10 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Jun 12, 2026, 10:05:34 PM (4 days ago) Jun 12
to santhavasantham
image.png

            வானிலொரு வண்ண ஓவியம்

 

காலமாச் செல்வி கையால்
     கச்சித மாக அந்த
நீலவான் மேல்தெ ளித்த
      நேரொளி வண்ணத் திட்டோ
சாலவே மீன்கள் சேரும்
      தருணமே நோக்கி அங்கே
தூலமாய்ச் சுறாமீன் ஒன்று
      சுற்றுதோ வான் கடற்குள்

(தூலம்- கண்ணுக்குத் தெரியுமாப்போல்)

 

கதிரவன் மேற்குப் பக்கக்
      கதவினைத் திறந்து கொண்டு
விதிமுறை யாகக் கீழே
      விரைந்திட வான மங்கை
சதிரினை நடத்திச் செல்லும்
      தலைவனை வாழ்த்தி விண்மீன்
உதிரிகள் தமைக் கொணர்ந்தே
      உலாவிடப் பார்க்கின்றாளோ?

 

இலந்தை

Siva Siva

unread,
Jun 12, 2026, 11:40:39 PM (3 days ago) Jun 12
to santhav...@googlegroups.com
Nice.
மேகத்தின் வடிவில் சுறாமீனைக் கண்டது நன்று.

V. Subramanian

Ram Ramakrishnan

unread,
Jun 13, 2026, 8:34:11 AM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jun 12, 2026, at 23:40, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPgcfXoZJEBEaz9YtkJeegL34te_64REgtt3F%3DWzTfUOg%40mail.gmail.com.

Kaviyogi Vedham

unread,
Jun 13, 2026, 11:05:25 AM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com

Arasi Palaniappan

unread,
Jun 13, 2026, 4:46:42 PM (3 days ago) Jun 13
to சந்தவசந்தம்
கற்றநல்  ஆற்ற லாலோ?
     காட்சியைக் கண்டு நெஞ்சில் 
உற்றதால் வந்த தோஇவ்
    வுயரிய பாடல்? சேயைப் 
பெற்றதாய் கருவில் வாய்த்த 
        பே(று)இதோ? சுப்பை யர்தம் 
நற்றவத் தாலே வந்த 
     நலமிதோ? திகைக்கின் றேன்நான்!

அகவையால் முதிர்ந்த போதும் 
     ஆக்கத்தில் இளமை காட்டும் 
தகவினைத் தந்த வர்யார்?
       தண்டமிழ் யாப்(பு)உள் வாங்கி 
அகப்பையால் தாங்கி, யாரும் 
       அவர்மூக்கில் விரலைச் சேர்க்க
மிகச்சிறந்(து) ஓங்கும் 
பாச்செய்  
      வித்தகம் இறைய ருள்தான்!

வணங்கிப் போற்றும் 
அரசி. பழனியப்பன்  
      
       






--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jun 13, 2026, 6:40:17 PM (3 days ago) Jun 13
to santhav...@googlegroups.com
அடாடா, மிக அருமை.

இலந்தை

Arasi Palaniappan

unread,
Jun 13, 2026, 6:54:37 PM (3 days ago) Jun 13
to சந்தவசந்தம்
மிக்க நன்றி தலைவரே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages