வாழ்க தமிழ்

9 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Apr 13, 2026, 10:46:40 PM (2 days ago) Apr 13
to santhavasantham
தமிழ் வாழ்க!
செந்தமிழ், பொன்தமிழ், தேன் தமிழ், வான் தமிழ்
சித்தாந்தம் ஆகும் தமிழ்
தீந்தமிழ் மொழிகளின் சிகரத்தில் ஏறிடும்
சீரான தொன்மைத் தமிழ்
பைந்தமிழ் உயர்தமிழ், பாடல் சொலுந்தமிழ்
பரதத் தமிழ் கோன் தமிழ்
பரவச மூட்டிடும் பசுந்தமிழ் உலகினில்
பழமைக்கும் பழமைத்தமிழ்.
சந்தமே பொங்கிடும் தண்டமிழ் வண்டமிழ்
சரித்திரம் ஆகும் தமிழ்
தனித்தமிழ், பொருட்தமிழ், அகத்தமிழ், புறத்தமிழ்
சாந்தம் தவழும் தமிழ்
எந்தையும் எந்தைக்கே எந்தையும் எந்தையும்
ஏத்திப் பொழிந்த தமிழ்
இளந்தமிழ், இன் தமிழ், இசைத்தமிழ், இயல்தமிழ்
என்றென்றும் வாழ்க வாழ்க!
முத்தமிழ், என்றைக்கும் முன் தமிழ், முழுத்தமிழ்
மூவாத இளமைத் தமிழ்
முதல்வனாய்ச் சிவபிரான் புலவனாய்ச் சங்கத்தில்
முழங்கிய தெய்வத்தமிழ்
இத்தரை இலக்கணம் அறியாத காலத்தே
இலக்கணம் உரைத்த தமிழ்
இதுவய தென்னவே இயம்பிட இயலாத
ஏற்றம் மிகுந்த தமிழ்
புத்தம் புதுத்தமிழ் புலவர்கள் போற்றிடும்
புலமைத் தமிழ் பூந்தமிழ்
புகழ்த்தமிழ் நிகழ்தமிழ் நிறைத்தமிழ் நெகிழ்தமிழ்
போதத் தமிழ் போர்த்தமிழ்
சித்திர விசித்திரம் சேர்தமிழ் மந்திரச்
சீர்மை மிகுந்த தமிழ்
செழுந்தமிழ், கொழுந்தமிழ், நறுந்தமிழ், என்றென்றும்
சீரோங்கி வாழ்க வாழ்க!
வீரத்தமிழ், வெற்றித்தமிழ் விந்தைத்தமிழ் மிளிரும்
சாரத்தமிழ் சந்தத்தமிழ் சங்கத்தமிழ் தரமாம்
ஈரத்தமிழ் இன்பத்தமிழ் எண்ணத்தமிழ் இறுகும்
கூரத்தமிழ் கொள்கைத்தமிழ் குன்றுத்தமிழ் வளர்க!!
(கூரத்தமிழ்- கூர்+அத்தமிழ்

Ram Ramakrishnan

unread,
Apr 13, 2026, 11:15:24 PM (2 days ago) Apr 13
to santhav...@googlegroups.com
மிக அருமை, தலைவரே.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Apr 14, 2026, at 08:16, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBAMgv3hqb8ochyGXjKTTpnowqr0mTr-czxsZxEeGh-b%2Bw%40mail.gmail.com.

Siva Siva

unread,
Apr 13, 2026, 11:23:25 PM (2 days ago) Apr 13
to santhav...@googlegroups.com
தமிழ் ததும்பும் பாடல்.

V. Subramanian


On Mon, Apr 13, 2026 at 10:46 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
தமிழ் வாழ்க!
செந்தமிழ், பொன்தமிழ், தேன் தமிழ், வான் தமிழ்
...

தங்கவேல் காஞ்சிபுரம்

unread,
Apr 14, 2026, 12:15:31 AM (yesterday) Apr 14
to சந்தவசந்தம்
தமிழ் வாழ்க! தலைவரே அருமை
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Kaviyogi Vedham

unread,
Apr 14, 2026, 11:21:29 AM (yesterday) Apr 14
to santhav...@googlegroups.com
தமிழால் முழக்கி தமிழை  இசைத்துத் தமிழ்க்கவி  அன்னத்  தமிழர் கவி  இலந்தை  என்றும்  இன்பமாய்  வாழ்க!,
 யோகியார்

On Mon, Apr 13, 2026 at 10:46 PM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:
--
Reply all
Reply to author
Forward
0 new messages