர் - குற்றமற்ற;

2)
முன்னாளினில் முதலைக்கிரை ஆனான்தனை மீண்டும்
பின்னாளினில் உடலோடுயிர் பெறுமாறருந் தமிழைச்
சொன்னாவலர் கோனின்கழல் துதிப்போர்களுக் கென்றும்
இன்னாமிகு செய்தீவினை இல்லாநிலை தானே.

*
திருப்புக்கொளியூர் அவிநாசியில் முன்பொரு சமயம் முதலை உண்ட சிறுவனைப் பின்னொரு நாள் சுந்தரர் மீட்டுத்தந்ததைச் சுட்டியது. (7.92.4 - "உரைப்பார் உரை ....முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே")
சொன்னாவலர்கோன் - சொல் நாவலர் கோன் - பாடிய திருநாவலூரில் தோன்றிய சுந்தரர்;
இன்னா - துன்பம்;

3) --- (
கலிவிருத்தம் - 'மா மா மா மா' என்ற வாய்பாடு - "பாட்டும் பாடிப்...") ---
வணங்கும் அரனே வந்த போதும்
பிணங்கிப் பின்னர்ப் பித்தா என்று
குணங்கள் கூறும் சுந்த ரர்தம்
மணங்கொள் மலர்த்தாள் வாழ்த்து வோமே.

4) --
கலி விருத்தம் -- (திருக்குறுந்தொகை அமைப்பில்) --
ஆற்றில் இட்டதை ஆரூர்க் குளத்தினில்
சேற்றில் தேடித் திகைத்துத் தருவாயே
ஏற்றில் ஏறும் இறைவா எனப்பாடும்
பேற்றைப் பெற்றார் புகழ்பாடும் எம்நாவே.

*
திருமுதுகுன்றில் பெற்ற பொன்னை அங்கே மணிமுத்தாற்றில் இட்டுப் பின் திருவாரூரில் கமலாலயக் குளத்தில் தேடிக் காணாது சிவனைப் பாடி அதை அடைந்த வரலாற்றைச் சுட்டியது. (7.25.9 - "ஏத்தா திருந்தறியேன் .... கூத்தா தந்தருளாய் கொடி யேன்இட் டளங்கெடவே")

5) --- (
எழுசீர் விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் விளம் மா" என்ற வாய்பாடு) ---
பந்தலில் வந்த பரமனை ஏசிப்
..
பாய்ந்(து)அவர் ஓலையைப் பிடுங்கி
வெந்தழல் இட்டும் வெண்ணெய்நல் லூரில்
..
வேறொரு ஓலையைக் காட்டி
அந்தமில் அடிகள் அடிமைகொண் டருளும்
..
அரும்புகழ்ச் சுந்தரர் தாளை
வந்தனை செய்யும் சிந்தையி னார்க்கு
..
வல்வினை போய்வரும் இன்பே.

அந்தம் இல் அடிகள் - அழிவற்ற கடவுள்;

வி. சுப்பிரமணியன்



2009/7/16 Siva Siva <naya...@gmail.com>
சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 29-Jul-09

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=7083&padhi=100+&button=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95

சுந்தரர் தேவாரம் - 7.83.1


அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம்சொல்லி
முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்(கு)
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே

முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும் தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில் சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப் பெறுவது எந்நாளோ !

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

thangamani

unread,
Jul 29, 2009, 2:46:49 AM7/29/09
to சந்தவசந்தம்

2)
முன்னாளினில் முதலைக்கிரை ஆனான்தனை மீண்டும்
பின்னாளினில் உடலோடுயிர் பெறுமாறருந் தமிழைச்
சொன்னாவலர் கோனின்கழல் துதிப்போர்களுக் கென்றும்
இன்னாமிகு செய்தீவினை இல்லாநிலை தானே.


சிவசிவா!இப்பாடல்,
கனிச்சீர்கள் பெற்றுள்ளன.

அன்புடன்,
தங்கமணி.

> 2009/7/16 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
>
>
> > சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 29-Jul-09
>

> >http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idFie...


>
> > சுந்தரர் தேவாரம் - 7.83.1
>
> > அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம்சொல்லி
> > முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்
> > சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக்(கு)
> > எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே
>
> > முற்பட்டு வருகின்ற பழையனவாகிய வலிய வினைவந்து சூழும் முன்னே, என் தந்தைக்கும்
> > தலைவராய் உள்ள இறைவரை, அடியேன், இரவும் பகலும் திருவைந்தெழுத்தை ஓதும் முறையில்
> > சித்தத்தால் சிந்தித்துக்கொண்டு, அழகிய திருவாரூரினுட் சென்று தலைக்கூடப்
> > பெறுவது எந்நாளோ !
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

Siva Siva

unread,
Jul 29, 2009, 8:13:10 AM7/29/09
to santhav...@googlegroups.com


2009/7/29 thangamani <tvthan...@gmail.com>


2)
முன்னாளினில் முதலைக்கிரை ஆனான்தனை மீண்டும்
பின்னாளினில் உடலோடுயிர் பெறுமாறருந் தமிழைச்
சொன்னாவலர் கோனின்கழல் துதிப்போர்களுக் கென்றும்
இன்னாமிகு செய்தீவினை இல்லாநிலை தானே.


சிவசிவா!இப்பாடல்,
கனிச்சீர்கள் பெற்றுள்ளன.

 ஆம். முதல் இரு பாடல்களும் "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற அமைப்பில் உள்ள பாடல்கள். 'மாங்காய்' என்று தவறிக் குறித்திருந்தேன்.


அன்புடன்,
தங்கமணி.
On Jul 28, 8:42 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2009-07-29
>
> 1) --- ("மாங்காய் மாங்காய் மாங்காய் மா" என்ற வாய்பாடு -- "பித்தாபிறை...")
> ---
> புரமூன்றினை நகைசெய்தெரி புகச்செய்கிற முக்கண்
> பரனேஒரு பழஆவணப் படிநீஎன தடிமை
> விரைவாய்உடன் வருவாய்என விரும்பிப்பணி கொண்ட
> புரைதீர்திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி.

Kaviyogi Vedham

unread,
Jul 29, 2009, 8:17:47 AM7/29/09
to santhav...@googlegroups.com
தூள் கிளப்பறீர் சிவா ஸ்வாமி..வெல்க நும் புகழ்!
யோகியார்

2009/7/29 Siva Siva <naya...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 30, 2009, 10:56:51 PM7/30/09
to santhav...@googlegroups.com

ஆடிச் சுவாதி, சுந்தரர் கைலாயப் பயணம் பற்றி இன்னொரு இழையில் கண்டது:
http://groups.google.com/group/bangaloreanbargal/browse_thread/thread/a1b1e01058466023

-----------------------------------------
சில தட்டச்சுப் பிழைகளைத் திருத்தி:

அப்பர், சம்பந்தர், மாணிக்கவசகர் பற்றி சொன்னோம். சுந்தரரை பற்றி சொல்லவேண்டாமா?அப்பரை திருவையாரில் கயிலை தரிசனம் செய்வித்தான் அந்த சிவபிரான். சம்பந்தரோ காளஹஸ்த்தியிலிருந்தே கயிலை காணும் பேறு பெற்றார். மாணிக்கவாசகரோ பொன்னம்பலத்தையே கயிலையாய்க் கண்டு சிவபதம் பெற்றார். சமயக்குரவராகிய இன்னும் ஒருவர் எப்படி கயிலை பார்த்தாரென பார்க்கலாமா? பசியுடன் ஒரு வீட்டு வாசலில் உட்கார வீடுதோறும் அவனுக்காக உணவு கேட்டு இறைவன் போனது வேறு எவராக இருக்க முடியும்?. வீட்டில் மனைவியுடன் ஊடல். சமரசம் செய்விக்க தூது போக இறைவனேயே அனுப்ப வேறு எவருக்கு தைரியம் வரும்? ஊர் எல்லைகளை காப்பாற்றமுடியாமல் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கீர்கள் என்று ஆண்டவனை வேறு யாரால் கேட்க முடியும்? இவைகளை ( நெல் மூட்டைகளை) இங்கே கொடுத்தால் யாரால் எடுத்துக்கொண்டு போகமுடியும். என் வீட்டுக்கே கொண்டு போய் கொடும் ஐயா என ஆண்டவனை வேறு யாரால் அதட்ட முடியும்? இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அதையெல்லாம் செய்தானே ஆண்டவன் அதுதான். அதனால்தான் அந்த தொண்டன் ஆண்டவனை ‘பித்தா’ என்றாரோ?  தொண்டருக்கே தொண்டனாகிய இறைவனின் கருணையை என்னென்பது.? ‘ஆவுரித்துத் தின்று உழலும் புலையராயினும்   கங்கைவார் சடைக்கரந்தாருக்கு அன்பராகில் அவரே நாம் வணங்கும் கடவுள்’ என்றாரே அது போல் என் அடியாராயின் ‘நான் என்னதான்
செய்யமாட்டேன்’ என உலகுக்கு தெரிவிக்க ஆடின விளையாட்டா? சம்பந்தர் குழந்தையாக இறைவனை நேசித்தார் அப்பர் தனனை ஒரு தாசனாக கருதி பக்தி செலுத்தினார். மாணிக்கவாசகருக்கோ இறைவன் ஒரு ஞான குரு. இறைவன் பால் செலுத்தும் பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற வழிகளில் தோழமை வழி  ஒன்று.  இறைவனைத் தனது தோழனாகக் பாவிப்பது. தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம் சுந்தரர். சுந்தரருக்கும் இறைவனுக்கும் நேருக்கு நேர் நடந்த சம்பாஷணைகளை கேட்க இரு செவி போதா.

