--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிஇருபா இரு ப.:. து!**************
நாற்பதாம் கவியரங்கின் முதல் கவிஞராககவிவேழம் இலந்தையாரை அன்புடன் அழைக்கிறேன்!......**********************
கடவுள் வாழ்த்து!நம்பிக்கை வைத்தே நவின்றே துதிக்கின்றோம்தும்பிக்கை நாதன் துணைஐந்துக ரத்தொடும் ஆனைமு கத்தொடும்ஆணைபு ரிந்திடும் அரசேநல்இந்தின் இளம்பிறை போன்றநின் கொம்பினால்இமயத்தில் எழுதிடும் புலவோனே!சந்தமி குத்திடும் செந்தமி ழவ்வைசொல்தன்னையு ணர்ந்தருள் புரிவோனேசிந்தைம கிழ்ந்திடச சேரனை முந்தியத்திருக்கயி லைதனில் திகழ்வோனே!இந்தபுத் தாண்டினில் எங்கள்வி ருப்பங்கள்எய்திடக் கவிமலர் இடுகின்றோம்!சந்தவ சந்தத்தின் சாதனை ஆண்டெனச்சாற்றும்பு கழெம்பா லெய்திடவே,தந்தனத் தானனச் சந்தமு ணர்ந்துடன்தாண்டவ மாடிடுஞ் சற்குருவே!''வந்தருள் தந்தருள்'' என்றுவ ணங்கியெம்வாயுரை கையுறை ஆக்குவமே!
'''ஜய''வென்னும் நல்வெற்றி சாதனைக்கோர் புத்தாண்டாய்நயம்செய்க எங்கும் நலம்!அமுதுண்ட விண்ணோர்கள் அனைவருமே மாய்ந்துவிடஆலகா லத்தை உண்டே,அழியாமல் எந்நாளும் அடியாரை வாழ்விக்கஅரங்கத்தில் ஆடு கின்றாய்!கமுகோடு தென்னையும் கடம்பும்வ ளர்ந்திடும்கானகப் பொதிகை மலையில்கவினார்ந்த தமிழ்தனை அகத்தியர்க் கருளியேகாலத்தை வென்று நின்றாய் !தமிழான அமுதுண்டு தளிர்த்திட்ட புலவோர்கள்தருபே ரிலக்கி யத்தின்தரங்கண்டு பாராட்டும் முருகனின் உபதேசம்தாழ்ந்தே பணிந்துகேட் டாய்!உமியான எனக்குள்ளும் ஒளியான கனல்மூட்டியோகம் பயிற்று வித்தே,ஒருசிறிய மின்னலை உருவாக்கி உலகிற்கேஒளிகூட்ட வேண்டு வேனே!தமிழ் வாழ்த்துநீரில்நெ ருப்பினில் நீந்தினாய்! கரையிலேநின்றவர்க் குறுதிசொன் னாய்!நின்னருட் பெருமையை நெஞ்சாரப் போற்றினோர்நிம்மதி கொள்ள வைத்தாய்!
வீரமிகும் பாரதியின் நட்பைப் பெற்றார்விடுதலையை நாடிவளர் வேட்கை கொண்டார்சாரமிகும் தர்மசங்க நெசவுச் சாலைதனித்தசுதே சிப்பிரச்சா ரத்தின் சங்கம்ஊரிலுரு வாக்கிமிக ஊக்கத் தோடேஉண்ணாமல் உறங்காமல் தொண்டு செய்தார்யாருமவர் பின்சென்றார் ஆங்கி லேயர்அஞ்சிடவே கப்பல்விட ஆலோ சித்தார்! 8ஆர்வமுடை ஆசான் பெருமாளும் பாட்டியுடன்சேர்ந்தே இதிகாசத் தேனமுதை - ஆரக்கற்பித்தார்! ஆங்கிலத்தை கற்றார்நற் கல்விதரும்பொற்புடைய பள்ளியிற் புக்கு. 9புக்கவெள்ளைக் காரரரவர் புரிந்த தீங்கைப்போக்கிடவே ஆங்கிலத்தில் புலமை பெற்றார்;தக்கவராய்த் தொழிலாளர் சங்கம் கண்டேதனிவேலை நிறுத்தத்தில் ஈடு பட்டார்;மிக்கவெள்ளை தனைப்பணியச் செய்த போரால்வேண்டுவன நிறைவேற, வியந்தார் நாட்டார்!மக்களினம் வாழ்த்திடவே சந்திர பாலர்வருகைதரப் பொதுக்கூட்டம் நடத்திவைத்தார்10!வைத்த பணத்தையெலாம் வாரிச் சுருட்டிடவேசைத்தானாய் வெள்ளை சதிசெய்தான்- எய்த்தசுப்பலெலாம் துள்ளிக் குதித்தெழவே ஓட்டினார்கப்பல்தனைத் தெற்குக் கடல்! 11
கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்
அவனை வணங்கும் அகம்.
கவியுணர்வைச் சுண்டிக் கணிக்கின்ற நல்ல
அவைரசனை வேண்டாதார் யார்?
சொற்பொழிவு, கட்டுரைகள், கவிதை, பாட்டு
துலங்குகிற ஆராய்ச்சி, என்றே இங்கே
விற்பனங்கள் காட்டுகின்ற இராம மூர்த்தி
மேனாளில் நல்லபெயர் பெற்ற ஆசான்
பொற்புடனே இந்நாளும் அவர்மா ணாக்கர்
புகலுகிறார் பெருமையுடன் அவரின் பேரை
கற்பனைகள் பொங்கிவரக் கவிதை நெய்யும்
கவியரங்கத் தலைவருக்கென் வணக்கம், வாழ்க!
எனக்குப் பிடித்த பூவுண்டு,
எனக்குப் பிடித்த பாவுண்டு,
எனக்குப் பிடித்த உணவு வகை
எத்த னையோ இங்குண்டு,
எனக்குப் பிடித்த கவியொருவன்
எனக்குப் போக்குக் காட்டுகிறான்
எனக்கு முன்னே விளையாடி
இருக்கிறேன் நான் என்கின்றான்.
என்ன பேரோ தெரியாது,
எங்கே வாசம் அறியேன் நான்
என்ன மொழியோ அவன்மொழியும்
இதுவும் எனக்குத் தெரியாது,
சின்ன உருவா, பேருருவா
சிவாப்பா வெளுப்பா தெரியாது.
என்னைக் கவியால் ஈர்க்கின்றான்
என்னுள் கவிதை வார்க்கின்றான்
கண்முன் னாலே வரமாட்டான்
காட்டு மொழியில் தாட்டான்
பண்கள் இசைப்பான், புயலாவான்
பரிந்து தென்றல் இதமாவான்
எண்ண மெல்லாம் அவன்நிறைவான்
எனினும் முகத்தை அவன்காட்டான்
அண்ணல் அவனே பிடித்த கவி
அவனைப் பற்றிப் பாடுகிறேன்.
அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும்நான் காணவில்லை
எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்
ஏனோ எனக்குத் தெரியவில்லை (அந்தக்..)
உள்ளுக்குள் நின்றெனை ஊக்கப் படுத்தியே
ஓவ்வோர் உணர்வினைத் தட்டுகிறான்
கள்ளத் தனமாக என்றன் கனவினில்
காணாமலே இசை கொட்டுகிறான் (அந்தக்..)
கோடை இடியிலே கொண்டல் பொழிவிலே
கொட்டும் அருவி முழவினிலே
ஆடைகழற்றிய புல்லின் உராய்விலே
அட்டகாசமாகப் பாடுகிறான் (அந்தக்..)
சோறு கொதிக்கும் உலையில் அகவலின்
சுத்த சங்கீதத்தைக் காட்டுகிறான்
ஆறு நடக்கும் நடையில் விருத்தத்தின்
அத்தனை சந்தமும் மீட்டுகிறான் (அந்தக்..)
சாக்கடை நாற்றத்தை வார்த்தையில் பூசியே
சவ்வாது போலவே மாற்றுகிறான்
தீக்கடையும் உலைக் கூடத் துருத்தியில்
ஜீவனை வாங்கியே சாற்றுகிறான் (அந்தக்..)
துள்ளு மனமெனில் துள்ளுகிறான் சுக
சோகத்தை வார்த்தையில் அள்ளுகிறான்
பள்ளு சந்தம் சிந்து பாவகை யாவையும்
பாடிப்பாடிப் பாடித் தள்ளுகிறான் (அந்தக்..)
அங்கொரு மல்லிகை மெல்லிதழ் கோதியே
ஆகா, மதுர கவி பொழிவான்
எங்கும் இயங்கும் இயக்க மனைத்திலும்
ஏற்றதோர் ஆசு கவி மொழிவான் (அந்தக்..)
காலை வெளுப்பிலும் மாலைச் சிவப்பிலும்
காட்டும் மிறைப்பா ஒரு புதுமை
ஓலக் கடலலை உச்சியில் வித்தாரம்
ஓமெனப் பாடுதல் ஓர் இனிமை (அந்தக்..)
சேவலின் கட்டியம் யார்கவிதை ?- எழும்
சிங்கத்தின் கர்ச்சனை யார் கவிதை
நாவல் மரக்குயில் தொண்டையிலே இசை
நாதம் பொழிவது யார்கவிதை? (அந்தக்..)
சின்னக் குழந்தை மழலையிலே சுகம்
தேக்கி இசைப்பது யார்கவிதை
தென்றல் நடிப்பில் புயல் இடிப்பில் இதச்
சீற்றம் கொடுப்பது யார்கவிதை (அந்தக்..)
காணவிலை, தனைக் காட்டவிலை என்ன
காரணம் என்றும் தெரியவிலை
பாணம் விரைகிற ஓசையைக் கேட்கிறேன்
பார்வையில் ஏனோ தெரியவில்லை (அந்தக்..)
காட்சிகள் யாவும் கவியெனச் செய்பவன்
காட்சிப் பொருளென மாறுவனோ?
சாட்சியாய் நின்றவன் சாற்றும் புதுப்புது
சங்கதி யாவையும் கூறுவனோ? (அந்தக்..)
என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை
எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?
என்ன இருக்குது பேரினில் நண்பரே
என்சொற் கவனையே காப்பிடுவேன் (அந்தக்..)
--
புலவர் பெருமான் புகுந்துவிளை யாடிக்
கலக்கிவிட் டார்தம் கவியால்! – இலந்தையெனும்
ஆனைக்கு அனுப்பினார் அழைப்பு தமிழமுதப்
பானையைக் கவிழ்த்துத் தர.
அனந்த் 13-4-2014
முற்றிலும் கவிநயம் சொட்டும் படைப்பில் எனக்கு மெத்தப் பிடித்தவை, "படைத்த கவிதையுள் மிடைந்த கருத்தெனப் பரவிய எழுத்தவல் பொரியாகும்.." என்று தொடங்கி அருணகிரிநாதர் ‘பக்கரை விசித்ர மணி..’ என்னும் திருப்புகழில் விரித்த கணபதியெனும் ஆனையின் உணவு வகைகளைக் கவிவேழத்தின் செய்யுள் பகுதிகளாக்கிய அரங்கத் தலைவரின் திறனும் அழகும்.
கடவுள் வாழ்த்து!
நம்பிக்கை வைத்தே நவின்றே துதிக்கின்றோம்தும்பிக்கை நாதன் துணைஐந்துக ரத்தொடும் ஆனைமு கத்தொடும்ஆணைபு ரிந்திடும் அரசேநல்இந்தின் இளம்பிறை போன்றநின் கொம்பினால்இமயத்தில் எழுதிடும் புலவோனே!
......................................
