மீள் பதிவு:
“கார்த்திகேய வெண்பாப் பதிகம்"
(மீ. விசுவநாதன்)
அழகனாய் ஆண்டியாய் ஆயிரம் வேடம்
குழந்தை முருகனே கொண்டு பழந்தமிழர்
வாழ்வினைப் பண்பட வைத்த குருவழியே
ஊழ்வினை நீக்கும் மருந்து. (1)
மருந்தான கந்தனை மாதவ சித்தர்
பெருந்தேவ ரென்றேதான் பூசித் திருந்தனர் !
நோயிலா நூறாண்டு நோன்பினை நூற்றவர்
தேய்விலாப் புண்ணியர் தான். (2)
தானெனும் மாயையைத் தட்டி நொறுக்கிடும்
மாபலங் கொண்டவன் மால்மருகன் - காதலாய்
அன்புடன் சித்தத்தி(ல்) ஆழ்ந்து கிடக்கிற
தன்மை உணர்தல் தவம். (3)
தவமெனச் சொன்னால் தவறாது நித்தம்
எவரையும் நோகா திருத்தல்! சிவ(ன்)மகன்
சிந்தனை ஒன்றே சிறப்பெனக் கொண்டுநிதம்
வந்தனை செய்தல் வரம். (4)
வரந்தரும் வள்ளலின் வாசமிகு நாமம்
உரங்கூட்டும் உள்ளொளி கூட்டும் – கரங்கூப்பிக்
கந்தா வெனும்போதே காலன் விலகிடுவான் !
நிந்தனை நீக்கி நினை. (5)
நினைவில் மயிலும் நிமிர்ந்தகை வேலும்
தினமெனைக் காக்குமென எண்ணு ! மனத்தின்
கவலைக் கனலைக் கருணைப் புனலால்
அவன்கை அணைக்கும் அறி. (6)
அறிவை அவன்தா(ள்) அடியிலே வைத்துக்
குறியாய்த் தொழில்தினம் செய்தால் வெறியாய்த்
திரியும் மனமும், திமிரு(ம்) அடங்கும் !
புரிந்தா(ல்) புலரும் புகழ். (7)
புகழுக்கும் பேருக்கும் பொல்லாத தீங்கு
நிகழாது காக்குமாம் வேல்தான் - அகத்திலே
பொய்யும் திருட்டும் புரட்டையும் ஓட்டுமாம்
மைவண்ணத் தோகை மயில். (8)
மயிலென நம்மன வாசமதைத் தேடி
ஒயிலாக ஓடி வருவான் - பயிலுவாய்
பக்தியை மிக்கப் பணிவாக நாளுமே
முக்தி யளிக்குங் கழல். (9)
கழலிணை சேர்த்துக் கடம்பா வெனச்சொல்
பழகிடும் போது பழியாம் பழவினை
அதுவாய் விலகி அருளாய் மலரும்
புதுமை அதுவும் அழகு. (10)
(28.08.2024 03.20 am)
On Aug 5, 2026, at 22:12, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-tUHj4xwB783QYdOyN5qrQJMPmL7ub1o-EdfNcEdUVJAw%40mail.gmail.com.
On Aug 5, 2026, at 23:52, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMVp8DUpguCkANzBi%2BnnoYDVRKR5TAUPrRf_KuF28oO-g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/078F7FB9-D945-4D85-B5D2-148B1F128195%40gmail.com.