அனந்த்
அனைவருக்கும் நமஸ்காரம். பின்வரும் பாடல் பிள்ளையவர்கள் வாக்கிற் பிறந்தவொன்று; திருக்கற்குடிமாமலையில் உள்ள சிவபெருமான் விஷயமானது. சிவசிவா அவர்கள் இட்ட செய்யுளில் உள்ள "நஞ்சு உண்டற்கு ஒளியானை" என்னுங் கருத்து இதிலும் பிரதிபலித்தலைக் காண்க.
2008-06-08
வேறு ஒரு குழுவில் "தமிழன்னை" என்ற புனைபெயரில்
எழுதுபவர் ஆணா பெண்ணா என்ற கேள்வி எழுந்ததை ஒட்டி
எழுதிய பாடல்.
சங்கை - உளதே
-------------------------------------------------
சங்கை அணிமுன் கரமாதா? தான்ஏந்தும்
சங்கை அணிமுன் முழங்(கு)ஆணா? - சங்கை
உளதே; தமிழன்னை உண்மையிலார்?! பூதகணம்
உளதே உரைத்தால்தான் உண்டு!
சற்றுத் திருத்தி அமைத்து:
சங்கை அணிமுன் கரமாதா? தான்ஏந்தும்
சங்கை அணிமுன் முழக்(கு)ஆணா? - சங்கை
உளதே; தமிழன்னை உண்மையிலார்?! முக்கண்
உளதே உரைத்தால்தான் உண்டு!
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-06-19
மண்மிசை - உள்ளார்
----------------------------
மண்மிசை மால்மலரோன் காணாத மாநெருப்பாய்
மண்மிசை தாண்டி வளர்இறையை - மண்மிசை
உள்ளார் வழிபட்டால் உய்வார் ஒருநாளும்
உள்ளார் துவள்வார் உழன்று.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சற்றுத் திருத்தி அமைத்து:
சங்கை அணிமுன் கரமாதா? தான்ஏந்தும்சங்கை அணிமுன் முழக்(கு)ஆணா? - சங்கை
உளதே; தமிழன்னை உண்மையிலார்?! முக்கண்உளதே உரைத்தால்தான் உண்டு!
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
(*'ஏகபத்னி, ஏகபாணம், ஏகவாக்கு' என்று வடமொழியில் இராமனைப் பற்றிப் புழங்கும் புகழுரை
நாணயம்= நேர்மை; காசு; நாண்ணயம்=நாண்நயம், நாணேற்றூம் நுண்மை; நாநயக்கும்=நாம்நயக்கும்; நயக்கும்=விரும்பும்; நயம்=மேன்மை, நுண்மை, பயன்)
..அனந்த்
22-6-2008
2008-06-22
காசினி வேண்டாரைக் கண்டார் உளரோஇக்
காசினி மீது, கழறு.
காசினி - பூமி; / காசு இனி
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
நாணயமும் நாண்ணயமும் நாநயமும்; நாநயக்கும்
நாணயமும் ஆமோ நயம்.
நாணயமும் நாண்ணயமும் நாநயமும்; நாநயக்கும்
நாணயமும் ஆமோ நயம்.
..அனந்த்
23-6-2008 (posted 5-7-2008)
சற்றுத் திருத்தி:
2008-06-19
மண்மிசை - உள்ளார்
----------------------------
மண்மிசை மால்மலரோன் காணாத மாநெருப்பாய்
மண்மிசை தாண்டி வளர்இறையை - மண்மிசை
உள்ளார் வழிபட்டால் உய்வார் ஒருநாளும்
உள்ளார் துவள்வார் உழன்று.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம் பிரித்து:
குறளை மொழிபவர் சொல் கொள்ளாது, நெஞ்சே,
குறளை உணர்ந்(து), அயனோடு - குறள் ஐ
"அருளாயே" என்று தொழும் அச்சுடரை, நீயும்
"அருள் ஆயே" என்பாய் அமர்ந்து.
குறளை - கோட் சொல் (calumny, aspersion, backbiting); நிந்தனை (sarcastic expressions, censure, reproach);
கொள்ளுதல் - கருதுதல்; மதித்தல்; பொருட்படுத்துதல்;
குறள் - திருக்குறள்; குறுமை ( shortness, dwarfishness); சிறுமை (smallness);
ஐ - தலைவன்;
குறள் ஐ - வாமன உருவில் வந்த திருமால்;
அயன் - பிரமன்;
ஆய் - தாய்;
அமர்தல் - விரும்புதல்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-08-26
குறளை - அருளாயே
------------------------------------------
குறளை மொழிபவர்சொல் கொள்ளாது நெஞ்சே
குறளை உணர்ந்தய னோடு - குறளை
அருளாயே என்றுதொழும் அச்சுடரை நீயும்
அருளாயே என்பாய் அமர்ந்து.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-12-05
எப்படி ஏத்துவேன்
------------------------
('விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)
நித்தனை நித்தனை மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா
அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்
சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாய்ச் செய்து காட்டும்
எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அனந்த்
On Dec 5, 8:49 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-12-05
> எப்படி ஏத்துவேன்
> ------------------------
> ('விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)
>
> நித்தனை நித்தனை மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா
> அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்
> சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாய்ச் செய்து காட்டும்
> எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/8/29 Siva Siva nayanm...@gmail.com
>
>
>
> --http://www.geocities.com/nayanmars
இலக்கண ஐயம்:
கை, பை, செய், நெய், பொய், போன்ற சொற்களுக்குப் பின் மெல்லினத்தில் தொடங்கும் சொல் வரின், அம்மெல்லினம் மிகும். (கைம்மா, பொய்ஞ்ஞானம், மெய்ந்நெறி,,).
இது வினைத்தொகைக்கும் பொருந்துமா?
தேடியதில், 'பெய்ம்மழை', 'பெய்ம்மாமுகில்', 'காதல்செய்ம் முறைமை' (அன்பினால் செய்திடும் வழிபாட்டினை) போன்றன தென்பட்டன.
"நை + மனம்" என்ற வினைத்தொகை 'நைம்மனம்' என்றுதான் வரவேண்டுமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
அருமை! படித்துப் படித்து மகிழ்ந்தேன்.
