திருமால் திருப்புகழ் - வண்ண விருத்தங்கள்

118 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 6, 2024, 5:29:18 AM7/6/24
to சந்தவசந்தம்
திருமால் புகழ்பாடும் வண்ணப் பாடல்களை இனி இவ்விழையில் தொடர விரும்புகிறேன்.

இதுவரை (‘வண்ணப் பாடல்' இழையில்)  எழுதிய பாக்கள் ஐந்தையும் இந்த வலைப்பக்கத்தில் காணலாம்:


- நன்றி,
இமயவரம்பன்


இமயவரம்பன்

unread,
Jul 6, 2024, 7:28:52 AM7/6/24
to சந்தவசந்தம்
#திருமால்-திருப்புகழ் - 6 
திருக்கண்ணபுரம்
----------------
(வண்ணவிருத்தம்;
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் .. தனதான)
(உம்பரா ரமுதெனும் - திருப்புகழ்)

இன்பமே மிகவிழைந் தென்புதோல் உடலிழிந்
.. .. தென்றுமா ருயிருழன் - றிளையாதே
.. எம்பிரான் நினதுசெங் கஞ்சமார் கழலிறைஞ்
.. .. சிந்தவாழ் வினையடைந் - திடுவேனோ

குன்றினால் மழைதடிந் தொண்டுமா நிரைநலங்
.. .. குன்றிடா தருளிடும் - புகழாளா
.. கொங்குமா மலருகந் தங்குவாழ் பவளிடம்
.. .. கொண்டதார் தவழ்செழுந் - திருமார்பா

ஒன்பதோ டொருசிரம் சிந்தவார் கணைதுரந்
.. .. தும்பரார் தொழவெழுஞ் - சிலைவீரா
.. ஒங்குவான் அனலியும் திங்களோ டுலகையன்
.. .. றுண்டுமேல் உமிழ்பெருந் - திருவாயா

அன்பறா துனைநினைந் தொன்றவா ரருள்பொழிந்
.. .. தஞ்சல்நீ எனவரண் - தருவாயோ
.. அந்திவான் அதன்நிறம் கொண்டபே ரெழில்மிகுந்
.. .. தந்தமார் கணபுரம் - திகழ்வோனே.


பதம் பிரித்து:
இன்பமே மிக விழைந்து என்பு தோல் உடல் இழிந்து
என்றும் ஆருயிர் உழன்று இளையாதே
எம்பிரான் நினது செங் கஞ்சம் ஆர் கழல் இறைஞ்சு
இந்த வாழ்வினை அடைந்திடுவேனோ

குன்றினால் மழை தடிந்து ஒண்டும் ஆநிரை நலம்
குன்றிடாது அருளிடும் புகழாளா
கொங்கு மா மலர் உகந்து அங்கு வாழ்பவள் இடம்
கொண்ட தார் தவழ் செழும் திருமார்பா

ஒன்பதோடு ஒருசிரம் சிந்த வார் கணை துரந்து
உம்பரார் தொழ எழும் சிலைவீரா
ஒங்கு வான் அனலியும் திங்களோடு உலகை அன்று
உண்டு மேல் உமிழ்பெருந் திருவாயா

அன்பு அறாது உனை நினைந்து ஒன்ற ஆரருள் பொழிந்து
அஞ்சல்நீ என அரண் தருவாயோ
அந்தி வான் அதன் நிறம் கொண்ட பேரெழில் மிகுந்து
அந்தம் ஆர் கணபுரம் திகழ்வோனே!

சொற்பொருள்:
என்பு தோல் உடல் = எலும்பும் தோலும் உடைய உடல்
இழிந்து = கெட்டு
கஞ்சம் = தாமரை
இறைஞ்சு இந்த வாழ்வினை = வணங்கி வாழும் இப்படிப்பட்ட வாழ்க்கையை
தடிந்து = தீவிரத்தைக் குறைத்து
ஒண்டும் = ஒதுங்கும் (அடைக்கலம் புகுந்த)
கொங்கு = தேன்
உகந்து = விரும்பி
தார் தவழ் = மாலை தவழும்
வார் கணை = நெடிய அம்புகள்
ஒங்கு = ஓங்கு
அனலி = சூரியன்
மேல் உமிழ் = பின் உமிழ்ந்த
அந்தம் ஆர் = அழகு நிறைந்த

- இமயவரம்பன்

Ram Ramakrishnan

unread,
Jul 6, 2024, 8:05:20 AM7/6/24
to santhav...@googlegroups.com
தங்கள் அம்பறாத் துணியில் வண்ணவிருத்தம் என்ற கணையும் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, திரு. இமயவரம்பன்.

அருமை.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 6, 2024, at 07:28, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/E71E9556-B7E8-47DE-BC08-B4DED7BC8794%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 6, 2024, 8:08:50 AM7/6/24
to santhav...@googlegroups.com

அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!


On Jul 6, 2024, at 8:05 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

தங்கள் அம்பறாத் துணியில் வண்ணவிருத்தம் என்ற கணையும் சேர்ந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, திரு. இமயவரம்பன்.

Siva Siva

unread,
Jul 6, 2024, 8:53:56 AM7/6/24
to santhav...@googlegroups.com
Good.
Check the pattern stated for #5 on that page.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 6, 2024, 8:57:49 AM7/6/24
to சந்தவசந்தம்
Thank you for catching that!
I have updated the page with the corrected pattern.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jul 6, 2024, 9:06:59 AM7/6/24
to santhav...@googlegroups.com

கழலிறைஞ்
.. .. சிந்தவாழ் வினையடைந் - திடுவேனோ /

இந்த வாழ்வினை --> I think such phrasing usually means the present state that already exists.

கழல் நினைந்து என்றுமே மகிழ்வடைந் ....?

குன்றினால் மழைதடிந் தொண்டுமா நிரைநலங் /

தடிதல் - இங்கே என்ன பொருள்?

ஆநிரை ? ஆனிரை?

அந்திவான் அதன்நிறம் கொண்டபே ரெழில்மிகுந்
.. .. தந்தமார் கணபுரம் திகழ்வோனே /

Does that place have a bright red color like the evening sky? Or, is it describing the Lord's form?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 6, 2024, 10:59:01 AM7/6/24
to சந்தவசந்தம்
Thank you for your observations and suggestions!

I have changed my verse as follows (I have highlighted the changed words in bold):

இன்பமே மிகவிழைந் தென்புதோல் உடலிழிந்
.. .. தென்றுமா ருயிருழன் - றிளையாதே
.. எம்பிரான் உனபதம் தஞ்சமாய் நணுகிநின்
.. .. றிண்டைநாண் மலரொடுந் - துதியேனோ

குன்றுவார் குடைகவிந் தொண்டுமா னிரைநலங்
.. .. குன்றிடா தருளிடும் - புகழாளா
.. கொங்குமா மலருகந் தங்குவாழ் பவளிடம்
.. .. கொண்டதார் தவழ்செழுந் - திருமார்பா

ஒன்பதோ டொருசிரம் சிந்தமா கணைதுரந்
.. .. தும்பரார் தொழவெழுஞ் - சிலைவீரா
.. ஒங்குவான் அனலியும் திங்களோ டுலகையன்
.. .. றுண்டுமேல் உமிழ்பெருந் - திருவாயா

அன்பறா துனைநினைந் தொன்றவா ரருள்பொழிந்
.. .. தஞ்சல்நீ எனவரண் - தருவாயோ
.. அந்துழாய் மலர்தரும் கந்தமார் பொழில்மிகுந்
.. .. தந்தமார் கணபுரம் - திகழ்வோனே.

(உனபதம் = உனது பதம்;
இண்டை = மலர் மாலை; 
குன்று வார் குடை = குன்றாகிய பெரிய குடை; 
அந்துழாய் = அழகிய துழாய்; 
மலர்தரும் = மலர்கின்ற; )

……..

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 7, 2024, 12:36:23 PM7/7/24
to santhav...@googlegroups.com
அருமை. இராமாயண வெண்பா எழுதியுள்ள மதுரக்வி திருமால் திருப்புகழ் நிறையப் பாடல்கள் எழுதியிருப்பதாக நினைவு.
இலந்தை

On Sat, Jul 6, 2024 at 9:59 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Jul 7, 2024, 12:48:24 PM7/7/24
to santhav...@googlegroups.com

I had shared this info in Sep 2023.

குரவை இராமாநுஜ தாசர் - 108 திருப்பதித் திருப்புகழ் -

https://www.google.com/books/edition/Paramap%C4%81kavat%C5%8Dttamar%C4%81kiya_Kuravai_Ir/YYJulXoxxWYC?hl=en&gbpv=0


This book printed in 1897 has only the verses (and no urai).