சேராமான் நாயனர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர் சிவ வழிபாடு செய்யும் பொழுது நித்தம் தில்லை நடராஜபெருமானின் சிலம்பொலியை(எப்படி கேட்குமா?  ‘விந்து ஒலி கத்த’, ‘சங்கோதை நாதமொடு’ என்று அருணகிரி சொல்லவில்லையா?)  கேட்பாராம். ஒருநாள் பூஜையில் சிலம்பொலி  தாமதமாக கேட்டது. ‘ஏன் தாமதம்’ என கேட்டாராம் சேராமான் நாயனர். ‘தில்லை கோயிலில் என் நண்பன் சுந்தரன் வந்து பாடிக் கொண்டிருந்தான். கேட்கும் மகிழ்ச்சியில் வர தாமதம் என்றானாம் இறைவன். ‘யார் அந்த சுந்தரன்?’ என விசாரித்து அவரை அடைந்து இருவரும் நெருங்கிய நண்பராகி விட்டனர். ஒரு நாள் கைலையீசனை நினைத்து சுந்தரர் பாடிக்கொண்டிருந்தார். அதை கேட்ட ஈசன் ‘அழைத்து வா சுந்தரனை’ என ஐராவத்தை அனுப்பி விட்டான். சுந்தரும் அதில் ஏறி கைலைக்குப் பயணமானர். ‘எங்கே சேரமான்’ என ஒரு கணம் நினைக்க அதை சேரமான் அறிய (பிறர் எண்ணத்தை அறியும் ஆற்றல் அவருக்குண்டு) தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஒத அதுவும் அவரை ஏற்றிக்கொண்டு காற்றில் பறந்து சுந்தரரை பிடிக்க இருவரும் கைலை சென்றனர் அழையா விருந்தாளி சேரமான். உள்ளே செல்ல அனுமதியில்லை. சுந்தரர் மட்டும் உள்ளே சென்றார். இறைவனை தொழுதார். பிறகு ஒரு நல்ல நண்பனுக்கு எடுத்துக்காட்டாக சேரமான் வெளியில் காத்திருப்பதைச் சொன்னார். ‘அவரை உள்ளே விடும்’ நந்திக்கு உத்தரவு பிறந்தது ஆண்டவனிடமிருந்து. உள்ளே சென்றார் சேரமான்.  ‘என்ன செய்துகொண்டிருந்தீர் வெளியில்” ‘கைலை உலா பாடினேன்’ ‘இங்கு மறுபடியும் பாடும்’ அன்பர்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு காதில் விழுகிறது.   நாங்கள் ஒன்றும் புதிதாக சொல்லவில்லையே. எத்தனைத் தடவை பாடி விட்டோம். புரிய வில்லையா!
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிமா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நல் நாடதில்...

ஆரூரர் -  சுந்தரர் தோழமை சேர்தல் கொண்டவரோடே - சேரமான்; வெம்பரி- வெள்ளைக் குதிரை; ஆதி அந்த உலா- ஆசு  உலா கவிதையை ஆசு கவிதையாக (முதன் முதல் தமிழ் கவிதையில் உலா பாட்டானாதால் அது ஆதி உலா) Instant Composition  அதனால் ஆசு கவி இது சுந்தரர் கண்ட கயிலை அருணகிரி நாதர் வார்த்தைகளில். இதைவிட சுருக்கமாகவும், தெளிவாகவும் வேறு எந்த கவிஞனும் இதுவரை சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை. சுந்தரர் வானவெளியில் கைலையை நோக்கி தெற்கிலிருந்து வடக்கே பயணம் செய்த பொழுது அவர் உடல் சகஸ்ர சூரியனின் ஒளியை ஒன்றாகத் திரட்டி உருவாக்கியது போன்று இருந்ததாம். அதை கண்டவர் உபமன்னிய முனிவர்.  சிவனைத் தவிர வேறொரு தெய்வத்தை வணங்காதவர் அவர். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி அவர் கூறியது ‘நம்பி ஆருரன் நாம் வணங்கும் தன்மையன்’.  அவரே நாமும் வணங்கும் தெய்வமாகும். 

2009/7/28 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Aug 14, 2010, 8:59:05 AM8/14/10
to santhavasantham

சுந்தரர் குருபூஜை (ஆடிச் சுவாதி - இவ்வாண்டு 15-Aug-2010)

2010-08-14
சுந்தரர் சேவடி போற்றி
------------------------------
('
மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)

கொலையானையின் உரிபோர்த்தொரு குளிர்திங்களை வைத்த
மலையான்மகள் மணவாளனைப் பித்தாவென வாழ்த்தித்
தலம்யாவையும் இசைகூடிய தமிழாற்பணி தொண்டர்
தொலையாப்புகழ் அடைசுந்தரர் துணைச்சேவடி போற்றி.

உரி - தோல்;
தொலையாப் புகழ் - அழிவற்ற புகழ்;
துணை - இரட்டை (Pair, couple, brace); காப்பு (Protection)

அன்புடன்,


வி. சுப்பிரமணியன்





2009/7/28 Siva Siva <naya...@gmail.com>

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி

- 2009-07-29

1) --- ("
மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு -- "பித்தாபிறை...") ---




--
http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Aug 14, 2010, 9:37:41 AM8/14/10
to santhavasantham


2010/8/14 Siva Siva <naya...@gmail.com>

சுந்தரர் குருபூஜை (ஆடிச் சுவாதி - இவ்வாண்டு 15-Aug-2010)

2010-08-14
சுந்தரர் சேவடி போற்றி
------------------------------
('
மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)

கொலையானையின் உரிபோர்த்தொரு குளிர்திங்களை வைத்த
மலையான்மகள் மணவாளனைப் பித்தாவென வாழ்த்தித்
தலம்யாவையும் இசைகூடிய தமிழாற்பணி தொண்டர்
தொலையாப்புகழ் அடைசுந்தரர் துணைச்சேவடி போற்றி.

உரி - தோல்;
தொலையாப் புகழ் - அழிவற்ற புகழ்;
துணை - இரட்டை (Pair, couple, brace); காப்பு (Protection)


2) --- ('மா காய் மா காய்' என்ற வாய்பாடு) ---
மூவா முதல்வனுமோர் முதிய உருக்கொண்டு
வாவா அடிமையென்ன வாது புரிந்துபின்னர்த்
தேவா எனையாண்ட செல்வா எனப்போற்றும்
தூவாய் உடையார்வன் தொண்டர் பதம்போற்றி.

மூவா - மூப்பு இல்லாத;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Aug 14, 2010, 10:23:56 AM8/14/10
to santhavasantham


2010/8/14 Siva Siva <naya...@gmail.com>


2010/8/14 Siva Siva <naya...@gmail.com>

சுந்தரர் குருபூஜை (ஆடிச் சுவாதி - இவ்வாண்டு 15-Aug-2010)

2010-08-14
சுந்தரர் சேவடி போற்றி
------------------------------
('
மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)

கொலையானையின் உரிபோர்த்தொரு குளிர்திங்களை வைத்த
மலையான்மகள் மணவாளனைப் பித்தாவென வாழ்த்தித்
தலம்யாவையும் இசைகூடிய தமிழாற்பணி தொண்டர்
தொலையாப்புகழ் அடைசுந்தரர் துணைச்சேவடி போற்றி.

உரி - தோல்;
தொலையாப் புகழ் - அழிவற்ற புகழ்;
துணை - இரட்டை (Pair, couple, brace); காப்பு (Protection)


2) --- ('மா காய் மா காய்' என்ற வாய்பாடு) ---
மூவா முதல்வனுமோர் முதிய உருக்கொண்டு
வாவா அடிமையென்ன வாது புரிந்துபின்னர்த்
தேவா எனையாண்ட செல்வா எனப்போற்றும்
தூவாய் உடையார்வன் தொண்டர் பதம்போற்றி.

மூவா - மூப்பு இல்லாத
;


3) --- (கலிவிருத்தம் - 'மா மா மா மா' என்ற வாய்பாடு) ---
முன்னர்ச் சொன்ன வாக்கின் முறையால்
மின்னற் சடையன் வெண்ணெய் நல்லூர்
தன்னில் ஆட்கொள் தகைமை யாளர்
வன்னற் றொண்டர் மலர்த்தாள் போற்றி.

மின்னற் சடையன் - மின்னல் போல ஒளிரும் சடையை உடைய சிவபெருமான்;
வன்னற்றொண்டர் - வன் நல் தொண்டர் - வன் தொண்டர், நல் தொண்டர்;

4) --- (
கலிவிருத்தம் - 'மா மா மா மா' என்ற வாய்பாடு) ---
"
படியோ லையதே பறித்தான்; மூலம்
படியீர்" என்று பரமன் காட்டும்
படியோர் வாது செய்தார் பாட்டால்
படியா மனமும் படியுந் தானே.

படி ஓலை - பிரதி ஓலை (True copy, as of a manuscript);
பறித்தல் - வலிதிற் கவர்தல் (To take by force);
படியீர் - படிப்பீராக;
வாது செய்தார் பாட்டால் - வாதுபுரிந்த வன்தொண்டர் சுந்தரர் பாடிய தேவாரத்தால்;
படிதல் - கீழ்ப்படிதல்; வசமாதல் (To be subjugated; to be trained, disciplined or tamed);

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Aug 5, 2011, 10:48:41 PM8/5/11
to santhavasantham

சுந்தரர் குருபூஜை - 2011 - ஆடிச் சுவாதி - 2011-08-05(usa)/06(india)
-----------------------------
2011-08-05
சுந்தரர் சொல்லே துணை
---------------------------------
(
நேரிசை வெண்பா)

1)
வாடும் மனமே வழியறிவாய் மன்றினுள்
ஆடும் பரமன் அடிமையெனத் - தேடியிடம்
வந்து வழக்காடி ஆட்கொண்ட மாபத்தர்
சுந்தரர் சொல்லே துணை.

தேடியிடம் - இடம் தேடி;

2)
மனமே மகிழ வழியிது கேளாய்
வினைதீர்ந்து செல்வம் விளையும்; - புனற்சடையன்
தந்தபொன்னை ஆற்றிலிட்டா ரூர்க்குளத்தில் தானெடுத்த
சுந்தரர் சொல்லே துணை.

3)
காலனுக் கஞ்சிக் கலங்கும் மனமேஓர்
பாலனுக்காய் அன்றவன்மேல் பாய்ந்தவெஞ் - சூலனுக்குச்
சந்ததம் சந்தத் தமிழ்மாலை சாத்திய
சுந்தரர் சொல்லே துணை.

பாய்ந்தவெஞ்சூலன் - பாய்ந்த எம் சூலன்; பாய்ந்த வெம் சூலன்;
வெம்மை - கொடுமை; கோபம்; பராக்கிரமம்;
சந்ததம் - எப்பொழுதும்;
சாத்துதல் - அணிதல்;

4)
முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்
இன்புற இங்கெமனை ஈயச்சொல் - அன்புருவாம்
தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த
சுந்தரர் சொல்லே துணை.

