எண்ண அலைகளில் ….. எழுபத்தேழு

12 views
Skip to first unread message

Ram Ramakrishnan

unread,
Jul 7, 2026, 5:01:29 AM (3 days ago) Jul 7
to santhavasantham
எண்ண அலைகளில் ….. எழுபத்தேழு


ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு

    எதிர்பார்ப்பு மிலையெனவே இன்பவலை வீச்சு

வாழ்வகைக்கு வள்ளலிறை வழிவகுத்த லாச்சு

    வஞ்சினத்தில் பேசியவர் வம்பெனக்குத் தூச்சு

சூழ்நலங்கள் யாவர்க்கும் சொந்தமென்றன் தீர்ப்பு

    தொடருகின்ற விப்பயணக் கருப்பொருளிவ் வார்ப்பு

ஆழ்கடல்சூழ் பேருலகில் அனைத்துங்கண் டாச்சு

   ஆண்டவனின் புகழன்றி யாகாதென் பேச்சு


சோந்தைனை நீக்குதற்குச் சேந்தனிடம் தஞ்சம்

    சொந்தபந்தப் பற்றறவே தோயுமென்ற னெஞ்சம்

தீந்தமிழின் சாரலிலே நாந்துதலைச் சார்ந்து

    சிறப்புறணும் வையத்தில் செருக்குசினம் தீர்ந்து

போந்தவரும் சூழ்ந்திருக்கப் புந்திநிறை வாகின்

    புன்மையற்ற வெண்ணங்கள் போந்தியெனுள் மேவும்

சாந்தமனத் தான்றோரே தருவணக்க மேற்பீர்

     தலைதாழ்ந்தேன் வாழ்த்துடனே ஆசிகளைச் சேர்ப்பீர்!


சோந்தை - தடை

சேந்தன் - குமரன், முருகன்

நாந்துதல்- நனைதல்

போந்தவர் - தகுதியானவர், பழகியவர்

போந்தி - வீங்கி, பெருத்து

 


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)



Siva Siva

unread,
Jul 7, 2026, 10:56:12 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
அரையடியீற்றில் இயைபு அமைந்த பாடல்கள் நன்று.

Happy 77!

வி. சுப்பிரமணியன்

Govindaraju Arunachalam

unread,
Jul 7, 2026, 11:01:13 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com

சோந்தை - தடை

சேந்தன் - குமரன், முருகன்

நாந்துதல்- நனைதல்

போந்தவர் - தகுதியானவர், பழகியவர்

போந்தி - வீங்கி, பெருத்து


ஆகா! அருமயான பழஞ்சொற்கள்! மீண்டும் பயன்பாட்டுக்கு வந்ததில் மகிழ்ச்சி.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMYd0cPj6ZCVxWJ%3D3hGxMJ3W_X%2BQEJQv-SpwM35yKtqAA%40mail.gmail.com.


--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

Arasi Palaniappan

unread,
Jul 7, 2026, 11:12:34 AM (2 days ago) Jul 7
to சந்தவசந்தம்
அருமை அண்ணலே!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jul 7, 2026, 11:14:51 AM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
கவிஞர்கள் இனியன், சிவசிவா, பழனியப்பன் ஆகியோர்க்கு அடியேனின் அன்பு கலந்த நன்றியும் வணக்கங்களும்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 7, 2026, at 11:12, Arasi Palaniappan <arasipala...@gmail.com> wrote:



Rajagopalan Soundararajan

unread,
Jul 7, 2026, 8:04:02 PM (2 days ago) Jul 7
to சந்தவசந்தம்
"ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு" கவனத்தை ஈர்க்கும் வரிகள். பிறந்த தினம் 7-7-7*7 (49)? இதே நாளை 77 ஆண்டுகளுக்குப் பின் எண்ண அலைகளில் காண்பதும் ஒரு ஸ்வாரஸ்யம்தான். ஏழுமலையான் திருவருள் என்றும் உண்டு.
ஸௌந்தர் 