அனந்த்
On Dec 5, 8:49 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-12-05
> எப்படி ஏத்துவேன்
> ------------------------
> ('விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)
>
> நித்தனை நித்தனை மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா
> அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்
> சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாய்ச் செய்து காட்டும்
> எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
2008-12-06
மதியணி மன்னவர் - (மடக்கு)
----------------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு)
ஏற்றார் ஏற்றார் எரிக்கும் நஞ்சை இன்னமு தாய்ச்சடையில்
ஆற்றார் ஆற்றார் பணிகள் அயன்மால் அடிமுடி தேடியன்னார்
தோற்றார் தோற்றார் நம்மை மீண்டும் தொழாதவர் தலைவிதியை
மாற்றார் மாற்றார் புரங்கள் எரித்த மதியணி மன்னவரே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2008-12-05
எப்படி ஏத்துவேன்
------------------------
('விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)
நித்தனை நித்தனை மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா
அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்
சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாய்ச் செய்து காட்டும்
எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று -என்பான் பொய்யா மொழியான்.
எனினும் சொல்மீது கொண்ட காதலால் நானும் கிறுக்கத் தொடங்கிவிட்டேன்.
இதுவரை பெரியோர் யாருர் "நீ ஏன் எழுதுகிறாய்? இப்படி எழுதித் தமிழை ஏன்
சீரழிக்கிறாய்?" என்றுக் கேட்காத கரணியத்தால் துணிவுடன் எழுதுவதைத்
தொடர்ந்து வருகிறேன். (துணிவோடு என்றுக் கூறியதற்குக் கரணியம்
புதிதுபுதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற தேடல்
இருப்பதால்.)
என் அகவைக்கு ஏற்றாற் போல் நானும் மடக்கி எழுதியுள்ளேன். பிழையிருப்பின்
ஆன்றோர்கள் சுட்டுவீர்களாக:-
பாலும் கசக்கப் பழம்புளிக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலும்இப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!
இது மடக்கணியில் சேருமா? சேருமென்றால் எவ்வகையில்?
பூக்காடு நேர்தமிழைப் போற்றிப்பாத் தென்ற(ல்)செயும்
பாக்காடு தான்காடு மற்றெல்லாம் -சாக்காடு
தீக்காடு முட்காடு சீக்காடு முக்காடு
நோக்காடு மற்றரைவேக் காடு!
பாடலின் பொருள்:- சிங்கையில் காடு காடு என்று ஒருவரைச் செல்லமாக
அழைப்பார்கள். ஆயினும் அக்காடு வறண்ட காடு. ஆதலால்
என்னாசானாகிய பாத்தென்றல் .முருகடியானின் பாக்காடுதான் காடு மற்றைய
காடெல்லாம் சாக்காடு சீக்காடு( சீக்குகொண்ட ஆடு) முக்காடு (தலையில்
போர்த்திக் கொள்வது) நோக்காடு (நோய்) மற்றரைவேக் காடு (மற்றும்
அரைவேக்காடு) இச்சொற்களில் எல்லாம் காடு என்று வந்திருப்பினும்
இவையெல்லாம் காடு (வனம்) ஆகாதல்லவா? அப்படியே இவையெல்லாம் காடு ஆனாலும்
அவை வெறும் தீக்காடு முட்காடு( தீப்பிடித்த காடு மற்றும் முள் நிறைந்த
காடுதானே!) என்பது போருள்.
இதில் எனக்கோர் ஐயம். அதாவது:- மற்றும் அரைவேக்காடு இச்சொல்லைப்
புணர்ந்து "மற்றரைவேக்காடு" எனக் கூறல் இலக்கணப்படி சரியா?
இது மடக்கணியில் சேருமா?
அகரம்.அமுதா
On Dec 8, 11:31 am, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008-12-06
> மதியணி மன்னவர் - (மடக்கு)
> ----------------------------------------
> (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா விளம் காய்' என்ற வாய்பாடு)
>
> ஏற்றார் ஏற்றார் எரிக்கும் நஞ்சை இன்னமு தாய்ச்சடையில்
> ஆற்றார் ஆற்றார் பணிகள் அயன்மால் அடிமுடி தேடியன்னார்
> தோற்றார் தோற்றார் நம்மை மீண்டும் தொழாதவர் தலைவிதியை
> மாற்றார் மாற்றார் புரங்கள் எரித்த மதியணி மன்னவரே.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2008/12/5 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
>
>
> > 2008-12-05
> > எப்படி ஏத்துவேன்
> > ------------------------
> > ('விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)
>
> > நித்தனை நித்தனை மனத்தொடு வணங்குவார் நிழல்போல் நீங்கா
> > அத்தனை அத்தனை அமரரின் தலைவனை அன்பு செய்வார்
> > சித்தனைச் சித்தனை நரிகளைப் பரிகளாய்ச் செய்து காட்டும்
> > எத்தனை எத்தனை அருளனை எப்படி ஏத்து வேனே.
>
> > அன்புடன்,
> > வி. சுப்பிரமணியன்
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
þÐ ¦º¡ü¦À¡Õû À¢ýÅÕ¿¢¨Ä «½¢
þÄó¨¾
soRporuL pinvarunilaiyaNiஆஃகா! மடக்கணியில் நூற்றேழு வகைகள் உண்டா? இங்கு ஒவ்வொருவரும் தத்தம்
பேரறிவிற்கேற்ப மடக்கணியை மடக்கி மடக்கிச் சூறாவளியைப் போலே
சுழன்றடித்திருக்கிறீர்கள்.
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று -என்பான் பொய்யா மொழியான்.
எனினும் சொல்மீது கொண்ட காதலால் நானும் கிறுக்கத் தொடங்கிவிட்டேன்.
இதுவரை பெரியோர் யாருர் "நீ ஏன் எழுதுகிறாய்? இப்படி எழுதித் தமிழை ஏன்
சீரழிக்கிறாய்?" என்றுக் கேட்காத கரணியத்தால் துணிவுடன் எழுதுவதைத்
தொடர்ந்து வருகிறேன். (துணிவோடு என்றுக் கூறியதற்குக் கரணியம்
புதிதுபுதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற தேடல்
இருப்பதால்.)
என் அகவைக்கு ஏற்றாற் போல் நானும் மடக்கி எழுதியுள்ளேன். பிழையிருப்பின்
ஆன்றோர்கள் சுட்டுவீர்களாக:-
பாலும் கசக்கப் பழம்புளிக்க வேறெதன்
பாலும் இளநெஞ்சம் பாயாதப் -பாலும்இப்
பாலும் இடம்பெயராப் பார்வைஎன் பார்வையைப்பெண்
பாலும் பருகலுற்றாள் பார்த்து!
இது மடக்கணியில் சேருமா? சேருமென்றால் எவ்வகையில்?
1) பால் = பசுவின் பால், பக்கம் என்ற இரு பொருள்களில்தானே வருகிறது?
ஆம்.
2) 'பால் புளிக்கப் பழம்கசக்க" என்றால் இன்னும் பொருந்துமோ?
பொருத்தமாயிருக்கிறது. அப்படியே மாற்றிவிடலாம்
3) பெண்பால் - இங்கே பொருள் எனக்குத் தெளிவாகவில்லை.