தருவித்தல் - வருவித்தல்;

5)
சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்
தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்
நொந்தழு தாரூரில் நோக்கமடைந் தின்புற்ற
சுந்தரர் சொல்லே துணை.

நோக்கம் - பார்வை;

6)
மனைவியின் கோபத்தை மாற்ற எனக்கிங்(கு)
உனையன்றி உற்றார்ஆர் உள்ளார் - எனவிரவில்
நந்தியவன் தூது நடந்துதவும் நல்லடியார்
சுந்தரர் சொல்லே துணை.

எனவிரவில் - என இரவில்;
என - என்று சொல்ல;
நந்தி - சிவபெருமான்;

7)
போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்
மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார
வந்தித் தரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.

மேவுதல் - உறைதல்;
மாண் பொருள் - மிகுந்த பொருள்;
'
என்று' நாவாரச் செந்தமிழ் பாடி - என்று ஒரு சொல்லை வருவித்துக்கொள்க.

8)
காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்
சேவினிற்செல் ஐயாறா காவென்ற - நாவினி
செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.

கடக்ககில்லேன் - கடக்கும் ஆற்றல் இல்லேன்;
சே - எருது;
நாவினி செந்தமிழ் - நா இனிக்கும் செந்தமிழ்;

9)
அந்தமில் ஐயன் அருந்துணைவன் என்றுதனைத்
தந்தருள் செய்த தகைமையினால் - நிந்தையைப்போல்
கந்தமலி பாவால் கழலிணையைப் பாடியருள்
சுந்தரர் சொல்லே துணை.

அந்தம் இல் ஐயன் - முடிவு இல்லாத தலைவன்;
துணைவன் - தோழன்;
கந்தமலிபா - கந்தம் மலி பா - மணம் மிகுந்த பாமாலை;

10)
முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்
இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்
நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்
சுந்தரர் சொல்லே துணை.

தனி விடையார் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாகக் கொண்டவர்;
நந்தமர் ஊரன் - நம் தமர் ஊரன் - நம் தோழன் ; 'ஆரூரன்' என்னும் பெயரினன்;
நம்பி - ஆணிற் சிறந்தோன்;

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2010/8/14 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Aug 6, 2011, 9:17:51 AM8/6/11
to santhavasantham
இன்று வேறு ஏதோ தேடப்போய்க் கண்ணுற்ற ஒரு திருப்புகழ் - இதன் பிற்பகுதி சுந்தரர் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுகிறது.

தனத்தத்தன தானன தானன
     தனத்தத்தன தானன தானன
          தனத்தத்தன தானன தானன தந்ததான

......... பாடல் .........

மதப்பட்டவி சாலக போலமு
     முகப்பிற்சன வாடையு மோடையு
          மருக்கற்புர லேபல லாடமு ...... மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியு
     மிதற்செக்கர்வி லோசன வேகமு
          மணிச்சத்தக டோரபு ரோசமு ...... மொன்றுகோல

விதப்பட்டவெ ளானையி லேறியு
     நிறைக்கற்பக நீழலி லாறியும்
          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... யிந்த்ரலோகம்

விளக்கச்சுரர் சூழ்தர வாழ்தரு
     பிரப்புத்வகு மாரசொ ரூபக
          வெளிப்பட்டெனை யாள்வய லூரிலி ...... ருந்தவாழ்வே

இதப்பட்டிட வேகம லாலய
     வொருத்திக்கிசை வானபொ னாயிர
          மியற்றப்பதி தோறுமு லாவிய ...... தொண்டர்தாள

இசைக்கொக்கவி ராசத பாவனை
     யுளப்பெற்றொடு பாடிட வேடையி
          லிளைப்புக்கிட வார்மறை யோனென ...... வந்துகானிற்

றிதப்பட்டெதி ரேபொதி சோறினை
     யவிழ்த்திட்டவி நாசியி லேவரு
          திசைக்குற்றச காயனு மாகிம ...... றைந்துபோமுன்

செறிப்பித்த கராவதின் வாய்மக
     வழைப்பித்தபு ராணக்ரு பாகர
          திருப்புக்கொளி யூருடை யார்புகழ் ...... தம்பிரானே.

பொருளை இங்கே காண்க:
http://www.kaumaram.com/thiru_uni/tpun0947.html


2011/8/5 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Aug 6, 2011, 2:29:45 PM8/6/11
to santhavasantham

சில பாடல்களில் குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சிகள் - சுந்தரர் வாக்கில்:

4)

முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்
இன்புற இங்கெமனை ஈயச்சொல் - அன்புருவாம்
தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த
சுந்தரர் சொல்லே துணை.

* சுந்தரர் தேவாரம் - 7.92.4
உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்
அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.


5)
சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்
தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்
நொந்தழு தாரூரில் நோக்கமடைந் தின்புற்ற
சுந்தரர் சொல்லே துணை.

நோக்கம் - பார்வை;

* சுந்தரர் தேவாரம் - 7.95.2
விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர்
எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.


7)
போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்
மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார
வந்தித் தரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.

* சுந்தரர் தேவாரம் - 7.49.1
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
..
விரவ லாமைசொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
..
டாற லைக்குமிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முரு
..
கன்பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
..
எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

8)
காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்
சேவினிற்செல் ஐயாறா காவென்ற - நாவினி
செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்
சுந்தரர் சொல்லே துணை.

* சுந்தரர் தேவாரம் - 7.77.1
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ!

10)
முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்
இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்
நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்
சுந்தரர் சொல்லே துணை.

* சுந்தரர் தேவாரம் - 7.100.9
இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/8/5 Siva Siva <naya...@gmail.com>

சுந்தரர் குருபூஜை - 2011 - ஆடிச் சுவாதி - 2011-08-05(usa)/06(india)
-----------------------------
2011-08-05
சுந்தரர் சொல்லே துணை
---------------------------------
(
நேரிசை வெண்பா)


magudadheeban

unread,
Aug 7, 2011, 7:08:51 AM8/7/11
to santhav...@googlegroups.com
நன்று நன்று திரு.சுப்பிரமணியன்...!

மிக்க நன்று !

-மகுடதீபன்

2011/8/6 Siva Siva <naya...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

SUBBAIER RAMASAMI

unread,
Aug 8, 2011, 2:18:53 AM8/8/11
to santhav...@googlegroups.com
சுந்தரர் வரலாற்றைத் தொட்டுச் செல்கிற கவிதை சிறப்பு. திருப்புகழ் அருமை.
இலந்தை

Kaviyogi Vedham

unread,
Aug 8, 2011, 2:22:10 AM8/8/11
to santhav...@googlegroups.com
ரொம்ப அழகு அழகு. ரசித்தேன். வாழ்க!,
 யோகியார்

2011/8/6 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115

அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

veNbA virumbi

unread,
Aug 8, 2011, 4:22:17 AM8/8/11
to சந்தவசந்தம்
******************************
வணக்கம். சுந்தரர் சொல்லைத் துணையாய்க் கொண்ட சிவ சிவா அவர்கள் விஷயமாக
ஒரு பாடல் முடித்துள்ளேன். குறை பொறுக்கவும். கருத்திருப்பின்
தெரிக்கவும்.

நன்றி.
******************************
******************************
(கட்டளைக்கலித்துறை)

சுந்தர நாம வரனுக் கிருந்தமிழ்த் தூமணம்வீ
சுந்தர மாலை புனைந்தவிந் நாவலற் குச்சிமிசைச்
சுந்தர வேற்கும் பிரானுள மேவிச் சுகிர்தமுமோ
சுந்தர வேண்டி உரைப்பனி யானிங் கொருகவியே.

சுந்து=நீர்; ஓசு=கீர்த்தி
******************************
******************************

> 2010/8/14 Siva Siva <nayanm...@gmail.com>
>
> --http://nayanmars.netne.net/

Siva Siva

unread,
Aug 8, 2011, 7:42:32 AM8/8/11
to santhav...@googlegroups.com
இனிய யமக அமைப்பு.

'உரைப்பன் + யான் = உரைப்பனியான்'

இவ்வகை இகரச் சாரியைப் புணர்ச்சி அரிதில் காணும் ஒன்று.
----

ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கத்திலிருந்து:
மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்

96.
யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தால் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.
உதாரணம்.
வேள் + யாவன் - வேளியாவன்
மண் + யானை - மண்ணியானை
வேள்யாவன் என இகரச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.

----


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/8/8 veNbA virumbi <mvms...@gmail.com>

******************************
வணக்கம்.  சுந்தரர் சொல்லைத் துணையாய்க் கொண்ட சிவ சிவா அவர்கள் விஷயமாக
ஒரு பாடல் முடித்துள்ளேன்.  குறை பொறுக்கவும்.  கருத்திருப்பின்
தெரிக்கவும்.

நன்றி.
******************************
******************************
(கட்டளைக்கலித்துறை)

சுந்தர நாம வரனுக் கிருந்தமிழ்த் தூமணம்வீ
சுந்தர மாலை புனைந்தவிந் நாவலற் குச்சிமிசைச்
சுந்தர வேற்கும் பிரானுள மேவிச் சுகிர்தமுமோ
சுந்தர வேண்டி உரைப்பனி யானிங் கொருகவியே.

சுந்து=நீர்; ஓசு=கீர்த்தி
******************************
******************************

On Aug 5, 9:48 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> சுந்தரர் குருபூஜை - 2011 - ஆடிச் சுவாதி - 2011-08-05(usa)/06(india)
> -----------------------------
> 2011-08-05
> சுந்தரர் சொல்லே துணை
> ---------------------------------
> (நேரிசை வெண்பா)
>


--

Siva Siva

unread,
Jul 22, 2012, 11:16:02 AM7/22/12
to santhavasantham

2012-07-20
சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - (2012-07-26)
---------------------------------------------
1) --- (
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
பொல்லாத வினைக்கடலில் புணையாக வருமரனே
வெல்லோலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு
பல்லூரில் தமிழ்பாடிப் பரவென்று பணித்தவர்தம்
சொல்லாரும் தமிழ்பாடில் துன்பங்கள் நில்லாவே.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2011/8/5 Siva Siva <naya...@gmail.com>

சுந்தரர் குருபூஜை - 2011 - ஆடிச் சுவாதி - 2011-08-05(usa)/06(india)
-----------------------------
2011-08-05
சுந்தரர் சொல்லே துணை
---------------------------------
(
நேரிசை வெண்பா)


Siva Siva

unread,
Jul 23, 2012, 6:02:13 PM7/23/12
to santhavasantham

2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

விழிகாட்டும் நுதலீசா வேலைவிடம் மிடற்றினிலே
எழில்கூட்டும் ஐயாறா என்றிறைஞ்ச அவனருளால்
சுழிகாட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கமிலா
வழிகாட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே.

