பள்ளி நினைவுகள்

6 views
Skip to first unread message

Swaminathan Sankaran

unread,
Nov 23, 2021, 6:29:08 PM11/23/21
to santhav...@googlegroups.com
மீ.வி. அவர்கள் தன்னுடைய ஊர், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை நெறி ஆகியவற்றை மிக சுவையாக
அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

 இப்போது நான் படித்த பள்ளியைப் பற்றிய ஒரு காணொளியின் தகவலை இங்கே இடுகிறேன்.
இந்தக் காணொளியை (21 நிமிடங்கள்) மழைக்கால முடிவில் எடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தக் காலத்தில், அதாவது இருபதாம் நூற்றாண்டில், 1900 முதல் 1950 வரை, நகரத்தார்,  திருமெய்யம். பிள்ளையார் பட்டி 
கானாடுகாத்தான், செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, நாட்டரசன்கோட்டை, சிவகங்கை,மானாமதுரை பகுதிகளில் 
எப்படி கல்வியை வளர்த்தார்கள், அருமையான பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் 'ராஜா'க்களும் இப்பணியைச் செய்திருக்கிறார்கள்.

பள்ளிக் கட்டிடம், விளையாட்டு மைதானம் எல்லாம் இன்றும்  அதிக மாறுதல் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாகவும்,
பெருமையாகவும் இருக்கிறது. நான் உட்கார்ந்து படித்த 'பெஞ்சு'கள் இன்றும் இருப்பது வியப்பைத் தருகிறது.
கட்டிடத்தின் அமைப்பு, ஓட்டுக்கூறை, படிகள், மாடி, இன்று வரை மாறாமல் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. 
 Nostalgia  இது தானோ!
மரங்கள் விழ, விழ, மடிய, மடிய புது மரங்களை நட்டு, வளர்த்து, பராமரித்து வருகிறார்கள். பள்ளியின் முகப்பிலிருந்து 
கட்டிட நுழைவாயில் வரை ஒரு நீண்ட பாதை, அதன் இரு சாரிகளிலும் வேப்ப மரங்கள் ஒரே சீராக, பச்சைப்  பசேலென்று இருக்கும்.
அதே முறையை இன்றும் கடைப்பிடுத்து வருகிறார்கள் என்று தெரிகிறது. ஊரின் அழகு கெட்டுப் போய் விட்டது, சிதைந்து விட்டது.
 ஆனாலும் பள்ளியின் அழகுக்கு அந்த துரதிருஷ்டம் இன்னும் நேரவில்லை!

 மானாமதுரை பெரிய நகரம் அல்ல. சிறிய தாலுகா நகரமும் அல்ல, நான் படித்த காலத்தில் ஒரு கிராமப்  பஞ்சாயத்தே! 
இந்தப் பள்ளியில் தான் நான் படிக்கும்போது பாரதியாரின் தம்பி சி. விசுவநாதன் தலமை ஆசிரியராகப் பணியாற்றினார். 
அவரை அடுத்து என் தாய் மாமன் என். எஸ். ராமச்சந்திரன் தலைமை ஆசிரியரானார்.

கீழே உள்ள வலைதளத்தைச் சொடுக்கி காணொளியைப்  பாருங்கள்.


சங்கரன்   

--
 Swaminathan Sankaran

Subbaier Ramasami

unread,
Nov 23, 2021, 9:42:45 PM11/23/21
to santhav...@googlegroups.com
தேக்குமர உத்திரங்களும் வடிவம் மாறும் பெஞ்சுகளும் கட்டிடத்தின் அமைப்பும் , இன்னும் திடமாகவும் செழிப்பாகவும் அமைந்துள்ளன. கட்டியவர்கள் எவ்வளவு முன்யோசனையுடன் கட்டியிருக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது.

இலந்தை

Lalitha & Suryanarayanan

unread,
Nov 23, 2021, 10:58:44 PM11/23/21
to santhav...@googlegroups.com
சங்கரனார் பள்ளி

பேர்பெற்ற ஊரினிலே படிக்கப் பெற்றீர் !
   பெருமையுடன் காணொளியை அவையில் இட்டீர் !
சீர்பெற்ற சங்கரனார் படித்த பள்ளி,
  செம்மையுடன் உமைத்திகழச் செய்த பள்ளி !
கார்பெற்ற பெருமையுடை செட்டி யார்கள்
  கருத்துடனே கல்விக்கொடை செய்கு ணத்தார்
பார்பெற்ற புகழ்க்கெல்லாம் உரிமை யானோர்
  படைத்தபள்ளி படம்கண்டு மகிழ்ந்து போனேன் !

