my new poem... plcomment at yur leisure

14 views
Skip to first unread message

Kaviyogi Vedham

unread,
Aug 5, 2025, 8:57:31 PM8/5/25
to santhavasantham
my dEar  friends,
   pL  comment..  after  reading  fully,
  thanks,  yogiyaar
**********************************

எனக்கு மட்டும் தெரிகிறதா!

  &&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி   வேதம்)-

எனக்கு மட்டும்  தெரிகிறதா?- இல்லை

   எல்லோ  ருக்கும்   புரிகிறதா?

.

அதிகாலைப்  பூமொட்டு  வெடிப்பதுவும்-ஒரு

   அணிலெங்கோ  கொறிப்பதுவும்,

 குதிபோட்டு  மேகங்கள் நடப்பதுவும்,-பார்த்த

   குஷியில் பசும்புல்  சிரிப்பதுவும்

 எனக்குமட்டும்  தெரிகிறதா?-இல்லை..எல்----

.

காலைக்  கதிர்தன்நிறம்  காட்டும்  முன்

   கலகலத்துப் பறவைகள்  சிலிர்ப்பதுவும்,

ஓலைகள்  நாட்டியம்   ஆடுகையில்-சில

    உள்ளான்கள்  பயந்து  கரைவதுவும்-அட..

..

எனக்குமட்டும்  தெரிகிறதா!-இல்லை..எல்..

..

சின்னக் கடல்அலை முந்தவுமே-அதைச்

  சீறிப்  பெரியது அமுக்குவதும்,

பென்னம் பெரிய கழுகொன்று-மீனைப்

  பிடிக்கும்முன்   வானில் பாய்வதுவும்,

இங்கிருந்தே யான் கண்டதுவும்-அட!

எனக்குமட்டும்   தெரிகிறதா?-இல்லை—

ஒருசிப்பி    வாயைத்  திறக்கையிலே

 உள்ளே சிறுதூசி போனபின்னே

அரியதோர்  முத்தாய்   மாறுவதை

   அடியேன்   மட்டும்  கண்டதுவும்-அட!

எனக்குமட்டும் தெரிகிறதா?-இல்லை—

..

பழுத்த   இலைகள்  வீண்என்று-நைசாய்

   பலகிளை கீழே  தள்ளுவதும்,

 அழுதுகொண் டேஅவை இறங்குவதும்,

  அடியேன் மட்டும் கண்டதுவும்,-ஓ!

.

  எனக்கு  மட்டும்  தெரிகிறதா?-இல்லை..

 

 

M. Viswanathan

unread,
Aug 5, 2025, 9:05:02 PM8/5/25
to Santhavasantham
அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-K%3Dgw-E8RpnqXsQgysdoeDxbwrjJTpfRe%2BnvRU5iu10xA%40mail.gmail.com.

Ram Ramakrishnan

unread,
Aug 5, 2025, 9:10:22 PM8/5/25
to santhav...@googlegroups.com
அருமை, யோகியாரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Aug 5, 2025, at 20:57, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:


--

Subbaier Ramasami

unread,
Aug 5, 2025, 9:53:14 PM8/5/25
to santhav...@googlegroups.com
எனக்கும் தெரியும் இவையெல்லாம்- ஏன்
     இவற்றின் மேலும் தெரிவனவால்
எனக்குத் தெரிந்து பயனென்ன?- அவற்றை
     எழுதும் வேட்கை எழவிலையே

கண்னில் விழுகிற காட்சிகளும் -என்
     காதில்கெ விழுகிற ஓசைகளும்
உண்ணும் சுவையும் நுகர்ச்சிகளும்
     உலுக்கிப் போட்டன முன்னாளில்

இன்றைக்கென்னுள் இரசிக்கின்றேன்
       இன்பம் கண்டே சுவைக்கின்றேன்
மின்னல் இறங்கி வரவில்லை- கவி
       வேள்வி நடத்த விழைவில்லை.

இலந்தை


--

NATARAJAN RAMASESHAN

unread,
Aug 5, 2025, 10:51:57 PM8/5/25
to santhav...@googlegroups.com
அருமை யோகியாரே

       —தில்லைவேந்தன்.
..


Siva Siva

unread,
Aug 5, 2025, 11:03:12 PM8/5/25
to santhav...@googlegroups.com
கவியோகியார் பார்வை கூரிய பார்வை!
வாழ்க!

குதிபோட்டு  மேகங்கள் நடப்பதுவும்,-பார்த்த
   குஷியில் பசும்புல்  சிரிப்பதுவும் /

கவியோகியார் முத்திரை!


உள்ளான்கள்  பயந்து  கரைவதுவும்- /

உள்ளான் = ?

வி. சுப்பிரமணியன்


Swaminathan Sankaran

unread,
Aug 5, 2025, 11:16:29 PM8/5/25
to santhav...@googlegroups.com
யோகியாரின் கவிதையும், இலந்தையாரின் பின்னூட்டமும் அருமை.

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2025, 11:17:22 PM8/5/25
to santhav...@googlegroups.com
அருமை வேதம்.

>> அணில் எங்கோ  கொறிப்பதுவும்,  .... இவையெல்லாம் இங்கே எனக்குத் தெரிவதில்லை, ஆனால் உங்கள் கவிதைக் கண் வழியே தெரிகின்றன!

அனந்த்

VETTAI ANANTHANARAYANAN

unread,
Aug 5, 2025, 11:19:04 PM8/5/25
to santhav...@googlegroups.com
உங்கள் ஏக்கத்தின் கவிதை வெளிப்பாடு அருமை.

அனந்த்


Kaviyogi Vedham

unread,
Aug 6, 2025, 11:39:19 AM8/6/25
to santhav...@googlegroups.com
நன்றி   அநந்த்   சாரே,
    வேதம்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Aug 6, 2025, 11:40:33 AM8/6/25
to santhav...@googlegroups.com
மிக்க  நன்றி இலந்தை,
வேதம்

Kaviyogi Vedham

unread,
Aug 6, 2025, 11:43:07 AM8/6/25
to santhav...@googlegroups.com
உள்ளான்.. பறவை.. எங்கள்   ஊரில்  ஒருவகை(கொக்குபோன்ற)  பறவையைச்  சொல்வார்கள்.. பயந்த  சுபாவம் உடையது    இது)-
  யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Aug 6, 2025, 11:52:12 AM8/6/25
to santhav...@googlegroups.com
நன்றிராம்கி

Kaviyogi Vedham

unread,
Aug 6, 2025, 11:52:43 AM8/6/25
to santhav...@googlegroups.com
நன்றி விசு
யோகியார்

Siva Siva

unread,
Aug 6, 2025, 12:05:38 PM8/6/25
to santhav...@googlegroups.com
Thanks.
Reply all
Reply to author
Forward
0 new messages