***********************************************************************************************************
நீ பிறக்க
தாய் தந்தை
ஆற்றினர் ஒருவினை ;
உன் வருகைக்காக
இறைவன் திறந்தான் ஒரு கருவினை ;
பிறந்த பின்
நீ ஆற்றத்
தொடங்கினாய் பல வினை ;
பயன் தந்திருக்கும் சில வினை ;
பயன் தந்திருக்காது சில வினை;
நண்பர்களே !!
நான் இப்போது
வாசிக்கப் போகிறேன்
நானெழுதிய பாவினை ;
உன் சிந்தனையில் சூடு
நான் தொடுக்கும் கவிதைப் பூவினை ;
ஆற்று ஒரு வினை ; பரவாயில்லை
ஆனால் ஆகட்டும் அந்த ஒருவினை ஓர் அருவினை;
அருவினை செய்து செய்து
பெருக்கு உன் திருவினை ;
நாள்தோறும் செய் வினை ;
யாருக்கும் வைத்துவிடாதே செய்வினை ;
அவ்வினை செய்யினும்
இவ்வினை செய்யினும்
எவ்வினை செய்யினும்
செய்யாதே நீ வெவ்வினை;
செய் நீ எப்போதும் செவ்வினை ;
பட்டை தீட்டு
உன் அறிவினை ;
படித்துப் படித்துக்
கூராக்கு அதன் செறிவினை ;
நித்தமும் பேண்
உன் உறவினை ;
உன் உறவுகளோடு
தவிர் முறிவினை ;
உதவி கேட்டு வருவோர்க்கு
செய் கர வினை ;
வினை பல செய்யினும்
செய்யாமல் இருக்காதே அற வினை ;
அரியர்ஸ் வந்தாலும்
தைரியமாய் எழுது நீ தேர்வினை ;
அப்போது அருகே வந்தால்
எட்டி உதை அந்தச் சோர்வினை ;
அதன் பின் காண்பாய்
உன் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வினை ;
துன்பம் வந்தால்
செய் துன்பத்திற்கோர் முடிவினை ;
அப்போது காண்பாய் வாழ்வில்
ஓர் விடிவினை ;
குறை உன் செலவினை ;
கூட்டு உன் வரவினை ;
செம்மையாக்கு உன் வடிவினை ;
உள்ளத்தால் அழகாக்கு உன் உருவினை ;
விழுந்தாலும் பொருட்டாக
மதிக்காதே உன் சரிவினை ;
சரியும் போது
நினை உன் உயர்வினை ;
அறவே போக்கு உன் அயர்வினை ;
முயன்று முயன்று
முயன்று முயன்று பார்த்தால்
ஓடும் உன் ஊழ்வினை ;
ஊழ்வினையை அழித்து
வளமாக்கு உன் வாழ்வினை ;
வாழ்வினை வளமாக்கினால்
வெல்வாய் நீ சாவினை ;
ஆகா ஆகா.. மிக மிக அருமை.. ஐயா வாலி எழுதி படித்ததைப்போல் நடையழகும் அர்த்த செறிவோடும் அற்புதமாகயிருந்தது திரு. நிரஞ்சன். வாழ்த்துக்கள். மகாகவியை நினைவுகூர்ந்துச் செய்தமை மேலும் சிறப்பு. நன்றி. வணக்கம்..வித்யாசாகர்
தவறுக்கு மன்னிக்கவும்
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.