இவ்விடத்தில் பால் என்பது இனத்தைக்குறிக்கிறது. அதாவது "பெண்ணினமாகிய
இவளும் என்பார்வையைப் பருகச்செய்தாள்" என்பதாம்.
On Dec 9, 10:32 pm, "Siva Siva" <nayanm...@gmail.com> wrote:
> 2008/12/8 agramamutha <agramamuth...@gmail.com>
> > > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/-Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> --http://www.geocities.com/nayanmars
> 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
முன்
இட்ட பாடலைப் பதம் பிரித்து
மீண்டும்:
பதம்
பிரித்து:
ஏற்றார்;
ஏற்றார்
எரிக்கும் நஞ்சை இன் அமுதாய்ச்;
சடையில்
ஆற்றார்;
ஆற்றார்
பணிகள் அயன் மால்;
அடி
முடி தேடி அன்னார்
தோற்றார்;
தோற்றார்
நம்மை மீண்டும்;
தொழாதவர்
தலைவிதியை
மாற்றார்;
மாற்றார்
புரங்கள் எரித்த மதி அணி
மன்னவரே.
ஏற்றார்
-
ஏற்றினை
ஊர்தியாக உடையவர்;
/ ஏற்றுக்கொண்டார்;
ஆற்றார்
-
கங்கை
ஆற்றை உடையவர்;
/ செய்யமாட்டார்;
தோற்றார்
-
தோல்வி
அடைந்தார்;
/ பிறப்பிக்கமாட்டார்;
மாற்றார்
-
மாற்றமாட்டார்;
/ பகைவர்;
மன்னவர்
-
என்றும்
நிலைத்து இருப்பவர்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
இங்ஙனம்
நகுபோலியன் விசிறிகள் மன்றத்தின் (ஒரே) உறுப்பினர்
2008-12-29
புகல்
நீயே -
(மடக்கு)
------------------------------
('விளம்
விளம் மா காய்'
என்ற
அரையடி வாய்பாடு)
ஐங்கணை
யாலிடை யூறு செய்தவனை
..
அன்றெரித்
துப்பொடி யாகச் செய்தவனை
அங்கொரு
மாலையாய்ப் பாம்பை யணியானை
..
அதனுரி
போர்த்துநல் பட்டை யணியானை
எங்கணும்
மாலயன் தேடு மொளிவானை
..
இருநிலத்
தைக்கடந் தாலு மொளிவானை
அங்கணா
உமையொரு பங்கா புகல்நீயே
..
அருள்புரி
வாயென நாவே புகல்நீயே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
> மடக்கைப் பற்றி விரிவாகக் காணலாம் என்று முன்பு எழுதியிருந்தேன்.docx
On May 14, 7:11 am, "SUBBAIER RAMASAMI" <eland...@gmail.com> wrote:
> மடக்கைப்பற்றி விரிவாக எழுதுவதாக முன்பு சொல்லியிருந்தேன்.
> இதோ அது:
>
> இலந்தை
>
> 19KDownload
--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
PDF வடிவில் அளித்தால் எளிதாக இருக்கும். WORD வடிவில் Font இல்லாததால் படிக்க இயலவில்லை.
2009/5/8 Siva Siva <naya...@gmail.com>
அரிச்சந்திர புராணத்தில் மடக்கு - MS-Word file attached.
http://www.tamilvu.org/library/l3900/html/l3900fir.htm
The document was in unicode. As requested, it is now attached in pdf.
2009/5/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
PDF வடிவில் அளித்தால் எளிதாக இருக்கும். WORD வடிவில் Font இல்லாததால் படிக்க இயலவில்லை.
2009/5/8 Siva Siva <naya...@gmail.com>
அரிச்சந்திர புராணத்தில் மடக்கு - MS-Word file attached.
http://www.tamilvu.org/library/l3900/html/l3900fir.htm
நடமாடி மகிழ்ந்திடுவாய் நீதான் நானோ
.. நடமாட இயலாமல் நலிந்து நிற்பேன்
இடமாக இறைவியைநீ ஏற்பாய் நானோ
.. இடமாகத் தீமைக்கே ஈவேன் நெஞ்சை
விடமுண்டு புரப்பாய்நீ வையம் எற்கும்
.. விடமுண்(டு) சொல்லில்ஊர் வெறுக்கும் வண்ணம்
உடனென்னைக் காப்பாற்ற வருவாய் உன்றன்
.. உடனென்னைச் சேர்க்கில்நான் உய்வேன் ஐயே!
அனந்த்
9-5-2009
தரவு கொச்சகக் கலிப்பா (காய் காய் காய் காய்) வகையில் ஒரு மடக்கு பாடலை முயன்று இடுகிறேன். தவறு இருப்பின் தயவு செய்து சுட்டவும்.
2009-12-30
இழுக்குமொழி
-
நஞ்சுகந்தான்
-
மடக்கு
------------------------------------------------------
இழுக்குமொழி
பேசுவிழிப் பெண்களையும்
என்றும்
இழுக்குமொழி
சொல்வோர்கூட் டென்னும் -
இழுக்குமொழி
நஞ்சுகந்தான்
தாளிணையை நாளும்
தொழுநிலைக்கும்
நஞ்சுகந்தான்
தீரும் நலிவு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2008-12-29
புகல் நீயே - (மடக்கு)
------------------------------
('விளம் விளம் மா காய்' என்ற அரையடி வாய்பாடு)
ஐங்கணை யாலிடை யூறு செய்தவனை
.. அன்றெரித் துப்பொடி யாகச் செய்தவனை
அங்கொரு மாலையாய்ப் பாம்பை யணியானை
.. அதனுரி போர்த்துநல் பட்டை யணியானை
எங்கணும் மாலயன் தேடு மொளிவானை
.. இருநிலத் தைக்கடந் தாலு மொளிவானை
அங்கணா உமையொரு பங்கா புகல்நீயே
.. அருள்புரி வாயென நாவே புகல்நீயே.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2009-12-30
இழுக்குமொழி - நஞ்சுகந்தான் - மடக்கு
------------------------------------------------------
இழுக்குமொழி பேசுவிழிப் பெண்களையும் என்றும்
இழுக்குமொழி சொல்வோர்கூட் டென்னும் - இழுக்குமொழி
நஞ்சுகந்தான் தாளிணையை நாளும் தொழுநிலைக்கும்
நஞ்சுகந்தான் தீரும் நலிவு.
