எனக்கு மட்டும் தெரிகிறதா!
&&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)-
எனக்கு மட்டும் தெரிகிறதா?- இல்லை
எல்லோ ருக்கும் புரிகிறதா?
.
அதிகாலைப் பூமொட்டு வெடிப்பதுவும்-ஒரு
அணிலெங்கோ கொறிப்பதுவும்,
குதிபோட்டு மேகங்கள் நடப்பதுவும்,-பார்த்த
குஷியில் பசும்புல் சிரிப்பதுவும்
எனக்குமட்டும் தெரிகிறதா?-இல்லை..எல்----
.
காலைக் கதிர்தன்நிறம் காட்டும் முன்
கலகலத்துப் பறவைகள் சிலிர்ப்பதுவும்,
ஓலைகள் நாட்டியம் ஆடுகையில்-சில
உள்ளான்கள் பயந்து கரைவதுவும்-அட..
..
எனக்குமட்டும் தெரிகிறதா!-இல்லை..எல்..
..
சின்னக் கடல்அலை முந்தவுமே-அதைச்
சீறிப் பெரியது அமுக்குவதும்,
பென்னம் பெரிய கழுகொன்று-மீனைப்
பிடிக்கும்முன் வானில் பாய்வதுவும்,
இங்கிருந்தே யான் கண்டதுவும்-அட!
எனக்குமட்டும் தெரிகிறதா?-இல்லை—
ஒருசிப்பி வாயைத் திறக்கையிலே
உள்ளே சிறுதூசி போனபின்னே
அரியதோர் முத்தாய் மாறுவதை
அடியேன் மட்டும் கண்டதுவும்-அட!
எனக்குமட்டும் தெரிகிறதா?-இல்லை—
..
பழுத்த இலைகள் வீண்என்று-நைசாய்
பலகிளை கீழே தள்ளுவதும்,
அழுதுகொண் டேஅவை இறங்குவதும்,
அடியேன் மட்டும் கண்டதுவும்,-ஓ!
.
எனக்கு மட்டும் தெரிகிறதா?-இல்லை..
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-K%3Dgw-E8RpnqXsQgysdoeDxbwrjJTpfRe%2BnvRU5iu10xA%40mail.gmail.com.
On Aug 5, 2025, at 20:57, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
--
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBB1OGFzHFHRU4fh8pDmFwq7U3Tb9j3%2BjRpE-qit8VKdHw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3fpv6mjWrBViYT-SEbhccxSkRFg9F-Um%3DzDiBRDCDoAw%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BVdh44uujUmkTrhgeUSEsLj6qZVn156PA%3DRG%3DGDoT3uQw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCNydHsVReM9vNz7je_tuhKmuqQouMQbgYutZFu4HLxH-g%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/78B093C1-CA2C-43E4-BAA4-043316090AF0%40gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-trwjW0K7-NK-c6_zdKhmc7ES3wionT-bV12TMKACaANQ%40mail.gmail.com.