படைத்த கவிதையுள் மிடைந்த கருத்தெனப்பரவிய எழுத்தவல் பொரியாகும்பொலிந்த மனமெனப் பருத்த புஜமெனப்பொதுளிய அசையப்ப மதுவாகும்அடைத்த வரிகளுள் கொடுத்த விரிவினில்அணிந்தசீர் சிறுமோ தகமாகும்தடுத்த தளைகளுள் சிலைத்த ஒலிநயம்கடித்திடும் சீடைதம் வகையாகும்அடுத்த அடிகளில் கொடுத்த கவித்திறம்செடித்திடும் அருகம்புல் லதுவாகும்தொடுத்த தொடையதில் அடங்கும் இயல்திறம்திதித்திடு சுழியத்தின் சுவையாகும்படைத்த பாவகை மொழிந்த மொழிவளம்கடித்திடும் கரும்பதன் சுவையாகும்நடக்கும் வேழத்தின் தடத்தை அறிந்தநம்இலந்தையின் கவிதைகள் நமைச்சாரும்.....கவிவேழம் "பிடித்த"தனைக் கனவேகம் கொடுப்பதனைக்செவிகொடுத்துக் கேட்பதுவும் விழிவிரித்துக் காண்பதுவும்புவியோரின் பாக்கியமே, புலவோரின் போக்கியமேகவிஞரெலாம் சேர்ந்திடுக கதித்தெழுந்தே அணிதிரள்க!வருக கவி தருக !வணக்கம்
நாற்பதாம் கவியரங்கின் முதல் கவிஞராககவிவேழம் இலந்தையாரை அன்புடன் அழைக்கிறேன்!......**********************எண்ணத்தில் உயர்ந்தானை இணையத்தின்வேந்தனென இயங்கு வானைபண்ணொத்த கவிதைதரும் பாரதியைஉள்ளத்தில் பதித்துள் ளானைகண்ணொத்த சிவன்கழலைக் காரைக்காலம்மைவழி காட்டுவானைவிண்ணொத்த புகழின்கவி வேழமெனத்திகழ்வானை வேண்டு கின்றேன்!மனக்கோயில் தேவனென மதயானைதனைப்போற்றிப் பூசை செய்யும்இனத்தாரின் உளங்கவர்ந்த இலந்தைநகர்ஏந்தலெனும் இராம சாமீ!எனக்கொன்று பிடித்ததென எதனைத்தான்காட்டிடினும் ஏற்றுக் கொள்வோம்தனக்குவமை இல்லாய்நின் தமிழ்க்குவமைகண்டிடயாம் தவிக்கின்றோம், வா!
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கடவுள் வாழ்த்து!
நம்பிக்கை வைத்தே நவின்றே துதிக்கின்றோம்தும்பிக்கை நாதன் துணை
செக்கிழுத்த செம்மல் வ.உ. சிஇருபா இரு ப.:. து!**************
அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும்நான் காணவில்லை
எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்
ஏனோ எனக்குத் தெரியவில்லை (அந்தக்..)
--
அந்தக் கவிஞனை அன்புள்ள நண்பா!நீ
.. அங்கிங்கே தேடாதே, உன்னுடைய
சிந்தை தனிலே இலந்தை எனும்பேரில்
.. சிந்துக் கவிவழி தென்படுவான்!
அனந்த்
>>அந்தக் கவிஞனைத் தேடுகிறேன் அவன்
யாரென இன்னும்நான் காணவில்லை
>> எந்த இடத்திலும் காணலாம் என்கிறார்
ஏனோ எனக்குத் தெரியவில்லை>> என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை
எந்தப் பெயர் சொல்லிக் கூப்பிடுவேன்?
------------------
என்ன பேரோ தெரியாது,
எங்கே வாசம் அறியேன் நான்
என்ன மொழியோ அவன்மொழியும்
இதுவும் எனக்குத் தெரியாது,
சின்ன உருவா, பேருருவா
சிவாப்பா வெளுப்பா தெரியாது.
என்னைக் கவியால் ஈர்க்கின்றான்
என்னுள் கவிதை வார்க்கின்றான்
கண்முன் னாலே வரமாட்டான்
காட்டு மொழியில் தாட்டான்
பண்கள் இசைப்பான், புயலாவான்
பரிந்து தென்றல் இதமாவான்
எண்ண மெல்லாம் அவன்நிறைவான்
எனினும் முகத்தை அவன்காட்டான்
அண்ணல் அவனே பிடித்த கவி
அவனைப் பற்றிப் பாடுகிறேன்.
என்றன் உளங்கவர் அந்தக் கவிஞனை
கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்
அவனை வணங்கும் அகம்.
கவியுணர்வைச் சுண்டிக் கணிக்கின்ற நல்ல
அவைரசனை வேண்டாதார் யார்?
சொற்பொழிவு, கட்டுரைகள், கவிதை, பாட்டு
துலங்குகிற ஆராய்ச்சி, என்றே இங்கே
விற்பனங்கள் காட்டுகின்ற இராம மூர்த்தி
மேனாளில் நல்லபெயர் பெற்ற ஆசான்
பொற்புடனே இந்நாளும் அவர்மா ணாக்கர்
புகலுகிறார் பெருமையுடன் அவரின் பேரை
கற்பனைகள் பொங்கிவரக் கவிதை நெய்யும்
கவியரங்கத் தலைவருக்கென் வணக்கம், வாழ்க!
நீலவான் பார்த்துக் கீழே
நிலத்தையும் பார்த்துக் கொள்ளும்
கோலமும் இன்றிக் கொள்கைக்
குறிப்பெதும் இன்றி , எங்கோ
மூலையில் கிடந்த என்னை
முன்னிலை சேர்த்து விட்ட
சீலனைத் தொழுதே என்றன்
செயலினைத் தொடங்கு கின்றேன்
வந்துநான் நின்ற போது
வாழ்த்தினாய்வளமார் கல்வி
தந்தெனைக் காத்து நின்றாய்
தண்பெரும் தமிழைத் தந்தாய்
முந்திடும் வாழ்வில் என்னை
முன்னிலை சேர்த்துவ் இட்டாய்
செந்தமிழ்ச் செம்மலே என்
தெய்வமே நின் தாள் போற்றி
குருவருள்
ஆக்கிய சோற்றைத் தட்டில்
அன்பொடு வைத்துப் பாசம்
தேக்கிய கண்க ளோடு
சேர்ப்பவர் இருந்தால் தானே
போக்கலாம் பசியை , நாமே
போட்டதைத் தின்றால் விக்கல்
தூக்கிடும் போது முந்தித்
துணைசெய வருவார் யாரே!
ஆக்கிய சோறு தெய்வம்,
அன்பொடு நெய்யை வார்த்து
நாக்கிலே சுவையைச் சேர்க்கும்
நலத்திலே பதப்ப டுத்தி
நோக்கிலே கனிவைக் கூட்டி
நொருங்கிடத் தின்ன வைக்கும்
ஊக்கமும் வலிவும் சேர்க்கும்
உத்தமர் குருவே ஆவார்
என் ஆசான்
விண்சுமக்கக் கூடாத வேகத்தின் உந்துதலால்
மண்சுமக்க வந்திங்கு மலர்ந்திட்ட இளம்பச்சை
கண்சுமக்கும் மாமாயக் காட்சிகளைத் தேராமல்
பண்சுமக்கும் ஒலிச்சிதறல் பலப்பலவாய்ச் சிந்தியநாள்
‘அம்மா' சொல்நீ எனும்குரலில்
ஆதிகாலக் கனவுதிர
அம்மா என்றேன் . தாய்நின்றாள்
அவளே என்றன் முதல் ஆசான்
நாவாடும் ஆட்டத்தின் நளினத்தில் தான்மயங்கிப்
பாவாடும் சொல்மிழற்றி , பலருக்கும் மதுவேற்றி
தூவானம் பெய்தங்கே தொடர்பின்றிப் பேசுகையில்
போவோரும் வருவோரும் பூரித்த அந்நாளில்
ஒன்றும் ஒன்றும் இரண்டென்றார்
உணர்ந்துசொல்லைப் பேசென்றார்
என்றன் தந்தை எதிர்நின்றார்
எனக்கோர் ஆசான் அவரானார்
விண்ணதிர மழைபெய்து வெளியெல்லாம் நீராகும்
கண்ணயர்ந்த புல்பூண்டு கால் ஊன்றித் தலை நிமிரும்
வண்ணமுறும் பூவகைகள் மணம்வீசும் என்றாலும்
எண்ணமெல்லாம் எதைப்பார்க்க எனவெண்ணி ஏங்குகையில்
படத்தைக் காட்டிக் கதைசொன்னார்
பாதை செல்லத் துணைநின்றார்
படிக்கப் பள்ளி ஏகுகையில்
பாடம் சொன்னார் என்னாசான்
விட்டத்தில் கா லூன்றி மேல்கூரை படர்ந்திட்ட
ஒட்டடடையை நீக்குகிற உற்சாக வேகத்தில்
சட்டென்று காலிடறித் தரையினிலே வீழ்ந்துவிட
எட்டியொரு அடிவைக்க இயலாத அந்நாளில்
வீட்டுக்குள்ளே இடந்தந்து
மேகம் போலப் பரிவாகிப்
தீட்டும் அன்புச் சுடராகித்
தெய்வம் ஆனார் ஓராசான்
பள்ளியினைத் தாண்டியதும் பாதைவழி தேராமல்
அள்ளுகிற பசிக்கணப்பின் ஆங்காரம் தாங்காமல்
துள்ளிவரும் பருவத்தில் ஹோட்டலிலே தொழில்செய்து
எள்ளலுக் கஞ்சாமல் இருந்திட்ட அந்நாளில்
எண்ணைப் பண்டம் தின்னாதே
என்றோ ஒருநாள் பெரியவனாய்
நண்ணும் வெற்றி உனக்குவரும்
நவின்றார் அங்கே ஓராசான்
தேர்வினிலே வெற்றபெற்ற செய்தியினைப் பார்த்ததுமே
ஆர்வமுடன் சான்றிதழை அடைந்துவிடும் வேட்கையிலே
ஊர்செலவும் சான்றிதழை உன்னிடத்தில் தரமாட்டேன்
சீர்பெறவே கல்லூரி சென்றிடுக எனச்சொல்லி
ஊக்கம் தந்து கல்லூரி
உடனே செல்ல பணித்திட்டார்
தேக்கம் வந்த அப்போதில்
தெம்பைத் தந்தார் அவ்வாசான்
வேகின்ற வெய்யிலிலே வேறொருவர் துணையின்றி
போகின்ற காலத்தில் புண்ணாகும் நெஞ்சத்தில்
ஆகின்ற வாழ்க்கையதன் அடிச்சுவடே காணாமல்
சோகத்தின் உச்சியினைத் தொட்டுவிட்ட நேரத்தில்
காவா என்ற என்குரலும்
கடவுள் காதில் விழுந்ததுவோ?
வாவா என்றே ஓர்குரலும்
வரவு பாடி வாழ்த்தியது
கேட்டகுரல் கிண்கிணியின் கீதத்தில் அமுதயிசை
மீட்டிவரும், சோகத்தை வீட்டிவரும், உயிர்ச்சொல்லை
ஊட்டிவரும், கேட்டாலே உற்சாகம் பொங்கிவரும்
நாட்டமெலாம் அக்குரலின் நாதத்தில் ஒன்றிவிடும்
கருணை மழையைப் பொழிகண்கள்
காந்தம் போலக் கவர்ந்துவிடும்
உருகிச் சொல்லும் கவிதையிலே
உலகம் முனே மறைந்துவிடும்
கோடையிலே வீசுகிற குளிர்தென்றல் அவர்பேச்சு
வாடுகின்ற மனப்பயிர்க்கு வார்த்துவிடும் நல்லமழை
தேடுகின்ற தெய்வதத்தின் தெரிசனத்தை, இலக்கியத்தை
நாடிவரும் அன்பருக்கு நல்கிவிடும் பேராற்றல்
வீட்டில் தங்க இடந்தந்தார்
விரிந்த உளத்தில் இடந்தந்தார்
பாட்டைத் தந்தார், தமிழ் தந்தார்
பண்பின் ஆசான் அ.சீ.ரா
காவியங்கள் ஆய்ந்த மனம் , கம்பனிலே தோய்ந்த உளம்
நாவினிக்கப் பேசியதை நாம் பருகக் காட்டுதிறம்
பாவிரிக்கும் பந்தலிலே படர்நிழலில் பூமலரும்
மேவுமவர் ஊக்கத்தில் வெற்றுளத்தும் பாமலரும்
மேலை நாட்டுக் கலைசெல்வம்
விரும்பிக் கற்றுப் பலர்காணக்
கோலம் போட்டுக் காட்டியவர்
கொஞ்சு தமிழில் கூட்டியவர்
அறிவென்றும் அழகென்றும் பரிவென்றும் மூவழியாய்ச்
செறிவோடு கவிதையதன் திறம்காட்டும் செம்மலவர்
பறைசாற்றத் தெரியாமல் பணமுடிப்பு இலட்சத்தை
திறனாய்வுத் தமிழுக்கே சேர்த்திட்ட வள்ளலவர்.
வங்கக் கவிஞர் தாகூரின்
வார்த்தை தன்னில் தான்மயங்கித்
துங்கம் உயரத் தமிழ்மொழியில்
தொடுத்துத் தந்தார் என்னாசான்.
மெல்லிதழ் சேர் ரோஜாவின் மென்மையினைப் பேசுவதோ?
சொல்லாலே தெய்வதத்தின் சோதிசொலக் கூடுவதோ?
மல்லிகையின் நறுமணத்தை வார்த்தைக்குள் பூட்டுவதோ?
புலிதழின் பசுமையினைப் புகலுவதும் எவ்வாறு?
என்றன் வார்த்தை வளைவுக்குள்
என்னால் சொல்லல் ஆகாது
இன்னும் இன்னும் அவரின்புகழ்
ஏற்றம் பெற்றுவாழியவே!
ஊற்றாண்டு கொண்டிருக்கும் நதிவற்றிப் போகாது
காற்றாண்டு வரும்போது கனல் ஆறிப் போகாது
நேற்றாண்டு கொண்டிருந்தோர் நினைவடங்கிப் போனாலும்
நூற்றாண்டு கண்ட குரு புகழடங்கிப் போகாது
இங்கே இன்னும் எப்பொழுதும்
எதையோ கற்க விரைகின்றேன்
எங்குச் சென்ற போதினிலும்
இன்னும் நானோர் மாணவனே!
இப்பொழுதுதான் பார்த்தேன். அந்தக்கவியரங்கில் இட்டதையே இங்கிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். என்றாலும் பலருக்கு இது புதியதுதான். மாற்றிவிடுகிறேன்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன்.இப்பொழுது தலைப்புஎனக்குப் பிடித்த என் ஆசான்.
கவிதையை என்னுள் கனிவாய்ப் பொழியும்
அவனை வணங்கும் அகம்.
.......
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன்.இப்பொழுது தலைப்புஎனக்குப் பிடித்த என் ஆசான்.
அந்தக் கவிதையை இப்பொழுது மாற்றிவிட்டேன்.இப்பொழுது தலைப்புஎனக்குப் பிடித்த என் ஆசான்.
ஆக்கிய சோறு தெய்வம்,
அன்பொடு நெய்யை வார்த்து
நாக்கிலே சுவையைச் சேர்க்கும்
நலத்திலே பதப்ப டுத்தி
நோக்கிலே கனிவைக் கூட்டி
நொருங்கிடத் தின்ன வைக்கும்
ஊக்கமும் வலிவும் சேர்க்கும்
உத்தமர் குருவே ஆவார்
சந்த வசந்தக் கவியரங்கம்-40
தலைவர்- புலவர் திரு. இராமமூர்த்தி
தலைப்பு- எனக்குப் பிடித்த.....
இறைவணக்கம்-
என்றும் எனதுள்ளம் ஈசா!நின் எண்ணத்தில்
ஒன்றி இருக்க உதவிடுவாய் – மன்றிதனில்
யானெழுதும் யாவும் உனதுபுக ழாய்மாறத்
தானமளிப் பாய்உன் தயை.
தலைமை வாழ்த்து-
பள்ளத்தை நோக்கிப் பறந்து வரும்பெரும்
வெள்ளம் எனவிரும்பிக் கேட்போர்தம்- உள்ளத்தில்
தெள்ளுகவித் தே(ன்)நீர் சொரியும் தலைவருக்கு
உள்ளபடி முன்வாழ்த்(து) உரித்து.
அவையோர் வாழ்த்து-
வெற்றிப் பெயரில் விளங்குமிப் புத்தாண்டில்
சுற்றும் உலகத்தைச் சூழ்ந்துள்ள – தெற்றனைத்தும்
தீர வழிகாட்டும் தீரரென இவ்வரங்கில்
சேர்ந்தோர்க்குச் செப்புவேன் வாழ்த்து.
அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்
கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்
அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில் தோன்றியதோர் தீ 1
தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்
நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப் – பாப்புனைந்து
போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்
சாற்றுவேன் அன்னான் தகை 2
அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை
முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே
தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்
பேரென்று பிள்ளைஅறிந் தான் 3
அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்
குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு
பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்
சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன் 4
தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்
ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்
தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்
பந்தமறுத் தான்பா லகன் 5
அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.## 6
தான்யார் எனவறியான் தன்நாமங் கெட்டான்அக்
கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்
ஆழ்ந்தான் அருணா அசலம்போல் ஆனந்தம்
சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து 7
தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்
விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்
காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்
ஓட்டியவன் ஒத்தோர் வழி 8
வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு 9
நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண் 10
பின்குறிப்பு:
**திருவாரூரில் குடிகொண்டுள்ள தியாகேசன்பால் தீராக் காதல் வயப்பட்ட நங்கை ஒருத்திக்கு
நிகழ்ந்த மாற்றங்களைத் திருநாவுக்கரசப் பெருமானார் தமது பாடலொன்றில் அழகுற வருணித்துள்ளார்:
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. – (திருமுறை
6.25.7)
**பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வாழ்வில் நிகழ்ந்த மாற்றங்கள் ஒவ்வொன்றும் அந்த நங்கைக்கு ஏற்பட்டவைகளோடு ஒத்திருப்பதை, திருமதி. கனகம்மாள் ”ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை” என்னும் நூலில் சுட்டியுள்ளார். மேல்காணும் கவிதை அக்கருத்தை ஒட்டி (மண்டலித்தல் இல்லாத) அந்தாதி வெண்பாக்களால் அமைக்கப்பட்டது.
## இரமணர் இயற்றிய அருணாசல அக்ஷர மணமாலை என்னும் துதியில் அருணாசலத் திறைவன்பால் மையல் வயப்பட்ட தலைவியாகத் தம்மைப் பாவித்து எழுதிய பாடல் வரிகள் சிலவற்றைக் குறிப்பது.
அனந்த் 14-4-2014 ’ஜய’ புத்தாண்டு நாள்
பாடல் 7-ன் முதலடியை,
’தான்யார் எனமறந்தான் தன்நாமங் கெட்டான்அக்’ என்று திருத்திப் படிக்கவும்.
.. அனந்த்
சந்த வசந்தக் கவியரங்கம்-40
தலைவர்- புலவர் திரு. இராமமூர்த்தி
தலைப்பு- எனக்குப் பிடித்த.....
--------
அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்
...........................
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அனந்தின் வெண்பாக்கள் மிக அருமை. இரமணரின் போதனைகளை மிகச் சுருக்கி ஆனால் தெளிவாகக் காட்டிவிட்டார்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில் தோன்றியதோர் தீ - மிக அற்புதம்
இதையே தொடர்ந்து அவர் இரமண சரிதை முழுதும் பாடலாம். நல்ல நூல் நமக்குக் கிட்டும்.
இலந்தை
பி.கு: நின்று நிதானித்து எழுதுவதை விட அவசரமாக எழுதப்படும் சில கவிதைகள் அருமையாக அமைந்துவிடும். அப்படி அமைந்தது இது.
அரங்கக் கவிதை- எனக்குப் பிடித்த பெரியோன்
நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண் 10
எனக்குப் பிடித்த பெரியோன்
கருத்தனை நம்முள்ளே காண்பதே வாழ்வின்
அருத்தம்எனத் தாம்அறியா மாந்தர் - வருத்தும்
கருச்சுழியில் சிக்காமல் காப்பதற்(கு) அன்று
திருச்சுழியில் தோன்றியதோர் தீ 1
தீப்பிழம்பாய்த் தோன்றிய தேவின் திருத்தலப்பேர்
நாப்பழக்க மாய்க்கொண்ட நல்லோனைப் – பாப்புனைந்து
போற்றும் செயலால் புனிதம் பெறநினைத்துச்
சாற்றுவேன் அன்னான் தகை 2
அன்ன(ம்)நிகர்ப் பெண்ணொருத்தி ஆரூரன் நாமத்தை
முன்னம் பிறர்மொழியக் கேட்டதுபோல்** – தன்னுள்ளே
தாரக மாயொலித்த சத்தம் ஒருதலத்தின்
பேரென்று பிள்ளைஅறிந் தான் 3
அறிவில் நிலைத்த அருணையின் வண்ணம்
குறித்துமனம் கொண்ட களிப்பில் – வெறிகொண்டு
பித்தன் எனப்பிறர் பேசும் நிலையடைந்தான்
சித்தனாய்ப் பின்திகழ்ந் தோன் 4
தோன்றும் பொருள்யாவும் சோணா சலமெனஉள்
ஊன்றி அதிலுறைவோன் உள்ளபடி – ஈன்றதன்
தந்தையென ஏற்றுத் தனைப்பெற்றோர் சுற்றம்பால்
பந்தமறுத் தான்பா லகன் 5
அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.## 6
தான்யார் எனவறியான் தன்நாமங் கெட்டான்அக்
கோன்பால் தலைப்பட்டான் குன்றதனில் – மோனத்தில்
ஆழ்ந்தான் அருணா அசலம்போல் ஆனந்தம்
சூழ்ந்ததவன் உள்ளில் தொடர்ந்து 7
தொடங்கிய நாள்முதலாய் தோல்போர்த்த தேகம்
விடவந்த வேளைவரை தன்னை – அடைந்தோர்க்குக்
காட்டினான் கல்லாலின் நீழல்கீழ் நால்வர்ஐயம்
ஓட்டியவன் ஒத்தோர் வழி 8
வழிந்தோடும் எண்ணப் பெருக்கே மனம்அஃ(து)
அழிந்திட”நான் ஆர்”என்னும் கேள்வி – ஒழியாது
நம்முள் எழுப்பின் நசியும்அகங் காரமெனும்
வெம்மைமிகு நோய்நமை விட்டு 9
நமைநாம் உணரின்நம் உண்மைச் சொருபம்
அமைதியே என்றறிய வைத்த – உமைமகிழும்
ஈசன் உருவாம் இரமணப்பே ராசானின்
ஆசிநமக் கென்றும் அரண் 10
அரவணைக்கும் அன்னை அருளொளி வீசும்
இரவி எனரமணர் அந்நாள் - கருணை
அலையாய் நமக்களித்த ஆன்மவி சாரம்
கலையா(து)உள் நிற்கும் கருத்து. 11.
.. அனந்த்
சந்தவசந்தக்
கவியரங்கம்-40
- "எனக்குப்
பிடித்த ...."
2014-04-12
எனக்குப்
பிடித்தது
-------------------------
0-1)
---- இறைவணக்கம்
---
(அறுசீர்
விருத்தம் -
'மா
மா காய்'
அரையடி
வாய்பாடு)
--
படித்த
படிப்பின் பயனெல்லாம் ..
பணத்தைத்
திரட்ட என்றபித்துப்
பிடித்து
நாளைக் கழிக்கின்ற ..