*
திருவையாற்றில் காவிரிவெள்ளம் விலகிச் சுந்தரர்க்கு வழிவிட்டது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/7/22 Siva Siva <naya...@gmail.com>

2012-07-20
சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - (2012-07-26)
---------------------------------------------
1) --- (
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

Siva Siva

unread,
Jul 24, 2012, 6:40:03 PM7/24/12
to santhavasantham

3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொய்யாற்றில் நாமுழன்று புகலின்றி வாடாமே
மெய்யாற்றில் நின்றுபழ வினைதீரத் தமிழ்தந்தார்
மையேற்ற கண்டத்தன் வண்கச்சூர் தனிற்பிச்சை
கையேற்றுண் பித்தருளும் வன்றொண்டர் கழல்போற்றி.

*
திருக்கச்சூரில் சிவபெருமான் உணவை இரந்துவந்து சுந்தரர்க்கு அளித்துப் பசீதீர்த்ததைச் சுட்டியது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/7/23 Siva Siva <naya...@gmail.com>
2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

Siva Siva

unread,
Jul 25, 2012, 7:10:15 PM7/25/12
to santhavasantham

4) --- ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ---
தெங்கம்பொழில் திகழும்திருப் புகலூர்தனிற் செங்கல்
அங்கம்பொனின் கல்லாகிட அரனாரருள் பெற்றார்
பங்கங்களை பாமாலைகள் பலபாடுவன் தொண்டர்
பொங்கும்புகழ் உடையாரவர் பொற்றாளிணை போற்றி.

*
திருப்புகலூரில் கோயில் முற்றத்தில் செங்கற்களைத் தலையணையாக வைத்துச் சுந்தரர் துயின்றபொழுது சிவன் அருளால் அக்கற்கள் பொன்னாக மாறியதைச் சுட்டியது.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/7/24 Siva Siva <naya...@gmail.com>
3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

Siva Siva

unread,
Jul 26, 2012, 7:53:18 AM7/26/12
to santhavasantham

இன்று சுந்தரர் குருபூஜை. (26-Jul-2012).
இத்தொடரின் கடைசிப் பாடல்.

5) --- (
நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---
ஏழையொரு கூறுடைய எம்பெருமான் இணையடியை
ஏழிசையார் இன்தமிழால் ஏத்தியவர் அவனுக்குத்
தோழமையும் பெற்றவர்வான் சூழநொடித் தான்மலைக்கு
வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே.

*
திருவாரூரில் ஈசன் தன்னைச் சுந்தரர்க்குத் தோழனாகத் தந்தருளினான்;
*
வெள்ளை ஆனையின்மேல் ஏறிக் கயிலாயத்தை அடைந்தது;

வான் - தேவர்கள்;
நொடித்தான்மலை - கயிலைமலை;
விரைமலர்த்தாள் - வாசமலர்த்திருவடி;

(
சுந்தரர் தேவாரம் - 7.100.4 -
வாழ்வை உகந்தநெஞ்சே மட வார் தங்கள் வல்வினைப்பட்
டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம்
சூழ அருள்புரிந்து தொண்ட னேன் பரமல்லதொரு
வேழம் அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே.)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2012/7/25 Siva Siva <naya...@gmail.com>

4) --- ('மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ---

Siva Siva

unread,
Aug 1, 2014, 9:47:54 PM8/1/14
to santhavasantham

2014-07-12 (சுந்தரர் - ஆடி சுவாதி - 2014-08-03 - USA/India)
--------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")

அரும்பொரு டிகம்பர னவன்றரு பசும்பொனை இருந்திரை இடும்பின நறும்
கருங்குழ லிளங்கிளி நகும்படி குளந்தனி லளைந்துப திகஞ்சொலி உறும்
சுருங்கிய மருங்குல ணிசங்கிலி விரும்பிய திடஞ்சொல அரன்றனை மரம்
இருந்திடு மெனுங்கிழ மையுந்திக ழருந்தவ னவன்கழ னினைந்திட நலம்.

பதம் பிரித்து:
அரும்பொருள் திகம்பரன் நவன் தரு பசும்பொனை இரும்திரை இடும்; பினம் நறும்
கருங்குழல் இளங்கிளி நகும்படி குளந்தனில் அளைந்து பதிகம் சொலி உறும்;
சுருங்கிய மருங்குல் அணி சங்கிலி விரும்பிய திடம் சொல அரன்தனை மரம்
இருந்திடும் எனும் கிழமையும் திகழ் அரும் தவன்; அவன் கழல் நினைந்திட நலம்
.

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

Subbaraman NV

unread,
Aug 2, 2014, 2:18:02 AM8/2/14
to santhav...@googlegroups.com

நான்கூட ஆடி சுவாதியில் பிறந்தவனே!1941!
என் வி சுப்பராமன்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Ramamoorthy Ramachandran

unread,
Aug 2, 2014, 8:21:50 AM8/2/14
to santhav...@googlegroups.com
நினைந்தது   நடந்திட  நினைத்துடன்  தடுத்திடும்   நிதம்புகழ் பதம்எதி  ருறும் 
புனைந்திடு  திருமுறை  மனமகிழ்  வளித்திட பொலிந்திடும்  சிவம்செவி கொளும் 
மனைவியர்  மதித்திட  வரம்வர வழைத்திடும் பயிலொளி செலும்பினர்  வரும்
அனைத்தையு மருளரன் அழைத்திடக் கயிலையும் செலுமவ  ரடிதொழு வமே! 
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி 

Siva Siva

unread,
Aug 2, 2014, 8:28:39 AM8/2/14
to santhavasantham
இனிய துதி. வாழ்க!

p balakrishnan

unread,
Aug 2, 2014, 1:16:51 PM8/2/14
to santhav...@googlegroups.com
வாழ்த்துகள் என்.வி.யெஸ். அவர்களே.-அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்

On Sat, 02 Aug 2014 11:48:05 +0530 Subbaraman NV wrote

>நான்கூட ஆடி சுவாதியில் பிறந்தவனே!1941!

என் வி சுப்பராமன்
அன்பொடு,வி. சுப்பிரமணியன்
Get your own FREE website, FREE domain & FREE mobile app with Company email.  
Know More >

p balakrishnan

unread,
Aug 2, 2014, 1:20:43 PM8/2/14
to santhav...@googlegroups.com
அருமை.-இளங்கண்ணன்
On Sat, 02 Aug 2014 17:51:51 +0530 Ramamoorthy Ramachandran wrote

>நினைந்தது   நடந்திட  நினைத்துடன்  தடுத்திடும்   நிதம்புகழ் பதம்எதி  ருறும் புனைந்திடு  திருமுறை
 மனமகிழ்  வளித்திட பொலிந்திடும்  சிவம்செவி கொளும் மனைவியர்  மதித்திட  வரம்வர
வழைத்திடும் பயிலொளி செலும்பினர்  வரும்
அனைத்தையு மருளரன் அழைத்திடக் கயிலையும் செலுமவ  ரடிதொழு வமே! 
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி 

2014-08-02 11:48 GMT+05:30 Subbaraman NV :


நான்கூட ஆடி சுவாதியில் பிறந்தவனே!1941!

என் வி சுப்பராமன்
அன்பொடு,வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Aug 2, 2014, 1:27:15 PM8/2/14
to santhavasantham
With some word meanings.


2014-08-01 21:47 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-07-12 (சுந்தரர் - ஆடி சுவாதி - 2014-08-03 - USA/India)
--------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")

அரும்பொரு டிகம்பர னவன்றரு பசும்பொனை இருந்திரை இடும்பின நறும்
கருங்குழ லிளங்கிளி நகும்படி குளந்தனி லளைந்துப திகஞ்சொலி உறும்
சுருங்கிய மருங்குல ணிசங்கிலி விரும்பிய திடஞ்சொல அரன்றனை மரம்
இருந்திடு மெனுங்கிழ மையுந்திக ழருந்தவ னவன்கழ னினைந்திட நலம்.

பதம் பிரித்து:
அரும்பொருள் திகம்பரன் நவன் தரு பசும்பொனை இரும்திரை இடும்; பினம் நறும்
கருங்குழல் இளங்கிளி நகும்படி குளந்தனில் அளைந்து பதிகம் சொலி உறும்;
சுருங்கிய மருங்குல் அணி சங்கிலி விரும்பிய திடம் சொல அரன்தனை மரம்
இருந்திடும் எனும் கிழமையும் திகழ் அரும் தவன்; அவன் கழல் நினைந்திட நலம்
.


அடி-1-2: ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடியது;

அடி-3-4: திருவொற்றியூரில் சங்கிலிக்குச் சத்தியம் செய்யும்போது சிவனை மகிழ மரத்தில் இருக்கச் சொன்னது;

இவ்வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க;

திகம்பரனவன் - திகம்பரன் நவன் / திகம்பரன் அவன்;

திரை - நதி;

பினம் - பின்னம் (இடைக்குறையாக வந்தது) - பின்னர்;

உறுதல் - அடைதல்; பரிசித்தல் (To perceive by touch);

மருங்குல் - இடை;

திடம் - உறுதி; சத்தியம்;

கிழமை - சினேகம்; உரிமை; 

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 2, 2014, 2:13:49 PM8/2/14
to சந்தவசந்தம்
அழகிய சந்த நடையில் இயற்றி இங்கிடும் இப்பாடல்களில் சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுக்கும் விதம் மிக அருமை.  

