பராபவம் வருக

4 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
9:35 AM (14 hours ago) 9:35 AM
to santhavasantham

பராபவம் வருக
பரிசுகள் தருக
தராதரம் மிகுந்த
தண்ணளி தருக1

ஒருபுது வருட

உறவென வருக!
கருதும் நலங்கள்
கனிந்திடத் தருக!

வெறுப்பை விடமாய்

விதைப்ப வருக்குப்

பொறுப்பை உணர்த்திப்

புத்தியைத் தருக

சிரித்து மகிழச்

சிறந்தவை செய்து

சரித்திரம் ஏறும்

சாதனை புரிக!

இலந்தை

Reply all
Reply to author
Forward
0 new messages