V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jul 7, 2024, 12:50:35 PM7/7/24
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி, தலைவரே!
….

On Jul 7, 2024, at 12:36 PM, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 7, 2024, 12:52:35 PM7/7/24
to santhav...@googlegroups.com
Thank you for sharing this book again. I was trying to locate your previous post on this book.

On Jul 7, 2024, at 12:48 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Aug 24, 2024, 9:52:01 AM8/24/24
to சந்தவசந்தம்
முத்தைத்தரு பத்தித் திருநகை என்னும் இழையில் சென்ற வருடம் நான் முயன்று எழுதிய வண்ண விருத்தத்தில் சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் இவ்விழையில் இட விரும்புகிறேன்.
 
#திருமால்-திருப்புகழ் - 7 
----------------
(வண்ணவிருத்தம்;

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன .. தனதான)
(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)


பத்திச்செறி வுற்றுத் திருவருள்

.. .. .. இச்சித்தவர் அர்ச்சித் தெழவொரு

.. .. பற்பத்தொளிர் முத்திப் பதமது - தருவோனே!

.. பச்சைப்புன மிக்குற் றிடுவரை

.. .. .. ஒக்கப்பொலி பொற்புற் றிடுமொரு

.. .. பட்டுச்சுடர் விட்டுத் திகழுரு - நெடியோனே!

 

பத்துத்தலை இற்றுப் படவிழி

.. .. .. குற்றத்தொரு வற்செற் றிடவெரி

.. .. பற்றிச்செலும் ஒற்றைக் கணையெறி - சிலையானே!

.. பற்றற்றவர் நச்சித் தொழலொடு

.. .. .. புக்கிட்டுள முற்றச் சறவொரு

.. .. பக்கத்துணை யொக்கக் கழனிழல் - அருள்வோனே!

 

கத்தித்துய ருற்றுக் கதறிடும்

.. .. .. அத்திக்கரு ளிச்சக் கரமது

.. .. கப்பக்கர வைச்செற் றிடவரும் - அருளாளா!

.. கட்டிக்கன கத்தைத் தொலைமுக

.. .. .. முத்துப்பொலி வுற்றுத் தெளிவெணெய்

.. .. கட்டித்தயிர் முற்றத் திருடிடும் - இனியானே!

 

சித்தத்தொடு தொற்றிச் செயலொடு

.. .. .. பற்றிச்சுடு நச்சுக் கடுவினை

.. .. செற்றுத்துய ரற்றுப் பொலிவுற - அருளாயே!

.. செக்கைப்பல சுற்றித் துவளுற

.. .. .. இக்கட்டலை மிக்குற் றெருதினொர்

.. .. திக்கற்றுழல் இச்சிக் கலுமற - வருவாயே!

 

 

பதம் பிரித்து:

பத்திச் செறிவு உற்றுத் திருவருள்

.. .. .. இச்சித்தவர் அர்ச்சித்து எழ ஒரு

.. .. பற்பத்து ஒளிர் முத்திப் பதம் அது - தருவோனே!

.. பச்சைப் புனம் மிக்கு உற்றிடு வரை

.. .. .. ஒக்கப் பொலி பொற்பு உற்றிடும் ஒரு

.. .. பட்டுச் சுடர் விட்டுத் திகழ் உரு - நெடியோனே!

 

பத்துத் தலை இற்றுப் பட இழி

.. .. .. குற்றத்து ஒருவற் செற்றிட எரி

.. .. பற்றிச் செலும் ஒற்றைக் கணை எறி - சிலையானே!

.. பற்று அற்றவர் நச்சித் தொழலொடு

.. .. .. புக்கிட்டு உளம் முற்று அச்சு அற ஒரு

.. .. பக்கத் துணை ஒக்கக் கழல் நிழல் - அருள்வோனே!

 

கத்தித் துயர் உற்றுக் கதறிடும்

.. .. .. அத்திக்கு அருளிச் சக்கரம் அது

.. .. கப்பு அக் கரவைச் செற்றிட வரும் - அருளாளா!

.. கட்டிக் கனகத்தைத் தொலை முகம்

.. .. .. முத்துப் பொலிவு உற்றுத் தெளி வெணெய்

.. .. கட்டித் தயிர் முற்றத் திருடிடும் - இனியானே!

 

சித்தத்தொடு தொற்றிச் செயலொடு

.. .. .. பற்றிச் சுடும் நச்சுக் கடுவினை

.. .. செற்றுத் துயர் அற்றுப் பொலிவு உற - அருளாயே!

.. செக்கைப் பல சுற்றித் துவள் உற

.. .. .. இக்கட்டு அலை மிக்கு உற்று எருதின் ஒர்

.. .. திக்கு அற்று உழல் இச் சிக்கலும்  அற - வருவாயே!


பொருள் உரை:

பத்திச் செறிவு உற்று = பக்தி மிகுந்து

திருவருள் இச்சித்தவர் = திருவருளை வேண்டுபவர்கள்

அர்ச்சித்து எழ = துதிக்கும்போது (அவர்களுக்கு)

ஒரு பற்பத்து ஒளிர் = ஒரு தாமரையைப் போல ஒளி வீசுகின்ற (பற்பம் = பத்மம் = தாமரை)

முத்திப் பதம் அது = முக்தியைத் தரவல்ல திருவடிகளை

தருவோனே = அருள்பவனே!

 

பச்சைப் புனம் = பசுங்காடுகள் (புனம் = காடு)

மிக்கு உற்றிடு = நிறைந்த

வரை ஒக்க = மலையைப் போன்று (வரை = மலை)

பொலி = பொலிந்து விளங்கும்

பொற்பு உற்றிடும் = அழகு மிகுந்த

ஒரு பட்டுச் சுடர் விட்டு = பட்டு போன்ற ஒளி வீசி

திகழ் உரு = திகழ்கின்ற திருவுருவத்தை உடைய

நெடியோனே = நெடுமாலே!

 

பத்துத் தலை = பத்துத் தலைகளும்

இற்றுப் பட  = அறுபட்டு நிலத்தில் விழுமாறு

இழி குற்றத்து = (பிறன்மனையை நாடும்) மிக இழிவான குற்றச் செயலைச் செய்த

ஒருவற் (ஒருவனை) = ஓர் அரக்கனான இராவணனை 

செற்றிட = வதைத்திட

எரி பற்றிச் செலும் = நெருப்பை வீசுகின்ற

ஒற்றைக் கணை = ஓர் அம்பை 

எறி சிலையானே = எய்த வில்லாளனே!  

 

பற்று அற்றவர் = (உன் திருவடியைத் தவிர) வேறெதிலும் பற்று இல்லாத உன் அடியார்கள் 

நச்சி = விரும்பி

தொழலொடு = தொழும்போது

உளம் புக்கிட்டு = அவர்கள் நெஞ்சில் புகுந்து

அச்சு முற்று அற = அவர்களது அச்சம் முழுவதுமாக அகல (அச்சு = அச்சம் = கடைக்குறை விகாரம்) 

பக்கத் துணை ஒக்க = பக்கத் துணை என்று  சொல்லத்தக்க 

கழல் நிழல் = திருவடிகளின் நிழலை

அருள்வோனே = அருள்பவனே!

 

கத்தித் துயர் உற்றுக் கதறிடும் = 'ஆதிமூலமேஎன்று குரலெழுப்பித் துன்பத்தால் கதறி அழைக்கும்

அத்திக்கு அருளி = யானையைக் காப்பாற்றும் பொருட்டு

கப்பு = அதன் காலைக் கவ்வுகின்ற 

அக் கரவை = முதலையை (கரவு = முதலை) 

சக்கரம் அது = திருச்சக்கரத்தால்

செற்றிட வரும் = அழித்திட வருகின்ற

அருளாளா = கருணை நிறைந்தவனே!

 

கட்டிக் கனகத்தை = கட்டித் தங்கத்தை

தொலை முகம் = தோற்கடிக்கும் வதனமானது

முத்துப் பொலிவு உற்று = முத்துப் போலப் பொலிவு கொண்டு விளங்க

தெளி வெணெய் = தெளிந்த வெண்ணெயையும்

கட்டித் தயிர் = கட்டித் தயிரையும்

முற்றத் திருடிடும் = மிச்சம் வைக்காமல் முழுதும் திருடி உண்ணும் 

இனியானே = மனத்துக்கு இனியவனே!