இழுக்குமொழி
- 1) இழுக்கும்
மொழி (ஈர்க்கிற
மொழி);
2) இழுக்கு
மொழி (வழு/குற்றம்
உடைய சொற்கள்);
3) இழுக்கும்
ஒழி (குற்றங்களைத்
தவிர்);
நஞ்சுகந்தான்
- 1) நஞ்(சு)
உகந்தான்;
2) நம்
சுகம் தான்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2008/12/8 agramamutha <agrama...@gmail.com>
> - Show quoted text - --~--~---------~--~----~------------~-------~--~----~
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
-~----------~----~----~----~------~----~------~--~---
2010-01-10
ஆனஞ்சு
- கொண்டாடு -
மடக்கு
-------------------------------------------
ஆனஞ்சு
வேங்கை அதள்அணிவான்;
தேவர்க்கா
ஆனஞ்சு
கண்டத் தடைத்தருள்வான்;
- ஆனஞ்சு
கொண்டாடு
முக்கணனைக் கோனென்று
நெஞ்சேநீ
கொண்டாடு;
தீரும் குறை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-01-10
ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு
-------------------------------------------
ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா
ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு
கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ
கொண்டாடு; தீரும் குறை.
ஆனஞ்சு
- 1) ஆன்
அஞ்சு (பசுக்கள்
அஞ்சுகிற);
2) ஆல்
நஞ்சு (ஆலகால
விஷம்);
3) ஆன்
அஞ்சு (பசுவிலிருந்து
பெறும் ஐந்து பொருள்கள்);
கொண்டாடு
- 1) கொண்டு
ஆடுகிற (கொண்டு
அபிஷேகம் செய்யப்பெறும்);
2) புகழ்தல்;
பாராட்டுதல்;
வேங்கை
அதள் -
புலித்தோல்;
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2010-01-23
மருளார்
- தருவாய்
-
மடக்கு
---------------------------------------
மருளார்
மனத்தர் வழியறியார் பின்னேன்
மருளார்
அடியார்க்கும் உண்டோ -
மருளார்
தருவாய்
அருள்எனினும் சங்கரன்
ஈவான்
தருவாய்
அவர்க்குவசந் தம்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அன்புடன்,
தங்கமணி.
On Jan 23, 5:43 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2010-01-23
> மருளார் - தருவாய் - மடக்கு
> ---------------------------------------
> மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்
> மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்
> தருவாய் அருள்எனினும் சங்கரன் ஈவான்
> தருவாய் அவர்க்குவசந் தம்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2010/1/10 Siva Siva <nayanm...@gmail.com>
>
>
>
> --http://nayanmars.netne.net/
அன்புள்ளசிவசிவா!,
இப்பாடலுக்கு விளக்கம் தரவும்.
பிரித்தது சரிதானா?
மருள் ஆர்
மரு உளார்
தருவாய்!
தரு வாய்
அன்புடன்,
தங்கமணி.
On Jan 23, 5:43 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:> 2010/1/10 Siva Siva <nayanm...@gmail.com>
> 2010-01-23
> மருளார் - தருவாய் - மடக்கு
> ---------------------------------------
> மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்
> மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்
> தருவாய் அருள்எனினும் சங்கரன் ஈவான்
> தருவாய் அவர்க்குவசந் தம்.
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2010-01-23
மருளார் - தருவாய் - மடக்கு
---------------------------------------
மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்
மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்
தருவாய் அருள்எனினும் சங்கரன் ஈவான்
தருவாய் அவர்க்குவசந் தம்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம்
பிரித்து:
மருள்
ஆர் மனத்தர் வழி அறியார்;
பின்
ஏன்
மருளார்?
அடியார்க்கும்
உண்டோ -
மருள்?
ஆர்
"தருவாய்
அருள்"
எனினும்,
சங்கரன்
ஈவான்
தருவாய்
அவர்க்கு வசந்தம்.
மருள்
- மயக்கம்;
அச்சம்;
மருளுதல்
- மயங்குதல்;
அஞ்சுதல்;
ஆர்தல்
- பொருந்துதல்;
நிறைதல்
ஆர்
= யார்;
தரு
-
கற்பகமரம்;
மருளார்
- 1) மயக்கம்
மிகுந்த;
2) அஞ்சமாட்டார்;
3) அச்சம்;
யார்
தருவாய்
- 1)
கொடுப்பாய்;
2) கற்பகமரமாக;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-01-26
தினமும்
- பிழைகளை
-
மடக்கு
-----------------------------------------
தினமும்
பணிவீர் சிவனெய்தான்
முன்னோர்
தினமும்
மதில்ஆவி செல்லும் -
தினமும்
பிழைகளை
எண்ணுமெமன் பேணிப்போ மாறு
பிழைகளை
காப்பெம் பிரான்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-01-26
தினமும் - பிழைகளை - மடக்கு
-----------------------------------------
தினமும் பணிவீர் சிவனெய்தான் முன்னோர்
தினமும் மதில்ஆவி செல்லும் - தினமும்
பிழைகளை எண்ணுமெமன் பேணிப்போ மாறு
பிழைகளை காப்பெம் பிரான்.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம்
பிரித்து:
தினமும்
பணிவீர்;
சிவன்
எய்தான் முன் ஓர்
தினம்
மும்மதில்;
ஆவி
செல்லும் -
தினம்,
உம்
பிழைகளை
எண்ணும் எமன் பேணிப் போமாறு,
பிழை
களை காப்பு எம் பிரான்.
தினமும்
- 1)
தினந்தோறும்;
2) தினம்
மும்;
3) தினம்
உம்;
பிழைகளை
- 1)
குற்றங்களை;
2) பிழையைத்
தீர்க்கும்;
காப்பு
- பாதுகாவல்;
இரட்சை;
ஆவி
செல்லும் தினம் உம் பிழைகளை
எண்ணும் எமன் பேணிப் போமாறு
- உயிர்போகும்
நாளில் உங்கள் பாவங்களை
எண்ணுகிற எமன் உங்களை வணங்கிச்
செல்லும்படி;
பிழை
களை காப்பு எம் பிரான் -
குற்றங்களையெல்லாம்
நீக்கிவிடும் காப்பாக
எம்பெருமான் இருப்பான்;
(அப்பர்
தேவாரம் -
5.92.7 -
படையும்
பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின்
நமது ஈசன் அடியரை
விடைகொள்
ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது
நீர் போற்றியே போமினே.)
