குருவருள் நமைக்காக்கும் சோதி

12 views
Skip to first unread message

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 6:42:09 AM (yesterday) Jul 25
to santhavasantham

குருவருள் நமைக்காக்கும் சோதி

(பல்லவி)
குருவருள் நமைக்காக்கும் சோதி - வளம்
… குவிந்திடக் குறைதீர்க்கும் சோதி

(அனு பல்லவி) 
இருள்மிகு துயர்சூழ்ந்த போதும் - நம்பும்
… இதயத்தில் அணையாத சோதி

(சரணம்)
மிகுத்திடும் பயமொழிய விழிப்பூட்டும் சோதி  
பகைக்குணம் மறைந்தொழியப் பரிவூற்றும் சோதி
அகத்தினில் மயலொழிய அறிவேற்றும் சோதி
மகத்துவ நிலையடைய வழிகாட்டும் சோதி. (1) (குருவருள்)

கலங்கிடும் உளங்களுக்கோர் கதியாகும் சோதி
கலங்கரை விளக்கமெனக் கரம்காட்டும் சோதி
துலங்கிடும் முழுநிலவாய்ச் சுடர்வார்க்கும் சோதி
இலங்கிடும் மனக்குடிலில் இறைகாட்டும் சோதி. (2) (குருவருள்)

- இமயவரம்பன் 

M. Viswanathan

unread,
Jul 25, 2026, 6:50:57 AM (yesterday) Jul 25
to Santhavasantham
அருமை.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0E0CE5C0-FCE9-4819-BB2A-1A606E80984F%40gmail.com.

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 6:55:25 AM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com, Santhavasantham
மிக்க நன்றி திரு மீவி

> On Jul 25, 2026, at 6:50 AM, M. Viswanathan <meev...@gmail.com> wrote:
>
> அருமை

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 7:28:07 AM (yesterday) Jul 25
to Santhavasantham, santhavasantham
பல்லவியை இவ்வாறு மாற்ற விரும்புகிறேன் :

குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்
… குருவரன் பதம்நாட்டும் சோதி

Sai Ganesan H

unread,
Jul 25, 2026, 7:53:53 AM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com
அருமை! 

சத்ய வேழன் H சாயி கணேசன் 

--

Ram Ramakrishnan

unread,
Jul 25, 2026, 8:13:10 AM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com
அற்புதமான குருவருள் பாட்டு, திரு. இமயவரம்பன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 25, 2026, at 06:42, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:


--

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2026, 10:32:24 AM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com

Siva Siva

unread,
Jul 25, 2026, 10:34:23 AM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com
Nice.

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 3:45:59 PM (yesterday) Jul 25
to santhav...@googlegroups.com
அன்புடன் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி!

On Jul 25, 2026, at 10:34 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:

Nice

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 3:50:44 PM (yesterday) Jul 25
to santhavasantham
சில மாற்றங்களுடன் பாட்டின் இறுதி வடிவம் :

(பல்லவி)

குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்

… குருவரன் பதம்நாட்டும் சோதி


(அனு பல்லவி) 

இருள்மிகும் இடர்சூழ்ந்த போதும் - நம்பும்

… இதயத்தில் அணையாத சோதி


(சரணம்)

மிகுந்திடும் மயலொழிய விழிப்பூட்டும் சோதி  

அகந்தையின் மிகையொழிய அறிவேற்றும் சோதி

சுகமெனப் புகுந்ததொரு துயர்போக்கும் சோதி

மகிழ்வுறும் நிலையடைய வழிகாட்டும் சோதி. (1) (குருவருள்)


கலங்கிடும் உளங்களுக்கோர் கதியாகும் சோதி

கலங்கரை விளக்கமெனக் கரம்காட்டும் சோதி

துலங்கிடும் முழுநிலவாய்ச் சுடர்வார்க்கும் சோதி

இலங்கிடும் மனக்குடிலில் இறைகாட்டும் சோதி. (2) (குருவருள்)



இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 8:28:10 PM (23 hours ago) Jul 25
to santhavasantham, santhavasantham
With further refinement:

*குருவருள் நமைக்காக்கும் சோதி*

(பல்லவி)
குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்
… குருவரன் பதம்நாட்டும் சோதி

(அனு பல்லவி)
இருள்மிகும் இடர்சூழ்ந்த போதும் - நம்பும்
… இதயத்தில் அணையாத சோதி

(சரணம்)
மிகுந்திடும் மயலொழிய விழிப்பூட்டும் சோதி
அகந்தையின் மிகையொழிய அறிவேற்றும் சோதி
சுகமெனப் புகுந்தழுத்து துயர்போக்கும் சோதி
திகழ்நலம் நனிசிறக்கக் குறைதீர்க்கும் சோதி. (1) (குருவருள்)

கலங்கிடும் உளங்களுக்கோர் கதியாகும் சோதி
கலங்கரை விளக்கமென வழிகாட்டும் சோதி
துலங்கிடும் முழுநிலவாய்ச் சுடர்வார்க்கும் சோதி
இலங்கிடும் மனக்குடிலில் இறைகாட்டும் சோதி. (2) (குருவருள்)

- இமயவரம்பன்

Kaviyogi Vedham

unread,
Jul 25, 2026, 8:47:55 PM (23 hours ago) Jul 25
to santhav...@googlegroups.com
good  song.  true
 yo

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 25, 2026, 8:49:20 PM (23 hours ago) Jul 25
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
யோகியாருக்கு மிக்க நன்றி

> On Jul 25, 2026, at 8:47 PM, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
>
> good song. true

Parthasarathy S

unread,
9:47 AM (10 hours ago) 9:47 AM
to சந்தவசந்தம்
அருமை. நம்பும் இதயத்தில் அணையாத சோதி - ஆழமான வரிகள்
புதுஅக்ரஹாரம் எஸ்.பார்த்தசாரதி, பெங்களூர்

Reply all
Reply to author
Forward
0 new messages