 

சித்தத்தொடு தொற்றி = எனது மனத்தில் ஒரு கிருமியைப் போலத் தொற்றிக்கொண்டு

செயலொடு பற்றி = செய்யும் செயலையும் பாதித்து  

சுடும் = வருத்தும்

நச்சு = விஷம் போன்ற

கடுவினை = கொடுமையான வினையை

செற்று = அழித்து

துயர் அற்று = துயரம் ஒழிந்து

பொவிவு உற = எனது மனம் பொலிவடைய

அருளாயே = அருள் செய்வாய்!

 

செக்கைப் பல சுற்றி =  செக்கைப் பலமுறை சுற்றிச் சுற்றி வந்து

துவள் உற = சோர்வு அடைந்து

இக்கட்டு அலை = துன்ப அலைகளால்

மிக்கு உற்று = மிகவும் வாடுகின்ற

எருதின் = ஒரு எருதைப் போல

ஒர் திக்கு அற்று = ஒரு திக்கும் தெரியாமல்

உழல் = வருந்துகின்ற

இச் சிக்கலும் = எனது இந்த அல்லலையும்

அற = ஒழித்திட

வருவாயே = வந்தருளி என்னைக் காப்பாய்!


- இமயவரம்பன்
Message has been deleted

Siva Siva

unread,
Aug 24, 2024, 4:33:24 PM8/24/24
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Aug 24, 2024, 5:29:40 PM8/24/24
to santhav...@googlegroups.com

Thank you!

On Aug 24, 2024, at 4:33 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Arasi Palaniappan

unread,
Aug 24, 2024, 9:21:53 PM8/24/24
to சந்தவசந்தம்
அற்புதம்!

எங்கள் ஊரில் இருந்த வைணவப் பெரியவர், நாத விந்து -திருப்பு கழின் சந்தக்  குழிப்பில் பெருமாள் பற்றிப் பாடக் கேட்டிருக்கிறேன். அதை எழுதியவர் யாரென்று அறியேன். வைணவத் திருப்புகழுக்கு முன்னோடியாக இருந்தவர் யாரென்று தாங்கள் அறிவீர்களா?

நன்றி 

அரசி. பழனியப்பன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Aug 24, 2024, 9:22:39 PM8/24/24
to santhav...@googlegroups.com
ஆகா!

அருமையோ அருமை, திரு. இமயவரம்பன்.
 
அருணகரிநாதர் திருப்புகழ் கேட்ட உணர்ச்சி.
அளப்பறு மகிழ்ச்சி.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 24, 2024, at 09:52, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

இமயவரம்பன்

unread,
Aug 24, 2024, 9:30:13 PM8/24/24
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, திரு, பழனியப்பன்! வேதாந்த தேசிகர் பாடல்களில் சில வண்ண விருத்தங்களாக இருப்பதைக் காண்கிறேன்.

மேலும் வைணவத் திருப்புகழ் பாடல்கள் குறித்துத் திரு. சிவசிவா அவர்களும் இலந்தையார் அவர்களும் இவ்விழையில் முன்பு அளித்த செய்தியைப் பின்வருமாறு காண்க:



Begin forwarded message:

From: Siva Siva <naya...@gmail.com>
Subject: Re: திருமால் திருப்புகழ் - வண்ண விருத்தங்கள்
Date: July 7, 2024 at 12:48:08 PM EDT

I had shared this info in Sep 2023.

குரவை இராமாநுஜ தாசர் - 108 திருப்பதித் திருப்புகழ் 


On Sun, Jul 7, 2024 at 12:36 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
அருமை. இராமாயண வெண்பா எழுதியுள்ள மதுரக்வி திருமால் திருப்புகழ் நிறையப் பாடல்கள் எழுதியிருப்பதாக நினைவு.
இலந்தை

இமயவரம்பன்

unread,
Aug 24, 2024, 9:31:24 PM8/24/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு.ராம்கிராம்!

...

Arasi Palaniappan

unread,
Aug 24, 2024, 9:45:56 PM8/24/24
to சந்தவசந்தம்
தகவலுக்கு மிக்க நன்றி 

Arasi Palaniappan

unread,
Aug 24, 2024, 9:49:28 PM8/24/24
to சந்தவசந்தம்
நானும் முன்னர் இராமன் புகழ்பாடும் வண்ணப்பா ஒன்று எழுதி சந்தவசந்தத்தில் பதிவு செய்திருந்தேன் ( சந்த னந்தி மிர்ந்த ணைந்து -என்ற திருப்புகழ் சந்தக் குழிப்பில் )

இமயவரம்பன்

unread,
Aug 24, 2024, 9:55:56 PM8/24/24
to santhav...@googlegroups.com
அருமை, திரு,பழனியப்பன்!



தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Aug 26, 2024, 12:08:32 PM8/26/24
to சந்தவசந்தம்
பத்திச்செறி வுற்றுத் திருவருள்

மிகவும் சிறப்பாக உள்ளது.

மேலும் 
கிரேஸி மோகன் அவர்கள் 
திருமால் திருப்புகழ்  பாடியுள்ளார்.
👇



இமயவரம்பன்

unread,
Aug 26, 2024, 12:35:13 PM8/26/24
to santhav...@googlegroups.com

மிக்க நன்றி, திரு. தங்கவேல்!

கிரேஸி மோகன் அவர்களின் முக்தி வெண்பாக்களைப் பகிர்ந்தமைக்குத் தங்களுக்கும் திரு. விவேக் பாரதி அவர்களுக்கும் நன்றி!

கிரேசி மோகன் அவர்களின் திருமால் திருப்புகழ்ப் பாடல்கள் நீங்கள் இட்ட இணைப்பில் இல்லையே.  வேறு இணைப்பு உள்ளதா?

இமயவரம்பன்

On Aug 26, 2024, at 12:08 PM, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:

பத்திச்செறி வுற்றுத் திருவருள்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Aug 26, 2024, 1:05:11 PM8/26/24
to santhav...@googlegroups.com
Try this:

https://www.vallamai.com/?s=திருமால்+திருப்புகழ்


I looked at one or two pages. Those that I looked at are not vaNNam songs - but maybe some of the other songs are.


V. Subramanian


இமயவரம்பன்

unread,
Aug 26, 2024, 4:25:20 PM8/26/24
to santhav...@googlegroups.com

Thank you, it works!

On Aug 26, 2024, at 1:05 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 26, 2024, 5:42:17 PM8/26/24
to santhav...@googlegroups.com
மதுரகவி ஸ்ரீநிவாச ஐயங்கார்  2060  வெண்பாக்களால் அமைந்த  “மதுரகவி இராமாயண வெண்பா” என்ற நூலை (1990) எழுதிப் பதிப்பித்துள்ளார். (மேலும், ஸ்ரீவேங்கடேசப் பெருமானின் பேரில் 28 சீர் கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம் போன்ற செய்யுள்களையும் படைத்துள்ளார்._

அனந்த்  

--.
மதுரகவி ஸ்ரீ ஸ்ரீநிவாஸ ஐயங்கார்- இராமாயண வெண்பா-பகுதி-1.pdf

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 7:45:03 AMJan 4
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com

“Happy New Year 2025 !” என்னும் இழையில் திரு. சிவசிவா அவர்கள் பதிவிட்டிருந்த “பகலிர வெத்தனை ஓடி” என்னும் இனிமையான பாடலைப் படித்தபோது,  இதுபோல எழுத முயல வேண்டும் என்னும் விருப்பம் எனக்குள் பிறந்தது.


அவரது பாடல் நடையில் அடியேன் முயன்று எழுதிய கவிதை : 


திருக்கோவலூர் - உலகளந்த பெருமாள் கோவில் 


(வண்ணவிருத்தம்:

தனதனனத் தனதான தனதனனத் தனதான

     தனதனனத் தனதான ...... தனதான)


(Can also be seen as - தனதன தத்தன தான x3 .. தனதான)


(பழியுறு சட்டகமான - திருப்புகழ் - திருவிடைக்கழி)


நலமழியப் புவிவாழ்வில் .. நவநிதியக் குவைதேடி

.. .. நனிமருளுற் றிடநாளும் .. நலிவேனை

.. நவைமிகுபற் றுறுவேனை .. நெறிவிலகித் திரிவேனை 

.. .. நமனதுவற் புறுதூதர் .. நணுகாமுன்


ஒலிகெழுமுத் தமிழாலென் .. உளமுருகக் கவிபாடி

.. .. உணர்வினிலற் புதஞான .. அமுதூற

.. உருவளர்நிற் கனிவாயொண் .. முறுவலின்நற் புகழோதி

.. .. உனபெயர்செப் பிடுவாழ்வை .. அருள்வாயே


வலமுறுசக் கரம்வான்வெண் .. பணிலமும்விற் படையோடு

.. .. வரையுயர்மற் கதைவாள்கொள் .. திரடோளா

.. மணமலிமட் டலர்மேவு .. மடமகள்நித் தமும்வாழும்

.. .. மணியொடுமுத் தொளிர்மாலை .. அணிமார்பா


அலைமிகுமக் கடல்மீதொர் .. அரவெனுமெத் தையின்மேவும்

.. .. அறிதுயிலிற் றனியோகு .. புரிவானே

.. அளவிடவிச் சகமேழும் .. வளர்தருபொற் கழல்நாடும்

.. .. அடியவருக் கருள்கோவல் .. நெடுமாலே!