2010-01-30
ஆடவா
- பூமிக்கு
-
மடக்கு
-------------------------------------
ஆடவா
என்னுமங்கை மாரெனும்
ஆழ்மடுவில்
ஆடவா
வந்தலைக்க ஆடியே -
ஆடவா
பூமிக்கு
வந்தோம்போம் துன்பமரன்
பொற்கழலில்
பூமிக்கு
வந்திடும் போது.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010/1/31 Siva Siva <naya...@gmail.com>2010-01-26
தினமும் - பிழைகளை - மடக்கு
-----------------------------------------
2010-01-30
ஆடவா - பூமிக்கு - மடக்கு
-------------------------------------
ஆடவா என்னுமங்கை மாரெனும் ஆழ்மடுவில்
ஆடவா வந்தலைக்க ஆடியே - ஆடவா
பூமிக்கு வந்தோம்போம் துன்பமரன் பொற்கழலில்
பூமிக்கு வந்திடும் போது.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
பதம் பிரித்து
:
"ஆட
வா"
என்னும்
மங்கைமார் எனும் ஆழ் மடுவில்
ஆடு
அவா வந்து அலைக்க ஆடியே -
ஆடவா
பூமிக்கு
வந்தோம்?
போம்
துன்பம்,
அரன்
பொற்கழலில்
பூ
மிக்கு உவந்து இடும்போது.
ஆடவா
- 1) ஆட
வா /
ஆடவனே;
2) ஆடு
அவா; 3)
ஆடவா
(தடுமாறவா);
ஆரருள்
- 1) ஆர்
- யார்;
2) ஆர் -
அரிய;
மிகுந்த;
ஆடுதல்
- நீராடுதல்;
விளையாடுதல்;
அளைதல்;
அசைதல்;
தடுமாறுதல்;
யந்திரம்
முதலியவற்றில் அரைபடுதல்;
போது
-
பொழுது;
பெண்களோடு
கூடி வாழும் வாழ்வெனும் ஆழமான
மடுவில் அளையும் ஆசை வந்து
மனத்தை அலைக்க,
அப்படியே
அதில் ஈடுபட்டு ஆடித் தடுமாற்றம்
அடையவோ பூமியில் இப்பிறப்பு
எய்தினோம்?
சிவபெருமான்
பொன்னடியில் பூக்களை மிக
மகிழ்ந்து இட்டுத் தொழுதால்
துன்பங்கள் நீங்கும்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-01-10
வானஞ்சு
- கண்டம்
-
மடக்கு
--------------------------------------
வானஞ்சு
வாயரவால் வாரிகடை நாளிலெழு
வானஞ்சு
கண்டுமிக வாட்டமுறு -
வானஞ்சு
கண்டந்
தவிர்த்தருளாய் கண்ணுதலே
என்னவதைக்
கண்டந்
தரித்தான்நம் காப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-04-17
சிலையுடை
-
பேரானை
-
மடக்கு
-------------------------------------------
சிலையுடை
என்பவர் தேறார் கயிலைச்
சிலையுடை
ஈசனுக்கு வெற்பே -
சிலையுடை
பேரானை
ஈருரியே உய்திபெற ஆயிரத்தெண்
பேரானை
நாவேநீ பேசு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-04-17
'பரவை'
------------
இம்பரவை
கிட்டும் எனவெண்ணி உழலாதே
உம்பரவை
வீற்றிருக்கும் உயர்நிலையும்
பெற்றிடலாம்
நம்பரவை
அரைதனிலோர் நாணாகப் பூணுமிறை
நம்பரவை
கணவர்க்கு நற்றோழர்
தாள்தொழுதே.
பதம்
பிரித்து:
இம்பர்
அவை கிட்டும் என எண்ணி
உழலாதே;
உம்பர்
அவை வீற்றிருக்கும் உயர்நிலையும்
பெற்றிடலாம்,
நம்பு;
அரவை
அரைதனில் ஓர் நாணாகப் பூணும்
இறை,
நம்
பரவை கணவர்க்கு நல் தோழர்
தாள் தொழுதே.
இம்பர்
- இவ்வுலகு;
இவ்விடத்தே;
உம்பர்
- வானுலகு;
தேவர்கள்;
அவை
- 1) அப்பொருள்கள்;
2) சபை;
பரவை
கணவர்க்கு நல் தோழர் -
பரவையாரின் கணவரான
சுந்தரர்க்குத் தன்னைத்
தோழனாகத் தந்தருளிய
சிவபெருமான்;
(பெரிய
புராணம்:
பேர்பரவை
பெண்மையினில் பெரும்பரவை
விரும்பல்குல்
ஆர்பரவை
யணிதிகழும் மணிமுறுவல்
அரும்பரவை
சீர்பரவை
யாயினாள் திருவுருவின்
மென்சாயல்
ஏர்பரவை
யிடைப்பட்ட என்னாசை
யெழுபரவை.)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-05-08
வானிறந்தான்
- கண்ணிலவு
-
மடக்கு
---------------------------------------------------
வானிறந்தான்
ஏறு மணிமிடற்றன் ஊரேறும்
வானிறந்தான்
அன்றயன் மால்தேட -
வானிறந்தான்
கண்ணிலவு
பூமாலை கட்டியன்பாய்க்
கைதொழுவோம்
கண்ணிலவு
நெற்றியனம் காப்பு.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-04-17
சிலையுடை - பேரானை - மடக்கு
-------------------------------------------
சிலையுடை என்பவர் தேறார் கயிலைச்
சிலையுடை ஈசனுக்கு வெற்பே - சிலையுடை
பேரானை ஈருரியே உய்திபெற ஆயிரத்தெண்
பேரானை நாவேநீ பேசு.அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2010-05-08
வானிறந்தான்
- கண்ணிலவு
-
மடக்கு
---------------------------------------------------
வானிறந்தான்
ஏறு மணிமிடற்றன் ஊரேறும்
வானிறந்தான்
அன்றயன் மால்தேட -
வானிறந்தான்
கண்ணிலவு
பூமாலை கட்டியன்பாய்க்
கைதொழுவோம்
கண்ணிலவு
நெற்றியனம் காப்பு.
பதம்
பிரித்து:
வான்
நிறந்தான் ஏறு மணிமிடற்றன்
ஊர் ஏறும்
வால்
நிறம்;
தான்
அன்று அயன் மால் தேட -
வான்
இறந்தான்;
கள்
நிலவு பூமாலை கட்டி அன்பாய்க்
கைதொழுவோம்;
கண்
நிலவு நெற்றியன் நம் காப்பு.
வான்
- 1) மேகம்;
2) விண்;
ஊர்தல்
- ஏறுதல்
(To mount);
ஏறி
நடத்துதல் (To
ride, as a horse);
வால்
- வெண்மை;
தான்
- 1)
தேற்றச்சொல்
/ அசைச்சொல்;
2) படர்க்கை
ஒருமைப்பெயர் (He,
she or it) - அவன்;
இறத்தல்
- கடத்தல்
(To go beyond,
transcend, pass over);
கள்
-
தேன்;
மேகத்தின்
நிறம் உடைய மணி திகழும்
கழுத்துடைய நீலகண்டன் செல்லும்
காளையின் நிறம் வெண்மை.
அவன்
முன்னொரு சமயத்தில் பிரமனும்
திருமாலும் தேடுமாறு விண்ணையும்
கடந்தான்.