பேதை
மார்கள் காலமிதில்,
துடித்த
தேவர் ஓடிவந்து ..
துதிக்கக்
கடலின் நஞ்சுண்டாய்,
அடித்த
லத்தை ஆதரிக்கும் ..
அகமெ
னக்குத் தந்தாயே!
0-2)
--
இறைவணக்கம்
---
(கலிவிருத்தம்
-
'மா
மா விளம்
காய்'
வாய்பாடு)
--
அலையார்
சடையா அம்மலர்த் தாள்போற்றி
தலைமா
லையணி தலைவனே
தாள்போற்றி
சிலையால்
எயில்கள் செற்றவா
தாள்போற்றி
தொலையாச்
செல்வா தூமலர்த் தாள்போற்றி.
0-3)
-- அவை
வணக்கம் --
(அறுசீர்
விருத்தம் -
'மா
மா மா
மா மா காய்'
வாய்பாடு)
--
கொன்றை
சூடும் கூத்தன் கழலைக் கும்பிட்
டும்முன்னே
என்றன்
விருப்பில் ஒன்றைப் பாட்டில்
இயம்ப ஆசைகொண்டேன்
மன்றில்
திரண்டி ருக்கும் அன்பீர்
வணங்கி மகிழ்கின்றேன்
இன்று
சொல்லும் இதனிற்
குறைகள் இருப்பின்
உரைப்பீரே.
எனக்குப்
பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை
அமைந்த பாடல்கள்)
1)
-- அறுசீர்
விருத்தம் ('விளம்
மா தேமா'
அரையடி
வாய்பாடு)
–
உளமகிழ்
கின்ற வற்றுள் ..
ஒன்றினை
எழுத வந்தேன்
பளபள
வென்றி ருக்கப் ..
பலநினை
வுகளைத் தேய்த்தேன்
மளமள
வென்று தாளில் ..
வரைந்திட
அமர்ந்தேன் ஆனால்
உளறலாய்ப்
போகும் என்ற ..
உண்மையை
உணர்ந்து கொண்டேன்.
2)
கொள்கிற
பொருள்கள் வீட்டில் ..
குவிந்துகி
டப்ப தொத்தே
உள்கிடில்
உணர லாகும் ..
உகப்பன
எண்ணல் ஆகா
வெள்கினேன்
எவ்வா றொன்றை ..
விரும்பிய
தென்பேன் சொன்னால்
எள்குமே
என்னை நோக்கி ..
ஏனைய
விருப்ப மெல்லாம்.
3)
-- அறுசீர்
விருத்தம் ('மா
மா காய்'
அரையடி
வாய்பாடு)
–
எல்லா
ருக்கும் தெரிந்தவொன்றே ..
இப்பி
றப்பைத் தந்ததெது
வில்லால்
காமன் எய்தகணை ..
விளைத்த
தென்பர் இவ்வுடலை
வல்லார்
அறிவர் வல்வினையால் ..
வாய்த்த
திந்தப் பிறப்பென்று
பொல்லா
ஆசைப் புயலோய்ந்தால் ..
புவியில்
மீண்டும் பிறவோமே.
4)
பிறவியைப்
பொருத்து விருப்பங்கள் ..
பிறந்த
பின்னும் பருவத்தின்
உறவினில்
உதிக்கும் விருப்பங்கள் ..
உயிரைக்
கொள்ளப் பக்கத்தில்
மறலியின்
தமர்கள் வந்தாலும் ..
மனத்தில்
இன்னும் விருப்பங்கள்
அறவிடல்
ஆமோ ஆசைகளை ..
அதற்கோர்
வழியும் இங்குண்டோ?
5)
உண்டென்
கின்றார் வள்ளுவரும் ..
ஒருவன்
கழலைப் பற்றிவிடில்
விண்டு
போகும் பற்றென்றார் ..
மிகவும்
எளிய வழிபோலக்
கண்டும்
வாழ்வில் கடைப்பிடிக்கக்
..
கருது
வார்கள் மிகச்சிலரே
தொண்டு
பட்டார் தொடர்பிருந்தால்
..
சுலப
மாகப் பெறலாமே.
6)
-- (கலிவிருத்தம்
-
'மா
மா மா
விளம்'
வாய்பாடு)
--
பெறலாம்
மண்ணிற் பெரிதும் நயந்தன
சிறவா
வினைபோய்ச் சேமம் எய்தலாம்
நறவார்
தமிழாம்
நாவுக் கரசர்சொல்
மறவா
மனத்தார்க் கருங்காப்
பாலனே.
**7**)
-- திருநாவுக்கரசர்
தேவாரம் -
திருநேரிசை
-
4.67.9.
பாலனாய்க்
கழிந்த நாளும் பனிமலர்க்
கோதை மார்தம்
மேலனாய்க்
கழிந்த நாளு மெலிவொடு மூப்பு
வந்து
கோலனாய்க்
கழிந்த நாளுங் குறிக்கோளி
லாது கெட்டேன்
சேலுலாம்
பழன வேலித் திருக்கொண்டீச்
சரத்து ளானே.
அன்புடன்,
வி.
சுப்பிரமணியன்
அடுத்த கவிவாணர் ஆழ்ந்த சிவஞானி
எடுத்த திருப்பாதம் ஏத்தும் மிடுக்குள்ளார்
பிடித்த பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம் செய்வார் அளி!
ஆசு கவியால் அகிலமே போற்ற
வீசு சிவசிவா வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும் அளிக்கும் பதம்
வருக சிவசிவா வான்கவிதை பாடித்
தருக பிடித்த தனை.....
அன்புடன் இராமமூர்த்தி
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.
4)
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?
5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.
--
அடுத்து வருகிறார்பேராசிரியர் கனடா பசுபதி.இயலா? இசையா? நாடகமா? எல்லாம் அறிந்த நல்லவரைசெயலில் விரைவைச் சேர்த்தவரை தெளிவை அளிக்கத் தெரிந்தவரைஅயல்நா டென்றால் அதுவும்நமக் கானபிழைப்பைத் தருவதெனமயலே இன்றி உழைத்தவரை மாண்பார் கனடா பசுபதியைதயவாய்க் கவிதை தருகவெனத் தாளை வேண்டித் தவம் செய்வேன்பயல்நான் எனைக்கண் பார்த்திட்டால் பயனைப் பலவாய்ப் பெறுவேனேகுயவன் வனையாக் கும்பமெனும் கவிதைக் குடத்தின் தமிழமுதைச்'ஜய'வென் கின்ற புத்தாண்டில் சரித்தே வார்த்திட வேண்டுவனே!
--
சந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
எனக்குப் பிடித்தது
-------------------------
0-1) ---- இறைவணக்கம் --- (அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' அரையடி வாய்பாடு) --
படித்த படிப்பின் பயனெல்லாம் .. பணத்தைத் திரட்ட என்றபித்துப்
பிடித்து நாளைக் கழிக்கின்ற .. பேதை மார்கள் காலமிதில்,
துடித்த தேவர் ஓடிவந்து .. துதிக்கக் கடலின் நஞ்சுண்டாய்,
அடித்த லத்தை ஆதரிக்கும் .. அகமெ னக்குத் தந்தாயே!
0-2) -- இறைவணக்கம் --- (கலிவிருத்தம் - 'மா மா விளம் காய்' வாய்பாடு) --
அலையார் சடையா அம்மலர்த் தாள்போற்றி
தலைமா லையணி தலைவனே தாள்போற்றி
சிலையால் எயில்கள் செற்றவா தாள்போற்றி
தொலையாச் செல்வா தூமலர்த் தாள்போற்றி.
அம்
-
அழகிய;
சிலை
-
வில்;
0-3) -- அவை வணக்கம் -- (அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' வாய்பாடு) --
கொன்றை சூடும் கூத்தன் கழலைக் கும்பிட் டும்முன்னே
என்றன் விருப்பில் ஒன்றைப் பாட்டில் இயம்ப ஆசைகொண்டேன்
மன்றில் திரண்டி ருக்கும் அன்பீர் வணங்கி மகிழ்கின்றேன்
இன்று சொல்லும் இதனிற் குறைகள் இருப்பின் உரைப்பீரே.
எனக்குப் பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)
1) -- அறுசீர் விருத்தம் ('விளம் மா தேமா' அரையடி வாய்பாடு) –
உளமகிழ் கின்ற வற்றுள் .. ஒன்றினை எழுத வந்தேன்
பளபள வென்றி ருக்கப் .. பலநினை வுகளைத் தேய்த்தேன்
மளமள வென்று தாளில் .. வரைந்திட அமர்ந்தேன் ஆனால்
உளறலாய்ப் போகும் என்ற .. உண்மையை உணர்ந்து கொண்டேன்.
2)
கொள்கிற பொருள்கள் வீட்டில் .. குவிந்துகி டப்ப தொத்தே
உள்கிடில் உணர லாகும் .. உகப்பன எண்ணல் ஆகா
வெள்கினேன் எவ்வா றொன்றை .. விரும்பிய தென்பேன் சொன்னால்
எள்குமே என்னை நோக்கி .. ஏனைய விருப்ப மெல்லாம்.
கொள்ளுதல்
-
விலைக்கு
வாங்குதல்;
பெறுதல்;
உள்குதல்
-
சிந்தித்தல்;
உகப்பன
எண்ணல் ஆகா -
விரும்புவன
எண்ணற்றவை;
வெள்குதல்
-
நாணுதல்;
3) -- அறுசீர் விருத்தம் ('மா மா காய்' அரையடி வாய்பாடு) –
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.
4)
பிறவியைப் பொருத்து விருப்பங்கள் .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள் .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?
மறலி
-
யமன்;
5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.
விண்டு
-
நீங்கி;
(விள்ளுதல்
-
நீங்குதல்);
6) -- (கலிவிருத்தம் - 'மா மா மா விளம்' வாய்பாடு) --
பெறலாம் மண்ணிற் பெரிதும் நயந்தன
சிறவா வினைபோய்ச் சேமம் எய்தலாம்
நறவார் தமிழாம் நாவுக் கரசர்சொல்
மறவா மனத்தார்க் கருங்காப் பாலனே.
நயந்தன
-
விரும்பியன;
சிறவா
வினை -
சிறத்தல்
இல்லாத வினை -
தீவினை;
சேமம்
-
க்ஷேமம்
-
நல்வாழ்வு;
பாதுகாவல்;
நறவு
ஆர் தமிழ் -
தேன்
பொருந்திய தமிழ்;
அரும்
காப்பு -
அரிய
பாதுகாவல்;
**7**) -- திருநாவுக்கரசர் தேவாரம் - திருநேரிசை - 4.67.9.
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங் குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்2014-04-15 2:25 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
.....
அடுத்த கவிவாணர் ஆழ்ந்த சிவஞானி
எடுத்த திருப்பாதம் ஏத்தும் மிடுக்குள்ளார்
பிடித்த பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம் செய்வார் அளி!
ஆசு கவியால் அகிலமே போற்ற
வீசு சிவசிவா வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும் அளிக்கும் பதம்
வருக சிவசிவா வான்கவிதை பாடித்
தருக பிடித்த தனை.....