பதம் பிரித்து:


நலம் அழியப் புவி வாழ்வில் .. நவநிதியக் குவை தேடி

.. .. நனி மருள் உற்றிட நாளும் .. நலிவேனை

.. நவை மிகு பற்று உறுவேனை .. நெறி விலகித் திரிவேனை 

.. .. நமனது வற்பு உறு தூதர் .. நணுகாமுன்


ஒலி கெழு முத்தமிழால் என் .. உளம் உருகக் கவி பாடி

.. .. உணர்வினில் அற்புதம் ஞான .. அமுது ஊற

.. உருவளர் நிற் கனிவாய் ஒண் .. முறுவலின் நற் புகழ் ஓதி

.. .. உன பெயர் செப்பிடு வாழ்வை .. அருள்வாயே


வலம் உறு சக்கரம் வான் வெண் .. பணிலமும் வில் படையோடு

.. .. வரை உயர் மல் கதை வாள் கொள் .. திரள் தோளா!

.. மணம் மலி மட்டு அலர் மேவு .. மட மகள் நித்தமும் வாழும்

.. .. மணியொடு முத்து ஒளிர் மாலை .. அணி மார்பா!


அலை மிகும் அக்கடல் மீது ஒர் .. அரவு எனும் மெத்தையின் மேவும்

.. .. அறி துயிலில் தனி யோகு .. புரிவானே

.. அளவு இட இச் சகம் ஏழும் .. வளர்தரு பொற் கழல் நாடும்

.. .. அடியவருக்கு அருள் கோவல் .. நெடுமாலே!



(குவை = குவியல்;

நவை = குற்றம்;

நமன் = காலன்;

வற்பு உறு = வலிமை வாய்ந்த;

உருவளர் = அழகிய;

வலம் உறு = வலிமை மிகுந்த அல்லது வலக்கையில் தரித்த;

பணிலம் = சங்கு;

வரை = மலை;

மல் = வலிமை வாய்ந்த;

மட்டு = தேன்;

மடமகள் = இளமங்கை;

யோகு = யோகம்;

வளர்தரும் = உயர்ந்து விளங்கிய)


  • இமயவரம்பன் 

குருநாதன் ரமணி

unread,
Jan 4, 2025, 9:30:08 AMJan 4
to சந்தவசந்தம்
அருமை, அருமை.
ரமணி

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 9:52:42 AMJan 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ரமணி!

On Jan 4, 2025, at 9:30 AM, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:

அருமை, அருமை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jan 4, 2025, 10:10:17 AMJan 4
to santhav...@googlegroups.com
Nice.

நிற் கனிவாய் / = ?

கரம்வான்வெண் .. ணிலமும்விற் /
May need tweaking.

மணமலிமட் டலர் /

மணம் & மட்டு ?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 12:44:47 PMJan 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you for your comments! 

Accordingly, I have tweaked the 2nd and 3rd stanzas. Please see the underlined words in my inline comments for the modifications.

On Jan 4, 2025, at 10:10 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


Nice.

நிற் கனிவாய் / = ?

ஒலிகெழுமுத் தமிழாலென் .. உளமுருகக் கவிபாடி

.. .. உணர்வினிலற் புதஞான .. அமுதூற

.. ஒழிவிலிருட் பகைதீர

.. உறுதுயர்மொத் தமுமாற

.. .. உனபெயர்செப் பிடுவாழ்வை .. அருள்வாயே


கரம்வான்வெண் .. ணிலமும்விற் /
May need tweaking.


வலமுறுசக் கரமோடு .. பணிலமுமொப் பருநீள்வில்


மணமலிமட் டலர் /

மணம் & மட்டு ?


மணமலிபத் துமமேவு .. மடமகள்நித் தமும்வாழும்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jan 4, 2025, 1:51:08 PMJan 4
to santhav...@googlegroups.com
அருமை, திரு. இமயவரம்பன்.

புத்தாண்டு வாழத்துகள், குழுவிலுள்ள எல்லோர்க்கும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 4, 2025, at 07:45, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 2:10:32 PMJan 4
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்! 
புத்தாண்டு வாழ்த்துகள் !

On Jan 4, 2025, at 1:51 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அருமை, திரு. இமயவரம்பன்.

இமயவரம்பன்

unread,
Jan 4, 2025, 2:59:05 PMJan 4
to santhavasantham

திருத்திய முழுப்பாடல்:


நலமழியப் புவிவாழ்வில் .. நவநிதியக் குவைதேடி

.. .. நனிமருளுற் றிடநாளும் .. நலிவேனை

.. நவைமிகுபற் றுறுவேனை .. நெறிவிலகித் திரிவேனை 

.. .. நமனதுவற் புறுதூதர் .. நணுகாமுன்


ஒலிகெழுமுத் தமிழாலென் .. உளமுருகக் கவிபாடி

.. .. உணர்வினிலற் புதஞானம் ..  இனிதூற

.. ஒழிவிலிருட் பகைதீர .. உறுதுயர்மொத் தமுமாற

.. .. உனபெயர்செப் பிடுவாழ்வை .. அருள்வாயே


வலமுறுசக் கரமோடு .. பணிலமுமொப் பருநீள்வில்

.. .. வரையுயர்மற் கதைவாள்கொள் .. திரடோளா

.. மணமலிபத் துமமேவு .. மடமகள்நித் தமும்வாழும்

.. .. மணியொடுமுத் தொளிர்மாலை .. அணிமார்பா


அலைமிகுமக் கடல்மீதொர் .. அரவெனுமெத் தையின்மேவும்

.. .. அறிதுயிலிற் றனியோகு .. புரிவானே

.. அளவிடவிச் சகமேழும் .. வளர்தருபொற் கழல்நாடும்

.. .. அடியவருக் கருள்கோவல் .. நெடுமாலே!


- இமயவரம்பன் 

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 4:26:27 PMJan 5
to santhavasantham

திருநாகை (நாகப்பட்டினம்) - சவுந்தரராஜப் பெருமாள் கோயில்


(வண்ணவிருத்தம்;

தனதனதனத் .. தனதான )

(பகலிரவினில் - திருப்புகழ் - சென்னிமலை)


அரவரசனுக் .. கருணாதா

.. அடியவரகத் .. துறைமாயா

உருவளர்திருத் .. திகழ்மார்வா

.. உணர்வருமுதற் .. பொருளேயோ

இருடருவினைத் .. துயர்தீர

.. இணையடிகளைத் .. தருவாயே

விரிபுவிதுதித் .. தெழுநாகை

.. வியனகருடைத் .. திருமாலே.


பதம் பிரித்து:


அரவரசனுக்கு .. அருள் நாதா

.. அடியவர் அகத்து .. உறை மாயா

உருவளர் திருத் .. திகழ் மார்வா

.. உணர்வு அரு முதற் .. பொருளேயோ

இருள் தரு வினைத் .. துயர் தீர

.. இணை யடிகளைத் .. தருவாயே

விரி புவி துதித்து .. எழும் நாகை

.. வியன் நகர் உடைத் .. திருமாலே.


[அரவரசன் = ஆதிசேஷன்; 

(ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம் திருநாகை);

உருவளர் = அழகிய;

திரு = திருமகள்;

விரி புவி = பரந்து விரிந்த பூமி; 

(பூமாதேவி தவம் இருந்த திருத்தலம்);]

  • இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jan 5, 2025, 5:26:02 PMJan 5
to santhav...@googlegroups.com
Nice.

பொருளேயோ / = ?

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 6:01:16 PMJan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
பொருளேயோ = பொருளே! ஓ!
ஓ என்னும் அசை


“முதல் தனி வித்தேயோ” என்று திருவாய்மொழியிலும்


“மொய்த்துவளர் பேரழகு மூத்தவடி வேயோ” என்று பெரியபுராணத்திலும் வருவதாகத் தெரிகிறது.



On Jan 5, 2025, at 5:26 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Jan 5, 2025, 6:34:23 PMJan 5
to santhav...@googlegroups.com
Yes, ஓ has several meanings.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 6:39:05 PMJan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thanks, I think I used ஓ here to express as a way of expressing my வினைத்துயர்.

