அன்பு நண்பர் ந. கண்ணன்,
உங்கள் மறுமொழி காணோமே.
போக்குதல் என்பது அடிப்படையாக ஒரு பெருவிழாவுக்கு
பெயர் இடுவார்களா? என்பது என் ஐயம். ஓர் உதாரணம்
தருகிறேன். 102 வயதில் மறைந்த தமிழ்ப் பேராசிரியர்
அடிகளாசிரியரை (மறைமலையடிகள் தந்த பெயர்.
இயற்பெயர்: குருசாமி ஐயர். பட்டத்துப் பெரியசாமி ஐயர்
திருமகன். ஐயர் என்னும் பட்டம் பலருக்கும் உண்டு
- முக்கியமாக வீரசைவ குருக்களுக்கு. திருத்தணி
கந்தப்பையர், அவரது மக்கள் சரவணப்பெருமாளையர்,
விசாகப்பெருமாளையர் - 19-ஆம் நூற்றாண்டு. ....
இதுபோல் தமிழ்புலவோர் பலர் வாழந்துள்ளனர்.)
கோவையில் இருந்து மூவர் சென்று பேட்டி எடுத்தனர்.
அப்போது சங்க திருமண முறை, கொங்குநாட்டின்
திருமண முறை எல்லாம் பேசுகிறார். மற்ற இடங்களில்
சடங்கு என்று சொல்லும் வடசொல்லுக்கு நல்ல
தமிழ்ச்சொல்லைக் கொங்குநாட்டில் கேட்கலாம்.
“சீர்” என்பது அத் தமிழ்ச்சொல் என்கிறார். அந்த
விடியோ இருக்கிறது.
சடங்கு - சீர் என்று அடிகளாசிரியர் குறிப்பிடும் வட - தென்
சொற்கள் போலவே, போகி (< Bhogi) என்பதற்கும்
கொங்குநாட்டில் நல்ல தமிழ்ச்சொல் வழங்கிவருகிறது.
பழமைபேசியிடம் கேட்டால் தெரியும். பொங்கல்
தொடங்கும் நாளுக்கு முன்னர் உள்ள நாள்:
காப்புக்கட்டு நோன்பு. காப்பிடல் நிகழ்ச்சி நடக்கும்,
மக்களுக்கும், களம், பட்டி, கிணற்று மோட்டார் ரூம்,
கரும்பாலை, ... எல்லாவற்றிலு பூளைப்பூ, மாவிலை,
... காப்புக்கட்டும் விழா. பின்னர் பெரிய நோம்பி,
அடுத்து பட்டிநோன்பு, கடைசிநாள் பூநோன்பு.
பூநோன்பின் பாடலை பழமைபேசி மணிவாசகம் அனுப்பியிருக்கிறார். பொங்கல் விழா
பற்றிய
பதிவில் இடலாம்.
சடங்கு - சீர், போகி - காப்புக்கட்டு - ஒப்பீடு.
போக்குதல் என்ற சொல்லைக் கொண்டு
எந்த தமிழ் இலக்கியமும் தொடங்காது.
மங்கல வார்த்தைகள், எழுத்துக்களைக் கொண்டு
பொங்கல் திருவிழாவும், தமிழ் இலக்கியங்களும்
தொடங்குவன. எனவேதான், போகி தமிழ்ச்சொல்
அன்று, வடசொல்.
போகி யார்? இந்திரனா? விவசாயத்தின் அதிதேவதை
வெள்ளைச்சாமி பலதேவன் இந்திரனை விடப்
பொருந்துகிறான் என்று தொல்லியல் அறிஞர்
எஸ். ராமச்சந்திரன் கருத்து ஆராயத்தக்கது.
தைப் பொங்கல் வாழ்த்து!
நா. கணேசன்
பொங்கலோ பொங்கல்!
http://nganesan.blogspot.com/2008/01/pongal.html
>
>
>
>
>
> > On Jan 11, 9:52 pm, தாரகை <thara...@gmail.com> wrote:
>
> > > > போகி என்பது இந்திரனைக் குறிக்கும் சொல் என்றும் போகிப் பண்டிகை
> > > > ஏதேனும் ஆதாரம் இருந்தால் தரும்படி வேண்டுகிறேன்.
>
> > > போக்கி என்பது இடைக்குறையாக "போகி" என்றழைக்கப்பட்டிருக்கலாம்.
> > > ஒன்றைப்போக்குவது என்றால் நீக்குவது என்று பொருள். எனவே, பழமையைப்
> > > போக்குகிற நாள் புதிய அறுவடை வருகிறது என்பதைச்சொல்லும் வழக்கமிது.
>
> > > > இந்திரணைக் கொண்டாடும் பண்டிகை என்றும் கூறுகிறார்.
> > > > ஆனால் அவர் ஆதாரம் எதையும் காட்டவில்லை. இது சரியா?
>
> > > இந்திர விழா என்பதெல்லாம் நிச்சயமற்ற தன்மையின் வெளிப்பாடு! முதல் நாள்
> > > இந்திர விழா என்றால், இரண்டாம் முன்றாம் நாள் விழாக்கள் யாருடையது?
>
> > விவசாயக் கடவுள் நாகராஜன் விழா என்கிறார் தொல்பொருள்
> > ஆய்வாளர். இரண்டாம் நாள் சூரியனுக்கும், மூன்றாம்
> > நாள் கோமாதா - நந்திதேவர் வழிபாடு.
>
> > > > நாங்கள் சிறு வயதில் விளையாட்டாக போலி பண்டிகை தான்
> > > > போகி பண்டிகை என்று மருவிவிட்டது என்று சொல்லுவோம்.
>
> > > கடவுள் கலப்பில்லாத விழாவிது, கழனிகளில் விளைச்சலைப் பற்றிய விழாவிது.
>
> > இந்தியாவில் கடவுள் கலப்பில்லாத தொன்மையான விழாவா?
>
> > அன்புடன்
> > நா. கணேசன்