அன்புடன் இராமமூர்த்தி
எனக்குப் பிடித்த என் ஆசான்.என் ஆசான்நீலவான் பார்த்துக் கீழே
நிலத்தையும் பார்த்துக் கொள்ளும்
கோலமும் இன்றிக் கொள்கைக்
குறிப்பெதும் இன்றி , எங்கோ
மூலையில் கிடந்த என்னை
முன்னிலை சேர்த்து விட்ட
சீலனைத் தொழுதே என்றன்
செயலினைத் தொடங்கு கின்றேன்
என் ஆசான்
விண்சுமக்கக் கூடாத வேகத்தின் உந்துதலால்
மண்சுமக்க வந்திங்கு மலர்ந்திட்ட இளம்பச்சை
கண்சுமக்கும் மாமாயக் காட்சிகளைத் தேராமல்
பண்சுமக்கும் ஒலிச்சிதறல் பலப்பலவாய்ச் சிந்தியநாள்
கருணை மழையைப் பொழிகண்கள்
காந்தம் போலக் கவர்ந்துவிடும்
உருகிச் சொல்லும் கவிதையிலே
உலகம் முனே மறைந்துவிடும்
றிப் போகாது
காற்றாண்டு வரும்போது கனல் ஆறிப் போகாது
நேற்றாண்டு கொண்டிருந்தோர் நினைவடங்கிப் போனாலும்
நூற்றாண்டு கண்ட குரு புகழடங்கிப் போகாது
இங்கே இன்னும் எப்பொழுதும்
எதையோ கற்க விரைகின்றேன்
எங்குச் சென்ற போதினிலும்
இன்னும் நானோர் மாணவனே!
அனலெ ழுப்பும் மாண்பு ரைக்கும்
மனத்தில் உண்மை பூண்ட ளிக்கும்
தலைநி மிர்த்தி ஓங்கி நிற்கும்
உளத்தில் சாந்தி கூட்டும் – அந்த
எழுத்தில் இவர்க்கு நாட்டம்!
நல்ல ஓட்டமுள்ள எழுத்தும் நடையும் கொண்ட எனக்குப் பிடித்த கவிதை.
அனந்த்
சந்த வசந்தக் கவியரங்கம் -40:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
பற்றற்றான் பால்பற்றைப் பற்றியவர் தமைச்சேர்தல்
உற்றதோர் விருப்பமென உரைத்தநயம் வெகுஅழகு.
... அனந்த்
>> தொண்டு
பட்டார் தொடர்பிருந்தால்
..
சுலப
மாகப் பெறலாமே.
சந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
எனக்குப் பிடித்தது
-------------------------
எனக்குப் பிடித்தது
-------------------------
(அந்தாதித்தொடை அமைந்த பாடல்கள்)
3) -- அறுசீர் விருத்தம் ('மா மா காய்' அரையடி வாய்பாடு) –
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.
4)
பிறவியைப் பொருத்து விருப்பங்கள் .. பிறந்த பின்னும் பருவத்தின்
உறவினில் உதிக்கும் விருப்பங்கள் .. உயிரைக் கொள்ளப் பக்கத்தில்
மறலியின் தமர்கள் வந்தாலும் .. மனத்தில் இன்னும் விருப்பங்கள்
அறவிடல் ஆமோ ஆசைகளை .. அதற்கோர் வழியும் இங்குண்டோ?
5)
உண்டென் கின்றார் வள்ளுவரும் .. ஒருவன் கழலைப் பற்றிவிடில்
விண்டு போகும் பற்றென்றார் .. மிகவும் எளிய வழிபோலக்
கண்டும் வாழ்வில் கடைப்பிடிக்கக் .. கருது வார்கள் மிகச்சிலரே
தொண்டு பட்டார் தொடர்பிருந்தால் .. சுலப மாகப் பெறலாமே.
2014-04-15 2:25 GMT-04:00 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
.....
அடுத்த கவிவாணர் ஆழ்ந்த சிவஞானி
எடுத்த திருப்பாதம் ஏத்தும் மிடுக்குள்ளார்
பிடித்த பெயரார் சிவசிவா என்னும்
அடியார்தாம் செய்வார் அளி!
ஆசு கவியால் அகிலமே போற்ற
வீசு சிவசிவா வெல்கவிதை - கூசும்
மலர்ப்பாதம் போலே மகிழ்வை உருவாக்கிப்
பலர்க்கும் அளிக்கும் பதம்
வருக சிவசிவா வான்கவிதை பாடித்
தருக பிடித்த தனை.....
அன்புடன் இராமமூர்த்தி
--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/
--
அகத்தைக் கவர்ந்ததன் அத்தனைத் தேடிச்
சகமெலாம் சுற்றியபின் சேர்ந்தான் – இகத்திலெங்கும்
காணவொண்ணா அண்ணா மலையானை; கண்டபின்
நாணமிலா நங்கைஒத் தான்.## 6
எல்லா ருக்கும் தெரிந்தவொன்றே .. இப்பி றப்பைத் தந்ததெது
வில்லால் காமன் எய்தகணை .. விளைத்த தென்பர் இவ்வுடலை
வல்லார் அறிவர் வல்வினையால் .. வாய்த்த திந்தப் பிறப்பென்று
பொல்லா ஆசைப் புயலோய்ந்தால் .. புவியில் மீண்டும் பிறவோமே.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
கயிறு திரித்த நூல்கள் மிகுந்தகன்னித் தமிழி லக்கி யத்தில்உயர்வு நவிற்சி ஒன்று மின்றிஉண்மை காணும் எழுத்து! --இதுநான்உன்னிப் படிக்கும் எழுத்து!poetry is a fine excess என்று கூறுவார்கள். சற்றே மிகைப்படுத்தல் ஓரழகு. ஒரு நயம். உயர்வு நவிற்சி ஒரு உத்தி. அதை அறவே கூடாது என்று சொல்வதை என்னால் ஏற்க இயலவில்லை
ஆனால் உண்மையின் அடிப்படை கொஞ்சமும் இல்லாமல்”பொய்யழகு’ என்று கயிறு திரிப்பது கூடாதுதான்.பிடித்த எழுத்து கவிதை வடித்த எழுத்து.இலந்தை2
பேராசிரியர் பசுபதி யவர்களுக்கு,
உங்கள் கவிதையில் அழகும் அமைதியும் தயிரில் வெண்ணையாய்த் திரள்கிறது!
எழுத்தின் இலக்கை இயல்பை விரிக்கும்
பழுத்த கவிதையின் பாங்கை - வழுத்தி
விழுப்பை யகற்றி விழுதென நிற்கும்
எழுத்தை எழுதுவோ மே.
--ரமணி, 16/04/2014செய்திக்கேற்ப வேண்டுமென்றே பொழிப்பு மோனையில்லாமல் அமைத்த அடிதானே இது?
> கதிதனைக் காணேன் விதிகள் மறந்தேன்> . நச்ச ரவங்கள் தோலு ரித்து,
> நாட்டு நலனை ஏப்பம் விட்ட
> ஆட்சி மாற்றம் செய்து காட்ட> . அனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவே
> . எனக்குப் பிடித்த எழுத்து! (௧)
இது என்ன பாவடிவம்?
அன்புடன்,
ரமணி
*****
நாட்டு நலனை ஏப்பம் விட்டநச்ச ரவங்கள் தோலு ரித்து,ஆட்சி மாற்றம் செய்து காட்டஅனலெ ழுப்பும் எழுத்து ! --அதுவேஎனக்குப் பிடித்த எழுத்து! (1)
அன்புமிகு புலவர் இராமமூர்த்தி அவர்களேஅட்டகாசமான ஆரம்பம். செவி மடுத்தேன் ; விழி விரித்தேன். முதல் அழைப்பில் யானைப் பாகனாய் மாறி வேழ பவனி நடத்துகிறீர். வாழ்த்துகள்அன்புடன்வவேசு2014-04-13 12:50 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
கடவுள் வாழ்த்து!நம்பிக்கை வைத்தே நவின்றே துதிக்கின்றோம்தும்பிக்கை நாதன் துணைஐந்துக ரத்தொடும் ஆனைமு கத்தொடும்ஆணைபு ரிந்திடும் அரசேநல்இந்தின் இளம்பிறை போன்றநின் கொம்பினால்இமயத்தில் எழுதிடும் புலவோனே!சந்தமி குத்திடும் செந்தமி ழவ்வைசொல்தன்னையு ணர்ந்தருள் புரிவோனேசிந்தைம கிழ்ந்திடச சேரனை முந்தியத்திருக்கயி லைதனில் திகழ்வோனே!இந்தபுத் தாண்டினில் எங்கள்வி ருப்பங்கள்எய்திடக் கவிமலர் இடுகின்றோம்!சந்தவ சந்தத்தின் சாதனை ஆண்டெனச்சாற்றும்பு கழெம்பா லெய்திடவே,தந்தனத் தானனச் சந்தமு ணர்ந்துடன்தாண்டவ மாடிடுஞ் சற்குருவே!''வந்தருள் தந்தருள்'' என்றுவ ணங்கியெம்வாயுரை கையுறை ஆக்குவமே!'''ஜய''வென்னும் நல்வெற்றி சாதனைக்கோர் புத்தாண்டாய்நயம்செய்க எங்கும் நலம்!அமுதுண்ட விண்ணோர்கள் அனைவருமே மாய்ந்துவிடஆலகா லத்தை உண்டே,அழியாமல் எந்நாளும் அடியாரை வாழ்விக்கஅரங்கத்தில் ஆடு கின்றாய்!கமுகோடு தென்னையும் கடம்பும்வ ளர்ந்திடும்கானகப் பொதிகை மலையில்கவினார்ந்த தமிழ்தனை அகத்தியர்க் கருளியேகாலத்தை வென்று நின்றாய் !தமிழான அமுதுண்டு தளிர்த்திட்ட புலவோர்கள்தருபே ரிலக்கி யத்தின்தரங்கண்டு பாராட்டும் முருகனின் உபதேசம்தாழ்ந்தே பணிந்துகேட் டாய்!உமியான எனக்குள்ளும் ஒளியான கனல்மூட்டியோகம் பயிற்று வித்தே,ஒருசிறிய மின்னலை உருவாக்கி உலகிற்கேஒளிகூட்ட வேண்டு வேனே!தமிழ் வாழ்த்துநீரில்நெ ருப்பினில் நீந்தினாய்! கரையிலேநின்றவர்க் குறுதிசொன் னாய்!நின்னருட் பெருமையை நெஞ்சாரப் போற்றினோர்நிம்மதி கொள்ள வைத்தாய்!பாரில் தமிழ்நலம் பாலித்த பாங்கினைப்பலமுறை பார்க்கவைத் தாய்!பரிவதன் உருவான பரமனின் ஆணைபலித்ததைப் பார்த்து விட்டோம்!தேரிலே ஏற்றியும் தெருவிலே போற்றியும்தெய்வமாய் நின்னை எண்ணிதெரிசனம் வேண்டினோர் சிந்தித்த யாவையும்செயலில்நி றைவேற்றி னாய்!காரிய சித்தியைக் கண்முனே காட்டுவாய்!கைகூப்பிப் போற்று கின்றோம்!கடலை போற்பல உடல்கொண்ட அன்னையேகன்னித் தமிழ்த் தெய்வமே!புத்தாண்டு வாழ்த்துவையம் செழித்திட வானம் பொழிந்திடவந்தது புத்தாண்டு! - இனிமகிழுவம் பல்லாண்டு!- நம்ஐயமும் அச்சமும் அகன்றிடத் தந்தனன்ஆனந்தப் பூச்செண்டு - பெரும்ஆவல் மிகக் கொண்டு !கைகள் உழைத்திடக் கண்களில் நீர் ஏன்?கவலையைத் தள்ளுங்கள்! - புதுக்கனவுகள் காணுங்கள் ! - உங்கள்செய்கையில் இன்பமே சேர்ந்திடும் நல்லனதினம்தினம் செய்யுங்கள் - நல்லசெந்தமிழ் நெய்யுங்கள்!நேற்றிருந்த வாழ்க்கைதனில் நிறைவே இல்லைஇன்று வந்த புத்தாண்டோ எழிலின் சோலை!!நாளையிந்த சோலையிலுன் நகலும் இல்லைநாட்டிடுவாய் உன்புகழை, நரனடா நீ!ஆற்றுவெள்ளம் ஓடிவரும் நாளைக் காலைஆயிரமாய்ப் பூப்பூக்கும் அன்று மாலை!சேற்றுவயல் நாற்றுகளில் கதிரின் வேலைசெய்திடும்நல் லோவியத்தின் காட்சிச் சாலை!தலைப்பைப பற்றி...இந்தபுத் தாண்டிலே எனக்குப் பிடித்த...வர் ,எல்லாரும் போற்றுபவர்சொந்தத் தலைவராய்த் தோத்திரம் பெறுபவர்சூராதி சூரரா வார்!வெந்திடும் போதிலும் நொந்திடும் நிலையிலும்வந்தே மாதரத் தைஅந்தமும் சிந்திட ஆயிரம் முறைசொலும்ஆடவர் ''சிதம்பர னார்''!