On Jan 5, 2025, at 6:34 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 7:15:14 PMJan 5
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com
பொருள் தெளிவுக்காக நான்காம் அரையடியை இவ்வாறு மாற்ற விரும்புகிறேன்:

“உணர்வருமுதற் .. றனிநீயே”


நன்றி! உ





On Jan 5, 2025, at 6:39 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:



VETTAI ANANTHANARAYANAN

unread,
Jan 5, 2025, 8:00:52 PMJan 5
to santhav...@googlegroups.com
பொருளேயோ என்பது மற்ற விளிகளோடு ஒத்துப் போவதால் அவ்வாறே இருக்கலாமெனெத் தோன்றுகிறது.

அனந்த்

இமயவரம்பன்

unread,
Jan 5, 2025, 8:04:39 PMJan 5
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
நன்றி, திரு. அனந்த்! 

On Jan 5, 2025, at 8:00 PM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jan 6, 2025, 11:08:10 AMJan 6
to santhav...@googlegroups.com
அருமை திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jan 5, 2025, at 20:04, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Jan 6, 2025, 11:23:10 AMJan 6
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்!

On Jan 6, 2025, at 11:08 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

அருமை திரு. இமயவரம்பன்.

இமயவரம்பன்

unread,
Jun 11, 2025, 6:24:17 AMJun 11
to santhavasantham

திருவரங்கம்

----------------

(வண்ணவிருத்தம்;

தனன தந்த தத்தான

தனன தந்த தத்தான

தனன தந்த தத்தான .. தனதான)

(களவு கொண்டு - திருப்புகழ் - பொது)


பணவ ளங்க ளைத்தேடி ..  நிதம லைந்தி ழுக்கான

.. .. பலபு ரிந்தி ளைத்தோயு(ம்) .. உளமேவிப்

.. பணில முஞ்செ ருச்சீறு ..  திகிரி யுந்த ரித்தோவில்

.. .. பவப யந்த டுத்தாள .. வருவாயே

கணைது றந்த றப்போரில் .. மதிளி லங்கை செற்றாடு

.. .. கழறொ ழுந்த னிப்பேறு .. தருவாயே

.. கனிவி லங்கு சொற்கீதை .. நெறியு ணர்ந்த கத்தேயொர் 

.. .. கவலொ ழிந்து யிர்ப்பேற .. அருளாயே

மணிபி றங்கு பொற்பாத(ம்) ..  அரண மென்றி ருப்போர்தம்

..  ..  மனம ணைந்தி டர்ப்பாடு ..  களைவோனே 

..  மலர லங்க லைச்சூடி  .. மகிழ ணங்கெ ழிற்பாவை

..  ..  வளர்க ருங்கு ழற்கோதை ..  மணவாளா

அணிகெ ழுந்த மிழ்ப்பாட(ல்) .. நனிமு ழங்கி யெப்போதும்

.. .. அடிய ரன்பு றச்சூழு(ம்) .. நகரோனே

.. அரவ மென்ற அப்பாயின் .. மிசைவி ரிந்த வெற்பாகி

.. .. அருள ரங்க நற்கோவில் .. நெடுமாலே.



பதம் பிரித்து:

பண வளங்களைத் தேடி ..  நிதம் அலைந்து இழுக்கான

.. .. பல புரிந்து இளைத்து ஓயு(ம்) .. உளம் மேவிப்

.. பணிலமும் செருச் சீறு ..  திகிரியும் தரித்து ஓவு இல்

.. .. பவ பயம் தடுத்து ஆள .. வருவாயே

கணை துறந்து அறப் போரில் .. மதிள் இலங்கை செற்று ஆடு

.. .. கழல் தொழும்  தனிப் பேறு .. தருவாயே

.. கனிவு இலங்கு சொற் கீதை .. நெறி யுணர்ந்து அகத்தே ஒர் 

.. .. கவல் ஒழிந்து உயிர்ப்பு ஏற .. அருளாயே

மணி பிறங்கு பொற் பாத(ம்) ..  அரணம் என்று இருப்போர் தம்

..  ..  மனம் அணைந்து இடர்ப்பாடு ..  களைவோனே 

..  மலர் அலங்கலைச் சூடி .. மகிழ் அணங்கு, எழிற் பாவை,

..  ..  வளர் கருங் குழற் கோதை ..  மணவாளா

அணி கெழுந் தமிழ்ப்பாட(ல்) .. நனி முழங்கி எப்போதும்

.. .. அடியர் அன்பு உறச் சூழு(ம்) .. நகரோனே

.. அரவம் என்ற அப் பாயின் .. மிசை விரிந்த வெற்பாகி

.. .. அருள் அரங்க நற்கோவில் .. நெடுமாலே.



* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

[இழுக்கான = இழுக்கானவை (கடைக்குறை விகாரம்); 

பணிலம் = சங்கு; செருச் சீறு = போர்களில் சீறிப் பாய்கின்ற; திகிரி = சக்கரம்; ஓவு இல் = எப்போதும் நீங்காமல் இருக்கும்;

கணை துறந்து = அம்பு விடுத்து; செற்று  = அழித்து; ஆடு = வென்ற; 

ஆடு கழல் = வெற்றிகொண்ட (ஶ்ரீ இராமனின்) திருவடி; கழறொழும் = கழல் தொழும்;

ஒர் = ஓர் (குறுகல் விகாரம்); கவல் = கவலை;

பிறங்கு = ஒளிர்கின்ற; அரணம் = அரண்; அணைந்து = புகுந்து; 

அலங்கல் = மாலை; கோதை = ஶ்ரீ ஆண்டாள்;

அணி கெழும் = அழகு விளங்கும்; அடியர் = அடியவர்கள்/பக்தர்கள்; 

அரவம் = அரவு = பாம்பு; வெற்பு = மலை; (பச்சைமா மலைபோல் மேனி - தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தைத் தழுவி எழுதியது)

அரங்க நற்கோவில் = நலம் விளங்கும் திருவரங்கத்துக் கோவில்;]


  • இமயவரம்பன்

Arasi Palaniappan

unread,
Jun 11, 2025, 6:30:29 AMJun 11
to சந்தவசந்தம்
அருமை!

On Sat, 6 Jul 2024, 2:59 pm இமயவரம்பன், <anandbl...@gmail.com> wrote:
திருமால் புகழ்பாடும் வண்ணப் பாடல்களை இனி இவ்விழையில் தொடர விரும்புகிறேன்.

இதுவரை (‘வண்ணப் பாடல்' இழையில்)  எழுதிய பாக்கள் ஐந்தையும் இந்த வலைப்பக்கத்தில் காணலாம்:


- நன்றி,
இமயவரம்பன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

NATARAJAN RAMASESHAN

unread,
Jun 11, 2025, 6:49:25 AMJun 11
to santhav...@googlegroups.com
சிறப்பான பாடல்

        -- தில்லைவேந்தன்




இமயவரம்பன்

unread,
Jun 11, 2025, 8:59:36 AMJun 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்! 

On Jun 11, 2025, at 6:30 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Jun 11, 2025, 9:00:07 AMJun 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. தில்லைவேந்தன்! 

On Jun 11, 2025, at 6:49 AM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


சிறப்பான பாடல்

        -- தில்லைவேந்தன்




--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jun 11, 2025, 9:43:02 AMJun 11
to santhav...@googlegroups.com
அருமை. திரு. இமயவரம்பன். வண்ணச் சந்தம் கொஞ்சுகிறது.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


On Sat, Jul 6, 2024 at 5:29 AM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
திருமால் புகழ்பாடும் வண்ணப் பாடல்களை இனி இவ்விழையில் தொடர விரும்புகிறேன்.

இதுவரை (‘வண்ணப் பாடல்' இழையில்)  எழுதிய பாக்கள் ஐந்தையும் இந்த வலைப்பக்கத்தில் காணலாம்:


- நன்றி,
இமயவரம்பன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jun 11, 2025, 9:55:54 AMJun 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்! 

On Jun 11, 2025, at 9:43 AM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Jun 30, 2025, 9:11:08 AMJun 30
to santhavasantham

சந்தக்கவி இராமசுவாமி அவர்கள் எழுதிய 'சந்த சாத்திரம்' என்னும் நூலில், மஹிதோஜ்வலா என்னும் சமஸ்கிருத சந்தத்தைப் பற்றிப் படித்தேன்.