பச்சையாய்த் திகழ்கின்ற வேம்பு கண்டேன் !
   படித்தநாள் நினைவெல்லாம் நெஞ்சில் தந்தீர் !
இச்சையுடன் கட்டியுள்ள மாடம் கண்டேன் !
   எங்கெங்கும் கலசங்கள் இருக்கக் கண்டேன் !
உச்சியிலே விமானங்கள் இருக்கும் வண்ணம்
   ஒப்பில்லா அழகுடைய நிலையைக் கண்டேன் !
கச்சிதமாய்க் கவினழகாய் கட்டி யுள்ள
   கட்டடத்தின் அழகினிலே மறந்து நின்றேன்.

தாங்கிநிற்கும் தேக்கினெழில் இன்றும் காண
   தட்டோடு வேய்ந்துள்ள ஓட்டுக் கூரை
ஓங்கிநிற்கும் உள்ளம்போல் உயர்ந்து நிற்க,
   உவகையெல்லாம் உள்ளத்தில் பெருக்கெ டுக்கத்
தாங்கிநிற்கும் வரலாற்றைத் தமிழும் ஏந்த
   சங்கமிதில் உள்ளோர்கள் வாழ்த்து வார்கள் !
பாங்குடனே பள்ளியிது பல்நூற் றாண்டு
   பாரினிலே காணவென்று வாழ்த்து வேனே.

சிவசூரி.


   


  

On Wed, Nov 24, 2021 at 4:59 AM Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:
மீ.வி. அவர்கள் தன்னுடைய ஊர், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்க்கை நெறி ஆகியவற்றை மிக சுவையாக
அவ்வப்போது பதிவு செய்து வருகிறார்.

 இப்போது நான் படித்த பள்ளியைப் பற்றிய ஒரு காணொளியின் தகவலை இங்கே இடுகிறேன்.
இந்தக் காணொளியை (21 நிமிடங்கள்) மழைக்கால முடிவில் எடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.


Virus-free. www.avast.com

Swaminathan Sankaran

unread,
Nov 23, 2021, 11:07:44 PM11/23/21
to santhav...@googlegroups.com
இலந்தையார்க்கும், ஆசு கவி சிவசூரிக்கும் என் மனமார்ந்த நன்றி. வணக்கம்.

சங்கரன் 

On Tue, Nov 23, 2021 at 10:58 PM Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:
சங்கரனார் பள்ளி


--
 Swaminathan Sankaran

V. Ramasamy

unread,
Nov 23, 2021, 11:55:15 PM11/23/21
to santhav...@googlegroups.com
மன நெகிழ்வு தந்த காணொளி.  அந்த பெஞ்சுகள்! ஆஹா! பேனா பென்சில் வைக்கவும், இங்க் பாட்டில் வைக்கவும், எழுதுவதற்கு வாகாக மேற்புறம் சற்றே சாய்வாகவும் அதன் கீழ்ப்புறத்தில் 'பைக்கட்டு' வைக்க வாகாகவும் அமைத்திருக்கும் அழகு! கிட்டத்தட்ட இதே உள்ளமைப்புகளுடன் அமைந்த வத்தலக்குண்டு போர்டு ஹைஸ்கூலில் படித்த காலத்திற்கு (54 ஆண்டுகள் கடந்துவிட்டன - SSLC முடித்து!)
பின்னோக்கிப் பயணித்து மீண்டேன்.  செட்டிநாட்டுக் கலைநயத்துடன் கட்டப்பட்ட கட்டிடம் அப்படியே நீடித்திருக்கும் வகையில் பராமரிப்பது மிகவும் சிறப்பு.

அன்புடன்,
ராமு.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAB2a4BWoEPa%3DkF2O7K22eLrJ_%2B9poHWieNZyJbz%2BSB3x0AetDQ%40mail.gmail.com.

K.R. Kumar

unread,
Nov 23, 2021, 11:56:20 PM11/23/21
to santhav...@googlegroups.com
Dear Sri.Sankaran,

I am very much impressed after seeing the video.

My memories went 69 years back when I was put in ஒண்ணாம் கிளாஸ் on Vijayadasami day in 1952.

That elementary school was in Annamalai Nagar opposite to ThiruvedkaLam temple pond.

Your video kindled my thoughts and memories .

I studied 5 years In Meenakshi Sundaram elementary school and 2 years in Ramasamy Chettiyar’s Town high School which was next to the elementary school.

I feel like , I must go and see those childhood schools.