அவரைப் போற்றியே ஆறுதல் கொண்டிடல்யாவர்க்கும் உரிமை யன்றோ?இவருக் கிணையாய் எவரைச் சொல்லலாம்?இவரே இவர்க்கிணை! ஆம்!சுவரும் எதிரொலி சொல்லச் சிறைதனில்சுதந்தர தேவிபுகழ்தவறில் லாமல் வெள்ளையர்க் குணர்த்தியசாதனை மன்னர் அவர்!செக்கிழுத்த செம்மல் வ.உ. சிஇருபா இரு ப.:. து!**************தூத்துக் குடிநெல்லை ஏத்தும் வழக்கறிஞர்கூத்தன் திருவடியே கும்பிட்டார் - ஏற்றமுடன்தென்னா டுடையானைத் தேறும் சிதம்பரம்போல்எந்நாளில் காண்போ மினி? 1 1.இனிதாகும் இல்லறத்தின் மாண்பைப் போற்றிஇணையற்ற மழலைகளைப் பெற்ற தந்தைதனியாகத் தாம்பயின்று ''வக்கீல்'' ஆகித்தாய்நாட்டுக் காய்வாதம் செய்த சான்றோர்கனிவான மனங் கொண்டே நாட்டு மக்கள்கடைத்தேறப் போர்க்கொடியை உயர்த்தும் தீரர்!மனையாளின் இன்குரலால் இறுதிநாளில்மகாகவியின் பாக்கேட்டே மகிழ்ந்தார் அன்பர்!2அன்புமிக பாரதியை ''மாப்பிள்ளை'' என்றழைத்தேஇன்புற்ற ''மாமா'' சிதம்பரனார் -- முன்புற்றவெள்ளையன் ''விஞ்ச்''சை உரையாலே வீழ்த்தியுளம்கொள்ளைகொண் டானேயக் கோ!3கோட்டுடனே தலைப்பாகைக் கோலம் காட்டிக்குலவுதமிழ் பாரதிபால் அன்பைக் காட்டி,நாட்டிலுயர் சுப்ரமண்ய சிவாவின் பேச்சைநாடிவந்தே போற்றுகின்ற நட்பைக் காட்டிக்காட்டாட்சி வெள்ளையாரை விரட்டியோட்டிக்கனிவுடனே தொழிலாளர் கூட்டம் கூட்டி,வாட்டமிலா வாழ்வுதரக் கப்பல் ஓட்டும்மாண்புடைய சிதம்பரத்தை வாழ்த்து வோமே!4ஓமென்றே சொல்லும் ஒருமந் திரம்கூறிச்சேமம்சேர் சீருலக நாதர்பால் -- பூமிபுகழ்மைந்தனாய்த் தோன்றி வளர்ந்த சிதம்பரமென்சிந்தையுள் நின்றார் செழித்து 5செழித்திருந்த செல்வத்தின் சிறப்புத் தோன்றதிருச்சியிலே கணபதியின் சட்டப் பள்ளிவழிகாட்ட வழக்கறிஞர் பட்டம் பெற்றார்வாதாடும் தொழிலாலே வருவாய் பெற்றார்மொழித்திறத்தில் புலமை பெற்றே ஊரார் போற்றமுதன்மையுறும் தலைவரென விளங்கலானார்.இழிவுபெற்ற தொழிலாளர் உயர்வுக்காகஎழுச்சிமிகும் தொழிற்சங்கத் தலைமை பெற்றார்.6பெற்ற விடுதலையைப் பேணாத மானிடர்காள்கற்றுக்கொள் வீரன்னான் காவியத்தை -= முற்றும்அறிவீர் வரலாற்றை, அப்போது தானேவெறியூட்டும் வீரம் வரும்?7வீரமிகும் பாரதியின் நட்பைப் பெற்றார்விடுதலையை நாடிவளர் வேட்கை கொண்டார்சாரமிகும் தர்மசங்க நெசவுச் சாலைதனித்தசுதே சிப்பிரச்சா ரத்தின் சங்கம்ஊரிலுரு வாக்கிமிக ஊக்கத் தோடேஉண்ணாமல் உறங்காமல் தொண்டு செய்தார்யாருமவர் பின்சென்றார் ஆங்கி லேயர்அஞ்சிடவே கப்பல்விட ஆலோ சித்தார்! 8ஆர்வமுடை ஆசான் பெருமாளும் பாட்டியுடன்சேர்ந்தே இதிகாசத் தேனமுதை - ஆரக்கற்பித்தார்! ஆங்கிலத்தை கற்றார்நற் கல்விதரும்பொற்புடைய பள்ளியிற் புக்கு. 9புக்கவெள்ளைக் காரரரவர் புரிந்த தீங்கைப்போக்கிடவே ஆங்கிலத்தில் புலமை பெற்றார்;தக்கவராய்த் தொழிலாளர் சங்கம் கண்டேதனிவேலை நிறுத்தத்தில் ஈடு பட்டார்;மிக்கவெள்ளை தனைப்பணியச் செய்த போரால்வேண்டுவன நிறைவேற, வியந்தார் நாட்டார்!மக்களினம் வாழ்த்திடவே சந்திர பாலர்வருகைதரப் பொதுக்கூட்டம் நடத்திவைத்தார்10!வைத்த பணத்தையெலாம் வாரிச் சுருட்டிடவேசைத்தானாய் வெள்ளை சதிசெய்தான்- எய்த்தசுப்பலெலாம் துள்ளிக் குதித்தெழவே ஓட்டினார்கப்பல்தனைத் தெற்குக் கடல்! 11கடலின் அலைபோல மீண்டும் மீண்டும்காதகராம் வெள்ளையர்கள் சூழ்ச்சி செய்தார்மடங்கலை குகைக்குள்ளே அடக்கல் போலேவ.உ.சி சிவா என்ற இருவர் மேலும்தடைச் சட்டம் ஏவிவிட்டார் கலங்கிடாததன்மானச் சிங்கங்கள் மீறிச் சென்றார்கடைசியிலே தீவுக்குள் இருப தாண்டுகாராக்கி ரகமென்றார்; வெகுண்டார் ஊரார்! 12ஊரவரின் ஊக்கம் உலைக்குள்ளே வெந்நீராய்சீறியே ஓங்கச் சிறைதன்னைப் -- பாரோர்தகர்க்க வெளிப்பட்டார் சதியாளர் தோற்கநகைத்ததே நெல்லை நகர்!13நகராகும் கோவையுடன் கண்ண னூரும்நல்லவராம் இருவரையும் சிறைக்குள் தாங்கிப்புகழாரம் பெற்றனவாம் செக்கி ழுத்தபுனிதர்சிதம் பரத்தின்கரம் பட்ட தாலே ,நகைபூத்த கண்ணனவன் குழலைப் போலேநாதவெள்ளம் செக்கினிலும் பெருகிற் றம்மா!பகைவரையே நடுங்க வைத்த தேச பக்தர்பரம்பரையில் பிறத்தலும்நம் பாக்ய மன்றோ?14மன்றாடும் பெம்மான் மகிமை விடத்தாலேஇன்றோ இவர்பெருமை செக்காலே - என்றும்ஊராரைக் காப்பார் உடல்துன்பம் பாராரேசீரார் சிதம்பரம்போல் செய்! 15செய்தபிழை ஆஷின்மேல் திரும்ப வந்தேசீறிவரும் துப்பாக்கி ரவையாய்ப் பாய்ந்தேஎய்தியதை என்வாஞ்சி மாமா செய்தார்எதிர்வினைகள் அரசியலில் என்றும் உண்டாம்மெய்யன்பர் முறையீட்டால் சிறைசெல் காலம்மிகவிரைவில் ஆறாண்டாய்க் குறைந்த தம்மா!ஐயன்சிதம் பரம்மீண்டும் வக்கீ லாகும்அரும்வாய்ப்பை வாலிஸ்எனும் அன்பர் தந்தார்!16தந்தவர்க்கே நன்றி தகுமென்றே தம்மகன்பேர்அந்தவா லீஸ்வரனாய் ஆக்கினார் -- சொந்தம்மதங்கடந் தென்றும் வளரும் எனவேசிதம்பரம் செய்தார் சிறப்பு! 17சிறந்தவரின் கப்பல்தொழில் செய்தா ரெல்லாம்சீரழிந்தே கப்பல்தனை விற்று நன்றிமறந்தாரே! என்செய்வேன் என்று மாழ்கிமண்ணெண்ணெய் விற்றிட்டார் அரிசி விற்றார்அறம்மாய்ந்தே மறம்ஓங்கி ஆண்மை நீங்கிஅறிவற்றே நாட்டினரும் அடிமை மோகத்திறங்கிட்டார் இவர்நிலைமை என்றே ஓயும்?சிதம்பரனார் வறுமையிலும் செம்மை கொண்டார்! 18கொண்டதம் பேரறிவின் கொடையாய்த் தமிழ்நூல்கள்அண்டம் புகழவே ஆக்கிட்டார் - மண்டும்மிடியைஜேம்ஸ் ஆலன்நூல் மெய்ம்மை அறத்தைவடித்தார் தமிழில் மகிழ்ந்து!19மகிழ்ந்தே தம்மருமகனின் பாடல் தன்னைமனைவியவள் பாடுவதைக் கேட்ட வாறேபுகுந்தார்நம் பாரதத்தாய் அடியின் நீழல்பொன்னொளிரும் சுதந்திரத்தின் சுவை காணாமல்தகுமோநம் சிதம்பரனார்க் கிந்தத் தாழ்வு?தரணியிதைத் தாங்கிடுமோ? தமிழ்தோற் கும்மோ?நகல்வேண்டா, நான்விரும்பும் நல்லோர்தம்மைஞாலத்தீர், மறவாதீர்; போற்றி வாழ்வீர்!20கவியரங்கத் தலைமை எனும் சுமையை வைத்தகவிவேழம் உள்ளிட்டோர்க் கென்வ ணக்கம்;புவியரங்கில் என்பாட்டும் புகவைத் திட்டபுகழ்சந்த வசந்தத்தார்க் கென்வ ணக்கம்செவிமகிழ இதைமீண்டும் சொல்லிப் பார்த்தேசிறப்பென்றே பொய்யுரைப்போர்க் கென்வ ணக்கம்;அவிமனமும் ஆழ்புலமைத் திறமும் பெற்றஆன்றோர்க்கும் வணக்கம்சொலி அமைகின் றேனே!அடுத்த கவிஞரை எடுத்து ரைத்திடின்படுத்த வரும்விரைந் தெழும்புவார்...எடுத்த சொல்தொறும் விடுத்த பொருள்தரும்மிடுக்கை எதிர்கொளக் கலங்குவார்தொடுத்த தமிழமு தெடுத்த குவளையில்கொடுத்த கவிதையுள் மயங்குவார்விடுத்த தெளிவினை மடுத்த கஜமுகன்அடிக்குள் அடிபல அடுக்குவார்படைத்த கவிதையுள் மிடைந்த கருத்தெனப்பரவிய எழுத்தவல் பொரியாகும்பொலிந்த மனமெனப் பருத்த புஜமெனப்பொதுளிய அசையப்ப மதுவாகும்அடைத்த வரிகளுள் கொடுத்த விரிவினில்அணிந்தசீர் சிறுமோ தகமாகும்தடுத்த தளைகளுள் சிலைத்த ஒலிநயம்கடித்திடும் சீடைதம் வகையாகும்அடுத்த அடிகளில் கொடுத்த கவித்திறம்செடித்திடும் அருகம்புல் லதுவாகும்தொடுத்த தொடையதில் அடங்கும் இயல்திறம்திதித்திடு சுழியத்தின் சுவையாகும்படைத்த பாவகை மொழிந்த மொழிவளம்கடித்திடும் கரும்பதன் சுவையாகும்நடக்கும் வேழத்தின் தடத்தை அறிந்தநம்இலந்தையின் கவிதைகள் நமைச்சாரும்.....கவிவேழம் "பிடித்த"தனைக் கனவேகம் கொடுப்பதனைக்செவிகொடுத்துக் கேட்பதுவும் விழிவிரித்துக் காண்பதுவும்புவியோரின் பாக்கியமே, புலவோரின் போக்கியமேகவிஞரெலாம் சேர்ந்திடுக கதித்தெழுந்தே அணிதிரள்க!வருக கவி தருக !வணக்கம்சகத்திலினித் துன்பமெலாம் இன்பம், நாமும்நாற்பதாம் கவியரங்கின் முதல் கவிஞராககவிவேழம் இலந்தையாரை அன்புடன் அழைக்கிறேன்!......**********************எண்ணத்தில் உயர்ந்தானை இணையத்தின்வேந்தனென இயங்கு வானைபண்ணொத்த கவிதைதரும் பாரதியைஉள்ளத்தில் பதித்துள் ளானைகண்ணொத்த சிவன்கழலைக் காரைக்காலம்மைவழி காட்டுவானைவிண்ணொத்த புகழின்கவி வேழமெனத்திகழ்வானை வேண்டு கின்றேன்!மனக்கோயில் தேவனென மதயானைதனைப்போற்றிப் பூசை செய்யும்இனத்தாரின் உளங்கவர்ந்த இலந்தைநகர்ஏந்தலெனும் இராம சாமீ!எனக்கொன்று பிடித்ததென எதனைத்தான்காட்டிடினும் ஏற்றுக் கொள்வோம்தனக்குவமை இல்லாய்நின் தமிழ்க்குவமைகண்டிடயாம் தவிக்கின்றோம், வா!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)( A Unit of Phycospectrum Inc:)52A,AK Block,7th Main Road,Annanagar. Chennai, 600040Managing Editor,President ,IBA-Indian Biomass Association (Regd)President, KIA,Chennai (Regd)Off: 044-26208896 Res: 044-24748674Mobile: 9381044470Website: phycospectrum.inSkype ID vavesu1
இன்னும் நானோர் மாணவனே!
