வடம் பிடிக்க வாரீர்

68 views
Skip to first unread message

சௌந்தர்

unread,
Dec 24, 2009, 2:13:11 PM12/24/09
to சந்தவசந்தம்
வடம் பிடிக்க வாரீர்

"அகமும் புறமும் அம்மை கழுத்தில்
. . அணியும் முத்தாரம்
அகவல் வெண்பா கலிப்பா வஞ்சி
. . அவள்கைக் கங்கணமாம்" (இலந்தை)
===========================================

முத்துகள் வைரங்கள் முறையாய்க் கோத்து-நல்ல
. . முழுமணியை நாயகமாய் நடுவே வைத்து
வித்தகமாய் வடிவமைத்த அழகு மாலை-இதனை
. . விருத்தமெனச் சொல்லிடுவார் கவிதை வல்லார்.

சந்தங்கள் பந்தங்கள் இனிமை சேர்க்க-அன்னை
. . சரிவளையாய் உகந்தேற்கும் அணியாம் அன்றோ?
சிந்துகள், சீரமைந்த வெண்பா வகையும்-அவள்
. . சிரமணியும் மகுடமென ஏற்றம் கொள்ளும்.

கட்டுக்குள் வைத்திருக்கும் நூல றுந்தால்-மெல்லக்
. . கட்டவிழ்ந்து மணியெல்லாம் சிதறி ஓடும்.
பெட்டிக்குள் பொட்டலமாய் வைத்தி ராமல்-உதிரிப்
. .பெயர்சூட்டிப் புதுமையென்றால் அணிவ தாமோ?

உதிர்ந்திட்ட முத்தெல்லாம் ஒன்றாய்க் கூட்டி-ஓர்
. . ஒய்யார ஆரத்தைத் தொடுக்க வாரீர்!
புதிதான சந்தங்கள் புனைய வாரீர்-வண்ணப்
. . பூமாலை வசந்தத்தில் திளைக்க வாரீர்!

முத்துகள் வைரங்கள் மிகவாய் உண்டே-ஆயின்
. . முனைந்திங்கே தொடுப்பார்கள் யாரு முண்டோ?
சித்திரமாய்த் தோரணங்கள் வண்ணம் தீட்டிச்-சந்தத்
. . தேரிழுக்கும் கவிவல்லார் திரண்டு வாரீர்.

சித்திரையில் தேரோடும் வீதி உண்டு-கோவில்
. . தேருக்குத் தெருமுனையில் நிலையும் உண்டு.
பத்தியுடன் பாவடிவில் வடம் பிடிக்க-நாளும்
. . பாரதத்தில் பாரதத்தின் பவனி உண்டு.


சௌந்தர்

Siva Siva

unread,
Dec 24, 2009, 2:29:43 PM12/24/09
to santhav...@googlegroups.com
நல்ல கருத்து. இனிய பாடல்.

// பாரதத்தில் பாரதத்தின் பவனி உண்டு //
அழகிய சொல்லாட்சி.

அன்புடன்,
வி.சுப்பிரமணியன்

2009/12/24 சௌந்தர் <rsou...@gmail.com>



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Raja.Tyagarajan

unread,
Dec 24, 2009, 4:00:15 PM12/24/09
to santhav...@googlegroups.com
அன்புள்ள சௌந்தர் அவர்களுக்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.

அற்புதக் கவிதை/ பாடல்/ பாட்டு/ செய்யுள்/ பா (!!) வாழ்க நீர்; வளர்க நும்
புலமை!
வடமிழுக்க அழைக்கின்றீர். வாராதிருப்பேனா? எத்தனையோ பணிகள், இருந்தாலும்
வந்துவிட்டேன். அனைவரையும் உம்முடனே சேர்ந்தே அழைக்கின்றேன். மரபென்னும்
தங்கத் தேரிழுக்க. வாருங்கள் அன்பர்களே!

தேரிழுக்க வந்துவிட்டேன்
-----------------------
எத்திக்கும் பண்ணார்க்கும் எந்தமிழின் தித்திப்பை
முத்தனைய சத்தான மூன்றுதமிழ்ச் சொல்லெடுத்து
சித்தரித்த சித்திரமாய் சில்லென்னும் சீதளமாய்
முத்தாரங் கட்டிவிட்டீர் முத்தமிழின் வித்தகரே!

கன்னலின் சாறெடுத்தக் கற்கண்டுத் தேன்பாகாய்
நன்னூல் உரைக்கின்ற நற்றமிழின் பாமணக்க
மின்னல் சவுக்கெனவே வீசிவிட்டீர் பாச்சொடுக்கை!
என்சொல்வேன் உம்திறத்தை எப்படிநான் இங்குரைப்பேன்?

நாமணக்கும் பாட்டியல்கள் நாட்டியங்கள் ஆடுகின்ற
தேமதுரச் பாட்டிசைத்துத் தேரிழுக்க சொன்னீர்கள்!
தூமரமாய் நிற்காமல் துள்ளித் துடிப்புடனே
ஆமய்யா வந்துவிட்டேன் ஆசையுடன் தேரிழுக்க!

அன்பன்
இராஜ.தியாகராஜன்
www.pudhucherry.com
www.tyagas.wordpress.com

SUBBAIER RAMASAMI

unread,
Dec 24, 2009, 7:55:56 PM12/24/09
to santhav...@googlegroups.com

வடம்பிடிக்க  வாருங்கள் என்று கூறி

      வாகான கவிதையினால் சௌந்தர் இங்கே

தடம்பதித்த மரபொளிசேர் பாட்டின் மூலம்

      தமிழ்பதித்தார்,  இலக்கியத்தில் மரபு மேலும்

இடம்பிடிக்க வேண்டுமெனில் இடைவி டாமால்

      எண்ணங்கள் நெஞ்சதனை ஈர்க்கும் வண்ணம்

படம்பிடித்தால் தான் நடக்கும் பதுங்கி நின்றால்

      பலகாதம் ஓடிவிடும், படைக்க வாரீர்.

 

இலந்தை



2009/12/25 சௌந்தர் <rsou...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Kaviyogi Vedham

unread,
Dec 25, 2009, 9:01:53 AM12/25/09
to santhav...@googlegroups.com
மிக அழகான நல்ல சந்தம் கமழும் பாடல் சௌந்தர்! வாழ்க நீவிர்!
யோகியார்

2009/12/25 சௌந்தர் <rsou...@gmail.com>
வடம் பிடிக்க வாரீர்

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
யோகியார்..
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம், நீலாங்கரை,சென்னை-41(போன் 64565979)-

thangamani

unread,
Dec 25, 2009, 12:15:57 PM12/25/09
to சந்தவசந்தம்
அன்புள்ள சௌந்தர்,
'வடம் பிடிக்க வாரீர்!'கவிதை வெகு அருமை!
சந்த சிந்திசையின் அழகினில் லயித்துவிட்டேன்!
மிக்க நன்றி!சௌந்தர்!
காலத்திற்கேற்ப,தமிழன்னைக்குச்
சரிவளையணிவித்தீர்கள்!நன்று!
//சந்தங்கள் பந்தங்கள் இனிமை சேர்க்க-அன்னை
. . சரிவளையாய் உகந்தேற்கும் அணியாம் அன்றோ?//
(சரிவளை=பிரேஸ்லெட் என்னும் கையில் அணியும்
வளை வகை)

அன்புடன்,
தங்கமணி.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Dec 25, 2009, 8:47:17 PM12/25/09
to santhav...@googlegroups.com

சௌந்தர்,

‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
..தொடையின் பயனே நறைபழுத்த
துறைந்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
..சுவையே!...’

என்று அங்கயற்கண்ணியை விளித்து அழைத்த குமரகுருபரரின் பிள்ளைத் தமிழை நினைவூட்டியது நீங்கள் சொல் முத்துக்களைத் தொடுத்தளித்த பாச்சரம்.

அனந்த்

2009/12/24 சௌந்தர் <rsou...@gmail.com>
வடம் பிடிக்க வாரீர்

srinivasan s

unread,
Dec 26, 2009, 4:44:46 AM12/26/09
to santhav...@googlegroups.com
செளந்தர் அவர்களுக்கு,

பத்தியுடன் பாவடிவில் வடம் பிடிக்க-நாளும்
 . . பாரதத்தில் பாரதத்தின் பவனி உண்டு.
 எத்திசையும் உம்கவிதை பரவிவிடும் -- நன்றே
......என்றென்றும் எதிரொலிக்க எழுமதனின் ஓசை.

நன்றி.
அன்புடன்
அன்பில் சீனிவாசன்
2009/12/26 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
S. Srinivasan
F/4, Godavari Block,
SSM Residency,
Moppedu Road, Alapakkam,
New Perungalathur,
Chennai-600 063
Phone No: 044-2279 2334
Mob:+919971079484
vasan...@gmail.com
vasan...@yahoo.com

ramramak

unread,
Sep 26, 2026, 12:47:16 PM (11 days ago) Sep 26
to சந்தவசந்தம்
அருமை, திரு. சௌந்தர்.

Swaminathan Sankaran

unread,
Sep 26, 2026, 12:52:32 PM (11 days ago) Sep 26
to santhav...@googlegroups.com
Superb!

Sankaran


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/b719f343-8f35-440d-b42e-60a1e72a0d48n%40googlegroups.com.


--
 Swaminathan Sankaran
Reply all
Reply to author
Forward
0 new messages