அனந்த் 


Subbaraman NV

unread,
Aug 2, 2014, 10:24:37 PM8/2/14
to santhav...@googlegroups.com

Thanks aplenty Balakrishnan.
N V Subbaraman

Siva Siva

unread,
Aug 3, 2014, 1:03:57 AM8/3/14
to santhavasantham

2)

புரந்தர னயன்கரி யவன்பல பெருந்தவ ரொடும்புக ழியம்பிடு வணம்

சிரந்திரை அலைந்திட அதன்புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்

நிரந்தர னணங்கொடு முறைந்திடு சிலம்பொரு கயந்தனி லடைந்தவ ரிகம்

பரந்தரு மருந்தமி ணிதஞ்சொல நினைந்திடு விடும்பிணி அலம்பவ பயம்.


பதம் பிரித்து:

புரந்தரன், அயன், கரியவன், பல பெரும் தவரொடும் புகழ் இயம்பிடு வணம்,

சிரம் திரை அலைந்திட அதன் புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்

நிரந்தரன் அணங்கொடும் உறைந்திடு சிலம்பு ஒரு கயந்தனில் அடைந்தவர், இகம்

பரம் தரும் அரும் தமிழ் நிதம் சொல நினைந்திடு; விடும் பிணி, அலம், பவபயம்.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன் 

Siva Siva

unread,
Aug 3, 2014, 9:14:32 AM8/3/14
to santhavasantham
with meaning.


2014-08-03 1:03 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2)

புரந்தர னயன்கரி யவன்பல பெருந்தவ ரொடும்புக ழியம்பிடு வணம்

சிரந்திரை அலைந்திட அதன்புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்

நிரந்தர னணங்கொடு முறைந்திடு சிலம்பொரு கயந்தனி லடைந்தவ ரிகம்

பரந்தரு மருந்தமி ணிதஞ்சொல நினைந்திடு விடும்பிணி அலம்பவ பயம்.


பதம் பிரித்து:

புரந்தரன், அயன், கரியவன், பல பெரும் தவரொடும் புகழ் இயம்பிடு வணம்,

சிரம் திரை அலைந்திட அதன் புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன்

நிரந்தரன் அணங்கொடும் உறைந்திடு சிலம்பு ஒரு கயந்தனில் அடைந்தவர், இகம்

பரம் தரும் அரும் தமிழ் நிதம் சொல நினைந்திடு; விடும் பிணி, அலம், பவபயம்.


புரந்தரன், அயன், கரியவன், பல பெரும் தவரொடும் புகழ் இயம்பிடு வணம் - இந்திரன், பிரமன், திருமால், பல பெருமுனிவர்கள் எல்லாரும் புகழ்ந்து பேசும்படி;

சிரம் திரை அலைந்திட அதன் புடை இலங்கிய இளம்பிறை அணிந்திடு சிவன் நிரந்தரன் அணங்கொடும் உறைந்திடு சிலம்பு ஒரு கயந்தனில் அடைந்தவர் - தலையில் கங்கை சுழன்று திரிய, அதன் பக்கத்தில் ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணியும் சிவபெருமான், அழிவின்றி என்றும் இருப்பவன், உமையோடு வீற்றிருக்கும் கயிலைமலையை ஓர் ஆனையின்மேல் ஏறிச்சென்று அடைந்தவர்;

இகம் பரம் தரும் அரும் தமிழ் நிதம் சொல நினைந்திடு - அச்சுந்தரர் பாடியருளிய இம்மை மறுமை இன்பத்தைத் தரும் அரிய தமிழை நாள்தோறும் சொல்ல எண்ணுவாயாக(இகம் பரம் தரும் - 'இகத்தில் பரத்தினைத் தரும்' என்றும் பொருள்கொள்ளலாம்);

விடும் பிணி, அலம், பவபயம் - அப்படிச் செய்தால், பிணிகள், துன்பம், பவபயம் எல்லாம் நீங்கும்.


(சுந்தரர் தேவாரம் - 7.100.9 -

இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்

நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே) 


அன்பொடு,

வி. சுப்பிரமணியன் 



2014-08-01 21:47 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-07-12 (சுந்தரர் - ஆடி சுவாதி - 2014-08-03 - USA/India)
--------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")


Kaviyogi Vedham

unread,
Aug 3, 2014, 9:44:01 AM8/3/14
to santhavasantham
அழகோ அழகு. சிவா எங்கேயோ போயிட்டீங்க கவி உன்னதத்தில்!
 வாழ்க நீவிர்..
 யோகியார்

வாழ்க அனைவரும் வளமுடனே 
என் குருஜி லஹரி பாபாஜி
ஆசியினால்.
கவியோகி வேதம்(kaviyogi vedham)-
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
kaviyogi vedham(yogiyaar)தலைவர்..
Founder, Sree Laharibabaji yogasram,
2/682, 10th cross St,...Renga reddy garden,
Neelankarai, Chennai-600115--செல் எண் 95000-88528
 



--

Siva Siva

unread,
Aug 3, 2014, 10:02:07 AM8/3/14
to santhavasantham
பாடல்களைப் படித்துக் கருத்துச் சொல்லி ஆதரிக்கும் அன்பர்களுக்கு என் வணக்கம்.

Siva Siva

unread,
Jul 23, 2015, 10:18:41 AM7/23/15
to santhavasantham

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2015-07-24

-----------------------

(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் 7.95.1 - "மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே")


1)

பெண்கள் இருவர் தம்மை மணக்கப் பிறந்து சூளொன்றால்

கண்கள் இரண்டும் இழந்து வாடிக் கதறிக் கசிந்துருகிப்

பண்கள் பாடிப் பார்வை பெற்றார் படர்பொற் சடையாற்கு

நண்பர் ஆன நாவ லூரர் நற்றாள் நம்துணையே.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

.


2014-08-02 13:27 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
With some word meanings.


2014-08-01 21:47 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2014-07-12 (சுந்தரர் - ஆடி சுவாதி - 2014-08-03 - USA/India)
--------------------
"
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனந்தன தனம்" என்ற சந்தக்குழிப்பு அமைந்த வண்ணச்சந்த விருத்தம்.
(
பதஞ்சலி முனிவர் அருளிய நடராஜ ஸ்தோத்திரம் -

सदञ्चित मुदञ्चित निकुञ्चित पदं झलझलञ्चलित मञ्जु कटकम्);
"
ஸத₃ஞ்சித முத₃ஞ்சித நிகுஞ்சித பத₃ம்ʼ ஜ₂லஜ₂லஞ்சலித மஞ்ஜு கடகம்")

அரும்பொரு டிகம்பர னவன்றரு பசும்பொனை இருந்திரை இடும்பின நறும்
கருங்குழ லிளங்கிளி நகும்படி குளந்தனி லளைந்துப திகஞ்சொலி உறும்
சுருங்கிய மருங்குல ணிசங்கிலி விரும்பிய திடஞ்சொல அரன்றனை மரம்
இருந்திடு மெனுங்கிழ மையுந்திக ழருந்தவ னவன்கழ னினைந்திட நலம்.





--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

M. Viswanathan

unread,
Jul 23, 2015, 10:25:55 AM7/23/15
to Santhavasantham
நாலு வரிகளில் சுந்தரர் கதையைக் கவிதையில் தந்தது அழகு.
அன்பன்,
மீ.வி.

Siva Siva

unread,
Jul 23, 2015, 9:39:10 PM7/23/15
to santhavasantham

2)

எரியின் வண்ணத் தீசன் தாளை எண்ணித் தொண்டுகள்செய்

அரிய பத்தர் அவர்கட் கெல்லாம் அடிமை யானென்ற

பெரிய பதிகம் அருளிச் செய்தார் பிளிறு மதயானை

உரியன் தமரென் றுரைத்த நாவ லூரர் கழல்போற்றி.


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

unread,
Jul 23, 2015, 11:35:24 PM7/23/15
to santhav...@googlegroups.com
பித்தா எனவே  பெம்மா  னவனைப்  பிணங்கி அழைத்தன்றே 
எத்தா  லும்நான்  மறவேன் மனத்தே என்றே  தமிழ்செய்தே 
வைத்தா  ரிறைவன்  சிறப்பை   வெண்ணெய்  நல்லூர்    அருட்டுறையில்
அத்தன்  தோழர்  அவர்தம்  அடிகள்  தலைக்கே  அணிவோமே!

நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.   

--

Lalitha & Suryanarayanan

unread,
Jul 23, 2015, 11:51:21 PM7/23/15
to santhav...@googlegroups.com
அத்தனின் தோழர் திருவடியை - தம் 
அகத்தில் அணிந்தே குருபூசை - இங்குச் 
சித்தம் செயலுடன் ஒன்றிடவே - நன்று 
செய்திடும் அன்பர் திருக்கூட்டம் - நம் 
முத்தமிழ் மன்றத்தில் கமழ்வதுவே - ஒரு  
முல்லையோ கொன்றையோ மாமதியோ - என 
நித்தமும் வீசிடும் பாமலராம் - அது 
நிர்மலன் மேனியில் நின்றிடுமே.

சிவசூரி.

Ramamoorthy Ramachandran

unread,
Jul 24, 2015, 12:08:49 AM7/24/15
to santhav...@googlegroups.com
அத்தன் தோழன் அடியிணையை - நாம் 
   அன்போடேத்திப்  பணிவதனால் - உடன் 
பித்தம் தெளியும்!  பெருமானின் - திருப் 
    பேரருள்  கிட்டும்!  உடனே நம் - உளச் 
சித்தம்  மலத்தை அறுத்து  விடும் - அது 
    சிவமாய் நம்மை  மேலுயர்த்தும் --நம் 
வித்தகர்  சூரியின்  பாடல் போல் - ஒழி 
  வீசித் திகழ்ந்தே  விளங்கிடுமே!

புலவர்  இராமமூர்த்தி  
  

Ramamoorthy Ramachandran

unread,
Jul 24, 2015, 12:09:50 AM7/24/15
to santhav...@googlegroups.com
திருத்தம் :  ஒளி  வீசித் திகழ்ந்தே 

Lalitha & Suryanarayanan

unread,
Jul 24, 2015, 12:15:32 AM7/24/15
to santhav...@googlegroups.com
புலவர் பெருமானின் அன்புக்கு நன்றி.

சிவசூரி.

Siva Siva

unread,
Jul 24, 2015, 8:07:02 AM7/24/15
to santhavasantham
Nice songs by pulavar Ramamoorthy & Sivasuri.