நம்பியாண்டார் நம்பியும் ‘நெறிதரு குழலை அறலென்பர்கள்’ என்று இந்தச் சந்தத்தில் பாடியுள்ளார் என்று தெரியவந்தது. 

https://www.tamilvu.org/slet/l41B0/l41B0are.jsp?book_id=119&song_no=582&stind=1&edind=133&x1=1


‘தனதன தனன தனதந்தன’ என்னும் இந்தச் சந்தநடையில் அடியீற்றில் (திருப்புகழ் போல) ஒரு தனிச்சொல் கொடுத்து எழுதிப் பார்த்தேன். அடியேன் முயன்ற பாடல்:


திருவரங்கம்

(வண்ணவிருத்தம்;

தனதன தனன தனதந்தன 

தனதன தனன தனதந்தன

தனதன தனன தனதந்தன

தனதன தனன தனதந்தன - தனதான)


மணிமுடி தசமும் அதமென்றிட

… வரிசிலை வளைசெய் புயம்வென்றிட

… வழுவறு தருமம் அதுநின்றிட

… மகிழ்வுறும் அமரர் செயவென்றிட - எழுவோனே


வெணெயொடு தயிரும் நனிதின்றிடும்

… விரைகமழ் இதழில் நகைதங்கிட

… விரிகடல் உலகம் மகிழ்பொங்கிட

… வியன்பெரு மலையொர் குடையென்றிடர் - களைவோனே


அணைவுறு பிணிகள் அவைமுந்திட

… அலைவுறும் உடலம் மிகவெந்திட

… அவதியில் உளமும் நிதம்நொந்திட

… அழிவது வருமுன் உனதன்பினை - அருளாயே


அணிகெழு கழலில் உளமொன்றிடும்

… அடியவர் அவர்தம் வினைபொன்றிட

… அரவணை மிசையொர் மலையென்றிட

… அலைபுனல் மருவு தெனரங்கம(து) - உறைவோனே!


(மணிமுடி தசம் = பத்துத் தலை; 

அதம் = நாசம்; 

வளைசெய் = வளைக்கின்ற;

தருமம் அது நின்றிட = தருமம் நிலைத்து நிற்க;

செய என்றிட = செய செய என்று கோஷம் செய்திட;  

விரை கமழ் = மணம் மிகுந்த;

நகை தங்கிட = புன்னகை நிரந்தரமாகக் குடிகொள்ள;

முந்திட = விரைந்து வந்து வாட்டிட; 

அலைவு = துன்பப்படும்; 

அலைபுனல் மருவு = அலைகள் மிகுந்த காவிரி ஆறு சூழ்ந்த; 

தெனரங்கம் = தென்னரங்கம்)

  • இமயவரம்பன்

Siva Siva

unread,
Jun 30, 2025, 11:02:06 AMJun 30
to santhav...@googlegroups.com
அது பட்டினத்து அடிகள் பாடல்.
11.26.15 - கோயில் நான்மணிமாலை
நெறிதரு குழலை அறலென்பர்கள்
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்

See the SV thread - 11.26 - கோயில் நான்மணி மாலை - வண்ணவிருத்தங்கள் - 30-Nov-2024.

Interesting that you chose to have the subpattern repeat 4 times instead of the typical 3 times.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Jun 30, 2025, 9:57:05 PMJun 30
to santhav...@googlegroups.com
Thank you for pointing to the correct information about the author of this நெறிதரு குழலை song.

Yes, looks like 3 times repetition should be enough. Not sure why I chose 4 times.

Regards,
Anand

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 31, 2025, 7:22:48 AMJul 31
to AnandBl...@gmail.com, santhav...@googlegroups.com
திரு. சிவ சிவா அவர்கள்  “வண்ணப் பாடல் - 3” என்னும் இழையில் இட்ட வண்ண விருத்தத்தின் நடையில் அடியேன் எழுத முயன்ற பாடல்.


திருப்பதி (திருவேங்கடம்)

-----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன 

தனத்தன தனத்தன .. தனதான)

(இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணி)


இழிப்புறு பிறப்பொடும் இறப்பெனும் அலைத்திரள்

.. .. இறைத்தெழும் இடர்க்கடல் - உழல்வேனை

.. இறுக்கிடும் வினைக்கொடி அறுத்துயர் வளித்திடும் 

.. .. இணைக்கழல் எனக்கினி(து) - அருளாயோ  


அழைத்திடு கரிக்கருள் அடற்படை சுழற்றியென்

.. .. அகத்துயர் அழித்திட - வருவாயோ

.. அடர்த்திடும் மருட்பகை தடுத்தரண் அளித்திருள்

.. .. அகற்றிடும் விளக்கென  - ஒளிராயோ


மழைக்குடல் நடுக்குறு பசுக்குலம் அளித்திட

.. .. மலைக்குடை எடுத்திடும் - அருளாளா

.. வலத்துயர் அரக்கனொர்  பகைத்தச முகத்தனை

.. .. வதைத்திடு செருக்கிளர் - சிலையாளா


செழிப்புடை மலர்ப்பொழில் வசித்திடும் மணிக்குயில்

.. .. சிலிர்த்திட இசைத்திடு - தமிழ்பாடத்

.. திளைத்திடு மயிற்கண(ம்) நடித்தெழில் நிறைத்திடு

.. .. திருப்பதி மலைத்தலம் - உடையானே.


பதம் பிரித்து:


இழிப்பு உறு பிறப்பொடும் இறப்பு எனும் அலைத்திரள்

.. .. இறைத்து எழும் இடர்க்கடல் - உழல்வேனை

.. இறுக்கிடும் வினைக்கொடி அறுத்து உயர்வு அளித்திடும்

.. .. இணைக்கழல் எனக்கு இனிது - அருளாயோ  


அழைத்திடு கரிக்கு அருள் அடல் படை சுழற்றி என்

.. .. அகத்துயர் அழித்திட - வருவாயோ

.. அடர்த்திடும் மருள் பகை தடுத்து அரண் அளித்து இருள்

.. .. அகற்றிடும் விளக்கென  - ஒளிராயோ


மழைக்கு உடல் நடுக்கு உறு பசுக்குலம் அளித்திட

.. .. மலைக் குடை எடுத்திடும் - அருளாளா

.. வலத்து உயர் அரக்கன் ஒர்  பகைத் தச முகத்தனை

.. .. வதைத்திடு செருக் கிளர் - சிலையாளா


செழிப்பு உடை மலர்ப்பொழில் வசித்திடும் மணிக்குயில்

.. .. சிலிர்த்திட இசைத்திடு - தமிழ்பாடத்

.. திளைத்திடு மயில் கண(ம்) நடித்து எழில் நிறைத்திடு

.. .. திருப்பதி மலைத்தலம் - உடையானே.


பொருள்:

இழிப்புறு = இழிவான;

வினைக்கொடி = கொடி போலப் பற்றிப் படர்வதால் வினைக்கொடி;

அழைத்திடு கரிக்கு அருள் அடல் படை  = அழைத்த யானைக்கு அன்று அருள்செய்த வலிமைவாய்ந்த சக்கரப்படை;

மழைக்கு = மழையினால் (உருபு மயக்கம்);

வலத்து உயர் = வலிமை மிக்க;

பகைத் தசமுகத்தன் = பகைவனாகிய தசமுகத்தன்;

செருக்கிளர் = போரில் பராக்கிரமத்தைக் காட்டும்;

சிலையாளா = வில் வீரனே;

மயில் கணம் = மயில் கூட்டம்;


  • இமயவரம்பன் 

Siva Siva

unread,
Jul 31, 2025, 9:15:19 AMJul 31
to santhav...@googlegroups.com
Very nice and impressive speed.

வினைக்கொடி அறுத்துயர் /

வினைக்கொடி ? வினைக்கயிறு ?

V. Subramanian


Arasi Palaniappan

unread,
Jul 31, 2025, 9:27:04 AMJul 31
to சந்தவசந்தம், இமயவரம்பன்
அருமை.



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 31, 2025, 9:31:39 AMJul 31
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
Thank you, வினைக்கயிறு is a very good suggestion. I’ll note down the change.

On Jul 31, 2025, at 9:15 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 31, 2025, 9:35:52 AMJul 31
to Arasi Palaniappan, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. பழனியப்பன்!

On Jul 31, 2025, at 9:27 AM, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Ram Ramakrishnan

unread,
Jul 31, 2025, 1:54:38 PMJul 31
to santhav...@googlegroups.com
மிக அருமை, திரு. இமயவரம்பன். 

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 31, 2025, 2:11:41 PMJul 31
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ராம்கிராம்! 