Ram Ramakrishnan

unread,
Jul 7, 2026, 8:35:30 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. ஸௌந்தர்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 7, 2026, at 20:04, Rajagopalan Soundararajan <rsou...@gmail.com> wrote:

"ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு" கவனத்தை ஈர்க்கும் வரிகள். பிறந்த தினம் 7-7-7*7 (49)? இதே நாளை 77 ஆண்டுகளுக்குப் பின் எண்ண அலைகளில் காண்பதும் ஒரு ஸ்வாரஸ்யம்தான். ஏழுமலையான் திருவருள் என்றும் உண்டு.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Jul 7, 2026, 8:39:19 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com, santhavasantham
நடையும் கருத்தும் நனிசிறக்கும் பாக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்।

Ram Ramakrishnan

unread,
Jul 7, 2026, 8:41:01 PM (2 days ago) Jul 7
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. இமயவரம்பன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 7, 2026, at 20:39, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:

நடையும் கருத்தும் நனிசிறக்கும் பாக்கள்!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்।

On Jul 7, 2026, at 2:31 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:

ஏழுடனே ஏழணைய எழுபத்தே ழாச்சு

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Jul 8, 2026, 8:01:51 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
மிகச் சிறந்த பாடல்
எல்லா வலமும் இனிதாகப் பெற்றுயர்ந்து
வல்லாங்கு வாழ்க மகிழ்ந்து

வாழ்க வளர்க வெற்றியே பெறுக!

இலந்தை

On Tue, Jul 7, 2026 at 5:01 AM Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Ram Ramakrishnan

unread,
Jul 8, 2026, 8:29:27 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, தலைவரே.

தங்கள் ஆசிர்வாதம் பெறும் பேறு பெற்றமையில் மனம் மகிழ்ந்தேன்.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 8, 2026, at 08:01, Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:



K.R. Kumar

unread,
Jul 8, 2026, 8:36:37 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
அன்புள்ள ராம்கிராம் ஐயா,

இனிய 77ம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்.

வாழ்க! வளத்துடன் !!

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளுடன் பெருந்தகை இருந்ததே!!
                             :திருஞான சம்பந்தரின் வாழ்த்துத் தேவாரம்.

அன்புடன்,
குமார்(சிங்கை)

Ram Ramakrishnan

unread,
Jul 8, 2026, 9:10:34 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. குமார் அவர்களே. அருமையான தேவாரத்தில் வாழ்த்துப் பாடல் நல்கினீர், உளம் குளிர்ந்தேன்.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On 8 Jul 2026, at 8:36 AM, K.R. Kumar <krish...@gmail.com> wrote:



Swaminathan Sankaran

unread,
Jul 8, 2026, 10:26:59 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
பிறந்த நாள் வாழ்த்துகள்.
எல்லா வளமும் பெற்று நலமே வாழ்க!

சங்கரன் 



--
 Swaminathan Sankaran

Ram Ramakrishnan

unread,
Jul 8, 2026, 10:36:34 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திரு. சங்கரன்


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 8, 2026, at 10:27, Swaminathan Sankaran <swamina...@gmail.com> wrote:



Kaviyogi Vedham

unread,
Jul 8, 2026, 11:03:24 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
vaazga   vaLamutan, 
  yogiyar

Ram Ramakrishnan

unread,
Jul 8, 2026, 11:41:55 AM (yesterday) Jul 8
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, யோகியாரே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 8, 2026, at 11:03, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:



sudha's creations

unread,
7:40 AM (10 hours ago) 7:40 AM
to santhavasantham
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார் 
அன்புடன் சுதா வேதம் 

Ram Ramakrishnan

unread,
8:10 AM (9 hours ago) 8:10 AM
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி, திருமதி. சுதா அவர்களே.


அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Jul 9, 2026, at 07:40, sudha's creations <sudhave...@gmail.com> wrote:


Reply all
Reply to author
Forward
0 new messages