2015-07-24 0:08 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
அத்தன் தோழன் அடியிணையை - நாம் 
   அன்போடேத்திப்  பணிவதனால் - உடன் 
பித்தம் தெளியும்!  பெருமானின் - திருப் 
    பேரருள்  கிட்டும்!  உடனே நம் - உளச் 
சித்தம்  மலத்தை அறுத்து  விடும் - அது 
    சிவமாய் நம்மை  மேலுயர்த்தும் --நம் 
வித்தகர்  சூரியின்  பாடல் போல் - ஒளி 
  வீசித் திகழ்ந்தே  விளங்கிடுமே!

புலவர்  இராமமூர்த்தி  
  

Siva Siva

unread,
Jul 24, 2015, 8:10:49 AM7/24/15
to santhavasantham

3)

சேடர் போற்று சிவனே வெருட்டிச் செல்வம் தனைப்பறிக்கும்

வேடர் வாழும் முருகன் பூண்டி மேய பெருமானே

ஆட வல்ல அடிகேள் இவ்வூர் அமர்ந்த தேனென்று

பாட வல்ல பரவை கேள்வர் பாத மலர்போற்றி.


(சுந்தரர் தேவாரம் - 7.49.1 -

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம்

முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.

--- "எம்பெருமானிரே, ...இம் முருகன்பூண்டி, ... வேடுவர், ... அச்சுறுத்தி .... உடைகளைப் பறித்துக் கொள்ளும் இடம்; ... இங்கு ... நீர் எதன்பொருட்டு இருக்கின்றீர்"?)


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 24, 2015, 10:27:21 PM7/24/15
to சந்தவசந்தம்
’சுந்தரரை’ப் போற்றி யாத்துள்ள அனைவரின் பாடலும் ’அழகாக’ அமைந்திருப்பதில் வியப்பேது? பாராட்டுகள்.

அனந்த்

Siva Siva

unread,
Aug 7, 2016, 5:43:49 PM8/7/16
to santhavasantham

2016-08-07

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - (2016-08-09 USA)

---------------------------------

(வெண்பா)


1)

துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த

அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்

தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்

தாழும் எனது தலை.

அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

Ramamoorthy Ramachandran

unread,
Aug 7, 2016, 10:55:51 PM8/7/16
to santhav...@googlegroups.com

பெரியபு  ராணமே  பெற்ற கதைத்தலைவர் 

அரிய செயல்களை  ஆற்றிக்     கரியதோர்

கண்டத்தான்   தோழமைகொண்  டன்னானை  ஏவியே 

கொண்டார்  அவரே    குரு !

அன்புடன் புலவர் இராமமூர்த்தி.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 8, 2016, 6:41:02 PM8/8/16
to santhavasantham

2016-08-07

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - (2016-08-09 USA)

---------------------------------

(வெண்பா)


2)

மழுவாளர் தாமே மறையவராய் வந்து

பழவோலை காட்டிப் பணிகொள் அழகன்

திருநாவ லூராளி செந்தமிழை நாவே

ஒருநாளும் ஓவா துரை.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-08-07 17:43 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2016-08-07

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - (2016-08-09 USA)

---------------------------------

(வெண்பா)


1)

துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த

அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்

தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்

தாழும் எனது தலை.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்





p balakrishnan

unread,
Aug 8, 2016, 11:02:45 PM8/8/16
to santhav...@googlegroups.com

பழவோலை காட்டிப் பணிகொள் அழகன் -
  அழகு!
  பண்டைச் சட்டவியல் பொதிந்த வாசகம்
- அரிமா இளங்கண்ணன்


Sent from RediffmailNG on Android
--
> You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
> To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaraman NV

unread,
Aug 8, 2016, 11:48:39 PM8/8/16
to santhav...@googlegroups.com
சுந்தரர் அவதரித்த ஆடி ஸ்வாதியில் நானும் பிறந்தவன் என்று நினைக்கையில் மகிழ்வுறுகிறேன். விஷு வருஷம் (1941)
என் வி சுப்பராமன் 
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
> To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

> For more options, visit https://groups.google.com/d/optout.
>

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Kaviyogi Vedham

unread,
Aug 9, 2016, 1:08:48 AM8/9/16
to santhavasantham
மெத்த மகிழ்ச்சி. அதனால்தான் ஆங்கிலத்திலும் தமிழழிலும்  பொளந்து கட்டுகிறீர்களோ?
 வாழ்க சுப்பராமன்!,
 யோகியார்


வாழ்க.என் அன்பர்கள் அனைவரும்..!..
. Buy our (my & Chandar's )Pure Tamil  Good..Mag(monthly)
called இலக்கியவேல்..சந்தா ரூ 120 மட்டுமே  -ஏப்ரல்16- முதல்.
Ilakkiyavel-sandha-Rs 120/- From April 2016
 Kaviyogi vedham,
 President, Sree Lahari Babaji Yogasram,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
 Cel no-09500088528

.
 PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/







Subbaraman NV

unread,
Aug 9, 2016, 1:16:19 AM8/9/16
to santhav...@googlegroups.com
தெரியாது! நன்றி யோகியார் அவர்களே.
என் வி சுப்பராமன்

Siva Siva

unread,
Aug 9, 2016, 8:43:16 AM8/9/16
to santhavasantham
/சுந்தரர் அவதரித்த ஆடி ஸ்வாதியில்/

நாயன்மார்கள் குருபூஜை அவர்கள் முக்தி அடைந்த நாள் அன்று கொண்டாடப்படுகின்றது. (பிறந்தநாள் அன்று).

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Subbaraman NV

unread,
Aug 9, 2016, 8:49:10 AM8/9/16
to santhav...@googlegroups.com

Thanks. Noted. Sorry for my ignorance.

Siva Siva

unread,
Aug 9, 2016, 8:30:05 PM8/9/16
to santhavasantham

3)

முதலையுண்ட பிள்ளையை முக்கணுடை மூவா

முதலருளால் மீட்டளித்த மொய்ம்பர் இதழியைச்

சூடரனை ஆரூரில் தூதனுப்ப வல்லவர்

பாடல்கள் உய்க்கும் பரம்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jul 29, 2017, 2:45:20 PM7/29/17
to santhavasantham

2017-06-10

சுந்தரர் குருபூஜை - 2017 (ஆடிச் சுவாதி - 2017-07-30)

--------

(ஷட்பதி அமைப்பில் -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)



நறுமலர் கொய்யணி நங்கையர் இருவரை

மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப்

பெறுதவர் அழகிய பிறையணி ஈசனைப் பித்தனென் றுரைத்தவரே

தறுகணன் மறலிதன் தமர்நலி யாவணம்

அறுமுகன் அப்பனை அடிதொழும் என்றுநம்

சிறுமைகள் தீர்தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-08-09 20:30 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)

Subbaraman NV

unread,
Jul 29, 2017, 8:52:15 PM7/29/17
to santhav...@googlegroups.com
I am very fortunate to have been born on the AADI SWATHI - of course in a different  year 1941 corresponding to 31st July.
N V Subbaraman. 
(Tamil fonts strike work since this morning!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! NHM Writer)

On Sun, Jul 30, 2017 at 12:15 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (naya...@gmail.com) Add cleanup rule | More info

2017-06-10

சுந்தரர் குருபூஜை - 2017 (ஆடிச் சுவாதி - 2017-07-30)

--------

(ஷட்பதி அமைப்பில் -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)



நறுமலர் கொய்யணி நங்கையர் இருவரை

மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப்

பெறுதவர் அழகிய பிறையணி ஈசனைப் பித்தனென் றுரைத்தவரே

தறுகணன் மறலிதன் தமர்நலி யாவணம்

அறுமுகன் அப்பனை அடிதொழும் என்றுநம்

சிறுமைகள் தீர்தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம்.

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்


2016-08-09 20:30 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

3)


--
"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Lalitha & Suryanarayanan

unread,
Jul 30, 2017, 4:42:28 AM7/30/17
to santhav...@googlegroups.com

​முகநூலில் கண்டது:

கயிலாயத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு​📺
(தீபன்)

​த​லைப்பைப் பார்த்ததும் ஏதோத் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று எண்ணாதீர்கள் இது அதற்கும் மேலான ஒரு நேரடி வர்ணனை, ​நம் சுந்தர மூர்த்தி சுவாமிகளால் செய்யப்படும் வர்ணனை​

கயிலாயத்தில் ​ஸ்ரீகண்ட சாரீர சாரீயாய் வீற்றிருக்கும் சிவபரம்பொருளுக்கு அருகாமையில் திருநீற்று மடல்தாங்கி நிற்கும் பேறு பெற்ற ஆலால சுந்தரர் மனைவாழ்க்கையை அனுபவிக்கவும் நமக்கு திருத்தொண்டத் தொகை வழங்கவும் நம்பியாரூரராய் நாவலூரில் பிறந்து "வெறுத்தேன் மனைவாழ்க்கை விட்டொழிந்தேன்" என்று திருவஞ்சைக்களத்தில் பாடினார்​

உடன் கயிலாயத்தில் இருந்து ​வெள்ளானையை அனுப்பிய இறைவன் அதில் சுந்தரரை அழைத்து வருமாறு மாலயன் உள்ளிட்ட தேவாதி தேவர்களுக்கு ஏவலிட்டனன்​

அவர்கள் ​வெள்ளானையை ஓட்டிக்கொண்டு திருவஞ்சைக்களம் வந்து சுந்தரர் பெருமானிடம் "ஏவல்" என்றனர்​

பெருமான் அவர்களைப் பணிந்து வணங்கி ​வெள்ளானையில் ஏறிக்கொண்டு அந்த திருக்கயிலை பயண அனுபவத்தையும் கயிலைக்காட்சியையும் வர்ணித்துக் கொண்டே "தானெனை" என்று எடுத்துப் பாடினார்​

அஞ்சைக்களத்தில் துவங்கி கயிலாயத்தில் நிறைவுபெற்ற இப்பதிகம் போன்ற ஒரு இலக்கியத்தையும் இது போன்ற ஒரு சம்பவத்தையும் ​உலகில் யாராலும் கற்பனை செய்து கூட எழுதவியலாது; ஏனென்றால் இந்தக் கயிலாயப் பயணம் யாரும் செய்ய முடியாதது அந்தக் கயிலாயக் காட்சி யாருக்கும் வாய்த்து விடாதது, இந்தப் பதிகம் முழுதுமே அகச்சான்றுகளால் நிறைந்தது​