Regards,
K.R.Kumar (Singai)


Sent from my iPhone

On 24 Nov 2021, at 11:58, Lalitha & Suryanarayanan <lall...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Nov 24, 2021, 2:04:04 AM11/24/21
to santhavasantham
மிக அருமை சங்கரன். நல்ல ஸ்கூல்.
பழைய நினைவுகளைக் கொணர்ந்தீர்கள். வாழ்க
 யோகியார்

Rajja Rajagopalan

unread,
Nov 24, 2021, 2:28:01 AM11/24/21
to santhav...@googlegroups.com
அருமை.
அடியேன் பிறந்ததும் இளம்கல்வி பயின்றதும் கானாடுகாத்தானில்.
அரண்மணையான வீடுகளும், அற்புதமான கலைநயமும், கல்விவளமும், இறைச்சிந்தனையும் வளர்த்த நகரத்தார் சமுதாயமும் இன்றும் மனதில் இருக்கின்றன. ஒவ்வொருமுறை இந்தியா செல்லும்போதும் தவறாமல் கானாடுகாத்தானையும் சுற்றியுள்ள கோவில், ஊருணி எனும் ஊருநீர் திலைகளையும் ஏக்கத்துடன் பார்ப்பது வழக்கமாகிவிட்டது.

உதாரணமாக வைரவன்செட்டி ஊருணி குடிநீருக்குமட்டுமே என்பதால், அந்தக் குளத்தைச் சுற்றி நெல்லிமரங்களை வளர்த்து வேலியிட்டுக் காத்தார்கள். நீர் அமுதாக இனிக்கும். என்னே பண்பு!

எங்கள் வீட்டுக்குமுன் இருக்கும் பெரிய ‘பொட்டலில்’ விழாக்கள் நடக்கும். அம்மா பூஜைகள் எல்லாம் செய்பவர் என ஆச்சிமார்களுக்கு அவரிடம் அலாதி அன்பு. மாசிமாதம் வளர்பிறையில் நோன்பு இருந்து, மாசிப் பௌர்ணமியில் ‘இலாவாண்டை’ (நிலவினை அண்ட) எனும் பெண்களின் விழா இரவில் எங்கள் வீட்டின் முன்தான் நடக்கும். கரும்பில் தூளிகட்டி அதனுள் பழச்சுமைகளைச் சுமந்து பெண்டிர் பாடுவதும் உலவை இடுவதும் மனதுக்குள் மழை ! அதிலும் அலமு ஆச்சியும், சித்தா எனும் சீதா ஆச்சியும் பாடும் நாட்டுப்புறத் தமிழ், எப்படி எல்லாம் என்னை நனைத்தது! . ஞாபகத்தில் வரும் வரிகள்

மாசிப் பிறையிலயும் வட்டமிட்ட லாவுலயும்
தேசியான லாவாத்தா தெருவீதி போறானு
வெங்கலத்தக் கீறி விளக்கரும்ப நெய்வார்த்துக்
கண்குளிரப் பாப்பாளாம் காட்சியான லாவாத்தா
போடுங்கடி பொண்டுகளா பொன்னார் திருக்குலவை
……

இப்படியே போகும், எட்டுக்கட்டி இன்பத்தமிழ் பாடும்.

மண்ணா அது! மரபைத்தந்த மரகதப்பரவல்!

மீ. ரா



Sent from my iPhone

Ramamoorthy Ramachandran

unread,
Nov 24, 2021, 6:12:14 AM11/24/21
to Santhavasantham
குலவையிடும் ஆச்சிகளின் குரல்கேட்க லாவாத்தா 
தலைகவிழ்ந்து கீழ்நோக்கித் தானாவே வாரா,பார்!
இலைவிரித்தே உணவிட்டோம்,
இனியதொரு படையலிட்டோம்!
கலந்துவிட்ட குலவையுடன்
கைநனைக்க வர்ரா, பார்!
- புலவர் இராமமூர்த்தி 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

M. Viswanathan

unread,
Dec 2, 2021, 8:14:50 AM12/2/21
to Santhavasantham
கவிஞர் சங்கரன் அவர்களின் பதிவு அருமை. செடடிநாடு தர்மத்திற்கும், கலைக்கும் பெயர்பெற்றது. அவர்களது அறக்கட்டளைகளால் நிறைய வேத பாடசாலைகள், கல்விச்சாலைகள் இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான் போன்ற இடங்களின் உள்ள அழகான, மிகப் பெரிய  வீடுகளும் அதில் வாசம் செய்யும் மனிதர்களின் அன்பு வாசமும் தனித்துவம் மிக்கது. கம்பன் அடிப்பொடி திரு. சா.கணேசன் அவர்களால் தொடங்கப்பட்ட கம்பன் கழகம் இன்றும் கம்பனின் புகழைப் போற்றிவருவது ஒரு சாட்சி. இன்னும் அறியப்படாத பல செய்திகளை அறிந்தவர்கள் பதிவிட வேண்டும்.
அன்பன்,
மீ.விசுவநாதன்
02.12.2021 18.44 pm 
Reply all
Reply to author
Forward
0 new messages