வெண்பனிப்படுகை

4 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Nov 29, 2025, 2:44:06 PM11/29/25
to santhavasantham

வெண்பனிப்படுகை

வீட்டின் வெளியே வெண்பனிப் படுகை

வீதி அலங்காரம் மரம்

மேனி எல்லாம் மேகம் வீழ்ந்து

மேவும் சிங்காரம்

பாட்டம் பாட்டம் பனிமழை வீழ்ச்சி

பாதை ஒய்யாரம்- - இங்கே

பக்க மரத்தில் யானை முதலை

பனியின் கம்பீரம்

வயிரக் கம்பி வரிவரி யாக

மரத்தில் தொங்காட்டம்- இந்த

வாசல் பக்கம் தொட்டிப் பனியின்

வார்ப்பு சங்காட்டம்

தயிரைக் கடைந்து வெண்ணை விசும்பு

தரையில் வீசியதோ- சிவனின்

சாம்பல் மேலே பக்தி கொண்டு

தரையும் பூசியதோ?

வீழ்ந்து கிடக்கும் பனியின் காட்சி

வெள்ளை ஓரழகு- நாளை

வெய்யில் போதில் மினுமினுக் கும்மே

விந்தை, பேரழகு

சூழ்ந்தி ருக்கும் விசும்பில் வெள்ளைத்

தூளின் கிட்டங்கி

தோன்றும் பருவப் போதில் தரைக்குச்

சூட்டும் பூவங்கி

பந்து பிடித்தேன் தூக்கிப் போட்டேன்

பையன் போலானேன்- பின்

பனியும் கடிக்க விரல்கள் துடிக்க

நொந்து நூலானேன்

image.png

Swaminathan Sankaran

unread,
Nov 29, 2025, 4:58:11 PM11/29/25
to santhav...@googlegroups.com
பனியின் வீசல், பனிப்படுகை, கம்பியாக உருகி வீழ்வதற்கு முன் நிற்கும் அதன் அழகு இவை பற்றி 
இவ்வளவு அருமையாக அனுபவித்து புனைந்த கவிதையை இதற்கு முன் எங்கும் படித்ததில்லை.
நன்றி.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBA-GWBjZd7CrmWDs4RufFMZ6yRFVxOpboKhMLyo8qtXog%40mail.gmail.com.

--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Nov 29, 2025, 6:06:43 PM11/29/25
to santhav...@googlegroups.com
நன்றி
இலந்தை

Ram Ramakrishnan

unread,
Nov 29, 2025, 9:44:23 PM11/29/25
to santhav...@googlegroups.com
நாலிருசீரிரட்டை வியனிலைச் சிந்துப் பாடல் மிக அருமை, தலைவரே.

பனி வீழ்தலும் அதனால் காணுங் காட்சிகளும் படம் பிடித்துக் காட்டினீர்கள்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 30 Nov 2025, at 4:36 AM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Nov 30, 2025, 10:16:29 AM11/30/25
to சந்தவசந்தம்
பாதை வெளியிற் பரந்து கிடக்கும்
      பனியின் பாடலிது    
வாதை கொடுக்கும் பனிக்குச் சூட்டும்
        வார்த்தைப் பிணையலிது
சீதம் பற்றி வேதம் போலச்
          செப்பும் பாடலிது
யாதென் றாலும் எழிலாய்க் காட்டும்
        இலந்தை பாடலிது!

அரசி. பழனியப்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Nov 30, 2025, 1:27:38 PM11/30/25
to santhav...@googlegroups.com
பாராட்டுக்கு நன்றி

On Sun, Nov 30, 2025 at 9:16 AM Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:
பாதை வெளியிற் பரந்து கிடக்கும்
      பனியின் பாடலிது    

இமயவரம்பன்

unread,
Nov 30, 2025, 2:57:19 PM11/30/25
to santhav...@googlegroups.com
பனிப்பொழிவின் அழகையெல்லாம் மிக அருமையான வருணித்து வடித்த தலைவரின் கவிதை, மிகச் சிறப்பு!

இமயவரம்பன்

unread,
Nov 30, 2025, 2:58:16 PM11/30/25
to santhav...@googlegroups.com
அரசியாரின் பின்னூட்டப் பாடல் அழகு!

Arasi Palaniappan

unread,
Nov 30, 2025, 3:09:29 PM11/30/25
to சந்தவசந்தம்
மிக்க நன்றி இமய வரம்பரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages