தமிழில் வகையுளியால் எதுகை அமைத்தல் மிகவும் அரிதே காணும் ஒன்றோ?(இவ்வாறு வகையுளியைக்கொண்டு எதுகை அமைத்தல் கன்னடத்தில் பரவலாகக் கையாளப்படும் ஒன்று என்று படித்த ஞாபகம். மற்றோர் தெளிவுபடுத்தக்கூடும்);
2016-01-09 5:33 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:தமிழில் வகையுளியால் எதுகை அமைத்தல் மிகவும் அரிதே காணும் ஒன்றோ?(இவ்வாறு வகையுளியைக்கொண்டு எதுகை அமைத்தல் கன்னடத்தில் பரவலாகக் கையாளப்படும் ஒன்று என்று படித்த ஞாபகம். மற்றோர் தெளிவுபடுத்தக்கூடும்);
ஆம், நீங்கள் சொன்னவாறு சிக்கலான சவால் வெண்பா ஈற்றடிகள் இப்படி வகையுளியில் தொடங்குவது நினைவிற்கு வந்தது.ஆனால், மற்ற பாடல்களில் மிக அரிதோ? சிறப்பன்று என்று கருதப்படுகின்றதா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆம், நீங்கள் சொன்னவாறு சிக்கலான சவால் வெண்பா ஈற்றடிகள் இப்படி வகையுளியில் தொடங்குவது நினைவிற்கு வந்தது.ஆனால், மற்ற பாடல்களில் மிக அரிதோ? சிறப்பன்று என்று கருதப்படுகின்றதா?
--
Yes, I think it probably occurs with high frequency in yamagam type songs.However, I was wondering if there was some 'unstated' expectation to avoid it in other types of songs.
குடத்திலே கங்கையடங் கும்என்று படித்த ஞாபகம்.கோபால்.
திரிபுர மேவிடு மாமன் திருமடி தாவியமர்
திரிபுர மாறுடைத் தேவநின் சேவடி சேர்ந்தனனே
வேங்கட அத்திரி புரம்: வேங்கட மலையடியிலுள்ள திருப்பதி (adhri= mountain); திரி புரம் ஆறு உடைத்தேவன் : தான் திரிவதற்காக ஆறு
ஊர்களை/படை வீடுகளைக் கொண்ட முருகன்.
தங்கை தரித்தனன் சக்கரஞ் சங்கந் தடாதகையாந்
தங்கை அளித்தான் சடையன் களித்திடத் தாளினில்ச
தங்கை அசையத் தனிநடஞ் செய்தோன் தளிர்பதம்நி
தங்கை இணைசேர்த் திறைஞ்சிடச் சங்கடஞ் சார்ந்திலதே.
.. அனந்த்
10-1-2016
இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன் அவையுள் எனக்குப் பிடித்ததாய் நான் எழுத நினைத்து இன்னும் எழுதாமலேயே வைத்திருக்கும் காளமேகப் புலவனது சில ஈற்றடிகள் மட்டும் இங்கே பதிகின்றேன்1) சங்கொடுவா ராமா நுசம்2) குடத்திலே கங்கையடங் கும்3) காரமுந் தித்திக்கும் காண்4) டுங்கடுநட் புப்பகைகாட் டும்5) வசிதம் பரதே வனே6) டானைமுகற் காறிரண்டு கை
மேலும் காளமேகப் புலவன் ஒரு வெண்பாவில் அற்புதமாக வகையுளியைப் பயன்படுத்தி எதுகையொடு முடித்தமை கண்டு நான் வியந்ததுண்டு அந்த வெண்பாவையும் இங்கே பதிகின்றேன்பகருங்கால் மேடம் இடப்பம்மிதது னங்கர்க்கடகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச் - சிகந்தநுசுமகரங் கும்பம் மீ னம்பன் னிரண்டும்வசையறுமி ராசி வளம் !!
பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்கடகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் – சிகந்தநுசுமகரங் கும்பமீனம் பன்னி ரண்டும்வரையறு மிராசி வளம்இங்கே, மிராசி என்பதை குற்றியலிகரமாகக்கொண்டு அலகிட வேண்டுமோ?
வரையறு(ம்) ராசி வளம்.
இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன் அவையுள் எனக்குப் பிடித்ததாய் நான் எழுத நினைத்து இன்னும் எழுதாமலேயே வைத்திருக்கும் காளமேகப் புலவனது சில ஈற்றடிகள் மட்டும் இங்கே பதிகின்றேன்1) சங்கொடுவா ராமா நுசம்2) குடத்திலே கங்கையடங் கும்3) காரமுந் தித்திக்கும் காண்
சரியான ஈற்றடி:வசையறுமி ராசி வளம்.மூன்றாமடி நுசு என்றிருக்கையில், நான்காமடி எப்படி வரை என்றிருக்க முடியும்?
>> இதே போல வகையுளி கொண்ட ஈற்றடிகளை வைத்து வெண்பா அமைப்பது குறித்து நானும் எனது பள்ளி நூலகத்தில் படித்துள்ளேன்..