முதல்பாடலில் பெருமானுக்காக யானை வந்துள்ளதை ​வான் எனை வந்து எதிர்கொள்ள மத்தயானை அருள் புரிந்து​ என்ற வரிகளால் பதிவு செய்கிறார் பெருமான்; வந்து நிற்கும் யானையில் தாம் எப்படி ஏறினார் என்பதையும் அங்கு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையும் இரண்டாம் பாடலில்

​வானை மதித்து அமரர் வலஞ் செய்தெனை ஏறவைக்க ஆனை அருள்புரிந்தான் நொடித்தான் மலை உத்தமனே​ என்று பதிவு செய்கிறார்

அந்த யானையை சுற்றிலும் இந்திராதி தேவர்கள் நின்று கொண்டிருக்க சுந்தரர் பெருமான் யானையை சுற்றி வந்து ஏறமுற்படுகிறார், உடன் அவருக்கு யானையில் ஏற அங்கு நிற்கும் தேவர்கள் உதவி செய்கின்றனர் ​அமரர் வலஞ்செய்து எனை ஏறவைக்க​ என்ற வரியினை கவனியுங்கள்🙏🏻

தற்காலத்தில் விமானத்தில் பயணிப்போருக்கு ஏறியமர அங்கிருக்கும் ஏர்ஹோஸ்டர்ஸ் உதவிபுரிவது போல அமரர்கள் பெருமானுக்கு உதவி செய்ததும் விமானம் takeoff ஆவது போல யானையும் வானில் பறக்கத் துவங்கிவிட்டது, இதனை மூன்றாம் பாடலில்

​துரிசே செயுந் தொண்டன் எனை அந்தர மால்விசும்பில் அழகானை அருள்புரிந்த துந்தரமோ நெஞ்சமே நொடித்தான்மலை உத்தமனே​ என்று பதிவு செய்கிறார் பெருமான்

யானை என்பது பொதுவாக தரைவாழ் விலங்கு பறக்கும் குணமற்றது ஆனால் இந்த யானையோ ஆகாயத்தில் அந்தரத்தில் பறக்கும் சிறப்பு குணம் பொருந்தியதாக உள்ளது ஆதலால் பெருமான் பெரிதும் வியந்து இறையாற்றலைப் புகழந்து ​அந்தர மால்விசும்பில் அழகானை அருள் புரிந்த​ என்று பதிவு செய்கிறார் பெருமான்

இப்போது பயணந் தொடங்கி விட்டது கேரளத்தில் இருந்து நேபாளத்துக்கு அருகில் இருக்கும் கயிலாயத்திற்கு போக வேண்டிய பயணநேரத்தில் சில உண்மைகளை பதிவு செய்கிறார் பெருமான்,

தன்னை அழைக்க வந்த தேவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதை நான்காம் பாடலில் ​வல்வினைப் பட்டு ஆழ முகந்தவென்னை அதுமாற்றி அமரரெல்லாம் சூழ அருள்புரிந்து​ என்னும் வரிகளில் பதிவு செய்கிறார்

சுவாமி வெள்ளானையில் பறக்க உடன் தேவர்களும் சூழப்பறந்து வருகிறார்களாம் கண்களை மூடிக் கற்பனை செய்து பாருங்கள் ​ஹாலிவுட் படக்காட்சிகளை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறது இந்த நேரடிக்காட்சி​

பொதுவாக ​சிவவழிபாடு செய்தால் பதமுக்தி என்னும் கயிலாயப் பதவி கிடைக்கும் என்பது உலகியல் நம்பிக்கை. ஆனால் இது நடக்கிறதா என்பதை யார் கண்டார்??!!​ இப்படி ஒரு சந்தேகம் பலருக்கும் மனதில் தோன்றுவதுண்டு அந்த சந்தேகத்தை தீர்க்கும் விதமாக அடுத்த பாடல் அமைகிறது

அந்த ​Nano High Speed யானை​ பாரதத்தின் மாநிலங்களைக்கடந்து இமயமலைத் தொடர்களின் மீது பறக்கத் தொடங்கியிருந்த நேரம் ​பெருமானுக்கு கயிலாயத்தின் பொன்மயமான தோற்றம் தெரிந்தது போலும் உடன் பெருமான் பெருவாறும் மகிழ்ந்து நெகிழ்கிறார்​

ஐந்தாம் பாடலை ​மண்ணுலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே​ இப்படி அமைக்கும் பெருமான்

​இந்த உலகில் பிறந்தோர் சிவனை வாழ்த்தினால் பொன்னுலகம் பெறுவார்கள் என்பதை "இதோ என் கண்முன் தெரியும் பொன்மயமான கயிலாயத்தின்" மூலம் நேரடியாக கண்டு கொண்டேன்​ என்று பெருமான் பதிவு செய்வது போல உலகில் எந்த சமய இலக்கியததிலும் எந்த மொழியிலும் ​இறை இருப்பிடத்திற்கான சான்று பதிவாகி இருப்பதாக தெரியவில்லை​

மரணம் என்பது ​உடலை விட்டுவிட்டு உயிர் மட்டும் அடுத்த நிலைக்கு பயணம் செய்வது​ ஆனால் நம் ​நால்வர் பெருமக்களில் யாரும் உடலை போட்டுச் செல்லும் மரணத்தை அடையாதவர்கள் அவர்கள் உடலோடே சிவத்துடன் சேர்ந்தவர்கள்​ இதனில் தன்னுடைய நிலையை பெருமான் அடுத்தடுத்த வரிகளிலும் பாடலிலும் பதிவு செய்கிறார்

​விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலை உத்தமனே​ என்றும்

அடுத்த பாடலில் ​துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே​ என்றும் தான் மரணம் அடையவில்லை தன்னுடைய உடலேடே கயிலாயத்திற்கு போகும்படி இறைவன் அருள் புரிந்துள்ளான் என்பதை ஆனித்தரமாக பதிவு செய்கிறார் பெருமான் ​கூட்டோடு கயிலாசம் செல்லுதல் என்பார்களே அது இதுதான்​

பெருமான் இந்த செய்திகளை பதிவு செய்வதற்குள் அந்த ​NHS யானை​ கயிலாய மலையை நெருங்கி அதன்மீது ஏறத்துவங்கி விட்டது, அத்தனை பெரிய மலையில் அத்தனை பெரிய யானை ஏறுகிறது என்றால் அது ஒரு அசாத்தியமான உணர்வைத்தான் தந்திருக்கும், மலைச்சூழலில் ஜெயின்ட் வீலில் சுற்றும் உணர்வை நாம் கொஞ்சம் கற்பனை செய்து கொள்ளலாம்😊
நினைக்கவே நம் உடல் பதறுகிறது அல்லவா அதுபோல்தான் பெருமானுக்கு ஒரு உணர்வு போலும்

​நிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய மலையிடை யானை ஏறி வழியே வருவேன்​

என்று வெள்ளானை கயிலாய பர்வதத்தின் மீது ஏறுங்காட்சியை பதிவு செய்யும் பெருமான் அங்கு தன்னை எதிர் கொண்டு அழைக்கும் ஒருவரைப்பற்றி பதிவு செய்கிறார்

பொதுவாக தற்காலத்தில் யாராவது உயர்ந்தவர்கள் வருகை புரியும் போது ​பூங்கொத்து (bucket )​ கொடுத்து வரவேற்பது வழக்கம் இது ஏதோ ஆங்கிலேயக் கலாச்சாரம் போல இன்று தெரிந்தாலும் ​இது கயிலாயக் கலாச்சாரம் என்பது இந்த பதிகத்தின் மூலமே புலனாகிறது​

கடலுக்கு அரசனாகிய வருணதேவன் கையில் பூங்கொத்துக்களை வைத்துக் கொண்டு யானையில் வரும் சுந்தரர் பெருமானை பணிந்து வரவேற்றதாக

​வருவேன் எதிரே அலைகடலால் அரையன் அலர் கொண்டு முன் வந்திறைஞ்ச உலையணையாத வண்ணம் நொடித்தான் மலை உத்தமனே​
என்ற இந்த வரிகளில் பதிவு செய்கிறார் பெருமான்

நாம் ஒரு திருமண மண்டபத்திற்கு சென்றால் வாயிலில் வரவேற்பார்கள் அங்கு நிற்கும் போதே உள்ளே ஒலிக்கும் மங்கல இசை நம் காதுகளை தொடும் அல்லவா..

அது போல பெருமான் கயிலாய வாசலில் இருந்து ​சிவபரம்பொருளின சன்னிதானத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே அங்கு வேத ஆகம தோத்திர ஒலிகள் கேட்கத் துவங்கி விடுகிறது போலும்​

​அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்தெதிர்ந்திசைப்ப​ என்று பதிவு செய்யும் பெருமான் ஒரு பக்கம் ​அரஹர​ கோஷங்கள் ஒருபக்கம் ​வேதம் சிவாகமம் உள்ளிட்ட தோத்திரங்கள்​ ஒரு பக்கம் ​அவரவரக்கு தெரிந்த மொழிப்பாடல்கள்​ என்று ஒரே சிவானந்த வெள்ள ஆரவாரமாக கயிலாயம் திகழ்ந்திருக்க ​வாணன்​ என்னும் தேவன் வந்து மேற்கொண்டு அழைத்து சென்றான் என்று கூறுகிறார்,

இதிலிருந்து கயிலாயத்தில் மொழி பேதம் இல்லை என்பது புலனாகிறது.
தொடர்ந்து சென்றப் பெருமான் அங்கு

​தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர் தாவிவாள் விழி அரம்பையர் கீதம் ஒலிக்க நடுநாயகமாக வீற்றிருக்கும் சாட்சாத் சிவபரம்பொருளைக் காணுகிறார்​🙏🏻😭

இறைவனைச் சுற்றி அமர்ந்திருக்கும் முனிவர்களில் ஒருவர் ​இந்த மனிதர் யார்?? இவருக்கு ஏன் இத்தனை ஆர்பாட்டமான வரவேற்பு என்று கேட்கிறார்​ அதற்கு இறைவன் ​இவன் நம் தமர் ஊரன் (He is My Friend Ooran)​ என பதிலளித்தின் என்று இறைவனுடைய கயிலாயக்காட்சியை

​இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர் என எம்பெருமான் நந்தமர் ஊரனென்றான் நொடித்தான் மலை உத்தமனே​

என்ற பாடலில் பதிவு செய்கிறார்

சரி அஞ்சைக் களத்தில் தொடங்கி வான்வழியே பாடிச்சென்று கயிலாயத்தில் முடிந்த பதிகம் நமக்கு எப்படிக் கிடைத்தது என்ற ஐயம் வருகிறது அல்லவா??!!