On Jul 31, 2025, at 1:54 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Aug 3, 2025, 8:37:19 PMAug 3
to santhav...@googlegroups.com
மூன்றாம் அடியிலும் நான்காம் அடியிலும் சில மாற்றங்கள் (highlighted in bold) கொண்ட முழுப்பாடல்:

இழிப்புறு பிறப்புடன் இறப்பெனும் அலைத்திரள்
.. .. இறைத்தெழும் இடர்க்கடல் - உழல்வேனை
.. இறுக்கிடும் வினைக்கயி றறுத்துயர் வளித்திடும்
.. .. இணைக்கழல் எனக்கினி - தருளாயோ
அழைத்திடு கரிக்கருள் அடற்படை சுழற்றியென்
.. .. அகத்துயர் அழித்திட - வருவாயோ
.. அடர்த்திடும் மருட்பகை தடுத்தரண் அளித்திருள்
.. .. அகற்றிடும் விளக்கென - ஒளிராயோ
மழைக்குடல் நடுக்குறு பசுக்குலம் அளித்திட
.. .. மலைக்குடை எடுத்திடும் - அருளாளா
.. மனத்துறு செருக்குடை மடத்தச முகத்தனை
.. .. வதைத்திடு செருக்கிளர் - சிலையாளா
செழிப்புடை மலர்ப்பொழில் வசித்திடும் இசைக்குயில்
.. .. செவித்தலம் இனிப்புறு - தமிழ்பாடத்
.. திளைத்திடு மயிற்கணம் நடித்தெழில் விளைத்திடு
.. .. திருப்பதி மலைத்தலம் - உடையானே.

இமயவரம்பன்

unread,
Oct 20, 2025, 6:30:22 AM (5 days ago) Oct 20
to santhavasantham

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! 


திருப்பதி (திருவேங்கடம்)


(வண்ணவிருத்தம்;

தனத்தனனத் தனத்தனனத் தனத்தனனத் தனத்தனனத்

.. தனத்தனனத் தனத்தனனத் - தனதான)

(Inspired by Sri SivaSiva’s song on a shorter version of this pattern - 

குலைத்து மயிர் - திருப்புகழ் - திருத்தணிகை)


பொருட்குவையைப் பெருக்கவுழைத் துறக்கமொழித் தலைப்புறுமிப்

.. .. புலைப்பிறவித் தவிப்பறநற் - கதிதேடிப்

.. புனித்தநினைக் குறித்துமனத் திருத்தியருட் கழற்கமலப்

.. .. புணைத்துணைபெற் றிடர்க்கடல்விட் - டகலேனோ 


திருத்தகுமச் சகத்திரமுத் தமிழ்க்கவிதைப் பெருக்கில்மறைச்

.. .. சிறப்பைவிரித் துரைத்தபரற் - கடியேனாய்த்

.. தெளிர்த்தகவிக் கனிச்சுவையிற் றிளைத்துனநற் றனிக்கருணைத்  

.. .. திறத்தைநினைத் தகத்துருகிக் - கரையேனோ


செருக்குடைமற் பகைத்தலைபத் தறுத்துடலைச் சிதைத்துயிரைச்

.. .. செகுத்திடுமற் புதத்தனிவிற் - பெருவீரா

.. செவிக்கமுதைப் புகட்டியுயிர்ப் பளித்துமனக் களிப்பருளிச்  

.. .. செகத்தினரைக் கிறக்குமிசைக் - குழலாளா 


சிரத்தையுறத் துதித்திடுபத் துடைக்கரிபற் றடற்கடுவைச்

.. .. செறுத்திடுசக் கரப்படையைப் - புனைவானே!

.. திரைத்தெழுமச் சமுத்திரம்விட் டிருப்பெனவிச் சகத்துறையத்

.. .. திருப்பதிநற் பொருப்பதனிற் - றிகழ்மாலே!    


பதம் பிரித்து:


பொருள் குவையைப் பெருக்க உழைத்து உறக்கம் ஒழித்து அலைப்பு உறும் இப்

புலைப் பிறவித் தவிப்பு அற நற் - கதி தேடிப்

புனித்த! நினைக் குறித்து மனத்து இருத்தி அருள் கழல் கமலப்

புணைத் துணை பெற்று இடர்க் கடல் விட்டு  - அகலேனோ 


(புனித்த = புனிதனே - விரித்தல் விகாரம்; குறித்து = தியானித்து; புணைத் துணை பெற்று = திருவடிக் கமலங்களான புணைகளின் துணையுடன் அல்லது இணையான(துணை) புணைகளுடன்; அகலேனோ = நீங்க மாட்டேனோ அல்லது கடக்க மாட்டேனோ)


திருத்தகும் அச் சகத்திர முத் தமிழ்க் கவிதைப் பெருக்கில் மறைச்

சிறப்பை விரித்து உரைத்த பரற்கு - அடியேனாய்த்

தெளிர்த்த கவிக் கனிச் சுவையில் திளைத்து உன நல் தனிக் கருணைத்  

திறத்தை நினைத்து அகத்து உருகிக் - கரையேனோ


(திருத்தகும் = தூய்மையான; சகத்திர முத்தமிழ் = ஆயிரம் முத்தமிழ் - திருவாய்மொழி;  பரற்கு = பரனுக்கு- நம்மாழ்வாருக்கு; தெளிர்த்த = ஒலித்த; உன = உனது; திறத்தை = தன்மையை;)


செருக்கு உடை மல் பகைத் தலை பத்து அறுத்து உடலைச் சிதைத்து உயிரைச்

செகுத்திடும் அற்புதத் தனி வில் - பெருவீரா!

செவிக்கு அமுதைப் புகட்டி உயிர்ப்பு அளித்து மனக் களிப்பு அருளிச்    

செகத்தினரைக் கிறக்கும் இசைக் - குழலாளா! 


(மல் = வலிமை வாய்ந்த; செகுத்திடும் = கொன்றிடும்;)


சிரத்தை உறத் துதித்திடு பத்து உடைக் கரி பற்று அடல் கடுவைச்

செறுத்திடு சக்கரப் படையைப் - புனைவானே!

திரைத்து எழும் அச் சமுத்திரம் விட்டு  இருப்பு என இச் சகத்து உறையத்

திருப்பதி நல் பொருப்பு அதனில் - திகழ்மாலே!  


(பத்து = பக்தி என்பதன் தமிழாக்கம்; அடல் கடு = வலிமை பொருந்திய முதலை:; செறுத்து = அழித்து; புனைவானே = தரிப்பவனே; திரைத்து எழும் = அலை வீசும்; சமுத்திரம் = திருப்பாற்கடல்; விட்டு = வைகுந்தத்தை விட்டு அகன்று; இருப்பு என = தனது இருப்பிடம் என்று திருவுள்ளம் கொண்டு; சகத்து உறைய = பூலோகத்துக்கு எழுந்தருளி வாசம் செய்ய ; பொருப்பு = மலை)


  • இமயவரம்பன்

Siva Siva

unread,
Oct 20, 2025, 9:35:07 AM (4 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
1.
/யருட் கழற்கமலப்
.. .. புணைத்துணைபெற் றிடர்க்கடல்விட் - டகலேனோ /

Nice phrasing.

2.
சகத்திர முத்தமிழ் = ஆயிரம் .../

சஹஸ்ரம் - சகச்சிரம் / சகத்திரம்  - என்று வருவது அறிந்தேன்.

3.
சக் கரப்படையைப் - புனைவானே! /

புனைதல் - அணிதல் / தொடுத்தல் என்ற பொருள்களில் பொதுவாக வரும்.
சக் கரப்படைவிட் டருள்வோனே - may possibly fit .

V. Subramanian

Arasi Palaniappan

unread,
Oct 20, 2025, 10:01:07 AM (4 days ago) Oct 20
to சந்தவசந்தம்
அற்புதம்!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Imayavaramban

unread,
Oct 20, 2025, 12:04:18 PM (4 days ago) Oct 20
to சந்தவசந்தம்
Thank you, 
I originally wrote : "சக் கரப்படையுய்த்(து)- எறிவோனே! "
உய்த்து = செலுத்தி
Let me rephrase it as " சக் கரப்படையுய்த்(து) - அருள்வோனே!"

Imayavaramban

unread,
Oct 20, 2025, 12:04:36 PM (4 days ago) Oct 20
to சந்தவசந்தம்
மிக்க நன்றி!