--
அன்புடன் கிரிகாசன்
சக்தி வணக்கம்திக்கெட்டும் கொட்டியே தீயெழுந்தே பற்றிச்சீறிப் பரந்ததய்யா -அதுஎக்கெட்டதாயினும எட்டிப் பிடித்தெரித்தென்மனம் காக்குமய்யாசிக்கிட்ட தாகிடின் என்தவறேயல்லசெய்தவள் அன்னை யய்யா - இன்றுபக்கத்தில் நீயிருந் தென்மனம் பற்றியும்பாவினைத் தந்திடம்மாகைக்கெட்டும் கற்பனைக் காலக் குழம்பனல்கொட்டும் நிறங்கள் கொண்டேன் - அதில்வைக்கட்டும் என்றன்னை வார்த்தைகள் சேர்த்தங்குவண்ணச் சரம் தொடுத்தேன்தொக்கட்டும் என்றே நற் தூயஒளி மலர்த்தோரணம் தூக்கிவிட்டேன் - இனிஅக்கட்டும் மாலையில் ஆயிரம் மின்னெழில்தாரகைப்பொன் னிணைப்பேன்இக்கட்டும் ஏற்படின் என்னயல் வந்துமென்இன்னுயிர் காத்திடம்மா - என்றும்எக்கட்பு லம் தன்னை இட்ட ஒளித்தெய்வம்ஏற்றமும் தந்திடம்மாமக்கட்கும் என்கவி மாலை யளிப்பதாய்மாசபை பேச்சுரைத்தேன் - இனிகைக்கிட்டும் பொற்கவி காணவும் வேண்டினேன்கன்னித்தமிழ் கொடம்மாஅவை வணக்கம்அன்பால் சபையேறி அன்னகவி யாதொன்றைஎன்பால் எடுத்துவரும் போதெல்லாம் பாராட்டித்தென்பால் உயர்வளித்தீர் தேனேசந்த வசந்தத்தின்பால் கவியரங்கில் என்பா தரவந்தேன்நன்பா வளம் கொழித்த நல்லறிஞோர் கொள்அவையின்முன்பாய் எழுந்தென்பா முறையாய் வழங்கிடினும்தன்பாற் தவறேந்தி வருங் கவிதையா யினிதைஅன்பாற் பிழைபொறுத்தே அடுத்ததை மனங்கொள்வீர் !தலைவர் வணக்கம்அருங்கவிதை தரும் புலவர் அரங்கமதன் தலைவர்தருங் கவிதை சுவைத்திடுமத் தருணமெனைத் தூக்கிபெருங்கடலின் அலையாட்டும் பாய்மர கப்பல்இருங்களென் றிருத்தியொரு இன்னிசை ஆட்டம்மருங்கில் விரி திரையாடி வளங்கும் நல்லின்பம்நெருங்கி மனம் நிறைவடைய நெகிழ்வுதனைத் தாரும்இருந்தும் இவன்ஒருகவிதை இயற்கையினைப் பாடிவருந் தமிழைக் கூறஎன வந்தேன் என் வணக்கம்அரங்கக் கவிதை : எனக்குபிடித்த......
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!(மழலை)ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்ததுஅம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்ததுநீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்ததுயாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்ததுசீராட்டி மார்போடு யார் அணைத்த போதிலும்செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது(சிறுவன்0)பள்ளிதனுக் கேகும்வழி பாதை தனில் சேர்ந்தயல்பாடி நடை போடுமயல் பாசமுள்ள தோழரும்அள்ளியெடுத்தால் நிறையும் ஆசிரியர் ஆற்றலும்அன்பொடு நல் தமிழுரைத்த அமுதக் கணம் பிடித்ததுநள்ளிரவில் பேய்கள்கதை நானறியச் சொன்னவர்நாய்குரைக்க ஆவியென்று நடுங்கியதும் பிடித்ததுகொள்ளிவாற் பிசாசு காணக் கும்மிருட்டில் காட்டிலேகூடியபின் மின்மினிக்கள் கையில் கொண்டோம் பிடித்தது(இளைஞன்)பாலிருக்கப் பழமிருக்கப் பசிஎடுக்கா வேளையில்பாவைஉள்ளம் ஏதறியப் பட்ட பாடு பிடித்ததுகாலிரண்டும் கட்டிவைத்துக் காக்கும் அந்த வேளையில்காணவென்று கட்டுடைத்த காலமும் பிடித்ததுவாலிருக்கும் போல் நடந்து வாழ்வில்செய் குறும்புகள்வார்த்தையின்றி மீளவும் முன் வந்தபோது பிடித்ததுகேலிசெய்தே கூட்டமிட்டுக் கேளிக்கை புரிந்த வர்கேடுமற்ற தானபள்ளித் தோழமை பிடித்ததுமுதுமை)நாட்டினில்பன் மொழிபடித்து நானுமதைப் பேசவும்நல்லினித்த தேன்தமிழை நாடிஉள்ளம் சென்றதுவீட்டினிலோ பேச்சினிலே வேண்டியெழா மோகமோநாட்டினிலே நாகரீக மாற்றத்திற் பிடித்ததுஏட்டினிலே வ0ரைகவிதை எவர் எடுப்பர் இதையெனஏற்றமின்றிக் காற்றில்விட்ட ஏழ்மையும் பிடித்ததுகூட்டினுள்ளே உயிரிருக்கும் காலம்வரை தாய்மொழிகுவலயத்தில் வேறுஇல்லை கொள்ளையாய் பிடித்தது( முதல் பகுதிக்குப் பதிலாக முதலில் கீழ்வருவதை எழுதியிருந்தேன். விலக்க மனமின்றி தருகிறேன்)2. எனக்குப் பிடித்த கடந்த காலம்மழலையாக:ஆராரோ பாட்டிசைக்கப் பிடித்தது - என்அன்னைகுரல். தாலாட்டப் பிடித்ததுசீராட்டிப் போட்ட தொட்டில் பிடித்தது - அதுசெல்லும் விதம் அங்கும் இங்கும் பிடித்ததுநீரோடும் விழிகளாகி அழுதிட -எனைநெஞ்சோடு அணைத்த விதம் பிடித்ததுமாரோடு சேர்த்தணைப்பால் ஊட்டவும்- அவள்மடியினிலே கண்டசுகம் பிடித்ததுகார்மேகத் தொலைவில் காணும் குருவிகள் அவைகத்துமொலி கேட்டுறங்கப் பிடித்ததுதேரோடும் வீதியிலே தேவதை - வந்துதீந்தமிழில் பாடுமொலி பிடித்ததுபோராடி நீர்வழிந்தபோதிலும் - அன்னைபுன்னகைத்து பேசும் விதம் பிடித்ததுகூரோடும் விழியுருட்டிக் காண்கையில் -அக்குறுகியஎன் னுலகம் மட்டும் பிடித்ததுநாளாக நூல்படிக்கப் பிடித்தது அந்தநறுஞ் சுவைத்தேன் தமிழினிக்கப் பிடித்ததுதோளோடு தோள் இணைத்து நண்பர்கள் கூடித்தோன்றும் இள்ம் பருவம் அன்று பிடித்ததுவாளாக விழிகள் குத்தப் பிடித்தது அதில்வாழ்க்கையெனும் புதிய அர்த்தம் பிடித்ததுபாழாகி இள்மை கெட்டபோதிலே இந்தப்பாடும்தொழில் பரவசமாம் பிடித்ததுஓடும் வாழ்வில் துன்பம் வந்து பிடித்தது என்உள்ளுணர்வை மோகம் கட்டிப் பிடித்ததுஆடும் வகை நோயுடலை பிடித்தது - அதில்அச்சம் வந்து உள் மனதைப் பிடித்ததுதேடும் விழி தெய்வம் காணத் துடித்தது அந்தத்தேவி சக்தி வந்து என்னைப் பிடித்ததுநாடும் மனம் நல் வழியை பிடித்தது - பின்நான் விரும்பும் வாழ்வு கண்டேன் பிடித்தது3. எனக்குபிடித்த இயற்கைமலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியைமறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள்கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றிகொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்றுதனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்றுகருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்தளிர் அழகும் தவளைகளும் தங்கும் எழிற்சோலைதனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்4. எனக்குபிடித்த உண்ர்வுகள்செந்நெல் விளைநிலத்தில் செங்கரும்புத் தோட்டமதில்என்னை நிலைநிறுத்திப் பார்க்கிறேன்பொன்னென் கதிர்வளர்ந்து பூமியினைத் தொட்டழகைப்போய்வருடும் காற்றொலியைக் கேட்கிறேன்மன்னன் நடந்துவரும் மாஅதிர்வாய் ஆனையொன்றுமண்டபத்துக் கோவிலடி காண்கிறேன்தென்னங் குலையிளங்காய் தீய்க்கும்வெயில் வேளையிலேதின்றேகுடித்த சுகம் துய்க்கிறேன்எண்ணம் நிறைந்தபொருள் எட்டவும்நல் ஏந்திழையார்ஏற்றுமவள் கண்ணகியின் ஆலயம்அண்மையிலோர் தண்சுனையும் ஆடும் அரவிந்தமுடன்அல்லியிடை சந்திர விம்பமாகவேவெண்ணை கொடியிடையார் வேடிக்கையாய் நர்த்தனமும்வீதி நிறை கோவில் விழா கூட்டமும்கண்ணை காண்காட்சியிலே கையிழந்து வீட்டதெனக்கலங்கியவர் கண்டும் மெல்லச்சிரிகிறேன்வண்ணக்குழம்பெடுத்து வானமெனும் வெண்திரையில்வட்டநிலாப் பொட்டுவைத்த தூரிகைஎண்ணக் கனவுகளை ஏன்வரைந்து கொண்டதுவோஇல்லையங்கு நல்வளங்கள் ஏங்கினேன்மண்ணில்நல் நீரிறைத்து மரம்செடியும் பயிர்வளரும்மாண்புதனை அதிசயத்தால் காண்கிறேன்அண்மையென வருமொருத்தி விழிமருளும் தனிமையெனில்விளைந்ததென்றன் ஆண்மையென்று மகிழ்கிறேன்சாலையோரம் காற்றெழுந்து சற்றிலைகள் நீவிவிடசத்தமிட்டே ஆடும்மரம் பேய்களோமாலையிருள் முன்கவிய ,மாமரங்கள் ஆடிநிற்கமஞ்சள் வெயில் கோலமிட்ட காட்சியோசோலைமரக் கூடலிலே சுற்றி யிருள் கண்மறைக்கசூடுகொண்ட கொள்ளிவாய் பிசாசெழும்மேலைவானுக் கேகஉயிர் மெய்யெரிக்கும் சாம்பல்மேட்டில்மீதினில்ப்பேய் கூடியாடும் தேடினேன்ஏழையிவன் காணவென்றே எட்டிநடை போட்டுமெந்தஇடத்திலும்யான் கண்டதில்லை ஆயினும்ஆளையடித் தாட்கள்கொல்லும் அசுரவகைப் பேய்களின்றுஅறமழித்து ஆடுவதைக் காண்கிறேன்வேளையிது சக்திதனை வேண்டுகிறேன் இயற்கையெனும்விதமிவரைப் படைத்ததுவும் ஏனம்மாகோழையல்லத் தமிழ் இறக்க கூட்டிஉரம் தீரமிடுகொண்டநிலம் மீட்கவென்று வாழ்த்திடு5. எனக்குப் பிடித்த தாய்நிலம்!