அவனைத்
தேன் இருக்கும் மலர்களால்
மாலை கட்டி அன்போடு வணங்குவோம்.
நெற்றிக்கண்ணனே
நம் காவல்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
-----------
ஆறுமுக
நாவலரின் இலக்கணச்
சுருக்கத்திலிருந்து:
154.
லகர
ளகரங்களின் முன் மெல்லினம்
வரின்,
இருவழியினும்,
லகரம்
னகரமாகவும்,
ளகரம்
ணகரமாகவுந் திரியும்.
வரு
நகரம் லகரத்தின் முன் னகரமாகவும்,
ளகரத்தின்
முன் ணகரமாகவுந் திரியும்.
155.
தனிக்குற்றெழுத்தைச்
சாராத ல ளக்கள்,
இரு
வழியிலும்,
வரு
நகரந் திரிந்த விடத்துக்
கெடும்.
---------------
2010-05-08
வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு
---------------------------------------------------
(சில
நாள்களுக்குமுன் ஆடிக்
கிருத்திகை.
அதை ஒட்டி இன்று
எம் ஊர்க் கோயிலில்
விழா.)
2010-08-08
காவடி
----------
(கலிவிருத்தம்
- 'விளம்
மா மா காய்' என்ற
வாய்பாடு)
காவடி
யிரண்டும் கருதும் மனத்தோடு
காவடி
தோள்மேற் காவி நடம்ஆடிக்
காவடி
வேலா என்று தொழுவார்க்குக்
காவடி
கொண்டு கந்தன் வருவானே.
பதம்
பிரித்து:
கா
அடி இரண்டும் கருதும்
மனத்தோடு
காவடி
தோள்மேல் காவி,
நடம் ஆடிக்,
"கா
வடி வேலா" என்று
தொழுவார்க்குக்
கா
வடி கொண்டு கந்தன் வருவானே.
கா
- காத்தல்;
காவுதல்
- சுமத்தல்;
வடி
- கூர்மை;
உருவம்;
வடிவேல்
- கூரிய
வேல்;
காக்கும்
பாதம் இரண்டையும் விரும்பும்
மனத்தோடு, தங்கள்
தோள்மேல் காவடியைச் சுமந்து
ஆடிப் பாடிக்,
'காத்தருள்வாய்
கூரிய வேலை உடையவனே'
என்று வணங்கும்
அடியவர்களுக்குக் காக்கும்
உருவத்தோடு கந்தன்
வந்தருள்வான்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-05-08
வானிறந்தான் - கண்ணிலவு - மடக்கு
2010-11-07
இருமைக்கும்
ஒருவன்
----------------------------
(அறுசீர்
விருத்தம் -
6 மா
-
சொற்கள்
மடக்குப் பெற்று வருமாறு
அமைந்தது)
ஆறு
சடையுள் நிலவும்
..
அருகே
ஏறும் நிலவும்
ஏறு
திகழும் கொடியான்
..
இடப்பால்
ஓர்பூங் கொடியான்
நாறு
கொன்றைத் தாரான்
..
நமக்கோர்
பிறவி தாரான்
பேறு
வேண்டி வேண்டில்
..
பெறலாம்
ஐயம் இலையே
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
சடையான் சடையான்
என்றன் இதயம் உடையான் -அவன்
இதயம் தன்னை உடையான்
மன்னும் மனமே முறியான் -உறை
மனத்தைச் சற்றும் முறியான்
பன்னும் பக்திக் குறியான்- வெறும்
பக்தி வேடம் குறியான்
கன்னல் கங்கைச் சடையான்- எரி
கங்கை ஏற்கச் சடையான்.
உடையான்- உடையவன் உடையான் - உடைக்கமாட்டான்
முறியான் -அறையாகக்(தங்குமிடமாகக்)கொண்டவன்
முறியான் - முறிக்க மாட்டான்
குறியான் - குறியாக உடையவன் குறியான் - குறித்து வைக்காதவன்
சடையான் - சடையை உடையவன்
சடையான் - சலிப்படையாதவன்
இலந்தை
--
சடையான் சடையான்
என்றன் இதயம் உடையான் -அவன்
இதயம் தன்னை உடையான்
மன்னும் மனமே முறியான் -உறை
மனத்தைச் சற்றும் முறியான்
பன்னும் பக்திக் குறியான்- வெறும்
பக்தி வேடம் குறியான்
கன்னல் கங்கைச் சடையான்- எரி
கங்கை ஏற்கச் சடையான்.
உடையான்- உடையவன் உடையான் - உடைக்கமாட்டான்
முறியான் -அறையாகக்(தங்குமிடமாகக்)கொண்டவன்
முறியான் - முறிக்க மாட்டான்
குறியான் - குறியாக உடையவன் குறியான் - குறித்து வைக்காதவன்
சடையான் - சடையை உடையவன்
சடையான் - சலிப்படையாதவன்
இலந்தை
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
முறி என்ற சொல் தமிழிலிருந்து மலையாளத்துக்குச் சென்றுவிட்டது. அங்கே அறையை முறி என்றுதான் சொல்கிறார்கள்.
தேங்காய் முறி என்ற சொல் தென்மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது
இலந்தை
--
இரண்டு பேர் மடக்கும் ரொம்ப சுவாரஸ்யம்..நான் ஒரு மடக்கு எழுதலாம் என்றெண்ணி உட்கார்ந்தால் மடக்க முடியலையே காலை..யோகியார்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2010-11-13
அடியேனைக்
காவாய்
(திருவானைக்கா)
-----------------------------------------------------
(எண்சீர்
விருத்தம் - 'மா
மா மா காய்' -
அரையடி ஈற்றில்
மடக்கு)
மாற்றில்
லாதாய் என்றும் அழிவில்லாய்
..
மாற்றார் புரங்கள்
மூன்றும் அழிவில்லாய்
ஆற்றுச்
சடைமேல் சீறும் பணியேற்றாய்
..
அன்பர் எல்லாம்
நாளும் பணியேற்றாய்
நாற்ற
மலரான் கரிய அரியானே
..
நாதன் என்றார்
காண அரியானே
போற்றி
செய்யும் அடியே னைக்காவாய்
..