இமயவரம்பன்

unread,
Oct 20, 2025, 9:58:40 PM (4 days ago) Oct 20
to santhav...@googlegroups.com

(வண்ணவிருத்தம்;

தனத்தானத் தானனத் .. தனதான)


(“வண்ணப் பாடல் - 3” என்னும் இழையில் திரு. சிவசிவா அவர்கள் இட்ட சந்தக் குழிப்பின் படி எழுதியது)


திருச்சேறை - சாரநாத பெருமாள் கோயில்


தனக்காகப் பாரினிற் .. சுகம்நாடும்

.. சழக்காரைப் போலெனைக் .. கருதாதே

தினச்சோறற் றார்தமக் .. குணவீயும்

.. சிறப்பார்நற் பேறெனக் .. கருளாயோ

சினப்போரிற் பேரருட் .. குருவாகிச்

.. செயற்காகக் கீதையைப் .. பகர்வோனே

புனைச்சோலைக் காமிகுத் .. தெழிலாரும்

.. புகழ்ச்சேறைக் கோவிலிற் .. பொலிவோனே!  


பதம் பிரித்து:


தனக்காகப் பாரினில் .. சுகம் நாடும்

.. சழக்காரைப் போல் எனைக் .. கருதாதே

தினச்சோறு அற்றார் தமக்கு .. உணவு ஈயும்

.. சிறப்பு ஆர் நற் பேறு எனக்கு.. அருளாயோ

சினப் போரில் பேர் அருள் .. குருவாகிச்

.. செயற்காகக் கீதையைப் .. பகர்வோனே

புனைச் சோலைக் கா மிகுத்து .. எழிலாரும்

.. புகழ்ச் சேறைக் கோவிலில் .. பொலிவோனே!  


(சழக்கார் = குற்றமுள்ளவர்கள்; தினச்சோறு அற்றார் = அன்றாடம் உண்ண உணவு இல்லாத வறியவர்கள்;  செயற்காக = ஜெயனுக்காக = அருச்சுனனுக்காக; புனை = புன்னை; சோலைக் கா  = ஒருபொருட்பன்மொழி; சேறை = திருச்சேறை;) 

  • இமயவரம்பன் 

Siva Siva

unread,
Oct 20, 2025, 11:04:08 PM (4 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
Nice.

V. Subramanian

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2025, 11:07:18 PM (4 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
அருமை 

  —தில்லைவேந்தன்

இமயவரம்பன்

unread,
Oct 21, 2025, 6:52:30 AM (4 days ago) Oct 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி 

On Oct 20, 2025, at 11:04 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:



இமயவரம்பன்

unread,
Oct 21, 2025, 6:53:00 AM (4 days ago) Oct 21
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிக்க நன்றி , திரு. தில்லைவேந்தன் 

On Oct 20, 2025, at 11:07 PM, NATARAJAN RAMASESHAN <chrome...@gmail.com> wrote:


அருமை 

  —தில்லைவேந்தன்

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/TCGHt5ITxn0/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hhUR1E_%3DCfv8zLCrtg4t9oL3nH7H7LUuiA6uTXAdEX-mg%40mail.gmail.com.

இமயவரம்பன்

unread,
1:34 PM (6 hours ago) 1:34 PM
to santhavasantham

பொது

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தந்தந் தனத்தத் தந்தந்

தனத்தத் தந்தந் .. தனதான)


பருக்கத் தின்றிங் கிரக்கற் றென்றும் 

.. .. பகைத்துக் கொண்டிங் - கிழியாதே

.. பகட்டைக் கொன்றன் பகத்திற் கொண்டுன் 

.. .. பதத்திற் றஞ்சம் - புகுவேனோ


கரப்புற் றஞ்சம் புகைத்துச் சிண்டும்  

.. .. கருப்புக் கென்றும் - பணியாதே

.. கனிப்புக் கொஞ்சுந் தமிழ்ச்சொற் கொண்டுன் 

.. .. கழற்பொற் கஞ்சம் - புகழேனோ


செருக்கிற் றம்பந் தகர்த்துத் தங்கன் 

.. .. சிரிக்கப் பொங்குந் - தெரிமாவாய்ச்   

.. சினத்துச் செங்கண் சொலிப்புற் றங்கஞ்

.. .. செகுத்துப் பங்கம் - புரிவோனே


செருப்புக் கங்கஞ் சிரட்டித் தொன்றும் 

.. .. சிரத்தைச் சிந்தும் - சிலையானே

.. செபிக்கத் துன்பம் தடுத்திட் டென்றும்

.. .. செகத்திற் கின்பம் - தருமாலே



பதம் பிரித்து:

பருக்கத் தின்று இங்கு இரக்கு அற்று என்றும் 

.. .. பகைத்துக் கொண்டு இங்கு - இழியாதே

.. பகட்டைக் கொன்று அன்பு அகத்தில் கொண்டு உன் 

.. .. பதத்தில் தஞ்சம் - புகுவேனோ


(இரக்கு = இரக்கம்)


கரப்பு உற்று அஞ்சு அம்பு  உகைத்துக் சிண்டும்   

.. .. கருப்புக்கு என்றும் - பணியாதே

.. கனிப்புக் கொஞ்சும் தமிழ்ச்சொல் கொண்டு உன் 

.. .. கழல் பொன் கஞ்சம் - புகழேனோ


(கரப்பு உற்று = மறைந்திருந்து; அஞ்சு அம்பு = மன்மதனின் ஐந்து மலர்க் கணைகள்; உகைத்து = செலுத்தி; சிண்டும் = மனத்தைச் சீண்டும்; கருப்புக்கு = கரும்புக்கு = கரும்பு வில்லுக்கு; கனிப்பு = இனிமை;கஞ்சம் = தாமரை; )


செருக்கில் தம்பம் தகர்த்துத் தங்கன் 

.. .. சிரிக்கப் பொங்கும் - தெரிமாவாய்ச்   

.. சினத்துச் செங்கண் சொலிப்பு உற்று அங்கம்

.. .. செகுத்துப் பங்கம் - புரிவோனே


(தம்பம் = தூண்; தங்கன் = இரணியன் என்பதன் தமிழாக்கம்; தெரிமா = சிங்கம்; சொலிப்பு = ஜொலிப்பு = ஒளிவீச்சு; அங்கம் = (இரணியனது) உடல்; செகுத்து = கொன்று; பங்கம் = பிளவு அல்லது கர்வத்தை அடக்குதல்; அங்கம் செகுத்துப் பங்கம் புரிவானே = பங்கம் புரிந்து அங்கம் செகுப்பானே என்று பொருள் கொள்ளவும்)


செருப் புக்கு அங்கு அஞ்சு இரட்டித்து ஒன்றும் 

.. .. சிரத்தைச் சிந்தும் - சிலையானே

.. செபிக்கத் துன்பம் தடுத்திட்டு என்றும்

.. .. செகத்திற்கு இன்பம் - தருமாலே


(செருப் புக்கு = போரில் புகுந்து; அஞ்சு இரட்டித்து ஒன்றும் சிரம் = ஐயிரண்டாய் இருந்தும் ஒன்றுபோல் இயங்கும் தலை; 

சிந்தும் = சாயச் செய்யும்; சிலையானே = வில்லாளனே; செபிக்க = ஜெபம் செய்ய;)


  • இமயவரம்பன்

Siva Siva

unread,
2:16 PM (5 hours ago) 2:16 PM
to santhav...@googlegroups.com
Appreciate your interest and effort !
How was the experience of writing to this pattern?

See one comment below.

V. Subramanian


On Fri, Oct 24, 2025 at 1:34 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

பொது

----------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத் தந்தந் தனத்தத் தந்தந்

தனத்தத் தந்தந் .. தனதான)


பருக்கத் தின்றிங் கிரக்கற் றென்றும் 

.. .. பகைத்துக் கொண்டிங் - கிழியாதே

.. பகட்டைக் கொன்றன் பகத்திற் கொண்டுன் 

.. .. பதத்திற் றஞ்சம் - புகுவேனோ


==> இங்கு - comes twice. maybe ok?

இமயவரம்பன்

unread,
2:53 PM (5 hours ago) 2:53 PM
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com

Thank you so much for your kind appreciation! As always, your song in the other thread was my inspiration!


This one was quite challenging — I had to revise it several times before arriving at the final version of the song. But the process helped me thoroughly revisit all the புணர்ச்சி and சந்த விதிகள், keeping me engaged as if solving a puzzle 🙂


Also, thank you for noticing the repetition! I’d like to modify the first line as follows:


பருக்கத் தின்றிங் கிரக்கற் றென்றும்

.. .. பகைக்குற் றங்கொண் - டிழியாதே

(பகைக்குற்றம் = பகைமையாகிய குற்றம்)


On Oct 24, 2025, at 2:16 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Appreciate your interest and effort !
How was the experience of writing to this pattern?

See one comment below.

V. Subramanian


On Fri, Oct 24, 2025 at 1:34 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

பருக்கத் தின்றிங் கிரக்கற் றென்றும் 

.. .. பகைத்துக் கொண்டிங் - கிழியாதே


Reply all
Reply to author
Forward
0 new messages