கள்ளுண்டு வண்டினங்கள் களி மிகுந்துஏகும்கன்னியர்கள் மின்னும்விழி கருமைகொண்டுகாணும்எள்ளுண்டு நெல்கொறித்து எலிகளோடிச் செல்லும்இசைபடிக்க வீணையொலி எங்கிருந்தோ கேட்கும்உள் ளிருந்து பல்லியொன்று இச்செனவே கூறும்ஓடிவந்து திமிர்பிடித்த சேவல் நின்று கூவும்வள்ளெனவோர் நாய்குரைக்க வாசல் வந்துபார்க்கவழியறியா கன்றுவந்து அம்மாவைத் தேடதம்மையருள் செய்யுமென்று தூவிமலர் போற்றிதண்பொழில் சேர் தெய்வநிலை தன்நிரையில் மாந்தர்அம்மையவள் சக்திதனை வேண்ட சிவன் பாதிஆக்கியிணை சேர்ந்தநிலை அதிபெருந்தீ சக்திதம்மில்இதைபோல மனமொன் றிணையும்போதுதங்குமெழில் வாழ்வுஎன சதிபதிக்கு கூறும்இம்மையிலே சொன்னஅறம் இதைவிடுத்த மக்கள்இன்னலென இல்லறத்தில் இடர்விளையக் கண்டார்செம்மலர்கள் சிலுசிலுத்துச் சிதறலைநீர் கொட்டும்சேர்கயலும் துள்ளிவிழச் சின்ன அலையோடும்கும்மியடித் தாடும் இளங் குமரிகளின் கூச்சல்குடிமனைகள் பலநெருங்கிக் கூட்டமெனக் காணும்உம்மெனவோர் பாக்கிடித்து உரல் குடையும் ஆச்சிஉருட்டி அதைவாய் குதப்பி உமிழ்ந்து விடும்காட்சிஅம்மழலைச் சிறுவர்வழி அழுது பள்ளிஏகும்அரியவளம்கொண்ட தெங்கள் அன்னைதமிழீழம்நிம்மதியைத் தாரும்விழி நினப்பினிலே வேட்கைநிலையடையச் செய்வதன நேர்விழிகொள் நங்கைதம்மனதை இழந்து விடத் தனிமை தரும்துக்கம்தாங்கி நகை சிந்துகையில் தரும்வெறுமை ஏக்கம்இம்மெனவே ஏறிவண்டி இருந்தோட்டும் காளைஎடுத்த அடி தாளமிட எருதோடும் அழகுசெம்மை யடி வான்கலந்த சிறுகுருவிக் கூட்டம்சிந்தனைகள் பொன்வளங்கள் சேர்க்கும்வழி நோக்கும்கும்மிருட்டைகொன்ற ஒளி, குருதி சிந்த வானில்குதித்ததெனக் கீழடிவான் கொடுஞ்சிவப்பில் ஊறும்வெம்மை விளைந் தெங்குமொளி வீறெழுந்து பாயவட்டநிலைப் பொற்பரிதி வானெழுந்து தாவும்செம்மையுறக் கற்பொழியும் சிற்பியின் கைவேகம்செதுக்குமுளி நாதமிடச் சில்லெனு முணர்வாகும்இம்மையிலே பெற்ற வரம் இதுவெனவே எண்ணிஏங்கும் மனம் கலைமகனை இருகரங்கள் கூப்பும்சம்மதமா என்றுமலர் சார்ந்த நிலைகாணாசரசமிடும் தேனளைவண் டங்கிருந்தே உண்ணும்கும்..மாளம் போடுங்கவி கொண்டகிளை தாவகுடியிருந்த கூடுவிட்டே குருவி பறந்தோடும்எம்மனங்கள் இன்பமிட இளையதென்றல் வீசும்இருந்தஅலர்ப் பூஅளைந்து இயற்கைமணம் கொள்ளும்அம் மணங்கள் தந்துலகில் ஆடவரும் பெண்கள்ஆசைமனம் பொங்கியெழ அதுவருடிச் செல்லும்இம்மை கண்ட வாழ்விலெங்கு மினிமை யென்றிருந்தோம்இயற்கையெனும் இனிய வளமெங்கும் கண் டலைந்தோம்எம் மதங்கள் பகை,பிரிவு இல்லையென்று வாழ்ந்தோம்எடுகரங்கொள் இயல்பணியில் என்றும் அன்பு கொண்டோம்பம்பரமாய்ச் சுற்றும் புவி பேர்புகழைக் காணும்பார்த்திருக்கப் பூமலர்ந்து பட்டு வெம்மை சாகும்
சிம்மம் எனும் சீரளிவு சேர்ந்ததனால் குடிகள்சீரழிந்தே போகும்நிலை சேர்வளங்கள் மீட்போம்
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்ற மகாகவியின்எதிரொலி (எதிர்க்காத ஒலி!) நம் பேராசான் பசுபதியின் கவிதையில்ஒலித்தது. நாட்டுமக்கள் பிணியும் வறுமையும்நையப்பா டென்றொரு தெய்வதங் கூறுமேகூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்கொண்டு வையம் முழுதும் பயனுறப்பாட்டிலே யறங் காட்டனு மோர்தெய்வம்!'என்ற தர்மாவேசம் பசுபதியார் பாடல்களில் கொதித்துக் கிளம்புகிறது.அவர் கூறும் வழியில் பாட்டெழுதும் ஆவல் பெருகுகின்றது.
நன்றிகள் ஐயா தலைவர் அவர்களே இதோ என்கவிதை!!அன்புடன் கிரிகாசன்
--
****************************************************1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!(மழலை)ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்ததுஅம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்ததுநீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்ததுயாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்ததுசீராட்டி மார்போடு யார் அணைத்த போதிலும்செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது
சிவா வின் பாடல்கள் அருமை.
2014-04-15 22:00 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
சந்தவசந்தக் கவியரங்கம்-40 - "எனக்குப் பிடித்த ...."
2014-04-12
எண்ணச் சுரங்கத் திருந்து பிடித்தபல
வண்ண நினைவுகளை வார்ப்பெடுத்துக்
கண்முன்னே காட்டினார் நன்கு.
அனந்த் 17-4-2014
... வரும் 4 நாட்களில் வெளியூரில் இருப்பேன், இங்கு வரலியலாமல் போகும்.
அரங்கக் கவிதை : எனக்குபிடித்த......****************************************************
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!(மழலை)ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்ததுஅம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்ததுநீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்ததுயாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்ததுசீராட்டி மார்போடு யார் அணைத்த போதிலும்செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது(
செம்மை யடி வான்கலந்த சிறுகுருவிக் கூட்டம்சிந்தனைகள் பொன்வளங்கள் சேர்க்கும்வழி நோக்கும்
சீரழிந்தே போகும்நிலை சேர்வளங்கள் மீட்போம்
--
1. எனக்குப் பிடித்த கடந்த காலம்......!
(மழலை)ஆராரோ சொன்னவளின் தாலாட்டுப் பிடித்ததுஅம்புலியைக் காட்டியுண வூட்டமுது பிடித்ததுநீராடி மேல்மினுக்கி நித்திரைகொள் என்றவள்நின்ற பசி தீர்ந்துவிட நேர்துயிலும் பிடித்ததுயாரோடி வந்தயலில் அகலவிழியை உருட்டினும்ஆங்கவரின் கோணல்முகம் அதுஎனக்குப் பிடித்ததுசீராட்டி மார்போடு யார் அணைத்த போதிலும்செல்லமெனக் கொஞ்சிய என் அன்னையே பிடித்தது
--
இலந்தைஐயா அவர்களுக்கு நன்றிகள் அன்போடு பாராட்டுகள் ஈந்தமைக்கு
------------------
என்ன பேரோ தெரியாது,
எங்கே வாசம் அறியேன் நான்
என்ன மொழியோ அவன்மொழியும்
இதுவும் எனக்குத் தெரியாது,
சின்ன உருவா, பேருருவா
சிவாப்பா வெளுப்பா தெரியாது.
என்னைக் கவியால் ஈர்க்கின்றான்
என்னுள் கவிதை வார்க்கின்றான்
பன்மையென் றிருக்கையில் பாடினுமிப் பாமரன்பாதியில் எடுத்த பாதியைஇன்னுமோர் உடைப்பினில் பாதியாக்கி மீதியைப்பாதியா யுடைத்துப் பாதியைஅன்னதோர் மதிப்பிறை ஆகிடச் சிரத்திடைஈசனென்று எண்ணிச் சூடுவன்தன்னலை கொள்கங்கையை தாவிடும்பிர வாகத்தைகண்ணிலே இருக்கவிட்டவன்
--
சந்த வசந்தக் கவியரங்கம்தலைப்பு : எனக்குப் பிடித்த ......... ..........தலைவர் : புலவர் இராம மூர்த்தி.படைப்பவர் : வரதராசன். அ. கி.நாள் : ஏப்ரல் -18 - 2014=========================================================எனக்குப் பிடித்த .......... ..........
....
பாட்டரங்கப் பாக்கள் - எனக்குப் பிடித்த ....... ........பிடித்தது பற்றி இங்கு பேசிட வருவாய் என்றேஅடித்தனர் மணியை ஓங்கி. அரங்கினில் நுழைந்தேன் யானும்.படித்தவன் அல்லேன் ஐயா , பயத்தினால் நடுங்கிப் பாக்கள்வடித்திட வந்தேன் ஏதோ வார்த்தையை அங்கிங் கிட்டு.பாட்டிலே சொல்ல வேண்டும் பாரினில் பிடித்த வற்றைக்காட்டுவுன் திறமை என்றே கட்டளை தலைவர் இட்டார்.நாட்டிலே பலவும் கண்டேன்; நவின்றிடத் தக்க வற்றைஏட்டிலே எழுதி வந்தேன்; இயம்புவேன் நீவிர் கேட்க.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.