- விவேக்
1999-ல் தொடங்கப் பட்ட தமிழ் இணையத் தளங்களில் ஒன்றான ’வெண்பா வடிக்கலாம் வா’- வில், ஈற்றடிப் புதிர் என்று தொடங்கிய ‘விளையாட்டில்’ வகையுளி கொண்டனவாய் கொடுத்த ஈற்றடிகளுக்காக இட்ட எனது வெண்பாக்கள்: :
”படமும் பசியாற்றும் பார்”
ஆறுசுவைப் பண்டத்தோ டாவி பறக்குநற்
சோறுவர நேரஞ்சற் றாகுமெனக் - கூறும்
மடந்தை வளைக்கரத்தால் வந்தங் கிடும்பப்
படமும் பசியாற்றும் பார்.
{இதற்கான பசுபதியாரின் வெண்பா:
அடிசில் விரும்பி அடுக்களைக்குச் சென்றால்
கடிந்த மனையாளும் கைவிரித்தே காட்ட
நுடங்கியவோர் நோயாளி போன்ற பழம்பப்
படமும் பசியாற்றும் பார்.
(நுடங்கிய=துவண்ட; பப்படம்=அப்பளம்)}
”கையால் கமழும் குழல்”
பொன்னால் மிளிருஞ் செங்கழுத்து பூவையர்தம்
மின்னார் இடைமிளிரும் மென்பட்டால் - கன்னியிடும்
மையா லொளிரும் மலர்க்கண்கள் வாசமல்லி
கையாற் கமழுங் குழல்.
“ஆமை துரத்த முயல்”
முத்தும் பவளமுமாய் மூதறிஞர் யாத்திட்ட
முத்தமிழ்க் காவிய ரத்தினங்க- ளத்துணையும்
நீமெய்யாய்க் கற்று நெக்குருக வேண்டின்கல்
லாமை துரத்த முயல்
ஊமையே யாயினு மூனக்கண் ணில்லெனினும்
வாமை யுனக்கருள வேண்டுதியேல்- நாமறிந்த
ஆமை முயலின் கதையுணர்ந்து நீமுய
லாமை துரத்த முயல்
அனந்த் 13-1-2016
சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து. அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். ஒரு புலவர் ...........ரசந்தா அருணாச்சலம் என்றார். இன்னொருவர் ... அதிர சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்
இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே
உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே
அவசியம் என்மனையில் அன்பனே நீவா
சிவசிவா என்றேன் சிரித்து.
நீ வாசி வசி வா
Nice!Lot of interesting info and songs in this thread!
இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே
உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே
அவசியம் என்மனையில் அன்பனே நீவா
சிவசிவா என்றேன் சிரித்து.
2016-01-14
----------------
மருந்து விரும்பிய வானவர்க்கா நஞ்சை
அருந்து பெருமான்கல் லால்கீழ் - இருந்து
தவசிநால் வர்க்கறஞ்சொல் தாழ்சடையன் ஓர்வஞ்
சிவசிவா மத்தன்சீர் செப்பு.
மருந்து - அமுதம்;
தவசி நால்வர்க்கு அறம் சொல் - சனகாதியர் நால்வருக்கு உபதேசித்த;
ஓர்
வஞ்சி வசி வாமத்தன் சீர் -
உமை
தங்கும் இடப்பக்கம் உடையவன்
புகழை;
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
2016-01-15 7:44 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:இன்னும் படிப்பேன் எனச்சொல்லும் மாணவனே
உன்னை வரவேற்றே ஒன்றுசொல்வேன்- நன்றே
அவசியம் என்மனையில் அன்பனே நீவா
சிவசிவா என்றேன் சிரித்து.
யோசனையைத் தூண்டுகிற யோகம் பயின்றவரார்?வாசனைகள் கொய்யும் வரம்பெற்றாரார்? - நேசம்குவித்துச் சிவன் குளிர்க்கும் நியூஜெர்சிவசிவா என்றேன் சிரித்து.நியூஜெர்சியில் வசித்து, அங்கே வா என்று எல்லோரையும் கூப்பிடுபவர். கிகி...(பெட்டு கட்றேன். =குளிர்க்கும்? ஆட்சியிருக்கிறதா? என்று கேட்பார். கேட்கட்டும். கிகிகி)
--அன்புடன்,
ஹரிகி.
மருந்து - அமுதம்;
தவசி நால்வர்க்கு அறம் சொல் - சனகாதியர் நால்வருக்கு உபதேசித்த;
ஓர் வஞ்சி வசி வாமத்தன் சீர் - உமை தங்கும் இடப்பக்கம் உடையவன் புகழை;
காலன் பிழைகண்டு காலால் உதைத்தவன்,
பாலமுதம் அன்றீந்தான் பன்றிகட்கு. – ஞாலத்(து)
அனைவரும் நன்மையுற அஞ்சாமல் அந்நஞ்
சினையுண்டான் செம்மைதனைச் செப்பு.