பொழில்கள்
சூழும் திருவா னைக்காவாய்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2010-11-13
அடியேனைக் காவாய் (திருவானைக்கா)
-----------------------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'மா மா மா காய்' - அரையடி ஈற்றில் மடக்கு)
மாற்றில் லாதாய் என்றும் அழிவில்லாய்
.. மாற்றார் புரங்கள் மூன்றும் அழிவில்லாய்
ஆற்றுச் சடைமேல் சீறும் பணியேற்றாய்
.. அன்பர் எல்லாம் நாளும் பணியேற்றாய்
நாற்ற மலரான் கரிய அரியானே
.. நாதன் என்றார் காண அரியானே
போற்றி செய்யும் அடியே னைக்காவாய்
.. பொழில்கள் சூழும் திருவா னைக்காவாய்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
2011-01-14
ஏக
பாதம் (திருவிடைமருதூர்)
---------------
தேரோடு
திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு
திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு
திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு
திகழ்திரு விடைமரு தூரையே.
விளக்கத்தை 'மதிசூடி துதிபாடி - 2' இழையில் இடுகிறேன்.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-01-17
ஏகபாதம்
-------------
மானினையும்
பாத கமல மொழிவோ
மானினையும்
பாத கமல மொழிவோ
மானினையும்
பாத கமல மொழிவோ
மானினையும்
பாத கமல மொழிவோ
பதம்
பிரித்து:
மால்
நினையும் பாத கமலம் மொழிவோம்;
ஆனின் ஐ உம்
பாது; அக
மலம் ஒழிவோமால்;
நினை,
உம் பாதக மலம்
ஒழிவோமால்;
நினையும்;
பாதகம் அலம்
ஒழிவோ?
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-01-14
ஏக பாதம் (திருவிடைமருதூர்)
---------------
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே
தேரோடு திகழ்திரு விடைமரு தூரையே.விளக்கத்தை 'மதிசூடி துதிபாடி - 2' இழையில் இடுகிறேன்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
இப்பாடல்களைப் படித்து வாழ்த்திய அன்பர்களுக்கு என் வணக்கம்.
இன்னொன்று!
2011-01-17
ஏகபாதம்
-------------
வான்மதி
யோடு நீர்சேர் மின்சடை
யானாவூர்
வான்மதி
யோடு நீர்சேர் மின்சடை
யானாவூர்
வான்மதி
யோடு நீர்சேர் மின்சடை
யானாவூர்
வான்மதி
யோடு நீர்சேர் மின்சடை
யானாவூர்.
பதம்
பிரித்து:
வான்மதியோடு
நீர் சேர் மின்சடையான்,
ஆ ஊர்வான்;
மதி,
ஓடுநீர் சேர்
மின்சடையான் ஆவூர்;
வான்
மதியோடு நீர் சேர்மின்;
சடையான் நா
ஊர்
வால்
மதி ஓடும்; நீர்
சேர்மின் சடையான் ஆவூர்.
விளக்கத்தை
'மதிசூடி
துதிபாடி -2'
இழையில்
காண்க.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-01-18
ஏகபாதம்
-------------
யாராயி
னுமைசேர் கண்டரே சுந்தர
ரென்பரே
யாராயி
னுமைசேர் கண்டரே சுந்தர
ரென்பரே
யாராயி
னுமைசேர் கண்டரே சுந்தர
ரென்பரே
யாராயி
னுமைசேர் கண்டரே சுந்தர
ரென்பரே
பதம்
பிரித்து
:
"யாராயினும்,
மை சேர் கண்டரே
சுந்தரர் என்பரே?
ஆராயின்,
நும் மை சேர்
கண்டர் ஏசும் தரர்"
என்பர்
ஏயார்
ஆயின்; உமை
சேர் கண்டரே சுந்தரர் என்பர்
ஏய்
ஆர் ஆயினும்; ஐ
சேர் கண்டரே சுந்தரர்,
என்பரே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-03-01
சிவராத்திரியை
ஒட்டி!
(இவ்வாண்டு
2011 மார்ச்
2)
இரவில்
- (மடக்கு
- இன்னிசை
வெண்பா)
------------------------------
இரவில்
எரியேந்தி ஆடும் இறைவன்
இரவில்
வரும்ஊணை ஏற்று மகிழ்வான்
இரவில்
பொழுதும் இரவுமடி ஏத்தின்
இரவில்
நிலைதருவான் இங்கு.
இரவில்
- 1) ராத்திரியில்;
2) பிச்சையில்;
3) ராத்திரி
இல்லாத;
4) யாசிப்பு
இல்லாத;
(சுந்தரர்
தேவாரம் -
7.34.1
தம்மையே
புகழ்ந்து இச்சை பேசினும்
சார்கினும் தொண்டர்
தருகிலாப்
பொய்ம்மையாளரைப்
பாடாதே எந்தை புகலூர் பாடுமின்
புலவீர்காள்
இம்மையே
தரும் சோறும் கூறையும் ஏத்தல்
ஆம் இடர் கெடலும் ஆம்
அம்மையே
சிவலோகம் ஆள்வதற்கு யாதும்
ஐயுறவு இல்லையே.)
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
எரி=நெருப்பு.
எரி=ஒளி,பிரகாசம்.
எரிவு=பொறாமை,சினம்.
அன்புடன்,
தங்கமணி.
On Mar 1, 6:20 pm, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> 2011-03-01
> சிவராத்திரியை ஒட்டி! (இவ்வாண்டு 2011 மார்ச் 2)
> இரவில் - (மடக்கு - இன்னிசை வெண்பா)
> ------------------------------
> இரவில் எரியேந்தி ஆடும் இறைவன்
> இரவில் வரும்ஊணை ஏற்று மகிழ்வான்
> இரவில் பொழுதும் இரவுமடி ஏத்தின்
> இரவில் நிலைதருவான் இங்கு.
>
> இரவில் - 1) ராத்திரியில்; 2) பிச்சையில்; 3) ராத்திரி இல்லாத; 4) யாசிப்பு
> இல்லாத;
>
> (சுந்தரர் தேவாரம் - 7.34.1
> தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
> பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
> இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்
> அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.)
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>
> 2011/1/18 Siva Siva <nayanm...@gmail.com>
>
> --http://nayanmars.netne.net/
2010-05-09
கண்ணிறை
- கானமர்
-
மடக்கு
-----------------------------------------
கண்ணிறை
பூவிட்டுக் காலையும்
மாலையும்
கண்ணிறை
நீர்வழியக் காமனைக்காய் -
கண்ணிறை
கானமர்
கொன்றையங் கண்ணியான்
ஆடற்குக்
கானமர்
கோனைக் கருது.
உரைநடை:
காமனைக்காய்
கண்ணிறை, கானமர்
கொன்றையங் கண்ணியான்,
ஆடற்குக் கானமர்
கோனைக், கண்ணிறை
பூவிட்டுக் காலையும் மாலையும்
கண்ணிறை நீர்வழியக்
கருது.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-05-09
கண்ணிறை - கானமர் - மடக்கு
-----------------------------------------
கண்ணிறை பூவிட்டுக் காலையும் மாலையும்
கண்ணிறை நீர்வழியக் காமனைக்காய் - கண்ணிறை
கானமர் கொன்றையங் கண்ணியான் ஆடற்குக்
கானமர் கோனைக் கருது.