அதற்குதான் சுந்தரர் பெருமான் ஒரு ஏற்பாடு செய்துள்ளார் அப்போது, பதிகம் நிறைந்ததும் அருகே நின்றிருந்த வருணனை அழைத்து இப்பாடல்களை அஞ்சைக்களம் கோயிலில் சேர்த்து விடுங்கள் என்றதை

​நாவல ஊரன் சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே​ என்று நிறைவுப் பாடலில் பதிவு செய்து நமக்கு பிரியாவிடை கொடுத்து கண்ணீர் பெருக்க வைக்கிறார் பெருமான்😭🙏🏻

உலக இலக்கியங்களில் சமயங்களில் இறைவனை, நேரடியாக அவன் இருப்பிடத்தில் கண்டதை இப்படி சான்றோடு பதிந்தவர் ​நம் சுந்தரர் பெருமான்தான்​

அவரது குருபூசை நாளில் இந்த அற்புதத்தை எண்ணி வணங்குவோம்🙏🏻

​சிவாயநம​

​வாழ்க்கை தீபன்ராஜ்​
📱9585756797

சிவசூரி.

Siva Siva

unread,
Jul 30, 2017, 8:18:17 AM7/30/17
to santhavasantham
Nice. Thanks.

Siva Siva

unread,
Jul 30, 2017, 11:59:28 AM7/30/17
to santhavasantham
2017-07-29 14:45 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

2017-06-10

சுந்தரர் குருபூஜை - 2017 (ஆடிச் சுவாதி - 2017-07-30)

--------

(ஷட்பதி அமைப்பில் -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)



நறுமலர் கொய்யணி நங்கையர் இருவரை

மறுமுறை நோக்கவும் மண்மிசைப் பிறவியைப்

பெறுதவர் அழகிய பிறையணி ஈசனைப் பித்தனென் றுரைத்தவரே

தறுகணன் மறலிதன் தமர்நலி யாவணம்

அறுமுகன் அப்பனை அடிதொழும் என்றுநம்

சிறுமைகள் தீர்தமிழ் செப்பிய சுந்தரர் திருவடி ஏத்திடுவோம்.

தவர் தவசி;

தறுகணன் மறலிதன் தமர் நலியாவணம் கொடிய கூற்றுவனது படர்களால் வருத்தமுறும் நிலையை அடையாமல் உய்வதற்கு; 
தறுகணன் தறுகண்ணன் கொடியவன்); 

(சுந்தரர் தேவாரம் - 7.90.1 - "மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழு நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்");

 

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 30, 2017, 9:00:10 PM7/30/17
to சந்தவசந்தம்
மிக அருமை. நேற்று நான் நியூ ஜெர்சியில் இருக்கும் என் உறவினர் ஒருவருடன் காரில் வருகையில் சுந்தரரின் நொடித்தான் மலை திருப்பதிகத்தை சோலார் சாயி அவர்கள் பாடியுள்ள ஒலிப்பதிவை அவர் இட, நாங்கள் இருவரும் கேட்டுக் கொண்டு வந்தோம். தமது பயணத்தைச் சுந்தரர் பெருமான் வருணிக்கும் அழகை அனுபவித்தோம்.  இன்று அதன் தொடர்ச்சியாக இந்தப் பதிவைக் காணக் கிடைத்தது அவனருளே.   
இங்குப் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு மிக்க நன்றி.

அனந்த்

2017-07-30 4:42 GMT-04:00 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>:

Lalitha & Suryanarayanan

unread,
Jul 31, 2017, 1:33:10 AM7/31/17
to santhav...@googlegroups.com
🙏 Sivasuri

Lalitha & Suryanarayanan

unread,
Jul 31, 2017, 1:34:12 AM7/31/17
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா.

சிவசூரி.

2017-07-31 6:29 GMT+05:30 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:
மிக அருமை. நேற்று நான் நியூ ஜெர்சியில் இருக்கும் என் உறவினர் ஒருவருடன் காரில் வருகையில் சுந்தரரின் நொடித்தான் மலை திருப்பதிகத்தை சோலார் சாயி அவர்கள் பாடியுள்ள ஒலிப்பதிவை அவர் இட, நாங்கள் இருவரும் கேட்டுக் கொண்டு உத்தமனே​ என்றும்

Siva Siva

unread,
Jul 20, 2018, 8:44:26 AM7/20/18
to santhavasantham

2018-07-16

சுந்தரர் குருபூஜை - 2018 (ஆடிச் சுவாதி - 2018-07-20)

--------------------------------

ஆறுதனில் இட்டுப்பின் ஆரூர்க் குளத்தெடுக்கும்

வீறுடையார் தோழனென வேணியனாம் பேறுடையார்

சங்கிலிக்கும் கேள்வனார் தாளிணை போற்றிசெய

நங்கலிதீர்ந் தெய்தும் நலம்.


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்



2017-07-29 14:45 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:

.. -- 

Siva Siva

unread,
Aug 6, 2019, 6:26:53 PM8/6/19
to santhavasantham

2019-08-03

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி (2019-08-07)

-------------

1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

ஆவண மொன்றால் ஆரூர்த்

தீவண னுக்கடி யவரொரு சீர்திகழ் தோழர்

நாவல ஊரர் மணமார்

சேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே.


ஆவணம் ஒன்றால் ஆரூர்த் தீவணனுக்கு அடியவர் - தீப்போன்ற செம்மேனியை உடைய ஆரூர்ப் பெருமானுக்கு ஓர் ஓலையால் அடிமை ஆனவர்;

ஒரு சீர் திகழ் தோழர் - ஒப்பற்ற புகழ் திகழும் தம்பிரான் தோழர்;

நாவல ஊரர் - திருநாவலூரில் அவதரித்தவர்;

மணம் ஆர் சேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே - சுந்தரமூர்த்தி நாயனரது மணம் பொருந்திய சிவந்த திருவடியை வழிபட்டால் நம் வினைகள் தீர்வது நிச்சயம்;


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Fri, Jul 20, 2018 at 8:44 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2018-07-16

சுந்தரர் குருபூஜை - 2018 (ஆடிச் சுவாதி - 2018-07-20)

--------------------------------

-- 

Umaiyal Ramanathan

unread,
Aug 6, 2019, 9:42:45 PM8/6/19
to santhav...@googlegroups.com
திருச்சிற்றம்பலம்

‘ஆவண மொன்றால் ஆரூர்த்

தீவண னுக்கடியவர்’

மிகப் பொருத்தமான எதுகை ஐயா....

சுந்தரத் தமிழாம் சுந்தரர் தமிழை
அந்தியும் பகலும் அரன்செவி சாய்க்க 
வந்தனர் மணநாள் வயோதிடம் பூண்டு
தந்தனர் பேறு, தம்பிரான் அடிமை


Sent from my iPhone

On 7 Aug 2019, at 6:26 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

2019-08-03

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி (2019-08-07)

-------------

1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

யவரொரு சீர்திகழ் தோழர்

நாவல ஊரர் மணமார்ஆவண மொன்றால் ஆரூர்த்

தீவண னுக்கடிசேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே.


ஆவணம் ஒன்றால் ஆரூர்த் தீவணனுக்கு அடியவர் - தீப்போன்ற செம்மேனியை உடைய ஆரூர்ப் பெருமானுக்கு ஓர் ஓலையால் அடிமை ஆனவர்;

ஒரு சீர் திகழ் தோழர் - ஒப்பற்ற புகழ் திகழும் தம்பிரான் தோழர்;

நாவல ஊரர் - திருநாவலூரில் அவதரித்தவர்;

மணம் ஆர் சேவடி தொழுதெழ இருவினை தீர்வது திடனே - சுந்தரமூர்த்தி நாயனரது மணம் பொருந்திய சிவந்த திருவடியை வழிபட்டால் நம் வினைகள் தீர்வது நிச்சயம்;


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்


On Fri, Jul 20, 2018 at 8:44 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2018-07-16

சுந்தரர் குருபூஜை - 2018 (ஆடிச் சுவாதி - 2018-07-20)

--------------------------------

-- 


"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/

--
குழுவில் செய்தி அனுப்ப மின்மடல்: santhav...@googlegroups.com
குழுவிலிருந்து விலக:
santhavasanth...@googlegroups.com.
குழுமத்தைக் காண: https://groups.google.com/d/forum/santhavasantham
மேல் விவரங்களுக்கு:
https://groups.google.com/d/optout
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCN%2Bio138o8SYzo1730nDfdF8CK74aDP0NetQLOQ0DzT0Q%40mail.gmail.com.

Siva Siva

unread,
Aug 7, 2019, 6:03:53 PM8/7/19
to santhavasantham

2019-08-03

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி (2019-08-07)

-------------

2) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

செங்கல் செம்பொன் னாகிட

அங்கட் பெருமான் அருளிட அகமகி ழன்பர்

துங்கத் தமிழுரை சுந்தர

ரங்கழ லிணைதனை வழிபட அருவினை அறுமே.


செங்கல் செம்பொன் ஆகிட அங்கட் பெருமான் அருளிட அகம் மகிழ் அன்பர் - திருப்புகலூரில் செங்கல் செம்பொற்கல் ஆகுமாறு அங்கண் உடைய பெருமான் அருள்புரியவும் உள்ளம் மகிழ்ந்த அன்பர்; (இந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க. ).

துங்கத் தமிழ் உரை சுந்தரர் அம் கழலிணைதனை வழிபட அருவினை அறுமே - தூய உயர்ந்த தமிழ்ப்பாமாலைகளைப் பாடியருளிய சுந்தரமூர்த்தி நாயனாரது அழகிய இருதிருவடிகளை வணங்கினால் தீவினைகள் அழியும்;


அன்பொடு,

வி. சுப்பிரமணியன்

On Tue, Aug 6, 2019 at 6:26 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2019-08-03

சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி (2019-08-07)

-------------

1) ---- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ----

-- 

It is loading more messages.
0 new messages