நெல்லைவாழ் தேவி; நிலைத்த துணையாவாள்;
எல்லையிலா அன்புடையாள் எம்மீது. - வெல்லும்
எமதன்னை அன்றோ! எழிலோங்கும் அக்காந்
திமதியாள் சீர்செவிக்குத் தேன்.
அ கி வ
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
கையுளி ஆக்கும் கவின்சிற்பம் இங்கேவ
கையுளி ஆக்குமெது கை.
(1) முருகன்
ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு
டத்து வசவரு டா !
(2) பெருமாள்
ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகரு
டத்து வசவரு டா !
--
(1) முருகன்
ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகுக்கு
டத்து வசவரு டா !(2) பெருமாள்
ஆக்கம் அறிவுடைமை ஆன்ற பொருளுடைமை
ஊக்கம் பெருமை ஒழுக்கமொடு - வீக்குபுகழ்
இத்தரையில் என்றும் இனிதடைய வேகரு
டத்து வசவரு டா !
பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்கடகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்தநுசுமகரங் கும்பமீ னம்பன் னிரண்டும்
வசையறுமி ராசி வளம் . (காளமேகம்)
மின்சாரம் சம்சாரமே
- திருக்குறள் பெ. ராமையா
’சமயத்தில் ஒத்துழையா ‘ஷாக்’அடிக்கும் தொட்டால்
இமைசிமிட்டும் இன்பமதை ஊட்டும் - நமைஉயர்த்தும்
தன்சாரம் குன்றாத தன்மையால் எஞ்ஞான்றும்
மின்சாரம் சம்சார மே!’
விரிவுரை:
http://arivhedeivam.blogspot.com/2009/07/blog-post_31.html
நா. கணேசன்
2016-01-14 5:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து. அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். ஒரு புலவர் ...........ரசந்தா அருணாச்சலம் என்றார். இன்னொருவர் ... அதிர சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்
2016-01-14 5:57 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:சோழவந்தானில் அரசஞ்சண்முகனார் எனு தமிழ்ப்புலார் இருந்தார். அவர் வீட்டில் ஒரு விருந்து புலவர்கள் கூடியிருந்து உண்ட விருந்து. அன்று பரிமாறியவர் பெயர் அருணாச்சலம்ஒரு ஈற்றடி கொடுக்கப்பட்டது. அருணாச்சலம் தன் அருகே பரிமாற வரும் போது அங்கிருக்கும் புலவர் சந்தா அருணாச்சலம் என்னும் ஈற்றடி கொண்டு வெண்பாச் சொல்லவேண்டும். அது உணவுப்பண்டத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். ஒரு புலவர் ...........ரசந்தா அருணாச்சலம் என்றார். இன்னொருவர் ... அதிர சந்தா அருணாச்சலம் என்றும் பாயசந்தா ,அருணாச்சலம் என்றும் சென்றுகொண்டிருந்தது. சண்முகனாரின் இலையருகே வந்தபோது சம் சேர்த்துச் சொல்லும் பண்டங்கள் ஏதுமில்லை. எனவே அவர் சொன்னார் இன்னும் கொஞ்சந்தா அருணாசலம்
மனமுண்டாம் நட்பை வளர்க்கக் கவிஞர்
இனமுண்டாம் கூடி இணைய; - தினம்தூரி
கைக்குண்டாம் கற்பனையைத் தாளில் வடிக்கஇலந்
தைக்குண்டாம் யாப்புத் திறன்.
2008-ஆம் ஆண்டில் ஐயரவர்களின் பிறந்த தினத்தையொட்டி இங்கிட்ட பதிகத்தினின்று ஒரு பாடல்; வகையுளி வழிவரும் எதுகை கொண்டது.
********************
(நேரிசை வெண்பா)
அந்தமலி அம்பலத்தா டய்யனின் பாதார
விந்த மறவாத மீனாட்சி - சுந்தரனின்
தாசனைப் பன்மேன்மைத் தந்துதந்த செந்தமிழ்வி
யாசனைப் போற்றாதார் யார்.
டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.
டகர வர்க்கத்தில் தொடங்கும் ஒரு வெண்பா சந்தவசந்தத்தார் தரலாமே.திரு கணேசன்,தமிழ்ச் சொல் ட-வில் தொடங்காது என்று தெரிந்தும் இந்தப் பயிற்சி எதற்கு? வகையுளி எதுகைக்கு உதவுகையில் 2 ஆம் அடிக்குமேல் புலவர் சிலர் எழுதியிருக்கிறார்கள் என்பதால் ட, ற, ன. போன்ற எழுத்தோடு ''தொடங்கும்' கவிதை எழுதிப் பழகுவது என்ன பயன் தரும்? இயன்றவரை வகையுளி எதுகை இல்லாத பாட்டு எழுதப் பழகுவதே கற்போருக்கு நலம் தரும். கற்றோருக்கு இது பெரிய சவால் இல்லை. ஆகவே நீங்கள் சொல்கிற பயிற்சி தவிர்க்கத் தக்கது என்பது என் சிற்றறிவின் எண்ணம்.நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.