உரைநடை:
காமனைக்காய் கண்ணிறை, கானமர் கொன்றையங் கண்ணியான், ஆடற்குக் கானமர் கோனைக், கண்ணிறை பூவிட்டுக் காலையும் மாலையும் கண்ணிறை நீர்வழியக் கருது.
கண்ணிறை
- 1) கள்
நிறை; 2)கண்
நிறை; 3) கண்
இறை;
காய்தல்
- எரித்தல்;
கானமர்
- கான்
அமர்;
கான்
- 1) வாசனை;
2) காடு -
இங்கே சுடுகாடு;
அமர்தல்
- 1) இருத்தல்;
2) விரும்புதல்;
அம்
- அழகிய;
கண்ணி
- தலையில்
அணியும் மாலை;
தினமும்
காலையும் மாலையும் தேன்
நிறைந்த பூக்களை இட்டுக்,
கண்களில் நிறையும்
நீர் வழிய,
மன்மதனை எரித்த
கண்ணுடைய இறைவனை,
வாசனை பொருந்திய
அழகிய கொன்றை மாலையை முடிமேல்
அணிபவனை, நடம்
செய்வதற்குச் சுடுகாட்டை
விரும்பும் தலைவனைச்
சிந்திப்பாயாக!
2011-09-03
ஏழை
- அமர்வானை
-
மடக்கு
------------------------------------
ஏழை
எனவெண்ணி என்றும் பொருள்நாடும்
ஏழை
மனமே இடப்பக்கம் -
ஏழை
அமர்வானை
வெண்திங்கள் ஆறணிந்தேற்
றின்மேல்
அமர்வானை
ஏத்தி அடை.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2010-05-09
கண்ணிறை - கானமர் - மடக்கு
-----------------------------------------
2012-08-10
(ஆடிக்கிருத்திகை
நாள்)
சேயவன்
- பேரான்தன்
-
மடக்கு
-----------------------------------------
சேயவன்
முக்கண்ணன் தேவர் தொழஅருள்செய்
சேயவன்
வந்தனை செய்யார்க்குச் -
சேயவன்
பேரான்தன்
தாள்பேணும் பெற்றியரை
ஆயிரம்
பேரான்தன்
சீர்நாவே பேசு.
சேயவன்
- 1)
சிவந்தவன்;
2) மகன்
அவன்;
3) தூரத்தில்
உள்ளவன்;
பேரான்தன்
- 1) நீங்கான்
தன்னுடைய;
2) பெயர்
உடையவனுடைய;
பெற்றி
- குணம்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2011-09-03
ஏழை - அமர்வானை - மடக்கு
------------------------------------
2013-02-20
அம்புதை
--------------
(மடக்கு)
(அறுசீர்
விருத்தம் -
விளம்
மா தேமா -
அரையடி
வாய்பாடு)
அம்புதை
சடையின் மேலோர்
..
அணிமதி
சூடும் அண்ணல்
அம்புதை
ஏவும் வேளை
..
அனங்கனாய்
ஆக்கும் கண்ணன்
அம்புதை
கேழற்
பின்போய்
..
அருச்சுனற்
கருளும் வேடன்
அம்புதை
நாவ லூர்க்கோன்
..
அவர்முடி
வைத்தான்
தானே.
அம்
-
நீர்;
அழகு;
புதை
-
புதைத்தல்
(ஒளித்துவைத்தல்);
அம்பு;
தை
-
தைத்தல்;
அம்பு
முதலியன ஊடுருவுதல்;
கேழல்
-
பன்றி;
நாவலூர்க்கோன்
-
சுந்தரமூர்த்திநாயனார்;
அம்புதை
-
1. அம்+புதை
சடை (நீரை
உள்ளடக்கிய சடை);
/ 2. அம்+புதை
வேளை (அழகிய
அம்பு -
மலர்க்கணை
ஏவிய மன்மதனை);
/ 3. அம்பு+தை
கேழல் (அம்பு
தைத்த பன்றி);
/ 4. அம்பு+உதை
(அன்பு
உதை;
அன்பு, 'அம்பு'
என
மருவியது).
(அப்பர்
தேவாரம் -
5.1.1
"அன்னம்
பாலிக்கும் ....
என்னம்
பாலிக்கு மாறு ....."
-- என்
அன்பு எனப் பிரிக்க.
அன்பு
என்பது அம்பு என மருவிற்று.
)
அம்
புதை சடையின்
மேல் ஓர்
அணிமதி சூடும் அண்ணல்
-
கங்கையை
ஒளித்த சடையின் மேல் அழகிய
சந்திரனைச் சூடும் தலைவன்;
அம்
புதை ஏவும்
வேளை அனங்கனாய் ஆக்கும் கண்ணன்
-
மலர்க்கணையை
ஏவிய மன்மதனை உடலற்றவன் ஆக்கிய
நெற்றிக்கண்ணன்;
அம்பு
தை
கேழல்பின்
போய்
அருச்சுனற்கு
அருளும்
வேடன் -
வேடனாகக்
காட்டில் அம்பு தைத்த பன்றிப்பின்
சென்று அருச்சுனனுக்குப்
பாசுபதம் அருளியவன்;
அம்பு
உதை நாவலூர்க்கோன்
அவர் முடி
வைத்தான்
தானே -
(திருவதிகையில்
முதியவர்
உருவில் சென்று)
உறங்கும்போது
சுந்தரர் தலையில் அன்போடு
உதை வைத்த
சிவபெருமானே!
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)
சேயவன் - பேரான்தன் - மடக்கு
-----------------------------------------
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
"பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவன்.... " |
2011-08-13
பாடு
-
தருகாலன்
-
மடக்கு
------------------------------------
பாடு
மிகுந்து பரிதவிக்கும்
நெஞ்சமே
பாடு
மறையவன் பாலடைந்த -
பாடு
தருகாலன்
தானங்குச் சாவவுதைத்
தாயுள்
தருகாலன்
சம்புவைநீ சார்.
பதம்
பிரித்து:
பாடு
மிகுந்து பரிதவிக்கும்
நெஞ்சமே;
பாடு
மறையவன்பால் அடைந்த -
பாடு
தரு
காலன்தான்
அங்குச் சாவ உதைத்து,
ஆயுள்
தரு
காலன்;
சம்புவை
நீ சார்.
பாடு
-
1) துன்பம்;
2) பாடுதல்;
3) சாவு;
காலன்
-
1) எமன்;
2) காலை
உடையவன்;
சம்பு
-
சுகத்தைத்
தருபவன்;
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)
சேயவன் - பேரான்தன் - மடக்கு